Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

06-manoj-kumar-300.jpg

மாவட்ட லெவல் குத்து சண்டை போட்டி மாதிரி நடத்தப்படும் ஒலிம்பிக் : குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார்.

லண்டன்: லண்டனில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஆட்டத்தில் இந்தியாவின் மனோஜ்குமாரின் தோல்வியும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. குத்துச் சண்டையில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் நன்றாக ஆடிய போதும் அவர்கள் தோற்றதாக அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் 64 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மனோஜ்குமார், இங்கிலாந்தின் தாமஸ் ஸ்டால்கரை எதிர்கொண்டார். முதல் சுற்றில் மனோஜ்குமார் 4-7 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார். 2வது சுற்றிலும் 5-9 என்ற புள்ளி கணக்கில் மனோஜ்குமார் பின் தங்கியிருந்தார்.மூன்றாவது சுற்றிலும் 7 புள்ளிகளை மனோஜ்குமார் பெற்றிருந்தார். இதனால் மனோஜ்குமார் 16-20 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமது தோல்விக்கு மோசடிதான் காரணம் என்று மனோஜ்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் இது ஒலிம்பிக் போட்டி போல் இல்லை..மாவட்ட குத்துச் சண்டை போட்டி போல் இருக்கிறது என்றும் சாடியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • Replies 102
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஒலிம்பிக்கில் நான் விரும்பிப் பார்த்த ஒரே ஒரு நிகழ்வு உசேன் போல்ட்டின் 100m. மிகச் சிறந்த ஒரு தடகள வீரராக இவரை நான் கருதுகிறேன். நான் அதிகம் விரும்பிப் பார்க்கும் பிரித்தானிய மோட்டார் வாகன நிகழ்ச்சியான "Top Gear" இலும் இவர் விருந்தினராக பங்கு பற்றியிருந்தார். இவரில் எனக்கு இருக்கும் ஒரே குறை, மூன்று வருசங்களில் எனது மிக அபிமாந்திட்குரிய இரண்டு BMW M3 கார்களை விபத்துக்களில் நாசமாக்கி விட்டார்.

முதலாவது விபத்து

M3_2.jpg

இரண்டாவது விபத்து

M3_1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1611803711.jpg682365816.jpg

2192461606.jpg

HBJvfaCC_Pxgen_r_478x307.jpg

2662751073.jpg

இந்த ஒலிம்பிக்கில் யாரைப் பார்த்தாலும், உடம்பில் கண்ட இடமெல்லாம்.... வண்ண, வண்ண பிளாஸ்ரர் ஒட்டிக் கொண்டு விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எல்லோருக்கும்... ஒரே வருத்தமா? ஏன்... அப்படி ஒட்டுகின்றார்கள் என்று இணையத்தில் தேடியபோது....

உடம்பிலுள்ள சதைகளுக்கும், நரம்புக்கும் ஏற்படும் விரிவால் வரும் வலியை தடுக்க... எமது உடலிலுள்ள தோல் உதவி செய்வது போல்... இதுவும் ஒரு மேலதிக தோலாக, தசைகளைப் பாதுகாக்கின்றதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

usain-bolt-london-olympics-100-meters-gold-3.jpg

லண்டன் ஒலிம்பிக்கில், அவதானித்த இன்னொன்று பலரும்... பச்சை நைக் சப்பாத்துடன் விளையாடுகின்றார்கள்.

ஏன் என்று தெரிந்தவர்கள் கூறவும்.

சும்மா கொடுத்தால்... எனக்கு, 43ம் நம்பரிலை ஒரு சோடி சப்பாத்து வாங்கி அனுப்புங்கள், லண்டன் உறவுகளே.... :D :D

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

லண்டன் ஒலிம்பிக்கில், அவதானித்த இன்னொன்று பலரும்... பச்சை நைக் சப்பாத்துடன் விளையாடுகின்றார்கள்.

ஏன் என்று தெரிந்தவர்கள் கூறவும்.

சும்மா கொடுத்தால்... எனக்கு, 43ம் நம்பரிலை ஒரு சோடி சப்பாத்து வாங்கி அனுப்புங்கள், லண்டன் உறவுகளே.... :D :D

லண்டனில எப்ப இருட்டும் எண்டு சொல்ல ஏலாது!

