அமைதியான நீரோடடமாய் அவர்களது வாழ்வு சென்று கொண்டிருக்கையில், புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் , வயது வந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஆசைபடடனார். தமக்கு அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு சொல்லியும் வைத்தனர். செல்வி இரண்டு அண்ணா மா ருக்கு ஒரு செல்லத்தங்கை . புல ம் பெயர்ந்த தமிழ் தாய் தந்தைக்கு மகளாக வளர்ந்தவள். பெற்றாரும் பெண்பிள்ளை என்ற கிராமத்து வழக்கில் , ஜெர்மனியில் வாழ்ந்தாலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள் அவளு க்கு ஒரு நண்பிகளும் இல்லை . பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வரும் தந்தை , இவர்களது திருமணம் சற்று வயதான காலத்திலே நடந்தது. செல்வி பிறக்கும் போது தாய்க்கு நாற்பது வயது. சமய கடமைகளி ல் மிகவும் ஊறி போனவர்கள். ஒரு வகை போதகக் கூட்ட்ம் என்றும் சொல்லாம். ஞாயிற்றுக்கிழமை என்றால் முழுக் குடும்பமும் ஜெபக் கூட்ட்த்திலே இருப்பார்கள். மூத்தமகன் பியானோ வாசிக்க இளையமகன் மத்தளம் வாசிக்க பாட்டுக் குழுவில் செல்வியும் முக்கிய அங்கத்தவர்.
இப்படியாக சர்ச்சும் வீடுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கூட்ட்த்தில ஒரு குடும்பத்தினர் இவர்களுக்கு நண்பாராக்கினார். பேச்சு வாக்கில் தமது மகள் திருமணமாகி தமக்கு அருகில் குழந்தைகளுடன் வாழ்வதாகவும். , துபையில் வேலை செய்யும் மகன் தம்மிடம் வந்து சேர்ந்துவிடடால் தமது முழுக்குடும்பமும் ஒன்றிணைந்துவிட்ட் மகிழ்ச்சி எனக் கூறினார். பையனை பற்றி விசாரித்தபோது வயதும் பொருத்தமாக இருக்கவே செல்விக்கு மணமுடிக்க ஆயத்தமாகினர். எல்லா ஒழுங்கும் முற்றுப் பெற்று மாப்பிள்ளை துபாயிலிருந்து தாய் நாடு வந்து, இவர்களும் பெண்ணும் அங்கு சென்று பதிவு திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தனர். செல்வியையும் தொலைபேசியில் பேச செய்து இருவருக்கும் பிடித்து போக பதிவு திருமணத்துக்கான நாள் முடிவு செய்தனர்
தாய கத்துக்கு சென்று , பெரியப்பா வீட்டில் வந்து தங்கியிருந்த மாப்பிள்ளை சகல ஆயத்தங்களும் செய்து இனிதே திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் இவர்கள் ஜெர்மனி திரும் பினார். ஜெர்மனி வந்ததும் சில வாரங்களில் மாப்பிள்ளையை குடும்ப ஒன்றிணைவு மூலம் எடுக்க செல்வி ஆயத்தங்கள் செய்தார் . பத்திரங்களை நிரப்பி தகவல்களை சேகரித்து ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் செல்வியை தங்கள் வீட்டுக்கு அழை த்தனர். அங்கு சென்று மதிய உணவு முடிந்து வீட்டுக்கு வர ஆயத்தமாகும் போது வருங்கால மாமியார் தனியே அழைத்து , செல்வியின் வேலை ,சம்பளம் என எல்லாம் விசாரித்தார். இறுதியில் மகன் இங்கு வந்து கலியாணம் சர்ச் இல் நடந்த பின் தங்களுடன் இருக்க வேண்டுமெ ன்றும் இருவரும் கடன் முடியுமட்டும் தனி க் குடித்தனம் செல்லா நினைக்க வேண்டாமென்றும் , மகனை துபாய்க்கு அனுப்பிய விடயத்தில் கடன் இருக்கு என்றும் மாமியார் செல்வியின் காதில போட்டு வைத்தார்.
ஏற்கனவே செல்வி கணவன் வந்து தங்க ,ஒழுங்கு செய்யும் போது விண்ணப்பத்துக்கு தேவை என்பதால் அவளது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே வீடு பார்த்து அட்வான்ஸ் கட்டி அங்கிருந்து தான் வேலைக்கு செல்கிறாள். மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வி நேராக தாயிடம் வந்தாள். மிகவும் கோபமாக காணப்படடாள் அழுகையின் மத்தியில் "இவ்வளவு காலம் பொத் தி பொத் தி வளர்த்து ஊர் உலக நடைமுறை தெரியாமல் வைத்து என்னை இப்ப டி ஒரு இடத்தில் தள்ளி விடடீர்களே "என்று குமுறினாள் . தொடர்ந்து "குடும்ப ஒன்றிணைவு விண்ணப்பம் அனுப்ப மாடடேன்" என்றாள் .
