Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!

‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.

naamtamilar_seemaan_thambi_flag.jpg1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச் சாரி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு, போராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் மட்டும் தான் என்றும், அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல், அந்த ஆவணம் கூறுகிறது.

“தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும், சமற்கிருத மேலாளுமையையும் புகுத்தி, நிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்தி லிருந்தே, தமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும், இராசாசி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை யடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போது, அவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின், தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.

தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப் பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலி லிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங் கடிக்கப்பட்டது.”

- என்கிறது ஆவணம்.

ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.

ஆவணத்திலிருந்து:

“ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம், தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி, அழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம், சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமை; இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி?” என்று வினவி, கைவிரித்தது.

• தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.

ஆவணத்திலிருந்து:

“பற்றாக்குறைகளுக்கிடையே நடை முறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும், பொருளற்றதும், மாநில உரிமையையும், மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

• பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் ‘கலைச் சொல் விளக்கம்’ தரப்பட்டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:

“அந்தணன் – ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்

பார்ப்பான் – ஆய்வாளன், இளைஞன்

ஆரியன் – சீரியன், உயர்ந்தவன், சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரி, சேலம் மாவட்ட வழக்கு)

பிராமணன் – பேரமணன்”

திராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று, மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.

- மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.

மனு நெறியார் என்பதற்கு -

“ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” – என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைதான் – மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த ‘குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

• தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல், பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.

ஆவணத்திலிருந்து:

“2000 ஆண்டுகளுக்கு மேலாக, வள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம், மனு நெறியர் ஆளுமை எதிர்ப்பு, மனுவிய மடமை எதிர்ப்பு, சாதிய இடஒதுக்கீடு, சமனியம், பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டி, அரசியல் விடுதலையும், பொருளியல் விடுதலையும் வாங்கித் தருவதாய் ஓங்கி உரைத்தது.

திராவிடத்தின் அரசியல் தளமும், தமிழர்க்கு அரசியல், பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடி, தமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டு, அடிக்கட்டுமானக் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலை, பொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டி, இலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.”

- என்கிறது இந்த ஆவணம்.

(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவை; இதற்கான கலைச்சொல் விளக்கம், என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)

• பெரியார், திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக் காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால், அந்த புரட்சியை வென்றெடுக்க, படை திரட்டிக் கிளம்பியிருக்கும், நாம் தமிழர் கட்சி, தமது அமைப்பில் சேருவோர் “புரட்சிகர” உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:

“நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

• திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட ‘மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.

“கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர், நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” – என்றது அந்த ஆவணம்.

புரட்சிப்பெரியார் முழக்கம் இதழ் 31.05.2012

  • Replies 165
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப் பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலி லிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங் கடிக்கப்பட்டது.”

- என்கிறது ஆவணம்./////

உண்மை தானே! தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி எனத் திட்டினவர் இந்தக் கன்னடக்காரர் தானே! தமிழில் அறிவியல்ரீதியான எந்த ஆக்கமும் இல்லை என்று குறை கூறிய ராமசாமி, தான் கட்டி வளர்த்த திராவிட இயக்கம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எத்தனை விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் பார்க்காமல் போய் விட்டார் என்பது தான் எம் கவலை.

திராவிடம் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றையும், அடையாளங்களையும் அழித்ததே அது செய்த சாதனை. என்றைக்குமே திராவிடம் என்று சொன்னவர்கள் தமிழில் வளர்ச்சியைத் தந்து விடவில்லை. தமிழனின் வரலாற்றைக் குறுக்கி, சிதைவடையச் செய்வதே அவர்களின் பணியாக இருந்தது.

ராமசாமி தாக்கிய விடயங்கள் தமிழ் நூல்கள், தமிழனின் கலாச்சாரம். இவை இரண்டுமே தமிழின் வரலாற்றை அடையாளம் செய்ய இருந்த சொத்துக்கள். இவை இரண்டுமே பிறமொழியினருக்கு உறுத்தலாகவும் இருந்தன. அதனால் தான் என்னவோ வள்ளுவரின் காலத்தை வெறுமனே கிறிஸ்த்து காலப்பகுதியாக்கி வரலாற்றைக் குறுக்கினர். அதுவே, பிற்பாடு தமிழனின் வரலாற்றை அடையாளப்படுத்தும் காலமும் ஆக்க முனைந்தனர்.

தமிழன்ன வரலாற்றைப் பறை சாற்றும் எந்த விடயங்களையும் ராமசாமி ஆதரிக்கவில்லை. அவன் செய்த எல்லாச் செயல்களும் தமிழர்களின் அடையளங்களைச் சிதைக்கவே உதவின. இந்த நிலையில் நாம் தமிழர் ராமசாமியைத் துறந்து செயற்படுவது என்பது நல்லதொரு தொடக்கப்புள்ளியாக அமைகின்றது. தமிழனே, தமிழனை ஆழ வேண்டும் என்ற வரலாற்றைப் புதுப்பிப்போம்!!

//“தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” //

தமிழை ஒழித்து விட்டால் பிறகு தமிழன் என்ற இனமேது? அப்புறம் இல்லாத இனத்திற்கு எதற்கு நாடு? மேலே உள்ள வாக்கியத்தை அவர் வேறு அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம். அப்பொழுதிருந்த கால கட்டத்தில் பார்ப்பனர்களை விட பொருளாதரத்தில் மேலோங்குவதற்கு ஆங்கில அறிவு அவசியமாயிருந்தது, அதையொற்றி சொல்லியிருக்கலாம். சாதிக் கொடுமையை புகுத்திய பார்ப்பனர்களை எதிர்த்து கடுமையாக் போராடியவர் பெரியார். சில தமிழ் எழுத்துக்களை சீர் திருத்தியதாகவும் கேள்விப்பட்டதுண்டு. உண்மை எதுவோ?

திராவிடம் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது என்று திராவிட இயக்கங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும் அந்தச் சொல் தமிழர்களிடம் இருந்து அந்நியப்பட்டே நிற்கிறது. வாழ்வியல் வழிகாட்டியாக வள்ளுவனையும் , உரிமை மீட்சியியல் வழிகாட்டியாக பிரபாகரனும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. கொள்கை ஆவணத்தில் பெரியாரை இழுக்காமல் இருந்திருக்கலாமோ?? பெரியாரை விமர்சிப்பதிர்க்குப் பின்னால் ஏதும் மறைமுக நோக்கம் உண்டோ ??!!

இருக்கலாம இருந்தாலும் தவறில்லை . பெரியார் அதிகம் பாடுபட்டது சாதிகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக . மேலும் பெண் விடுதலைக்காக . அதை செயலில் காட்டாமல் விட்டு விட்டு .........................

சாமி இல்லை பூதம் இல்லன்னு ஈசியா பூச்சாண்டி காட்டிகிட்டு,

தமிழர்களால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்ற படும் மதத்தை கேலி செய்து கொண்டு ( இந்து மதம் தமிழர்கள் மதம் இல்லை என பலர் வியாக்கியானம் கொடுப்பதால் இந்த மாதிரியெல்லாம் எழுத வேண்டி உள்ளது )

சாமியே இல்லன்னு காதுல பூ சுத்திட்டு சிறுபான்மை ( இஸ்லாம் ) மதத்தினர் அவர்கள் சாமிக்காக இருக்கும் நோன்பில் காஞ்சி குடித்து கொண்டு ( சாமியே இல்லன்னா அப்ப அல்லாவும் இல்லைதானே )

சிறுபான்மை இந்துக்களை ( பிராமணர் தமிழ்நாட்டில் சிறுபான்மை தான் ) தொடர்ச்சியாக கேலி செய்துகொண்டு பிழைப்பு நனைத்தும் போலி திராவிடம் பேசும் மனிதர்களின் முகமூடி கிளியும் நேரம் வந்து விட்டது .

