Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)

Featured Replies

தமிழ் தேசியவாதி மற்றும் துரோகி என்பதை இன்று யார் வரையறுக்கிறார்கள்? ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகளை விமர்சித்த அனைவரையும் துரோகிகள் என்றோம். பின்பு அதே "துரோகிகள்" பாவமன்னிப்புப் பெற்று தேசியவாதிகளாக ஆனார்கள்..

என்னுடைய பார்வையில் யதார்ததத்தை உணர்ந்த ஒருவன், அதை சொல்ல மறுத்தால், மறைத்தால் அவன் தன்னுடைய இனத்திற்கு துரோகம் செய்கிறான். இதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.

நீங்கள் யதார்த்தத்தை உணர்ந்தவரா? அப்படியென்றால் உங்களை நீங்களே துரோகி என்று வரையறுத்து விட்டீர்கள். :lol: :lol: :lol: (நாங்கள் யாரும் சொல்லவில்லை. :icon_idea: )

அதாவது ஏற்கனவே நீங்கள் கூறியபடி நாங்கள் உங்களை என்ன செய்திருப்போம் என்று பயந்து நீங்கள் உங்கள் உண்மை கருத்துகளை வைக்காமல் (உங்களுக்கு தெரியாது என்பது வேறு விடயம் :D) அதனை சொல்ல மறுத்து அல்லது மறைத்து விட்டீர்கள். :lol: :lol:

உண்மையை சொல்லுங்கள்! „விடுதலைப் புலிகள் போகின்ற வழி பெரும் அழிவைத் தரும், மக்கள் சாவார்கள், போராளிகள் கையேந்தும் நிலை வரும், தலைவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போகும்“ என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள்?

கொஞ்சமாவது நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும்.

தனக்கே தான் advice பண்ணுவது என்பது இதுதானோ? :lol: :lol:

Edited by காதல்

  • Replies 137
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் சபேசனின் நோக்கம் நிறைவேறி விட்டது என்று :D:icon_idea:

இப்போ நான் சொன்னது போல தலைவர் முன்னமே வெளியேறி இருக்க வேண்டும், அது தான் தலைவர் விட்ட பிழை எண்று பலர் நினைத்தால் மகிழ்ச்சி.. அல்லது கடைசிவரை போராடிய ( இண்று வரை நிலை தெரியாத) தலைவரின் செயல் தான் சரி எண்று பல பேர் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி-தயா.

இப்படியான கருத்துக்கள்தான் எம்மவர் பலரும் விரும்புவது ,ஆனால் அது உண்மையல்ல என்பதுதான் உண்மை.

இப்படியான கருத்துக்கள்தான் எம்மவர் பலரும் விரும்புவது ,ஆனால் அது உண்மையல்ல என்பதுதான் உண்மை.

இடையிலை விட்டு போட்டு ஓடி வந்தவைக்கு இறுதி வரைக்கும் நிண்டைவையை பாக்க பொறாமையாக தான் இருக்கும்... அதுக்கு நீங்கள் விதி விலக்கு அல்ல... என்ன நீங்கள் எல்லாம் ஆரம்பிக்காமலே ஓடி வந்தனீயள்... அதுக்கு பிறகு காரணத்தை கண்டு பிடிச்சு இருக்கிறீயள்...

நானும் உங்களை மாதிரித்தான் அண்ணை அரை குறையில கொஞ்சக்காலம் நிண்டு காயப்பட்டு மிக மெதுவாய் செய்து கொண்டு வளியை அடைச்சு கொண்டு நிண்டன்... தலைவர் சொன்னார் உனக்கு பின்னாலை உன்ர வேலையை வேகமாக செய்து முடிக்க நூறு பேர் ஆர்வமாய் நிக்கிறாங்கள் நீ உன்னாலை முடிஞ்ச வேறை வேலையை செய் எண்டு... (எனக்கு நேர சொல்ல இல்லதான் ஒரு சந்திப்பிலை பொதுவாய் சொன்னது) எனக்கு தோதான வேலை எனக்கு கிடைக்க இல்லை... கொஞ்சம் கஸ்ரமான முடிவுவாக தான் இருந்தது... பேசாமல் வீட்ட போவம் எண்டு நினைச்சன் வந்திட்டன்... 10 வருசம் செய்ததுகளை தூக்கி போட்டு விட்டு முதலிலை இருந்து ஆரம்பிக்கிறது கடினம் தானே...??

