Everything posted by புங்கையூரன்
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
-
பாவத்தின் சம்பளம்
எனக்கென்னவோ....கதை முடிஞ்ச மாதிரிக் கிடந்தது..! சரி....சரி....இனிமேல் தொடரும் போட மறக்காதீர்கள்..! தொடந்தும் புகையுங்கள்.....மன்னிக்கவும் தொடர்ந்தும் எழுதுங்கள், அக்கினி...!
-
பாவத்தின் சம்பளம்
அருமையான ஒரு கதையை வாசித்த ஒரு திருப்தி..! ஆரம்பத்தில் யாழ் கள உறவான நாதமுனியின் எழுத்தின் சாயல் போன்று தொடங்கிய கதை....போகப் போக..அக்கினியின் தனித்துவத்தைப் பிரதி பலிகக ஆரம்பித்துக் கதையை முடித்த விதம், மிகவும் நன்றாக உள்ளது! இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை....வாசகர்கள் ஆர்வமிழக்காத வகையில் கொண்டு செல்வதென்பது மிகவும் கடினமான காரியம்! அதை அக்கினி கையாண்ட விதம் மிகவும் இயல்பாக உள்ளது..! தொடர்ந்தும் கதையுங்கள் அக்கினி....ஐ மீன் தொடர்ந்தும் எழுதுங்கள்...!
-
வெண்பனித்தூறல்..!
அருமையான கவிநடை..! நீண்ட காலங்களின் பின்னர் வெட்டுக் கழி நினைவுக்கு வந்தது..! தொடரட்டும்....உங்கள் கவிச் சாரல்..! நன்றாக நனைந்திட ஆசை...!
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
ஒரு சாதாரணனுக்குத் தலையிடி வந்தால்....ஒரு பனடோலோடை....அலுவல் முடிஞ்சிரும்! ஒரு வைத்தியருக்குத் தலையிடி வந்தால்....அப்ப்டியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ எண்டு ..வாரக் கணக்கில ஆய்வு ஓடும்! ஊரில் ஒரு வயதானவர் குந்தியிருந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்! ஒரு அரை மணித்தியாலமாய்..இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை! அவருக்கு புறஸ்ரேற் ஆக இருக்கலாம் என்பது என்பது அனுமானமாக இருந்தது! அவரிடம் கேட்டேன்! தம்பி கொஞ்சம் சூடு போலக் கிடக்குது! பின்னேரன் கொஞ்சம் பனங் கள்ளடிக்க எல்லாம் சரியாகி விடும்! ஏனோ இந்தக் கதையை வாசித்த போது...அந்த வயதானவர்....மீண்டும் நினைவில் வந்து போகின்றார்! தொடருங்கள்,நிழலி..!
-
அன்புள்ள அம்மா....
சுவியர், மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡 ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
எமது சமய நம்பிக்கைகளில் மிக முக்கியமானது ஒன்றைக் கூறுகின்றேன், சாந்தி...! மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மனதின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதே அதுவாகும்! மனம் தளர்ந்து போகாத வரையில்....நீங்கள் எவ்வளவு துன்பங்களையும்...கடந்து மீண்டு வரலாம்! பார்த்திபன் பழைய நிலைக்குத் திரும்பியதற்கும் இதுவே, காரணமாக இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையின் அதிக சோதனைகள் வரும்போது, ஆண்டவன் சோதிக்கின்றான் என்று கூறுவார்கள்! நல்லவர்களைத் தான் அவன் அதிகம் சோதிக்கிறான் .....! இவையும் கடந்து போகட்டும்....!
-
சுதந்திரம் எம் சுவாசம்.
எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப் பாருங்கள்...! தன்னை யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...! ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து கொண்டேயிருக்கும்...! இறுதி முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!
-
பயணம்???
எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...! உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..! அடுத்த தலை முறைகளுக்குள் இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..! தொடருங்கள் விசுகர்...!
-
அன்புள்ள அம்மா....
மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப் பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
முனிவர், ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி கிடைத்தது...! கதையின் உச்சமே.....மேலேயுள்ள வரிகள் தான்....! கதையின் கதாநாயகனும்.....மாணிக்க வாசகர் தான்....! நானும் பத்து வருடங்களுக்கு மேல்....லண்டனில் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில்....உங்கள் கதை பலரின் கண்களைத் திறக்க வேண்டுமென்பது தான் எனது அவா...! ஒரு தாய், தனது கண்களை மூடும் வரை.....தனது குழந்தைகளுக்காகத் தான் சிந்தித்துச் செயல் படுவாள்..! நியாயம், அனியாயம் எல்லாமே...அவளுக்கு இரண்டாம் பட்சம் தான்...! ஆனால்....ஒரு தகப்பன்....??? உங்களுக்கு அடுத்த கதைக்கான...கருவைத் தந்திருக்கின்றேன்..!😇
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,நெடுக்கர்.....!
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
இது கொரோனா ஸோம்பி.....! வேற என்ன ஸோம்பி வேணும் உங்களுக்கு, தமிழ் சிறி?😇
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பதின்மூன்று வயதில் காலடி பதிக்கும். அன்புத் தம்பி தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!😁
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
என்னுடன் மட்டக்களப்பு நண்பரொருவர் கல்லூரிக் காலத்தில், ஒன்றாகப் படித்தார்...! அவரது பெயர் போடியார் என்று குறிப்பிட்டார்! தனது குடும்பத்தில் அனைவரும் போடியார் என்று தான் அழைக்கப் படுவதாகக் கூறினார்! வன்னிப் பகுதிகளில் நாச்சியார் என்று அழைக்கப் படுவது போல...வன்னி மன்னர்களின் ஆதிக்கம், கிழக்கில் விரிந்த போது இந்தப் பெயர்கள் அங்கு வழக்கத்துக்கு வந்திருக்கவும் கூடும்..! இந்தியாவில் எல்லா தலைப்பாகைகளின் குடும்பப் பெயர் சிங் என்பது போலவும் இருக்கலாம்! பஞ்சாப் மாகாணத்தின் 'ஆதாமாக" மிஸ்டர் சிங் இருந்திருப்பாரோ?😜
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
எக்ஸாற்லி....!!!😝
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்! ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக் கிழித்து எறிவார்! இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே வாங்குவதில்லை..!😄
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்
வீர வணக்கம்....!
-
மாஸ்க் எடுத்தாச்சே
புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄 சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது உண்டு..! அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...! கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...! விண்ணை வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது? கதை....அருமை....!!!
-
யாழ் எனும் கைத்தடி..
என்ன வளவன் இப்ப்டிச் சொல்லுகின்றீர்கள்? யாழ் என்பவள் பெண் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்....அவளுக்கு இப்போது இருபத்து மூன்று வயது தானே? அவளுக்கு ஐம்பது வயது வரும்போது நாடி ....நரம்புகளைப் பற்றி யோசிப்போமே...!😀
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
இனவாதம்....பிக்கு மாருக்கு வயிறு வளர்க்க உதவுகின்றது! அதை விடுவம்...! மாணிக்க வாசகர் இன்ரென்ஸிவ் வாட்டில எண்டு கேள்வி..! அப்படி என்ன தான் அந்த மெஸ்ஸேஜில இருந்திருக்கும்?😮
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
சுமே, ஒருவரது மொழி என்பது அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றது. வெப்ப வலையத்தில் வாழும் எமது மொழியின் முதல் எழுத்தே ‘அ’ வில் தொடங்குகின்ரது. குளிர் காலனிலையில் வாழும் வெள்ளையன் பெரிதாக வாயைத் திறந்து மொழியைப் பேச முடியாது. அதிக வெப்பத்தை அவன் இழக்க வேண்டியிருக்கும். வாயிலுள்ள சுருட்டை வெளியே எடுக்காமலே வின்ஸ்டன் சேர் சிலால் ஒரு பிரசங்கமே நடத்த முடியும். நமது மொழியில் அது கடினமானது. ஒரு கிளி பேசப் பழகுவது போலத் தான், எமது பெயர்களை அவர்கல் பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள்...!
