Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுஎவ்வளவு நேரம் வாழைத் தோட்டத்திற்குள் படுத்திருந்தோம் என்று தெரியவில்லை, விடியத் தொடங்கியது. இப்போது துப்பாகிச் சத்தங்கள் குறைந்து கனரக வாகனங்கள் ஓடும் சத்தமும் கேட்கத் தொடங்கியிருந்தது. எமக்கு நடப்பது என்னவென்று தெரியவில்லை. சுமார் 5 மணியிருக்கும், எங்கள் வீட்டிற்கு முன்னால் பழையபடி அதே காட்டுக் கத்தல்கள். "வெளியே வருங்கள், சரனடையுங்கள், நாங்கள் கண்டுபிடித்தால் கொல்லுவோம்" என்று ஆங்கிலத்தில் கத்தினார்கள். வெளிச்சம் வந்தபின்னர் ஒளிந்திருப்பதில் அர்த்தமில்லை, ஆனால் எப்படி வெளியே வருவது? சிலவேளை இராசரத்திணம் ஐயாவின்ர குடும்பத்தைப் போல எங்களையும் சுட்டால் என்ன செய்யிறது என்று யோசிச்சுக்கொண்டிருக்க, அப்பா சொன்னார், "சரி, வாங்கோ போவம், நடக்கிறது நடக்கட்டும்" என்று தம்பியைத் தூக்கிக் கொண்டு முன்னால் போக நானும் சிரற்றன்னையும் பின்னால் தொடர்ந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 - 40 இந்திய இராணுவம் முகத்தில் கொலைவெறி கொப்பழிக்க ஓடி வந்து துப்பாகிகளால் தாக்கத் தொடங்கினார்கள். எஸ் எல் ஆர் என்று நினைக்கிறேன், பிடியால் அப்பாவின் பிடரியில் அடிக்க அவர் குப்புற வீழ்ந்தார், அடுத்தது எனக்கு விழுந்தது, ஆனால் காயமில்லை. எங்களைப் புலிகளென்றும், கொல்லப்போவதாகவும் மிரட்டினான் இந்தியத் தளபதி. அவனைப் பார்த்தால் அவன் சொல்வதைச் செய்துவான் என்றுதான் நினைத்தேன். எனது தம்பியைக் கொற கொறவெண்டு இழுத்துக்கோன்டு வீட்டினுள் ஆயுதம் இருக்கும் பகுதியைக் காட்டென்று கேட்டார்கள். எங்கள் முற்றத்தில் நான், அப்ப, சிற்றனைய்யை முழங்காலில் கைகளை மேலே தூக்க்யபடி இருக்கவிட்டு 10 -15 இராணுவம் துப்பாக்கியை நீட்டியபடி காத்திருக்க சுமார் இன்னும் 5 இராணுவத்தினர் வீட்ட்னுள் தம்பியை இழுத்துக்கொண்டு நுழைந்தார்கள். அப்போதுததான், நானும் தம்பியும் சேர்த்துவைத்திருந்த செல்த் துண்டுகளும், வெற்று ரவைக் கூடுகளும் எனக்கு நினைவிற்கு வந்தது. அதிலொண்ரு தெல்லிப்பழையிலிருந்து எனது மச்சானிடம் நான் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டுவந்திருந்த 50 கலிபர் வெடிக்காத ரவையும் அதன் லிங்கும். எங்களைக் கொல்லத்தான் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நான் எதிர்பார்த்ததுப்பொலவே அவை அவர்களின் கண்ணில் பட்டிருந்தன. அவரற்றை கொண்டுவந்து என்னவென்று கேட்டு அடித்தார்கள். எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவர்களுக்கு புரியவைக்க முயன்றோம், அவர்கள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. அடி விழுந்தது. ஆனால் சுடவில்லை. எங்கள் நல்ல நேரம், அந்தத் தளபதியை ஒரு இராணூவ வீரன் அவசரமாக எங்கேயோ கூட்டிக்கொண்டு போக, எங்களையெல்லாம் பலாலி வீதிக்குப் போகுமாறு கட்டளையிட்டார்கள். நாங்கள் பலாலி வீதிக்குப் புறப்பட்ட போதுதான் அன்றிரவு நடந்திருந்த மொத்த அநர்த்தமும் எங்களுக்குப் புரியத் தொடங்கியது. லத தியெட்டருக்குப் பின்னாலிருக்கும் 6 வீடுகள் மட்டுமே கொண்ட அந்தச் சிற்றொழுனக்இயில் மட்டும் மூன்று இராட்சத இராணுவத் தாங்கிகள் நின்று கொண்டிருந்தன. நான் வாழ்நாளில் அதுவரை அவ்வளவு பெரிய யுத்த வாகனத்தைப் பார்த்ததில்லைழதில் ஒன்று எங்கள் வீட்ட்னுல் நின்றுகொண்டிருந்தது. அதிகாலையில் கேட்ட சங்கிலி இழுபடும் சத்தத்தின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. எங்கள் ஒழுங்கையின் எல்லா வீடுகளும் நொருங்கியிருந்தன. ஒழுங்கையின் ஒரு புறத்தில் தகடுகளால் எதையோ மறைத்திருந்தார்கள். ஆனால், தகரத்தின் கீழிருந்து வழிந்துகொன்டிருந்த இரத்தத்தைப் பார்த்தபோது அது என்னவாகவிருக்கும் என்பதை அனுமானிக்க முடிந்தது. ஒழுங்கை நெடுகிலும் பக்கத்து வீட்டுக்காரர் யயாராவது த்ரிகிறார்களா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். எவரையுமே காணவில்லை, எல்லோரும் நல்லூருக்குப் போய்விட்டார்களோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்.

பலாலி வீதிக்கு ஏறியபோது, அங்கூ கடுமையான சண்டை நடந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன . டிப்போவின் ஒரு பகுதி எரிந்துகொண்டிருந்தது. டிப்போவஉக்கு முன்னாலிருந்த் சரவணபவன் மரக்காலையில் இருந்த விறகெல்லாம் போட்டு எதையோ எரித்துக்கொன்டிருந்தார்கள் இராணுவத்தினர். எங்கள் ஒழுங்கை முகப்பில் ஒரு தாங்கியும், டிப்போ வாசலில் ஒரு தாங்கியும் கோண்டாவில் சந்தியைப் பார்த்தபடி நடுவீதியில் நின்றுகொண்டிருந்தன. கூடவே பீரங்கி பொருத்தப்பட்ட ஜீப்புகள் காட்டேறிகள் போல இந்திய இராணுவம்வலம் வந்துகொண்டிருந்தது.