நான் உங்களை போல இல்லை அண்ணை... என்னை விட திறமையாக செய்பவர்களை பாராட்ட என்னால் முடிகிறது... எனது இயலாமையாலை எப்பவும் காள்புணர்ச்சி கொண்டது கிடையாது... அவர்களை மட்டம் தட்ட எப்பவும் காரணத்தையும் தேடி திரிந்தது கிடையாது...

இதே மாதிரித்தான் செல்வம் அடைக்கலநாதன் சிறிசபாரத்தினத்தின் நினைவு நாளில் உரையாற்றினார்... புலிகளுக்கும் எங்களுக்கும் பிரச்சினை இருக்கு.. ஆனால் அவர்களால் தான் இப்போது எதையும் சாதிக்க முடியும் என்பதனால் அவர்களை இப்போது ஆதரிக்கின்றோம்... எங்களின் பிரசினையை பிற்காலத்தில் பார்த்து கொள்வம் என்கிறார்... அதோடை செல்வம் உங்களை போல எங்கையும் ஓடவும் இல்லை...

எனக்கு தெரிய செல்வம் புலிகளுக்கு எதிராக தான் குழு நடத்தினவர்... அவருக்கு எதிராக புலிகள் ஏதும் செய்ததாக நான் அறியவில்லை... இதுதான் நானும் உங்களுக்கும் சொல்லக்கூடியது...

கல் எறிவீர்கள் எண்டு தெரிந்தால் நாய் கூட கடிக்க வரும்... புலி சும்மா இருக்குமா...?? ( புலிகளின் உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரபாகரனால் சும்மாதான் இருக்க முடியுமா...?? )

Edited by தயா

  • தொடங்கியவர்

தயா!

நான் பூநகரி வீழ்ந்தவுடன் விடுதலைப் புலிகள் மரபு வழியில் இருந்து மாறி இலங்கை முழுவதும் பரவி போர் புரிய வேண்டும் என்று கருத்தாடலை நடத்தியிருந்தேன். அதன் இணைப்பை இங்கே தந்திருக்கிறேன்.

எங்களின் கருத்தில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

என்னுடைய கோபம் எதுவென்றால், அன்றைக்கு விடுதலைப் புலிகளின் குரலை, அறிக்கைகளை தமது ஆய்வுக் கட்டுரைகளில் பிரதிபலித்த பொழுது பாராட்டியவர்கள், இன்றைக்கு ஆய்வாளர்களை குற்றம் சாட்டுகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால், புலிகள் தோற்பார்கள் என்று சொன்னவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொன்னவர்கள் இன்றைக்கு வெல்வார்கள் என்று சொன்னவர்களையும் வசைபாடிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏன் இந்த முரண்பாடு?

  • தொடங்கியவர்

சரி, பொதுவாகக் கேட்கிறேன்

பெரும்பாலான என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளில் தமிழீழப் போராட்டம் வெல்வதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும், புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற ராஜதந்திர பரப்புரை போராட்ட வழிமுறைகளில் பெரும் மாற்றங்கள் வர வேண்டும் என்று பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அநேகமான கட்டுரைகளில் இப்படித்தான் முடித்திருக்கிறேன்.

மற்றைய ஆய்வாளர்களின் கட்டுரைகளிலும் இந்தக் கருத்துக்களை நான் பல முறை கண்டிருக்கிறேன்.

வெற்றிகள் மட்டும் சொல்லப்படவில்லை. அவற்றை தக்க வைப்பதற்கு ராஜதந்திர அரசியல் வழிமுறைகளும் வலியுறுத்தப்பட்டிருந்தன

இவற்றை செயற்படத்தாது எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆய்வாளர்களை குற்றம் சாட்டுகிறீர்கள்?

செய்தி : முஸ்லிம்களின் கடைகளிற்கு சிங்களவர்கள் மலம் வீசி தாக்குதல்

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வாய்ப்பு இருக்கிறது.

gallej.jpg

நேற்றைய பெந்தர-எல்பிட்டிய தாக்குதல் பற்றி களத்தில் இருந்த மு**** சமூக போராளி ஒருவரிடம் வினாவிய போது (அவர் இணையத்தில் எழுதுபவர்),

இந்த தாக்குதலானது புஞ்சி பண்டா லொக்கு லியனகே தலைமையில் நான்கு குழுவாக செய்திருப்பதாக அறியபடுகிறது.

