Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஓல்டு ஈஸ் கோல்டு' அல்ல... பிளாட்டினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மிகவும் கவர்ந்த பாடல், இது!

சவுகார் ஜானகியின் முகத்திலேயே 'சோகம்" என்று எழுதியிருக்கின்றது!

http://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ&feature=relmfu

பாட்டின் வரிகள் மிகவும் பிடித்திருக்கின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் துணை, இவ்வாறு அமைய வேண்டும்!

யாழ் களப் பிஞ்சுகளுக்காக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் துணை, இவ்வாறு அமைய வேண்டும்!

அட, இன்னமுமா பிரம்மச்சாரி 'ஆசாமி'யாக இருக்கிறீர்கள்? :huh:

சீக்கிரம் நல்ல, வல்ல துணை அமைய 'காட்டுப்புலம்' ஆதிவைரவர் அருள் கிட்டட்டும்! :)

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..

வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்..

குழலெடுப்பான் பாட்டிசைப்பான்..

வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்..

[size=5]ராஜ வன்னியன் அண்ணா, அருமையான ஒரு திரி , வாழ்கையை எவ்வளவு மிஸ் பண்ணுறோம் என்று இப்பதான் விளங்குது . [/size]

[size=5]அழகான பாடல்கள் , அழகான நிலா கால இரவுகள் , நாணத்தையும் , நளினத்தையும் காட்டும் அழகான பெண்கள் .[/size]

[size=5]கடவுள் அழகாதான் எல்லாத்தையும் படைசிருக்கிறார். [/size]

[size=5]ஏன் அந்த கால பெண்களிடம் இருந்து அழகும், நாணமும், வெட்கமும் இந்த கால பெண்களுக்கு ஜீன் வளி கடத்தப்படஇல்லை என்று நினைக்க ஆச்சரியமா தான் கிடக்கு .[/size]

[size=5]நல்ல பாடல்களை இணையுங்கள் .[/size]

முதலிரவு இப்படி அமையட்டும்.

ஐயோ ஐயோஅந்தக் காலத்திலேயே என்னமா காதல் உணர்வுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

  • கருத்துக்கள உறவுகள்

தொடுவதென்ன... தென்றலோ மலர்களோ..?

பனியில் வந்த துளிகளோ... கனிகளோ..?

உடலெங்கும் குளிராவதென்ன..!

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன..!!

.

நான் மிகவும் ரசித்துக் கேட்கும் பாடல்.. :rolleyes: இணைப்பிற்கு நன்றிகள் ராஜவன்னியன் அண்ணா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ஈஸ், குட்டி, விசு, தமிழ் சிறி, தமிழ் அரசு, ஈசன், புங்கை, நிலாமதி, கிஸ்ஸன், சுடலை, தப்பிலி மற்றும் இசை.. :icon_idea: .

பழைய பாடல்களுக்கு வரவேற்பிருக்குமோவென தயக்கத்துடனே இத்திரியை ஆரம்பித்தேன்..

பரவாயில்லை, நம் இளசுகளும் பழசை மறக்கவில்லை.. சிறப்பென்றால் ஏற்க தயங்கவும் இல்லை...! :rolleyes:

அடுத்து வருவது, ஆடிப்பெருக்கால்(1962) மனதை அடித்துப்போடும் பாடல்..

ஜெமினி, சரோஜா தேவி, டி.ஆர்.ம்காலிங்கம் ஆகியோர் மெளன சாட்சிகளாய் விழிக்க, பின்னணியில் இசைப்பது..சுசீலா & ஏ.எம்.ராஜாவின் மிக அருமையான பாடல்...

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்..

இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்..

கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் ..

இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் ..

ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்..

அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்..

காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்..

தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்..

பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்..

தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்..

முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே..!

மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே..!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

:wub: :wub: :wub:

ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த சுவை ததும்பும் வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பச்சை கிளிக்கொரு

செவ்வந்திப்பூவில் தொட்டிலைக்கட்டி வைத்தேன்

அதில் பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகுடன் மெல்லென இட்டு வைத்தேன்

யாராரோ வந்து தாலாட்ட

இன்னும் யாராரோ வந்து பாராட்ட......

"கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை"- எப்படி ஒரு கவிஞன் சொல்லலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னி நெஞ்சை நக்கீட்டீங்க போங்க

எனது பங்கிற்கு

கொடியில் இரண்டு மலருண்டு

மலரின் பனியின் துளியுண்டு

பனியில் கதிரவன் ஒளியுண்டு

எதிலும் புதுமை மணமுண்டு

கோடைவரும் வெயில் வரும்

கோடைக்குப் பின்னே மழையும் வரும்

கோபம் வரும் வேகம் வரும்

கோபத்தின் பின்னே குணமும் வரும்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பவழவாயில் புன்னகை சிந்தி

கோலமயில் போல வருவாயே

கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

...