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
இலங்கையை விட்டு வெளிக்கிட்ட நாள் முதலாய்.....எனது முதல் பெயர் அப்பாவின் பெயர் தான்...! அப்பாவின் பெயர் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே அவர் ஆசைப்பட்டிருப்பார்? அவர் பெயரையே என் பெயர் ஆக்கி விட்டதால்....எனக்குக் குற்ற உணர்வு எள்ளளவும் வரவேயில்லை! இப்போது ஒரு குடும்பப் பெயர் உண்டு..! அதனால் பிரச்சனைகள் இல்லை! ஆனால் உண்மையான பிரச்சனை....நீளமான எங்களது பெயர்கள் தான்! உதாரணத்துக்கு.....கைலாயபதிவாசன் அல்லது சிவஞானசுந்தரம்..! பாவம்...வெள்ளைக்காரன் என்ன பாடு படுவான்..! உங்கள் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டது! த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன! பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர், சாதீயம் தென்னிந்தியாவில் புகுத்தப் பட்ட பின்னர் தான் இந்தக் குடும்பப் பெயர்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்! ஆதித் தமிழர்கள் குடும்பப் பெயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்! தாழிகளில் புதைப்பதும்,நடுகல் நடுவதும் அவர்களது வழக்கமாக இருந்திருக்க வேண்டும்! பிராமணர்கள் தான்...எரிப்பது, உடன் கட்டையேறுவது போன்ற முறைகளை அறிமுகப் படுத்தினார்கள்! இதன் முக்கிய நோக்கம் தமிழர்களின் வரலாற்றுத் தடையங்களை இல்லாமல் செய்வதேயாகும்..! தங்களுக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றினார்கள்! ஒரு பிராமணப் பெண் உடன் கட்டையேறத் தேவயில்லை! அவள் தலைமயிரை வழித்துக் கொண்டால், அது உடன் கட்டையேறியதற்குச் சமனாகும்! தமிழரின் சில நல்ல வழக்கங்களை நாம் பாராட்டவே வேண்டும்! பிராமணர்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்! எனது தந்தையாரின் தந்தையார் அவர் சின்னக் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து விட்டார்! அவரின் தாயாருக்கு...மறுமணம் அந்தக் காலத்திலேயே செய்து வைக்கப் பட்டது! அதுவும் சமூகப் பெரியவர்களால் முன்னின்று நடத்தி வைக்கப் பட்டது! இதை நான் இங்கே எழுதுவதன் நோக்கமானது, இப்போதய சமூக வழக்கங்களை வைத்து..எமது கலாச்சாரத்தை,நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்! அவை எம்மீது திணிக்கப் பட்டு. இப்போது எமது கலாச்சாரம் என அடையாளப் படுத்தப் படுகின்றன! இதே போலத் தான் எமது மதமான சைவமானது இப்போது இந்து மதமாகத் திணிக்கப் படுகின்றது! இணுவிலில் அனுமாருக்குக் கோயில் என்ற போது என்னால் முதலில் நம்ப முடியவில்லை! அனுமாரை...எப்பவாவது கடவுளாகக் கும்பிட்டநினைவு எனக்கு இல்லை! வெறும் இராம தூதுவனாகத் தான் எனக்குத் தெரியும்..!
-
பரிசு.
பிறகு.....பிறகு......???
-
லொக்டவுண்
எங்கட சனத்திலை இருக்கிற இந்தப் படங் காட்டிற குணம் ஒரு நாளும் போகாது என்பதை உங்கள் கதை தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது! இடம், பொருள், ஏவல் என்பவற்றை அவர்கள் ஒரு நாளும் கணக்கெடுப்பதேயில்லை! இப்ப சிட்னி முருகனும் நல்லாத் தனிச்சுப் போனார்! ஆனால் கவலைப் படவேயில்லை! சனம் தான் வாங்கின சாறிகளையும், நகைகளையும், புதுக் கார்களையும் ஊருக்குக் காட்ட ஏலாமல் தலையைச் சொறிஞ்ச படி இருக்கினம்! காவலூர் கண்மணியின் கதையோட்டம் பற்றி விமர்சிக்க எனக்கு அருகதையில்லை! தொடர்ந்தும் எழுதுங்கள்...!