எங்கலையும் எங்களைப்போலவே இழுத்து வரப்பட்ட இன்னும் 25 பேரையும் ஒரு கடையின் முன்னால் சுவற்றைப் பார்த்தபடி நிற்கச் சொன்னார்கள். எங்களின் பின்னால் அந்தத் தாங்கிகளில் ஒன்று வந்து நின்றிருந்தது. கொல்லப்போகிறார்கள் என்று நினைத்தேன். சில மணித்துளிகள் அமைதியாக கழிந்து போக திடீரென்று கோண்டாவில்ச் சந்திப் பகுதியிலிருது டிப்போ நோக்கி தப்பாகி ரவைகள் பாய்ந்து வரத் தொடங்கின. சில நொடிகள் எங்களின் பின்னாலிருந்த தாங்கி நாங்கள் நின்றிருந்த கடையை நோக்கிச் சுட்டது. கடையின் கூரை எங்கள் மேல் இடிந்து விழ நாங்கள் எல்லோரு கீழே விழுந்தோம். தம்பியின் தலையிலிருந்து இரத்தம் ஓடத்தொடங்க, அப்ப, சரத்தைக் கிழித்துக் கட்டுப் போட்டார். எங்களுடன் நின்றிருந்த இன்னும் 10 பேர்வரை அசைவின்றிக் கிடந்தனர். அவர்கள் மேல் அந்தத் தடித்த சீமேந்துச் சுவர் வீழ்ந்து கிடக்க எவரும் எவரையும் காப்பற்றும் எண்ணத்துடன் இருக்கவில்லை. காதுகள் செவிடாகி, முகத்திலும் கால் கைகளிலும் இரத்தம் வழிய நின்றிருந்த எங்கள் வரிசையில் நிற்கும்படி கத்தினான் இராணுவத்தில் ஒருவன். வரிசையில் நாங்கள் நின்றுகொள்ள கோண்டாவில் சந்திப்பக்கமாக எங்களைப் போகும்படி கத்திக்கொண்டே அந்த இரண்டு தாங்கிகளும் எங்கள் பின்னால் கோண்டாவில்ச் சந்தி நோக்கி நகரத் தொடங்கின. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அப்பா புரிந்துகொடிருக்க வேண்டும், "அவங்கள் சுடத்தொடங்கினால் உடனேயே ரோட்டின்ர கரையில் விழுந்து படுங்கோ" என்று சொல்லிக்கொண்டே வந்தார். கோண்டாவில் சந்திக்கும் டிப்போவுக்கும் இடையில் இருக்கும் வாமாஸ் சந்தியை அடைந்தவுடன் தாங்கிகள் நின்றுவிட்டன. நாங்கள் தொடர்ந்து நடந்தோம். ஒரு சில மீற்றர் தூரத்தில் கைய்யில் ரொக்கெட் லோஞ்சருடன் ஒரு வீட்டின் வாசலுக்குள் தன்னை மரைத்துக்கொன்டு ஒரு போராளி காத்திருந்தான். எங்களைக் கண்டதும் பேசாமல் தொடர்ந்து நடக்கும்படி கைகளால் சகை செய்துவிட்டடு அவன் அவ்விடத்திலேயே நின்றிருந்தான். இராணுவத்தின் கண்களுக்கு அவன் தெரிய வாய்ப்பில்லை என்று நான் எண்ணிக்கொண்டேன். அவனைப்போலவே காற்சட்டைகளும் சங்களும் அணிந்தபடி இன்னும் சில போராளிகள் ஆங்காங்கே வீடுகளுக்குள் நின்றிருந்தார்கள்.

கோண்டாவில்ச் சந்தியை அடைந்தவுடன் அங்கிருந்து கோண்டாவில் மேற்குச் செல்லும் வீதியால் நடப்பதே சரியெணன்று எண்ணினோம். ஏனென்றால் பலாலி வீதியில் தொடர்ந்து நடந்தால் இடையிலே அகப்பட்டுச் சாவது மட்டும் உறுதி என்று தெரிந்தது. சந்தியிலிருந்த புலிகளின் பாரிய காப்பரண் ஒன்றில் எங்களை அமர்த்தி தண்ணீர் கொடுத்தார்கள். "இப்ப எங்க நிக்கிறாங்கள்" என்று விசாரிக்க, "வாமாஸ்" என்று நான் முந்திக்கொண்டேன். அதில் ஒருவர் நான் படிக்கும் பாடசாலைக்கு ஒருமுறை விமானக் குண்டுவீச்சிலிருந்து உங்களைக் காப்பது எப்படி என்று விளங்கப்படுத்த வந்திருந்த சோல்ட்டின் முரளி என்பது புரிந்தது. அரசியல்ப் போராளியான அவரின் கைகளிலும் ஒரு ஆயுதம். பாவம், எங்களுக்காக எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் இவர்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

  • Replies 174
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் ரகு.

நாம் கனக்க எழுதணும்

ஆனால் கேட்கத்தான் ஆளில்லை.

சாட்சி கேட்டவரையும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் வெளியே வரட்டும்.. தொடருங்கள் ரகு..

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாறு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தோம். கொய்யாத்தோட்டத்திலிருந்யத பெரியப்பாவின் வீட்டில் நாங்கள் தங்குவதென்று முடிவாகியதுலானால் அங்கிருப்பதும் பாதுகாப்பானதாகத் தெரியவில்லை. அங்கும் செல்கள் வந்து விழத்தொடங்கின. எங்கும் ஒரே அவலம். மக்களால் நிறைந்திருந்த ப்பகுதி மீது இந்திய இராணுவம் கடுமையான செல்த் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. ஒரு மாலையில் நடந்த செல்த்தாகுதலில் மட்டும் எங்கள் பெரியப்பாவின் வீட்டிற்கருகில் வசித்துவந்த குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். கொட்டுமழையிலும் அந்தக் குடும்பத்தினர் இறந்த தமது சொந்தங்களை பாய்களில் சுற்றி எங்கள் வீதியால் அழுதழுது மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்றது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சாப்பாடும் சரியாகக் கிடைக்காது. ஒரு நாளுக்கு ஒரு நேரம் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால்ப் போதும் என்றே அன்று நினைத்துக்கொண்டோம். எனக்குக் கோண்டாவிலில் நாங்கள் இறுதியாக இருந்த இரவு நினைவுக்குவரத் தொடங்கியது. இங்கும் அது நடந்துவிடுமோ என்று எண்ணத்தொடங்கினேன். அதுபோலவே செல்த்தாகுதலும் உக்கிரமடைய, கிறீஸ்த்து இராசா கோயிலுக்குச் சென்று தங்குவதென்று முடிவெடுத்தோம். அங்கே போனபோது அது ஒரு பாரிய அகதி முகாமாக மாறியிருந்தது. வெறும் தரையில் பாய்கள், சரங்களை விரித்துப் படுத்துக்கொண்டோம். ஆனால் செல்கள் எங்களைத் துரத்திக்கொண்டே வந்தன. நடு இரவில் நாங்கள் தங்கியிருந்த கோயிலின் வாசலில் முதலாவது செல்வந்து வீழ்ந்தது, மக்களின் கூச்சலிலும், இரைச்சலிலும் செத்தவர்கள் யார், தப்பியவர்கள் யாரென்று சரியாகத் தெரியவில்லை. வீழ்ந்தவர்களைத் தூக்கிக்கொண்டு சிலர் ஓடுவதையும், சிலர் இன்னும் கீழே கிடப்பதையும் கண்டேன். ஆனால் அப்போது எதுவுமே செய்யத் தோன்றவில்லை. சனமெல்லாம் அந்தக் கோயிலை விட்டு பாஷையூர் அந்தோனியார் கோயிலிக்கு ஓடிக்கொண்டிருந்தது. நாங்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினோம். வீதியெங்கும் சனக் கூட்டம், கடவுளே இப்போது செல் வந்து வீழ்ந்தால் என்னவாகும் என்று நினைத்துக்கொண்டேன். நாங்கள் அந்தோனியார் கோயில் முகாமைச் சென்று சேரும்வரை வீதியில் செல்விழவில்லை. ஆனால், சுற்றுப்புறதில் வீழ்ந்து வெடிப்பது தெளிவாகக் கேட்டது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

