Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் அப்பா எனும் ஆணும் 01: நிழலி

Featured Replies

நானும் அப்பா எனும் ஆணும் 01

திமிர் ஏறிக் களைத்த

நரம்புகளுக்கிடையே

இன்னும் மிச்சமிருக்கின்றது

அப்பாவுக்காக அழும்

சில கண்ணீர் துளிகள்

வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே

அப்பாவின் விரல் பற்றி

இன்னொரு பயணம் செல்ல

காத்து தவிக்கின்றன

என் விரல்கள்

அப்பா பற்றிய நினைவுகளில்

எல்லாம் குரோதம் படரவிட்ட

ஒரு மாலைப்பொழுதில் தான்

அவரை

இழந்திருந்தேன்

*************************

2.

ஆண் உணர்வு புடைத்து

நிமிர்ந்து தலை தெறிக்க

ஓடும் போது அறுந்த முதல்

முதல் நாடி

என் அப்பாவுடனான நேசம்

அவரது ஒவ்வொரு

சொல்லிற்கும் எதிராக

நீண்டு முழங்கி ஓங்காரமாக

அறைந்தது என் ஆண்

மெளனம்

என் மெளனத்திற்கு

பதில் சொன்ன அவரது

ஒவ்வொரு

விடைகளிலும் தெறித்து

விழுந்தது ஆண் எனும்

மிருகத்தின் இரை தேடும்

குரோதம்

எனக்கும் அவருக்குமான

அனைத்து பிணைப்புகளிலும்

ஆண் திமிர் தன்

வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட

இரு

கத்திகள் ஒன்றுடன் ஒன்று

உரசாமல் உறைக்குள்

இருப்பதில்லை

************

3.

செத்துப் போன அப்பாவின்

நிர்வாண உடலை

மலர்சாலையில் கண்ட

நொடியில்

எல்லா பதில்களும்

எனக்கு கிடைத்தன

என்னை பிறப்பித்த அவரது

ஆண் குறி

சலனமற்றுக் கிடந்தது

என்னை கைபிடித்து கூட்டிச் சென்ற

விரல்கள்

நீட்டி நிமிர்ந்து அசைவற்றுக்

கிடந்தன

தன்னை பின் தொடரச் சொன்ன

பாதங்கள்

விறைத்து கிடந்தன

என் போக்கில் சலிப்புற்று

பேசிய உதடுகள்

எனக்கு இறுதியாக சொல்ல

எத்தனித்த சொற்களை

அடைகாத்து வரண்டு கிடந்தன

************

எல்லாம் முடிந்து

அவர் எலும்புகளை எண்ணி

கடலில் கரைத்த மாலையின்

பின்னிரவில் என்

மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்

முதல் தடவையாக

உதைக்கின்றான் என

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எழும்புகளை-எலும்புகளை என்று மாற்றி விடுங்கள்...

உணர்வின் வெளிப்பாடான உங்கள் கவிதைப் பகிர்விற்கு நன்றி நிழலி!

  • தொடங்கியவர்

எழும்புகளை-எலும்புகளை என்று மாற்றி விடுங்கள்...

நன்றி

--------------------

வழக்கமாக பின்னிரவில் தான் கவிதை எழுதுவது வழக்கம். இன்று மாலை நேரத்தில் (06:00 PM) இந்தக் கவிதையை எழுத முனையும் போது நடந்த சம்பவங்கள்

1. மகள் ஏழு எட்டு முறை அப்பா அப்பா என்று அழைத்து தன்னுடன் விளையாட கூப்பிட்டது

2. 6 தொல்லை பேசி அழைப்புகள்

3. மனைவி இரு முறை அழைத்து ஸ்நேகா - பிரசன்னா கலியாணம் விஜய் ரீவியில் போவதால் அதில் வருபவர்களை காட்டியது (சாறி நல்ல வடிவாம்...ஆனால் அதில் வந்த ஜோதிகா இன்னும் வடிவாக இருக்கின்றார்)

4. மகன் happy fathers day என்பதை என் முதுகில் pen ஆல் எழுதப் போறானாம் என்று அடம் பிடித்தது

இதுக்குள்ள கவிதை எழுத முயன்ற என்னை என்னவென்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

--------------------

வழக்கமாக பின்னிரவில் தான் கவிதை எழுதுவது வழக்கம். இன்று மாலை நேரத்தில் (06:00 PM) இந்தக் கவிதையை எழுத முனையும் போது நடந்த சம்பவங்கள்