அந்த முகமூடி நாம் தமிழர் என்ற மாபெரும் எழுச்சியோடு உள்ள இயக்கத்தின் மூலம் கிழிவது மிக்க மகிழ்ச்சி . ( இவர்கள் பேசும் இந்திய விரோதம் நமக்கு பிடிக்காதுங்கறது வேற சங்கதி )

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களும் மேலும் பல நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் பெரியாரின் சீடர்கள் என்றும் அவரை மதிப்பவர்களாகவும் இருக்கும்போது இது எப்படி வந்தது...??? :( :( :(

தமிழரும் தெய்வமும் தமிழும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டதால் இனி நாத்திகமும் திராவிடமும் கலந்த பருப்பு வேகாது என புரிந்து கொண்டு எடுத்த முடிவாக கூட இருக்கலாம்

கேரளா கட்சிகளிடம் திராவிடம் இல்லை,

ஆந்திரக் கட்சிகளிடமும் திராவிடம் இல்லை,

கன்னடக் கட்சிகளிடம் திராவிடம் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் இன்னும் திராவிடம்???

பெரியார் சாதியக் கொடுமைகள், மூடநம்பிக்கைகளிற்கு எதிராக எழுச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் தமிழ் என்று வரும்போது தமிழிற்கு ஆதரவாக நிற்கவில்லை.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி அலசி ஆராய வேண்டிய தேவை இப்போது ஏன் வந்தது? தமிழர்களுக்குள் உள்ள ஒருமையை இல்லாது அழித்து ஒழிக்கவே அன்றி இதில் என்ன பயன் உள்ளது இருக்கும் பிரச்சனைகளுக்கே தீர்வு இல்லை இதில் வேறு பிரச்சனையா ....... முதலில் தமிழருக்கு உலகப்பந்தில் ஒரு தனிநாடு அமைப்போம் பின்னர் இதுபற்றி பேசுவோம்

//“தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” //

தமிழை ஒழித்து விட்டால் பிறகு தமிழன் என்ற இனமேது? அப்புறம் இல்லாத இனத்திற்கு எதற்கு நாடு? மேலே உள்ள வாக்கியத்தை அவர் வேறு அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம். அப்பொழுதிருந்த கால கட்டத்தில் பார்ப்பனர்களை விட பொருளாதரத்தில் மேலோங்குவதற்கு ஆங்கில அறிவு அவசியமாயிருந்தது, அதையொற்றி சொல்லியிருக்கலாம். சாதிக் கொடுமையை புகுத்திய பார்ப்பனர்களை எதிர்த்து கடுமையாக் போராடியவர் பெரியார். சில தமிழ் எழுத்துக்களை சீர் திருத்தியதாகவும் கேள்விப்பட்டதுண்டு. உண்மை எதுவோ?

பெருத்தமற்ற விளக்கம்.

பெரியாரின் இக்கருத்துத் தொடர்பில் யாரும் சரியான விளக்கத்தை அளிப்பதில்லை.

திராவிடர் கழகத்தின் முதன்மை உறுப்பினர் ஒருவரிடமே இதனை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

அவரும் உங்களைப் போலவேயே பொருத்தமற்ற விளக்கத்தைக் கொடுத்துவிட்டு

இத்தகவலை நான் அறிந்து கொண்ட பார்ப்பன வார இதழ் பெரியாரின் புகழைக் கெடுப்பதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களும் மேலும் பல நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் பெரியாரின் சீடர்கள் என்றும் அவரை மதிப்பவர்களாகவும் இருக்கும்போது இது எப்படி வந்தது...??? :( :( :(

சீமானும் சரி.. நாம் தமிழர் கட்சியினரும் சரி.. குருட்டுத்தனமான பெரியார் விசுவாசம் கொண்டவர்கள் அல்ல.

பெரியாரின் சில சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை அவர்கள் மதிக்கிறார்கள் என்பதற்காக.. பெரியாரை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தவறு. அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால்.. சீமான் நாம் திராவிடர் கட்சி தான் ஆரம்பித்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்திருக்கமாட்டார்.

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று பழித்தவர் பெரியார். அவருக்கு தமிழ் மொழி வெறுப்பு.. தமிழர்களின் தனித்துவ இருப்பு மீது ஒரு வெறுப்பு இருந்தே வந்துள்ளது. அதற்கு தென்னிந்தியாவில் தமிழர்களின் அரசியல் பலமும் ஒரு காரணமாக இருந்தது.

அதை சரிக்கட்ட.. பெரியார் கையில் எடுத்த ஆயுதமே திராவிடம். அதன் மூலம் தமிழர்களிடம் நாம் தமிழர்கள் என்ற சிந்தனையை அழித்து.. திராவிடர்.. இந்தியர் என்ற காங்கிரஸ் சிந்தனைகளை புகுத்தியவர் பெரியார். அதன் விளைவு... முள்ளிவாய்க்கால் பேரவலம்.. உட்பட பல அழிவுகள்..!

பெரியாரின் சில சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுவாக மனித இனத்திற்கு நன்மை பயப்பனவாக இருப்பினும்.. தமிழர்கள் மீதான அவரின் இயல்பான வெறுப்புணர்வு.. என்பது உண்மையான தமிழர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதனால் தான் மா.பொ.சி போன்றவர்கள்.. பெரியார் தனித் தமிழ் நாட்டின் விரோதி என்றார்கள்..! அது பெரியாரின் அரசியல் நிலை சார்ந்து வந்த கருத்தாகும்.

சீமான்.. பெரியாரின் சமூக விழிப்புணர்வு மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை தமிழர் தமிழ் விரோத நிலைப்பாடுகளை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. பெரியார் தமிழர்களின் இன இருப்பை அழிக்க முன் மொழிந்த.. திராவிடத்தை முன்னிறுத்துவதும் இல்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழனே, தமிழனை ஆழ வேண்டும் என்ற வரலாற்றைப் புதுப்பிப்போம்!!

முற்றுமுழுதாக இந்தக்கருத்துடன் உடன்படுகிறேன்....... ஆம் திராவிடமும்,இந்தியமும் காங்கிரசும் முதன்மையாக இருக்கும் இவ் வேளையில்தானே எமக்கு இன்றுவரை இவ்வளவு துன்பம்,அடிமைவாழ்வு ....83 ம் ஆண்டு கலவரம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரிழப்பை

தொடர்ந்து இத்தனை அவலங்களும். இந்த பெரியார் வழி வந்த திராவிடமும்,காந்தியமும், எங்களுக்கு உதவி செய்ய வேண்டிய தருணத்தில் மாபெரும் உபத்திரவத்தையே செய்திருக்கின்றது. இந்த வரலாற்றை யாரும் மறக்கவும் மாட்டார்கள்,மறுக்கவும் மாட்டார்கள்.ஆகவே தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் .இதில் எந்த மாற்றுகருத்திற்கும் இடமில்லை. தமிழர்களை தமிழர் ஆளவேண்டும் என்ற நோக்கில் நாம் தமிழர் கட்சி இப்படி ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்கமுடியாதது என்றே நான் நினைக்கிறேன்.

