Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவள் ஒரு தேவதை.. கனவாகிப் போனவள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gypsy-skirts3-123.jpg

பழுத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்தில் அவள் மேனி..! அழகிய வதனம்.. ஒல்லியான உடல்.. எல்லாமே என் விருப்புக்குரிய அம்சங்களுடன் அவள்.

வீதியால்.. துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு வந்தவள் மீது என் பார்வை...யன்னலால் அவளைக் காண்கிறேன். முதல் பார்வையிலேயே என் கண்களுக்கு அவளைப் பிடித்து விடுகிறது. அத்தனை அழகு அவள். என் கண்களோ அவளை விடுவதாக இல்லை..மேலும்.. ஆளை நோட்டமிடுகின்றன..! கழுத்தில்... ஒரு கயிறு. அது தாலிக் கயிறா இருக்குமோ.... என்ற சந்தேசகம் எழ.. கண்கள் அவளிடம் இருந்து விலக்கிக் கொள்கின்றன.. மனம் ரசிப்பதை நிறுத்தி.. இயல்புக்குத் திரும்புகிறது..! கால்கள் யன்னலை விட்டு அப்பால் நடையைக் கட்டுகின்றன.

சற்று நேரத்தின் பின்.. மனதை அடக்க முடியாமல்.. கால்கள் மீண்டும்.. யன்னலை நாட கண்கள் வெளியே வீதியில் நோட்டமிடுகின்றன...! என்ன ஆச்சரியம்....

எங்கள் வீடு. பெரிய பங்களா. அதன் வாசலில் மக்கள் இளைப்பாற என்று சில மரத்தால் ஆன நீண்ட இருக்கைகள்.. வீட்டு மதிலோடு..ஒட்டி அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றில்.. அவள்.. வந்து உட்கார்ந்திருக்கிறாள். அருகில் அவள் கொண்டு வைத்திருந்த துவிச்சக்கர வண்டி நிற்கிறது..! நீண்ட நேரமாகவே அவள் அதில் உட்காந்திருப்பதை ஜன்னலில் நீண்ட நேரமாக நின்று அவதானித்த நான்... வீட்டை விட்டு வெளியே வந்து அவளை நெருங்கி.... பேசுவதென்ன என்று அறியாமல்.. நிற்கிறேன்...!

அவளோ.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய்.. "நான் ஒருவருக்காக காத்திருக்கிறன். இந்தா வருவன் என்றவர் இன்னும் வரவில்லை. நான் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்குப் போகனும் நேரமாகுது என்று சொன்னாள்."

"அப்படியா.. அப்ப சரி...!" என்று விட்டு நான் அந்த இடத்திலின்றும் விலகி வந்துவிட்டேன்.

நானும் வழமை போல.. பள்ளிக்குச் செல்ல தயாராகி.. கிளம்பி.. பள்ளிக்குச் செல்கிறேன். அங்கே வகுப்பறையில் வழமைக்கு மாறாக சிலரே இருந்தனர். அதில் என் நண்பர்களும் இருந்தனர்.என் நண்பர்களில் ஒருவனின் அருகில்.. நான் வீட்டுக்கு முன்னாள் கண்ட அவள்.! மீண்டும் ஆச்சரியத்தோடு.. அவளின் வருகை பற்றி.. நண்பனிடம் கேட்கிறேன். அன்றைய பள்ளி நிகழ்விற்கான வெளியார்.. மாணவ மதிப்பீட்டு குழுவின் உறுப்பினராக அவள் வந்திருப்பதாக என் நண்பன்.. சொன்னான்.

நான் இந்தக் கால இடைவெளியில் என்னை நெருங்கி இருந்த அவளின் கழுத்தைப் பார்க்கிறேன். அது தாலிக் கயிறல்ல. வேறு ஏதோ நூலினால் ஆன.. மாலை..! உறுதி செய்து கொள்கிறது மனம்..!

அந்த நிலையில்...

அன்றைய பள்ளி வகுப்பறை விசேட நிகழ்ச்சிக்கு சொற்பொழிவாற்ற மற்றும் மதிப்பீட்டுக்கு என்று.. ஆசிரியர் வருகிறார். வழமையான பள்ளி ஆசிரியர் அல்ல. வெளியாள்... ஆனால் முன்னரே அறிமுகமானவர்.

