Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! பழ.நெடுமாறன்.

Featured Replies

மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார்.

கேள்வி: இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?

பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக் கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார். சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.

1989 ஜூலை 24-ம் தேதி ‘தி இந்து’ நாளேட்டில், ‘விடுதலைப்புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்தர் பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்’ என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகுவிரைவிலேயே உணர்த்தியது.

2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித்தார் தம்பி.

2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது.

அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள். ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின்றனர்.

ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். எனது சொந்த விருப்பத்தில் இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!

Picture-199.jpg

கேள்வி: இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?

பதில்: அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசுகள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது.

இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும். அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

வெளியுறவு, இராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்.

மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!

கேள்வி: உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர்கள்?

பதில்: உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக்கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை. அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு.

ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண்பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக்கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது. எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வை இழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!

தொடர்ச்சி அடுத்த வாரம்….

http://thaaitamil.com/?p=16277

  • தொடங்கியவர்

நெடுமாறன் இந்த விடயத்தை திரும்பத் திரும்ப பேசாமல் விடுவது நல்லது.

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

கல்வி

மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளி படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரி படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார்.

  • 1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி
  • 1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்
  • 1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்
  • 1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்
  • 1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
  • 1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D#.E0.AE.95.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.B5.E0.AE.BF

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

தலைவரைப் பற்றி, ஈழத்தைப் பற்றிப் பேசி அவர் மில்லியன் கணக்கில் உழைத்துக் கொண்டிருக்கிறாராக்கும்!

நெடுமாறன் அய்யா, குவித்துள்ள சொத்துக்களின் விபரம்.

  • மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
  • தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
  • 1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.
  • 1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
  • 2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[4] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
  • பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்.
  • இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது.

Edited by மின்னல்

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

அருமையான கருத்து, சிந்தனை. உங்களைப்போல் ஒருவர்கூட இப்படி சிந்திக்கமாட்டார்கள்................முடியல.................... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

உண்மையில் எனக்கு தங்கள்மேலும் தங்களது முதிர்ச்சி மீதும் சந்தேகம் வருவதற்கு இது போன்ற கருத்துகளே காரணம்.

உலகத்தையே கரைத்துக்குடித்ததாக எழுதும் ஒருவர் ஒரு தமிழனை அதுவும் நெடுமாறன் ஐயாவை இப்படி கணித்திருப்பது மிகவும் மட்டகரமானது.

  • தொடங்கியவர்

சில பிஞ்சில பழுத்தவை முதியவர்களை (நெடுமாறன் ஐயா போன்றவர்களை) இப்படி சொலுறது வழக்கம் அதுக்க நாம் கவலை படகூடாது.

காகம் திட்டி மாடு சாகாது. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பல உதவிகளை செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு நெடுமாறன் ஐயா அவர்கள் மீது மதிப்பு இருக்கின்றதோ இல்லையோ

எனக்கு அவரின் மீதும் அவரின் சொற்கள் மீதும் மதிப்பு அதிகம்.

அவருடைய இந்தக் கருத்து ஈழத்தவர்கள் மீது எடுபடாவிட்டாலும்

சர்வதேசம் இவருடைய கருத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

நீங்களும் உங்கள் கூட்டுக்களும் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?????அதுவும் ஒருவகை பிழைப்புத்தானே..

இந்தியன் ஆமி எமது நாட்டில் செய்த அட்டூழியங்களை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் திலீபனின் தந்தையாரை இந்தியன் ஆமி கொன்றதாக எழுதியிருந்தார் .

மனிதரை உசுப்பேற்ற முழுபொய் சொல்பவர் ஒருபோதும் நல்லமனிதராக மாட்டார் ,புலிகளுக்கு அவரை தேவைப்பட்டிருக்கலாம் அவரும் புலிகளுக்கு உதவியிருக்கலாம் அது வேறு விடயம்.

கடைசியாக அவர் நின்ற தேர்தலில் அவருக்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

இப்படி முழுப்பொய் சொல்லும் ஒருவரை என்னால் ஒருகாலமும் மனிதராகவே ஏற்றுக்கொள்ளமுடியாது .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடாத்தும் எம்மினத்தவர்கள் இருக்கும் போது

பத்துப் பொய்களைச்சொல்லி ஒரு நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவது எவ்வளவோ மேல்

அர்ஜுன் அண்ணா

நீங்களும் உங்கள் கட்சியும் முந்தி உசுப்பேத்தினியள் (சோத்துப் பாசல் கட்டேக்க) ................ இப்பவும் அப்படித் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியன் ஆமி எமது நாட்டில் செய்த அட்டூழியங்களை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் திலீபனின் தந்தையாரை இந்தியன் ஆமி கொன்றதாக எழுதியிருந்தார் .