அடுத்து வருவது, ஆடிப்பெருக்கால்(1962) மனதை அடித்துப்போடும் பாடல்..

ஜெமினி, சரோஜா தேவி, டி.ஆர்.ம்காலிங்கம் ஆகியோர் மெளன சாட்சிகளாய் விழிக்க, பின்னணியில் இசைப்பது..சுசீலா & ஏ.எம்.ராஜாவின் மிக அருமையான பாடல்...

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்..

இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்..

கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் ..

இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் ..

ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்..

அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்..

காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்..

தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்..

பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்..

தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்..

முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே..!

மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே..!

அருமையான வரிகள்...

----------

முணுமுணுக்கும் பழைய பாடல்களில் இதுவும் ஒன்று... :wub:

இரண்டு குயில்களின் இசை விருந்தோ!!!! :D

திரைப் படம்: தேன் நிலவு (1961)

இசை: A M ராஜா

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

இயக்கம்: ஸ்ரீதர்

நடிப்பு: ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ...

அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ...

புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளிக் கொண்டு போகலாகுமோ.. நீயும் கள்வனாக மாறலாகுமா..

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா...சிறு மின்னலிடை பூவை தாங்குமா...

பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா...சிறு மின்னலிடை பூவை தாங்குமா...

மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்... அதில் அந்தி பகல் பள்ளிக் கொள்ளுவேன்...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.. "சின்னச்சின்ன கண்ணிலே.."

பாவம் ஏம்.எம் ராஜா. நிறைவான குரல்; திறமையான இசையமைப்பாளர்.. காலன் பாதியிலேயே கொண்டு சென்றுவிட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னி நெஞ்சை நக்கீட்டீங்க போங்க

நன்றி ஈழப்பிரியன் - தேன் போன்ற பாடல்களில் நக்கி நனைவது தப்பில்லை..கண்டியளோ!

திட்டப் பணிக்காக, எண்பதுகளின் ஆரம்பத்தில் நாகையில் பணியாற்றியபோது, இரவில் நாகை கடற்கரை மணலில் வானொலியை அருகில் வைத்துக்கொண்டு, அந்த ஏகாந்தத்தில் "இரவின் மடியில்" கேட்டபோது மனதில் மிக ஆழமாக பதிந்த பாடல்கள் இவை:

(இங்கே மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்..இலங்கை வானொலி அறிவிப்பாளர் "ராஜேஸ்வரி சண்முகத்தின்" இனிமையான குரல்வள தொகுப்பு)

ஒன்று "தேன் நிலவு" படத்தில் ஏ.எம்.ராஜா இசையில், பி.சுசீலா பாடியது..

மலரே மலரே தெரியாதோ..

மனதில் நிலைமை புரியாதோ..

எனை நீ அறிவாய்.. உனை நான் அறிவேன்..

காதலர் உன்னை காண வந்தால்

நிலையை சொல்வாயோ..என் கதையை சொல்வாயோ..

காட்சிகள் மாறும் நாடகம் போலே

காலமும் மாறாதோ…. காலமும் மாறாதோ

காலங்களாலே வாழ்க்கை செல்லும்

பாதையும் மாறாதோ…. பாதையும் மாறாதோ

யார் மாறிய போதும் பாவை எந்தன்

இதயம் மாறாது….. என் நிலையும் மாறாது

மற்றொன்று, 1961ல் வெளிவந்த 'அக்பர்' படத்தில் நொவ்ஷத் இசையில் பி.சுசீலா பாடியது

கனவு கண்ட காதல், கதை கண்ணீராச்சே..

நிலா வீசும் வானில், மழை சூழலாச்சே..

முன்பே எண்ணிப் பாராமல்..

நெஞ்சம் ஈந்திட்டேனே!

எந்தன் ஆசையே இன்று

என்னைக் கொல்லலாச்சே!

உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே..

..