நானும் நண்பனும்.. வகுப்பறையின் பின் ஆசனங்களில் அமர்ந்திருக்க.. நண்பனின் அருகில் அமர்ந்திருந்தவள்.. ஆசிரியர் வருவதைக் கண்டதும்.. எழுந்து முன்னாள் சென்று அமர்ந்து கொண்டாள். அந்த வகுப்பில் அவள் ஒருத்தி தான் பெண்..! ஆசிரியர் தன் வசதிக்காக.. எங்களையும் முன்னால் வந்து அமரச் சொல்ல.. நான் எழுந்து முன்னுக்கு வந்தேன். அங்கே அவள் அருகில் ஒரு ஆசனம். என் பார்வைகள் அதில் பதிகிறது. அவள் அருகில் போய் இருக்கலாமே என்று ஒரு மனம் விரும்ப.. மறு மனம் மறுதலிக்கிறது. என்ன நினைப்பாள்.. வழியுறானே.. என்று எல்லோ நினைப்பாள். இருந்தாலும்.. அவளின் பாதங்கள் வரை நீண்டு.. நிலத்தில் படர்ந்து முட்டி அழகு கோலம் போட்டுக் கொண்டிருந்த.. அந்த அழகான நொதுமையான ஸ்கேட்டின் அழகிய தோற்றத்தில் மயங்கிய என் முதல் மனம் அவள் இருக்கைக்கு அருகில் என்னை அமரச் செய்கிறது..!

அமர்ந்த பின் தான் பார்க்கிறேன்.. என் ஆசனத்தில் இருந்து வகுப்பறையின் வெள்ளைப்பலகையை காண முடியாது என்று. இதென்னடா வம்பாப் போச்சு.. சாறி.. போட் தெரியுதில்ல.. என்று விட்டு.. பேசாமல் எழுந்து அப்பால் நடந்து சென்று.. வெள்ளைப்பலகைக்கு முன்னால் இரண்டாம் வருசையில் என் நண்பனுக்கு அருகில் அமர்ந்து கொள்கிறேன்.

சிறிது நேரத்திலேயே... ஆசிரியர் சிறிய அறிமுகப் பேச்சை ஆரம்பிக்கிறார். அவரின் பேச்சில் அதிகம் ஆங்கிலச் சொல் கலந்திருக்க.. காதில் கெட்போனை மாட்டிக் கொண்ட அவள்.. மைக்கில்.. ஆசிரியரை நோக்கி ஆங்கிலத்தில் பேசுகிறாள். ஆசிரியரை நோக்கி ஒன்றில்..முற்றாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறாள். அவரோ.. அதனை ஆட்சேபிக்கிறார். இந்த நிலையில்.. என் நண்பனும் அவளுக்கு ஆதரவளிக்கிறான். ஆனால் எமக்கு முன்னாள் அமர்ந்திருந்தன் கறுத்த குண்டான இன்னொருத்தன்.. அதனை வரவேற்கவில்லை. அவன்.. என் நண்பனைப் பார்த்து.. உன் சிற்றுரையை வாசி. ஆசிரியரைக் குறை சொல்வதை விட்டிட்டு.. என்று விளிக்கிறான். ஆசிரியரும் அவனுக்கு ஆதரவளித்து என் நண்பனைப் பார்த்து.. மதிப்பீட்டுக்கான சிற்றுரையை வாசிக்கச் சொல்கிறார். நண்பன் ஆங்கிலத்தில் அதை வாசிக்கிறான். இதனை அந்த கறுத்தக் குண்டானவன்.. நிராகரித்து தமிழில் தான் அதனைப் படிக்க வேண்டும்.. என்று சொல்லி.. கலகம் செய்கிறான். இந்த நிலையில்.. அவள் என் நண்பனுக்கு ஆதரவு தருகிறாள். நானோ.. மெளனமாக நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில்.. ஆசிரியர் என் நண்பனின் பேச்சை நிறுத்தச் சொல்கிறார். அப்படியே என்னை பேசச் சொல்கிறார். நான் என் பேச்சை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியரிடன் அனுமதிபெற்று.. அவர் கையில் வைத்திருந்த அவரின் அறிமுகப் பேச்சுக்கான.. அந்த பிரிண்டவுட்டை என் பார்வைக்குத் தரக் கேட்கிறேன். அவரும் அந்தக் கறுத்த குண்டனின் ஊடாக அதனை என்னிடம் அனுப்பி வைக்கிறார்.