"செல்" என்றால் என்ன என்பதை இந்திய உணர்வாளர்கள் புரிந்து கொள்வதற்காக..

155fire.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோனியார்கோயில் மக்களால் நிரம்பியிருந்தது. கைக்குழந்தைகள், கட்டிலலுடன் வயோதிபர்கள் என்று ஒரே மனித அவலம். காயப்பட்டவர்கள் சிலரும் இருந்தார்கள். இரத்தம் வடிய வடிய அழுதபடி குழந்தைகளும், அவர்களைச் சாந்தப்படுத்த முயன்ற தாய்மாரும், இவை எதையுமே பொருட்படுத்தாது தங்களுக்கென்று ஒரு ஒதுங்க இடம்தேடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டமும். இரவு 7 மணியிருக்கும், அந்தோனியார் கோயிலின் இடதுபுறக் கோபுரத்தின் பகுதிமீது அடுக்கடுக்காகச் செல்கள் வந்து வீழ்ந்தன. நாங்கள் இருந்தபகுதியிலிருந்து சில மீற்றர்கள்தானிருக்கும், எங்கும் இரத்தமும் குற்றுயிராகக் கிடக்கும் மனிதர்களும். யாரையும் யாரும் தேற்றக் கூட நினைக்கவில்லை. முடிந்தவர்களை இழுத்துக்கோன்டு வீதிக்கு ஓடினோம், ஆனால் எங்கே செல்வது ?? எல்லா வீடுகளிலும் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. போதகர் வீடு, கல்லூரி வாத்தியார்வீடு, கிறீஸ்த்தவச் சிற்றாலயம் என்று ஒரு இரவில் மட்டும் 4 வீடுகளில் மாறி மாறித் தஞ்சம் அடைந்தோம். இறுதியாக கடற்கரையோரத்தில் இருந்த சுதி மரியான் வீட்டில் தங்கிக் கொண்டோம்.

செல்மழைஎங்கும் பொழிந்துகொண்டிருந்தது. அப்பகுதி முழுவது அழுகுரல்களும் ஓலங்களும், இடைக்கிடையே பிரார்த்தனைகளும். அடிக்கடி எங்கள் வீட்டைக் கடந்துபோகும் ஓரிரண்டுபேர் மட்டுமே கொண்ட மரண ஊர்வலங்களும். இப்படியே ஒரு வாரமாகியது. பாஷையூர் சின்னக்கடை கடற்கரை வீதியூடாக ஏதாவது சாப்பாடு வாங்கலாம் என்று நானும் எனது பெரியப்பாவின் மகனும் சைக்கிளில் சென்று கொன்டிருந்தோம். எங்களுக்கு மேலால் முதலை என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் எம் ஐ. 24 என்று நினைக்கிறேன், பாஷையூர் நோக்கி பறந்துகொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாரிய வெடிச்சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தோம், அந்த வீதிய்லிருந்த வயோதிபர்களைப் பராமரிக்கும் கன்னியாஸ்த்திரிகளின் இல்லம் மீது குண்டு பொழியப்பட்டிருந்தது. அச்சம் ஆட்கொள்ள மீண்டு வீடு நோக்கிச் சைக்கிளைத் திருப்பினோம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

செல் தாக்குதலால் தாக்குப் பட்ட... ஈழத்தின் ஒவ்வொரு,

வீடும், வீட்டின் கதவுகளும், மாமரமும், பனைமரமும்.... இன்றும் சாட்சிகளாக உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சறம் கட்டிய நாலு பயல்களை வெல்வதற்காக பல பட்டினங்களையே பலி எடுத்தது இந்திய ராசகுமாரரின் படை.....

வெற்றி கிடைத்ததா???

  • கருத்துக்கள உறவுகள்

சிலவாரங்களின் பின்னர் வீடுகளத் திரும்பிச் சென்று பார்க்க விடுகிறார்கள் என்று மக்கள் கதைப்பது தெரிந்தது. நானும் அப்பாவும் வீட்டை ஒருமுறை பார்த்து வருவது என்று நினைத்து சைக்கிளில் சென்றோம். கோண்டாவில்ச் சந்தியை அடையும்வரை உள்வீதிகளாலும், கொச்சொழுங்கைகளாலுமே சென்றுகொன்டிருந்தோம். எங்களைப்போல வீடு பார்க்க வந்தவர்கள் எவரையும் நாம் காணவில்லை. எங்களுக்குப் பயம் பற்றிக்கொண்டது. திரும்பிவிடலாம என்று நினைத்துக்கொண்டிருக்க எங்களை நோக்கித் துப்பாக்கிச் சன்னங்கள் பரந்து வரத் தொடங்கின. பலாலி வீதியால் ரோந்து சென்றுகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் வாகன அணியொன்று திடீரென்று நாங்கள் பதுங்க்யிருந்த இடத்திற்கருகில் நிற்க அதிலிருந்து இராணுவத்தினர் எங்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, சாவது உறுதியென்று நினைத்துவிட்டேன். எங்களிருவரையும் நிலத்தில் வீழ்ந்து படுக்குமாறு கத்தினார்கள். ஒருவன் எங்கலைக் காலால் எட்டி உதைந்தான். நாங்கள் சிவிலயன்கள் என்று மன்றாடினோம். அப்போதுதான் அந்தத் தள்பதிய நான் அவதானித்தேன். நாங்கள் பிடிபட்ட் இரவில் எங்களை இழுத்துவந்த அதே தளபதி. அவனொரு தமிழன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எங்களை அடையாளம் கண்டுகொண்ட அவன், எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கத்தினான். வீடு பார்க்கவென்று நாங்கள் கூற, முடியாது, திருப்பிப் போய்விடுங்கள் என்று மறுபடியும் கத்தினான். அப்பா ஆற்றாமை தாங்காமல் அழவும், சரி, உங்கள் உடயிருக்கு நான் உத்தரவாதமில்லை, உங்கள் வீடு இருக்கும் பகுதியில் இன்னும் புலிகள் இருக்கலாம், அங்கிருந்து எங்கள் மேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், உங்களைப்பற்றிக் கவலைப்பட முடியாது என்று கூறிவிட்டு, கோண்டாவில் சந்தியிலிருக்கும் இராணுவ முகாம் தளபதியிடம் இரு சிவிலியன்கள் வருகிறார்கள் என்று வோக்கியில் கூறிவிட்டு திருநெல்வேலிப் பக்கமாக அவனது ஜீப் நகர்ந்தது.

