Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பிட்டி கடற்பரப்பில் அச்சம்! அதிசயம்!! நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள்! (PHOTOS)

Featured Replies

sperm-whale-2-150x150.jpgஇலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில் இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.

கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திமிங்கலம் 67அடி நீளமாக வளரக்கூடியது என்றும், இவை ஆண் இனத்தை சேர்ந்தவை என்றும், அதன் ஒரு பகுதி மிருங்களைப்போன்றது என்றும் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பொதுவான நிகழ்வு அல்ல என்றும், அசாதாரண நிகழ்வின் போதுதான் நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள் ஒன்றாக கரையை நோக்கிவருகின்றன என கடல் தாவர ஆராய்ச்சியாளர் ஆஜா டி வோஸ் தெரிவித்தார்.

அதி உஷ்ணம் மற்றும் நிலநடுக்கம் காரணமாக இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என்றும் இவை ஒரே தாய்வழியை கொண்டவையாக இருக்கலாம் என்றும் ஆஜா தெரிவித்தார். இதற்கு முன்னர் இந்த கடல் பகுதியில் தாம் நடத்திய ஆய்வின் போது 40க்கு மேற்பட்ட திமிங்கலங்களை கண்டதாகவும், தற்போது நூற்று மேற்பட்ட திமிங்கலங்கள் காணப்பட்டது அதிசயமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கத்திற்கு மாறாக திமிங்கல கூட்டம் பெருந்தொகையில் காணப்பட்டது அச்சம் தரும் வி;டயம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இத்திமிங்கலங்கள் பெரிய படகுகளை கூட கவிழ்க்க கூடியதாகும். இலங்கைக்கு பாரிய அழிவு ஒன்று வரப்போவதன் அறிகுறியாக இது இருக்கலாம் என அப்பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். அப்பிரதேச மீனவர்களும் கடலுக்கு செல்ல அஞ்சுகின்றனர். sperm-whales-1.jpgsperm-whale-2.jpg

wwwThinakathir.com

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாவற்றையும் பார்க்கும்போது ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக சிங்கள இன வெறியர்களுக்கு என்னமோ நடப்பதற்கான அறிகுறி தென்படுகின்றது :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாச்சனியங்களும் தமிழன் பக்கம்தானே வருகின்றன. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திமிங்கிலங்கள் சிறிலங்காவில் உள்ள சீனாக்காரனின் கண்களில் படவில்லையா?21.gif

தமிழர் பேசும் தமிங்கிலத்தை கேட்க திமிங்கிலங்கள் படை எடுத்து வந்திருக்கலாம் :D :D

Edited by ukkarikalan

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிட்டிக் கடலில் மட்டுமல்ல, கிழக்கின் வங்காளக் குடாப் பகுதியிலும் திமிங்கலங்கள் காணப்படுவதுண்டு. கிழக்கில் திமிங்கலங்களைப் படகில் சென்று காண உல்லாசப் பயணிகள் சில சமயம் (whale watching) சென்று வருவதாக ஒரு பயணக் கதையில் படித்திருக்கிறேன். பெருமளவில் வந்தது மட்டும் தான் அதிசயமான விடயம். புவி வெப்பமாதலின் விளைவோ அல்லது தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வீசும் மின்காந்தப் புயலின் விளைவோ திமிங்கலங்களைத் திசை மாற்றியிருக்கலாம். இது ஆபத்தின் அறிகுறி என்பதெல்லாம் ஆதாரமில்லாத தகவல்கள்.

