Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் வாழ தகுதியான நாடுகளில், கனடாவுக்கு முதலிடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26-canada-flag-300.jpg

பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்.

பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.

உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.

கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • Replies 62
  • Views 5.4k
  • Created
  • Last Reply

[size=4]நல்ல செய்தி கனடாவை பொறுத்தவரையில். [/size]

[size=4]இந்த செய்தி / ஆய்வு முழுமையானதாக இருக்கவேண்டும் என்றால், இந்த நாடுகளில் 'ஆண்களின்' நிலையையும் சேர்த்து கூறி இருக்க வேண்டும் [/size] [size=4] :D[/size]

[size=4]நல்ல செய்தி கனடாவை பொறுத்தவரையில். [/size]

[size=4]இந்த செய்தி / ஆய்வு முழுமையானதாக இருக்கவேண்டும் என்றால், இந்த நாடுகளில் 'ஆண்களின்' நிலையையும் சேர்த்து கூறி இருக்க வேண்டும் [/size][size=4] :D[/size]

பெண்கள் வாழ எந்த நாடு தகுதியானதோ ,அங்கு ஆண்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் ,அல்லது பெண்கள் கொடியவர்களாக

இருக்கவேண்டும் .............. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் எம்குலப்பெண்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கனடா மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வாழ வந்த நாடு முதல் இடத்திற்கு வருவது,வந்திருக்கிறது என்ற செய்தியை அறியும் போது சந்தோசமாக இருக்கிறது...என்னைப் பொறுத்த மட்டில் பெண்,ஆண் என்ற பேதம் இல்லாத பொதுவான ஆய்வாக இருந்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும்...இங்கு இருக்க கூடிய அனைவரும் முடிந்த மட்டுக்கு தொழில் ரீதியாக,கல்வி ரீதியாக முன்னேறிக் கொண்டு போவதை வரவேற்கிறேன்.அதற்காக தொட்டது எல்லாதுக்கும் 911 அழைப்பதையோ அல்லது 50.50 கேட்பதை எல்லாம் ஒரு திறமை என்று எடுத்து கொள்ள முடியாது..

சந்தோசமான செய்தி. எனது கருத்தும் இந்த ஆய்வை பொதுவாக செய்திருக்க வேண்டும் என்பதே. :)

[size=4]நல்ல செய்தி கனடாவை பொறுத்தவரையில். [/size]

[size=4]இந்த செய்தி / ஆய்வு முழுமையானதாக இருக்கவேண்டும் என்றால், இந்த நாடுகளில் 'ஆண்களின்' நிலையையும் சேர்த்து கூறி இருக்க வேண்டும் [/size] [size=4] :D[/size]

அகூதா அண்ணா சிரிப்பதை நான் இப்பொழுது தான் முதன்முதலாக பார்க்கிறேன். :o:)

இதனால்தான் எம்குலப்பெண்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கனடா மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..! :icon_idea:

வேறு நாட்டில் பிரச்சினைப்பட்ட எம் குல ஆண்கள் பிரான்சில் போய் தஞ்சமடைந்துள்ளார்கள். கனடா தப்பி விட்டது. :icon_idea:

(திருமணம் செய்து வெளிநாட்டுக்கு வரும் பெண்களின் நாட்டு தெரிவு பற்றி மட்டும் கருத்து எழுதி இருப்பதால் அது பற்றி கூறவில்லை)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் 3 ம் இடம் என்று சொல்லுறப்பவே தெரியுது ஆய்வு எவ்வளவு சூப்பருன்னு..! மேற்கு ஐரோப்பாவிலேயே பிரிட்டனில் தான் பெண்கள் மீதான வன்முறை அதிகம்..! 10க்கு 6 பெண் இவ்வாறு பாதிக்கப்படுறாள். ஆனால்.. அது 3 ம் இடத்தில.... ம்ம்ம்ம்ம்...! :lol:

இதனால்தான் எம்குலப்பெண்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கனடா மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..! :icon_idea:

எம் குலப் பெண்கள்... எப்பவுமே ஈசி.. ஓசி றூட்டில தான் போக விரும்பிறவை...!

அவையா ரிஸ்க் எடுத்து... வெளிநாடு போய் அசைலம் அடிச்சு.. விசா எடுக்கிறது.. ரெம்ப ரெம்பக் குறைவு. எவனாவது இழிச்சவாயன்.. இதுகளைச் செய்து விசாவோட இருக்கான்னு கண்ணுட்டாலே போதும்.. அவன் மேல காதல் சொல்லாமல் கொள்ளாமல் பத்திக்கும்.. பாசம் புட்டுக்கிட்டு பீரிடும்.. நேசம் நோகாமல் நொங்கு குடிக்கும்..!

ஐயோ ஐயோ.. அதையேன் பேசுவான். எம் குலப் பெண்கள் (பெரும்பாலானவர்கள்) போல் இவ்வுலகில் வேறு குலப் பெண்கள் இருக்கவே முடியாது. அத்தனை சுயநலக் கூட்டம்..! இதுகளை எல்லாம் கலியாணம் கட்டிக்கிட்டு எப்படித்தான் வாழுறாய்களோ...?! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

எம் குலப் பெண்கள்... எப்பவுமே ஈசி.. ஓசி றூட்டில தான் போக விரும்பிறவை...!

