Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. நன்றி....காவலூர் கண்மணி..! வட துருவத்தில் பிறந்த துருவக் கரடிக்கு.....மைனஸ் மூன்று....பாகை தானே....கோடை காலம்...! தீவகத்தில் பிறந்தவனுக்குக் கடலின் அலைகள் எழுப்பும் சத்தம் தானே...சங்கீதம்?
  2. இந்த இடத்தில்.....ராசுக் குட்டி, ஒரு கவிஞனாக மாறுகின்றார் போல கிடக்கு..! ஒரு நல்ல படிப்பினைக் கதை...!
  3. இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..! எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...! பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!
  4. பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்! அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்? அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..! காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..! பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்! இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!
  5. வித்தையைக் கற்றுத் தருவது....பிரச்சனையில்லை,நிழலி! காதலை ஒரு நாளும் சுருக்கக் கூடாது! உடன் படுகின்றேன்! முன்னர் அலைமகள் என்று உறவு யாழில் இருந்தார்...உங்கட கனடாப் பக்கம் என்று தான் நினைவு! அவர் எழுதிய கருத்தொன்று அப்படியே ....மனதில் பதிந்து போய் விட்டது! யாரோ எழுதிய காதல் கதையொன்றுக்கு அவர் எழுதிய கருத்து இது தான்...! குளிர் காலம் வந்து விட்டால்....எல்லோருடைய பழைய காதலிகளும் வரிசையில....வரத் துவங்குவினம்! அந்தக் கருத்துத் தான்....இந்தக் கதையை எழுத உந்து கோலாக இருந்தது....! உங்கள் ஆலோசனைப் படி....விதி விட்ட வழியே நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! 🥰 வணக்கம்.....நிலாக்கா! உங்களுடைய கருத்தைப் பார்த்த பின்னர்.....கையைக் காலை நீட்டிக் கருத்தெழுதக் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!😀 விரிக்கக் கூடிய அளவுக்கு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்!நன்றியும்...அன்பும்....!
  6. நன்றி.... பசுவூர்க் கோபி..! சந்திரனை உங்களுக்குத் தெரியும் போல உள்ளதா? மிகவும் நல்லது! சந்திரன் அடுத்த முறை...அங்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திக்கும் படி சொல்லி விடுகின்றேன்...! 😀
  7. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  8. சூனா...பானா, உங்கள் மகள் எழுதிய கதைகளை வாசித்துள்ளேன்! இன்று உங்கள் கதையையும் வாசிக்கக் கிடைத்தது! சம்பிரதாயங்களும், சமூக நம்பிக்கைகளும் காலத்திற்கேற்ப மாற வேண்டும்! இல்லா விட்டால், அவையும் காலா வதியாகி விடும்..! ஒருவரது மன மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பதவி உயர்விலோ தங்கியிருப்பதில்லை என்றே நானும் கருதுகின்றேன்! பிரபல மோட்டார் கார் கம்பனியின் உரிமையாளரான கென்றி போர்ட் என்பவர்...தனது கம்பனியில் தொழில் பார்க்கும் கறுப்பினத்தவஒ ஒருவன்... அவனது மதிய உணவை அருந்தும் போது, அவன் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு தனக்குப் பொறாமை வருவதாக எழுதியுள்ளார்! அவ்வளவுக்கும் அவன் சாப்பிடுவதோ....வெறும் காய்ந்து போன பாண் துண்டுகள் மட்டுமே!
  9. பெருக்கலாம் தான் சுவியர்...! கன காலமாய்க் கராச்சுக்குள்ள, பார்க் பண்ணியிருந்த காரை வெளியால எடுத்துக் கொஞ்சம் எண்ணெய், தண்ணியைக் காட்டிப் போட்டு....கை வேயில ஓடக் கொஞ்சம் பயமாய்க் கிடக்குது! யாழ் களம் முந்தி மாதிரி இல்லை! மிகவும் தரமான கவிதைகளும், கவிதைகளும் இப்போது அதில் பதியப் படுகின்றன..! மிக்க நன்றி, விசுகர்....! பேத்தி தான் வந்து தட்டினாலும்.....தட்டுவா!😜 வரவுக்கும், கருத்துக்கும் நன்றி, உடையார்...! ஆட்டுவித்தால்.....யாரொருவர் ஆடாதாரோ......கண்ணா...! ஆனால்....இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு...! 😄
  10. காலத்துக்கு ஏற்ற ஒரு பதிவு....! நாங்களும் கால மாற்றங்களுடன் பயணிக்காதவிடத்துக்....காலம் நம்மை விட்டு விட்டு வெகு தூரம் பயணித்து விடும்...! கூனிக் குறுக இங்கு எதுவுமே இல்லையே! ஒரு வேளை வருசப் பிறப்பு அண்டைக்குக் கொஞ்சம் ஆசாரமாக இருந்திருக்கலாமோ....என்னமோ?🤣
  11. புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால், அந்த்ப் புண்ணியம் கண்ணனுக்கே...! போற்றுவார் போற்றலும்....தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே....! காண்டீபம் எழுக...! உன் கை வண்ணம் எழுக...! களமெலாம் சிவக்க வாழ்க....!!!
