Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளை 1.5 கிலோ எடை கொண்டது. உடலின் அனைத்து இயக்கங்களும் மூளையின் உத்தரவுப்படியே நடக்கின்றன. நாம் சிந்திப்பது, பேசுவது, ஓடுவது, உண்பது, மகிழ்ச்சி, வருத்தம் என அனைத்தும் மூளையின் உத்தரப்படி தான் நடக்கிறது.

கரு உற்பத்தியான 2வது வாரத்தில் மூளை தோன்றிவிடுகிறது. 3 மாத கருவின் மொத்த எடையில் பாதி, மூளையின் எடையாக இருக்கும்.

உடலின் எந்தவொரு உறுப்பும் பாதிக்கப்பட்டால், மருத்துவம் மூலம் அதை குணப்படுத்துகிறோம். மூளையின் திறன் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். மூளை செயலிழந்துவிட்டால் இறப்பைத் தான் சந்திக்க வேண்டும்.

உடலின் மொத்த எடையில் 40-ல் ஒரு பங்குள்ள மூளைக்கு, உடலில் ஓடும் ரத்தத்தில் 5-ல் ஒரு பங்கு தேவைப்படுகிறது.

வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள்.

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம டிக்கால்ஜி விடுமுறை எடுத்து விட்டு இந்தியா போகின்றார் அங்கே தாஸ்மாக் க்கு போக வேண்டும் என்று ஆசை வருகின்றது நம்ம டிக்கால்ஜி தாஸ்மாக் சென்று செய்கின்ற அட்டகாசத்தை பாப்பம்

டிக்கால்ஜி மது குடிப்பதற்காகச் சென்றார்.

அட்டகாசமாக மதுவகத்தின் உள்ளே நுழைந்த டிக்கால்ஜி முழங்கினார்..

"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..! ஆஆங்... நீயும் ஒரு கிளாஸ் அடிச்சுக்கோ..! "

அவ்வாறே நிகழ்ந்தது. மற்ற குடிகாரர்கள் எல்லோரும் டிக்கால்ஜியை நன்றி கலந்த விழிகளால் நோக்கினார்கள்..

இரண்டு கிளாஸ் விஸ்கியையும் ஒரே மடக்கில் உள்ளே சரித்துக்கொண்ட டிக்கால்ஜி ,மீண்டும் கடை ஊழியரைப் பார்த்து ஆணையிட்டார்..

"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..! ஆஆங்... நீயும் ஒரு கிளாஸ் அடிச்சுக்கோ..! "

ஊழியர் மெல்ல வினவினார்..

முதலில் கொடுத்த பானத்துக்கே நீங்க 1500 ரூபாய் தரணும் சார்..!

என்ன பேச்சு பேசறே.. ராஸ்கல்.. பணம் இருந்தா கொடுக்க மாட்டேனா..?

வெகுண்ட ஊழியன், டிக்கால்ஜி வஞ்சகமில்லாமல் சுளுக்கு எடுத்தான். பின் அவர் முதுகுக்கு ஒரு சாண் கீழே உதைத்து வெளியே தள்ளினான். சற்றுநேரம் மூச்சுபேச்சற்றுக் கிடந்த டிக்கால்ஜி ஒருவாறு எழுந்து, மீண்டும் மதுவகத்துக்குள் சென்றார்..

"யோவ் கடைக்காரரே.. ரெண்டு கிளாஸ் விஸ்கி ஊத்து.. அப்படியே இங்கே இருக்கற எல்லோருக்கும் என் கணக்குல ஆளுக்கொரு கிளாஸ் ஊத்து..!"

ஊழியன் கிண்டலாகக் கேட்டான்.. "அப்படியே எனக்கொரு கிளாஸ் ஊத்திக்கட்டுமா..?"

டிக்கால்ஜி , "வேணாம்.. வேணாம்.. ஒரு கிளாஸ் குடிச்சதுக்கே உனக்கு என்ன பண்றோம்ன்னு தெரியல.. போதை ஏறிட்டா நீ ரொம்ப மோசமான ஆளாப் போயிடறே..!" என்றார் தன் பின்புறத்தைத் தடவிக்கொண்டு..!

