Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு - காலால் மிதிக்கும் கனேடியத் தமிழ் அமைப்புக்கள்

Featured Replies

முள்ளிவாய்க்காலில் மடிந்த மாவீரர்களிற்கும் மக்களிற்கும் கனேடியத் தமிழ் அமைப்புக்கள் கொடுக்கும் மரியாதை.

pic2hsj.jpg

pic4ugo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் ஒற்றுமைக்குக் குரல் கொடுப்பதைக்காட்டிலும் நாங்கள் நாங்களாக தாயகத்திற்கு எது செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.....

எங்களுக்கு வேற வேலை இல்லை ஒவ்வொரு தடவையும் இவர்கள் நிகழ்வுகளை பிளப்பார்கள் பிரிப்பார்கள்.... நாங்கள் ஒற்றுமையாகச் செய்யுங்கள் என்று இவர்களை வேண்டுவோம்..... அடபோங்கப்பா... அவரவர் நிகழ்வுகளைச் செய்யட்டும் பிளவுபட்டு பிளவுபட்டே உருக்குலைந்து போவோம்.

மின்னல் நீங்கள் கனடாவில் வாழ்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் எந்த அமைப்பின் நிகழ்வுக்குப் போகப் போகிறீர்கள்? :huh:

இதை விட "மீள் எழுச்சி நாள்" மே 19 சனிக்கிழமை Queens park இல் -கனேடிய தமிழ் சமூகம் என்று இன்னொரு போஸ்டரும் பார்த்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தினத்தை லிபரல் கட்சியும் கொண்டாடும்.. பழமைவாதக் கட்சியும் கொண்டாடும்.. அதனால் என்ன வந்தது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்வுகளை எல்லோரும் நிகழ்த்தட்டும்... அவர்களா இவர்களா என்று நாங்கள் குழம்பாமல் எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுப்போம். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் போலத் தமிழினம் தன்னை மாற்றிக் கொண்டால் இப்படியான சர்ச்சைகளைத் தவிர்த்து நாம் சாதிக்க வேண்டியவற்றை இலகுவாகச் சாதிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இசை?

  • கருத்துக்கள உறவுகள்

அதே.. அதே..

இங்கு முக்கியமான விடயம் இருதரப்புமே முன்னெடுக்கும் சாராம்சம்தான்.. இருவருமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கிறார்கள் என்பதே முக்கிய செய்தியாகும்..

கனடா தினத்தை லிபரல் கட்சியும் கொண்டாடும்.. பழமைவாதக் கட்சியும் கொண்டாடும்.. அதனால் என்ன வந்தது? :rolleyes:

இரண்டும் கொண்டாடுவது ஒரு வெற்றி பெற்ற நிகழ்வை. லிபரலும் பழமைவாத கட்சியும் இரு வேறு அரசியல் பொறிமுறையினூடு ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகள். ஆனால் கனடா தமிழ் அமைப்புகள் அரசியல் கட்சிகளும் இல்லை, அவை 'கொண்டாடுவதற்கு' இது மகிழ்ச்சியான ஒரு தினமும் அல்ல

ஓரணியில் நின்று ஒன்றுபட்டு பலத்தை காட்ட வேண்டிய தருணத்தில் கனடா தமிழ் அமைப்புகள் பிளவுற்று நிற்பது கொள்கை அடிப்படையில் இல்லை. கொள்ளை அடிப்படையில்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வழியாக இருந்தாலும் ............ அது தமிழ் ஈழத்துக்கானதாக இருக்கவேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் கொண்டாடுவது ஒரு வெற்றி பெற்ற நிகழ்வை. லிபரலும் பழமைவாத கட்சியும் இரு வேறு அரசியல் பொறிமுறையினூடு ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகள். ஆனால் கனடா தமிழ் அமைப்புகள் அரசியல் கட்சிகளும் இல்லை, அவை 'கொண்டாடுவதற்கு' இது மகிழ்ச்சியான ஒரு தினமும் அல்ல

ஓரணியில் நின்று ஒன்றுபட்டு பலத்தை காட்ட வேண்டிய தருணத்தில் கனடா தமிழ் அமைப்புகள் பிளவுற்று நிற்பது கொள்கை அடிப்படையில் இல்லை. கொள்ளை அடிப்படையில்

சரி.. அந்த உதாரணம் தவறு..