அவையா ரிஸ்க் எடுத்து... வெளிநாடு போய் அசைலம் அடிச்சு.. விசா எடுக்கிறது.. ரெம்ப ரெம்பக் குறைவு. எவனாவது இழிச்சவாயன்.. இதுகளைச் செய்து விசாவோட இருக்கான்னு கண்ணுட்டாலே போதும்.. அவன் மேல காதல் சொல்லாமல் கொள்ளாமல் பத்திக்கும்.. பாசம் புட்டுக்கிட்டு பீரிடும்.. நேசம்.. நோகாமல் நொங்கு குடிக்கும்..!

ஐயோ ஐயோ.. அதையேன் பேசுவான். எம் குலப் பெண்கள் (பெரும்பாலானவர்கள்) போல் இவ்வுலகில் வேறு குலப் பெண்கள் இருக்கவே முடியாது. அத்தனை சுயநலக் கூட்டம்..! இதுகளை எல்லாம் கலியாணம் கட்டிக்கிட்டு எப்படித்தான் வாழுறாய்களோ...?! :):lol::icon_idea:

அண்ணை,

வெளிநாடு வந்த ஆண்கள் தானே அவையை கூப்பிடினம். இங்க பெண்கள் தனிய வந்து அசைலம் அடிக்கிற எண்டால் ஈசி வேலை போல் சொல்லுறியள். ஆண்கள் இருக்க இடம் இல்லாட்டாலும் எங்கையாவது படுத்து கிடக்கலாம். பொண்ணுங்க வந்து ரோட்டிலையோ தெரியாத ஆக்கள் வீட்டிலையோ வந்து ஆண்களை மாதிரி படுத்துக்கிடக்கலாமோ? ஓம் எண்டால் பெண்களும் இங்க தாங்களா வந்து அகதி விசா அடிப்பினம்.

நானும் தனிய தான் வெளிநாட்டுக்கு வந்தனான். இருக்கிறதும் வாடகை கொடுத்து. ஆனால் இருக்கிற வீட்டில் ஆண்கள் இல்லை என்ற நம்பிக்கையில் என்னை இங்க விட்டினம். எல்லாருக்கும் அப்பிடி அமையுமோ?

பிரிட்டன் 3 ம் இடம் என்று சொல்லுறப்பவே தெரியுது ஆய்வு எவ்வளவு சூப்பருன்னு..! மேற்கு ஐரோப்பாவிலேயே பிரிட்டனில் தான் பெண்கள் மீதான வன்முறை அதிகம்..! 10க்கு 6 பெண் இவ்வாறு பாதிக்கப்படுறாள். ஆனால்.. அது 3 ம் இடத்தில.... ம்ம்ம்ம்ம்...! :lol:

G20 நாடுகளில் மட்டும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இது. :icon_idea:

இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

வெளிநாடு வந்த ஆண்கள் தானே அவையை கூப்பிடினம். இங்க பெண்கள் தனிய வந்து அசைலம் அடிக்கிற எண்டால் ஈசி வேலை போல் சொல்லுறியள். ஆண்கள் இருக்க இடம் இல்லாட்டாலும் எங்கையாவது படுத்து கிடக்கலாம். பொண்ணுங்க வந்து ரோட்டிலையோ தெரியாத ஆக்கள் வீட்டிலையோ வந்து ஆண்களை மாதிரி படுத்துக்கிடக்கலாமோ? ஓம் எண்டால் பெண்களும் இங்க தாங்களா வந்து அகதி விசா அடிப்பினம்.

நானும் தனிய தான் வெளிநாட்டுக்கு வந்தனான். இருக்கிறதும் வாடகை கொடுத்து. ஆனால் இருக்கிற வீட்டில் ஆண்கள் இல்லை என்ற நம்பிக்கையில் என்னை இங்க விட்டினம். எல்லாருக்கும் அப்பிடி அமையுமோ?

G20 நாடுகளில் மட்டும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இது. :icon_idea:

உங்களைப் போல.. வரலாம் தானே. எத்தனையோ பெண்கள் தங்குமிடங்கள் இருக்குத் தானே. யுனிலையே பெண்களுக்கு ஆண்களுக்கு கலந்து என்று தங்குமிடம் இருக்குது. எத்தனையோ தொண்டு நிறுவனங்களிடம் இருக்குது. அரசாங்கத்திட்ட சொன்னா.. அது அகதிகளுக்கான பெண்கள் தங்குமிடத்தில விடும்.... சும்மா சாட்டுச் சொல்லக் கூடாது. தமிழ் பெண்களுக்கு (அநேகருக்கு) ரிஸ்க் எடுக்கிறது விருப்பமில்ல. நோகாமல் நொங்கு குடிக்கிறது தான் அவைக்கு இஸ்டமான விசயம்..! :icon_idea:

என்ன செய்யுறது பல ஆண்கள் ஊரில இருந்து அம்மா அப்பா வற்புறுத்திறதால தான்.. அங்க இருந்து பெண் எடுக்கினம். இல்ல அவையளுக்கு பல வழிகள் இருக்குது.. பெண் பிடிக்க..!