:D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களுக்கு நல்ல நகைச்சுவையுணர்வு உள்ளது...பாராட்டுக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...மகிழ்ச்சியான திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் டிக்கால்ஜியும் ரொம்ப போர் அடிக்கிதெண்டு சொல்லி London museum சுத்தி பாக்க போரம் அங்க மம்மி செலை பைசிருக்காங்க........

அங்க நடக்கிறது

சுண்டல் ஜி : பாரு! பண்டேஜால எவ்வளவோ கட்டு போட்டிருக்காங்கன்னு. கண்டிப்பா இது லாரி ஆக்சிடேன்டாகத்தான் இருக்கணும்.

டிக்கால்ஜி: ஆமாமா அப்படிதான் இருக்கும். லாரி நம்பர் கூட எழுதியிருக்காங்க பாரு BC 3500 ன்னு.

அங்க திடீர் எண்டு வந்த இசை அண்ணா டேய் நீங்க ரெண்டு பேறும் ரொம்ப அறிவாளிங்க டா

பாதுங்கடா நீங்க ரோடு ல அடிபடாம ஒழுங்கா வீட்ட போய் சேருங்க அப்புறம் உங்க ரெண்டு பேரையும் இங்க தான் கொண்டு வந்து வைப்பாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் ஆன்டி : ஏங்க ஏங்க

கும்ஸ் தாத்ஸ்: ஏண்டி இப்ப தானே வேலையால வந்தனான் என்ன நோங்க நோங்க? சொல்லி தொலை

பரிமளம்: ரோசி என்றது யாருங்க?

கும்ஸ்: திடுகிட்டவர் தன்னோட வேலை சேயிரவளோட பேர் இவளுக்கு எப்பிடி தெரிய வந்திச்சு? ஒரு வேளை வேலைக்கு கார் ல லிப்ட் கொடுத்தத பாத்திருப்பாளோ? என்று நினைத்து திடுகிட்டவர் சரி எதுக்கும் சாமாளிப்பம்........

அது டி வந்து வந்து பந்தையத்தில் நான் பணம் கட்ட போகும் குதுரையின் பெயர் ஏன் கேட்டனி?

பரிஸ்: அப்பிடியா அந்த குதுரை இணைக்கு மத்தியானம் உங்களுக்கு போன் பண்ணிச்சு.....

அதிர்ந்து போய் நிண்ட கும்ஸ் நாசமறுப்பால் சிக் அடிச்சவள் மொபைல் க்கு போன் பண்ணாமல் இங்க எதுக்கு போன் பண்ணினால் ஆவ்வ் ..........

சரி சமாளிப்பம்....... அடி பரிஸ் உத விடு இந்த முறை புதுவருஷத்திக்கு உனக்கு 3000 ஐரோ ல புதுப்புடவை 5000 ஐரோ ல latestaa வந்திரிக்கிற காப்பு எண்டு எடுத்து தந்து அசத்த போறன் பார் இப்ப ஓடி போய் ஒரு tea போட்டிட்டு வா என்று கூறவும் பரிமளம் ஆன்டி அவசர அவசரமா சமையலறையை நோக்கி நடையை கட்டினார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தமிழ் அண்ணா இடையிடையே யாழையும் எட்டிப்பார்த்தபடி ஸ்டாக் டேக் இல் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார் அவர் கணணி பக்கம் திரும்பி யாழை தீவிரமாக பாக்காததை கண்ட அவரின் மேலதிகாரி rud அவர்கள் ஆச்சரியமாகி தன்னுடைய செலவில் ஒரு கபே வாங்கி கொடுத்திருக்கின்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன....,

இதே வேளை திண்ணையில் தனக்கு சனி மற்றும் ஞாயிறு லீவ் என்று எழுதி சந்தோஷப்பட்டதை பார்த்த இசையானவரின் மானைவி இரண்டு நாட்களும் அவர் தான் சமைக்க வேண்டும் என்று சொன்னதால் யாழ் கள சமையல் பகுதியில் சுலபமான சமையல் குறிப்புகளை தேடிக்கொண்டு இருக்கின்றார்

