Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும்.

சாத்திரி ஒரு பேப்பர்.

மடோனா 1958 அமெரிக்காவில் மிக்சிங்கன் நகரத்தில் இத்தாலிய தந்தைக்கும் பிறெஞ்சு கனடிய தாயாரிற்கும் முதலாவது மகளாகபிறந்தவர். இவரிற்கு கீழே வரிசையாய் ஜந்து பிள்ளைகள். குடும்ப நிலை காரணமாக 1978 ம் ஆண்டு வேலை தேடி நியூயோர்க் நகரத்திற்கு வெறும் 35 டெலர்களுடன் வந்தவர் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவராக வேலை செய்தபடியே நடனம் எனத்தொடங்கியவர் சஞ்சிகைகளிற்கு அரைகுறை நிர்வாண படங்களிலும் காட்சியளிக்கத்தொடங்கியவர். 79 ம் ஆண்டில் கிற்றார் கற்றுக்கொள்வதோடு அவரது இசை உலகப்பயணம் ஆரம்பமாகின்றது. ஆனாலும் 1984 ல்தான் அவரால் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடிக்க முடிந்தது. இவர் இசை உலகில் காலடி வைத்த காலத்தில் ஆண் பாடகர்களான .Queen. The Beatles .Elvis Presley. Michael Jackson U2. போன்றவர்கள் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். இவர்களிற்கிடையில் பொப் இசையில் தனியிடத்திகை பிடித்து முன்னேறத் தொடங்கியவர் இன்றைய தேதிவரை தன் தனியிடத்தை தக்கவைத்தக்கொண்டிருக்கிறார். இவரிற்கு முன்னாலும் பின்னாலும் பல பாடகிகள் வந்து ஆடிப்பாடி காட்ட முடிந்தவையெல்லாத்தையுமே காட்டியும் காணாமல் போய்விட்டனர். ஆனால் மடோனாவோ மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியால் அவ்வப்பொழுது அங்கங்கு வளர்ந்து தொங்கும் அங்கங்களையெல்லாம் அறுத்துஅளவு செய்து அழகு செய்து சுருக்கங்கள் கூட சுத்தமாகவே இல்லாமல் சுற்றிச் சுழன்று மேடைகளில் அவர் கவராக (couver) ஆக அணிந்திருக்கும் ஆடைகளை சீ...யென்று கழற்றியெந்து கவர்ச்சி காட்டி ஆடியும் பாடியும் பயணித்துக்கொண்டேயிருக்கிறார்.

அவரது ஆடல் பாடல் மட்டுமல்ல அவ்வப்பொழுது அவரால் கிழம்பும் சர்ச்சைகளும் பிரபலமானதுதான். பிரபலங்கள் என்றாலே சர்ச்சைதானே.அப்படி அண்மையில் புதிதாக பிரான்சில் இவரால் புதிதாகவொரு சர்ச்சை கிழம்பியுள்ளது. அது பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான F.N கட்சியின் தலைவி மரின் லூப்பனோடு உரசிப் பார்த்ததுதான் அந்த சர்ச்சை. தீவிர வலதுசாரி கொள்கைகளை பரப்புரை செய்து பிரான்சின் கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பவர் மரின் லுப்பன். இவரை ஜரோப்பாவின் பெண் கிட்லர் என ஏற்கனவே பல பத்திரிகைகள் வர்ணித்து எழுதியுமிருக்கின்றன. ஆனால் அததை மடோனா திரையில் காட்டியதால் தான் வந்தது வில்லங்கம்.இந்த மாதம் பிரான்சில் பல நகரங்களிலும் மடோனாவின் இசை நிகழ்ச்சி நடக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது வயதாகி விட்டாலும் இளையவர்களையும் கவர்ந்திழுத்து வைத்திருப்பவர் என்பதால் றிக்கற்றுக்களும் விற்று தீர்ந்துவிட்டிருந்தது. இவரது முதலாவது நிகழ்ச்சி பிரான்சின் வடக்கு பகுதியில் நடந்தது. இதில் இனவெறிக்கு எதிரான இவரது பாடல் ஒன்றின்போது மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான திரையில் நெற்றியில் நாசிக்களின் முத்திரை குத்தப்பட்ட மரின்லூப்பனின் உருவம் தேன்றி அது பல துண்டுகளாக கிழிந்து மீண்டும் உருவம் தோன்றும்போது குறும் மீசையுடன் தோன்றி அவரது உருவம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டலரின் உருவத்தைப் போல மாற்றமடையும்..

