Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11187
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன் தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் ( இந்தக் காலண்டரை யாரோ ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று பார்க்க முடியாமல் இருக்கு )😃
  2. வாழ்வின் அனுபவ பகிர்வுக்கு நன்றி.
  3. ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
  4. ஆர்வக் கோளாறு .....சிங்கம் கொடிய விலங்கு அது எததனை நாள் கொலைப் பசியோடு இருந்ததோ ?அதனிடம் கற்ற படம்.
  5. மிக்க நன்றி வேங்கையன் . எனக்கு மிகவும் பயனுள்ள விடயம் அது போல இது மற்றவர்களுக்கும் பயன் படட்டும் . தொடருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  6. எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும் அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத நாவால் வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள் அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
  7. கள உறவு வசி.....கசாயம் என்பது சில வகை மூலிகை களை அவித்து பெறப்படுவது கசப்பாக இருக்கும். உடல் நலமின்மையோடு சம்பந்தப்பட்ட்து சாயம் என்பது தேயிலையின் செறிவு தன்மை ஒரு அளவு வெந்நீருக்குள் . ஒருபக்கற் போடடால் வரும் செறிவுக்கும் மூணுபக்கற் போட்டால் வரும் செறிவுக்கும் உள்ள வேறுபாடு. .
  8. 😄 சிறீத்தம்பி இந்த ரெண்டு தேத்தண்ணியை விட ... . ஜிஞ்சர் டி லெமன் டி மசாலா டி சுக்கு காபி .. .முடடைக் கோப்பி எல்லாம் உங்கடையாக்கள் போட்டுத் தரல்லையா ?😄
  9. கால் தரையில் படும் பொது ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. என்கிறார். கேட்டுப்பாருங்கள்
  10. ஈழ மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
  11. வாழ்த்துக்கள் அம்மா. பாவம் கூட்டிக் கொண்டுபோனவர்கள் கூடவா ஒரு சப்பாத்து வாங்கி கொடுக்க வில்லை. அல்லது அது அவருக்கு சங்கடமாய் இருக்கும் போல . வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை எதிர் கொண்டு இருப்பார்போல . அவரது தன்னம்பிக்கை இன்னும் முன்னேற வைக்கும்.
  12. மண்ணில் இந்தக் காதல் .... ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா
  13. தம்பதிகள் நூறாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்க .
  14. வணக்கம் சீனித்தம்பி ......குடும்பத்தில கடைக்குட்டி போல 😄
  15. தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .
  16. யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு... நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு நம் இராணுவ வீரர்கள் பதினைந்து பேர் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..? என்றேன். ஆக்ராவுக்கு.... அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி..... என்றனர். ஒரு மணி நேரம் சென்றிருக்கும்,அப்பொழுது ஒரு அறிவிப்பு. மதிய உணவு தயார்.....சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போனேன். ஏன்... சாப்பாடு வாங்கலையா? என்றேன். இல்லை சார்.... விலை அதிகம்.... என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது..... மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்..... அங்கு இறங்கி உண்ணலாம், விலையும் குறைவாக இருக்கும் என்றார். ஆமாம்..... உண்மை. இதை கேட்ட பொழுது என் மனது மிகவும் வலித்தது உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன். அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள். கண்களில் கண்ணீர். இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்துதான் என்றாள்..... நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்ததை நான் பார்த்தேன்..... நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..... என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்.நான் என் இருக்கைக்கு திரும்பினேன். சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தளும்ப என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, இது ஒரு மிகப்பெரிய கருணை செயல்.....மிகவும் மகிழ்ச்சி..... உங்களைப் போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார். விண்ணுக்கு எட்டும் அளவிற்கு விமானத்துக்குள் ஒரே கைதட்டல்..... முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான். விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்..... இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள். அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம் சேர்ந்துள்ளது. ஒரு தூண்டுதல்..... பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..... அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாக சாப்பிடுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும் என்றேன்.காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்..... இந்த இளம் வீரர்கள் தம் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை..... இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாராக இல்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுவதுடன், அவர்களை தெய்வங்களாகவும் பூஜித்து, அவர்களுக்கு கோவில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது..... கோடி கணக்கில் பணம், சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது. எம் தேசத்து என் இளைஞனே...! என் சகோதரனே...! நம் தேச நலன் காக்க வெளியே வா..... படித்ததும் பகிர்ந்தேன்!
  17. situation song ( பகிர்வுக்கு ஏற்ற பாடல் ) கேட்டுப்பாருங்கோ
  18. மண்ணிலிருந்து விண்ணுக்கு ராக்கெட் விடும் இந்தக் காலத்திலும் செய்வினை செயல்பாட்டு வினை எல்லாம் இருக்கு என்று நம்பும் மனிதர்களை என்ன செய்யலாம் ? தடுமாறும் போது தள்ளி விடும் கூடடம்.
  19. நடைமுறையிலிருக்கும் பிரச்சனைக்கான நல்லதொரு பகிர்வு. யாம் பெற்ற இன்பம் (துன்பம்) யாவரும் பெறுக. நன்றி .
  20. அப்போ இவர்கள் ஒரிஜினல் காங்ஸ் இல்லையா ? புகுந்த வீடா ? ஒரிஜினல்ஸ் மன்னிக்கவும்.
  21. நன்றி வ.ந.கிரிதரன் அவர்களுக்கு இதை இங்கு ஒட்டிய நாதம்ஸ் , கந்தர்மட காங்ஸ் நன்றி.
  22. தந்தையின் பிரிவால் துயரடைந்திருக்கும் யாயினிக்கும்,குடும்பத்தா ருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி யடைய என் பிரார்த்தனைகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.