முக்கிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் G20 இல இருக்கினம் தானே. ஏதோ என்னமோ மாயமோ.. பிரிட்டன் 3 இல வந்திட்டுது..! ஆய்வுக்கு பயன்படுத்திய பிரதான அம்சங்களைப் பற்றித் தெரியாமல்.. இது பற்றி அதிகம் பேச முடியாது. ஆனால் பிரிட்டனில் பெண்கள் வன்முறை அதிகம்..! குறிப்பாக பாலியல் வன்முறை அதிகம்..! இது தொடர்பாக யுனியில்.. நண்பிகளோடு சேர்ந்து ஒரு போஸ்டர் செய்ததால்.. ஓரளவு தரவறிவு.. இதில் இருக்கிறது..! :):icon_idea:

big_G20+Members01.jpg

Edited by nedukkalapoovan

உங்களைப் போல.. வரலாம் தானே. எத்தனையோ பெண்கள் தங்குமிடங்கள் இருக்குத் தானே. யுனிலையே பெண்களுக்கு ஆண்களுக்கு கலந்து என்று தங்குமிடம் இருக்குது. எத்தனையோ தொண்டு நிறுவனங்களிடம் இருக்குது. அரசாங்கத்திட்ட சொன்னா.. அது அகதிகளுக்கான பெண்கள் தங்குமிடத்தில விடும்.... சும்மா சாட்டுச் சொல்லக் கூடாது. தமிழ் பெண்களுக்கு (அநேகருக்கு) ரிஸ்க் எடுக்கிறது விருப்பமில்ல. நோகாமல் நொங்கு குடிக்கிறது தான் அவைக்கு இஸ்டமான விசயம்..! :icon_idea:

என்ன செய்யுறது பல ஆண்கள் ஊரில இருந்து அம்மா அப்பா வற்புறுத்திறதால தான்.. அங்க இருந்து பெண் எடுக்கினம். இல்ல அவையளுக்கு பல வழிகள் இருக்குது.. பெண் பிடிக்க..!

அண்ணை, நீங்கள் சொல்லுற மாதிரி அரசாங்கம் கொடுக்கிற இடங்கள், பாடசாலை ஹொஸ்டலில் எல்லாம் வெளிநாட்டில் தங்க முடியாது. தமிழர்களால் மட்டுமல்ல ஆபிரிக்க நாட்டவர்களால் கூட பிரச்சினை வரும். லண்டனில் இருக்கிறீர்கள். ஆபிரிக்க நாட்டவரின் குணம் பற்றி தெரியாதா?

முடிந்தால் அரசாங்கம் கொடுக்கும் பெண்களுக்கான இடங்களின் முன் போய் ஒருக்கா விசிட் பண்ணுங்கோ. அங்கு ஆண்கள் இடைக்கிட கூட்டமாக நிற்பதை காணலாம்.

அதை விட ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்று தெரிந்தால் தேடி வந்து பிரச்சினை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

என்னை மாதிரி மற்றவர்களும் வரலாம் தானே என்றால் நான் இருப்பது போல் அவர்களுக்கு வீடு கிடைக்க வேணுமே. நடக்கிற காரியமா? இப்பிடி இருந்தே போற வாற இடங்களில் தொல்லை தாங்க ஏலாமல் இருக்கு. :wub:

முக்கிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் G20 இருக்கினம் தானே. ஏதோ என்னமோ மாயமோ.. பிரிட்டன் 3 இல வந்திட்டுது..! ஆய்வுக்கு பயன்படுத்திய பிரதான அம்சங்களைப் பற்றித் தெரியாமல்.. இது பற்றி அதிகம் பேச முடியாது. ஆனால் பிரிட்டனில் பெண்கள் வன்முறை அதிகம்..! குறிப்பாக பாலியல் வன்முறை அதிகம்..! இது தொடர்பாக யுனியில்.. நண்பிகளோடு சேர்ந்து ஒரு போஸ்டர் செய்ததால்.. ஓரளவு தரவறிவு.. இதில் இருக்கிறது..! :):icon_idea:

பிரிட்டன் ஏன் மூன்றாம் இடத்தில் இருக்குதென்று கருத்து கணிப்பு நடத்தினவர்களிடம் தான் கேட்க வேணும். பிரான்ஸ் என்னண்டு 5 ஆம் இடத்துக்கு வந்ததென்று எனக்கு தெரியேல்லை.

வன்முறையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வேறு பல விடயங்களை கருத்தில் கொண்டதால் தான் இந்த முடிவு வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

Edited by காதல்

இதனால்தான் எம்குலப்பெண்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கனடா மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..! :icon_idea:

லொள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, நீங்கள் சொல்லுற மாதிரி அரசாங்கம் கொடுக்கிற இடங்கள், பாடசாலை ஹொஸ்டலில் எல்லாம் வெளிநாட்டில் தங்க முடியாது. தமிழர்களால் மட்டுமல்ல ஆபிரிக்க நாட்டவர்களால் கூட பிரச்சினை வரும். லண்டனில் இருக்கிறீர்கள். ஆபிரிக்க நாட்டவரின் குணம் பற்றி தெரியாதா?