அதனைப் பார்த்த எனக்கு ஆச்சரியம். தமிழில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தாலும்.. பல இடங்களில்.. @@@@@ இப்படியாக எழுத்துக்கள்.. அமைந்திருந்தன. அவற்றையே ஆசிரியர் ஆங்கிலச் சொற்களால் நிரப்பி வாசித்திருந்தார். இதனை ஆட்சேபித்த நான்.. ஒரு பிரிண்டவுட்டை கூட.. சரியாகச் செய்ய முடியாத இந்த ஆசிரியரின்.. மதிப்பீட்டை ஏற்க மாட்டேன் என்று.. வகுப்பில் எல்லோர் மத்தியிலும்.. எழுந்து நின்று சொல்லிவிட்டு.. ஆதாரத்துக்காக அந்த பிரிண்டவுட்டையும் எடுத்துக் கொண்டு.. வகுப்பை விட்டு வெளியேறி வந்துவிடுகிறேன்.

வந்துவிட்ட பின் தான் நினைக்கிறேன். அட இந்தாளின் வெளியார் மதிப்பீட்டின் கீழ்.. முக்கியமான பரீட்சை செய்து சித்தியடைய வேண்டி இருக்கே என்று. அப்படியே யோசிச்சுக் கொண்டு.. பள்ளியில் இருந்து நடந்து.. வீட்டுக்கு அருகில் வந்து விட்ட என்னை....வீதியால் என்னைக் கடந்து போன என் நண்பனும் காண்கிறான். அவன்.. "நீங்கள் எழும்பி வந்த பிறகு.. தங்கச்சியும் எழும்பி வந்திட்டுது. நானும் வந்திட்டன்".. என்றான். என்ன அவள் இவனின் தங்கச்சியா.. என்று நான் வியந்து போய் நிற்க.. அவளும் அங்கே வந்து சேர்ந்தாள். என் வீட்டருகில் இருந்த காவலாளி மேசையில் வைத்துவிட்டுப் போயிருந்த அவளின் சில பொருட்களை எடுக்க வந்திருப்பதாகச் சொன்னாள்.

சரி.. எடுத்துக் கொண்டு போங்கோ என்றேன். அதற்கு அவள்.. சிறிது நேரம் யோசித்துவிட்டு.. "இல்ல அவை அங்கேயே இருக்கட்டும்".. என்றாள். நானும் ஏதோ தன் ஞாபகார்த்தமாக.. அவள் எனக்காகத் தான் அவற்றை விட்டுச் செல்கிறாள் என்ற நினைப்பில்.. சம்மதிக்கிறேன். அவளும்.. வகுப்பறையில் என் துணிச்சலான செயலைப் பாராட்டிக் கொண்டு.. கைகளை அசைத்து அனுமதி பெற்றுக் கொண்டு.. அழகாக துவிச்சக்கர வண்டியில் ஏறி அமர்ந்து பறந்து செல்கிறாள்.

நான்.. அவள் விட்டுச் சென்ற பொருட்கள் மீது.. கண்ணும் கருத்துமாக இருக்க.. அவள் போய் சில நொடிகளில்.. இன்னொருவன் அங்கே வருகிறான். முன் பின் பார்த்தறியாத அவன்... அவளைப் போலவே மா நிறமாக இருக்கிறான். அவன் அவள் விட்டுச் சென்ற பொருட்களை எல்லாம் சேர்த்து எடுக்கிறான். இவற்றை எல்லாம் என் வீட்டாரும் கவனிக்கின்றனர். நானோ... எதிர்பாராத அவனின் வரவும் செயலும் கண்டு ஏக்கத்தில்.. மலைத்துப் போய் நிற்க.. அவன் ஏதோ ஒரு பாசையில்.. ஏசுகிறான். அவை.. தன் காதலியின் பொருட்கள் என்பதாகச் சொல்கிறானோ.. என்று நானே அவற்றை ஊகித்துக் கொண்டு..