அது தான் காசு கொடுத்து டிக்கட் வாங்கின சனம்,

காலையெண்டாலும், பாத்திட்டுப் போகட்டுமே என்ற பெருந்தன்மை தான் காரணம்! :icon_idea:

[size=4]உலகின் இரண்டாவது அதிவேக ஓட்டக்காரன் - யோகான் பிளேக்[/size]

[size=4]கையில் உள்ள கடிகாரம் - விலை ஐந்து இலட்சம் டாலர்கள் (500,000 USD) [/size]

[size=4]எங்கிருந்து வந்தது என ஒலிம்பிக் குழு ஆராய்வு[/size]

[size=4]http://thestar.blogs...akes-watch.html[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்காரங்கள் தங்களை விட வெறி(ரி) பிரிட்டிஸ் முன்னுக்கு நிக்கிறதைப்பாத்துட்டு பயங்கரகொதியிலை திரியிறாங்கள்..... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உலகின் இரண்டாவது அதிவேக ஓட்டக்காரன் - யோகான் பிளேக்[/size]

[size=4]கையில் உள்ள கடிகாரம் - விலை ஐந்து இலட்சம் டாலர்கள் (500,000 USD) [/size]

[size=4]எங்கிருந்து வந்தது என ஒலிம்பிக் குழு ஆராய்வு[/size]

[size=4]http://thestar.blogs...akes-watch.html[/size]

ஒலிம்பிக் குழுவுக்கு இதனைச் சோதிக்க அதிகாரம் உண்டா அகூதா.

அவர்களுக்கு விளையாட்டைச் சோதிக்கலாமாமே தவிர, சுங்கப் பரிசோதனை செய்ய உரிமை இல்லை, என நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11-spice-girls5-300.jpg

நடன மங்கைகளின் கோலாகல நடனத்துடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா.

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை நடைபெற உள்ள 15 போட்டிகளுடன் முடிவு அடைகிறது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடன மங்கைகளின் நடனம், வாணவேடிக்கை ஆகியவை உடன் கோலாகலமாக முடிவடைய உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 205 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய மொத்தம் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் இதுவரை இந்தியாவிற்கு 1 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இன்று மற்றும் நாளைய போட்டிகளிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளாக நாளை ஆண்களுக்கான மாரத்தான், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாட்டர் போலோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக் உட்பட மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதன்முடிவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. வரும் 13ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிறைவு விழா துவங்குகிறது. இதில் துவக்க விழாவை போலவே, இசை நிகழ்ச்சி, நடன மங்கைகளின் நடனம், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளது. ஆனால் இது குறித்த விபரங்களை, லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

இது குறித்து லண்டன் விளையாட்டு துறை தலைவர் செபஸ்டியன் கூறியதாவது,

நாளை ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா அல்ல. நிறைவு விழா என்றாலும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் பராம்பரிய இங்கிலாந்து இசை நிச்சயம் இடம்பெறும் என்றார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

நாளை தானா... இளையராஜா, ரஹ்மானின் இசைவிருந்து.

Edited by தமிழ் சிறி

[size=5]ஒலிம்பிக் விளையாட்டு முடிவு நிகழ்வுகளில் மகிந்தா கலந்து கொள்ளுவாரா? [/size]

ஒலிம்பிக் குழுவுக்கு இதனைச் சோதிக்க அதிகாரம் உண்டா அகூதா.

அவர்களுக்கு விளையாட்டைச் சோதிக்கலாமாமே தவிர, சுங்கப் பரிசோதனை செய்ய உரிமை இல்லை, என நம்புகின்றேன்.

[size=4]அந்த ஆங்கில செய்தியின் படி ஒலிம்பிக்குழுவுக்கு ஓரளவு அதிகாரம் உண்டு. இதில் உதாரணத்திற்கு போல்ட்டிற்கும் பிளேக்கிற்கும் இடையில் 'உடன்பாடு' இருந்தால்... இருவரின் பதக்கமும் பறிக்கப்படலாம். [/size]

[size=1]

[size=4]எவ்வாறு உடன்பாடு சாத்தியம்?[/size][/size][size=1]

[size=4]போல்ட் இரண்டு ( 100 and 200 m ) போட்டியியிலும் வென்றால் ...இப்பொழுது வென்றுவிட்டார், அது சாதனை. அது பணம். எவ்வளவு பணம் ? அவர் கிட்டத்தட்ட 40 -60 மில்லியன்கள் வரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விளம்பரங்கள் மூலம் பெறலாம். [/size][/size]

[size=1]

[size=4]எனவே போல்ட் பிளேக்கிற்கு உதாணத்திற்கு இரண்டு மில்லியன்களை தருகிறேன் என கூறி ஒரு இரகசிய ஒப்பந்தத்தை செய்திருக்கலாம், அத்துடன் ஒரு கைக்ககடிகாரமும் கிடைத்திருக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]இல்லை பிளேக்கிற்கு கூட விளம்பரம் ஊடாக பணம் கிடைத்து அதில் அவர் கைக்கடிகாரத்தை வேண்டி இருக்கலாம். [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அகூதா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

die-ferngesteuerten-elektro-minis-bringen-sportgeraete-bei-olympia-von-a-nach-b-.jpg

விளையாட்டு வீரர்கள் எறியும் தட்டு, குண்டுகளை ஆரம்ப இடத்திற்கு கொண்டு வருவதில்,

பத்து குதிரைச் சக்தி உள்ள மினி சிறிய கார்கள் லண்டன் ஒலிம்பிக்கில்... பெரும் வங்கு வகித்தது.