முடிந்தால் அரசாங்கம் கொடுக்கும் பெண்களுக்கான இடங்களின் முன் போய் ஒருக்கா விசிட் பண்ணுங்கோ. அங்கு ஆண்கள் இடைக்கிட கூட்டமாக நிற்பதை காணலாம்.

அதை விட ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்று தெரிந்தால் தேடி வந்து பிரச்சினை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

என்னை மாதிரி மற்றவர்களும் வரலாம் தானே என்றால் நான் இருப்பது போல் அவர்களுக்கு வீடு கிடைக்க வேணுமே. நடக்கிற காரியமா? இப்பிடி இருந்தே போற வாற இடங்களில் தொல்லை தாங்க ஏலாமல் இருக்கு.

ஏன் எத்தனையோ வெளிநாட்டு மாணவிகள் தனிய வந்திருந்து படிக்கல்லையா..???! வீடு எடுத்தே தங்கி இருக்கிறாங்க.. நண்பிகளோட சேர்ந்து.

சில தங்குமிடங்கள் நல்ல பாதுகாப்போடு உள்ளன. கூடிய அளவு அரசு.. பெட் அண்ட் பிரேக் பஸ்ட்.. இடங்களில் தான்... பெண்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கிறது. கவுன்சிலிடம் கேட்டால்.. அவர்கள் தனிப் பெண்களுக்கு என்று பாதுகாப்பு கூடிய இல்லங்கள் வழங்குவினம்..! அரசுக்கும்.. தனியாருக்கும்.. தமது நாட்டில் பெண்களின் நிலை..அவர்களுக்குரிய ஆபத்து.. என்பது பற்றி நன்கு தெரியும். அவர்கள் முட்டாள்கள் இல்லை..! எம்மவர்கள் அவற்றைப் பாவிக்க முயல்வதில்லை. அவர்களுக்குத் தானே நோகாமல் நொங்கு குடிக்க வழி இருக்கே..! :lol::D:icon_idea:

அண்ணை,

வெளிநாடு வந்த ஆண்கள் தானே அவையை கூப்பிடினம். இங்க பெண்கள் தனிய வந்து அசைலம் அடிக்கிற எண்டால் ஈசி வேலை போல் சொல்லுறியள். ஆண்கள் இருக்க இடம் இல்லாட்டாலும் எங்கையாவது படுத்து கிடக்கலாம். பொண்ணுங்க வந்து ரோட்டிலையோ தெரியாத ஆக்கள் வீட்டிலையோ வந்து ஆண்களை மாதிரி படுத்துக்கிடக்கலாமோ? ஓம் எண்டால் பெண்களும் இங்க தாங்களா வந்து அகதி விசா அடிப்பினம்.

நானும் தனிய தான் வெளிநாட்டுக்கு வந்தனான். இருக்கிறதும் வாடகை கொடுத்து. ஆனால் இருக்கிற வீட்டில் ஆண்கள் இல்லை என்ற நம்பிக்கையில் என்னை இங்க விட்டினம். எல்லாருக்கும் அப்பிடி அமையுமோ?

G20 நாடுகளில் மட்டும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு இது. :icon_idea:

ஆண்கள் இங்கு வந்து அசைலம் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக தமை முன்னேற்றி ஊரிலுள்ள குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இருப்பது பிடிக்காமல் தானே அம்மாக்கள் வெளி நாட்டில் இருக்கும் தமது மனுக்கு ஊரிலிருந்து மருமகள் எடுக்கிறார்கள்... :lol::D அந்த நச்சரிப்புத் தாங்காமல் தானே அவர்களும் கட்டி இங்கே பெண்களைக் கூப்பிடுகிறார்கள் :rolleyes: ஆண்கள் தாங்களாக நினைத்து விரும்பி ஊரிலிருந்து பெண் எடுப்பது மிகக் குறைவு என்றே சொல்லலாம்...

இதற்கு ஆண்கள் தனியா வந்து அசைலம் அடித்து இங்குள்ள பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியும் என்றால், ஏன் பெண்களால் அதனை செய்ய முடியாது/ சுலபமான வேலையா என்று யோசிக்கத் தோணுது? ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஏன் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியாது? மனத் தைரியம் இருந்தால் எதையும் எதிர் நோக்கலாம்... :icon_idea:

ஏன் எத்தனையோ வெளிநாட்டு மாணவிகள் தனிய வந்திருந்து படிக்கல்லையா..???! வீடு எடுத்தே தங்கி இருக்கிறாங்க.. நண்பிகளோட சேர்ந்து.