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டுரையானது தோழர் கொளத்தூர் மணி அவர்களை தலைவராகக்கொண்ட பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ அச்சு ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் இதழின் 31.05.2012 பதிப்பில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் பெரியார் திக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்கள். இங்கே இணைத்துள்ள ஆக்கத்தை படைத்தவரும் இதழின் ஆசிரியர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களே.. இவரது ஆக்கங்கள் ஈழ முரசு இதழ்களில் தொடராகவும் வெளிவந்துள்ளது.. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் நேரடியாக எங்கள் பொதுச்செயலாளரும் இதழின் ஆசிரியருமான தோழர் விடுதலை க.இராசேந்திரனிடமோ அல்லது எங்கள் அமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் மணியிடமோ கேட்கலாம்.. தொடர்புக்கு:

தோழர் கொளத்தூர் மணி: +91 94433 59666,

தோழர் விடுதலை க.இராசேந்திரன்: +91 94441 15133

http://www.tamilveli.com/showurl.php?url=http://www.periyarthalam.com/2012/05/30/naamtamilar-party-india-national/&type=P&itemid=230555

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை க.இராசேந்திரன் அவர்களை உங்கள் எவருக்கும் தெரியாதெனில் உங்கள் பகுதியில் இருக்கும் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகளிடம் கேட்டறிந்துகொள்ளலாம்...

ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்கள் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சொல்பவர்கள்

[media=]

இக்காணொளியினை முழுவதும் கேட்டறிந்துவிட்டு இங்கே எம்மிடமோ அல்லது எங்கள் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை க.இராசேந்திரனிடமோ தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

Edited by திராவிட மாணவன்

சீமானும் நாம் தமிழரும் தமது சிதைவை நோக்கியே செல்கிறார்கள்.இதன் பின்னால் இருக்கும் சதியையும் அதன் பின்னணி பற்றியும் தம்முடன் இருந்தே தமிழர் தேசிய எழுச்சியை தமிழ் நாட்டில் அழிக்க விழையும் சக்திகள் பற்றி சீமான் தெளிவற்று இருக்கிறார்.

இது தமிழத் தேசிய அரசியலின் சிதைவுக்கும் நாம் தமிழரின் அரசியற் தற்கொலைக்கும் மட்டுமே வழி வகுக்கப் போகிறது.

அடுத்த தேர்தலுடன் எல்லாம் தெரிந்து விடும்.

ரோவின் ஆளமான கைகள் தெளிவாகத் தெரிகின்றன.சீமானுடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இது தமிழ் நாட்டில் எமக்கு இருக்கும் ஆதரவை இல்லாது செய்வதற்கான சதியின் ஒரு அங்கமே.

போராட்ட வரலாறு தெரியாதவர்கள் யாழ்க் களத்தில் இருக்கும் இந்த இணைப்பில் போராட்ட ஆரம்பகர்தாவாகிய சத்தியசீலன் பெரியாரைச் சந்தித்த போது அவர் என்ன சொன்னார் செய்தார் என்பதைச் சொல்லி உள்ளார்.

//ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தேடி கடல்வழியாக 1971-ம் ஆண்டு

நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். அந்தப் பயணத்தில் பெரியாரையும் ஜி.டி.நாயுடுவையும் சந்தித்தேன்.

பெரியார், நேரடியாக தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தவர். "பெரிய டாங்கி போன்ற வற்றைக் கொண்டு வந்து உங்களை அவர்கள் அழிக்க முற்பட்டால் என்ன செய்வீர்கள்'' என்று என்னைக் கேட்டார். "அதற்குத்தான் உரிய வழியாக பதிலுக்கு நாங்களும் ஆயுதத்தை தூக்கும் நிலையைக் கைக்கொண்டிருக்கிறோம்'' என்றேன். "அப்படியென்றால் உங்கள் வசதிப்படி செய்யுங்கப்பா'' என்றார் பெரியார்.

ஜி.டி.நாயுடுவைச் சந்தித்த போது, "நான் உங்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எந்த வகையில் உதவமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார். நான், "தொலைத்தொடர்புக் கருவிகளை எங்களுக்குச் செய்து தாருங்கள்'' என்றேன். அவர் இணக்கம் தெரிவித்தார்.

//

http://www.yarl.com/forum3/index.php?showtopic=61595

அன்றே ஈழவிடுதலை சார்ந்த கருதுக்களை வெளியிட்ட ஒரே பத்திரிகை பெரியார் நாடாத்திய விடுதலைப் பதிரிகை மட்டுமே.

நாம், சிவகுமாரன் உட்பட பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரங்களை நடத்தினோம். இவ்வாறு டிசம்பர் 7, 1970 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு சென்றபோது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தேவையை உணர்த்தினோம். அந்தக் கூட்டத்தில் சந்தித்தேன் சின்னப்பையனாக இருந்த “பிரபாகரனை”. தமிழ் மாணவர் பேரவையில் தானும் இணைந்து பங்களிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அங்கேயே ஒரு ரூபா அங்கத்துவப் பணத்துடன் தமிழ் மாணவர் பேரவையில் அவரை இணைத்துக் கொண்டேன்.

Praba.jpg1971 ஆம் ஆண்டு யூன் மாதம் தமிழீழத்தில் இருக்க முடியாத அரசியல் நெருக்கடியால் தமிழகம் சென்றேன். திருச்சியில் ஈ.வே.ரா பெரியாரை ஆகஸ்டில் சந்திக்கிறேன். எமது மாணவர் போராட்டத்தைப் பற்றி விளக்கி உங்கள் ஆதரவை எமக்குத் தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது

“இவையெல்லாம் சாத்தியப்படுமா?” என்று அவர் தனது பாணியிலேயே கேட்டார்.

“அவர்கள் பெரிய டாங்கிகளையும் துப்பாக்கிகளையும் வைத்து உங்கள் எல்லோரையும் அழித்துப் போடுவார்களே” என்றும் சொன்னார்.

“இல்லை அதை எதிர்த்து எங்களால் போராட முடியும், அந்த மனவலிமை எங்களுக்கு இருக்கிறது, உங்களுடைய ஆசி தான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டேன்.

“சரி, நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத்து வடிவில் தாருங்கள் விடுதலை பத்திரிகையில் அதைப் பதிவாக்குகிறேன்” என்றார். அதைப் பதிவாக்கினார்.

//

http://tamilmakkalkural.blogspot.com

www.tamilnation.org/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேரளா கட்சிகளிடம் திராவிடம் இல்லை,

ஆந்திரக் கட்சிகளிடமும் திராவிடம் இல்லை,

கன்னடக் கட்சிகளிடம் திராவிடம் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் இன்னும் திராவிடம்???

புதுசு புதுசா பிரச்னை வேண்டாம். இருக்குற ஆதரவை இழக்க வைக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூர் மணி அண்ணனை விடவும் ராஜேந்திரனை விடவும் சீமானுக்கு கனக்க தெரியும்.

ஒரு கிழைமையாய் சரியான மழை

images-14.jpg

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தகவலை பதிந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்...

போராட்ட வரலாறு தெரியாதவர்கள் யாழ்க் களத்தில் இருக்கும் இந்த இணைப்பில் போராட்ட ஆரம்பகர்தாவாகிய சத்தியசீலன் பெரியாரைச் சந்தித்த போது அவர் என்ன சொன்னார் செய்தார் என்பதைச் சொல்லி உள்ளார்.

//ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தேடி கடல்வழியாக 1971-ம் ஆண்டு

நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். அந்தப் பயணத்தில் பெரியாரையும் ஜி.டி.நாயுடுவையும் சந்தித்தேன்.

பெரியார், நேரடியாக தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தவர். "பெரிய டாங்கி போன்ற வற்றைக் கொண்டு வந்து உங்களை அவர்கள் அழிக்க முற்பட்டால் என்ன செய்வீர்கள்'' என்று என்னைக் கேட்டார். "அதற்குத்தான் உரிய வழியாக பதிலுக்கு நாங்களும் ஆயுதத்தை தூக்கும் நிலையைக் கைக்கொண்டிருக்கிறோம்'' என்றேன். "அப்படியென்றால் உங்கள் வசதிப்படி செய்யுங்கப்பா'' என்றார் பெரியார்.

ஜி.டி.நாயுடுவைச் சந்தித்த போது, "நான் உங்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எந்த வகையில் உதவமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார். நான், "தொலைத்தொடர்புக் கருவிகளை எங்களுக்குச் செய்து தாருங்கள்'' என்றேன். அவர் இணக்கம் தெரிவித்தார்.

//

http://www.yarl.com/...showtopic=61595

அன்றே ஈழவிடுதலை சார்ந்த கருதுக்களை வெளியிட்ட ஒரே பத்திரிகை பெரியார் நாடாத்திய விடுதலைப் பதிரிகை மட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரகளின் தகவலை முறையாக பதிந்துவரும் தோழர் மின்னல் அவர்கள் கேணல் அப்பையா அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களிடம் வரலாற்றுத்தகவலை வாங்கிப்பதியவும்..

உணவும் உடையும் கொடுக்க பலர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பதிலடி கொடுக்க கேணல் அப்பையாவுடன் இணைந்து செயல்பட்ட திராவிடர்கள் பற்றியும்... மூத்த போராளிகளான உயர்நிலை தளபதிகளுக்கும் தமிழகத்தில் முதன் முதலில் பயிற்சியளித்தவர்களும் திராவிடர்கள் தான் என்பதையும் பதியவும்.

Edited by இணையவன்
யாழுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

திராவிட மாணவன் எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

கொளத்தூர் மணி அண்ணன் உட்பட்ட உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை மறுத்தோ அல்லது அவர்களை விமர்சித்தோ எனது கருத்துக்கள் அமையவில்லை. (அப்படி அவர்களை விமர்சிக்கிற எந்தத் தகுதியும் எனக்கில்லை)

தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் உட்பட்ட இனங்களை உள்ளடக்கியதே திராவிடக் குடும்பம்.

மற்ற மூன்று இனத்தவர்களும், திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது கிடையாது ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயரில் தமிழைவிட திராவிடம் என்பதே நிலைத்து இருக்கிறது.

திராவிடக் குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று பிரிவினராலும்(மாநிலத்தினாலும்) நதி நீர் உட்பட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் இவர்களையும் உள்ளடக்கிய திராவிடத்தை ஏன் தமிழக கட்சிகள் கொண்டுள்ளன என்ற ஆதங்கத்திலேயே எனது கருத்து இருந்தது.

மற்றபடி தமிழகத்தில் தீண்டாமை, பிற்போக்குத்தனம் உட்பட்டவற்கு எதிராகவும், தமிழர் நலன்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை விமர்சிக்கும் படியாக எனது கருத்தை எழுதப்படவில்லை

Edited by மின்னல்

காலம் காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் தன்னெழுச்சி என்பது வரலாற்றின் போக்கில் நிகழ்கிற ஒரு சாதாரண நிகழ்வல்ல. தான் அடிமையாய் கிடக்கிறோம், நாம் வாழும் மண்ணைக் கூட ஆள முடியா அறியாமையில் அமிழ்ந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக்கொண்ட வக்கற்ற ஒரு இனத்தின் பிள்ளைகள் என்பதை விட தமிழர்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. ஈழத்தில் நடந்த போரும், துயரும், ஈந்த தியாகமும், படிப்பினைகளுமே பன்னெடுங்காலமாய் கருத்தரங்குகளிலும், கதர்ச்சட்டை ஜிப்பாக்க்களிலும் தேங்கிக் கிடந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துரு தமிழர்த் தெருக்களில் மூண்டெழுந்த நெருப்பாக பரவத் துவங்கியதன் காரணமாக அமைந்தன எனலாம். அண்ணன் அப்துல் ரவூப், மாவீரன் முத்துக்குமார் தொடங்கி தங்கை செங்கொடி வரையிலான தியாக மரபு இனத்திற்கோர் இன்னல் விளைந்தால் இன்னுயிரும் இந்த மண்ணிற்கே என்ற இம்மண்ணின் மைந்தர்களின் ஆழ்ந்த உள் மன வேட்கையை உலகத்திற்கு அறிவித்தது.

ஈழம் தந்த வலிகளால் உந்தப்பட்ட தமிழ்நாட்டின் உணர்வு மிக்க இளைஞர்கள் எதனால் நாம் வீழ்ந்தோம் என எண்ணிப் பார்த்ததன் விளைவாக தோன்றியதுதான் நாம் தமிழர் என்கிற அரசியல் பேரியக்கம். அரசியல் அதிகாரம் எதுவுற்ற, உதிரிச்சமூகமாய் மாறிப்போன ஒரு தேசிய இன மக்களின் துயரங்களுக்கு ஒரே விடிவு சிறு சிறு குழுக்களாய் பிரிந்துக் கிடக்காமல் ஒரு மாபெரும் வெகுசன அரசியல் இயக்கமாய் முளைத்து கிளைத்து பரவி ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதுதான் என்பதை நன்கு உணர்ந்த பிறகே நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சியாக மாறியது. தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது என்பதான உண்மை நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.

இம்மண்ணில் பிறந்த, இம்மண்ணின் விழுமியங்களை பண்பாடாக, வாழ்வியல் நெறியாக கொண்ட, இம்மண்ணின் மொழியை பேசுகிற இம்மண்ணின் மக்கள் இம்மண்ணிற்கான ஆட்சி அதிகாரப்பாதையில் நகரத் துவங்குவது என்பது தமிழர் அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திர நிகழ்வு. இந்த நகர்வு இதுவரை இம்மண்ணை ஆட்சி செய்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கிற, எதிர்க்காலத்தில் ஆளத்துடிக்கிற பிற மொழியாளர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தினை கொடுக்கிறது என்பதுதான் பாய்ந்து வரும் எதிர்ப்புகளுக்கு பின்னால் பதுங்கி இருக்கிற மாபெரும் உண்மை. அதனால்தான் ஆயிரத்தெட்டு வசவுகளோடு இம்மண்ணின் மக்களின் தார்மீக உரிமையை இவர்களால் இவ்வளவு தரங்கெட்டு விமர்சிக்க முடிகிறது.

