Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16.07.1990 அன்று பலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரத்தளபதியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

13_lt_col_regan.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான மறக்க முடியாத ஓர் அண்ணா

Posted

இந்தியப் படை காலங்களில் போராட்டத்தை உயிர்ப்பித்தவர்களில் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]வீர வணக்கங்கள்.[/size]

Posted (edited)

தளபதிக்கு வீர வணக்கங்கள்.

Edited by பகலவன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.