சில தங்குமிடங்கள் நல்ல பாதுகாப்போடு உள்ளன. கூடிய அளவு அரசு.. பெட் அண்ட் பிரேக் பஸ்ட்.. இடங்களில் தான்... பெண்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கிறது. கவுன்சிலிடம் கேட்டால்.. அவர்கள் தனிப் பெண்களுக்கு என்று பாதுகாப்பு கூடிய இல்லங்கள் வழங்குவினம்..! அரசுக்கும்.. தனியாருக்கும்.. தமது நாட்டில் பெண்களின் நிலை..அவர்களுக்குரிய ஆபத்து.. என்பது பற்றி நன்கு தெரியும். அவர்கள் முட்டாள்கள் இல்லை..! எம்மவர்கள் அவற்றைப் பாவிக்க முயல்வதில்லை. அவர்களுக்குத் தானே நோகாமல் நொங்கு குடிக்க வழி இருக்கே..! :lol::D:icon_idea:

அப்படி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே தவிர தனியே இருக்கும் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. உங்களுடன் கூட படிக்கும் மாணவியாக இருந்தால் கூட இது பற்றி சொல்ல மாட்டார். சொன்னால் உங்களால் கூட தனக்கு பிரச்சினை வரலாம் என்று நினைப்பார்.

பிரிட்டன் 3 ஆம் இடத்தில் எப்படி வந்தது என்று நீங்களே கேட்டீர்களே. பின்னர் எப்படி கவுன்சில் பாதுகாப்பு கூடிய இல்லங்களை வழங்குவினம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால்தான் எம்குலப்பெண்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கனடா மாப்பிளையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..! :icon_idea:

நான் ஒரு குலப்பையன் கண்டியளோ நானும் உந்த வேலைதான் செய்தனான் ....:)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வாழ தகுதியான நாடுகளில், கனடாவுக்கு முதலிடம்.

அப்படியானால் ஆண்கள் வாழ்வதற்கு உகந்த இடம் இல்லையா ? :D

என்னைப்பொறுத்தளவில் தமிழீழம் கிடைத்திருந்தால் அதுதான் முதல் இடம் பெற்றிருக்கும் . :)

ஆண்கள் இங்கு வந்து அசைலம் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக தமை முன்னேற்றி ஊரிலுள்ள குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இருப்பது பிடிக்காமல் தானே அம்மாக்கள் வெளி நாட்டில் இருக்கும் தமது மனுக்கு ஊரிலிருந்து மருமகள் எடுக்கிறார்கள்... :lol::Dஅந்த நச்சரிப்புத் தாங்காமல் தானே அவர்களும் கட்டி இங்கே பெண்களைக் கூப்பிடுகிறார்கள் :rolleyes: ஆண்கள் தாங்களாக நினைத்து விரும்பி ஊரிலிருந்து பெண் எடுப்பது மிகக் குறைவு என்றே சொல்லலாம்...

எமக்கெதிராக என்றவுடன் நிறைய கதைக்கும் பல ஆண்கள் ஏன் அம்மாக்களின் பேச்சை எதிர்த்து கதைக்க முடியாதது போல் எழுதுகிறீர்கள்?

பெண்களால் வெளிநாட்டில் எதுவும் செய்ய முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தான் கூறுகிறேன். இங்கு அம்மாவை மட்டும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் தனியே வந்து தங்கியிருக்கும் பெண்கள் துணிவுள்ளவர்கள் என்று முதலில் பெரும்பாலான ஆண்கள் கூறுவார்கள். ஆனால் திருமணம் என்று வரும் போது அவள் எப்படியோ தெரியேல்லை, வெளிநாட்டில் வளர்ந்தவள். எதற்கும் ஊரிலிருந்து பெண் எடுப்போம் என்று கூறும் பல ஆண்கள் உள்ளார்கள். நீங்கள் எப்படி என்று சிந்திக்காமல் மற்றவர்கள் எப்படி என்று சிந்தித்து கருத்து எழுதுங்கள்.

இதற்கு ஆண்கள் தனியா வந்து அசைலம் அடித்து இங்குள்ள பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியும் என்றால், ஏன் பெண்களால் அதனை செய்ய முடியாது/ சுலபமான வேலையா என்று யோசிக்கத் தோணுது? ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஏன் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியாது? மனத் தைரியம் இருந்தால் எதையும் எதிர் நோக்கலாம்... :icon_idea:

ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியும் தான். அதற்காக என்னதான் அவளுக்கு சுதந்திரம் கிடைத்தாலும், ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கிடைத்தாலும் ஆண்களிடம் இருந்து அவளுக்கு பாதுகாப்பு வந்து விடும் என்று நினைக்காதீர்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும் போது அவள் மனத்தைரியம் அவளுக்கு பாதுகாப்பை வழங்காது. உடல் வலிமை தான் அவசியம். அது ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது பெண்களுக்கு மிக குறைவு.

குட்டி அண்ணா, உங்களுக்கு திருமணமாகி விட்டதா என்று தெரியவில்லை. ஆகியிருந்தால் அல்லது ஆகிய பின்

ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய முடியும் என்றால்,

உங்கள் மனைவியை,

இரவில் தனிய வேலைக்கு செல்ல அனுப்புவீர்களா?

ஆண்கள் pub இல் சென்று குடிப்பது போல் உங்கள் மனைவியை தனியாக pub இற்கு அனுப்புவீர்களா? (உங்கள் நண்பர்களுடன் சேர்த்து என்றாலும்)

அப்படி உங்கள் மனைவியை தனிய அனுப்பினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு புரிந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
:o :o :o

வெளிநாட்டில் ஆண்கள் படும் துன்பங்கள், அவர்கள் கொண்ட வேதனைகள் எனக்கும் தெரியும்.

