Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்டவனா? பாவிக்கப்பட்டேனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று

மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன்.

வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன்.

ஒரு மனிதர் கையில் சிறிய 5 லீற்றர் கொள்ளக்கூடிய போத்தலுடன் என்னருகில் வந்தார். சிறிது ஆங்கிலமும் சிறிது யேர்மனிய மொழியிலும்

நான் யேர்மனியிலிருந்து வந்தேன்.

எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார்.

ஆளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தேன்.

50 க்கு 50 தான் எனது கணிப்பு.

முடிவாக சரி என்று அவனது ரியூப்பை நிரப்பிக்கொடுத்தேன்.

காரில் வந்து ஏறியதும் மனைவி சொன்னால் வந்த லாபம் போச்சா? என்று.

பாவமப்பா எவருக்கும் இந்நிலை வரலாம் என்றேன்.

அவள் சொன்னாள்

நீங்கள் டீடீசல் அடித்துக்கொண்டிருந்ததால் ஒரு விடயத்தை கவனிக்கவில்லை.

அவன் உங்களுக்கு வணக்கம் சொன்னபோது இரு கையாலும் உங்களைக்கும்பிட்டான் என்று.

எனக்கும் அது இரவு முழுவதும் அழுத்தியது.

(ஒரு யேர்மனியன். அதுவும் வார விடுமுறைக்கு சுற்றுலா வந்தவன். இந்த உதவிக்காக என்னை கை கூப்பிக்கும்பிடுவானா.??? இது தான் எனக்கு உதைக்குது. அல்லது வழமையாக பிச்சை எடுத்து வாழும் ஒரு ரூமேனியனிடம் ஏமாந்து விட்டேனா?)

அவன் பாதிக்கப்பட்டவனா?

அல்லது

நான் பாவிக்கப்பட்டேனா?

Edited by விசுகு

விசுகு அண்ணா பெற்றோல் ஊத்தி மாபெரும் கொலை என்ற தலைப்புடன் செய்திகள் ஒன்றும் வரவில்லையா.....

வாராதவரை .

மகிழ்ச்சி .............. :D:icon_idea:

எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார்.

இந்த இடத்தில் அந்த நபர் பொய் சொன்னது போல் என்னுள் ஒர் உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்ககள் கொடுத்த டீசலைக்கொண்டு ஏதாவது துஷ்பிரயோகம் செய்திருந்தால் உதாரணத்துக்கு யாரையாவது கொளுத்தி இருந்தால் பொலிஸ் விசாரிக்கும்போது எரிபொருள் நிலையத்தில் உள்ள கமராவில் நீங்கள் டீசல் கொடுத்தது பதிவாகி இருக்கும் அதற்காக நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள் :rolleyes:

நீங்கள் உதவி செய்து உபத்திரத்தை தேடியதாகிவிடும் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவது சரி இல்லை எனக்கு இப்படி உதவி செய்ததால் ஏற்பட்ட பாதகமான அனுபவம் உண்டு :o

உங்களின் நல்ல மனசை பாரட்டுகின்றேன் :)

உங்களை பாவித்திருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் அடிக்கும் இடம் வரை போய்... அங்கு எரிபொருள் நிரப்ப அவரிடம் காசு இருந்திருக்க வேண்டுமே....

அந்தக் காசில், அவர் 5 லீற்றர் கொள்கலனில் டீசல் நிரப்பியிருக்கலாமே...

நீங்கள் வழக்கமாக பிச்சை எடுக்கும், ருமேனியனிடம் ஏமாந்து விட்டதாகவே நினைக்கின்றேன் விசுகு.

ஜேர்மனிலிருந்து சுற்றுலா வருபவன், கிரெடிற் காட் கூட கொண்டு வராமல்... வெறுங்கையை வீசிக் கொண்டா வருவான். ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளை... கொச்சைப் படுத்துவது போல உள்ளது :D.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், உங்கட முகத்திலேயே 'அப்பாவி' என்று எழுதி ஒட்டி இருக்குப் போல கிடக்கு! :icon_idea:

தலையோடு போகவேண்டியது, தலைப்பாகையோடு போய் விட்டது என நினைத்து, மறந்து விடுங்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றிலிருந்து விசுகு எனக்கு சகோதரம்.