1. மகள் ஏழு எட்டு முறை அப்பா அப்பா என்று அழைத்து தன்னுடன் விளையாட கூப்பிட்டது

2. 6 தொல்லை பேசி அழைப்புகள்

3. மனைவி இரு முறை அழைத்து ஸ்நேகா - பிரசன்னா கலியாணம் விஜய் ரீவியில் போவதால் அதில் வருபவர்களை காட்டியது (சாறி நல்ல வடிவாம்...ஆனால் அதில் வந்த ஜோதிகா இன்னும் வடிவாக இருக்கின்றார்)

4. மகன் happy fathers day என்பதை என் முதுகில் pen ஆல் எழுதப் போறானாம் என்று அடம் பிடித்தது

இதுக்குள்ள கவிதை எழுத முயன்ற என்னை என்னவென்பது?

ஒரு மனிசனுக்கு எப்பிடியெல்லாம் சோலியள் குவிஞ்சுபோய்க்கிடக்கு பாத்தியளே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்து

அவர் எலும்புகளை எண்ணி

கடலில் கரைத்த மாலையின்

பின்னிரவில் என்

மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்

முதல் தடவையாக

உதைக்கின்றான் என

எமது மூதாதையரின் நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகள் என்று எமது 'விஞ்ஞான மூளை' உதறி விட்டாலும், ஏதோ ஒன்று எங்கேயோ இடிக்கின்றது. நிழலி!

எனக்கன்னவோ, Lion King படத்தில் வருகின்ற " Life is a Cycle" என்ற கருத்து மட்டும் மனதில் ஆழமாக, வேரூன்றி விட்டது!

வாழ்க்கை என்பது ஒரு பயணம்!

எது நடந்தாலும், பயணம் தொடரும்!

தொடர வேண்டும்!

இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை!

கவிதைக்கு நன்றிகள், நிழலி!

நல்ல கவிதை :) (கொஞ்சம் ஓவரா இருந்தாலும் :D)

எல்லாம் முடிந்து

அவர் எலும்புகளை எண்ணி

கடலில் கரைத்த மாலையின்

பின்னிரவில் என்

மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்

முதல் தடவையாக

உதைக்கின்றான் என

எல்லோரும் சொல்வார்கள் அப்பா ஆன பின் தான் அவர் பட்ட சுமைகள், கூறும் ஆலோசனைகள் புரியும் என்று.

அதற்கு முன்னரே தந்தை இறந்து விட்டால் அதன் வலி இன்று வரை ஆறாது. அவர் இருக்கும் போது இப்படி செய்யாமல் விட்டிட்டேனே. அவருடன் வீணாக சண்டை பிடித்து விட்டேனே என்றெல்லாம் தோன்றும். :(

உங்கள் மகன் தன் வயிற்றில் உதைப்பதாக உங்கள் மனைவி சொன்னாலும் அன்றிரவு உங்களால் சந்தோசப்பட்டிருக்க முடியாது. :(

வழக்கமாக பின்னிரவில் தான் கவிதை எழுதுவது வழக்கம். இன்று மாலை நேரத்தில் (06:00 PM) இந்தக் கவிதையை எழுத முனையும் போது நடந்த சம்பவங்கள்

1. மகள் ஏழு எட்டு முறை அப்பா அப்பா என்று அழைத்து தன்னுடன் விளையாட கூப்பிட்டது

2. 6 தொல்லை பேசி அழைப்புகள்

3. மனைவி இரு முறை அழைத்து ஸ்நேகா - பிரசன்னா கலியாணம் விஜய் ரீவியில் போவதால் அதில் வருபவர்களை காட்டியது (சாறி நல்ல வடிவாம்...ஆனால் அதில் வந்த ஜோதிகா இன்னும் வடிவாக இருக்கின்றார்)

4. மகன் happy fathers day என்பதை என் முதுகில் pen ஆல் எழுதப் போறானாம் என்று அடம் பிடித்தது

இதுக்குள்ள கவிதை எழுத முயன்ற என்னை என்னவென்பது?

கவிதை படித்து கொஞ்சம் கவலையோட இங்காலை வாசித்தால் என்னை சிரிக்க வைச்சிட்டியளே. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அவருக்குமான