Felemington மார்க்கெட் இல் போய் மீன் வாங்கிட்டு வந்த புங்கை அண்ணா அதைப்பொரிப்பதா இல்லை குழம்பு வைப்பதா என்று குழம்பி போய் இருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தமிழ் அண்ணா இடையிடையே யாழையும் எட்டிப்பார்த்தபடி ஸ்டாக் டேக் இல் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்றார் அவர் கணணி பக்கம் திரும்பி யாழை தீவிரமாக பாக்காததை கண்ட அவரின் மேலதிகாரி rud அவர்கள் ஆச்சரியமாகி தன்னுடைய செலவில் ஒரு கபே வாங்கி கொடுத்திருக்கின்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிகின்றன....,

இதே வேளை திண்ணையில் தனக்கு சனி மற்றும் ஞாயிறு லீவ் என்று எழுதி சந்தோஷப்பட்டதை பார்த்த இசையானவரின் மானைவி இரண்டு நாட்களும் அவர் தான் சமைக்க வேண்டும் என்று சொன்னதால் யாழ் கள சமையல் பகுதியில் சுலபமான சமையல் குறிப்புகளை தேடிக்கொண்டு இருக்கின்றார்

Felemington மார்க்கெட் இல் போய் மீன் வாங்கிட்டு வந்த புங்கை அண்ணா அதைப்பொரிப்பதா இல்லை குழம்பு வைப்பதா என்று குழம்பி போய் இருக்கின்றார்

கொஞ்ச நாளாய், சனம் நவராத்திரி, விளக்கீடு, சூரன் போர் எண்டு, மீன்கடைப் பக்கம் வராம இருந்துதுகள்!

இண்டைக்கெண்டு, எல்லாரும் மீன் மாகற்றுக்குள்ள, அள்ளுப்பட்டுப் பாரைமீன், ஓட்டிமீன், விளமீன் எல்லாம், பேய் விலை எண்டு, வெறும் திரளி மீனோடை, வீட்ட வந்து செம கடுப்பில இருக்கிறன்!

அதுக்குள்ளே சுண்டல், துரியோதனன் கேட்டது மாதிரி, பொரிக்கவோ, குழம்புக்கோ, எண்டு கேட்க, எப்படியிருக்கும் எண்டு நினைக்கிறியள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாய், சனம் நவராத்திரி, விளக்கீடு, சூரன் போர் எண்டு, மீன்கடைப் பக்கம் வராம இருந்துதுகள்!

இண்டைக்கெண்டு, எல்லாரும் மீன் மாகற்றுக்குள்ள, அள்ளுப்பட்டுப் பாரைமீன், ஓட்டிமீன், விளமீன் எல்லாம், பேய் விலை எண்டு, வெறும் திரளி மீனோடை, வீட்ட வந்து செம கடுப்பில இருக்கிறன்!

அதுக்குள்ளே சுண்டல், துரியோதனன் கேட்டது மாதிரி, பொரிக்கவோ, குழம்புக்கோ, எண்டு கேட்க, எப்படியிருக்கும் எண்டு நினைக்கிறியள்? :D

[size=4] பேசாமல் கடற்கரை பக்கமாய் போய் வலையை வீசி பாருங்கோ ...........அகப்படும். :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பேசாமல் கடற்கரை பக்கமாய் போய் வலையை வீசி பாருங்கோ ...........அகப்படும். :D[/size]

அது சரி

அதை ஏன் நீலத்தில எழுதியிருக்கு.......... :wub:

இப்ப இந்த 2 கிழடுகளின் தொல்லை தாங்கமுடியல அப்பா................. :lol::D :D

(பாட்டி மீண்டும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

அதை ஏன் நீலத்தில எழுதியிருக்கு.......... :wub:

இப்ப இந்த 2 கிழடுகளின் தொல்லை தாங்கமுடியல அப்பா................. :lol::D :D

(பாட்டி மீண்டும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி)

[size=4] சந்தோசம்............. :D நீலம் தான் எனக்கு பிடித்த் கலரு .......[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டனர்...

"ஏன், என்னவோ போல இருக்கிறாய்?'

"நான் விரைவில் தந்தையாகப் போகிறேன்...'

"அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?'

"இன்னும் என் மனைவிக்குத் தெரியாது...'