  • கருத்துக்கள உறவுகள்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே

சங்க தமிழோ மதுரையிலே

பிள்ளை தமிழோ மழலையிலே

நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது

கொஞ்சும் இசையை பழகும் பொழுது

துள்ளும் இளமை பருவம் நமது

தொட்டு தழுவும் சுகமோ புதிது

கண் பார்வையே உன் புதுப்பாடலோ

பொன் வீணையே உன் பூமேனியோ

பிள்ளை பருவம் தாய் மடியில்

பேசும் பருவம் தமிழ் மடியில்

கன்னி பருவம் என் வடிவில்

காலம் முழுதும் உன் மடியில்

பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய

தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

தன்னந்தனிமை தணல் போல் கொதிக்க

தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அழைக்க

பொன்னோவியம் என் மனமேடையில்

சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கதையாக படிப்போமா

http://www.youtube.com/watch?v=psge_FCFjVA

  • கருத்துக்கள உறவுகள்

<p>ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...

உறவும் முறைதானா...

வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ

வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மீதே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடியலைந்து காதலில் விழுந்து

நாட்டை இழந்தவர் பலருண்டு

பமன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

பாடும் பறவை கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்.http://www.youtube.com/watch?v=-NG_aUnE-94

Edited by eelapirean

<p>ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...

உறவும் முறைதானா...

வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ

வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மீதே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடியலைந்து காதலில் விழுந்து

நாட்டை இழந்தவர் பலருண்டு

பமன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

பாடும் பறவை கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்.http://www.youtube.com/watch?v=-NG_aUnE-94

My All Time Favorite Song

அருமையான பாடல்கள் ... இரவின் மடியினிலே ... மீண்டும் 82, 83 காலப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றிகள் ...

... அப்போது கேட்டு மகிழ்ந்த மனதை விட்டகழாத இன்னொரு பாடல் .. சுசீலாவிற்கு அகில இந்திய சிறந்த பாடகி விருதை அள்ளித்தந்த பாடல் ...

[media=]

Edited by Nellaiyan

படம்: தேன்நிலவு

பாடியவர்கள்: A M ராஜா & P சுசீலா

இசை: A M ராஜா

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

தந்தை பிரித்து பிரித்து வைப்பதினால் காதல் மாறுமா

மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

மலர் முடிப்போம் மணம் பெருவோம் மாலை சூடுவோம்

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

----

படம்: மகாதேவி (1957)

பாடியவர்கள்: AM ராஜா & P சுசீலா

[media=]http://www.youtube.com/watch?v=KrNJ2RJq13g&feature=related

கண் மூடும் வேளையிலும்

கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின்

விலை இந்த உலகே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்

கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகை

சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்

சின்ன சின்ன சிட்டு போல

வண்ணம் மின்னும் மேனி

கண்டு கண்டு நின்று நின்று

கொண்ட இன்பம் கோடி

(கண் மூடும்)

கண் பார்க்கும் நெறியோடு

வளர்கின்ற உறவில்

அன்பாகும் துணையாலே

பொன் வண்ணம் தோன்றும்

எண்ணி எண்ணி பார்க்கும் போதும்

இன்ப ராகம் பாடும்

கொஞ்ச நேரம் பிரிந்த போதும்

எங்கே என்று தேடும் (கண் மூடும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இது சத்தியம்' (1963) மற்றும் 'இதயத்தில் நீ! ' (1963) ஆகிய இரு படங்களில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள்

சத்தியம்.. இது சத்தியம்!

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை..

சொல்லப் போவது யாவதும் உண்மை!

சத்தியம்.. இது சத்தியம்!

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?

தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன?

விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன?

உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டுவிட்டால் - அதில்

அடுத்த கதை என்ன? அதில் அடுத்த கதை என்ன?

பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா..

பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா..

நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா - நல்ல

நேர்மையிலும், தன் வேர்வையிலும், தினம் வாழ்பவன் தெய்வமடா!

யார் சிரித்தால் என்ன? இங்கு யார் அழுதால் என்ன?

தெரிவது என்றும் தெரிய வரும்..மறைவது என்றும் மறைந்து விடும்!

யார் சிரித்தால் என்ன?.. இங்கு யார் அழுதால் என்ன?

.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நீங்கிடாத துன்பம் பெருகுதே!

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே

உடைந்து போன சிலை ஆனதே - நான்

அடைந்த செல்வம் கொள்ளை போனதே

அமைதியின்றியே அலைய நேர்ந்ததே..

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனது மலர் கொடியிலே

எனது மலர் கையிலே

உனது நிலா வானிலே

எனது நிலா அருகிலே

கண் மயங்கிப் பயணம் போகும்

உனது தோணி கடலிலே!

காலம் பார்த்து வந்து சேரும்

எனது தோணி கரையிலே!

காற்றினாலும், மழையினாலும்,

எனது சொந்தம் மாறுமா?