அனைத்து பிணைப்புகளிலும்

ஆண் திமிர் தன்

வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட

இரு

கத்திகள் ஒன்றுடன் ஒன்று

உரசாமல் உறைக்குள்

இருப்பதில்லை

பெரும்பாலான ஆசியக் குடும்பங்களில் (யாழ்ப்பாணக் குடும்பங்களில் என்று எழுதிக் கல்லெறிபட தயக்கமாய் இருக்கு) இதுதான் கதை.[size=4]ஆண்பிள்ளைகள் வளரும் வரை வீடும் அம்மாவும் அப்பாவின் சர்வாதிகாரத்தில்’ அதன்பின் வீடும் அப்பாவும் பாதிக்கப் பட்ட அம்மாவின் சதுரங்கத்தில். நிழலி ஆணும் பெண்ணும் பிரிந்துவிடாமல் காதலை மிஞ்சிய மோதலுடன் வாழும் நம்குடும்ப உளவியலை நல்ல கவிதையாகச் சொல்லியிருக்கிறீங்க. மனதைத் தொடும் முடிவு.[/size]

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி நிழலி

எனக்கும் அவருக்குமான

அனைத்து பிணைப்புகளிலும்

ஆண் திமிர் தன்

வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட

இரு

கத்திகள் ஒன்றுடன் ஒன்று

உரசாமல் உறைக்குள்

இருப்பதில்லை

பெரும்பாலான ஆசியக் குடும்பங்களில் (யாழ்ப்பாணக் குடும்பங்களில் என்று எழுதிக் கல்லெறிபட தயக்கமாய் இருக்கு) இதுதான் கதை.[size=4]ஆண்பிள்ளைகள் வளரும் வரை வீடும் அம்மாவும் அப்பாவின் சர்வாதிகாரத்தில்’ அதன்பின் வீடும் அப்பாவும் பாதிக்கப் பட்ட அம்மாவின் சதுரங்கத்தில். [/size][size=4]நிழலி ஆணும் பெண்ணும் பிரிந்துவிடாமல் [/size][size=4]காதலை மிஞ்சிய மோதலுடன் வாழும் நம்குடும்ப உளவியலை[/size][size=4] நல்ல கவிதையாகச் சொல்லியிருக்கிறீங்க.[/size][size=4] மனதைத் தொடும் முடிவு.[/size]

வாங்கோ கவிஞர் ஐயா. சாதாரணமாக எழுதுவதற்கும் இப்பிடி bracket க்குள் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம். ஏதோ யாழ்ப்பாணத்தவர் மேல் போட வந்த பழியை போட்டுட்டியள். இன்னொரு பிறப்பு உங்களுக்கு இருந்தால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் வந்து பிறப்பீர்களாக.... :wub: இந்த திரியை திசை திருப்ப விரும்பவில்லை. இத்துடன் நிறுத்துகிறேன்.

எனக்கொரு சந்தேகம். இங்கு எங்கு ஆணும் பெண்ணும் பிரிந்துவிடாமல் காதலை மிஞ்சிய மோதலுடன் வாழும் குடும்ப உளவியலை பற்றி சொல்லியிருக்கு? :unsure: தந்தை மகன் பிணைப்பை அல்லவா சொல்லியிருக்கு. கவிதையின் முடிவு கூட நிழலி அண்ணா தந்தையாக போகிறார் என்ற கருத்தை தான் சுட்டி நின்றது. ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலை மிஞ்சிய மோதலை கவிதையில் காணவில்லையே. :unsure:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் இளமைக் காலத்திற்கு, அதாவது தற்போதைய நிழலியின் நிலைக்கு முன்பு கவிஞர் வளர்ந்த சூழலில் அவர் கூறும் நிலை, உண்மையில் இருந்தது! பெரும்பாலான குடும்பங்களில், தந்தை மட்டுமே, குடும்பத்தின் தலைவராக இருந்தார். தாயும், குழந்தைகளும் ஒரு விதமான சர்வாதிகார சூழலில், தந்தைக்குக் கட்டுப்பட்டே வாழ வேண்டியிருந்தது! மனைவியோ, குழந்தைகளோ எதிர்த்துப் பேசுவது கிடையாது! சட்டங்கள், சமுதாயக் கட்டுக் கோப்புகளின் முன்பு, தோற்று விட்ட காலம் அது!

நிழலியின் கவிதையிலும், அப்பாவின் 'மேலாண்மையை இலேசாகப் பின்வரும் வரிகளில் தொட்டுச் செல்கிறார் என்றே கருதுகின்றேன்!

என் மெளனத்திற்கு

பதில் சொன்ன அவரது

ஒவ்வொரு

விடைகளிலும் தெறித்து

விழுந்தது ஆண் எனும்

மிருகத்தின் இரை தேடும்

குரோதம்

கவிஞருக்கும் தனது கருத்துக் கிளப்பப் போகும் புழுதி, பற்றித் தெரியும்!

அதற்காகத் தான், தனது கருத்தை 'ஒரு பீடிகையுடன்' தொடங்கினார் என்று நான் கருதுகின்றேன்!