கடந்த மே 18 அன்று கோவையில் நடந்த நாம் தமிழர்கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் ஆவணம் இம்மண்ணில் இதுவரை திராவிடம் என்ற பெயரில் பிற மொழியாளர்கள் இம்மண்ணை நயவஞ்சகமாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் போக்கினை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது வரை தமிழன் தனக்கான அரசியல் என எவற்றை கொண்டு இறுமாந்து இருந்தானோ, அவற்றை எல்லாம் ஆய்வு செய்து மறுபரீசிலனை செய்கிறது. தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு வெகுசன அரசியல் அமைப்பின் கொள்கை ஆவணம் எதிர்த்தரப்பினரால் எடுத்த எடுப்பிலேயே பலமான தாக்குதலுக்கு உள்ளாவதை நாங்கள் மகிழ்வாய் கவனிக்கிறோம். மனுவியம் (ஆரியம்) என்ற பெயரில் பார்ப்பனீயம் இந்த மண்ணில் விளைவித்த சாதி வேறுபாடுகளையும், அந்த ஆரியத்தின் சக ஆற்றலான திராவிடம் சாதிகளை பாதுகாத்து வரும் சாதூர்யத்தினையும் விரிவாக விவரிக்கும் இந்த ஆவணத்தின் மிக முக்கிய பகுதிகளை நாம் பார்க்கலாம்.

உள்ளடக்கமாய் 10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாய் விரிகிறது தோற்றுவாய். தமிழ்-தமிழர்-தொன்மை, பழந்தமிழ்நாடே இந்தியா, தமிழர் ஆளுகை முடிந்த காலம், மனுநெறியர் வருகையும், திராவிடமும், தமிழர் வீழ்ச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர் வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம் "கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய பார்ப்பனர்கள்) நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு, தமிழரின் மொழியும், பண்பாடும் திரிவும்-சிதைவும் உறு பல்வேறு மொழிகளும், மொழியினங்களும் ஆயின. அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது கலப்பு கூட்டு இனத்தினை அடையாளபடுத்துமேயன்றி, தனிப்பட்ட இனத்தினை குறிக்காது” (ப.எண் 9) என்பதை உரத்தக் குரலில் அறிவிக்கிறது. மேலும் அதே பக்கத்தில் “மனுவியத்தின் (ஆரியத்தின்) அரசியல் வடிவமான இந்தியத் தேசியமும், அதன் சார்பு ஆற்றலான திராவிடமும் மூலத்தமிழுக்கும் அது சார்ந்த தமிழ்த்தேசியத்திற்கும் வரலாற்று பகை ஆகும்" என தெளிவாக அறிவிக்கிறது. மேலும் அதே பக்கத்தில் தமிழர் வீழ்ச்சி என்ற பத்தியில் “பண்டைத் தமிழகத்தில் நிலவிய தன்முனைப்பும், தன் மேலாளுமையும், உட்பகையும், காட்டிக் கொடுப்பும் கொண்ட பண்பு நிலை தமிழர் ஒற்றுமையை குலைத்து மனு நெறியர் (ஆரியப் பார்ப்பனர்) வால் நுழைக்க இடந் தந்தது. அம் மனுநெறியர் மதத்தாலும், சாதியத்தாலும் பிறப்பு நிலையின் வழியாக பிரிக்கவும், உயர்வு –தாழ்வு அடிப்படையில் நிலையாக முரண்படச்செய்யவும் முடிந்தது” என்று எடுத்தியம்புகிறது. தனித்த தேசிய இனமான தமிழர்கள் எவ்வாறு பிற மொழியினருக்கு அடிமையாக நேர்ந்தது என விரிவாக ஆயும் அப்பத்தியில் அவ்வாறு அடிமையானதன் விளைவுகளும் ஆராயப்பட்டுள்ளன.

பக்கம் 11 –ல் தமிழர் வீழ்ச்சிக்குரிய துல்லியமான பின்புலம் ஆங்கிலேயர் வருகைக்கு முன் – பின் என இரு காலக்கட்டங்களை சார்ந்து பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழர்கள் அதாவது "சென்னை மாநில மக்கள் மட்டுமே தங்கள் சொந்த மொழி அல்லாத தெலுங்கு மராட்டிய மன்னர்களாட்சியில் அடிமைப்பட்டனர். அம்மொழி போற்றும் மனு நெறிக்கும் அடிமைப்பட்டு உழன்றனர்" என தெரிவிக்கும் ஆவணம் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இம்மண்ணில் வெகு காலம் அரசியல் ஆதிக்கம் செய்து வரும் தெலுங்கர்கள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் பயனாய் தமிழர்களைத் தாண்டி எவ்வாறு ஆதாயம் அடைந்தனர் என்பதை விரிவாகப் பேசுகிறது.

இது வரை வரலாற்றில் கருப்புத் திரை மூடி வைத்திருந்த பக்கங்களை பார்க்க நேரிடும் எவருக்கும் இது போன்ற தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் நிலவி வரும் பொய்யுரைகளை உடைத்து மேலெழும்பும் உண்மையின் ஒலி எப்போதும் அதிர்ச்சிகரமானதுதான் நாம் உணரத்தான் வேண்டும்.

கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்க்காத யாரும் செல்லும் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது என்கிற வரலாற்று பேருண்மையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணத்தில் தமிழர் கழகம் என்று தோன்ற இருந்த தமிழர்களுக்கான அரசியல் அமைப்பு எவ்வாறு திராவிடர் கழகம் என திரிந்து போனது எவ்வாறு என விவரிக்கும் பத்திகள் இதுவரை நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை அசைத்துப் போடுகிறது. நம்பிக்கைகள் எல்லாம் உண்மைகள் அல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல சொல்லி நீளும் அந்த ஆவணம் தமிழ்த் தேசிய தலைவர்கள் மூன்று பேரை குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் ஆராய்கிறது. முதலாமவர் ம.பொ.சி. ”திராவிடத்தினை எதிர்த்து போராடிய ம.பொ.சி மனுவியத்தினை எதிர்த்து போராடும் தெளிவற்று போனார்” ( ப.எண்கள் 14-15) என்பதனை ஆவணம் சொல்லத் தயங்கவில்லை. மேலும் இரண்டாம் நபராக ஆவணம் ஆயும் சி.பா.ஆதித்தனார் திராவிட இயக்கம் மேடைகளில் முழங்கியதை நம்பி "திராவிடம் தமிழின நலனுக்கு உண்மையான தொண்டு செய்யும் என்றும், இந்தியத் தேசியத்தை விட்டுக் கொடுப்பிற்கு இடமின்றி தன்னலம் துறந்து போராடும் என தவறாக நம்பி" (ப.எண் 16 ) நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு திமுகவில் இணைந்தது குறித்து எவ்வித தயக்கமுமின்றி எடுத்தியம்புகிறது.

நாம் தமிழர் கட்சி மூன்றாம் நபராக ஆயும் நபர் தமிழர் தேசிய பெருந்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள். பக்கம் எண் 17-ல் துவங்கும் அப்பத்தி தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய திராவிடம் “நானே ஒரு அடிமை –இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி” என வினவி தந்தை செல்வாவிடம் தந்தை பெரியார் கை விரித்த கதையை வேதனையுடன் பகிர்ந்துள்ளது. மேலும் அரசியல் திராவிடமான திமுக, திக போன்ற அரசியல் திராவிடக் கட்சிகள் நம்மினத்தினை அழித்த காங்கிரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து சிங்களத்தோடு தமிழினத்தை அழித்து முடித்த சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுகள். அதில் திரிபோ, மழுப்பலோ இருந்தால் தான் தவறு. மாறாக உண்மையை ஊருக்குச் சொல்வதில் தயக்கமில்லாமல் இருப்பதில் தவறென்ன இருக்கிறது?