ஐயோ.. எல்லாம் போச்சு..! எனி.. எப்படி.. என் பரீட்சையில் சித்தி பெற்று பட்டம் வாங்கப் போகிறேன். அந்த வெளியார் மதிப்பீட்டுப் பரீட்சையில் கட்டாயம் சித்தியடைந்தால் தானே பட்டம் கிடைக்கும். அந்த வாத்தியோட வீணா பிரச்சனைப்பட்டிட்டமே என்ற ஏக்கம்.. மனதை நிரப்ப.. தாளாத துயரம் மனதில் பாரமாக..கண்களை திறக்கிறேன். கனவு கலைகிறது..!

காலை எழுகிறேன்.. இந்தப் பாடல் மனதோடு தானாக இசைக்கிறது...

http://www.youtube.com/watch?v=pM5Aji4zDj0

இந்தக் கனவின் பலன்.. என்னவோ.. யான் அறியேன். தற்போதைக்கு எந்தப் பரீட்சையும் எனக்கு இல்லை. பரீட்சைகள் எல்லாவற்றிலும் சித்தியும் அடைந்துவிட்டேன்..! எழுத்து வேலை மட்டும் தான் உண்டு. கனவில் வந்த..இப்படியான ஒரு சூழலை.. நான் முன்னர் எதிர்நோக்கியதும் இல்லை.... எல்லாம் வியப்பாக அமைய... சோர்வோடு.. நேரத்தைப் பார்க்கிறேன்..! அது தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாட் காரியங்களை ஆற்ற.. நேரத்தை கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு இந்தக் கதையை இத்தோடு முடிக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply

கடைசிப் பகுதியை வாசித்து முடிக்கும் மட்டும், கதை தெளிவாகப் போனாலும் காலமும் இடமும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் குழப்பமாக இருந்தது. கனவென்றவுடந்தான் அது தெளிவாகியது.

தெளிவான கனவு பலிக்குமென்று சொல்வார்கள். இந்தக் கனவு, கறுத்தக் கொழும்பான் மாம்பழ நிறத்தில் ஒரு தேவதையின் வரவை கட்டியம் கூறி நிற்கிறது.

நெடுக்கருக்கும் காலம் வந்துட்டுது ,

சின்ன சின்ன வேலைகள் செய்ய கற்று கொள்ளுங்க .

வெங்காயம் வெட்ட , மரக்கறி வெட்ட , வீடு வாசல் கிளீன் பண்ண , பிறகு உதவியா இருக்கும் .

அதோட இல்லாமல் , சில நேரங்களில அமைதியா இருக்கவும் , சில நேரங்களில சமயோசிதமா இருக்கவும் பழகி கொள்ளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி வரப்போகுது என்று மட்டும் தெரிகிறது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் ஏக்கம் கனவில் அழகாக வெளிப்பட்டிருக்கு.. :D நிறைவேற வாழ்த்துக்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் ஏக்கம் கனவில் அழகாக வெளிப்பட்டிருக்கு.. :D நிறைவேற வாழ்த்துக்கள்..! :lol:

ஆனாலும் கனவிலும் சிலதுகள் திட்டமிட்டே நடக்கச்செய்வது போலுள்ளது.

உதாரணமாக வெள்ளையை கனவில் காண்கிறார்(படத்தின்படி கலப்பற்ற ஒறியினல் ஐரோப்பியர்)

அது தமிழ் பேசணும் என்று விரும்புகிறார். :lol::icon_idea: :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் கனவிலும் சிலதுகள் திட்டமிட்டே நடக்கச்செய்வது போலுள்ளது.

உதாரணமாக வெள்ளையை கனவில் காண்கிறார்(படத்தின்படி கலப்பற்ற ஒறியினல் ஐரோப்பியர்)

அது தமிழ் பேசணும் என்று விரும்புகிறார். :lol::icon_idea: :icon_idea:

நெடுக்ஸ் கற்றுக்கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கற்றுக்கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..! :D

முடிவே பண்ணிட்டிங்களா.......???

