Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு மூக்கிலும் மூக்குத்தி

Featured Replies

நான் சில காலத்திற்கு முன்னர் எனது நண்பி ஒருவர் இந்தியாவில் செட்டியார் (காரைகுடி)திருமணம் செய்தது பற்றி (அந்த பதிவை பார்க்க முடியவில்லை) குறிப்பிட்டு இருந்தேன், அதற்காக அவர் தனது ஆடை அணிகலண்கள், வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒரு அம்சம் தான் அவர் அவரது இரண்டு மூக்குகளிலும் பெரிய மூக்குத்தி அணியுமாறு வேண்டப்பட்டார், உண்மையில் அவரது படங்களை யாழில் பிரசுரித்து கள உறுப்பினர்களின் கருத்தை அறியலாம் என இருந்தேன் ஆனால் எனது நண்பி அதை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறினார், ஆனால் அண்மையில் தொலைகாட்சி விளம்பரஙக்லில் அவர் திருமணம் செய்த சமூகத்தவர் சம்ப்ந்தமான ஒரு திருமண காட்சி இடம் பெறுவதாக கூறி தான் அணித்து இருப்பது போல் மூக்குத்தி அணிந்த பெண்ணின் புகைபடத்தை அனுப்பி இருந்தார். அவர் திருமணம் செய்த்து காரைக்குடியில் செட்டியார் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அதி பிரசுரிக்கிறேன், எந்து நண்பிக்கும் இதே மாதிரியான 2 மூக்குத்திகள் தான் அணிவிக்கப்பட்டன, அவர் எவ்வள்வோ ம்றுத்தும் அவர்Hஅள்து கடுமையான உத்தரவு என்பதால் அதை அணிந்து வருகிறார்.

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

ns2.th.png

ns1oo.th.png

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

ஆபிரிக்கப் பெண்கள் குறிப்பாக கொங்கோ , செனகல் , மாலி , தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரியங்களைத்தானே புலத்திலும் பேணுகின்றார்கள் . எங்கடையாக்கள் மாதிரி வெக்கப்படுக்கொண்டா இருக்கிறார்கள் ? உதாரணமாக தான்சானியப் பாரம்பரியம்

PCU7083.jpg

PCU7083.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவ[ர்]காதலித்துத் கல்யாணம் செய்தவர் என முந்தி ஒரு பதிவில் நீங்கள் எழுதின ஞாபகம் அவவுக்கு கணவர் குடும்பத்திற்கு போக முன்னரே அவர்களது குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டு தானே போய் இருப்பார்...ஒன்று அக் குடும்பத்தோடு சேர்ந்து நடக்க வேண்டும்[அக் குடும்ப சம்பிரதாயங்களை பின் பற்ற வேண்டும்] இல்லா விட்டால் அவவுக்கு மூக்குத்தி போன்ற பல விசயங்கள் பிடிக்கா விட்டால் கணவரைக் கூட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் போகலாம் இர‌ண்டுக்கும் நடுவில் இருந்து அல்லாட‌க் கூடாது :D

இப்பவெல்லாம் தொப்புளில் இரண்டு மூன்று குத்தும் காலத்தில் மூக்கில் இரண்டு குத்தினால் என்ன (ஆனாலும் belly button ஆபரணங்கள் வடிவு தான்)

[size=4].. ஒற்றைக்கல் மூக்குத்தி ... அன்று யாழ்-அச்சுவேலி-ஆவரங்கால்-பருத்தித்துறை பஸ்ஸில் தொலைத்தது ... அதன் அழகே [/size][size=1][size=4]அழகுதான்! ... இங்கு ஒன்றுக்கு இரண்டு என்றால், வாவ்வ் ... உங்கள் நண்பிக்கு சொல்லுங்கள், "நீ கொடுத்த வைத்தவர் என்று"[/size](இல்லை, ஏறு மாறாக சொல்லி குடும்பத்தையா உடைப்பது?)[/size]

மேற்கத்திய பெண்கள் உடலின் பல இடங்களில் ஆபரணங்களை அணிகிறார்கள். இப்போ இது ஒரு பாஷன். மூக்குத்தி பெண்களுக்கு அழகாக இருக்கும்.

அந்தப் பெண்தான் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.

P1.jpg

மூக்கு குத்துவது..!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

64623_453154102472_7245800_a.jpg

மூக்குத்தி அணிந்த பெண்களை, மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும்.

அதனால்... அவமானம் இல்லை. அழகு மேலும் கூடுகின்றது.

ஆனால்... இரண்டு பக்கமும், பெரிய மூக்குத்தி அணிவது கொஞ்சம் அதிகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

பச்சை குத்துதல், மூக்கு குத்துதல் என்பன எமது மூதாதயர் காலத்தில் இருந்தது. இப்போது இது தான் fashon . பல நாட்டு இளம் வயதினர் மூக்கு குத்தியுள்ளார்கள்.மூக்கில் மட்டுமல்ல உடலின் sensitive partல் கூட குத்தியுள்ளார்கள்.

மேற்படி பெண் அவரின் கணவரின் வீட்டுக்காரரின் விருப்பப்படி மூக்குத்தி போட்டுக்கொள்ளலாம்.ஆனால் எந்த அளவில் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்தாத வரை சிறிய மூக்குத்திகளை அணியலாம்.அழகாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லையென்றால்

இரண்டு அல்ல ஒன்று குத்துவதே தப்புத்தான்.

அது அவளுக்கு சுமைதான்.

இதை விளங்கப்படுடுத்தி தனது நியாயத்தை கூறமுடியாதது அவரது பலவீனத்தையே காட்டுகிறது.

அப்புறம் எப்படி அவர் இந்தக்காலப்பெண் என்ற நிலையை எடுக்கிறார் என்பதும் கேள்விக்குரியது...........

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தாங்கள்தான் போராடணும்

மற்றவர் கொண்டு வந்து தருவார் என்றால்..........???

அது விடுதலை அல்ல.

இன்னொருவரது உழைப்பு.

அவரது நியாயங்களும் அதிலிருக்கும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் கூறிய மொத்தமான தாலிக்கொடி அணிந்ததும் இந்தப்பெண்தானோ? சாதி, இனம், மதம், சம்பிரதாயம் ஆதி, அந்தம் எல்லாம் அறிந்து அறிந்துதானே திருமணம் செய்கின்றார்கள். புது யுகம், பழைய யுகம், வெட்கம், துக்கம் எல்லாம் திருமணம் செய்யமுன்னர் யோசித்திருக்கவேண்டும். இப்போது காலம் தாழ்த்தி கதவு இடுப்பில் இடிக்கின்றது, கூரை தலையில் முட்டுகின்றது என்று பொல்லாப்பு சொன்னால் என்னமாதிரி?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் பெண்கள் இரண்டு பக்கமும் மூக்குத்தி குத்தியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இருவாரங்களுக்கு முன்பே நான் இரண்டு காதுகளிலும் கடுக்கண் போட்டிருக்கிறேன். எனது தந்தையின் நினைவாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.