அத்துடன் கவிஞரின் .காதலை மிஞ்சிய மோதலுடன்' என்ற வரியையும் கொஞ்சம் கவனிக்கவும்!

Edited by புங்கையூரன்

நன்றி புங்கையூரன் அண்ணா விளக்கத்திற்கு. :)

அத்துடன் கவிஞரின் .காதலை மிஞ்சிய மோதலுடன்' என்ற வரியையும் கொஞ்சம் கவனிக்கவும்!

நீங்கள் மேலே கூறிய விளக்கம் இதற்கும் பொருந்தும் எனில் நன்றி புரிய வைத்தமைக்கு. ஆனால் யாழ்ப்பாணத்தவரை மட்டும் பிழை பிடித்து கூறியிருக்கிறார். :wub: மற்றைய தந்தைகள் (மனைவி பிள்ளைகள் முன்) சர்வாதிகாரர் இல்லையோ? :unsure:

கவிஞருக்கும் தனது கருத்துக் கிளப்பப் போகும் புழுதி, பற்றித் தெரியும்!

அதற்காகத் தான், தனது கருத்தை 'ஒரு பீடிகையுடன்' தொடங்கினார் என்று நான் கருதுகின்றேன்!

:rolleyes: :rolleyes:

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]நல்ல பகிர்வு [/size]

நிழலி!

அப்பா தொடர்பான ஆதங்கம் உங்களுக்கு மட்டுமானதல்ல. பலருக்கும் இது ஒத்துப் போகிறது. பெண் குழந்தைகள் தந்தை மீது காட்டும் பாசத்துடன் ஒப்பிடும் போது ஆண் பிள்ளைகள காட்டும் அன்பு குறைவாகத் தானிருக்கிறது.

அட மனிசி சாறியைக் காட்டி வடிவா இருக்குது எண்டு சொன்னவாவோ! அப்ப ஒரு 500 டொலர் செலவொண்டு காத்திருக்குது. தயாராயிருங்கோ!

நீங்கள் மேலே கூறிய விளக்கம் இதற்கும் பொருந்தும் எனில் நன்றி புரிய வைத்தமைக்கு. ஆனால் யாழ்ப்பாணத்தவரை மட்டும் பிழை பிடித்து கூறியிருக்கிறார். :wub:

ஏன் செல்லம் காதல் யாழ்ப்பாணம் என்று சொன்னால் உங்களுக்கு சுடுகுது :lol: ????????? நானும் யாழ் தான் :) . ( அலை உனக்கு சூடு, சுறணை இருக்கா என்று நீங்கள் சொல்லுறது கேட்குது :lol: )

கவிதை சுப்பர் நிழலி!

நிழலியின் கவிதையைப் பற்றி எழுதாட்டில் காதலோடு சண்டை பிடிக்க வந்த விசயம் ஊர் அறிந்துவிடும் :icon_mrgreen:

அப்பா ஒரு மாதிரி உன் மகள் தப்பீட்டாள்!!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்கலங்க வைத்துவிட்டீர்கள் , ஆழமான உணர்வின் வெளிப்பாடான உங்கள் கவிதைப் பகிர்விற்கு நன்றி நிழலி .[/size]

ஏன் செல்லம் காதல் யாழ்ப்பாணம் என்று சொன்னால் உங்களுக்கு சுடுகுது :lol: ????????? நானும் யாழ் தான் :) . ( அலை உனக்கு சூடு, சுறணை இருக்கா என்று நீங்கள் சொல்லுறது கேட்குது :lol: )

கவிதை சுப்பர் நிழலி!

நிழலியின் கவிதையைப் பற்றி எழுதாட்டில் காதலோடு சண்டை பிடிக்க வந்த விசயம் ஊர் அறிந்துவிடும் :icon_mrgreen:

அப்பா ஒரு மாதிரி உன் மகள் தப்பீட்டாள்!!

அலை அக்காவுக்கு இப்ப கொஞ்சம் விளங்குது :lol:

அலை அக்கா, செல்ல அக்கா (என்ன செய்ய மட்டுறுத்தினரின் திரியில் வந்து சண்டை பிடிக்கவா முடியும் :lol:)

அக்கா உங்களுக்கு சூடு சுரணை இருக்கா என்றெல்லாம் கேட்க மாட்டன். ஏனென்றால் நான் யாழ்ப்பாணம் என்பதற்காக சூடு சுரணையை வைத்து இங்கு கருத்து எழுதவில்லை.