இது, றிமோட் கொன்ரோல் மூல‌ம் இய‌க்க‌ப்ப‌டுவ‌து, கூடுத‌ல் சிற‌ப்பு.

[size=4]உண்மை தான் தமிழ் சிறி. தொழில்நுட்பங்கள் மனிதர்களை இல்லாமலே செய்துவிடும். [/size]

விளையாட்டு வீரர்கள் எறியும் தட்டு, குண்டுகளை ஆரம்ப இடத்திற்கு கொண்டு வருவதில்,

பத்து குதிரைச் சக்தி உள்ள மினி சிறிய கார்கள் லண்டன் ஒலிம்பிக்கில்... பெரும் வங்கு வகித்தது.

இது, றிமோட் கொன்ரோல் மூல‌ம் இய‌க்க‌ப்ப‌டுவ‌து, கூடுத‌ல் சிற‌ப்பு.

[size=4]இதை அல்கைடாவும் அவதானிக்கும் :rolleyes:[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடற் பயிற்சி செய்யும் பேரூந்து.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் மெக்சிக்கொ பிறேசிலை 2 : 1 என்ற முறையில் தோற்கடித்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டது.

பிறேசில் 1984,1988 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012 ஆண்டுடன் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில்

மூன்றவது முறை தோல்வியைத் தழுவிக்கொண்டது

மெக்சிக்கொ உதைபந்தாட்டத்தில் கிண்ணத்தைக் கைப்பற்றியது தனது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.

வெண்கலப்பதக்கத்தை தென்கொரியா வென்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11-spice-girls5-300.jpg

நடன மங்கைகளின் கோலாகல நடனத்துடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா.

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை நடைபெற உள்ள 15 போட்டிகளுடன் முடிவு அடைகிறது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடன மங்கைகளின் நடனம், வாணவேடிக்கை ஆகியவை உடன் கோலாகலமாக முடிவடைய உள்ளது.

ஆரம்ப விழாவில் செய்தது போல் அன்றி ஒரு இரசித்து இன்புறத்தக்க இறுதி நிகழ்வைத் தருவார்கள் என்று எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிகொள்கிறோம்.

-தொடக்க விழாவைபார்த்து கடுப்பில் இருப்போர் குழு-

போனதடவை போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில். இந்த தடவை பெரிய பிருத்தானியா தன்னையும் சேர்த்திருக்கிறது.

சீனா திருட்டுத்தனமாக தங்கங்களுக்கு மட்டும் போய் போனதடவை வெற்றியை திருடிக்கொண்டது. இந்த முறை நாடுகள் அந்த தந்திரத்திற்கு இடம் கொடுக்கவில்லை. அதாவது 2008 ல் முதல் ஐந்து நாடுகளிலும் 35% தங்கத்தையும் பெற்ற சீனா இந்தமுறை 26% வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. தங்கத்தை மற்றவர்களும் சீனாவுடன் பங்கிட்டுக்கொண்டார்கள். ஆனாலும் சீனா அடுத்தமுறை இலகுவில் திரும்பிப் போகமாட்டாது. இனிமேலைய காலங்களில் ஒலிம்பிக் என்றால் அது சீனாதான்.

Olympic%2520Games.jpg

இது விக்கிபீடியாவில் இன்று காணப்படும் தரவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. நாடுகள் 2008 ன் அடுக்கு நிலையில் காணப்படுகின்றன. அதனால் இந்த முறை 5ஆவதான தென் கொறியா சேர்க்கப்படவில்லை. ஆச்சரியத்திற்கான முறையில் இருதடவையும் கூட்டுத்தொகை 371 பதக்கங்கள்.

போன தடவை 12.7% பெற்ற பிருத்தானியா இந்த முறை 21% ஆக உயர்ந்திருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images-14.jpg

09-andy-murrays-dogs-medals.jpg

ஒலிம்பிக் பதக்கங்களை... நாய்களுக்கு போட்டு அழகு பார்த்த, டென்னிஸ் வீரர் ஆன்டி முரேயின் காதலி.

