Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

heartattack%2099999.jpg

[size=4]லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.[/size]

[size=4]இது தொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

வழக்கமான பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரத்தில் கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகம் குடிக்கின்றனர். அவர்களது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவையே அதிகம் சாப்பிடுகின்றனர்.[/size]

[size=4]இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிய அளவில் கூட உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை.[/size]

[size=4]இது தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொடர்ந்து இரவுப் பணியில் இருப்பவர்கள், இரவு, பகல், மாலை என மாறி மாறி பணிபுரிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உள்ளது தெரியவந்தது.[/size]

[size=4]மாரடைப்பு, வலிப்புநோய் போன்றவை மற்றவர்களுக்கு வருவதைவிட இவர்களுக்கு ஏற்பட 40 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது.[/size]

[size=4]இரவு என்பது தூங்குவதற்கான நேரம் என்ற இயற்கை விதி. இதற்கு மாறாக இரவில் வெகுநேரம் கண்விழித்துப் பணியாற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்பது பொதுவான உண்மை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனினும் இப்போதைய இளைஞர்கள் இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும், இரவுப் பணியின் இடையே புகைப்பிடிப்பது போன்றவை அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size]

http://www.nakkheera...ws.aspx?N=79784

(இந்த ஆய்வு குறித்து அல்ஜசீராவில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் தோன்றி கருத்தும் தெரிவித்திருந்தனர்.)

Shift work link to 'increased risk of heart problems'

_61828872_office_workers_at_desk.jpg

Working night shifts can disrupt the body's clock and lead to health problems

Shift workers are slightly more at risk of having a heart attack or stroke than day workers, research suggests.

An analysis of studies involving more than 2m workers in the British Medical Journal said shift work can disrupt the body clock and have an adverse effect on lifestyle.

It has previously been linked to an increased risk of high blood pressure and diabetes.

Limiting night shifts would help workers cope, experts said.

The team of researchers from Canada and Norway analysed 34 studies.

In total, there were 17,359 coronary events of some kind, including cardiac arrests, 6,598 heart attacks and 1,854 strokes caused by lack of blood to the brain.

These events were more common in shift workers than in other people.

http://www.bbc.co.uk/news/health-18996082

Edited by nedukkalapoovan

இரவு நேரத் தூக்கத்திற்கு, பகல் தூக்கம் சமனாகாது. அது இயற்கை. ஊரிலும் பலர் மோசமான நோய்வாய்ப் பட்டதைக் கண்டிருக்கிறேன்

இதிலும் ஒரு குறிப்பு உண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105544&st=20#entry783511

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இஞ்சை இரவிரவாய் நித்திரை முழிச்சிருந்து புடுங்குப்படுறவைக்கும் வரும்...வரலாம்...வந்துட்டுது....வரப்போகுது :D:icon_idea:

சுழற்சிமுறை பணி - shift work செய்வது உடல்நலத்துக்கு தீங்கானது என்று கடந்த சில தினங்களில் கூகிழ் செய்தி மருத்துவப்பகுதியில் ஓர் கட்டுரை தலைப்பை பார்த்தேன். வாசிக்கவில்லை.

இடையிடையே இரவில் எழும்பி 'அலுவல்' பார்த்தாலும் இதய வியாதி வருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலுவல் இல்லை பிரச்சனை, நித்திரைதான் பிரச்னை; நித்திரை ஒரு ???ஓய்வான, ஆனால் உடலுக்கு தேவையான செயற்பாடு. அதை அடிக்கடி குழப்பினால் பல வியாதிகள் வரும். நீங்கள் அறிந்திருப்பீர்கள், இதய வியாதிகள்- காட் அட்டாக்,- காலமைகளில் கூடுதலாக வருவது என்று, அதற்குரிய பல காரணங்கள் முன் மொழியபட்டாலும், அதில் ஒரு காரணம், அந்த நேரத்தில் வருகின்ற அதிகமான, பரிவு நரம்பு துண்டல்கள் ஆகும். அவை ஏன் வருகிறது என்று பார்த்தல், OSA என்கின்ற நித்திரையில் வருகிற சுவாச நிறுத்தம்.(இதை இந்தளவுண்டன் நிர்பாட்டுவோம்)

இரவில் எழும்பி அலுவல் செய்வதும் இப்படியே; நித்திரையும் போய், கண்ட கண்ட நரம்பு தூண்டல் எல்லாம் கூடிபோய் இருக்கும்..தொடர்ந்து செய்து பார்த்து உங்கள் முடிவுகளை/ பலன்களை சொன்னால் அது பற்றி ஒரு ஆய்வு கட்டுரை சமர்பிக்க உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

night-shift-nightmare-01-af.jpg

இரவுத் தூக்கம் என்பது இயற்கையால் விதிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வு,

அது மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்களுக்கும் பொருந்தும்.

நமது உடலுக்குள், இன்ன நேரத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்ற, ஒரு சக்கரம் உள்ளது அதன் படி செய்யாவிட்டால்..... ஆபத்துத்தான்.

அதனாலேயே.... இரவு வேலை செய்பவர்களுக்கு, அதிக சம்பளம் கொடுக்கின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இடையிடையே இரவில் எழும்பி 'அலுவல்' பார்த்தாலும் இதய வியாதி வருமா?

'அலுவல்' நேரத்தை மாற்றுவது நல்லது! :icon_idea:

'அலுவல்' நேரத்தை மாற்றுவது நல்லது! :icon_idea:

பிள்ளைகள் படுத்தால் தானே நான் மாற்றுவதற்கு !!

  • கருத்துக்கள உறவுகள்

இடையிடையே இரவில் எழும்பி 'அலுவல்' பார்த்தாலும் இதய வியாதி வருமா?

ஒவ்வொரு நாளும் இடையில நித்திரையால எழும்பி கட்டாயம் அலுவலை செய்யோணுமோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடையிடையே இரவில் எழும்பி 'அலுவல்' பார்த்தாலும் இதய வியாதி வருமா?

தினமும்..

அலுவல் என்ன சிம்பிள் வேலையா...?!

டக்கனப் போட்டு டக்கன வாறதா..??!

உறுப்பு என்ன ரெம்பர் கம்பியா..?!

கனிகள் என்ன ஸ்பிரிங் கம்பியா...??!

அங்கம் என்ன பொச்சு மட்டையா..???!

கடவுளே.. காப்பாற்றுப்பா... அ...இந்த சீவனை..! :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.