Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்ளத் தயார் – TNA கூறியதாக கொழும்பு ஊடகம் தெரிவிப்பு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளத் தயார் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ விதைக்கிறது!

வேற ஆரோ அறுக்கிறது!

இது தான், தமிழனின் தலை விதி!!!

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமான இந்திய விசுவாசம் கூட்டமைப்புக்கு தேவையற்றது.

அதற்காக.... அவர்களை, தமிழ் மக்கள் தெரிவு செய்யவில்லை என்பதை, கூட்டமைப்பினர் புரிந்து நடக்க வேண்டும்.

போயும்... போயும்... , ரவூப் ஹக்கீமா மத்தியஸ்தம் வகிக்க கூட்டமைப்புக்கு கிடைத்தார் என்று, தமிழ் மக்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய நிலைக்கு, தமிழரை ஆளாக்க வேண்டாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுஷ்மா.. அங்க ஒன்றும் வெட்டி விழுத்த முடியாது. முதலில.. இடிச்ச.. பாபர் மசூதியை கட்டிக் கொடுத்திட்டு வந்து.. ஹக்கீமை.. கட்டிப்பிடியுங்கோ என்று சொல்லட்டும்..!

இத்தனை இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு.. ஏன் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதுக்கு.. ஒரு கவலையும் தெரிவிக்காத சுஷ்மா.. சும்மா கதைவிட.. அதை சம்பந்தன் என்ற பொம்மை கேட்டு ஆடுது..!

சுஷ்மா சொல்லி சிங்களவன் கேட்கிற நிலையில இல்லை.. ஆனால் சம்பந்தன் கேட்பார். இந்தியப் படைகளோடு வந்து நின்று இனப்படுகொலைக்கு உதவிய.. வரதராஜப் பெருமாளோடு.. கூட்டணிக்கு முயற்சிக்கும்.. சுரேஸ் கேட்க முயற்சிப்பார். சுரேஸ்.. நோர்வேயில் வைத்து வாங்கிக் கட்டினதை ஏன் என்று.. ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!

கூட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு.. அதன் ஆரம்பகால அடிப்படைக் கொள்கைகளோடு இணங்கிச் செயற்படக் கூடிய.. கொள்கைக்கப்பற்றுள்ள தாயக.. புலம்பெயர் இளைஞர்கள் கைக்கு அதன் தலைமை உட்பட அனைத்தும் கையளிக்கப்பட்டால் அன்றி.. தாயகத்தில் தமிழ் மக்களின் பேரம் பேசும் வலு அதிகரிக்கப்பட மாட்டாது.. அதுமட்டுமன்றி... சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்க விரிவாக்கமும்.. இந்திய நலன்காக்கும் அரசியலும் நின்று போக வழியே பிறக்காது...! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பம் பிரித்த குரங்கின் கதைதான் நினைவில் வருகிரது.....இதுதான் கூட்டமைப்பு எதிர் பார்த்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமோ....பசிலின் BBQ PARTY வேலை செய்யிது போல கிடக்கு.....முதலில் கக்கீம் பள்ளிவாசல் பிரச்சினையை தீர்க்கட்டும் ...அப்புறமா யோசிப்பம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு கிடைத்த சாபக்கேடு இந்த சம்பந்தந்தான்,

கடந்தகாலங்களில் விடுதலை புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடந்தபோது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனி அலகு கேட்டவர்கள், அப்படி பட்டவர்களை மத்தியஸ்தராக வைக்கும் அளவுக்கு தமிழன் நிலை தாழ்ந்து விட்டதா? சம்பந்தர் தான் ஒரு இனத்துக்கு பிரதிநிதியாக உள்ளார் என்பதினை அடிக்கடி மறந்து ....... தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றார் ........... இந்த நிலை தொடர்ந்தால் ஸ்ரீலங்காவில் தமிழர்கள் இரண்டாம் தரபிரஜை என்ற நிலைகூட இல்லாது போகும் அபாயம் உள்ளது !

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனை மத்தியஸ்தம் வகிக்க சொல்ல கஸ்மாலம் சுஸ்மாவுக்கு மனம் வரவில்லையா? :lol:

சம்பந்தருக்கு அறளை பெயர்ந்து விட்டது.இளம் தலைமை வரவேண்டும்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்

தமிழருக்கு கிடைத்த சாபக்கேடு இந்த சம்பந்தந்தான்

மத்தியஸ்த்தம் என்றால் இந்த பத்திரிகை சரியாக விளங்கி கொண்டிருக்கா? நோர்வே தான் இடையில் நிற்கும் போது மத்தியஸ்த்தம் என்ற சொல்லை பிரயோகிக்க மறுத்தது. மத்தியஸ்த்தம் என்பது இரு பகுதிகளுக்கிடையில் வழங்கப்படும் சாமாதாமான தீர்ப்பொன்று. சம்பந்தரின் கொலை விவகாரம் பிரசுரித்த பத்திரிகையா அல்லது வேறு பத்திரிகையா இதை பிரசுரித்தது. இது பற்றி யாருடன் பிறெமச்சந்திரன் ஒப்பந்தம் செய்தார்? பிரேமசந்திரனின் இந்த பேட்டி யூரியூப்பில் இருக்கா? இந்தியா மத்தியஸ்த்தம் செய்த 13ம் திருத்தத்திற்கு என்ன நடந்தது?. சுஸ்மாதானே தெரிவிக்குழுவுக்கு போகச் சொன்னவர். அதைத் தனே அவர் தனது அறிக்கை வெளிவிடும் போது கூறினார். தான் மத்தியஸ்த்தத்துக்கு ஆள் ஒன்றை ஒழுங்குபடுத்துவது பற்றி எப்போ கூறினார்? இலங்கை முன்னர் மூன்று தடவைகள் ஏமாற்றியதால் இந்தமுறை சம்பந்தரை சம்மதிக்க வைப்பது அவர்களின் பொறுப்பு என்பது மாதிரியல்லவா பேசியிருந்தார். மத்தியஸ்த்தத்தில் கமீது 13ம் திருத்தத்தை சம்பந்தர் கைவிட்டு அதற்கு கீழ் ஒன்றைக்கேடகவேண்டும் என்றால், 13ம் திருத்தம் கடந்த தீர்வை இலங்கை அரகொடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீளப்பெறத்தயாராகவும் இருப்பதாக சுஸ்மா கூறினவரா?