பொப்பி தினம் எப்படி? :D இறந்துபோன கனேடிய வீரர்களுக்கு இவை தனித்தனியா வணக்கம் செலுத்த இல்லை? :rolleyes:

எங்கடை ஆக்கள் சேந்து நடத்துவினம் எண்டு காத்துக்கொண்டிருந்தால் இலவு காத்த கிளி கணக்கில்தான் போகும்.. இது எங்கடை சமூகத்துக்கு மட்டுமில்லை.. எல்லா சமூகத்திலயும் நடக்கிறதுதான்..

காரணங்களைக் கண்டுபிடிக்காமல் இருக்கிறதைக் கொண்டு நடக்கிறதைப் பார்க்கிறதுதான் வழி.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இவர்கள் இணைவார்கள் என்று நாம் இனிமேலும் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நன்று என்று நினைக்கிறேன் ஏனென்றால் இவர்களை இணைக்க முற்படுவதன் மூலம் எமக்கு இருக்கக் கூடிய செயல்திறன் அத்தனையையும் இழக்கிறோம். நோக்கின்றி வீணாகக் கழிகிறது இத்தகைய தருணங்கள். இல்லாவிட்டால் நமக்கு வேண்டாம் இந்தப்பிரச்சனைகள் என்று நாம் பயணிக்க வேண்டிய பாதையிலிருந்து விலகி விடுகிறோம்.... அப்படி நாம் விலகுவதால் இன்னும் தமிழினம் பலவீனமடையும். அதைத்தான் சிங்களம் விரும்புகிறது. சிங்களத்தின் அவ்விருப்பை புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருப்போம் இப்படித்தான் நடப்போம் என்று வீம்பாக இருப்பவர்களுடன் முரண்படுவதில் எம்மினத்திற்கான எத்தகைய நன்மைகளையும் பெற்றுவிட முடியும் என்று நினைக்கவில்லை. அவர்கள் அப்படியே இருக்கட்டும் அவர்களோடு முரண்பட்டு மனக்கசப்புகளை வளர்க்காமல்... ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்கவும், பாடுகிற மாட்டை பாடிக்கறக்கவும் பழகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்... :huh:

அன்புச் சகோதரி பலம்தான் அதிகாரத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து விடுதiலை என்பது யாசித்துப் பெறுவதல்ல போராடிப் பெறுவதே என்பதை சொல்லிலும் செயலிலும் செய்து காட்டியவர் நமது தேசியத்தலைவர்.1910ல் இருந்து 1977 வரை கையேந்தி அரசியல் நடத்திய தமிழ் அதிகார வர்க்கம் தமிழ்காங்கிரசு என்றும் தமிழரசு என்றும் பிரிவினை காட்டி நின்று கொண்டு தமிழனுக்கு உரிமை பெற்றுத் தருவதாக பம்மாத்துவிட்டதும், திரைமறைவில் போட்டிபோட்டுக்கொண்டு சிங்கள பேரினிவாதிகளுக்கு முண்டு கொடுத்து சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசில் தமிழ் மக்களின் இறைமையை ஏலம் போட்டு விற்றதும் தானே கடந்த கால வரலாறு.

விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்றதும் வாலைச் சுறுட்டிக்கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கம் இப்போது தேசியத் தலைவர் வாழ்க! விடுதலைப்புலிகள் வாழ்க! துரோகி எதிர் தியாகி என்று கோசம் போட்டுக்கொண்டு அரங்கிற்கு வந்திருக்கிறது.

பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை என்ற விடுதலைப் போராட்டத்தின் மூலோபாயத்தையே கூறுபோடும் இந்த அதிகார வர்க்கம் அடிப்படையில் ஒன்றுமையாகவே இருக்கிறது.

அதாவது உண்மையான விடுதலைப்புலிகளை மீண்டும் மீள் எழுச்சி கொள்ள விடக் கூடாது என்பதில் இவர்கள் ஒற்றுமையாகNவு இருக்கிறார்கள்.இன்று இந்த முள்ளி வாக்காலின் பின்னரான எமக்குரிய மிகப் பெரிய சாவால் என்பது விடுதலைப் புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையாகும். இந்தத் தடையை நீக்குவதன் மூலமும் எமது பொருளாதார பலம் அரசியல்பலம் ஊடகபலம் அனைத்தையும் ஒரு முனையில் குவித்து அந்ததளத்தில் உறுதியாக தடம் பதித்து நிற்பதன் மூலம் தான் நாங்கள் எமது விடுதலைப் போரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.

இன்றுவரை தலைவர் வாழ்க விடுதலைப்புலிகள் வாழ்க துரோகி எதிர் தியாகி என்று சுலோக அரசியல் நடத்தும் இந்தக் கூட்டத்தின் கடந்த 3 வருடச் செயற்பாடுகளை எடுத்துப் பார்த்தால் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் நீடிப்பதற்கு அல்லது இறுக்குவதற்கான ஆப்புக்களையே இவர்கள் இறுக்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

நேற்று பொலிகண்டியில் ஒரு முன்னாள் போராளி திக்குளித்து உயிரை மாய்த்திருக்கிறார்.இதற்கான காரணம் என்ன என்பது விடுதலையையும் தேசியத்தலைவரையும் உண்மையாக நேசித்த அந்த பெண்போராளிக்கு துரோகி பட்டம் வழங்கிய ஈனப்பிறவிகளுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியில் சொல்லப் போவதில்லை.

அடுத்த மாவீரர் தினத்தில் அந்தப் பெண்போராளியின் படத்தை வைத்து மாலைப்போட்டு வீரவணக்கம் செலுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை

போரில் அனைத்தையும் இழந்தவர்கள் துரோகிகள்!

பேரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் தியாகிகள்!

என்ன கொடுமை இது?

Edited by navam

  • தொடங்கியவர்

இவர்களின் ஒற்றுமைக்குக் குரல் கொடுப்பதைக்காட்டிலும் நாங்கள் நாங்களாக தாயகத்திற்கு எது செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.....

எங்களுக்கு வேற வேலை இல்லை ஒவ்வொரு தடவையும் இவர்கள் நிகழ்வுகளை பிளப்பார்கள் பிரிப்பார்கள்.... நாங்கள் ஒற்றுமையாகச் செய்யுங்கள் என்று இவர்களை வேண்டுவோம்..... அடபோங்கப்பா... அவரவர் நிகழ்வுகளைச் செய்யட்டும் பிளவுபட்டு பிளவுபட்டே உருக்குலைந்து போவோம்.

மின்னல் நீங்கள் கனடாவில் வாழ்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் எந்த அமைப்பின் நிகழ்வுக்குப் போகப் போகிறீர்கள்? :huh:

இரு நிகழ்வுகள் என்றால் இரண்டும் புறக்கணிக்கப்படும்.