தாய் தந்தை க்கு இடிவிழுந்த்து போலானது . இப்படிப் பட்ட் மாமியாருக்கு தங்கள் மகளை கொடுத்து விட்டொமே என்று பெருங்கவலை கொண்டனர். மாப்பிள்ளை பெடியனோடு பேசிப்பார்ப்போம் என சமாதானம் செய்யப் பார்த்தனர் . மாப்பிளை வர முன்னமே இப்படி சட்ட்ம் போடும் மாமியாருடன் எப்படி வாழ்வது எம்மை நிம்மதியாக வாழ விடமாட்ட்ர்கள். என்று கோபித்து கொண்டு வேலை இடத்துக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு சென்று விடடாள் .வார விடுமுறைக்கு தாய் தந்தையை பார்க்க வரவில்லை. கடைசியில் அவளிடம் சென்று தாய் தந்தை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்தவர் மூலம் தாயகத்தில் ஒழுங்கு செய்தனர்.
இது இவ்வாறு இருக்கும் போது செல்வியின் தொலைபே சி யோ மடலோ ஒரு மாதத்துக்கு மேலாக வரவில்லை என மிகவும் கவலைப்பட்டு அவன் தாயிடம் தொடர்பு கொண்டு கேட்ட் போது தாய் மேலோட்ட்மாக சொன்னார். அதைக் கேட்ட பையன் மிகவும் கவலைப்படட துடன். தாய் தந்தையிடமே பேச்சு வார்தையற்று இருந்தான். செய்த வேலையையும் விட்டு வந்து ...கலியாணமும் குழம்பி ...என்ன செய்வதென அறியாது .யாருக்கும் சொல்லமால் இந்தியா சென்று விடடான் .. போலீசார் மூலம் தேடியும் ஆள் கிடைக்க வில்லை. என்ன செய்வதென அறியாது தாய் தந்தையர் கவலையோடு இருக்க , மூத்த அண்ணாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்ர்களைப்பார்க்க சென்றவளுக்கு இன்னும் துயரம் அதிகமானது . அண்ணி மீது வெறுப்பானது. இவர்களுக்கு எல்லாம் கால காலத்தில் திருமணமாகி குழந்தையுடன் வாழ்கிறர்கள் என மனக் குழப்பம் ஆனது .
பொறியில் சிக்கிய மான் போன்ற நிலையில் இருந்தாள் .செல்வி . காலம் உருண்டோடியது ...இரு இளம் உள்ளங்களை மனம் நோக செய்த குற்ற உணர்வில் இரு குடும்பமும் பேச்சு வார்தையற்று இருந்தனர். செல்வியின் தாய் தந்தையர் நோய்யுற்றனர். இருவரும் மண வில க்கு பெறாமல் வேறு திருமணமும் செய்ய முடியாது .இரு உள்ளங்களை ஒன்று சேரவிடாமல் தவிக்க விடட பாவத்தை தே டிக் கொண்டனர். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என புலம்பலாயிற்று . இவர்களின் வாழ்வை காலம் தான் மாற்ற வேண்டும்.
உலக நிலைவரம் தெரியாத பெற்றோர் , வெளிநாட்டு சென்றும் பண ஆசை பிடித்த , அறியாமை கொண்ட பெற்ற்வர்கள். இளம் உள்ளங்களின் மன உணர்வுகளைப் புரியாத பெற்ற்வர்கள் இன்னும் வாழ்கிறார்கள். காலம் கணனி மயமாகி விட்ட்து. மாற்றங்களை கிரகித்து மாறா விடடால் நாம் தான் மடையார் ஆவோம். தற்போது இளைய தலை முறை நன்றாக கணித்து விவரம் தெரிந்தவர்களாக உள்ளனர். பெற்ற்வர்கள் அவர்களை நம்ப வேண்டும். பெற்ற்வர்கள் பிள்ளைகளை தோழர்களாக பாவித்து பழக வேண்டும். அப்போது தான் அவர்களும் எதையும் மறை க்காமல் பகிர்ந்து கொள்வார்கள்.
உண்மை கலந்த கற்பனை .