கதண்டோல பகுதியில் இருந்து B14 வீதி வழியாக கிழக்கு புறம் இருந்து ஒரு அணியும்,

குருந்துகதேகம பகுதியில் இருந்து மேற்குப்புறமாக ஒரு அணியும்,

பெந்தர -எல்பிட்டிய வீதியின் வடக்கு பக்கமாக இருந்து ஒரு அணியும்,

அவிட்டாவ- எல்பிட்டிய வீதியின் பக்கம் இருந்து வடகிழக்காக ஒரு அணியும்,

நள்ளிரவைத்தாண்டி அதிகாலை 1 மணி 36 நிமிடம் 26 செக்கனில் மு**** வர்த்தக நிலையங்களை நோக்கி ஒரே நேரத்தில் சிலந்தி வடிவில் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு தேவையான வழங்கல்கள், முதல் நாள் இரவே பெறப்பட்டு, எல்பிட்டிய பாடசாலைக்கு அருகில் மறைத்து வைக்கபட்டிருந்தன.

கொடிதுவக்கு தலைமையிலான அவிட்டாவ அணி, முதல் தாக்குதலை தொடுக்க, கதண்டோல அணி தாக்குதல்களை முடித்து வைத்தன. தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வழங்கல்கள், அணிகளிடையே பங்கிடபட்டு சரமாரியான தாக்குதல்கள் இடம்பெற்றதை நேரில் கண்ட ஒரு மு**** சமுக போராளி எங்களிடம் தெரிவித்தார்.

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்துவிட்டதப்பா..

தயா

மற்றும் பகலவன்

வேடிக்கை என்னவென்றால், புலிகள் தோற்பார்கள் என்று சொன்னவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொன்னவர்கள் இன்றைக்கு வெல்வார்கள் என்று சொன்னவர்களையும் வசைபாடிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏன் இந்த முரண்பாடு?

முரண்பாட்டுக்கு அவரவர் தான் காரணம். இங்கு உங்களை எடுத்துக்கொண்டால் புலிகள் வெல்வார்கள் என்று முன்பு கருத்தெழுதியிருந்தீர்கள், சரி.

இப்ப "புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முதலே தெரியும். ஆனால் சொன்னால் நீங்கள் என்னை என்ன செய்வீர்கள் என்று நினைத்து சொல்லவில்லை" என்று கூறுவது பிழை.

உங்கள் முரண்பட்ட கருத்துகள் தான் உங்களை நாம் குறை சொல்ல காரணம்.

அன்றே கூறியிருக்க வேண்டும். கூறவில்லை என்றால் இன்று அதை கூறவேண்டிய அவசியமில்லை. உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்திருந்தால் கூட போராட்டம் முடிந்து விட்ட, பல மக்கள் கொல்லப்பட்டு விட்ட இந்த நிலையில் தேவையில்லாமல் இதை கூறி தம்பட்டம் அடிப்பது உங்களுக்கு சரியாக தெரிகிறதா????

எழுத தெரிந்தவர், ஆய்வு செய்யக்கூடியவர் என்றால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி ஒரு ஆய்வு செய்து அது பற்றி எழுதி இங்கு பிரசுரியுங்கள். (பிறகு முஸ்லிம்களை பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை :D).

அதை விடுத்து இப்படி ஒரு திரி அதில் உண்மையை சொன்னவர்களை பாராட்டவில்லை என்றும் (அவர்கள் முன்பும் அதை தான் சொன்னார்கள், அது பிழைத்தது தானே), அதை விட உங்களுக்கு வேறு பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு போராளி மேல் பழி போடுகிறீர்கள்.

தமிழர்களின் இந்த சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா?

முதலில் விவசாயி விக் அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள்.

புலிகள் சென்ற பின், யாழில் நானூற்றி இருபது கொலைகள், தலைமறைவுகள். ஒரு குற்றவாளி கூட பிடிபடவில்லை. யாராவது கடிதம் போட்டார்களா? அல்லது வானொலியில் ஆரூடம் கூறுகிறார்களா?

