Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதுவரைக்கும் எழுதுவது...: நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் நிழலி அண்ணா. ஒரு சிறிய யோசனை. பகுதி பகுதியாக எழுதும்போது, முதலாவதை எடிட் செய்து அதனுள் மற்றைய பகுதிகளையும் இணைத்தால் வாசிக்கும் பொது இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன் அல்லது அதற்கான இணைப்பை (வலதுபக்க மேல் மூலையிலுள்ள எண்ணைப் பாவித்து) வழங்கலாமே?

Reason for edit - எழுத்துப் பிழை

Edited by Thumpalayan

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply

1983 ஆடி மாதம் நடந்தது இனக்கலவரமா?அல்லது

இனப்படுகொலையா?

இனக்கலவரம் என்ற பெயரில் இனப்படுகொலை....

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்களுக்கு அப்பா மேல் அளவுகடந்த பாசமா ?

நானும் அப்படித்தான், எனது அப்பாவை 2008 இல் அவரது 58 ஆவது வயசில் இழந்து விட்டேன்.

திந்தாமணி எனக்கும் ஞாபகம் இருக்கின்றது அப்போது எனக்கு பத்திரிக்கை வாங்குவதற்கு கொஞ்சம் வசதி குறைவு வாசகசாளையில்தான் படிப்பதுண்டு ......

4.

என் அப்பாவின் பிணம் வளர்த்தப்பட்டு இருந்தது.

பிரேதப்பெட்டியின் இரு மருங்கிலும் வெள்ளை நிறத்திலான துணியின் அலங்கார துணிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. அப்பாவை சவப் பெட்டிக்குள் வைக்க முன் அவது உடலை மலர்ச்சாலையில் embalm பண்ணும் முன் ஒரு வாங்கில் வளர்த்தி இருந்ததை நான் பார்த்து இருந்தேன். அப்ப முகத்தில் தெரிந்த சாவின் பின்னான தெளிவு embalm பண்ணிய பின் மறைந்து இருந்தது

விறைத்து இருந்த அப்பாவின் கைவிரல்களை மெல்ல பிடித்து தடவ தொடங்கினேன். எல்லாரும் அழுது முடித்து போன பின் இரவின் 11 மணி அளவில் அவரது செத்துப் போன உடலின் அருகில் ஒரு கதிரையில் அமர்ந்து தொடும் போது மனசு கொஞ்சம் கொஞ்சமாக இலேசாகிக் கொண்டு வந்தது. ஒருவரின் இறந்த உடல், உயிரோடு இருப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் அதிர்வுகள் பலவகைப்படும் என நினைக்கின்றேன். அனைத்து அதிர்வுகளின் மத்திமத்தில் இருப்பது நாமும் நாளை சாகப்போகின்றோம் என்ற அதிர்வு தான்.

அந்த விரல்களை பிடித்து நடந்த தூரங்களும், கண்ட காட்சிகளும் மனதில் வரிசையாக வந்து போகின. ஒரு முறை மட்டக்களப்பில் கடலுடன் அடித்துச் செல்லப்படும் போதும் அப்பாதான் என்னை காப்பாற்றி இருந்தார்

நான் சிறு வயதில் 5 வயது வரை, குருணாகல் போகும் முன் இருந்தது மட்டக்களப்பில். அப்பா அரசாங்க உத்தியோகத்தர் என்றதால் அடிக்கடி இடமாற்றங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது. கல்லடி உப்போடை என்ற இடத்தில் இருந்தோம். எல்லாருக்கும் மிகச் சின்ன வயதின் அனுபங்களில் மிகச் சில விடயங்கள் மனசில் தெளிவாக இன்று நினைத்து பார்த்தாலும் தெரிவது போன்று இப்பவும் எனக்கு என் 5 வயது வரையான சில ஞாபங்கள் மனசுள் நிற்கின்றன. இவை பின் வந்த காலங்களில் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விடயங்களால் இடைவெளிகள் நிரப்பப் பட்ட காட்சிகளாகக் கூட இருக்கலாம்.

கல்லடி உப்போடையில் நாங்கள் இருந்தது ரமேஸ் அப்பா என்று அழைக்கப்படும் ஒருவரின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். என் முதல் பால்ய நண்பனாக ரமேஸ் எனும் பெடியன் தான் இருந்தான். அவனது சுருள் முடி மட்டும்தான் இன்னும் நினைவில் மிஞ்சுது. அவனிற்கு காது கேளாத ஒரு அண்ணன் இருந்தான் என்பதும், அவன் வீட்டின் முன் ஒரு மாமரமும், அதில் மாம்பழங்களை சாப்பிட விடாமல் தடுக்க ஒரு மணி கட்டி இருந்ததும் கூட நினைவில் நிற்கின்றன. நாம் இருந்த கல்லடி உப்போடை ஒழுங்கை ஒன்றின் முடிவில் ஆறு (களப்பு?) இருந்ததும், அதன் கரையில் ஒரு முஸ்லிம் பெரியவரின் கல்லறை இருந்ததும் நினைவில் நின்றாலும், அந்த ஆற்று ஒழுங்கையில் ஒரு இடத்தில் சீனியப்பு என்ற கடைக்காரரும் அந்தக் கடையில் திருநீறு வட்ட வடிவாக உருட்டி அம்மா இரவில் தரும் சோத்து பிடி போல இருந்ததும் இப்ப கூட நினைவில் இருக்கு.

எங்கள் வீட்டில் இருந்து சைக்கிளில் செல்லும் தூரத்தில் கடல் இருந்தது. மணல் வெளிகளால் நடந்து போனாலும் கடலை சென்றடையலாம். ஒரு உதைப்பந்தாட்ட மைதானமும் கிட்ட இருந்தது. நாங்கள் அடிக்கடி கடற்கரைக்கு போவோம். அப்பாக்கு நீச்சல் அத்துப்படி. சின்ன வயதில் தன்னை கிணற்றுக்குள் இறக்கி தன் அப்பா நீச்சல் பழக்கியதாக சொல்லுவார்.