கோண்டாவில்ச் சந்தியில் எங்களிருவரையும் துருவித் துருவி விசாரித்தார்கள். சேர்ட்டுகளைக் களைந்து பரிசோதித்தார்கள். பின்னர் எங்கள் வீடிருக்கும் பகுதிக்குப் போக விட்டார்கள்.

எங்கள் ஒழுங்கையே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தது. எந்தவீட்டினதும் சுவர்களோ மதில்களோ நிமிர்ந்திருக்கவில்லை. இடிந்துபோய், பற்றைக்காடுகள் வளர்ந்திருந்தன.

ஒருவாறு எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து உள்நுழைந்தோம். குசினியைத் தவிர வேறு எந்தப் பகுதியும் அங்கிடுக்கவில்லை. அறைகள் இருந்ததன் சாட்சியாக சில அரைத் தூண்களும், எரிந்துபோயிருந்த வீட்டின் கதவு நிலைகளுமே மிச்சமாயிருந்தன. அப்பா குசினிக்குள் சில சமையல்ப் பாத்திரங்களை சேகரித்துக்கொண்டிருக்க நான் காணியைச் சுற்றிப் பார்க்க வேளியே வந்தேன். அப்போதுதான் அயல் வீட்டில் பழனி மாமாவைப் பார்த்தேன். அவரும் எங்களைப் போல வீடு பார்க்க வந்திருக்க வேண்டும். நான் கூப்பிடவும் ஓடோடி வந்த அவர், "பாமா உங்களோடதானே இருக்கிறாள்" என்று என்னை அவரசமாக கேட்டார். பாமா அவரது அக்காவின் இரண்டாவது மகள், 14 வயது. நான் இல்லையென்று சொல்லி முடிக்குமுன்னர் ஓவென்று அழத்தொடங்கினார். எனக்குப் புரியவில்லை. அவர் அழும் சத்தத்தைக் கேட்டதும் அப்பவும் வெளியே வந்துவிட்டார். அப்பா அவரைக் கேட்டபின்னர்தான் பாமாவுக்கு என்ன நடந்திருக்கும் என்கிற உண்மை புரிந்தது. அன்றிரவு இராணுவம் வரும் செய்திகேட்டு பக்கத்து வீடுகளில் இருந்து சுமார் 27 பேர் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டினுள் அன்றிரவு தங்கியிருக்க, அதிலிருந்து 7 பேர் அருகிலிருந்த புகையிலைக் குடிலிக்குள் சென்று படுத்திருக்கிறார்கள். இரவு வந்த இராணுவம் தேடியபோது புகையிலைக் குடிலிக்குள் படுத்திருந்த 7 பேரையும்தான் முதலில் கொன்றிருக்கிறார்கள். பின்னர் வீட்டினுள்சென்று மீதமுள்ளவர்களைக் கொன்றிருக்கிறார்கள். பாமா அன்று தனது குடும்பத்துடன் தங்காது பேத்தியாரின் வீட்டில் அயலவருடன் தங்கியிருக்கிறாள். அயலவரின் குடும்பம் வேட்டையாடப்பட பாமாவும் கொல்லப்பட்டிருக்கிறாள். ஆனால் அவலது குடும்பமோ பாமா எங்களுடன் நல்லூருக்குப் போய்விட்டதாக அதுவரை நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறது. எங்களைக் கண்டவுடன் பழனி மாமா ஓடி வந்து விசாரித்ததும் அதனால்த்தான்.

இதைக் கேட்டவுடன், எல்லாவற்றையும் போட்டுவிட்டு அந்தப்பகுதியெங்கும் தேடினோம். 3 மணித்தியாலத்தில் 27 பேரின் எலும்புத் துண்டங்களைத் தேடிப்பிடித்தோம். அதிலொன்று பாமாவினது. இறுதியாக அவள் அணிந்திருந்த தலைக்குக் குத்தும் சிலைட்டும், அவளது தங்க மோதிரமும் பழனி மாமாவின் கண்ணுக்குத் தெரிந்தது. கண்டவுடம் மீண்டும் அழ ஆரம்பித்தார். அப்பாவும் நானும் அவரை ஒருவாறு தேற்றிக்கொண்டு, மீதமாயிருந்த எழும்புக் கூடுகளை எரிக்கத் தொடங்கினோம். பாமாவின் தாயை எப்படி நாங்கள் பார்க்கப் போகிறோம், எதைச் சொல்லி அவரை ஆறுதல்ப் படுத்தப் போகிறோன் என்று யோசித்தூக்கொண்டிருந்தேன்.

எங்கள் வீட்டின் பின்புறமிருந்த தோட்டாப்பகுதி கிட்டத்தட்ட ஒரு காடாகவே மாறியிருந்தது. அதைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு.

நாங்கள் இருந்த அந்த ஒரு சில மணி நேரத்தில் நாங்கள் வளர்த்த இரு நாய்களையும் கண்டோம். அவை நன்றாகக் கொழுத்திருந்தன. அவற்றைப் பார்க்கும்போது இன்னும் பயம் அதிகமாகியது. 3 மாதங்களாக நாங்கள் இல்லை, அப்படியானால் அவை எதைச் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன?? இதற்கான பதிலை நான் ஊகிக்குமுன்னரே அப்பா கூறினார், இந்தத் தேசம் முழுதும் செத்துப்போன சனங்களின்ர உடம்புகள்தான் அதுகளுக்குச் சாப்பாடு.

எங்களின் வீட்டின்பின்புறனம் இராணுவம் செல் ஏவும் ஆயுதத்தை பாவித்திருந்தது தெரிந்தது. பச்சை நிறத்திலான ஒரு மீற்றர் நீளமான வெற்றுப் பிளாஸ்ரிக் குழாய்களும், மூடிகளும், அப்படியே இந்திய இராணுவம் பாவிக்கும் 7.62 மி.மீ துப்பாக்கிச் சன்னங்களுக்கான வெற்று ரவைப் பெட்டிகள் என்று எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் முழுவதும் பாவிக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள். எங்கள் தென்னம்பிள்ளைகளுக்கு நாங்கள் கட்டியிருந்த பெரிய பாத்தியை அரணாகப் பாவித்திருக்க வேணும். அந்த அரணுக்குப் பின்னாலிருந்து ஒரு சேலையும், பெண்கள் அணியும் உள் மேலாடையும், நீண்ட தலைமுடியும் கிடந்தன. என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிந்தது.