Note: இங்கு நாம் கேட்கும் கேள்விகளில் உங்களுக்கு தெரிந்ததற்கு மட்டும் தான் பதில் எழுதி வருகிறீர்கள். அதுவும் ஆயிரம் பிழைகளுடன். அதையும் இனி திருத்திக்கொள்ளுங்கள். :wub:

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

:lol: :lol: :lol: :lol: :lol:

ஐயோ பகலவன் அண்ணா, கலாய்ச்சிட்டியள். பச்சை கைவசம் இல்லையே... நாளைக்கு போடுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி : முஸ்லிம்களின் கடைகளிற்கு சிங்களவர்கள் மலம் வீசி தாக்குதல்

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

  • தொடங்கியவர்

காதல்,

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. உங்களுக்கு விளங்கக் கூடியபடி தெளிவாக எழுதாதற்கு என்னை மன்னிக்கவும்.

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று முன்பே எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்ட கேள்வியின் அர்த்தம் வேறு. அதற்கான உங்களின் உண்மையான பதில் "உங்களை அன்றைக்கு துரோகி என்று அழைத்திருப்போம்" என்பதுதான்.

இது அனைவரின் மனச்சாட்சிக்கும் தெரியும்.

எனக்கு என்ன தெரியும் என்பதை நான் சாந்திக்கு கொடுத்த பதிலில் சொல்லியிருக்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவில் அதை சொல்லியே வந்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்

மற்றது, நான் போராளி மீது பழி போட வேண்டிய தேவை எதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் நடந்து கொண்டிருந்த சண்டைகள் பற்றி எப்படியான அறிக்கைகளை தந்து கொண்ருந்தார்கள் என்பது இன்றைக்கும் பதியப்பட்டிருக்கின்றன.

உண்மையில் ஆய்வாளர்கள் விடுதலைப் புலிகள் சொன்னதற்கு அப்பால் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இதை யாரும் மறுக்க முடியாது. நடேசன் நடந்து போய் இராணுவத்தை தாக்கி விரட்டுவோம் என்று சொன்னால், ஆய்வாளர்கள் எந்த வழியால் நடந்து போய் இராணுவத்தை தாக்க வாய்ப்புள்ளது என்று எழுதுவார்கள்.

இதில் யார் மீது குற்றம்?

Edited by சபேசன்

இந்த திரியில் சபேசனோடு வாக்குவாதம் புரிகிற எல்லோருக்கும் அந்ததகுதி இருக்கலாம்.ஆனால் ஒருவரைத்தவிர.அவற்றை கதைகேட்டால் இங்கை பச்சைகுத்துறவை எல்லாம் பச்சைமட்டையாலை றோட்டிலை கட்டிவைச்சு அடிகுடுத்து அனுப்புவாங்கள்.தேடிக்கொண்டு இருக்கிறன்.ஆள் அம்பிடுகுதில்லை.வெகு விரைவில் சந்திப்பன்.

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

காதல்,

விடுதலைப் புலிகள் தோற்பார்கள் என்று எனக்கு முன்னமேயே தெரியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. உங்களுக்கு விளங்கக் கூடியபடி தெளிவாக எழுதாதற்கு என்னை மன்னிக்கவும்.

அண்மையில் என்னுடைய முன்னாள் வாசகர் ஒருவரை சந்தித்தேன். என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை ஒரு பிடிபிடித்தார். தமிழர்களை என்னைப் போன்றவர்கள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்று சொன்னார்.

சொற்களுக்கு இடையில் வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தது என்னுடைய தவறுதான். சுpல விடயங்கள் தெரிந்திருந்தும் கூறாமல் போனதும் என்னுடைய தவறுதான். என்றாலும் சமாளிக்கப் பார்த்தேன். அதை நான் முன்னமேயே சொன்னேனே, இதை நான் முன்னமேயே சொன்னேனே என்ற விளக்கத்தை எல்லாம் அவர் ஏற்கவில்லை.

இதற்கு என்ன அர்த்தம்????? :lol:அண்மையில் அவரை சந்தித்திருப்பதாக வேறு போட்டிருக்கிறியள். அதாவது போர் முடிந்து சில வருடங்கள் கழிந்த நிலையில். :lol:

எனக்கு தான் விளங்கவில்லையோ தெரியவில்லை. எதற்கும் புரிய வையுங்களன். :D

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

யாராவது அல்லேலூயா சகோதரர்கள் இருந்தால் இவருடன் தொடர்பு கொள்ளுங்கோ..............பரிசுத்தமான உன்னதமான மகிமையான ஸ்தோத்திரம் மிக்க கருத்துக்களை வாரி வழங்குவார்.......