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் படிக்கும் மாணவன். ஆனால் பல வருடங்களின் முன் அகதியாக வெளிநாட்டுக்கு வந்த எம் நாட்டு ஆண்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

மொழி தெரியாத நாட்டில் தனியாக வந்து பல வகையில் அடிபட்டு தான் இன்று முன்னேறி நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. :rolleyes:

:o :o :o

என்ன ஆச்சு? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆச்சு? :D

குட்டியே பாவம்.. :rolleyes: எப்படா கல்யாணம் கட்டி வைப்பாங்கள் எண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்.. :rolleyes: இதுக்குள்ளை நீங்கள் போய் இரவு வேலைக்கு அனுப்புவீங்களா, பப்புக்கு அனுப்புவீங்களா எண்டு கேட்டால்??!! :D பாவம்.. பயந்து போயிடமாட்டார்??!! :lol:

அவர் தான் "ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஏன் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியாது? மனத் தைரியம் இருந்தால் எதையும் எதிர் நோக்கலாம்..." என்று குறிப்பிட்டார்.

அதற்காக அப்படி செய்ய சொல்லேல்லை. பாவம் குட்டி அண்ணா. :)

ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொண்டால் சரி. மற்றபடி அவர் எனக்கு பதில் கருத்து எழுத வேண்டுமென்றில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் இங்கு வந்து அசைலம் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக தமை முன்னேற்றி ஊரிலுள்ள குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இருப்பது பிடிக்காமல் தானே அம்மாக்கள் வெளி நாட்டில் இருக்கும் தமது மனுக்கு ஊரிலிருந்து மருமகள் எடுக்கிறார்கள்... :lol::D அந்த நச்சரிப்புத் தாங்காமல் தானே அவர்களும் கட்டி இங்கே பெண்களைக் கூப்பிடுகிறார்கள் :rolleyes: ஆண்கள் தாங்களாக நினைத்து விரும்பி ஊரிலிருந்து பெண் எடுப்பது மிகக் குறைவு என்றே சொல்லலாம்...

இதற்கு ஆண்கள் தனியா வந்து அசைலம் அடித்து இங்குள்ள பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியும் என்றால், ஏன் பெண்களால் அதனை செய்ய முடியாது/ சுலபமான வேலையா என்று யோசிக்கத் தோணுது? ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஏன் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியாது? மனத் தைரியம் இருந்தால் எதையும் எதிர் நோக்கலாம்... :icon_idea:

வணக்கம் குட்டியர்!உள்ளதை சொல்லுங்கள்?

இன்றைய ஈழத்தமிழரின் வாழ்க்கை அவலங்களை உணர்ந்து எழுதுகின்றீர்களா? இல்லை நீங்கள்,உங்கள் கருத்து,உங்கள் நிலைப்பாடு வெற்றியளிக்கவேண்டுமென நினைத்து எழுதுகின்றீர்களா?

பெரும்பாலாக எமது சமூகத்தில் நடப்பதைத் தானே சொல்கிறேன்? 10 ல் 6 அல்லது 7 பேர் (புலத்தில் உள்ள ஆண்களுக்கு அவரது பெற்றோர்கள் (பொதுவாக அம்மாக்கள் தான் அதில் அதிகம் விரும்பி) ஊரில் உள்ளவர்களைத் தான் பேசி செய்து கொடுக்கிறார்கள்.. இதனை இல்லை என்று உங்களால் முற்றாக மறுக்க முடியுமா?

இது எனது தனிப்பட்ட சிந்தனையில் உருவான கருத்து இல்லை, சமூகத்தில் பார்த்து அறிந்ததைத் இங்கே குறிப்பிடுகிறேன்.. ('வெளிநாட்டில் வளர்ந்த பொம்பிளை பிள்ளை என்றால் துணிஞ்சதொன்றாத் தான் இருக்கும், எதுக்கும் பார்த்து முடிவெடுங்கோ' என்று ஊரில இருக்கிற சில அம்மாக்கள் சும்மா இருக்கிற தமது தோழிகளுக்கும் ஏற்றிவிடுகிறார்கள்...)

ஒரு ஆணின் பாதுகாப்பு இல்லாமல் பெண் இந்த உலகத்தில வாழ முடியாதோ? ஏன் வாழ இல்லையோ?? முதலில் தற்பாதுகாப்பு தனிச் சுற்றி தானே போட்டுக்கொள்ள வேண்டியது. பெரும்பாலான பெண்கள் அதில் நிதானமாகத் தான் உள்ளார்கள்..

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் காதல்? ஊரில் உள்ள பெண்களுக்கு உடல் வலிமை இல்லை என்றா? இல்லாமலா போராட்டத்தில் பெண்களும் பங்கெடுத்தார்கள்?? (சிங்களவனின் கையில் சிக்குண்டு சின்னாபின்னம் ஆக்கப் பட்டதைப் பற்றி சொல்லவில்லை)

நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பொதுவான அடிப்படையில்... நீங்கள் என்னத் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்டுள்ளமையால் பதில் கூறுகிறேன்...