நீங்க ரொம்ப நல்லவன் என்று நினைச்சிருப்பானோ.... ^_^

முந்தி இங்கு சிலர் இந்த வேலை செய்து, பெற்றோலை கொண்டு போய் விற்பனை செய்தார்கள்....

நேற்று

மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன்.

வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன்.

...

அது சரி விசுகு அண்ணா, பெட்ரோல் விலை தானே குறைந்து இருந்தது என்று குறிப்பிட்டு இருகிறீங்கள்... அப்புறம் ஏன் டீசலை அடிச்சனீங்கள்? :rolleyes::D

விசுகு அண்ணா நீங்கள் உதவவேணும் எண்ட எண்ணத்தூடை குடுத்திருக்கிறியள். அந்தளவிலை திருப்திப்படுங்கோ!

அவன் உண்மையாக் கேட்டானா அல்லது ஏமாத்தக் கேட்டானா எண்டு ஆராஞ்சியள் எண்டால் இருக்கிற நிம்மதியும் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள் அண்ணா. ஆனால், டீசல் வாகனம் டீசல் முடிஞ்சு நிண்டால் திரும்பி பெட்ரோல் வாகனம் போல டீசல் மட்டும் நிரப்பி இயக்க முடியாது. டீசல் வேற தொழில்நுட்பம் என்பதால nozel இனுள்ளே காற்று ஏறிவிடும். பின்னர் எஞ்சினுள் சின்ன ஒரு வேலை செய்து வளிக் குமிழியை எடுத்த பின்னர் தான் இயக்க முடியும். ஆகவே அவர் சும்மா டீசல் வாங்கியிருந்தால் உங்களை பாவித்திருக்கிறான் எண்டுதான் நான் கருதுவேன். ஒரு ஜேர்மன், அதுவும் சுற்றுலாப் பிரயாணி கார்ல எண்ணெய் தண்ணி பாக்காமல் வெளிக்கிட மாட்டான். எனக்கு ஒருமுறை ஒரு விடயம் நடந்தது. நான் எனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வரும் போது இன்னொருத்தர் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். நானாக நிறுத்தி என்ன விடயம் எனக் கேட்க பெட்ரோல் முடிந்து விட்டதாகவும் பெட்ரோல் நிலையத்துக்கு தள்ளிச் செல்வதாகவும் கூறினார். அது வேற ஏத்தமான பாதை. (இங்கத்தைய பாரம் கூடிய மோட்டார் சைக்கிள்களை தள்ளும் போது உயிர் போய்விடும். நான் பலதரம் தள்ளி அனுபவப் பட்டிருக்கிறேன்.) மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு என்னுடன் வருமாறும் நான் பின்னர் இறக்கிவிடுவதாகவும் கூற, அவரும் வந்து ஏறினார். அவரை பெட்ரோல் நிலையத்துக்கு கொண்டுபோய் இரவல் கானில் எண்ணெய் அடித்து பிறகு கொண்டுவந்து அவரது மோட்டார் சைக்கிளின் அருகிலே இறக்கி விட்டேன். அந்த மனிசன் ஒண்டு மட்டும் சொல்லிச்சுது "so many people ignored me, but you are a kind man". மனம் முழுக்க திருப்தியாக இருந்தது. அந்தாளை அப்பிடியே விட்டிட்டு வந்திருந்தால் மனம் எதோ போலிருந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்ககள் கொடுத்த டீசலைக்கொண்டு ஏதாவது துஷ்பிரயோகம் செய்திருந்தால் உதாரணத்துக்கு யாரையாவது கொளுத்தி இருந்தால் பொலிஸ் விசாரிக்கும்போது எரிபொருள் நிலையத்தில் உள்ள கமராவில் நீங்கள் டீசல் கொடுத்தது பதிவாகி இருக்கும் அதற்காக நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள் :rolleyes:

அவர் என்னை அணுகி உதவி கேட்டதும் எனது மனதில் முதலாவதாக ஓடியது இதுதான்.

டீசலால் இந்த பாதிப்பு வராது என்பதால் கொஞ்சம் மாறினேன்.