images-15.jpg

lors-du-concert-de-madonna-jeudi-dernier_787796_460x306.jpg

இதுதான் இவரிற்கு வில்லங்கத்தை தேடித்தந்நத காட்சி. உடைனையே F.N கட்சியின் தலைவர் மரின் லூப்பன் இவரது நிகழ்ச்சிகளில் இந்தக் காட்சியை நீக்கும்படியும் அதே நேரம் ஒரு மில்லியன் ஈரோக்கள் நட்ட ஈடு தரவேண்டும் எனவும் மடோனாவிற்கு எதிராக வழக்கு தொடுத்தார். வழக்கு பதிவாகி அது நீதி மன்றத்திற்கு வருவதற்கிடையில் அடுத்தடுத்த நாட்கள் பிரான்சில் நடந்த மடோனாவின் நிகழ்ச்சியில் அதே காட்சிகள் தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது. மரின்லூப்பன் இனவாதிதான் ஆனால் இது எங்கள் நாட்டு பிரச்சனை அதை நாங்களே பாத்துக்கொள்வோம்.அவரைகிண்டல் பண்ண மடோனா யார் என்று பொதுவாக பிரெஞ்சுக்காரர்கள் புறுபுறுக்கத் தொடங்கியிருந்தவர்கள் பாரிசில் நடந்த அவரது நிகழ்ச்சியில் மடோனாவிற்கெதிரான கோசங்கள் எழ ஆரம்பித்திருந்தது . பின்னர் தெற்கு பிரான்சில் தொடர்ந்த நிகழ்ச்சிகளை அவரது ரசிகர்கள் புறக்கணிக்கவும் தொடங்கியிருந்தவர்கள். எம்மவர்களின் சிறீலங்கா பொருட்களின் புறக்கணிப்பு போல் இல்லாமல் உண்மையாகவே புறக்கணிப்பு செய்ததால் சில இடங்களில் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டது. அதே நேரம் மரின்லூப்பனிற்கு அதிக ஆதரவு உள்ள நகரமான நான் வசிக்கும் நகரத்தில் இறுதி நிகழ்ச்சி நடந்தது. இங்கு நிகழ்வில் புகுந்த F.N கட்சியின் ஆதவாளர்கள் நிகழ்சியை நடத்த விடாமல் குளப்பம் விழைவிக்க சில மடோனா ஆதரவாளர்களிற்கும் கைகலப்பு தொடங்கி காவல்த்துறை வந்து கைவிலங்கு போடவேண்டி வந்தது.

imagesjpg2-1.jpg

நிகழ்ச்சியும் குறித்த நேரத்துக்கு முதலேயே முடிவடைந்தது. இதெல்லாம் கிடக்கட்டும் மடோனாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெண்டு கொஞ்சம் பாப்பம். மடோனாவின் நடனக்குழுவில் முக்கியமானதொரு நபர்தான் iBrahim Zaibat

வாயிலை வாற மாதிரி வாசிக்கவும். வயது 29 பிறெஞ்சு அல்ஜுரியர் முஸ்லிம் மதம் .இவர்தான்அந்த நடனக்குழுவை வழி நடத்துபவர்.அது மட்டுமல்ல மடோனாவின் புதியகாதலரும் இவர்தான்.

lamadonne.jpg

இவர் மடோனாவின் அசைவுகளை மட்டுமல்ல அவரது நடன அசைவுகளையும் இயக்குபவராக இருக்கிறார். எனவே இவரது திட்டமிட்ட வடிமைப்புத்தான் மரின்லுப்பனை கிட்லராக மாற்றியமைத்தது அதற்கு கையை காலை ஆட்டப்போய் வழக்கு மடோனாவுக்கு மேல். சர்ச்சசைகள் வழக்கு ஒரு மில்லின் ஈரோ நட்டஈடு மடோனாவிற்கு சின்னப் பிரச்சனையாக இருக்கலாம்.ஆனால் வந்தமா ஆடினமா பாடினமா எண்டு இல்லாமல் அரசியலுக்கை தலையைப் போட்டு உந்தக் கிழவிக்கு எதுக்கு தேவையில்லாத சொறிவேலை.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவ ஏன் அடிக்கடி திறந்து காட்டுறா :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவ ஏன் அடிக்கடி திறந்து காட்டுறா :icon_mrgreen:

images-16.jpg

அவாவிற்கு கள்ளமில்லா வெள்ளை மனசாம் அதைத்தான் திறந்து காட்டுறவா நீங்கள் தவறாய் புரிந்து கொள்ளக்கூடாது :wub:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

------

எம்மவர்களின் சிறீலங்கா பொருட்களின் புறக்கணிப்பு போல் இல்லாமல் உண்மையாகவே புறக்கணிப்பு செய்ததால் சில இடங்களில் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டது.

:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D :D

உண்மை அதுதானே தமிழ்சிறியர்.

சர்ச்சசைகள் வழக்கு ஒரு மில்லின் ஈரோ நட்டஈடு மடோனாவிற்கு சின்னப் பிரச்சனையாக இருக்கலாம்.ஆனால் வந்தமா ஆடினமா பாடினமா எண்டு இல்லாமல் அரசியலுக்கை தலையைப் போட்டு உந்தக் கிழவிக்கு எதுக்கு தேவையில்லாத சொறிவேலை.

எது சொறிவேலை ??????? கிழவி ஒரு கலைஞி . மரின் லூப்பன் அரசியலுக்காக இனவாதத்தை எடுத்தா . தேப்பன் எட்டடி எண்டால் மகள் பதினாறடி . வெளிநாட்டுக்காறர் வேண்டாமெண்டால் பிறான்ஸ் நாறும் . கிழவி தானும் பிறென்ஞ் கலப்பு எண்டபடியால தனக்கு தெரிஞ்ச பாசையிலை மறினுக்குப் பேயோட்டீச்சுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி, உது மிச்கன் நகரமோ, மாநிலமோ என்று பாருங்கோ...இரண்டும் வேற வேற...விகேபெடியாவில பிறந்தது "பே சிட்டி; மிசிகன்" என்று கிடக்குது.

ஈழத்துக்காக ஆயுதம் தூக்கி போரடப் போன போராளி சாத்திரிக்கு காமம் ஒரு உணர்வாக போகலாம்....ஆனால் மடோனாவுக்கு அரசியல் ஒரு பிரக்ஞை ஆகக் கூடாதா?

அவா திறந்து காட்டினால் அதை கட்டுரையில் மெச்சலாம், ஆனால் உலகின் முன்னனி பொப் பாடகிக்கு நவீன நாசிகளை எதிர்க்க அரசியல் பிரக்ஞை கொள்ளுதல் பாவமா?

சாத்திரிக்கு ஈழக் கனவு பற்றிய பிரக்ஞை இருப்பதைப் போல மடோனாவுக்கும் நாசிகளுக்கு எதிரான உணர்வு இருந்தால் தவறா? தவறு இல்லை, ஆனால் அவா double game ஆடுகின்றா என்றால் அதை வெளிப்படுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின் தேசியக்கொடி வெள்ளைக்கொடி என்று இங்கை உள்ள ஜேர்மன் காரன் கிண்டல் பண்ணுறான்.. :lol: உலகப்போரில் பிரான்சைக் காப்பாற்ற கனேடியப் படைகள் சண்டைக்குப் போனவை.. :rolleyes: மடோனாவின் தாயார் கனேடியப் பிரஜை என்பதால் பிரான்ஸ் அரசியல்வாதியை கிண்டல் பண்ணலாம்.. தப்பில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கலாம்.அவரது அல்ஜீரிய ஆண் நண்பர் ஒரு சிறுபான்மையினத்தவர்.தன்னை போன்ற சிறுபான்மையினர் இனவாதிகளால் பாதிக்கப்படும் போது அதன் எதிர்ப்பினை மடோனாவை பயன்படுத்தி தனது எதிர்ப்பினை காட்டியுள்ளார்.

மேலும் மடோனா ஒரு காசுப்பேய்.அமெரிக்காவிலும் இவர் இப்படியான் கருத்துக்களை பலருக்கு எதிராக சொல்லியுள்ளார்.