எங்கள் ஒழுங்கையால் வெளியே வந்தோம், பலாலி வீதியிலிருந்த முருகேசுத் தேத்தண்ணிக் கடைக்குள் எட்டிப் பார்த்தோம்(. முருகேசு ஒரு இந்தியர், பல வருடங்களாக கோண்டாவில் டிப்போவடியில் தேத்தண்ணிக்கடை வைத்திருந்தவர். ஆனால் அவர்கூட அந்த இரவில் எங்களுடன் அகதியாக யாழ்ப்பாணத்துக்கு வந்தது நினைவிருக்கிறது) உள்ப்புறம் இடிந்து போயிருக்க கடையின் நடுவே எழும்புகள். மனிதரா அல்லது விலங்கா என்று பார்க்கத் தோன்றவில்லை. பயத்தில் அங்கிருந்து விலகி வீடு நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.

Edited by ragunathan

தமிழ் பைத்தியத்தின் கருத்துக்களைப் பார்த்தபோது, இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களைப் பட்டியலிட்டு தமிழ்ப்பைத்தியத்தை எங்கள் பக்கம் வென்று விடவேண்டும் என்பதற்குப் பதில், எனக்குள் புதைந்திருந்தன என்று நானே நெடுங்காலம் மறந்திருந்த வசைச் சொற்கள் தான் 'தமிழ்ப்பைத்தியத்தைச் சார்ந்து' எழுந்தாடின. அதனால், பின்னூட்டம் இடுவதை இரு நாட்கள் ஒத்திப்போட்டு இன்று முயலுகிறேன். ஆனால் இதுவும் சரியாய் வரும் என்று தோன்றவில்லை.

இந்தியக் கழிவுகள் எங்கள் மண்ணில் செய்த எந்தப் பட்டியலையும் இங்கு இடப்போவதுமில்லை அவை சார்ந்து தமிழ்ப்பைத்தியத்திடமோ தமிழ்ப் பைத்தியம்போன்றவர்களிடமோ எந்த நியாயமும் கோரப்போவதுமில்லை. ஏனெனில் அத்தகை நியாயம் கோரல் என்பது இவர்களின் அபிப்பிராயத்தை நாங்கள் மதிப்பதாகி, இவர்களின் கைகளில் நாங்களே ஒரு தழையினைக் கொடுத்து அதன் மறுமுனையினை எங்கள் கழுத்தில் நாங்களே கட்டுவதுபோலாகும். அப்பிடித் தமிழ்ப் பைத்தியம் போன்றவர்களின் அங்கீகாரத்திற்காக நாங்கள் ஏங்கத் தொடங்கின், பின்னர் அவர்களின் பெறுமதிகளில் நின்றே அவர்களின் அங்கீகாரத்திற்காக நாங்கள் உழலவேண்டி இருக்கும். அதாவது, 'ஐயே நீ நீலச் சேட்டுப் போட்டிருக்கிறாய் என்று தமிழ்ப்பைத்தியம் சொன்னால். நீலம் போட்டால் என்ன என்று கேட்பதற்குப் பதில், இதுவா... இது நீலமே இல்லை உண்மையில செயான் என்று பின் நாங்கள் சொல்லத்தொடங்கிவிடுவோம்'. அப்பிடி நாங்கள் ஒரு ஈழ ஆதரவை இந்தியாவில் பெற்றால், அங்கிருப்பது ஆதரவு என்பதை நாமே அறியமுடியாதபடி அது எமக்கு அந்நியமானதாகவே படும். எனவே முதலில் என்னைப் பொறுத்தவரை தமிழ்ப்பைத்தியம் ஈழ ஆதரவாளனாய் இருப்பதை விட எதிரியாய் இருப்பது எமக்கு ஆதாயமானது.

அதுபோன்றே. ஜெயமோகன் மட்டுமல்ல, உலகின் ஏகப்பட்ட ஆளுமைகளும் அருவருப்பேற்றல்களையும் தத்தமது இருத்தல் நிமித்தம் உள்டக்கியே இருந்தார்கள் இருப்பார்கள். எமக்கு ஒரு மகிழ்வு கிடைத்தது என்பதற்காகக் காலாதிகாலத்திற்கும் நம் மண்டையைத் திறந்துபோட்டுக் குத்தகைக்கு விடும் நிலையில் எவரும் இருக்கப்போவதில்லை. ஒரு நூல் வேண்டாம், ஒற்றைப் பந்திக்குள் கூட களைகளாக இருக்கும் வரிகளைச் சிரித்தபடி நீக்குவது அத்தனை கடினமானதல்ல. ஆனால் நாங்கள் மட்டும் தெளிவாய் இருந்தால் போதாது எழுதிறவனிகு நோகிற இடத்தில நாம் கொஞ்சம் அடிக்கவும் வேண்டும் என்று உணர்வு பற்றிப் பேசின், மேற்படி ஜெயமோகனின் கருத்தைப் பார்த்தபோது, இவனின் நூல்களை இனிமேல் பணம் கொடுத்து வாங்குவதில்லை என்ற எண்ணமே உண்மையில் எனக்குள்ளும் முதலில் எழுந்தது. ஆனால் சற்றுச் சிந்திக்கையில் பின்வருவன தோன்றுகின்றன.

முதலாவது, ஒரு பறாறி கார் வைத்திருப்பவன் தன்னிடம் பறாறி உள்ளது என்று காட்டுவதற்காகவும் அப்பப்போ அதை ஓட்டத்தான் செய்வான். இரண்டாவது, இந்திய கழிவுகள் இலங்கையில் உத்தமர்களாகவே வாழ்ந்தார்கள் என்ற ரீதியில் ஒரு அப்பட்டமான ஒரு பொய்யினை ஜெயமோகன் எழுதும்போது, அந்தப் பொய்யால் உணர்ச்சிவசப்படுவதைக் காட்டிலும் (எமக்குத் தெரிந்த அப்பட்டமான உண்மையினை ஒருவன் பொய் என்று கூற அதை ஒரு கூட்டம் நம்பியலைவது உலகத்தில் எத்தினையோ முனைகளில் நாளாந்தம் நடக்கத் தான் செய்கிறது) கூறுபவன் எமது கவனம் பெற லாயக்கற்றவன் என்று உதாசீனம் செய்வது அவனிற்கு வலிகொடுக்கப்போதுமானது. மூன்றாவது, எம்மை நாம் வளர்த்துக்கொள்வதற்கு, ஜெயமோகனிடம் இருந்தும் எம்மால் எரிபொருள் பெற்றுக்கொள்ளமுடிகிறது என்றால், ஜெயமோகன் என்ற நிலத்தில் இருந்து எரிபொருளை எமக்குத் தேவையானவரை நாம் உறிஞ்சிக்கொள்ளவும் அதற்காகச் சில சில்லறைகளை விட்டெறியவும் நாம் பிந்நிற்கத் தேவயில்லை. மத்திய கிழக்கில் பெற்றோல் உறிஞ்சுபவன் எல்லாம் அந்த நிலத்தைக் காதலிக்கிறானா என்ன. வரும் வரை உறிஞ்சிவிட்டுச் சக்கையானதும் போட்டுவிடலாம். நாம் உறிஞ்சுவதால் ஊற்றைக் காட்டிலும் எம்மை நாம் பலமாக்கமுடியின், ஊற்றில் அப்பபப்போ வருகின்ற சகதிகளை நாம் சட்டை பண்ணத் தேவையில்லை.

ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் சார்ந்து இனிமேல் எந்தப் புகழ்ச்சியையும் வெளிப்படையாய்ச் செய்வதில்லை என்று மட்டும் சின்னதா ஒரு முடிவெடுத்திருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவாரங்களின் பின்னர் வீடுகளத் திரும்பிச் சென்று பார்க்க விடுகிறார்கள் என்று மக்கள் கதைப்பது தெரிந்தது. நானும் அப்பாவும் வீட்டை ஒருமுறை பார்த்து வருவது என்று நினைத்து சைக்கிளில் சென்றோம். கோண்டாவில்ச் சந்தியை அடையும்வரை உள்வீதிகளாலும், கொச்சொழுங்கைகளாலுமே சென்றுகொன்டிருந்தோம். எங்களைப்போல வீடு பார்க்க வந்தவர்கள் எவரையும் நாம் காணவில்லை. எங்களுக்குப் பயம் பற்றிக்கொண்டது. திரும்பிவிடலாம என்று நினைத்துக்கொண்டிருக்க எங்களை நோக்கித் துப்பாக்கிச் சன்னங்கள் பரந்து வரத் தொடங்கின. பலாலி வீதியால் ரோந்து சென்றுகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் வாகன அணியொன்று திடீரென்று நாங்கள் பதுங்க்யிருந்த இடத்திற்கருகில் நிற்க அதிலிருந்து இராணுவத்தினர் எங்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, சாவது உறுதியென்று நினைத்துவிட்டேன். எங்களிருவரையும் நிலத்தில் வீழ்ந்து படுக்குமாறு கத்தினார்கள். ஒருவன் எங்கலைக் காலால் எட்டி உதைந்தான். நாங்கள் சிவிலயன்கள் என்று மன்றாடினோம். அப்போதுதான் அந்தத் தள்பதிய நான் அவதானித்தேன். நாங்கள் பிடிபட்ட் இரவில் எங்களை இழுத்துவந்த அதே தளபதி. அவனொரு தமிழன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எங்களை அடையாளம் கண்டுகொண்ட அவன், எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கத்தினான். வீடு பார்க்கவென்று நாங்கள் கூற, முடியாது, திருப்பிப் போய்விடுங்கள் என்று மறுபடியும் கத்தினான். அப்பா ஆற்றாமை தாங்காமல் அழவும், சரி, உங்கள் உடயிருக்கு நான் உத்தரவாதமில்லை, உங்கள் வீடு இருக்கும் பகுதியில் இன்னும் புலிகள் இருக்கலாம், அங்கிருந்து எங்கள் மேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் திருப்பித் தாக்குவோம், உங்களைப்பற்றிக் கவலைப்பட முடியாது என்று கூறிவிட்டு, கோண்டாவில் சந்தியிலிருக்கும் இராணுவ முகாம் தளபதியிடம் இரு சிவிலியன்கள் வருகிறார்கள் என்று வோக்கியில் கூறிவிட்டு திருநெல்வேலிப் பக்கமாக அவனது ஜீப் நகர்ந்தது.

-----

இந்தியன் அமைதிப்படை வந்த காலத்தில்... பலர் நல்லூர் கோவிலுக்கு அருகில்... தஞ்சம் புகுந்திருந்த வேளையில்... காயம் பட்டவர்கள் இறந்த போதும்.... புதைக்கப்பட்டதும் நல்லூர் கோவில் அருகில் தான். ஈழத்து போராளிகளைத் தவிர, மற்றவர்களை... புதைப்பதில்லை. எரிப்பது. நல்லூரில் சனம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று... இந்தியன் ஆமியை பார்த்து... ஓடி வரும் போது... என்னத்தை எரிக்கும், விறகையும்... எடுத்து வர முடியுமா? ரகு, தொடருங்கள்.....

தமிழக ரெஜிமென்டை சேர்ந்த, தமிழ் பேசும் இராணுவத்தினர்... எமக்கு செய்த உதவிகளை... மறக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் சார்ந்து இனிமேல் எந்தப் புகழ்ச்சியையும் வெளிப்படையாய்ச் செய்வதில்லை என்று மட்டும் சின்னதா ஒரு முடிவெடுத்திருக்கிறன்.

தமிழர்களின் வேதனைமேல் நின்று அவர் விட்ட...........?

இது முதல் பறி கொடுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஒழுங்கையால் வெளியே வந்தோம், பலாலி வீதியிலிருந்த முருகேசுத் தேத்தண்ணிக் கடைக்குள் எட்டிப் பார்த்தோம்(. முருகேசு ஒரு இந்தியர், பல வருடங்களாக கோண்டாவில் டிப்போவடியில் தேத்தண்ணிக்கடை வைத்திருந்தவர்.

இவரது குடும்பத்தினர் இப்போது தமிழகத்தில் வசிக்கிறார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இருந்த அந்த ஒரு சில மணி நேரத்தில் நாங்கள் வளர்த்த இரு நாய்களையும் கண்டோம். அவை நன்றாகக் கொழுத்திருந்தன. அவற்றைப் பார்க்கும்போது இன்னும் பயம் அதிகமாகியது. 3 மாதங்களாக நாங்கள் இல்லை, அப்படியானால் அவை எதைச் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன?? இதற்கான பதிலை நான் ஊகிக்குமுன்னரே அப்பா கூறினார், இந்தத் தேசம் முழுதும் செத்துப்போன சனங்களின்ர உடம்புகள்தான் அதுகளுக்குச் சாப்பாடு.

தயவு செய்து எவரும் நாம் இழந்தவற்றை மலினப்படுத்தாதீர்கள்.

இந்த நிலை எவருக்கும் வரக்கூடது என்பதுதான் எமது பிரார்த்தனை.

ஆனால் இதற்கு ஏவியவனை.......???

ரகுநாதன் எழுதிய இடங்கள் பெயர்கள் எல்லாம் எனக்கு மிக பரீட்சயமானவை.எனது அப்பாவும் அங்கிருந்துதான் உள்ள இடமெல்லாம் சுற்றி பின் நல்லூர் போனார் .அப்பாவிடம் இப்போ தொலைபேசியில் கதைத்தேன் .பாமா -தங்கராசா மாஸ்டரின் மகள்.தங்கராசா மாஸ்டர் கனடாவில் தான் இருக்கின்றார் .தேனிர் கடை இந்தியாக்கார முருகேசுவின் உதவியால் பலர் நல்லூருக்கு போனதாக சொன்னார் .சயிக்கில் கடை கிளியன் உட்பட பலர் .