நீங்கள் உதவி செய்து உபத்திரத்தை தேடியதாகிவிடும் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவது சரி இல்லை எனக்கு இப்படி உதவி செய்ததால் ஏற்பட்ட பாதகமான அனுபவம் உண்டு :o

உங்களின் நல்ல மனசை பாரட்டுகின்றேன் :)

உங்களை பாவித்திருக்கின்றார் .

பெற்றோல் அடிக்கும் இடம் வரை போய்... அங்கு எரிபொருள் நிரப்ப அவரிடம் காசு இருந்திருக்க வேண்டுமே....

அன்று இங்கு லீவு நாள்.

வங்கி அட்டையால் மட்டுமே பணம் செலுலுத்தும் இடம் அது.

அந்தக் காசில், அவர் 5 லீற்றர் கொள்கலனில் டீசல் நிரப்பியிருக்கலாமே...

நீங்கள் வழக்கமாக பிச்சை எடுக்கும், ருமேனியனிடம் ஏமாந்து விட்டதாகவே நினைக்கின்றேன் விசுகு.

ஜேர்மனிலிருந்து சுற்றுலா வருபவன், கிரெடிற் காட் கூட கொண்டு வராமல்... வெறுங்கையை வீசிக் கொண்டா வருவான்.

இதுதான் பின்னர் எனக்கு உறைத்தது. :( :(

ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளை... கொச்சைப் படுத்துவது போல உள்ளது :D.

விசுகர், உங்கட முகத்திலேயே 'அப்பாவி' என்று எழுதி ஒட்டி இருக்குப் போல கிடக்கு! :icon_idea:

தலையோடு போகவேண்டியது, தலைப்பாகையோடு போய் விட்டது என நினைத்து, மறந்து விடுங்கள்!!!

அப்பாவியாக நினைத்து ஏமாந்ததாக நான் நினைக்கவில்லை புங்கை.

என்னுக்குள் இருக்கும் ஒருத்தன் அடிக்கடி இப்படி வெளியில் வருகின்றான்.

சில சில ஏமாற்றங்கள் தோல்விகள் நட்டங்கள் வந்தாலும் அவனை நான் கட்டுப்படுத்தவிரும்பவில்லை.

இதைக்காரணமாக வைத்தும் அவனை கட்டுப்படுத்தமாட்டேன்.

இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு? :(

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ததாகவே நினையுங்கள். அவன் உங்களைப் பாவித்திருந்தானானால் பரவாயில்லை. போகட்டும். இதைப் பற்றி கவலைப் படவேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து விசுகு எனக்கு சகோதரம்.

அதுதான் எனது வேண்டுதலும். :icon_idea:

நீங்க ரொம்ப நல்லவன் என்று நினைச்சிருப்பானோ.... ^_^

முந்தி இங்கு சிலர் இந்த வேலை செய்து, பெற்றோலை கொண்டு போய் விற்பனை செய்தார்கள்....

அது சரி விசுகு அண்ணா, பெட்ரோல் விலை தானே குறைந்து இருந்தது என்று குறிப்பிட்டு இருகிறீங்கள்... அப்புறம் ஏன் டீசலை அடிச்சனீங்கள்? :rolleyes::D

பெற்றோலல் அடிக்கிற இடம்.(எல்லாம் ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதணும் என்பதால் வருவது)

எனது காருக்கு டீசல் தான்.

விசுகு அண்ணா நீங்கள் உதவவேணும் எண்ட எண்ணத்தூடை குடுத்திருக்கிறியள். அந்தளவிலை திருப்திப்படுங்கோ!

அவன் உண்மையாக் கேட்டானா அல்லது ஏமாத்தக் கேட்டானா எண்டு ஆராஞ்சியள் எண்டால் இருக்கிற நிம்மதியும் போயிடும்.

அது தான் உண்மை.

இதில என்னைவிட என்ர மனிசி அலட்டா இருக்கிறா என்பதும் கவனிக்கணும்.

:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள் அண்ணா. ஆனால், டீசல் வாகனம் டீசல் முடிஞ்சு நிண்டால் திரும்பி பெட்ரோல் வாகனம் போல

டீசல் மட்டும் நிரப்பி இயக்க முடியாது. டீசல் வேற தொழில்நுட்பம் என்பதால nozel இனுள்ளே காற்று ஏறிவிடும். பின்னர் எஞ்சினுள் சின்ன ஒரு வேலை செய்து வளிக் குமிழியை எடுத்த பின்னர் தான் இயக்க முடியும்.

ஆகவே அவர் சும்மா டீசல் வாங்கியிருந்தால் உங்களை பாவித்திருக்கிறான் எண்டுதான் நான் கருதுவேன். ஒரு ஜேர்மன், அதுவும் சுற்றுலாப் பிரயாணி கார்ல எண்ணெய் தண்ணி பாக்காமல் வெளிக்கிட மாட்டான். எனக்கு ஒருமுறை ஒரு விடயம் நடந்தது. நான் எனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வரும் போது இன்னொருத்தர் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். நானாக நிறுத்தி என்ன விடயம் எனக் கேட்க பெட்ரோல் முடிந்து விட்டதாகவும் பெட்ரோல் நிலையத்துக்கு தள்ளிச் செல்வதாகவும் கூறினார். அது வேற ஏத்தமான பாதை. (இங்கத்தைய பாரம் கூடிய மோட்டார் சைக்கிள்களை தள்ளும் போது உயிர் போய்விடும். நான் பலதரம் தள்ளி அனுபவப் பட்டிருக்கிறேன்.) மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு என்னுடன் வருமாறும் நான் பின்னர் இறக்கிவிடுவதாகவும் கூற, அவரும் வந்து ஏறினார். அவரை பெட்ரோல் நிலையத்துக்கு கொண்டுபோய் இரவல் கானில் எண்ணெய் அடித்து பிறகு கொண்டுவந்து அவரது மோட்டார் சைக்கிளின் அருகிலே இறக்கி விட்டேன். அந்த மனிசன் ஒண்டு மட்டும் சொல்லிச்சுது "so many people ignored me, but you are a kind man". மனம் முழுக்க திருப்தியாக இருந்தது. அந்தாளை அப்பிடியே விட்டிட்டு வந்திருந்தால் மனம் எதோ போலிருந்திருக்கும்.

நீங்க சொல்லுறது தான் உண்மை.

எனக்கு ஆகக்கூகூடினா 5 ஈரோக்கள் நட்டம்.

ஆனால் அவரை விட்டுவிட்டு வந்திருந்தால் அது வாழ்க்கை பூரா என்னைத்துரத்தும்.

பல வருடங்களின் பின்பு கூட எனக்கு இப்படி ஒரு நிலைவரின் அவனை நான் நினைக்கக்கூடும்....????

நான் மேலே குறிப்பிட்டது போல் 50 க்குகு 50 தான்.

இப்போ உதவி செய்வதா வேண்டாமா என்பதற்கான நேரத்தில்....... எனக்குள் உள்ளவர் வந்து விடுவார். செய் என்றால் செய்யவேண்டியதுதான். இல்லாவிட்டால் நிம்மதியைக்கெடுத்துக்கொண்டே இருப்பார்.

ஆனால் தற்போதைய டீசல் வாகனங்களுக்கு நீங்கள் சொல்வது போலில்லை. அவை ஓட்டமற்ரிக்காக எயார் எடுத்து வேலை செய்யக்கூடியன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜேர்மன், அதுவும் சுற்றுலாப் பிரயாணி கார்ல எண்ணெய் தண்ணி பாக்காமல் வெளிக்கிட மாட்டான். எனக்கு ஒருமுறை ஒரு விடயம் நடந்தது. நான் எனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வரும் போது இன்னொருத்தர் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். நானாக நிறுத்தி என்ன விடயம் எனக் கேட்க பெட்ரோல் முடிந்து விட்டதாகவும் பெட்ரோல் நிலையத்துக்கு தள்ளிச் செல்வதாகவும் கூறினார். அது வேற ஏத்தமான பாதை. (இங்கத்தைய பாரம் கூடிய மோட்டார் சைக்கிள்களை தள்ளும் போது உயிர் போய்விடும். நான் பலதரம் தள்ளி அனுபவப் பட்டிருக்கிறேன்.) மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு என்னுடன் வருமாறும் நான் பின்னர் இறக்கிவிடுவதாகவும் கூற, அவரும் வந்து ஏறினார். அவரை பெட்ரோல் நிலையத்துக்கு கொண்டுபோய் இரவல் கானில் எண்ணெய் அடித்து பிறகு கொண்டுவந்து அவரது மோட்டார் சைக்கிளின் அருகிலே இறக்கி விட்டேன். அந்த மனிசன் ஒண்டு மட்டும் சொல்லிச்சுது "so many people ignored me, but you are a kind man". மனம் முழுக்க திருப்தியாக இருந்தது. அந்தாளை அப்பிடியே விட்டிட்டு வந்திருந்தால் மனம் எதோ போலிருந்திருக்கும்.