காமாலை கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்ச‌ள் என்பது போல தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று சொன்னால் திராவிடப் பற்றாளர்களுக்கு அது தந்தை பெரியார் மீதான எதிர்ப்பாக மாறி விடுகிறது. இவர்களால் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் திமுகவையும், அதிமுகவையும், ஏன்… தேமுதிகவையும் கூட சகித்துக் கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக, எதிர்க்கட்சியாக, எதிர் வரும் காலத்தில் ஆளத் துடிக்கும் கட்சிகளாக தமிழர் அல்லாதோரின் அமைப்புகள் தான் இருக்கின்றன என்ற உண்மை நிலை குறித்து இவர்கள் சிந்திக்கக் கூட விரும்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டை தமிழர் ஆள்வோம் என்று சொன்னால் அது பெரியாருக்கு எதிர்ப்பாம். வெங்காயம்.

நாம் தமிழர் கட்சி ஆவணம் பக்கம் எண் 23-ல் தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு என்ற விரிவான பத்தியில் தமிழ்ச்சமூகம் குறித்து கட்சி எவ்வாறு வரையறை செய்கிறது என்பது குறித்தும் இந்திய அரசு குறித்தும், திராவிடம் குறித்தும் விரிவான மதிப்பீட்டு ஆய்வுரைகள் இடம் பெற்று இருக்கிறது. அவற்றின் கருத்துக்களை நாம் சுருங்கிய வடிவத்தில் காண்போம்.

அதன்படி

1. தமிழ்ச்சமூகம் ஏகாதிபத்தியம், தாராளமய பொருளியல், அரை நிலவுடைமை, அரை முதலாளியம், பன்னாட்டு பெரு வணிக அதிகாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சமூகமாய் இருக்கிறது.

2. இவற்றின் மூலமாக இந்தி பேசும் மக்களின் பேரின ஒடுக்குமுறைக்கும், வந்தேறி இனங்களான ஆரியர்- திராவிடர் போன்றவற்றின் ஒடுக்குமுறைக்கும் தமிழ்ச் சமூகம் உள்ளாகி இருக்கிறது.

3. ஆரியத்தால் சமூகம், மொழி, பண்பாடு சிதைக்கப்பட்டு, வழிபாட்டு மொழி, வழக்கு மொழி, கல்வி மொழி, பாராளுமன்ற மொழி போன்ற மொழி உரிமைகள் அற்ற சமூகமாய் தமிழ்ச் சமூகம் விளங்குகிறது.

4. திராவிடத்தால் தமிழகத்தின் உள்ளும், புறமும் தமிழ்நிலங்களை பறி கொடுத்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும். மேலும் திராவிடத்தால் ஆற்று நீர் உரிமைகள், தமிழ்நாட்டு ஆட்சி உரிமை போன்றவற்றை இழந்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும். மேலும் திராவிடத்தால் தமிழ்ச்சமூகம் தாழ்வு மனப்பான்மை உள்ள சமூகமாக, ஒருமைப் பண்பு இல்லாத சமூகமாக, அடிமைக் குணம் உடைய சமூகமாக மாறியுள்ளது.

5. ஆங்கிலேயர் காலம் துவங்கி இன்று வரை ஏற்பட்டிருக்கிற கல்விப் பரவல், அரசியல் சமூக விழிப்புணர்ச்சி, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், வைகுண்டர் முதலிய தலைவர்களின் போராட்டங்களினாலும் , ஆரியத்தினை எதிர்த்துப் போராடிய அம்பேத்கார், பெரியார் ஆகிய தலைவர்களின் போராட்டங்களினாலும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான சாதீயக் கொடுமைகள் குறைந்துள்ளன. ஆனால் மாநில மக்களின் உரிமை, மகளிர் உரிமை போன்றவற்றைப் பற்றி கவலைப்படாத, முழுமையற்றதாக இருக்கும், பல வித பற்றாக்குறைகளுக்கு நடுவே அமல்படுத்தப்படும் சாதி வாரி இட ஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் சாதிகளுக்கு இடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முரண்கள் தோன்றுகின்றன. ஆளும் சாதியான மேல் சாதி பறித்த நிலங்களை மீட்கும் பணிகளையும், தமிழர் இனத்தினை ஒன்றிணைத்து சேர்த்து செய்யும் கட்டுமானப்பணிகளையும் இணைத்துக் கொள்ளாத வெறும் சாதி ஒழிப்புக் குரல்கள் பயனற்றவை.

6. தமிழ்நாட்டில் தமிழர் மீது ஆதிக்கம் செய்வதில் இம்மண்ணில் வந்து குடியேறிய ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் போட்டி நிலவுகிறது. ஆரிய மொழியான சமஸ்கிருதமும், அதன் பண்பாடுமே இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையானவை என ஆரியம் முன் மொழிகிறது. தமிழனுக்கென தனி பண்பாடுமில்லை, வரலாறுமில்லை –இருப்பதெல்லாம் ஆரியம் சார்ந்தவையே என அதை திராவிடம் வழி மொழிகிறது.

7. ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் தமிழனை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு அடிப்படையில் முரணில்லை. ஆரியத்திலிருந்து திராவிடம் காக்கும் எனவும், திராவிடத்திலிருந்து ஆரியம் காக்கும் எனவும் பலர் நினைக்கின்றனர். இந்திய சூழல், தமிழகச் சூழலில் இருக்கும் மிகப்பெரிய கோட்பாட்டு முரண் தமிழியத்திற்கும், தமிழியம் அல்லாதவைகளுமானது ஆகும்.

8. நடப்புக்கால திராவிடம் தனது தலைமையை தக்கவைப்பதற்காக தமிழர்களுக்கு மது ஊட்டி அவர்களுடைய அறிவையும், விழிப்புணர்வையும் அழிக்கிறது. இலவசங்களை அளித்து தமிழர்களிடையே உழைக்க விரும்பா பண்பையும், பிறரை சார்ந்திருக்கும் மனநோயையும் உண்டாக்கி வருகிறது .

இந்திய அரசு குறித்து மதிப்பீடு ( ஆவண பக்க எண் 27 )

1. மாநில அதிகாரங்களை பறிக்கிறது . தாராளமயமான பொருளியல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆட்பட்ட தரகு முதலாளித்துவம், ஆரிய பார்ப்பனத் தன்மை சார்ந்த இந்தி பேரின ஆதிக்கம் நிலவுகிறது.

2. இந்தி தேசிய இனம் ஆளும் தேசிய இனமாக, மற்ற தேசிய இனங்கள் அடிமை தேசிய இனங்களாகவும் இருக்கிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய இனத்தினை அழிக்கும் வேலையை இந்தி ஆரிய பார்ப்பனீய அரசு செய்கிறது.

3. தமிழீழ சிக்கலில் தமிழர்களின் போராட்டத்தையோ, தமிழக அரசின் முயற்சிகளையும் இந்திய அரசு மதிக்காமல் இருக்கிறது. தமிழக மீனவர்களை படிப்படியாக அழித்து வருகிறது. தமிழக நீராதாரங்களை பிற மாநிலங்களுக்கு பறித்துக் கொடுத்து தமிழக விவசாயிகளை அழிக்கிறது. அணுமின்நிலையங்களை திறந்து தமிழர்களை அழிக்கத் திட்டமிடுகிறது.

