Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் - லண்டன் ஹோட்டலில் விதிமுறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chinese-res-180512-150.JPG

பிரிட்டனில் உள்ள சீன ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது, சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும், என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு, உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் மீதம் வைத்த பலரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதால், அவர்கள் இந்த ஹோட்டல் நிர்வாகத்தை திட்டி விட்டு செல்கின்றனர். இருப்பினும் தாங்கள் கொண்ட கொள்கையை மாற்றி கொள்ள போவதில்லை என, ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

http://www.seithy.co...&language=tamil

Not impressed: Beverley Clark, with son Sam and niece Toni was told to pay extra after leaving two onion rings, a piece of prawn toast, and a spring roll

article-0-131F21E6000005DC-503_468x655.jpg

அளவாகப் போட்டுச் சாபிட்டால் ஏன் இந்தப் பிரச்சனை??

கெடுதியில அள்ளிப் போட்டு பிறகு வீணாக்கிறதுக்குத் தானே அபராதம்?

article-0-131F2097000005DC-184_468x599.jpg

http://www.dailymail...o=feeds-newsxml

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த உணவு கண்றாவியா இருந்தால்?? :blink::unsure::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த உணவு கண்றாவியா இருந்தால்?? :blink::unsure::rolleyes:

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து வாந்தி எடுக்கவேண்டியதுதான் :D:)

இதைதான் சொல்வதோ வினையை விலை கொடுத்து வாங்குவதென்று ......... :lol: :)

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதை சூழ்நிலையில் வாடிக்கையாளர்களைத்தேடிப்பிடிப்பதே பெரும் விடயம். இதில் வரும் வாடிக்கையாளர்களிடமும் வாலாட்ட முடியுமா?

சும்மா ஒரு பெருந்தகைக்கு எழுதி வைப்பதே வாடிக்கையாளர்களைக்குறைக்கக்கூடும்.

இங்கேயும் எழுதி வைத்துள்ளனர். யாரும் கணக்கெடுத்ததாக தெரியவில்லை.

ஒருவராவது திருந்தினால் வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு அவ்வளவு ருசியாகவும்,தரமாகவும் உள்ளதால் தான் அவ்வளவு தைரியமாக அபராதம் விதிக்கிறார்கள் என நினைக்கிறேன் :lol::D:lol:

பொதுவாக/ சிலநேரம் "buffet" அல்லது "all you can eat" என்ற வரையறையுடன் நிலையான குறித்த விலையில் உணவு பரிமாறும் உணவகங்களில் உண்ணா து விடும் உணவுகளுக்கு பணம் அறவிடுவார்கள். அது ஏற்புடையது என நினைக்கிறேன். அங்கு தேவையான உணவை குறைந்தது 2 மணிநேரம் இருந்து உண்ண முடியும். இப்படியான உணவகங்கள் சாப்பாட்டு ராமர்களை கவரும் அதே நேரம் நிலையான ஒரு விலையில் கட்டுப்பாற்று உண்ணலாம். நிலையன விலையில் எவ்வளவும் உண்ணலாம் எனும் பொது, வாடிக்கையாளர் தமது தட்டுகளில் எடுத்து சென்று உண்ணாது விடும் உணவு விரயமாவதுடன் உணவகத்துக்கும் நட்டத்தை கொண்டுவரும்.

ஒரு சதமும் செலவழிக்காமல் இருபது பவுண்ஸ்களை எடுத்துக் கொண்டு, தங்கள் வியாபாரத்திற்கு பெரிய விளம்பரமே செய்துள்ளார்கள். இதுதான் அவர்களின் வெற்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

<p>பொதுவாக இப்படியான இடங்களில் உணவு அருந்த செல்பவர்கள் அளவு கணக்கு இன்றித் தானே சாப்பாடுகளை வீணாக்குகிறார்கள்..அளவு,நேர விரயம் போன்வற்றைக் கணக்கு பண்ணித் தான் 20 பவுண்ஸ் சார்ஜ் பண்ணுகிறார்களோ தெரியாது..எல்லாம் நல்லதுக்கு தான் என்று நினைத்துக் கொள்வோம்.

நான்கு ,ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைக்கிறன்..ஒருவரை நீரளிவு நோய் தாக்கியதும் வைத்திய பரிசோதனையின் பின், நீரளிவு நோயாளிகள் எவ்வகையான சாப்பாடுகள் எடுக்கவேணும்  மற்றும் மருந்துகளின் பாவனை பற்றிய வகுப்புக்கு குடும்ப வைத்தியர் அனுப்பி இருந்தார்..என்ட கஸ்ர காலம் நான் அங்கு அன்று வந்திருந்த வெள்ளை இன ஆசிரியைக்கு அன்றைய தினம் வந்திருந்த தமிழ்  நோயாளிகளுக்கு பெயர்ப்பாளராக சென்று இருந்தேன்..

ஒரு வயதானவரின் சாப்பாட்டு விபரங்களை அறிந்து விட்டு அந்த வெள்ளைப் பெண் என்னிடம் கேட்ட கேள்வி உங்கள் நாட்டவர்கள்  mandarin லயா சாப்பிடுகிறவர்கள் என்பதாகும்.பின் பதிலையும் அந்தப் பெண்ணே சொன்னார் தான் கேட்டது பற்றி நீர்  தப்பாக எடுத்துக் கொள்ளாதியும்.பொதுவாக mandarin போன்ற இடங்களுக்கு போனால் நிறையவே வருத்தம் வருவதற்கு உரிய சாப்பாடுகள் தான் செய்து வைச்சு இருப்பார்கள்..அவற்றை சாப்பிட்டால் இப்படித் கஸ்ரம் தான் என்றார். அது மட்டுமில்லை அங்கே நிறையவே இந்திய,இலங்கை மக்களைத் தான் காணக் கூடியதாகவும் இருக்கும் என்றார்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன், ஆரும் மிச்சம் வைச்ச சாப்பாட்டை... வித்து, காசாக்குவதில் கில்லாடி.

எமது நன்மைக்கே.... சொல்கிறான். மிச்சம் வைக்காமல்... சாப்பிடுங்கப்பா.eating.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகை வியாபாரத்தந்திரம்,

இந்த விளம்பரத்தை பார்த்த நுகர்வோர் ஒருதடவை சென்றுதான் பார்ப்போம் என்று செல்லும்பொழுது அவர்கள் பின்னர் வாடிக்கை நுகர்வோராக மாற சந்தர்ப்பம் உள்ளது .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.