தும்பளையான்,

இங்கு, வேக வீதியில் எரிபொருள் தீர்ந்து வாகனம் நின்று... காவல்துறை கண்டால், தண்டப் பணம் செலுத்த வேண்டும்.

சராசரி 50 கிலோ மீற்றருக்கு ஒரு எரி பொருள்நிரப்பு நிலையம் உள்ளது.

வேக வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு எரி பொருள் நிரப்பு நிலையம் வரும் போதும், அதற்கடுத்த எரிபொருள் நிலையம் இத்தனையாவது கிலோ மீற்றரில் உள்ளது என்பதை... பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆதலால்... 5 லீற்றர் கொள்கலனில் டீசல் அடித்தவர் ஜேர்மன்காரனாக இருக்க முடியாது. அத்துடன்... காரில் அநாவசியமாக 5, 10, லீற்றர் கொள்கலனில் எரிபொருள் நிரப்பி வைத்திருப்பதற்கும் காவல்துறைக்கு தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் எமக்கும் ஆபத்தானது.

நீங்கள் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு செய்த உதவியை... அவர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார். :)

எனக்கு ஆகக்கூகூடினா 5 ஈரோக்கள் நட்டம்.

ஆனால் அவரை விட்டுவிட்டு வந்திருந்தால் அது வாழ்க்கை பூரா என்னைத்துரத்தும்.

பல வருடங்களின் பின்பு கூட எனக்கு இப்படி ஒரு நிலைவரின் அவனை நான் நினைக்கக்கூடும்....????

நான் மேலே குறிப்பிட்டது போல் 50 க்குகு 50 தான்.

இப்போ உதவி செய்வதா வேண்டாமா என்பதற்கான நேரத்தில்....... எனக்குள் உள்ளவர் வந்து விடுவார். செய் என்றால் செய்யவேண்டியதுதான். இல்லாவிட்டால் நிம்மதியைக்கெடுத்துக்கொண்டே இருப்பார்.

உண்மை விசுகு,

நீங்கள் அவருக்கு உதவி செய்திராவிட்டால்... இந்த நினைப்பு நெடுக வந்து உறுத்திக் கொண்டே இருக்கும். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்,

இங்கு, வேக வீதியில் எரிபொருள் தீர்ந்து வாகனம் நின்று... காவல்துறை கண்டால், தண்டப் பணம் செலுத்த வேண்டும்.

சராசரி 50 கிலோ மீற்றருக்கு ஒரு எரி பொருள்நிரப்பு நிலையம் உள்ளது.

வேக வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு எரி பொருள் நிரப்பு நிலையம் வரும் போதும், அதற்கடுத்த எரிபொருள் நிலையம் இத்தனையாவது கிலோ மீற்றரில் உள்ளது என்பதை... பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆதலால்... 5 லீற்றர் கொள்கலனில் டீசல் அடித்தவர் ஜேர்மன்காரனாக இருக்க முடியாது. அத்துடன்... காரில் அநாவசியமாக 5, 10, லீற்றர் கொள்கலனில் எரிபொருள் நிரப்பி வைத்திருப்பதற்கும் காவல்துறைக்கு தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் எமக்கும் ஆபத்தானது.