:D:icon_idea: :icon_idea:

ஆனாலும் கனவிலும் சிலதுகள் திட்டமிட்டே நடக்கச்செய்வது போலுள்ளது.

உதாரணமாக வெள்ளையை கனவில் காண்கிறார்(படத்தின்படி கலப்பற்ற ஒறியினல் ஐரோப்பியர்)

அது தமிழ் பேசணும் என்று விரும்புகிறார். :lol::icon_idea: :icon_idea:

அறிஞர் நெடுக்காலபோவான் ஒரு தமிழச்சியை முடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவரின் விருப்பம் ஒரு ஐரோப்பிய வெள்ளையினப் பெண் போல உள்ளது. அப்படி முடித்தாலும் அவரை தமிழ்க் கலாச்சாரத்திற்கு மாற்றி விடுவார். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. நானே கனவில வந்த தேவதை கனவு கலைய காணாமல் போட்டாவே என்ற வேதனையில வாடிப்போய் இருக்கிறன்.. நீங்க என்னடான்னா...!!

வேண்டும் ஒன்றால் ஒன்றைச் செய்யுங்கோ.. மீண்டு அந்தத் தேவதை என் கனவில் வர எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தியுங்கோ..! :lol::)

ஆனாலும் கனவிலும் சிலதுகள் திட்டமிட்டே நடக்கச்செய்வது போலுள்ளது.

உதாரணமாக வெள்ளையை கனவில் காண்கிறார்(படத்தின்படி கலப்பற்ற ஒறியினல் ஐரோப்பியர்)

அது தமிழ் பேசணும் என்று விரும்புகிறார். :lol::icon_idea: :icon_idea:

இல்லை.. பார்த்தா பாகிஸ்தான் முஸ்லீம் போல இருந்திச்சுது..! ஆனால் இது பர்தா போடாதது..! :lol::D

முடிவே பண்ணிட்டிங்களா.......???

:D:icon_idea: :icon_idea:

ஐயரையும் அரேன்ச் பண்ணியாயிட்டு. கலியாண மண்டபம் எடுக்கிறதிலதான் கொஞ்சம் சிக்கலாக் கிடக்கு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் நெடுக்காலபோவான் ஒரு தமிழச்சியை முடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவரின் விருப்பம் ஒரு ஐரோப்பிய வெள்ளையினப் பெண் போல உள்ளது. அப்படி முடித்தாலும் அவரை தமிழ்க் கலாச்சாரத்திற்கு மாற்றி விடுவார். :icon_idea:

தமிழச்சிகளோட வாழ்க்கையை வாழ முடியாது. ஆனால் வேணும் என்றால்.. தமிழை வளர்க்கலாம். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் விருப்புக்கு ஏற்ற தமிழச்சிகள் கிடைக்கவும் வாய்ப்பில்லை..! அது கனவுக்கும் தெரிந்தே இருக்கிறது..! :lol::icon_idea:

ஐயரையும் அரேன்ச் பண்ணியாயிட்டு. கலியாண மண்டபம் எடுக்கிறதிலதான் கொஞ்சம் சிக்கலாக் கிடக்கு. :lol:

சேர்ச் அல்லது மொஸ்கில தான் நடக்கும் போல இருக்குது. ஐயர் வீண் செலவு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிகளோட வாழ்க்கையை வாழ முடியாது. ஆனால் வேணும் என்றால்.. தமிழை வளர்க்கலாம். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் விருப்புக்கு ஏற்ற தமிழச்சிகள் கிடைக்கவும் வாய்ப்பில்லை..! அது கனவுக்கும் தெரிந்தே இருக்கிறது..! :lol::icon_idea:

சேர்ச் அல்லது மொஸ்கில தான் நடக்கும் போல இருக்குது. ஐயர் வீண் செலவு..! :lol::D

அடப்பாவிகளா.. :unsure: வெள்ளைத்தோலுக்கு ஆசைப்பட்டு எம்குலப் பெண்களைத் தவறாக எண்ணிய நெடுக்கின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரையும் அரேன்ச் பண்ணியாயிட்டு. கலியாண மண்டபம் எடுக்கிறதிலதான் கொஞ்சம் சிக்கலாக் கிடக்கு.