  12. யூ மீன் காதல்? சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇
  13. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  14. எனக்கென்னவோ....கதை முடிஞ்ச மாதிரிக் கிடந்தது..! சரி....சரி....இனிமேல் தொடரும் போட மறக்காதீர்கள்..! தொடந்தும் புகையுங்கள்.....மன்னிக்கவும் தொடர்ந்தும் எழுதுங்கள், அக்கினி...!
  15. அருமையான ஒரு கதையை வாசித்த ஒரு திருப்தி..! ஆரம்பத்தில் யாழ் கள உறவான நாதமுனியின் எழுத்தின் சாயல் போன்று தொடங்கிய கதை....போகப் போக..அக்கினியின் தனித்துவத்தைப் பிரதி பலிகக ஆரம்பித்துக் கதையை முடித்த விதம், மிகவும் நன்றாக உள்ளது! இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை....வாசகர்கள் ஆர்வமிழக்காத வகையில் கொண்டு செல்வதென்பது மிகவும் கடினமான காரியம்! அதை அக்கினி கையாண்ட விதம் மிகவும் இயல்பாக உள்ளது..! தொடர்ந்தும் கதையுங்கள் அக்கினி....ஐ மீன் தொடர்ந்தும் எழுதுங்கள்...!
  16. அருமையான கவிநடை..! நீண்ட காலங்களின் பின்னர் வெட்டுக் கழி நினைவுக்கு வந்தது..! தொடரட்டும்....உங்கள் கவிச் சாரல்..! நன்றாக நனைந்திட ஆசை...!
  17. ஒரு சாதாரணனுக்குத் தலையிடி வந்தால்....ஒரு பனடோலோடை....அலுவல் முடிஞ்சிரும்! ஒரு வைத்தியருக்குத் தலையிடி வந்தால்....அப்ப்டியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ எண்டு ..வாரக் கணக்கில ஆய்வு ஓடும்! ஊரில் ஒரு வயதானவர் குந்தியிருந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்! ஒரு அரை மணித்தியாலமாய்..இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை! அவருக்கு புறஸ்ரேற் ஆக இருக்கலாம் என்பது என்பது அனுமானமாக இருந்தது! அவரிடம் கேட்டேன்! தம்பி கொஞ்சம் சூடு போலக் கிடக்குது! பின்னேரன் கொஞ்சம் பனங் கள்ளடிக்க எல்லாம் சரியாகி விடும்! ஏனோ இந்தக் கதையை வாசித்த போது...அந்த வயதானவர்....மீண்டும் நினைவில் வந்து போகின்றார்! தொடருங்கள்,நிழலி..!
  18. சுவியர், மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡 ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜
  19. எமது சமய நம்பிக்கைகளில் மிக முக்கியமானது ஒன்றைக் கூறுகின்றேன், சாந்தி...! மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மனதின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதே அதுவாகும்! மனம் தளர்ந்து போகாத வரையில்....நீங்கள் எவ்வளவு துன்பங்களையும்...கடந்து மீண்டு வரலாம்! பார்த்திபன் பழைய நிலைக்குத் திரும்பியதற்கும் இதுவே, காரணமாக இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையின் அதிக சோதனைகள் வரும்போது, ஆண்டவன் சோதிக்கின்றான் என்று கூறுவார்கள்! நல்லவர்களைத் தான் அவன் அதிகம் சோதிக்கிறான் .....! இவையும் கடந்து போகட்டும்....!
  20. எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப் பாருங்கள்...! தன்னை யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...! ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து கொண்டேயிருக்கும்...! இறுதி முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!
  21. எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...! உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..! அடுத்த தலை முறைகளுக்குள் இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..! தொடருங்கள் விசுகர்...!
  22. மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப் பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!
  23. முனிவர், ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி கிடைத்தது...! கதையின் உச்சமே.....மேலேயுள்ள வரிகள் தான்....! கதையின் கதாநாயகனும்.....மாணிக்க வாசகர் தான்....! நானும் பத்து வருடங்களுக்கு மேல்....லண்டனில் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில்....உங்கள் கதை பலரின் கண்களைத் திறக்க வேண்டுமென்பது தான் எனது அவா...! ஒரு தாய், தனது கண்களை மூடும் வரை.....தனது குழந்தைகளுக்காகத் தான் சிந்தித்துச் செயல் படுவாள்..! நியாயம், அனியாயம் எல்லாமே...அவளுக்கு இரண்டாம் பட்சம் தான்...! ஆனால்....ஒரு தகப்பன்....??? உங்களுக்கு அடுத்த கதைக்கான...கருவைத் தந்திருக்கின்றேன்..!😇
  24. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,நெடுக்கர்.....!
  25. இது கொரோனா ஸோம்பி.....! வேற என்ன ஸோம்பி வேணும் உங்களுக்கு, தமிழ் சிறி?😇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.