பெங்களுர்: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முரே பெற்ற ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வீட்டு நாய்களுக்கு போட்டு அழகு பார்த்துள்ளார் அவரது காதலி.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு உலகில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் செயல்பட்டு வருகின்றனர். அதற்காக பலர் தங்களின் வாழ்க்கையே தாகம் செய்து, பயிற்சி மேற்கொண்டு பதக்கம் பெறுகின்றனர். இதில் சிலருக்கு ஏமாற்றமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை, அவரது வீட்டு நாய்க்குட்டிகள் அணிந்த படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவரது காதலி டுவிட்டர் இணையதளத்திலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஆன்டி முரேயின் காதலி கிம் ஷியர்ஸ் டுவிட்டர் இணையதளத்தில், ரஸ்டி(நாய் குட்டி) வெள்ளிப்பதக்கம் பொறுத்தமாக உள்ளதா என்று போட்டி பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஆன்டி முரேயின் வீட்டு நாய்க்குட்டிகளுக்கு, அவரது ஒலிம்பிக் பதக்கங்களை அணிவித்த போட்டோவும் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட உலகின் பல முன்னணி விளையாட்டு வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் கிடைக்கும் பதக்கத்திற்கு இவ்வளவு தான் மதிப்பா என்று பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தோல்வியை தழுவிய ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதித்தார். ஆனால் அவரது பதக்கங்கள் வீட்டு நாய்களுக்கு போட்டு அழகு பார்த்தது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

நன்றி தற்ஸ்தமிழ்.

[size=5]ஒலிம்பிக்: பெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிப்பு[/size]

[size=5] [/size]

[size=4]ஊக்க மருந்து காரணமாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றபெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் பெலாரஸ் நாட்டை சேர்ந்தநட்ஜியா ஆஸ்டப்சக்தங்கம் வென்றார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட மெட்டநோலோன் என்ற மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால், இவரிடம் இருந்த தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. [/size]

[size=4]இப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நியூசிலாந்தின் ஆடம்சிற்கு தங்கம் கிடைத்தது. 3 மற்றும் 4வது இடத்தை பெற்ற கொலோட்கோ (ரஷ்யா), கோங் (சீனா) ஆகியோருக்கு வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது. [/size]

[size=4]http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ல-140700575.html[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஒலிம்பிக்: பெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிப்பு[/size]

[size=4]ஊக்க மருந்து காரணமாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றபெலாரஸ் வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் குண்டு எறிதல் போட்டியில் பெலாரஸ் நாட்டை சேர்ந்தநட்ஜியா ஆஸ்டப்சக்தங்கம் வென்றார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட மெட்டநோலோன் என்ற மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால், இவரிடம் இருந்த தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. [/size]

[size=4]இப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நியூசிலாந்தின் ஆடம்சிற்கு தங்கம் கிடைத்தது. 3 மற்றும் 4வது இடத்தை பெற்ற கொலோட்கோ (ரஷ்யா), கோங் (சீனா) ஆகியோருக்கு வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது. [/size]

இது, ரொம்ப அநியாயமாயிருக்கே....

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், அந்த நாட்டுக்கு உள் வரும் போதே....

ஊக்க மருந்து சாப்பிட்டார்களா என்று, சோதித்து தானே... அனுப்புவார்கள்.

அதன் படி, லண்டன் விளையாட்டு ஆரம்பிக்க முதல்... விமான நிலையத்தில் வைத்து திருப்பி... அனுப்பப் பட்ட வீரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானது.

லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில்... தங்கியிருப்பவர்களுக்கு, ஊக்கமருந்தை யார் கொடுத்தது.

சில வேளை... ஊரில், இருந்து கொண்டு வந்த... கட்டுச் சாதம், வினையாகிப் போட்டுதோ...

[size=4]இப்படி பிடிபடாமல் எத்தனைபேர் வென்று உள்ளார்களோ? [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இப்படி பிடிபடாமல் எத்தனைபேர் வென்று உள்ளார்களோ? [/size]

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் நடந்த 50 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியொன்றில்... முன்னணியில் வந்து கொண்டிருந்த ஆபிரிக்க வீரர் ஒருவர்... வீதியோரத்தில் சும்மா... தண்ணீர் பந்தலை வைத்து, தண்ணீர் விநியோகிப்பவரை... நம்மாமல், தன்னுடைய... நாட்டு தண்ணீர்ப்பந்தலில்... தாகசாந்தியை நின்று, நிதானமாக குடித்து, தொடர்ந்து ஓடியது... மறக்க முடியாதது :D .

இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் விற்கப்படும் மிளகாய்த்தூளை சாப்பிட்டாலும்... ஊக்கமருந்து சாப்பிட்ட அறிகுறி தெரியுமாம் என்று, ஆரோ... சொல்லக் கேள்விப்பட்டேன். :icon_idea:

இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் விற்கப்படும் மிளகாய்த்தூளை சாப்பிட்டாலும்... ஊக்கமருந்து சாப்பிட்ட அறிகுறி தெரியுமாம் என்று, ஆரோ... சொல்லக் கேள்விப்பட்டேன். :icon_idea:

இப்பதானே தெரிகிறது தமிழ்கடையில் "தூள்"வாங்கி போட்டு கறி சமைத்து சாப்பிட்டால் ஏன் அவ்வளவு வில்லங்கமாக இருக்கிறது என்று. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.