ஐரேப்பாவில மண்டபம் எடுத்த பின்னர்தான் பெண்ணே தேடுகிறார்கள்... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. :unsure: வெள்ளைத்தோலுக்கு ஆசைப்பட்டு எம்குலப் பெண்களைத் தவறாக எண்ணிய நெடுக்கின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :D

ஏன் எம் குலப் பெண்களிலும் கறுத்தக் கொழும்பான் மாம்பழக் கலரில இருக்கினம் தானே..! எனக்கு எம் குலப் பெண்களின் நிறத்தில் அல்ல குறை.. குணத்தில் தான் அதிகம் தெரிகிறது. சரியான சுழிச்சிகள்.. அவையோட சுழற்சிகளில் சிக்கி நாம் சீரழிய முடியாது தானே..! :lol::D

தமிழச்சிகளோட வாழ்க்கையை வாழ முடியாது. ஆனால் வேணும் என்றால்.. தமிழை வளர்க்கலாம். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் விருப்புக்கு ஏற்ற தமிழச்சிகள் கிடைக்கவும் வாய்ப்பில்லை..! அது கனவுக்கும் தெரிந்தே இருக்கிறது..!

நீங்கள் சிலரைப் பார்த்து விட்டு எல்லோரும் அப்படித்தான் என்று யோசிக்கிறீங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. :unsure:வெள்ளைத்தோலுக்கு ஆசைப்பட்டு எம்குலப் பெண்களைத் தவறாக எண்ணிய நெடுக்கின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :D

சுத்திச்சுத்தி சுப்பற்ற கெகால்லைகக்குள்ளதான் வரணும்

சுண்டினா சிவக்கவேணும் என்று பெண் தேடின பலரின் இன்றைய நிலை தெரியும் :lol::D

கனவில வந்த தேவதைக்கு மச்சம் கிச்சம் ஒன்றும் இல்லையோ? நல்லா யோசிச்சுப்பார்க்கவும். :lol: இருந்ததெண்டால் விஜயின் ஒரு படத்தில வாற மாதிரி உங்கட ஆள கண்டுபிடிக்கச் சுகமாக இருக்கும்! :)

  • கருத்துக்கள உறவுகள்

""கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்""

கனவிற்கண்டதற்கே உறவுகள் இப்படி கலாய்த்தால்

நிஜமாகிவிட்டால் நெடுக்கரின் நிலமை கவலைக்கிடம் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கனவில வந்த தேவதைக்கு மச்சம் கிச்சம் ஒன்றும் இல்லையோ? நல்லா யோசிச்சுப்பார்க்கவும். :lol: இருந்ததெண்டால் விஜயின் ஒரு படத்தில வாற மாதிரி உங்கட ஆள கண்டுபிடிக்கச் சுகமாக இருக்கும்! :)

மச்சத்தை செக் பண்ணியபின் அனுப்பப்போறியளோ....???

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச்சுத்தி சுப்பற்ற  கெகால்லைகக்குள்ளதான் வரணும்

சுண்டினா சிவக்கவேணும் என்று பெண் தேடின பலரின் இன்றைய  நிலை  தெரியும் :lol::D

பிள்ளையாற்றை நிலமை வராவிட்டால் சந்தோசம் :lol:

நெடுக்ஸ்... நீங்கள் இப்பதான் கலியாண வயசுக்கு பக்குவப்பட்டு வந்திருக்குறியள்! :rolleyes:

கொஞ்ச நாளா உங்கடை எழுத்தில ஒரு வித்தியாசம் தெரியுது. நல்லது. :wub:

இல்வாழ்க்கை இனிமையாக அமையட்டும்

என்னுடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள். :)

கட்டிப்பிடித்துக் கவர்தலில் ஒன்றுமில்லை,

தட்டிக்கொடுத்து போக வேண்டும்!

விட்டுக்கொடுத்து வாழ்ந்து பாருங்கள்...!

தட்டிக்கொடுத்து போகும் வாழ்க்கை!

அதன்பின்....

கட்டிப்பிடித்தல்...

தானாய் நடக்கும்!