இவ்வாறாக திராவிடத்தின் மீதும் ஒரு விரிவான ஆய்வினையும் ஆவணம் மேற்கொள்கிறது. தமிழ்ச்சமூகத்தினை அரசியல் பொருளாதார ஆய்வு செய்யும் ஆவணம் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் உள்ள ஓர்மை பண்பு நலன்களை ஆய்வு செய்கிறது. தமிழ்த் தேசிய இன உருவாக்கம் ஏற்பட விடாமல் பாதுகாக்கும் திராவிடத்தின் கவனம் குறித்தும் ஆவணம் ஆய்வு செய்கிறது. “தமிழ்நாட்டில் உள்ள திராவிடம் தமிழர்களை தொடர்ந்து தனது ஆளுகையின் கீழ், கடந்த 500 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது. கொஞ்சமும் வெட்கமின்றி, இந்த மக்களாட்சிக் காலத்திலும் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க விரும்புகிறது. அதனால் தமிழ்நாட்டை திராவிட நாடாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கு இன்னொரு எதிரியும், மூல எதிரியுமான மனு நெறியர்கள் பற்றி தொடர்ந்து திராவிடம் பூச்சாண்டி காட்டி வருகிறது. அதே வேளை தமிழ்த் தேசிய கருத்தியலை மனதார ஏற்காததோடு, தமிழ்த்தேசிய இன உருவாக்கம் உருவாகாமல் கவனமாக பார்த்து வருகிறது ” (ப.எண் 29 ) என ஆவணம் விவரிக்கிறது. ஈழத்தில் நமது உறவுகள் தாயக விடுதலைக்காக களத்திலே நின்ற போது, அதற்கான ஆதரவை நம்மால் வழங்க முடியாமல் போனதற்கு முழு முதற் காரணம் ஆட்சி அதிகாரம் தமிழர் கரங்களில் இல்லாதது தான் ஆகும். தமிழர் அல்லாத பிற மொழியாளர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் நமது குரல்கள் நம் தொண்டையிலேயே நசுக்கப்பட்ட அவலத்தினை தான் நாம் சந்திக்க நேர்ந்தது. எந்த ஆட்சி அதிகாரம் இல்லாமல் நாம் வீழ்ந்து போனோமோ, அந்த ஆட்சி அதிகாரத்தினை நோக்கி தமிழ்த் தேசிய இனம் இன்று நகரத்துவங்கி உள்ளது. எம் மண்ணில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் எம்மினம் சார்ந்த ஒருவர்தான் ஆளலாம் என்கிற ஒரு தேசிய இனத்தின் ஆன்ம விருப்பத்தினை ஆவணம் வெளிக்காட்டுகிறது.

கட்சியின் உடனடி இலக்காக ஆவணம் “இந்தியாவில் அந்தந்த மாநிலத்தவரே அந்தந்த மாநிலங்களை ஆளும் நிலையில், தமிழ்நாட்டை தமிழர் ஆள முடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவது" என வரையறுத்து அறிவிக்கிறது ( ப.எண் 30 ).

அமைப்பின் வழி காட்டி மெய்ம்மம் என்ற தலைப்பில் தனது வேரினை பார்த்து விரிவு செய்யும் பண்பாய் நாம் தமிழர் கட்சி தனது முன்னோடிகளை தனது ஆவணத்தில் நினைவுக்கூர்ந்து போற்றியுள்ளது.

தமிழர் தம் வாழ்வியல் விழுமியங்களை –தொல்காப்பியர், வள்ளுவர், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும், கட்சி தனது மொழி மீட்சி கருத்தியலை மறைமலையடிகளார், பாவாணர், பாவேந்தர் ஆகியோரிடமிருந்தும், விடுதலை கண்ணோட்டத்தினை நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ, சாலை இளந்திரையனார், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் ஆகியோரிடமிருந்தும், வர்க்க பேதமற்ற கண்ணோட்டத்தினை வள்ளுவம், மார்க்சியம், லெனினியம் ஆகியவற்றிலிருந்தும், பகுத்தறிவுக் கொள்கைகளையும் சாதி ஒழிப்பினையும் வள்ளுவர், தமிழ்ச்சித்தர்கள், வள்ளலார், அத்திவாக்கம் வெங்கடாச்சலம், தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, வைகுண்டர், அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவகங்கை இராமச்சந்திரன், அண்ணல் அம்பேத்கார் ஆகியோரிடமிருந்தும் கட்சி பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ப.எண் 31 ).

கட்சி தனது தமிழ்த்தேசிய வழிகாட்டிகளாக நிலந்தருதிருவிற் பாண்டியன் துவங்கி தேசியத்தலைவர் பிரபாகரன் வரையிலான நீண்ட மரபினை போற்றும். சமுதாய வழிகாட்டிகளாக வள்ளலார், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், ஒண்டிவீரன், அய்யன் காளி, இமானுவேல் சேகரன், சி.பா ஆதித்தனார், காயிதே மில்லத் என நெடிய மரபினை கட்சி கருதும் என விவரிக்கும் ஆவணம் தமிழறிஞர்கள், போற்றுதலுக்குரிய பெருமக்கள் ஆகியோரையும் பட்டியலிடுகிறது,

தமிழர் இன வரலாற்றில் நாம் தமிழரின் பணி காலத்தின் விளை பொருளாய் உருவாகி இருக்கிறது. தனித்த தேசிய இனமொன்றின் உரிமைக் குரலை சிதைக்கும், மாற்றும், வலிமையைக் குறைக்கும் எதுவும் அந்த தேசிய இனத்திற்கு எதிரானதே என்ற புரிதலில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “உங்களை பிறமொழியாளர்கள் என்று சொல்லி உங்களைப் பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள், நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும்? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்! உயர்வோம்!" (ப.எண் 50) என அழைக்கிறது.

தன்னை தமிழர் என அறிவித்துக் கொள்ள திராவிடர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறதோ அதே தயக்கமும், முரணும் தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொள்வதில் இருக்கிறது. தமிழர்களை இழிவுபடுத்திய முதன்மை சக்திகளாக ஆரியம் எனப்படும் பார்ப்பனீயத்தையும், அதனை சார்ந்த திராவிடத்தினையும் ஆவணம் அடையாளம் காட்டுகிறது. திராவிடத்தினை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வார்கள்; ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழியத்தினை எக்காலத்திலும் ஆரியம் ஏற்றதில்லை. மாறாக நேர்கொண்டு எதிர்த்திருக்கிறது. ஆவணம் முழுக்க மனுவியல் என்கிற தூயத் தமிழ் சொற்றொடர் ஆரியம், பார்ப்பனீயம் சொல்லாடல்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டிருகிறது. உடனே காமாலை கண்களுக்கு வந்து விட்டது காய்ச்சல். பார்ப்பான் என சொல்லவில்லையாம். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஆரியத்தினை திட்டினால் கூட இவர்களுக்கு கோபம் வருகிறது. பல இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் ஆரிய பார்ப்பனர் என்பதை அச்சிட்டும் கூட திராவிடர்களுக்கு ஓயாத புகைச்சல். ஆரியத்தின் சார்பு ஆற்றல் திராவிடம் என்ற உண்மையை உரத்து கூறி விட்ட பிறகு புகையாமல் என்ன செய்யும்? எதையோ நினைத்து உரலை குத்தியது போன்ற இக்கட்டு நிலை திராவிடர்களுக்கு.

கலைச்சொற்கள் விளக்கத்தில் அந்தணன், பார்ப்பான், ஆரியன் போன்ற சொற்களில் பார்ப்பானை புகழ்ந்து இருக்கிறது ஆவணம் என்ற கூப்பாடு வேறு. ஐயா.. பொருள் என்பது வேறு. பொருள் விளைவிக்கும் செயல் என்பது வேறு. ஒரு சொல்லின் பொருள் அகராதிகளில், இலக்கியங்களில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கலைச்சொற்கள் விளக்கத்தில் பயன்படுத்த முடியும்.