இந்தியன் ஆமி ஆட்களை கொண்டது சரி ,பாலியல் வல்லுறவு பற்றி கேட்டேன் ,பேசத் தொடங்கிவிட்டார் .அந்த நாய்கள் செய்யாத வேலை இல்லை என்று .கோண்டாவில் கேணியடி சீனிக்குட்டியின் வீட்டில் பத்து ,பன்னிரண்டு பெண்களை ஒரு கிழமைக்கு மேலாக தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர் அவர்கள் வெளியே வந்து உயிர் போனாலும் பரவாயில்லை என்று புரோக்டர் சண்முகராஜாவின்(இவர் சமாதான நீதவானும் ஆவார் ) உதவியுடன் வீரகேசரி பத்திரிகைக்கு எழுதி கொடுத்து ஒரு நாள் வெளியிட்டார்களாம்.அடுத்த நாள் இந்தியன் ஆமி சண்முகராஜாவின் வீட்டில் போய் மறுப்பறிக்கை எழுதி கொடுக்க வற்புறுத்த அவர் எழுதிகொடுத்து விட்டு அடுத்த நாளே கொழும்பிற்கு போய்விட்டாராம் .

நான் லண்டனுக்கு வரமுதல் ஒரு மாதம் அந்த சரவணபவனின் மரக்காலையில் திறந்தவுடன் வேலை செய்தேன் (வேலை செய்பவர்களை கண்காணிப்பதுதான் என் வேலை)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் என் ஊரில் நிகழ்ந்த ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவத்தின் சாட்சியாக எனது பதிவொன்றை எப்போதோ எழுதியிருந்தேன். இப்போது இங்கு மீள் பதிவிடுகிறேன்.

அன்றழுத குரல் என் அயல்வீட்டுக் குரலல்லவா....!

'ஐயோ....அம்மா....ஆராவது வாங்கோவன்....."

இன்றும் நினைவகலா அழுகையது.

கோடிசுற்றி ஓடியோடி

கும்பிட்ட தெய்வமேதும் - அவள்

துயரில் குரல்கூட எழுப்பவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாய்

உடல் துளாவி உடற்சட்டை கிழித்து

மரணத்தின் வாசலில் துடிதுடிக்க

மாறிமாறி அவள் உடல் கிழிபட்ட

துயர் சொல்ல எனக்குத் துணிச்சலில்லை.

ஊர் எல்லை வரையிலுமாய் அந்தக்குரல்

இப்பவும் தான் நினைவிருக்கு.

.....! அவள் குரல்தான் அது.

புரிந்திருந்தும் காப்பாற்ற

ஒரு புழுவும் அசையவில்லை.

இருபதுக்கும் மேலானவர்கள்

ஒருத்தியின் உடல் உழுத

உண்மை புரியாது இன்னும்

அவர்களை நேசிக்கும்படியான

வார்த்தைப் பூச்சுக்கள்...

எப்படித்தான் ஜீரணிக்க...!

அன்றழுத குரல் எந்தன்

அயல்வீட்டின் குரலல்லவா....!

மூச்சிழந்து போன பின்னும்

மும்பைக்காரச் சிப்பாயின்

கோரம் அடங்காமல்

மீண்டும்....மீண்டும்....

அடுத்தடுத்துக் கொடியவரின் வெறி

அவள் உடலில்.....

வேலியெங்கும் துப்பாக்கிக் கூலிகளின்

வாயெங்கும் வீணி வடிந்தபடி....

படுகிழவியென்றாலும் பறவாயில்லை

பாவியரின் கண்ணெல்லாம் அதுவாக....

வல்லுறவு கொண்ட துயர்

வடிக்கவா முடியும் வார்த்தைக்குள். sad.gif

இந்திய இராணுவ கால நினைவுகள் எப்போதோ எழுதியது இப்போது இங்கு மீள்பதிவிடுகிறேன்

நெஞ்சிலின்றும் ரணமாக....

துயர் எங்கள் வீதிகளில் நடந்ததை

து}ரதேசச் சொந்தங்களே

அறியாக் கொடுமையெங்கள்

வீதிகளில்....வீடுகளில்....கோவில்களில்....

ஆழுக்காள் அழுதபடி...

ஊருக்குள் எங்கள் துயர்....

சிங்களத்தான் தந்த கொடும் துயர் ஆற முன்னாலே

இந்தியராய்....எங்கள்....உறவினராய்....

வந்தவரின் வாகனச் சில்லுக்குள்....

ஆட்லறி ஷெல்லுக்குள்....

அடுத்து வந்த இயந்திரத் துப்பாக்கிக்குள்...

அழிபட்ட துயர் சொல்லி ஆறவொரு நாதியின்றி

அழிபட்டோம்....,அடிபட்டோம்...,

உலகறிந்து வரவில்லை - எந்த

உலகநாடும் வாய் திறக்கவில்லை.

நாங்களே செத்தோம்....,

நாங்களே அழுதோம்....,

நாங்களே அழிந்தோம்....,

நமக்குள்ளே துயர்மண்டி

நம் துயர் நமக்குள்ளே புதையுண்டு....

நாங்கள் வாழ்ந்த காலம்

நெஞ்சிலின்றும் ரணமாக....

எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?

நீழும் இரவின் கருமைக்குள்

கண்ணெங்கும் விளக்காக....

அச்சத்தின் விரல்களுக்குள்

ஆவிகள் நசிபட

வேலி பிரியும்..., நாய் குரைக்கும்....,

விதம் விதமாய்

ஒலியெழும் திசைபார்த்து

விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு

உத்தரவாதம் தராத இரவுகள்.

வேட்டதிரும்....,

எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ....

அவர்களுக்கு இரையாக....

இருளோடு ஒரு சாவு உறுதியாய்....

'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள்

வீதியுலா வெளிக்கிடுவர்.

புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி

ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர்.

சந்திகளில் அரணமைத்து

சாவிழுத்தக் காத்திருக்கும்

மந்திகளின் மணம் உணரும்

மூக்குத் துவாரங்கள் - உயிர்

மூச்சையே அதிர்விக்கும்.

வீதியில் தேவைகட்காய்

விரையும் மனிதரின்

உயிர்களில் வலியெடுக்கும்....

பெண்களைக்காணும் பனைமரத்து

அரணிருக்கும் பேய்களின்

இடையிருக்கும் உடை நழுவ

விரல் நீட்டி அழைக்கும்

விழுங்கிடும் பார்வைகளில்

உயிர் மூச்சே நின்றுவிடும்....,

பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள்

பற்களின் அடையாளங்களுடன்

பனைவடிலிப் பற்றையில் பிணமாகும்.

இப்படித்தான் அவர் வருகை

சாவையும் , கண்ணீரையும் ,

உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும்

தந்து போன உண்மைகள்.

