Everything posted by இணையவன்
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிரான்சில் அரசியலில் அல்லது பாடசாலை உட்பட எந்தவொரு பொது வெளியிலும் மதம் தலையிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் மதத்தை நம்புவதில்லை. சீனா சரி. ரஷ்யா பற்றி உங்களுக்குத் தெரியவில்லை போலுள்ளது. புதினே ரஷ்யாவைக் கடவுளே ஆட்சி செய்வதாகக் கூறியுள்ளார். இதனுடன் வடகொரியாவையும் சேர்த்திருக்கலாம். எதிர்க்கட்சி இல்லாத அரசியல் எப்படி இலங்கைக்குச் சாத்தியமாகும் என்பதை விளக்குங்கள். இதைவிட நான் சச்சியின் ஆதரவாளர் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கலாம்.
-
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂 மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஈழபிரியன்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நான் எழுதியதை வாசித்துவிட்டு விளங்காமல் கேட்கிறீர்களா அல்லது வாசிக்காமலே கேட்கிறீர்களா என்று புரியவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்கு நான் மேலே எழுதிய பதிலைத்தான் மறுபடி எழுத வேண்டும். ஏன் விளையாடுகிறது என்று புரியும்படிதானே எழுதியுள்ளேன். தனிநபர் தாக்குதலிலேயே குறியாக இருக்காமல் பொஸ்னியா, கொசோவோ ஏன் விளையாடவில்லை போன்ற மலினமான கேள்விகளுக்கு இணையத்தில் சாதாரண தேடலின் மூலமே பதில் கிடைக்குமே, பொது அறிவையும் வளர்க்கலாம். 🙂
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பரிதாபத்தில் உக்ரெயின் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ரஷ்யா கிறிமியை ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே உக்ரெயின் யூரோ கிண்ணத்தில் விளையாடுகிறது. 1993 இன் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. 1994 இல் ஐரோப்பாவுடனான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தது. அது மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் நெருங்கி இருப்பதால் அனுமதிக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுளைய முயன்று தோல்வியுற்ற துருக்கியும் விளையாடுவதைக் கவனியுங்கள். இன்று முதல் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வழிமுறைகுள் 27 நாடுகளின் ஒப்புதலுடன் நுளைவதால் துருக்கி போலவே உக்ரெயினுக்கும் யூரோ கிண்ணத்தில் விளையாட உரிமையுள்ளது.
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மிக்க மகிழ்ச்சி, வாருங்கள் சுண்டல். (பழைய சுண்டலை வேண்டுமானால் தேடித்தர முடியும் 🙂)
-
"கலங்காதே மகனே"
அருமயானதொரு கருப்பொருள். நாம் இழந்ததை அல்லது தோல்வியை இழப்பை நினைத்து வருந்துகிறோம். அதைக் கடந்து வர வேண்டும்.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
நல்ல தீர்ப்பு. இவர்கள் குடும்பத்துக்கே அவமானம். புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார். உலகிலுள்ள ஏனையவர்களும் இத் தீர்ப்பைப் பார்த்து ஓரளவாவது அறிவு பெறட்டும்.