முன்பு திமிங்கிலங்கள் கிழக்கில் அடிக்கடி கரையொதுங்கும். மக்கள், இறந்துபோன திமிங்கிலங்களை வெட்டி புதைப்பதை சிறு வயதில் கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் ஒருசில அணுகுண்டு ஆராச்சியள் எல்லாம் நடுக்கடலுக்கடியிலைதான் அமசடக்காய் நடக்குதாம்.அதோடை உந்த நீர்மூழ்கிகப்பலின்ரை இரைச்சல்.....பெரிய கப்பலின்ரை இரைச்சல் எண்டு அந்தசீவன்களுக்கும் ஒரே ரென்சன்.....ஒருசில நாடுகள் கண்டகண்ட குப்பையளையும் நடுக்கடல்லைதான் கொண்டுபோய் கொட்டீனம்.இதாலைதான் அதுகளும் தரைக்குவந்து தற்கொலை செய்யுதுகள்...இல்லை இடம் மாறுதுகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு நோக்கி நீந்தி இந்தத் திமிங்கிலங்கள் அனைத்தும்

வரும் அழிவுகளை தடுத்து விடட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திமிங்கிலங்கள் சிறிலங்காவில் உள்ள சீனாக்காரனின் கண்களில் படவில்லையா?21.gif

Moving%20Whale.gif

.

அவுஸ்திரேலியாவின் இந்து, பசுபிக் கடல் அடிப்பகுதியில் சோவியத் நீர்முழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க் பாரிய ரேடார்/ சோனார் கருவிகள் உள்ளன். இவை திமிங்கிலங்களின் Navigation System ஐ குழப்புவதுண்டு. சில சமயங்களில் இப்படிக்குழப்பப் பட்ட திமிங்கிலங்கள் கூட்டமாக கரையொதிங்கி சாவதுமுண்டு.

.

Edited by esan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாவற்றையும் பார்க்கும்போது ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக சிங்கள இன வெறியர்களுக்கு என்னமோ நடப்பதற்கான அறிகுறி தென்படுகின்றது :lol::icon_idea:

இங்கு அவுஸ்திரெலியா , நியூசிலாந்தில் திமிங்கிலம் பார்க்க கடலில் பலர் சுற்றுலா செல்வதுண்டு. ஒரு முறை யாழ்கள உறுப்பினர் புத்தன், யமுனாவுடன் சுற்றுலா சென்று திமிங்கிலங்களைப் பார்த்தோம். இதனால் தான் 2009ல் எங்களுக்கு துன்பம் ஏற்பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

.

அவுஸ்திரேலியாவின் இந்து, பசுபிக் கடல் அடிப்பகுதியில் சோவியத் நீர்முழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க் பாரிய ரேடார்/ சோனார் கருவிகள் உள்ளன். இவை திமிங்கிலங்களின் Navigation System ஐ குழப்புவதுண்டு. சில சமயங்களில் இப்படிக்குழப்பப் பட்ட திமிங்கிலங்கள் கூட்டமாக கரையொதிங்கி சாவதுமுண்டு.

.

பூமியின் காந்தப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு திமிங்கிலங்கள் நகர்வதாகவும், காந்தப்புலத்தின் வீச்சில் மாற்றங்கள் ஏற்படும்போது இவை குழம்புவதாகவும் ஒரு செய்தித்தொகுப்பில் பார்த்த ஞாபகம்..

பூமியின் காந்தப்புலத்தை அடிப்படையாகக் கொண்டு திமிங்கிலங்கள் நகர்வதாகவும், காந்தப்புலத்தின் வீச்சில் மாற்றங்கள் ஏற்படும்போது இவை குழம்புவதாகவும் ஒரு செய்தித்தொகுப்பில் பார்த்த ஞாபகம்..

Does Navy Sonar Cause Whale Strandings?

One of the most persistent theories about the cause of whale stranding is that something disrupts the whales’ navigation system, causing them to lose their bearings, stray into shallow water, and end up on the beach.

Scientists and government researchers have linked the low-frequency and mid-frequency sonar used by military ships, such as those operated by the U.S. Navy, to several mass strandings as well as other deaths and serious injuries among whales and dolphins. Military sonar sends out intense underwater sonic waves, essentially a very loud sound, that can retain its power across hundreds of miles.

http://environment.about.com/od/biodiversityconservation/f/whale_stranding.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.