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை, இந்தியில் படமாகிறது. பாவ்னா தல்வர் இயக்கும் அப்படத்தில், அபிஷேக்பச்சன், ராஜீவ் காந்தியாக நடிக்கிறார். ராஜீவ் காந்தியின் இளமை காலம், அரசியல் பிரவேசம், குண்டு வெடிப்பில் அவர் இறந்தது வரையிலான முக்கிய சம்பவங்கள், அப்படத்தில் இடம்பெற இருக்கிறது.

ஐ படத்தில், ஒலிம்பிக்கை மையமாக வைத்து, கதை தயார் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை.

உயிரே படத்தில் இடம் பெற்ற, "தக தைய்யா தைய்யா' பாடலை பாடியவர் சுக்விந்தர்சிங். அதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடி வந்தவர், கடைசியாக, ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில், "ஜெய்ஹோ' என்ற பாடலையும் பாடினார். ரஹ்மானுக்கும், சுக்விந்தர் சிங்குக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது, தன் இசையில் அவரை பாட வைப்பதை தவிர்த்து வருகிறார் ரஹ்மான்.

— சினிமா பொன்னையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங் ஆ?

டிக்கால் ஜி: ஹலோ இது குரங்கு இல்லை நாய்

சுண்டல் ஜி: நான் நாய் கிட்ட கேட்டன்

டிக்கால் ஜி; அப்ப சரி!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங் ஆ?

டிக்கால் ஜி: ஹலோ இது குரங்கு இல்லை நாய்

சுண்டல் ஜி: நான் நாய் கிட்ட கேட்டன்

டிக்கால் ஜி; அப்ப சரி!

 

நாய் கூட உங்களுடன் பேசுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சம் அது ஒரு கலை நீங்க Australia வரும் போது கண்டிப்பா வந்து meet பண்ணுங்க சொல்லி தாறன் ஓகே வா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கூட உங்களுடன் பேசுமா?

 

இனம் இனத்தின் பாசை நமக்கேன் வம்பு  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தை எப்பவும் மறக்க கூடாது

1 ) விரும்பி எது வந்தாலும் take care

2 ) விலகி எது போனாலும் don't care

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தை எப்பவும் மறக்க கூடாது

1 ) விரும்பி எது வந்தாலும் take care

2 ) விலகி எது போனாலும் don't care

 

நல்ல பாலிசி சுண்டல் ஜீ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(பல் டாக்டர் சுண்டல்ஜி கிட்ட டிக்கால் ஜி வைத்தியம் பார்க்க போறாரு...)

டிக்கால்ஜி : நீங்க ஒரு பல் டாக்டரா ?

Sundal ஜி : இல்லை நான் முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்.

டிக்கால்ஜி : சரி விடுங்க.... எனக்கு பயங்கர பல்லு வலி...

சுண்டல் ஜி : பல்வலிக்கு முகியமான காரணம் என்ன தெரியுமா?

டிக்கால்ஜி : தெரியலையே....

சுண்டல் ஜி : பல்லு தான்.

டிக்கால்ஜி : ஆகா

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம டிக்கால்ஜி ஒரு பொண்ண லவ் பண்ணினாரு ஒரு நாள் அந்த பொன்னையும் கூட்டிட்டு restaurant க்கு போனாரு......

ஒரு plate ஆர்டர் பண்ணி அலுவல பாப்பம் கையில வேற பணம் இல்லைன்னு நினைச்ச டிக்கால்ஜி தன்னோட gf ah பாத்து சொன்னாரு......

அன்பே .....நாம் இருவரும் ஒன்றாய் கலந்து விட்டோம் கண்ணே என்று.......

அதற்க்கு டிக்கால்ஜி ஓட gf சொன்னா......

மவனே அந்தக்கதையே இங்க வேணாம் ஒழுங்கா ரெண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் பண்ணு...... கஞ்சபிசினாரி எண்டு........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில்தங்கியிருந்தான்....ஹோட்டலை காலி செய்து விட்டு கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .

அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....

திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால்வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....

கதவும்சாத்தியிருந்தது....சாவித் துவாரம் வழியாக உள்ளே என்னபேசுகிறார்கள் என்று கேட்டான்...

கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?

மனைவி: உன்னுடையது தான் அன்பே

க : இந்த உதடுகள் யாருடையவை?

ம : உன்னுடையது தான் அன்பே

க : இந்த கன்னம் யாருடையது?