காயுமா?

கனியுமா?

கையில் வந்து சேருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்ஸியம்மா 1955ல் வந்த படம்.ஜெமினி, சாவித்திரி, ரெங்காராவ்(My favorite actor), ஜமுனா, தங்கவேலு நடித்தது.

எழுதியவர்: சக்கரபாணி.

இசை எஸ். ராஜேஸ்வர ராவ்.

இயக்கம் எல்.வி. பிரசாத்.

தெலுங்கு, இந்தியில் 'மிஸ் மேரி' என்று வெளி வந்தது. ரெங்காராவுக்கு பதிலாக, ஓம் பிரகாஷ். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. அருமையான படம்.

எல்லா பாடல்களும் அருமை.. அதிலொன்று, நம் 'இரவின் மடியில்' அடிக்கடி ஒலிபரப்பாவது...

எனை ஆளும் மேரி மாதா.. துணை நீயே மேரி மாதா..!

என்றும் துணை நீயே மேரிமாதா..

பரிசுத்த ஆவியாலே, பரபுத்திரன் ஈன்ற தாயே..

பிரபு ஏசுநாதர் அருளால் புவியோரும் புனிதம் அடைந்தார்!

நெறி மாறி வந்ததாலே, நகைப்பானதே என் வாழ்வே..

கணமேனும் சாந்தி இல்லையே அனுதினமும் சோதியாதே!

எனை ஆளும் மேரி மாதா.. துணை நீயே, மேரிமாதா..!

என்றும் துணை நீயே, மேரிமாதா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வருவது என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் பாடல்.. இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இரவில் மெல்லிய வெளிச்சத்தில், ஏகாந்தமாய் மேற்கத்திய மெட்டில் அமைந்த இப்பாடலைக் கேட்கும் சுகமே அலாதி...

இப்பாடல் பிறந்த வரலாற்றை கேள்விப்பட்டது இங்கே.. :icon_idea:

நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார். டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால் அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார், மெல்லிசை மன்னர். மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

“நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமன்றி, இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை. எனவே மன்னிக்க வேண்டும், இந்தப் பாடலை என்னால் பாட முடியாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.

“நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும், குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும். எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும்.” என்று டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.

“அப்படியா? இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?” என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டிஎம்எஸ்.

ஆனால் எம்.எஸ்.வி தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்தப் பாடலும் உங்கள் பாடல்களில் மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத்தான் போகிறது" என்று சொல்லிய எம்எஸ்வி டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். பாடலைக் கேட்ட நடிகர் திலகம் “உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

அவரிடம் காரணம் கேட்டபோது அவர் சொன்னார். “மிக, மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள். டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார். இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன். டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில், எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் படப்பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்” என்றாராம் சிவாஜி.

சொன்னது போலவே அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து, அந்த மெட்டையும் டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம் மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

பாடல் இடம்பெற்ற படம்: சாந்தி

யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு..?

யாரோ சொல்ல, யாரோ என்று யாரோ வந்த உறவு..!

காலம் செய்த கோலம், இங்கு நான் வந்த வரவு..!

மாலையும், மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை..

மஞ்சம், நெஞ்சம், வாடுவதே பெரும் வேதனை..

தெய்வமே, யாரிடம் யாரை நீ தந்தாயோ..!

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ..

ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே..

அங்கும், இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே..

தெய்வமே, யாருடன் மேடையில் நீ நின்றாயோ..!

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ..

ஓ…ஓ…ஓஹோ..ஹோ..ஹொ..ஹோ…

.

Edited by ராஜவன்னியன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவு என்றொரு சொல் இருந்தால்,

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்..

காதல் என்றொரு கதை இருந்தால்,

கனவு என்றொரு முடிவிருக்கும்..

இதயம் என்றொரு இடம் இருந்தால்,

ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்..

இன்பம் என்றொரு வழி நடந்தால்,

துன்பம் என்றொரு ஊர் போகும்..

உறவு என்றொரு சொல் இருந்தால்,

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்..

காதல் என்றொரு கதை இருந்தால்,

கனவு என்றொரு முடிவிருக்கும்..

பருவம் என்றொரு கை அணைந்தால்

பாசம் என்றொரு கை தடுக்கும்..

பழகு என்றொரு மனம் சொன்னால்,

விலகு என்றொரு முகம் சொல்லும்..

படம்: இதயத்தில் நீ.

வருடம் : 1963.

பாடல்: வாலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.