எதை மறக்க....? எதை நினைக்க.....?

என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க

எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?

இந்தத் திரியின் இணைப்பை எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவிற்குக் கீழ் சமர்பித்தால் நல்லது.

இராணுவத்தின் ஒருபக்கச் சார்பான கருத்துக்களைப் பதிவிடும் அதே வேளை, அந்த இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் வெளியிட வேண்டும்.

பதிவிட முயன்ற பொழுது 'Sorry, the comment form is closed at this time ' எனும் பதில் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ... அவர் சொன்ன,

நடந்த, "துன்பியல் நிகழ்வு" என்பது நியாயமானது தானே...

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் எழுதிய இடங்கள் பெயர்கள் எல்லாம் எனக்கு மிக பரீட்சயமானவை.எனது அப்பாவும் அங்கிருந்துதான் உள்ள இடமெல்லாம் சுற்றி பின் நல்லூர் போனார் .அப்பாவிடம் இப்போ தொலைபேசியில் கதைத்தேன் .பாமா -தங்கராசா மாஸ்டரின் மகள்.தங்கராசா மாஸ்டர் கனடாவில் தான் இருக்கின்றார் .தேனிர் கடை இந்தியாக்கார முருகேசுவின் உதவியால் பலர் நல்லூருக்கு போனதாக சொன்னார் .சயிக்கில் கடை கிளியன் உட்பட பலர் .

இந்தியன் ஆமி ஆட்களை கொண்டது சரி ,பாலியல் வல்லுறவு பற்றி கேட்டேன் ,பேசத் தொடங்கிவிட்டார் .அந்த நாய்கள் செய்யாத வேலை இல்லை என்று .கோண்டாவில் கேணியடி சீனிக்குட்டியின் வீட்டில் பத்து ,பன்னிரண்டு பெண்களை ஒரு கிழமைக்கு மேலாக தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர் அவர்கள் வெளியே வந்து உயிர் போனாலும் பரவாயில்லை என்று புரோக்டர் சண்முகராஜாவின்(இவர் சமாதான நீதவானும் ஆவார் ) உதவியுடன் வீரகேசரி பத்திரிகைக்கு எழுதி கொடுத்து ஒரு நாள் வெளியிட்டார்களாம்.அடுத்த நாள் இந்தியன் ஆமி சண்முகராஜாவின் வீட்டில் போய் மறுப்பறிக்கை எழுதி கொடுக்க வற்புறுத்த அவர் எழுதிகொடுத்து விட்டு அடுத்த நாளே கொழும்பிற்கு போய்விட்டாராம் .

நான் லண்டனுக்கு வரமுதல் ஒரு மாதம் அந்த சரவணபவனின் மரக்காலையில் திறந்தவுடன் வேலை செய்தேன் (வேலை செய்பவர்களை கண்காணிப்பதுதான் என் வேலை)

சயிக்கிள்கடைக் கிளியன் கூட எங்களுடன் அன்றிருந்தார். பிறகு என்ன ஆனாரோ தெரியவில்லை. தங்கராசா வாத்தியாரின் மகள்தான் பாமா. அவரின் இன்னும் இரு மகள்களான கெளரி மற்றும் அப்பு, மகன் சிவா ஆகியோர் தாய் தந்தையருடன் கனடாவில் வசிக்கிறார்கள்.

அர்ஜுன், நீங்கள் கோண்டாவிலா?? 1987 இல் எங்கிருந்தீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள்கடை கிளியன் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே??

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர் அல்லது அவரது மனைவி முல்லைத்தீவாக இருக்கலாம். டிப்போவுக்கு முன்னால் பலவருடங்களாக சயிக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர். அவரது சயிக்கிள் கடைக்குப் பின்னால் கிளிநொச்சி, முல்லைத்தீவிலிருந்து வரும் பஸ்களில் கொண்டுவரப்படும் மான், மரை இறைச்சிகள் பங்கிடப்படும். அந்த ஊர்முழுவதும் தெரிந்த ஒருவர்.

1987 இன் பின்னரும் அவரைக் கண்டதாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு..

வணக்கம் இன்னுமொருவன்,

ஜெயமோகனின் நுல்களை ஏன் உங்களால் புறக்கணிப்பு செய்யமுடியவில்லை என்பதை விரிவாகக்கூற முடியுமா?

நான் ஜெயமோகனின் எதுவித படைப்புக்களையாவது வாசித்து ஞாபகம் இல்லை.

ஜெயமோகனின் படைப்புக்களை புறக்கணிப்பு செய்தால் நமக்கு உண்மையில் ஏதாவது இழப்பு உள்ளதா?

ஒரு கருத்தை மட்டும் வைத்து ஒருவரின் ஆளுமையை எடைபோடமுடியாதாயினும், பலருக்கும் தெரிந்துள்ள ஓர் விடயத்தை இப்படி நேர்மையின்றி அணுகியுள்ளதால் அவர் ஆளுமைபற்றி புரிந்துகொள்ளமுடியவில்லை.

சயிக்கிள்கடைக் கிளியன் கூட எங்களுடன் அன்றிருந்தார். பிறகு என்ன ஆனாரோ தெரியவில்லை. தங்கராசா வாத்தியாரின் மகள்தான் பாமா. அவரின் இன்னும் இரு மகள்களான கெளரி மற்றும் அப்பு, மகன் சிவா ஆகியோர் தாய் தந்தையருடன் கனடாவில் வசிக்கிறார்கள்.

அர்ஜுன், நீங்கள் கோண்டாவிலா?? 1987 இல் எங்கிருந்தீர்கள்??

ரகுநாதன் , நான் 81 இல் நாட்டைவிட்டு வெளிக்கிட்டு விட்டேன் .இன்னும் ஒரு வரி எழுதினால் யார் என்று பிடித்துவிடுவீர்கள் .கிளியன் இப்போ எங்கள் உடைந்து போன எனது அக்கா வீட்டில் தான் இருக்கின்றார் .2005 இல் இலங்கை போகும் போது அக்கா வீட்டை பார்க்க போக அவர் அங்கு இருந்தார் .

கசியஸ் கிளே என்று எழுதிய கதையில்? வாமாசுக்கு அருகில் இருந்த எமது தோட்டத்தை பற்றி எழுதியிருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சயிக்கிள்கடைக் கிளியன் கூட எங்களுடன் அன்றிருந்தார். பிறகு என்ன ஆனாரோ தெரியவில்லை. தங்கராசா வாத்தியாரின் மகள்தான் பாமா. அவரின் இன்னும் இரு மகள்களான கெளரி மற்றும் அப்பு, மகன் சிவா ஆகியோர் தாய் தந்தையருடன் கனடாவில் வசிக்கிறார்கள்.

அர்ஜுன், நீங்கள் கோண்டாவிலா?? 1987 இல் எங்கிருந்தீர்கள்??

ரகு,

பாமா எனது துணைவரின் மச்சாள் ஆவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.