ஒரு பெண் தன்னில் வைக்கும் நம்பிக்கை தான் அவளுக்கு முதல் பாதுகாப்பு.. அதுக்கு அடுத்து தான் மற்றவர்களின் கொடுக்கும் பாதுகாப்பு... ஏன் இரவில் வேலை செய்யும் தமிழ் பெண்கள் உலகத்தில் இல்லையா? விமான சேவை, செய்திச் சேவையிலிருந்து சாதாரண வேலைகள் இரவு வேளைகளில் பெண்கள் வேலை செய்கிறார்கள்... நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் இருக்கிறீகள்? இரவு வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று உங்களால் 100% ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியுமா?

முன்பு நான் வேலை செய்த ஒரு கடையில் (supermarket) இரவு 11 மணிக்கு வேலை முடித்து 2 தமிழ் பெண்கள் தனியாக நிலத்தடி ரயிலில் போவார்கள்.. அதில் ஒருவர் திருமணமானவர்.. அவரது கணவர் இன்னொரு கிளையில் காலை 6 மணிவரை வேலை செய்வார்.. ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் பெண்கள் இரவு வேலை செய்தவர்களும்/ செய்பவர்களும் உள்ளார்கள்.. அதனால் இரவு வேலை செய்யும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முற்று முழுதாகச் சொல்வது சரியானதாகத் தெரியவில்லை! (இரவு வேலை/ செய்து கொண்டு இருக்கும் திருமணம் ஆன/ ஆகாத பெண்களைத் தவறான பார்வையில் மற்றவர்கள் பார்க்க வழிவகுக்கும் என்பதையும் தாழ்மையோடு இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)

இங்கே வேலை செய்யும் இடத்தில் ஒரு பாட்டி என்று வைத்தால் அங்கு உள்ள எல்லாருக்கும் தான் அழைப்பு வைப்பார்கள்.. அதுவும் பெரும்பாலும் வெள்ளிக் கிழமை வேலை முடிந்த பின்பு... வேலை செய்யும் தமிழ் பெண்களும் அந்த பாட்டிக்கு வருகிறார்கள், நிதானம் இழக்காமல் குடிக்கிறார்கள் தனியே வீடு செல்கிறார்கள்...

பெண் அடிமைத்தனம் என்று பல பெண்கள் பேச, எழுத படித்துள்ளோம்... ஆனால் அவர்களின் முன்னேற்றத்துக்குரிய வழிகள் கண் முன்னே தெரியும் போது பலர் அதனைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.. சிலர் இன்னும் பழைய புராணம் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.. (இந்தக் காலத்தில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுக்கும் வல்லுறவுகள் நடந்ததாக செய்திகளில் படிக்கிறோம்... அப்படி நடக்கும் நடக்கலாம் என்று பயந்தால் நாட்டில் யாருமே 6 மணிக்குப் பிறகு வெளியே போக முடியாதே...

கடைசியாக நீங்கள் கேட்டதிற்குப் பதில்... எனக்கு அந்த அனுபவம் இன்னும் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் இருக்குமாக இருந்தால், நான் தடையாக இருக்கமாட்டேன்.. நம்பிக்கை இருந்தால் எங்கேயும் அனுப்பலாம்! எனது நண்பர்கள் மீது எனக்கு நிறையவே நம்பிக்கை உள்ளது!! :)

வணக்கம் குட்டியர்!உள்ளதை சொல்லுங்கள்?

இன்றைய ஈழத்தமிழரின் வாழ்க்கை அவலங்களை உணர்ந்து எழுதுகின்றீர்களா? இல்லை நீங்கள்,உங்கள் கருத்து,உங்கள் நிலைப்பாடு வெற்றியளிக்கவேண்டுமென நினைத்து எழுதுகின்றீர்களா?

வணக்கம் கு.சா. அண்ண! ஈழத்தமிழரின் வாழ்க்கை அவலங்களுக்குள் தானே அசைலம் அடிக்கும் ஆண்களின் நிலைமையும் அடங்கியுள்ளது, அதைத்தான் குறிப்பிட்டேன்... திருமணத்தின் மூலம் வதிவுரிமை பெற்று ஊரிலிருந்து பெண்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. பொதுவாக பெண்கள் தமக்கு strong personality தன்மையைக் கொண்டு இருக்கவே விரும்புவார்கள்.. அவர்களை ஊக்குவிப்பதை சமூகத்தின் நலன் கருதியாவது நடைமுறைப் படுத்தவேண்டும் என்றே நினைக்கிறன்!

நான் எழுதும் கருத்து, மற்றவர்களின் பார்வையில் வேறுபடலாம்... இதில் நான் வெற்றி பெற வேண்டும் என்று எழுதியதாக எதை வைத்து கூறுகிறீர்கள் என்று புரியவில்லை... :unsure:

அவர் தான் "ஈகுவல் ஒப்பச்சூனிட்டி கதைப்பவர்கள் ஏன் ஆண்களுக்கு நிகராக தாமும் வாழ முடியாது? மனத் தைரியம் இருந்தால் எதையும் எதிர் நோக்கலாம்..." என்று குறிப்பிட்டார்.