Edited by மல்லையூரான்

மத்திய்ச்துக்கு ஒரு குழு அமைச்சுச் செய்யலாம். ரவூப் ஹக்கீம, சங்கரி, மேர்வின் சில்வா, இந்தப் பட்டியிழலில் நான் துரோகிகளை இணைக்க விரும்பவில்லை.

Apr 23, 2012 / பகுதி: செய்தி /

இந்திய எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேர்ந்தால் இலங்கைத்- தமிழர்கள் எங்களை ஜோக்கர்கள் என்று தான் நினைப்பார்கள், சுரேஷ் பிரேமசந்திரன்

இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசு அமைக்கும் நாடாளுமன்ற குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு நாடாளுமன்றத் குழு ஒன்றை அமைக்கிறது. இந்த குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பிக்கள் குழுவும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

இனப் பிரச்சனையை தீர்க்க இலங்கை அரசு அக்கறை காட்டுகிறது என்று உலகை நம்ப வைக்கவே நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கிறார்கள். இது ஏமாற்று வேலையாகும்.

வரும் நவம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை மனித உரிமை நிலை குறித்த விவாதம் நடக்கிறது. அப்போது இனப் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அதனால் மனித உரிமைகள் விஷயத்தில் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கத் தான் இந்த குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் சேருமாறு இலங்கை வந்த இந்திய எம்.பிக்கள் குழு தலைர் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் வாக்குறுதிகளை மீறுவதையே வழக்கமாக வைத்திருக்கும் இலங்கை அரசை நம்ப முடியாது என்பதால் தான் அவரது கோரிக்கையை ஏற்க முடியவில்லை.

1990களில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறி்த்து மங்கள மூனிசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு 100க்கும் மேற்பட்ட முறை கூடி விவதாதித்ததே தவிர அதன் பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை.

ராஜபக்சே அதிபரான பிறகு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து நிபுணர் குழுவின் உதவியுடன் செயல்படும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு அளிப்போம் என்று ராஜபக்சே உறுதியளித்தார். ஆனால் கிருஷ்ணா நாடும் திரும்பும் முன்பே தான் அப்படி ஒரு வாக்குறுதியை அளிக்கவில்லை என்று அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாம் என்று ராஜபக்சே தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக அரசு தானாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டது. இவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காப்பாற்றாத அரசை நம்பி எப்படி அந்த குழுவில் சேர முடியும்.

இந்திய எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேர்ந்தால் இலங்கைத் தமிழர்கள் எங்களை ஜோக்கர்கள் என்று தான் நினைப்பார்கள் என்றார்

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by மல்லையூரான்

முந்தியெல்லாம் குழப்படி பண்ணுகிற மாணவனைப் பிடித்து வகுப்பிற்கு மொனிற்றர் ஆக்கிவிடுவார்கள். அப்படிக் கதைபோகிறதோ தெரியாது.

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியெல்லாம் குழப்படி பண்ணுகிற மாணவனைப் பிடித்து வகுப்பிற்கு மொனிற்றர் ஆக்கிவிடுவார்கள். அப்படிக் கதைபோகிறதோ தெரியாது.

:icon_idea: :icon_idea:

அப்படியென்றால்... ஹெல உறுமய, ஜே.வி.பி., புத்தபிக்குகளைத்தான்... மத்தியஸ்தம் வகிக்க கூப்பிடவேணும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியஸ்தம் வகிப்பவர் 2 தரப்பிலும் பார்க்கப் பலமானவரா இருக்கணும்.ஆனால் ஹக்கீம்?இந்தச் செய்தி உண்மையானதாக இருந்தால் தமிழர்கள் செம்மறிக் கூட்டங்களைத்தான் பாராளுமன்றத்துக்கு அனப்பி வைத்துள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.(வர வர கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் அறிக்கைகள் பைத்தியக்காரத்தனமாகப் போய் கொண்டு இருக்கிறது.)

  • கருத்துக்கள உறவுகள்

யாரை வேண்டுமானாலும் மத்தியஸ்தம் வைக்கலாம்.............

என்ன பேசுவது ?

மத்தியஸ்தம் வைத்துவிட்டு பிரபாகரனின் கொலைபட்டியல் பற்றி பேசுவதென்றால்.......

பேசாம தனி தனி இருந்தே பேசலாமே?

சமந்தான் ஐயா கேட்டு கோத்த ஏதும் கொடுக்க போகிறானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.