ம : உன்னுடையது தான் அன்பே

இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்...."அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்ட குடை மட்டும் என்னுடையது....."

Hahahahahaha

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தை எப்பவும் மறக்க கூடாது

1 ) விரும்பி எது வந்தாலும் take care

2 ) விலகி எது போனாலும் don't care

 

நல்ல விஷயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல் சர்வர்;

சார் பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ?

கஸ்டமர் ;

அது வரைக்கும் எனக்கு டைம் இல்ல ,

இப்பவே ஊத்து

தோசைக்கு ஏன் தோசைன்னு பெயர்

வச்சாங்கன்னு தெரியுமா?

முதலில் 'மாவை ' கல்லுல ஊத்துரப்ப "சை" என்று

ஒரு சவுண்ட் வரும்;;;;;;;;;;;;;;

இரண்டாவது அதை திருப்பி போடுறப்ப இன்னொரு "சை " என்று சவுண்ட் வரும்;;;;;;;;;;;;;;;;;;

எனவே ரெண்டு "சை" வரும் ............

ஹிந்தில "தோ" என்றால் ரெண்டு..........

எனவே ரெண்டு "சை"= தோசை ....

no no dont cry

:D :d

அன்பா பேசுங்க ஆசையா பேசுங்க

கோவமா பேசுங்க கொஞ்சலா பேசுங்க

காரமா பேசுங்க இனிப்பா பேசுங்க

விடாம பேசுங்க விட்டுவிட்டு பேசுங்க

வசனமா பேசுங்க வாழ்த்தா பேசுங்க

பேசுங்க நண்பர்களே நல்லா பேசுங்க

நீங்க பேசுறது கேட்கரவங்களுக்கும்

நல்லது செய்யுமுன்னா நல்லா பேசுங்க

உங்க வார்த்த நல்லத செய்யவைக்குமுன்னா

உங்க வார்த்தையால நாடு முன்னேருமுன்னா

உங்க வாய்சொல் நல்லத சொல்லுமுன்னா

எங்க நின்னு வேண்ணாலும்

உங்க விருப்பபடியெல்லாம்

நல்லா பேசலாமே நாளும் பேசலாமே..!!

அதுக்காக சுண்டல வந்து பேசாதிங்கப்பா :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக்கொடுத்த பெண்!!

விட்டுக்கொடுத்த பெண்!!

ஒரு ஆபத்தான சூழ்நிலலயில் ஹெலியில் 11 பேர் ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.

10 ஆண்களும் 1 பெண்ணும் அவர்களுள் அடக்கம்............

10 பேரைத்ததங்கும் சக்திதான் கயிற்றுக்கிருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதும் யாராவது 1வர் குதித்தால்தான் மற்ற 10 பேரும் தப்பலாம் என்ற சூழ்நிலை.

யார் குதிப்பது? எல்லோருக்கும் குழப்பம்........

''லேடீஸ் பர்ஸ்ட்'' என்ற கோட்பபட்டுக்கமைய எல்லோர் பார்வவயும் பெண்மேல் விழுந்தது.

நிலமையை உணர்ந்த பெண் மிக உருக்கமாக பேசத்தொடங்கினாள்

''அன்பர்களே...............

பெண் என்பவள் விட்டுக்கொடுப்பதை தன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டு வாழ்பவள்.

மகளாய் - அப்பாவுக்காக விட்டுக்கொடுக்கின்றோம்

மனனவியாய் - கணவனுக்கு விட்டுக்கொடுக்கின்றோம்

தாயாய் - மகனுக்கு விட்டுக்கொடுக்கின்றோம்

எனவே இன்று உங்கள் அனைவருக்கும் நண்பியாய் நான் விட்டுக்கொடுக்கின்றேன்.......''

என்று அவள் தனது உருக்கமான பேச்சை முடித்ததும்.

கயிற்றை பற்றியிருந்த 10 ஆண்களும் தன்னையும் அறியாது தங்கள் கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

இப்போது அவள் மட்டும் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நந்தன் அண்ணாவின் பையன் நந்தன் அண்ணாவிடம் கேட்டான்

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.

“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.

“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.

“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...

... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுண்டலுக்கும் இப்படி போன் பண்ணி யாராவது இம்சை பண்ணுங்கப்பா . தாங்கமுடியல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.