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான் (குறள் –நீத்தார் பெருமை)

பொருள் :அற நெறியில் ஆழ்ந்து நன்றொழுகி ,உயிர்களிடத்தில் செம்மையான அன்பும், ஈரமும் கொண்டவர்களே அந்தணர்கள் என போற்றத்தக்கவர்கள் .

இதனைக் கண்ட திராவிடப் பற்றாளர்கள் உடனே திருவள்ளுவருக்கு பெரியார் எதிரி பட்டம் சூட்டிவிடப் போகிறார்கள். வள்ளுவர் ஜாக்கிரதை.

சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்களை புகழ்கிறார்கள் என்ற கச்சேரி; ஐயா.., திராவிடர்களே! உங்கள் இயக்கத்திற்குத் தான் ஆரிய தலைமை வாய்த்திருக்கிறது. எங்களுக்கு அல்லவே. அதே கலைச்சொல் பகுதியில் உள்ள மனுவியம் என்பதற்கான பொருளையும் வெளியிட்டு இருந்தால் நேர்மையாக இருந்திருக்கும் .

கட்சியின் உறுதிமொழிகளில் இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், நாட்டின் இறையாண்மை ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்த கட்சி உறுதியளிக்கிறது என்ற வரிகள் திராவிடப் பற்றாளர்கள் ஆவணத்தின் மீது நிகழ்த்தும் விமர்சனமாக இருக்கிறது. இந்த நாட்டில் பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில் பெரியார் திக உள்ளிட்ட எந்த கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது? துணிவிருந்தால் சொல்லுங்கள். பிறகு எதிரே நில்லுங்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார் என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நினைவிற் கொள்க. இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா, நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி. மற்றதெல்லாம் உங்கள் மனசாட்சி.

திராவிடத்தின் பெயரினால் இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட, ஆளும் ஆளத்துடிக்கும் பிறமொழியாளர்களுக்கு எம் மீது கோபம் வருவது இயற்கை. அதே போல வாழ்வதற்கான போராட்ட அம்சமாக எம்மை நாங்கள் தகுதிப்படுத்தி கொள்ளலாக இந்த ஆவணம் வெளிப்படுகிறது. காலத்தின் குரலாய் ஒலிக்கும் இந்த ஆவணத்தினை நீர்த்து போன அலறல்களால் வீழ்த்த முடியாது. ஒரு தேசிய இனத்தின் விடியலுக்கு கிழக்கு வீதிகளில் எழுதப்பட்ட சிவப்புப்புள்ளியாக நாம் தமிழர் கட்சியின் ஆவணம் மிளிர்கிறது. முதன் முதலாக எம் தேசிய இனத்தின் எழுதலுக்கான எத்தனிப்பு இது.

”இருட்டின் வீதிகளில்

மின்னிட்டு விழும் முதல் தெறிப்பு

கண்களை கூசத்தான் செய்யும்…

தொடர்ந்து எழும் எம் கதிர்களின் ஒளியில்

சாத்தியமாகும் எம் தேசிய இனத்தின் விடுதலை…”

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19966%3A2012-05-31-05-14-05&catid=1%3Aarticles&Itemid=264

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அன்றாடம் காச்சியிடம் தொடங்கி நாட்டையே ஆழும் வேந்தன் வரை அவர்தம் புத்தியினை பார்ப்பான் வயிற்றுக்கு சோறுபடைக்கும் கலமாக மாற்றிய இந்த பீடைகளால்த்தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கு நாடுகள் போல் அல்லாது வான்நாள் முழுவதும் பிச்சைக் கலத்தை எந்தி இருப்பதன் மொத்தக் காரணம்!

பெரியார் வாழந்த காலதின் தேவை ஆக இந்தது, ஒரு ஏழை தன் ஆக்கத்தை வேரோடு பிராமணனின் வயிற்றுக்கு படைத்துவிட்டு தன் வயிற்றுக்கு ஆண்டவன் இலைபோடுவான் என்று காத்து இருந்த அவன் அறியாமை அந்த ஒன்றுதான் களையப்படுவது ஒரு சமூக முன்னேற்றத்திற்கு முதலாவது வாசலாக இருந்தது!

ஒரு தன்னலம் ஒரு பொதுனல வேசம் போட்டு ஊரை ஏமாற்றுவதை அனுமதைப்பதை விட அந்த பொதுநலத்தை ஊரை விட்டு துரத்துவது மேலானது.

அப்படியேதான் கடவுள் பக்தியை தன்னலம் இரையாக கொள்வதை அனுமதிப்பதைவிட அந்தக் கடவுள் பக்தியே இல்லாது போதல் பெரியார் பார்வையில் தவறாக இருக்கவில்லை!

பெரியாரைப் புரியார் பலர் இங்கே இருக்கலாம், ஆனால் அவருக்குப் பின்னால் பல இலட்சங்கள் அவரை மதிப்பவர்கள் இருப்பவர்கள் இருப்பதை நீங்கள் அறியாது இருக்க முடியாது. எனவே அவர்களை புண்படுத்தாதீர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திராவிட மாணவனால் இதில் கூற்றப்பட்டு இருப்பதை பொய் என சொல்லி நிரூபிக்க முடியுமா?

ஒரு அன்றாடம் காச்சியிடம் தொடங்கி நாட்டையே ஆழும் வேந்தன் வரை அவர்தம் புத்தியினை பார்ப்பான் வயிற்றுக்கு சோறுபடைக்கும் கலமாக மாற்றிய இந்த பீடைகளால்த்தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கு நாடுகள் போல் அல்லாது வான்நாள் முழுவதும் பிச்சைக் கலத்தை எந்தி இருப்பதன் மொத்தக் காரணம்!

பெரியார் வாழந்த காலதின் தேவை ஆக இந்தது, ஒரு ஏழை தன் ஆக்கத்தை வேரோடு பிராமணனின் வயிற்றுக்கு படைத்துவிட்டு தன் வயிற்றுக்கு ஆண்டவன் இலைபோடுவான் என்று காத்து இருந்த அவன் அறியாமை அந்த ஒன்றுதான் களையப்படுவது ஒரு சமூக முன்னேற்றத்திற்கு முதலாவது வாசலாக இருந்தது!

ஒரு தன்னலம் ஒரு பொதுனல வேசம் போட்டு ஊரை ஏமாற்றுவதை அனுமதைப்பதை விட அந்த பொதுநலத்தை ஊரை விட்டு துரத்துவது மேலானது.

அப்படியேதான் கடவுள் பக்தியை தன்னலம் இரையாக கொள்வதை அனுமதிப்பதைவிட அந்தக் கடவுள் பக்தியே இல்லாது போதல் பெரியார் பார்வையில் தவறாக இருக்கவில்லை!

பெரியாரைப் புரியார் பலர் இங்கே இருக்கலாம், ஆனால் அவருக்குப் பின்னால் பல இலட்சங்கள் அவரை மதிப்பவர்கள் இருப்பவர்கள் இருப்பதை நீங்கள் அறியாது இருக்க முடியாது. எனவே அவர்களை புண்படுத்தாதீர்கள்!

அப்படி என்றால் கிட்லருக்கு பின்னால் இருப்பவர்காளையும், ஏன் ராஜ்பக்சா, சோனியா, கருனாநிதிக்கு பின்னால் இருப்பவர்களையும் கூடத்தான் புன்படுத்த கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.