ஐயோ நீலமேகம்! காதலும் விசுகுவும் அவர்களுக்கு பச்சை முடிந்து விட்டது என்று கவலைப்பட்டதால், நான் என்னுடைய பச்சையை அவர்களுக்காக பகலவனுக்கு குத்தி விட்டேன்!!!!

பகலவன் அண்ணா எழுதினது சரி என்று மனதுக்கு தோன்றினாலும் அதை கூட ஒப்புக்கொள்ள மனமில்லாமல் எங்கள் மேல் பழியை போட்டு விட்டீர்கள். :lol: :lol:

கருத்து பிடித்திருந்தால் நாங்கள் நாளைக்கு வந்தும் பச்சை குத்துவம். :) பகலவன் அண்ணா பச்சைக்காக எழுதவில்லை. என்றதால் நீங்கள் எமக்காகவோ அவருக்காகவோ இரங்கி பச்சை போட தேவையில்லை. உங்கள் பிச்சை சாரி..... பச்சை அவருக்கு தேவையும் இல்லை. :lol::icon_idea:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

. உங்கள் பிச்சை சாரி..... பச்சை அவருக்கு தேவையும் இல்லை. :lol::icon_idea:

:D :D :D

தமிழ் புகுந்து விளையாடுது

  • தொடங்கியவர்

காதல்,

மீண்டும் நான் சாந்திக்கு சொன்ன பதிலைப் படியுங்கள். நான் எழதிய கதையையும் படியுங்கள். சமாளிக்கப் பார்த்ததாக எழுதியிருக்கிறேன். முன்னே சொன்னேன் என்றால் மற்றவர்கள் சொல்வதற்கு முன்னே சொன்னேன் என்று அர்த்தம்.

கிழக்கு விழும் என்று தெரிந்தது. பலர் சொல்ல முதல் சொன்னேன். வன்னி முழுவதும் படையினர் வருவார்கள் என்பது புரிந்தது. மாற்று வழி தேவை என்று எச்சரித்தேன்.

2009 பெப்ரவரிக்குப் பின்பு எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அத்தோடு இராணுவரீதியான கட்டுரைகளை தவிர்த்துக் கொண்டு, புலம்பெயர் போராட்டங்கள், தமிழ்நாடு அரசியல் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

2009 பெப்ரவரியில் உணர்ந்ததை (தெரிந்ததை அல்ல) நான் சொல்லாமல் விட்டது தவறாக இருக்கலாம். ஆனால் அதனால்தான் நான் இன்றைக்கும் உயிரோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கேள்வி இங்கேதான் எழுகிறது

தாங்கள் நம்புவதை, தங்களின் ஆய்வுகளின் முடிவை சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்காத சமூகம், இன்றைக்கு எழுதியவர்களின் மீது குற்றம் சாட்டுவதற்கான உரிமையை எங்கே இருந்து பெற்றது?

மற்றது, நான் போராளி மீது பழி போட வேண்டிய தேவை எதுவும் இல்லை. விடுதலைப் புலிகள் நடந்து கொண்டிருந்த சண்டைகள் பற்றி எப்படியான அறிக்கைகளை தந்து கொண்ருந்தார்கள் என்பது இன்றைக்கும் பதியப்பட்டிருக்கின்றன.

ஓம் அண்ணா, நீங்கள் பழி போட தேவையில்லை. ஏனென்றால் தகவல் தந்தது அந்த போராளி தானே? அது சரியா பிழையா என்று கூட உங்களுக்கு தெரியாது.

அப்படியென்றால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். உங்கள் கட்டுரையின் கீழ் இத்தகவல்களை ஒரு போராளி மூலம் பெற்றுக்கொண்டேன். இவை சரியா பிழையா என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது என்று போட்டிருக்க வேண்டும். போட்டீர்களா? போட்டிருந்தால் ஆதாரத்துடன் இணையுங்கள்.

போட்டிருந்தால் பாராட்டோ பழியோ உங்களை வந்தடைந்திருக்காது. ஆனால் போட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் பாராட்டு உங்களுக்கு வேணும் என்று நினைத்திருப்பீர்கள். காரணம்,

கட்டுரையை முடிப்பதற்குள் திருகோணமலைக்கு தொடர்பை எடுத்தேன். அப்பொழுது இணையங்களில் எழுதிக் கொண்டிருந்த ஒரு போராளியுடன்தான் முதலில் பேசினேன். நீங்கள் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறீhகள்? இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அல்லவா உங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருக்கி;ன்றன? என்று கேட்டேன்.