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
நேற்று நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கண் வைத்தியர் ஒருவர் கண்களுக்கான யோகசனப் பயிற்சியைச் செய்து காட்டினார். நமது கண்கள் இயற்கைக்கு மாறாகக் கண்சிமிட்ட்டுவது குறைந்து வருகிறது. பகலில் வேலையில் கணணித் திரை, பிரயாண நேரத்திலும் ஓய்வு வேளையிலும் கைத்தொலைபேசித் திரை, வீட்டுக்கு வந்தால் தொடர்படங்கள் பார்க்க தொலைக்காட்சித் திரை என்று எங்கும் எப்போது திரைகள். திரைகளை நோக்கி எமது கண்கள் அசைவின்றி வெறித்துப் பார்ப்பதினால் மூளையின் செயற்பாடும் குறையுமாம்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
நோர்வே எரிவாயுவும் எரியும். முகவர்களால் ஐரோப்பா வாழ்கிறதென்றால் Gazprom இலாபத்தில் அல்லவா இயங்க வேண்டும். 😀
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஒவ்வொரு ஊடகத்தின் நிர்வாகம், பிரதேசம், அரசியல் கொள்கை நீரியாக ஏதோ ஒரு பக்கம் நிற்கும். பிரான்சில் நடுநிலையாக மதிக்கப்படும் Mediapart போன்ற ஊடகங்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல தடவை தாக்கப்பட்ட Charlie Hebdo போன்றவற்றுக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. சீ என் என் போன்ற தளங்களை எட்டியும் பார்ப்பதில்லை. பி பி சி செய்திகளை அவசியம் ஏற்பட்டாலே ஒழிய தேடிச் சென்று வாசிப்பதில்லை. நான் செய்திகளை இன்ன தளத்தில்தான் வாசிக்க வேண்டும் என்று தேடிச் செல்வதில்லை. ஒரு செய்தியைப் பல்வேறு இணையத் தளங்களில் வாசிப்பதுண்டு. இதன் மூலம் தகவல்களின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். சரி. அடிக்கடி மேற்கின் ஊதுகுழல் என்று வெறுக்கும் இந்த ஊடகங்கள் தவிர உண்மையை எழுதும் செய்தித் தளங்களின் பட்டியலைத் தாருங்கள், இனிவரும் நாளில் நானும் உண்மைச் செய்திகளைப் படிக்கிறேன்.
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
குளிர்பான நிறுவனம் அமைக்க இவ்வளவு செலவாகுமா ? செய்தியில் உள்ளது போல் 230 கோடி தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக இருக்கலாம். பின்னர் அடுத்த வருடங்களில் குறிப்பிடப்படும் தொகை வேறு முதலீடுகளாக இருக்கலம். நேற்று Nvidia நிறுவனம் அப்பிள், மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களையெல்லாம் தாண்டி மூவாயிரம் பில்லியனுக்கு மேல் பங்குச் சந்தை மதிப்பைப் பெற்றது. ஆனால் இத்தனை பில்லியன் பெறுமதியான ஒன்றும் இந்த நிறுவனத்திடம் இல்லை. இதுபோல் வெளியாரின் முதலீட்டினை எதிர்வரும் வருடங்களில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கலாம்.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
எரிவாயு பற்றி விளக்கம் கேட்டதால் ஒரு தகவல். Gazprom. அரச வருமானத்தில் முக்கிய பங்குவகிக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனம். சோவியத் உடைவின் பின் வரலாற்றில் முதல் தடவையாக இந்த நிறுவனம் இந்த வருட ஆரம்பத்தில் நட்டமடைந்துள்ளது. 2023 இறுதியில் ஐரோப்பாவின் எரிவாயு இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 15 வீதமானது. 9 வீதம் குழாய் மூலமாகவும் மிகுதி திரவ நிலையிலும் ஐரோப்பா இறக்குமதி செய்கிறது. குழாய் மூலமான எரிவாயு உக்ரெய்ன் வழியாகவே ஐரோப்பாவுக்குள் வருகிறது. ரஷ்யா ஐரோப்பாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குழாயினை உக்ரெய்ன் அனுமதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் முடிவடைகிறது. இந்த வாரம் ஐரோப்பா கொண்டுவந்த பொருளாராத் தடையின்படி ரஷ்யாவின் திரவ வாயு இறக்குமதி நிறுத்தப்படுகிறது. மேலதிகமாக இன்னொரு தகவல். இறுதியாக புதின் சீனாவுக்குச் சென்று சீன அதிபரைச் சந்தித்தபோது சீனாவுக்கான எரிவாயு வழங்கல் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையில் குழாய் அமைக்கப்பட வேண்டும் என்று புதின் கூறியுள்ளார். சீனாவோ எங்களுக்கு எரிவாயு விற்பதானால் நீங்கள் தான் குழாய் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு Gazprom இடம் பணம் இல்லை.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