வீட்டில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்திவிட்டு எமது வேலையை நிம்மதியாகப் பார்க்கலாம்.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

இன்றுவரை தலைவர் வாழ்க விடுதலைப்புலிகள் வாழ்க துரோகி எதிர் தியாகி என்று சுலோக அரசியல் நடத்தும் இந்தக் கூட்டத்தின் கடந்த 3 வருடச் செயற்பாடுகளை எடுத்துப் பார்த்தால் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் நீடிப்பதற்கு அல்லது இறுக்குவதற்கான ஆப்புக்களையே இவர்கள் இறுக்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

நேற்று பொலிகண்டியில் ஒரு முன்னாள் போராளி திக்குளித்து உயிரை மாய்த்திருக்கிறார்.இதற்கான காரணம் என்ன என்பது விடுதலையையும் தேசியத்தலைவரையும் உண்மையாக நேசித்த அந்த பெண்போராளிக்கு துரோகி பட்டம் வழங்கிய ஈனப்பிறவிகளுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியில் சொல்லப் போவதில்லை.

அடுத்த மாவீரர் தினத்தில் அந்தப் பெண்போராளியின் படத்தை வைத்து மாலைப்போட்டு வீரவணக்கம் செலுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை

போரில் அனைத்தையும் இழந்தவர்கள் துரோகிகள்!

பேரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் தியாகிகள்!

என்ன கொடுமை இது?

அந்தக் கொடுமை இருக்கட்டும்.

மாவீரருக்கும் மக்களிற்கும் வணக்கம் செலுத்துற நிகழ்வுகளை இரண்டு படுத்துற நல்ல செயலைச் செய்யிறது யார்,???

இசை நிகழ்வுகளை எல்லோரும் நிகழ்த்தட்டும்... அவர்களா இவர்களா என்று நாங்கள் குழம்பாமல் எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுப்போம். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் போலத் தமிழினம் தன்னை மாற்றிக் கொண்டால் இப்படியான சர்ச்சைகளைத் தவிர்த்து நாம் சாதிக்க வேண்டியவற்றை இலகுவாகச் சாதிக்கலாம் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இசை?

தமிழ் மகளீர் அமைப்பு எண்டு பெயர் போட்டு இருக்கு அதிலை நீங்கள் இல்லையோ....??

இதை விட "மீள் எழுச்சி நாள்" மே 19 சனிக்கிழமை Queens park இல் -கனேடிய தமிழ் சமூகம் என்று இன்னொரு போஸ்டரும் பார்த்தேன் .

பார்த்தீங்களா? அடிச்சீங்களா? :unsure:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீங்களா? அடிச்சீங்களா? :unsure:

:lol: :lol: :lol:

எங்கடை ஆக்கள் சேந்து நடத்துவினம் எண்டு காத்துக்கொண்டிருந்தால் இலவு காத்த கிளி கணக்கில்தான் போகும்.. இது எங்கடை சமூகத்துக்கு மட்டுமில்லை.. எல்லா சமூகத்திலயும் நடக்கிறதுதான்..

ஆயிரத்தில் ஒரு வார்த்தை !! :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் உண்மை.

இதற்கு வழி இல்லை என்னும்போது

அன்றாடம் எமது தேவைக்கேற்ப கிடைப்பதில் எது அந்த சந்தர்ப்பத்திற்கு எமக்கு நன்மை தருமோ அல்லதுது எமது இலட்சியத்தை அடைய தேவையோ

அதனுடன் இணைந்து பயணித்துவிடுவதுதான் அவர்களை நாம் பயன்படுத்தும் வழியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வேதனையடைகின்றேன்.....எந்தப் புற்றில் எந்தப் பாம்பு.....குழப்பமான பெயர்களை போட்டு...அனைவரையும் குழப்புகிறர்கள்.....எம்மை நாமே படுகுழியில் தள்ளுகின்றோம்....ஒட்டாவில் நடந்த ஊர்வலத்துடன் தீர்மானித்துவிட்டேன்....வீட்டில் இருந்த படியே..எமது கடமைகளை செய்வது என்று.....சுயனலக் கூட்டம் என்றால் எம்மினம்தான்......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மகளீர் அமைப்பு எண்டு பெயர் போட்டு இருக்கு அதிலை நீங்கள் இல்லையோ....??

இருந்தேன் ஆனால் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.