அவர் சிறிதும் தயங்காது பதில் சொன்னார், „வரைபடத்தை கவனமாகப் பாருங்கள், நாங்கள்தான் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம்'

அந்த முறை என்னுடைய கட்டுரையின் முடிவு இதைத்தான் அடைப்படையாகக் கொண்டு இருந்தது. கட்டுரையைப் படித்த நிறையப் பேர் என்னைப் பாராட்டித் தள்ளி விட்டார்கள்.

அந்த நேரம் இந்த பாராட்டு உங்களுக்கு உரியதல்ல. அந்த போராளிக்குரியது. ஆனால் அதை உங்களுக்கானதாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள். சரி தானே????

எழுதியது நடந்தால் வெற்றியை நீங்கள் தட்டிச்செல்வதும் எழுதியது பிழைத்துவிட்டால் போராளி மேல் பழி போடவும் எப்படி முடிகிறது உங்களால்???? <_< <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

காதல்,

மீண்டும் நான் சாந்திக்கு சொன்ன பதிலைப் படியுங்கள். நான் எழதிய கதையையும் படியுங்கள். சமாளிக்கப் பார்த்ததாக எழுதியிருக்கிறேன். முன்னே சொன்னேன் என்றால் மற்றவர்கள் சொல்வதற்கு முன்னே சொன்னேன் என்று அர்த்தம்.

கிழக்கு விழும் என்று தெரிந்தது. பலர் சொல்ல முதல் சொன்னேன். வன்னி முழுவதும் படையினர் வருவார்கள் என்பது புரிந்தது. மாற்று வழி தேவை என்று எச்சரித்தேன்.

2009 பெப்ரவரிக்குப் பின்பு எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அத்தோடு இராணுவரீதியான கட்டுரைகளை தவிர்த்துக் கொண்டு, புலம்பெயர் போராட்டங்கள், தமிழ்நாடு அரசியல் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

2009 பெப்ரவரியில் உணர்ந்ததை (தெரிந்ததை அல்ல) நான் சொல்லாமல் விட்டது தவறாக இருக்கலாம். ஆனால் அதனால்தான் நான் இன்றைக்கும் உயிரோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கேள்வி இங்கேதான் எழுகிறது

தாங்கள் நம்புவதை, தங்களின் ஆய்வுகளின் முடிவை சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்காத சமூகம், இன்றைக்கு எழுதியவர்களின் மீது குற்றம் சாட்டுவதற்கான உரிமையை எங்கே இருந்து பெற்றது?

உங்களுக்கு தெரிந்தவை அனைத்தும் எமக்கே தெரிந்து தான் இருந்தன.

அப்படியாயின் களத்திலிருந்தோருக்கு உயிரைவிட தயாராக இருந்தோருக்கு அதிலும் காற்றுப்புகா இடங்களில் கூட புகுந்து வந்தவர்களுக்கு தெரியவில்லை என உங்களைப்போன்றோர் சொல்வது தான் பிரச்சினை.

அத்துடன் யேசு சிலுவையில் அறையப்பட்டது ஏன் என்பதற்கும் பச்சை குத்துகிறீர்கள்.

அதை நீங்கள் உண்மையில் புரிந்து கொண்டு குத்தியிருந்தால் திரி இந்தளவுக்கு இழுத்திருக்காது.

யேசு பற்றிய விளக்கத்தைத நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அதனால்தான் அமைதியடைகின்றோம்.

  • தொடங்கியவர்

உங்களுக்கு மீண்டும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன். அன்றைக்கு இருந்த நிலமை உண்மையில் அப்படித்தான். ஒரு பக்கம் பார்த்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசசத்தை சுற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைந்திருக்கும். மறுபக்கம் பார்த்தால் புலிகள் சுற்றி வளைத்தது போன்று இருக்கும். இது பார்வையைப் பொறுத்தது.

மற்றையபடி போராளி என்பது ஒரு சம்பவம். ஒரு குறியீடு போன்றது. விடுதலைப் புலிகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் அவர்கள் சொன்னதை வைத்துத்தான் நாம் மிகுதியை எழுதினோம். எழுத்தில் அதைக் கொண்டு வருகின்ற திறனுக்கான பாராட்டு எமக்கு கிடைத்தது.

ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அடிப்போம் என்று சொன்ன புலிகள் செய்தது குற்றமா? அடித்தால் என்ன நடக்கும் என்று ஆய்வு செய்த எழுதியது குற்றமா?