என்ர தங்கச்சி "கறுத்தக் கொழும்பான்" மாம்பழத்திட்டையும் சொல்லிவிடுங்கோ. :lol: :)

உங்களுக்கு பொம்பிளை பாத்தாச்சு எண்டு கேள்விப்பட்டன் .... உண்மையோ? :) :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்... நீங்கள் இப்பதான் கலியாண வயசுக்கு பக்குவப்பட்டு வந்திருக்குறியள்! :rolleyes:

கொஞ்ச நாளா உங்கடை எழுத்தில ஒரு வித்தியாசம் தெரியுது. நல்லது. :wub:

இல்வாழ்க்கை இனிமையாக அமையட்டும்

என்னுடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள். :)

கட்டிப்பிடித்துக் கவர்தலில் ஒன்றுமில்லை,

தட்டிக்கொடுத்து போக வேண்டும்!

விட்டுக்கொடுத்து வாழ்ந்து பாருங்கள்...!

தட்டிக்கொடுத்து போகும் வாழ்க்கை!

அதன்பின்....

கட்டிப்பிடித்தல்...

தானாய் நடக்கும்!

என்ர தங்கச்சி "கறுத்தக் கொழும்பான்" மாம்பழத்திட்டையும் சொல்லிவிடுங்கோ. :lol: :)

உங்களுக்கு பொம்பிளை பாத்தாச்சு எண்டு கேள்விப்பட்டன் .... உண்மையோ? :) :icon_idea:

நன்றி கவிதை.. மற்றும் எல்லா உறவுகளுக்கும்..!

இதுதானா.. அந்தக் கலியாணப் பக்குவம்... அட அப்படின்னா இதை நான் எப்பவோ கனவில அடைஞ்சிட்டனே..!

எல்லாம் கனவு.. கற்பனை என்று தான் இருக்குது... கவிதை..! அந்தளவில அது மகிழ்ச்சிக்குரியதா இருக்குது. எதையும் எட்டப் பார்ப்பது அழகு.. கிட்டப் பார்த்தால் தானே தெரியும்.. அதன் அசிங்கம்..! :lol::D

நெடுக்ஸ், நேற்று இரவு மூக்குப் பிடிக்க நல்ல சாப்பாடு போல? (சும்மா பகிடிக்கு... :lol::D)

நாள் முழுதும் மனதில் நினைப்பதும் கனவில் தொடருமெனவும் சொல்வார்கள்... எது எப்படியோ, உங்களை பாதியாவது புரிந்து கொள்ளக் கூடிய (மீதியை நீங்களும் புரிந்து கொண்டு) வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்! :)

உங்கட கனவுக் கதையை வாசிக்கும் போது இந்தப் பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது... ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நேற்று இரவு மூக்குப் பிடிக்க நல்ல சாப்பாடு போல? (சும்மா பகிடிக்கு... :lol::D)

நாள் முழுதும் மனதில் நினைப்பதும் கனவில் தொடருமெனவும் சொல்வார்கள்... எது எப்படியோ, உங்களை பாதியாவது புரிந்து கொள்ளக் கூடிய (மீதியை நீங்களும் புரிந்து கொண்டு) வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்! :)

உங்கட கனவுக் கதையை வாசிக்கும் போது இந்தப் பாடல் தான் ஞாபகத்திற்கு வந்தது... ^_^

இல்லையே.. இரவில் அதிகம் சாப்பிடுவதில்லையே..!

நான்.. எதனையும் நினைக்கிறதில்ல.. படுக்கப் போகும் போது.

எங்களைப் புரிஞ்சு கொள்ளுறதும் சரி... இந்தப் பூமியை புரிந்து கொள்வதும் சரி. அந்தளவு கஸ்டம்...! ஆனால் எங்களுக்கு மற்றவையை வெகு விரைவாகப் புரிந்து கொள்ள முடிகிறது..!

ஒரு ஆணின் சின்னச் சின்ன ஆசைகளைச் சொல்லும்.. இந்தப் பாடல் எனக்கு ரெம்பவே பிடிக்கும். நன்றி குட்டி.. பகிர்ந்து கொண்டதற்கு..! :)

இந்தப் பாடலும் அழகு............

http://youtu.be/0YudGCtTIzM

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.