அதற்காக அப்படி செய்ய சொல்லேல்லை. பாவம் குட்டி அண்ணா. :)

ஆனால் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொண்டால் சரி. மற்றபடி அவர் எனக்கு பதில் கருத்து எழுத வேண்டுமென்றில்லை. :)

தயவு செய்து இதை ஒருக்கா புரிய வையுங்கோ... :)

சொல்லுறேன் என்று குறை நினைக்கக் கூடாது... பொதுவாக ஒரு கேள்வியை ஒருவரை நோக்கி முன்வைக்கும் போது அதற்கான பதிலை எதிர்பார்த்துத் தான் முன்வைப்பார்கள்... உங்கட சில எழுத்துகளில் கொஞ்சம் தலைக்கணம் தெரிகிறது, சக கருத்தாளராகிய என்னை மட்டம் தட்டுவது போல் யாழில் முதல் முறை உணர்கிறேன்!

புதிதாக நாட்டுக்கு வரும் உங்கள் மனைவியை இரவு வேலைக்கு அனுப்புதல், pub க்கு அனுப்ப சம்மதித்தல் போன்ற செயல்களிலிருந்து உங்களை பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது.

உங்கள் நண்பர்கள் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை என்னை பாதிக்காது. உங்களையும் உங்கள் மனைவியையும் தான் பாதிக்கும்.

இங்கு குடிப்பழக்கமற்ற ஒருவர் குடிக்கும் போது அது மிக சிறிய அளவிலாக இருந்தாலும் அவரை சுய நினைவை இழக்க செய்யும். நடப்பது என்ன என்று தெரியாமல் இருக்கும். இங்கு உங்கள் மனைவி குடித்தாரோ இல்லையோ உங்கள் நண்பர்கள் நல்லவர்களோ இல்லையோ அவர்கள் குடித்த பின் பக்கத்தில் இருப்பது உங்கள் மனைவி என்று அவர்களுக்கு தெரியாமலேயே தப்பு செய்ய முனைவார்கள். இல்லை தெரிந்தே செய்வார்கள்.

ஒரு சிலவற்றில் முதலே யோசித்து நடக்க வேண்டும். அனுபவப்பட்ட பின் தான் யோசிப்பேன் என்று அடம்பிடித்தால் அது உங்கள் விருப்பம்.

ஆனாலும் இவ்வளவு சொல்லும் நீங்கள் கூட நிச்சயம் உங்கள் மனைவியை அப்படியெல்லாம் போக அனுமதியளிக்க மாட்டீர்கள். இவருடைய நண்பர்கள் யாராவது யாழில் இருந்தால் அவதானித்துக்கொள்ளுங்கப்பா.

தயவு செய்து இதை ஒருக்கா புரிய வையுங்கோ... :)

சொல்லுறேன் என்று குறை நினைக்கக் கூடாது... பொதுவாக ஒரு கேள்வியை ஒருவரை நோக்கி முன்வைக்கும் போது அதற்கான பதிலை எதிர்பார்த்துத் தான் முன்வைப்பார்கள்... உங்கட சில எழுத்துகளில் கொஞ்சம் தலைக்கணம் தெரிகிறது, சக கருத்தாளராகிய என்னை மட்டம் தட்டுவது போல் யாழில் முதல் முறை உணர்கிறேன்!

நிச்சயமாக உங்களை மட்டம் தட்டுவதாக நான் நினைத்து எழுதவில்லை. அப்படி என் கருத்துகள் அமைந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

சில கருத்தாளர்கள் தாம் சொல்வது பிழை என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொண்டால் தமக்கு தலைக்குனிவு என்று நினைத்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். (ஆனால் சக கருத்தாளர்கள் அப்படி கருதுவதில்லை) தாம் நினைத்தது தான் சரி என்று சொல்லி வாதாடுவார்கள். மனதில் என்ன நினைத்தாலும் எழுத்தில் கொண்டுவர தயக்கம்.

நீங்கள் சில திரிகளில் நடுநிலையாக கருத்து வைத்திருப்பதை அவதானித்திருக்கிறேன். ஆனால் இத்திரியில் அந்த நடுநிலை தன்மை குழம்பியிருப்பதாக நான் உணர்கிறேன்.

எனவே நீங்களும் அவர்கள் போல் மாறியிருக்கலாம், அல்லது மாறாமலும் இருக்கலாம். மாறியிருந்தால் நீங்கள் கருத்து எழுதுவதை விரும்ப மாட்டீர்கள். அல்லது மீண்டும் எதிராக எழுதுவீர்கள். அந்த வகையில் நீங்கள் எனக்கு கருத்து எழுத விரும்பாவிட்டால் தவிர்க்கலாம். உங்கள் மனதில் உண்மையை உணர்ந்தால் போதும் என்ற அர்த்தத்தில் எழுதினேன். (ஆனால் இங்கு மீண்டும் எதிராக எழுதியுள்ளீர்கள் :))

இதுவே உங்கள் கேள்விக்கான எனது பதில். :)

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.