பல நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பெண்களுக்கு வாக்குரிமையை அனுமதிப்பதா இல்லையா என்று இழுபறி நடந்துள்ளது. பின்னர் தயங்கித் தயங்கி ஒவ்வொரு நாடாக பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள். ஒருபாலின உறவை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் உடலுறவை மையப்படுத்தியே எழுதியதைக் காண முடிகிறது. மிகவும் கண்ணியமான மென்மையான உணர்வுள்ள பல ஒருபாலினத்தவர்களுடன் பல வருடங்களாகப் பழகியுள்ளேன். சிலர் பார்வைக்குச் சாதாரண ஆண் பெண்களாகவே தெரியும். இவர்களுடனான உரையாடல்களில் என்றும் ஆபாசமோ பாலுணர்வோ தென்பட்டதில்லை. ஐரோப்பாவில் பிறந்து படித்து வளர்ந்த உங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி உரையாடிப் பாருங்கள், அவர்கள் தெளிவாக உள்ளனர். காலம் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது வரலாறு.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
அல்ஜஸீராவுக்கும் 1000 பேர் இறந்தது பெரிய செய்தி இல்லை போலுள்ளது. அதன் முதற் பக்கத்தில் இச் செய்தியை எங்கும் காணவில்லை. அதன் Middle East News பக்கத்திலும் இது தொடர்பான செய்தி இல்லை.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஆம் கடவுளை நம்புபவர்கள் மிக அமைதியானவர்கள். வாகனங்கள் ஓட்டி காற்றினை மாசுபடுத்துவதில்லை, விமானம் ஏறுவதில்லை, தொலைக்காட்சி பார்த்து மின்சாரத்தை வீணாக்குவதில்லை, காடுகளை அழித்து வீடு கட்டுவதில்லை, நாசினிகள் பாவிக்கப்படும் தானியங்களை உண்பதில்லை, மருத்துவர் தரும் மருந்துகளை உண்ணாமல் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்கள். நாத்திகவாதிகள் அதிகமாக வாழும் சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனித நேயமும் ஒழுக்கமும் சுற்றாடல் இயற்கை பற்றிய சிந்தனையும் இல்லாத மூர்க்கமானவர்களால்தான் உலகம் வெப்பமடைகிறது.
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சவுதி நாட்டுக்கு ஹஜ் யாத்திரிகை மூலம் 15 பில்லியன் டொலர் வரை வருமானம் கிடைக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் சவுதி அரசு அறிவிப்பதில்லை. இறந்தவர்களின் சொந்த நாடுகளின் தகவல்களின் அடிப்படையிலான ஒரு மதிப்பீடு. முன்னைய வருடங்களில் சன நெரிச்சலில் மிதிபட்டு நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ளனர். ஒரு தடவை இடி விழுந்தும் பலர் இறந்தனர். இலங்கை இஸ்லாமிய இணையத் தளம் ஒன்று இறந்தவர்களைத் தியாகிகளாகியுள்ளனர் என்று எழுதியுள்ளது.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி வீரப்பையன்.
-
உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க ஜி7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல்!
இக் கடனுக்கு உத்தரவாதமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட ரஷ்ய வங்கி இருப்புகளால் கிடைக்கும் வருமானத்தில் கை வைக்கிறார்கள்.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ரஷ்ய துணை இராணுவப் படை ஒன்றுக்குச் சட்டவிரோதமாக இலங்கையர்களைச் சேர்த்த ஜெனரல் தர ஓய்வுபெற்ற இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளைப் போலீஸ் கைது செய்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml ரஷ்ய இராணுவத்தில் சேர்வதற்கு மாதம் 2100 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாகவும் இதுவரை 2000 ற்கு மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு வேகமகப் பழைய நிலைக்கு வருகிறது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ? கணணியிலா தொலைபேசியிலா இப்படி வருகிறது. ஏராளன், Back மூலம் பழைய நிலைக்கு வருவதற்குப் பதிலாக மெனுவில் Activity என்பதை அழுத்தி வரலாமே.