ஒருக்கால் சோகியும் சிப்பியும் பொறுக்கிக் கொண்டு இருக்கும் போது கடலலையில் நான் அள்ளுப்பட்டு போக அப்பாதான் காப்பாற்றினார். இன்று இந்த நிகழ்வு செய்திக்குரிய நிழல் காட்சிகளாக கற்பனையில் விரிந்தாலும் அந்தக் கடல் இன்னும் மறக்கவில்லை. நான் நினைக்கின்றேன் ஒரு முறை கடலை பார்த்த பின் அதன் அலைகள் என்றுமே மனதின் ஓரத்தில் அடித்துக் கொண்டு தான் இருக்கும் என்றும்.

கடல் தன் ஆழத்தை இறக்கி வைக்க மனித மனசைத்தான் தேடுகின்றன போலும்.

என் பால்ய காலத்து அநேக நினைவுகளில் எல்லாருக்கும் இருப்பது போல அப்பாவுடனான பொழுதுகள் தான் நிறைய இருக்கின்றன. அப்பாவுக்கு மாற்றலாகி குருணாகலுக்கு முதன் முதலில் வரும் போது ஏதோ ஒரு சிங்கள ஊரை ரயில் கடக்கும் போது அப்பா என்னை ரயிலின் யன்னலிற்கு வெளியில் எட்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தார்

ஏதோ ஒரு காரணத்தால் தமிழர்கள் போகும் ரயிலை மட்டும் குறிவைத்து கல்லெறிவார்களாம்

அப்பா சொல்லி முடிக்க முன் ஒரு கல் எம் யன்னலில் பட்டுத் தெறித்தது

என்னைப் பார்க்கும் என் அப்பாவை தெரிந்தவர்கள் எல்லாரும் சொல்வது... நீயும் உன் அப்பா மாதிரித்தான் என்று!

உண்மைதான்!

என் அப்பாவின் பல விசேட குணங்கள் எனக்குள் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்!

பலபேர் சொல்வதைப்போல எனக்கு என் அப்பாதான் ஹீரோ,றோல்மொடல் எல்லாமே!

அவரது குணங்களும் எனக்குள் மரபணு ரீதியாக வந்திருக்கு என்று நினைக்கின்றேன்!

2002இல் அப்பாவை இழந்து நான் தவித்த தவிப்பில்தான் ஒரு தந்தையின் வெற்றிடத்தினை முழுமையாக உணர்ந்தேன்! யாராலும் அதனை ஈடுசெய்ய முடியாது!!

அன்று, "அப்பர் ஏன் இப்படி சொல்கின்றார்" என எரிச்சலோடு காதில் விழுந்த வார்த்தைகள் எல்லாம்.... இன்று, வழிநடத்தும் அறிவுரைகளாக தோன்றுகின்றது!

"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" என்பார்கள்..... இப்பொழுது உணர்கின்றேன்!

என் முதற் காயத்துக்கு மருந்துபோட்டவர் என் அப்பாதான்!

எனக்கு முதல் தமிழ் எழுத்து எழுதப்பழக்கியதும் அப்பாதான்!

இல்லாத நேரத்தில்தான் சிலவற்றின் அருமைகள் புரியும்... :(

மனதினை தொட்ட பதிவு இது!

தொடருங்கள் நிழலி... நன்றிகள் பல! :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது என் அப்பா கொப்பே கடுவ (பெயர் குழப்பம் இருக்கு) எனும் ஒருவரை ஆதரித்து வீட்டில் கதைத்துக் கொண்டு இருந்தார்.

கெக்ரர் கொப்பேகடுவ சிறீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டவர். ஜெயவர்தனா சிறீமாவோவின் குடியுரிமையை பறித்த காரணத்தால் சிறீமாவே தேர்தலில் நிற்கமுடியாமல் போகவே அவர் தனது உறவினரான கெக்ரர் கொப்பே கடுவவை நிறுத்தியிருந்தார். இவர் கை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.

ஆனால் மீண்டும் ஜெயவர்தனாவே வெற்றியடைய கொப்பே கடுவ தோல்வியடைந்தது மட்டுமல்ல அந்த வருடமே இறந்தும் போயிருந்தார்.

Edited by sathiri

தந்தையின் இழப்பு என்பது மிகத் துயரமானது அதன் வலி எனக்கும் தெரியும் உணர்ந்திருக்கிறேன். தொடருங்கள் :( :(

அப்பாவைத் தொட்டது கவலையாக இருந்தது. அப்பாவினுடைய இருப்பு எமக்கு வயது போகப் போகத்தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவைத் தொட்டது கவலையாக இருந்தது. அப்பாவினுடைய இருப்பு எமக்கு வயது போகப் போகத்தான் தெரிகிறது.

உண்மை தான் தப்பிலி!

தாய்மையின் வலி, தாயாகும் போதே புரிகின்றது!

அப்பாவின் அருமை, அப்பாவாகும்போதே தெரிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனமான பொழுதை கனமாகவே பதிந்துள்ளீர்கள்.

தகப்பன் என்பவர் தூண் மற்றும் சுமை தாங்கி அதற்கும் மேல் வழிகாட்டி போன்றவர். அதன் சரிவு என்பது பெரும் ஈடுசெய்யமுடியாத இழப்பு. அதற்கு ஈடு இணையில்லை.

குறிப்பு; பலமுறை நான் எழுதியுள்ளேன். தயவு செய்து தங்கள் எழுத்துத்திறமையை வெளிக்கொண்டு வாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.