நீங்கள் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு செய்த உதவியை... அவர் தன் வாழ்நாளில் மறக்க மாட்டார். :)

இங்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான தூரங்களை போட்டிருப்பார்கள் ஆனால் அப்படி எண்ணெய் முடிந்து நின்றால், நானறிந்த வரை தண்டம் அடிக்க மாட்டார்கள். அந்த மோட்டார் சைக்கிள் காரனுக்கு பெட்ரோல் நிலையத்தில் நின்ற பஞ்சாபிகள் இரவல் கானை தர மறுத்து விட்டார்கள். பிறகு நான் தெரிந்த பஞ்சாபியிலே "வீரே, துசி மெரி மடாட் கார் சக்தே ஹோ" எண்டு தட்டுத் தடுமாறி கதைக்க கானை தந்தார்கள். இங்கு பொதுவாக மோட்டார் சைக்கிள் காரர்களுக்கிடயிலே ஒரு புரிந்துணர்வு இருக்கு. வழி தெருவிலே இன்னொரு மோட்டார் சைக்கிளை கண்டால் அவர்கள் எங்களுக்கு கையை காட்டுவார்கள், நாங்களும் பதிலுக்கு கையை காட்டுவது. நானும் முன்பு இருமுறை எண்ணெய் முடிந்து முக்கி முக்கி உருட்டிக் கொண்டு வந்த போது பலர் நிப்பாட்டி ஏதாவது உதவி வேணுமா எனக் கேட்டார்கள். பெட்ரோல் நிலையத்துக்கு கிட்ட வந்து விட்டதால் நிப்பாட்டியதற்கு நன்றி கூறி அனுப்பி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவியாக நினைத்து ஏமாந்ததாக நான் நினைக்கவில்லை புங்கை.

என்னுக்குள் இருக்கும் ஒருத்தன் அடிக்கடி இப்படி வெளியில் வருகின்றான்.

சில சில ஏமாற்றங்கள் தோல்விகள் நட்டங்கள் வந்தாலும் அவனை நான் கட்டுப்படுத்தவிரும்பவில்லை.

இதைக்காரணமாக வைத்தும் அவனை கட்டுப்படுத்தமாட்டேன்.

இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு? :(

உங்கள் உள்ளேயிருந்து, வெளியே வர எண்ணுபவர் வேறு யாருமல்ல!

அவர் தான் உங்கள் 'மனச்சாட்சி"!

மகாத்மா காந்தி கூறியது போல, இவரை இரண்டு மூன்று, தடவைகள் கட்டுப் படுத்தினால், மூன்றாம் தடவை இவர் தானாகவே வராமல் விட்டு விடுவார்!

சமூக விரோதச் செயல்களில் ஈடு படுபவர்கள், இந்த மனச்சாட்சியை, ஏதோ ஒரு விதத்தில் கொன்று விடுகின்றார்கள்!

அது அவர்களை எச்சரிப்பதேயில்லை!

ஆனால், அவர்களின் மரணத் தறுவாயில், மீண்டுமொரு வரும்!

கணக்குச் சரிபார்ப்பதற்காக! :o

  • கருத்துக்கள உறவுகள்

-----

இங்கு பொதுவாக மோட்டார் சைக்கிள் காரர்களுக்கிடயிலே ஒரு புரிந்துணர்வு இருக்கு. வழி தெருவிலே இன்னொரு மோட்டார் சைக்கிளை கண்டால் அவர்கள் எங்களுக்கு கையை காட்டுவார்கள், நாங்களும் பதிலுக்கு கையை காட்டுவது. நானும் முன்பு இருமுறை எண்ணெய் முடிந்து முக்கி முக்கி உருட்டிக் கொண்டு வந்த போது பலர் நிப்பாட்டி ஏதாவது உதவி வேணுமா எனக் கேட்டார்கள். பெட்ரோல் நிலையத்துக்கு கிட்ட வந்து விட்டதால் நிப்பாட்டியதற்கு நன்றி கூறி அனுப்பி விட்டேன்.

இங்கும் மோட்டார் சைக்கிள் காரர்களுக்கிடையிலும் மற்றும் (F)வோக்ஸ் வாகன் கார்காரர்களும் (படத்திலுள்ள கார்) எதிரே வீதியில் எதிரே சந்திக்கும் போது... கையைகாட்டியோ, விளக்கை ஒளிரவிட்டோ மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.

vw-kaefer-unterwegs-stadt-luzern-35910.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.