மனிதரை உசுப்பேற்ற முழுபொய் சொல்பவர் ஒருபோதும் நல்லமனிதராக மாட்டார் ,புலிகளுக்கு அவரை தேவைப்பட்டிருக்கலாம் அவரும் புலிகளுக்கு உதவியிருக்கலாம் அது வேறு விடயம்.

கடைசியாக அவர் நின்ற தேர்தலில் அவருக்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

இப்படி முழுப்பொய் சொல்லும் ஒருவரை என்னால் ஒருகாலமும் மனிதராகவே ஏற்றுக்கொள்ளமுடியாது .

கலாமை எதிர்த்து வடிவேலு தேர்தலில் நின்றால் வடிவேலுதான் வெற்றியைப் தட்டிப்பறிப்பார்! இந்த நிலை கலாமுக்கா அவமானம்?

புலிகளை ஆதரிப்பதால் ஈழத்தின் மொத்த சனத்தொகையை முட்டாள் என்று சொல்லுகின்ற தங்களின் மேதாவித்தனம் இந்தவகையாக நெடுமாறனை வகைப்படுத்தவில்லை என்றால்த்தானே ஆச்சரியம்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐய்யா அவர்கள் புலிகளை ஆதரிப்பதிருக்கட்டும், ஆனால் இன்றுவரை தமிழினப் படுகொலையை எதிர்த்து தன்னால் முடிந்தளவிற்குப் போராடிக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்தீர்கள் இதுவரையில்???? செய்ததெல்லாம் புலிகளை எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் மொத்த தமிழினத்தையும் எதிர்ப்பதுதானே???

தெரியாமல்த்தான் கேட்கிறேன், திலீபனின் தந்தை இறந்ததாக நெடுமாறன் ஐய்யா பொய் எழுதினார் என்று கூறும் நீங்கள், மாலைதீவிற்கு கப்பல் ஏறும்போதுமட்டும் ஏதோ தமிழர்க்காக நாடு பிடிக்கப்போவதாக எண்ணியிருந்தீர்களா??? இல்லையே, இந்தியாவுக்காக கூலிப்பட்டாளமாக இயங்கப்போவது தெரிந்தும்தானே சென்றீர்கள், அப்படியானால் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு பொய்யர், உங்களை நாங்கள் மனிதராக வேண்டாம், ஐந்தறிவு மிருகமாகக் கூட நினைக்க முடியாதல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமி எமது நாட்டில் செய்த அட்டூழியங்களை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் திலீபனின் தந்தையாரை இந்தியன் ஆமி கொன்றதாக எழுதியிருந்தார் .

மனிதரை உசுப்பேற்ற முழுபொய் சொல்பவர் ஒருபோதும் நல்லமனிதராக மாட்டார் ,புலிகளுக்கு அவரை தேவைப்பட்டிருக்கலாம் அவரும் புலிகளுக்கு உதவியிருக்கலாம் அது வேறு விடயம்.

கடைசியாக அவர் நின்ற தேர்தலில் அவருக்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

இப்படி முழுப்பொய் சொல்லும் ஒருவரை என்னால் ஒருகாலமும் மனிதராகவே ஏற்றுக்கொள்ளமுடியாது .

எந்த புத்தகம் என்பதை உங்களால் இங்கே போடா முடியுமா?

கடைசியில் உள்ள திருத்தங்களை உங்களால் வாசிக்க முடிந்ததா?

தன்னுடைய தனித்திறமையை மற்றையவர்கள் தட்டிவிட கூடாது என்ற பொறமை எண்ணம் பல மனிதர்களுக்கு உண்டு. இந்த அளவில் இருப்பது வியப்பாக இருந்தாலும். யார் என்பதில் வியக்க ஏதுமில்லை.

இந்தியன் ஆமி எமது நாட்டில் செய்த அட்டூழியங்களை பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் திலீபனின் தந்தையாரை இந்தியன் ஆமி கொன்றதாக எழுதியிருந்தார் .

மனிதரை உசுப்பேற்ற முழுபொய் சொல்பவர் ஒருபோதும் நல்லமனிதராக மாட்டார் ,புலிகளுக்கு அவரை தேவைப்பட்டிருக்கலாம் அவரும் புலிகளுக்கு உதவியிருக்கலாம் அது வேறு விடயம்.

கடைசியாக அவர் நின்ற தேர்தலில் அவருக்கு கட்டுகாசு கூட கிடைக்கவில்லை .

இப்படி முழுப்பொய் சொல்லும் ஒருவரை என்னால் ஒருகாலமும் மனிதராகவே ஏற்றுக்கொள்ளமுடியாது .