உங்கள் குணம் எப்படியோ அப்படி தான் மற்றவர்கள் என்பது உங்கள் கற்பனை. :icon_mrgreen: நான் மற்றவர்கள் குணம் எப்படி என்பதை வைத்து மற்றவர்களை கற்பனை செய்வேன். :D நிரபராதி ஒருவராக இருந்தாலும் தண்டிக்கப்படக்கூடாது.

[size=5]இதெல்லாம் வாசித்து விட்டு சிலவேளை நிழலி அண்ணா ஒன்றை எழுதுவார். :lol:[/size]

[size=5]அனைவருக்கும்,[/size]

[size=5]கூடியவரைக்கும்[/size] [size=5]இத்திரியில் அரட்டை அடிப்பதை தவிருங்கள். அரட்டை அடிப்பதால் திரியின் நோக்கம் [/size][size=5]திசை திருப்பப்பட்டு[/size] [size=5]விடும்.[/size]

[size=5]நன்றி. [/size][size=5] :icon_idea:[/size]

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி

அப்பாவின் அந்தரங்கங்களை இதில் எழுதியது ஏதே செய்கிறது.

அதனால் மட்டுமே பச்சை போடமுடியவில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் அனேகமான பதிவுகளுக்கு எழுத்துப் பிழைகள் இருப்பின் உடன் சுட்டிக் காட்டுவேன் மற்றப்படி எடுத்த உடன் விமர்சனம் செய்வதில்லை...நேற்றைக்கு இந்தக் கவிதையை வாசித்து விட்டு அதில் ஒரு இடத்தில் ஏற்பட்ட எழுத்து பிழையை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு இடத்தை விட்டு போய் விட்டேன்..அந்த நேரத்தில்,நிலையில் அந்த வயதானவரின் உடல் அங்கங்களுக்கோ, இல்லை அவரது உடலுக்கோ கொடுகப்பட்டு இருந்த விமர்சனத்தை பார்த்துட்டு இப்படி ஒரு விபரணம் தேவையா...... இயற்கை அமைப்புக்கு புதுசு,புதுசா வார்த்தைகளை தேட வேண்டியது இல்லையே என்று தான் எனக்கும் நினைக்க தோன்றியது.கடவுளின் ஆண்,பெண் படைப்பு அப்படித் தான் என்றால் அதற்கு மனிதர்களாகிய நாம் மேலதிக விபரணங்களை சற்று நாகரீகமாக கொடுக்கலாம்...அதுவும் ஒரு தந்தை உயிர் அற்ற நிலையில் கிடக்கும் போது ஆடையின்றி கிடந்தாலும் வார்த்தைகளாலயே ஆடை உடுத்தி பார்த்திருக்கலாம்...சில,சில சொற் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்கள் கவிதை எழுதினாலே கொஞ்சம் வக்கிரத்துடன் தான் எழுதுவார்.

அது அவரது பாணி. யாயினி கூறியது போல ஒரு சில இடங்களில் அடக்கி வாசித்திருக்கலாம்.

மற்றும்படி கவிதை அப்பாவிற்கும் மகனுக்கும் பல இடங்களில் வரும் போர் ஒத்திகைகளை பறை சாற்றுகின்றது. இது இயற்கையாகவே வளர்ந்த அல்லது வளரும் பிராயத்தில் வரும் முறுகல்கள்.

என் வாழ்க்கையிலும் ஒரே ஒரு முறை எனது அப்பாவுடன் முரண்பட்டிருக்கின்றேன்.

அதையும் கடந்து நாங்கள் அன்பிலும் மரியாதையிலும் ஒன்றுபட்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிற்ந்த விமர்சகியான காதல் வளக்கறிஞரின் கண்ணோட்டத்துடன் இவ்விடயத்தைப் பார்பது ஆச்சரியமாய் உள்ளது. கவிதை பேசுவதில் உங்கள் கவனம் குவிகிறது. கவிதையின் மவுனத்திலும் என் கவனம். விரிகிறது.

இலங்கையில் வன்னி கிழக்குமாகானம் சிங்களப் பகுதிகளோடு ஒப்பிடும்போது யாழில் சாதி பால் ஆதிக்கம் அதிகம். இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட உண்மை.

நானும் யாழ்ப்பானம்தான் ஆனாலும் நான் இதனை மூடி மறைக்காமல் சின்ன வயதில் இருந்தே எதிர்த்து போராடிவருகிறேன்.

ஆண் ஆதிக்கம் குடும்பம் மனவி காதல் மோதல் சம்பந்தப் பாட்டதுதானே. முன்னைய பதிலில் இருந்த கிண்டல் உங்கலை புண்படுத்தியிருக்கக்கூடும். காதல் மன்னித்துக் கொள்ளுங்கள்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.