  • தொடங்கியவர்

விசுகு,

என்னுடைய குற்றச்சாட்டை சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த விவாதம் இந்தளவு நீண்டிருக்காது.

தோல்வியை எதிர்வுகூறியவர்களை துரோகிகள் என்று பழித்த சமூகம், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூகம், வெல்வார்கள் என்று சொன்னவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூகம், அவர்களை மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய சமூகம்... இன்றைக்கு எதுவுமே தெரியாதது போன்று ஆய்வு செய்தவர்களை வசைபாடுவதும், கிண்டல் அடிப்பதும் சரியா?

அதுவும் எழுதியவர்கள் வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் தமிழினம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவைகள் எதையுமே செய்யாது இன்றைக்கு அப்பாவிகள் போன்று முகத்தை வைத்துக் கொண்டு, ஆய்வாளர்களை கேள்வி கேட்பது சரியா?

உங்களுக்கு மீண்டும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஓம் அண்ணா, எங்களுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்கு தான் நாங்கள் சொல்லுற எல்லாம் விளங்குதே... :D

அன்றைக்கு இருந்த நிலமை உண்மையில் அப்படித்தான். ஒரு பக்கம் பார்த்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசசத்தை சுற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைந்திருக்கும். மறுபக்கம் பார்த்தால் புலிகள் சுற்றி வளைத்தது போன்று இருக்கும். இது பார்வையைப் பொறுத்தது.

மற்றையபடி போராளி என்பது ஒரு சம்பவம். ஒரு குறியீடு போன்றது. விடுதலைப் புலிகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் அவர்கள் சொன்னதை வைத்துத்தான் நாம் மிகுதியை எழுதினோம். எழுத்தில் அதைக் கொண்டு வருகின்ற திறனுக்கான பாராட்டு எமக்கு கிடைத்தது.

உங்கள் எழுத்து திறமை இருக்கட்டும். நான் கேட்டதற்கு இன்னும் பதில் எழுதவில்லையே.

தகவல் தந்தது அந்த போராளி தானே? அது சரியா பிழையா என்று கூட உங்களுக்கு தெரியாது.

அப்படியென்றால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். உங்கள் கட்டுரையின் கீழ் இத்தகவல்களை ஒரு போராளி மூலம் பெற்றுக்கொண்டேன். இவை சரியா பிழையா என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது என்று போட்டிருக்க வேண்டும். போட்டீர்களா? போட்டிருந்தால் ஆதாரத்துடன் இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

என்னுடைய குற்றச்சாட்டை சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும் இந்த விவாதம் இந்தளவு நீண்டிருக்காது.

தோல்வியை எதிர்வுகூறியவர்களை துரோகிகள் என்று பழித்த சமூகம், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூகம், வெல்வார்கள் என்று சொன்னவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூகம், அவர்களை மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய சமூகம்... இன்றைக்கு எதுவுமே தெரியாதது போன்று ஆய்வு செய்தவர்களை வசைபாடுவதும், கிண்டல் அடிப்பதும் சரியா?

அதுவும் எழுதியவர்கள் வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் தமிழினம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டவைகள் எதையுமே செய்யாது இன்றைக்கு அப்பாவிகள் போன்று முகத்தை வைத்துக் கொண்டு, ஆய்வாளர்களை கேள்வி கேட்பது சரியா?

கனக்க எழுதலாம் சபேசன்

உங்கள் எழுத்துக்களை யாழில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வரவேற்றவன் வரவேற்பவன் நான்.

ஒரு சமூகப்பெபாறுப்படன் எல்லோரும் நடநந்து கொண்டோம் ஏன்பது தான் சரி. ஆனால் இன்று தோல்வியை காரரணம் காட்டி எவரும் தப்பித்துக்கொள்ளல் சரியல்ல. அது சரியான பாதையோ வழி காட்டியோ அல்ல.

அல்லது என்னை என்ன செய்யச்சொல்கிறீர்கள் கிளிப்பிள்ளை மாதிரி ஓதிக்கொண்டிருந்தேன் என்பதும் சரியல்ல. அது உங்களை நீங்களே கேவலப்படுத்துவததாகும்.

அத்துடன் இங்கு நீங்கள் போட்ட தலைப்பும் சரியல்ல.

எவரை எடுத்து விமர்சனம் செய்வது என்ற ஒன்றும் உண்டல்லவா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.