பொய்,காலம் மனிதர்[ம்] ஏற்றுக்கொள்ளல் யார் யார் என்ன பேசுவது,எழுதுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது சரவணா......................

உங்களிடம் ஒரு கேள்வி குறை நினைக்கவேண்டாம் .............எல்லோரிடமும் திட்டுவாங்குவதற்கு என்றே பிறந்த ஓர்.....................நீங்கள்.

முகம் தெரியாத மூஞ்சூறுளை பற்றி எனக்கென்ன கவலை.

இன்றிரவு யாழ் இந்துகல்லூரி இராப்போசன விருந்து. வாசலில் போகும் போதே டிக்கெட் கிழிப்பவர் பெயர் சொல்லி கூப்பிட்டு டிக்கெட் கேட்காமலே உள்ளே விட்டார் .மனுசியை ஒருவித பெருமையுடன் உள்ளே கூட்டி சென்றேன் .

இப்ப டின்னர் முடிந்து, நல்ல டான்சும் ஆடிவிட்டு வந்துதான் இதை எழுதுகின்றேன்.

கொடிஏத்திய கோஸ்டி ஒன்றையும் காணோம் .பழையபடி நாங்கள் மனிதர்களாக உலா வருகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரியாத மூஞ்சூறுளை பற்றி எனக்கென்ன கவலை.

இன்றிரவு யாழ் இந்துகல்லூரி இராப்போசன விருந்து. வாசலில் போகும் போதே டிக்கெட் கிழிப்பவர் பெயர் சொல்லி கூப்பிட்டு டிக்கெட் கேட்காமலே உள்ளே விட்டார் .மனுசியை ஒருவித பெருமையுடன் உள்ளே கூட்டி சென்றேன் .

இப்ப டின்னர் முடிந்து, நல்ல டான்சும் ஆடிவிட்டு வந்துதான் இதை எழுதுகின்றேன்.

கொடிஏத்திய கோஸ்டி ஒன்றையும் காணோம் .பழையபடி நாங்கள் மனிதர்களாக உலா வருகின்றோம் .

உங்களை எப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்?? மாலைதீவென்றா அல்லது சோத்துப்பாசல் என்றா??? <_<

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் விட்டால் அவர் பிழைப்பு என்னாவது ?

இப்படியாராவது ஏதாவது கூறினால்தானே அதற்க்கு எதையாவது நீங்களும் எழுதலாம். :)

சரியான சந்தர்ப்பம் வருவரை இப்போதைக்கு இதுபற்றி பேசாது இருப்பது நல்லது என்றே கருதுகின்றேன்.

உங்களை எப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்?? மாலைதீவென்றா அல்லது சோத்துப்பாசல் என்றா??? <_<

:lol::D:icon_idea::icon_mrgreen:

அப்ப அங்கையும் சோத்துப் பாசல் கட்டியதா?

உப்புடி டிக்கட் கிழிக்காமல் விட்டால் பெருமையோ?ஓம் சோத்துப் பாசல் கட்டேக்கையும் மாலைதீவை பிடிக்கேக்கையும் வவுனியாவில் நரக வேட்டையடும் போதும் மனிசராவே இருந்தனியள்

Edited by Donkey

இறுதிக்கட்ட போரில் எங்கும் பதுங்கக்கூடிய நிலைமை இல்லை. இந்தியாவில் இருக்கும் நெடுமாறன் ஐயா அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இன்றும் அங்கு பதுங்கலாம் என்று நினைக்கிறார் போலும்... அல்லது தெரிந்தாலும் நம்ப மறுக்கிறார்....

அவர் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பலாம். ஆனால் அவரால் உறுதிப்படுத்த முடியாது.

உயிருடன் இருந்தாலே இன்றைய நிலைமையில் இது பற்றி கதைக்க கூடாத நேரத்தில், தனியே தன் நம்பிக்கையை வைத்து அதனை உண்மை போல் அடிக்கடி கதைப்பதை நிறுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தை அன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இவர்கள் அடிக்கடி இப்படி கதைப்பதை பார்த்து பார்த்து எனக்கு சலிப்பு வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்கையும் சோத்துப் பாசல் கட்டியதா?

உப்புடி டிக்கட் கிழிக்காமல் விட்டால் பெருமையோ?ஓம் சோத்துப் பாசல் கட்டேக்கையும் மாலைதீவை பிடிக்கேக்கையும் வவுனியாவில் நரக வேட்டையடும் போதும் மனிசராவே இருந்தனியள்

நாய்களுக்கு மனிதரின் ஆடைகளை போடும்போது................ ஒரு கலி உணர்வு வரத்தானே செய்யும்.

எதோ குலைச்சுட்டு போகுது என்று விடுவிகளா........

இதுக்கெல்லாம் அலட்டலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.