உலகில் விடுதலைக்காக போராடுபவர்களை பிரான்ஸ் எப்படி பயங்கரவாதிகள் என சொல்ல முடியுமோ(பொய் என்பது வேறு விடயம்) அதே போன்று பிரான்ஸ் என்ன உலகின் எந்த மூலையில் உள்ளவரையும் யாரும் விமர்ச்சிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரின் லுப்பனின் அரசியல் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு

எதிர்க் கட்சிகள் இப்ராகிம் + மடோனாவைப் பயன்படுத்தி அரசியல்

ஆதாயம் தேடியிருக்கின்றார்கள்.

பாக்கிறதையும் பாத்துப்போட்டு இதென்ன பிடிக்காதமாதிரி சொல்லுறியள் :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, உது மிச்கன் நகரமோ, மாநிலமோ என்று பாருங்கோ...இரண்டும் வேற வேற...விகேபெடியாவில பிறந்தது "பே சிட்டி; மிசிகன்" என்று கிடக்குது.

நானும் விகிகியிலை பாத்தன் விக்கி சொல்லுறதுதான் சரியெண்டு நினைக்கிறன். இல்லாட்டி மடோனாவின்ரை பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை தான் வாங்கி பாக்கவேணும்.அதுக்கும் ஏதும் அறுவை சிகிச்சை நடத்தி வயது குறைந்திருக்குமோ யாருக்கு தெரியும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..... ஒரு பேப்பர் சாத்திரி. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்காக ஆயுதம் தூக்கி போரடப் போன போராளி சாத்திரிக்கு காமம் ஒரு உணர்வாக போகலாம்....ஆனால் மடோனாவுக்கு அரசியல் ஒரு பிரக்ஞை ஆகக் கூடாதா?

அவா திறந்து காட்டினால் அதை கட்டுரையில் மெச்சலாம், ஆனால் உலகின் முன்னனி பொப் பாடகிக்கு நவீன நாசிகளை எதிர்க்க அரசியல் பிரக்ஞை கொள்ளுதல் பாவமா?

சாத்திரிக்கு ஈழக் கனவு பற்றிய பிரக்ஞை இருப்பதைப் போல மடோனாவுக்கும் நாசிகளுக்கு எதிரான உணர்வு இருந்தால் தவறா? தவறு இல்லை, ஆனால் அவா double game ஆடுகின்றா என்றால் அதை வெளிப்படுத்துங்கள்

நிழலி ஆயுதம் தூக்கிய சாத்திரிக்கு காமம் உணர்வாக இருப்பதுமட்டுமல்ல ஆயுதம் தூக்கிய எல்லாரிற்குமே ஏன் உயிரினங்கள் அனைத்திற்குமே காமம் உணர்வுவாக இருக்கிறது அது இல்லாவிட்டால் உயிரினங்களே இல்லையெண்டு நான் நீ......ண்ட பக்கம் பக்கமாக உங்களிற்கு விளக்கம் தரத்தேவையில்லையென நினைக்கிறேன். அதே போல மடோனாவிற்கான காம உணர்வின்இருப்பையோ அவரின் விருப்பான இப்றாகிம் பற்றியதானதொரு சர்சையோ இங்கு பிரச்சனையில்லை அது அவர்களத தனிப்பட்ட பிரச்சனை . அதே போல மடோனாவிற்கும் அரசியல் பிரஞ்ஞை யாக இரக்கலாம் தவறில்லை. ஆனால் அவர் பிறந்த அமெரிக்காவிலும் வசிக்கின்ற இங்கிலாந்திலும் ஜரோப்பாவின் பல நாடுகளிலும் ஏன் யெர்மனியிலும்கூட இன்னமும் தீவிர வலது சாரி அமைப்புக்கள் நவீன நாசிகள் இயங்குகின்றன.

மடேனா நவீன நாசிக்ளிற்கு எதிரானவர் என்றால் அவர் நிகழ்ச்சிகள் நடக்குடம் அனைத்த நாடுகளிலும் நவீன நாசிகளிற்கு எதிராக உணர்வுகளை வெளியிட்டிருந்தால் அல்லது பிரான்சில் கூட நடந்த நிகழ்வுகளில் அனைத்து தீலிர வலதுசாரி அமைப்புக்களின் தலைவர்களையும் கிண்டலடித்து அதே வேளை மறின் லுப்பனையும் கிண்டலடித்திருந்தால் பிரச்சனை பெரிதாகியிருக்காது.ஆனால் மறின் லூப்பனை மட்டுமே தனியாக குறிவைத்து கிண்லடித்ததை வைத்து பார்த்தால் மடோனா பொதுவான தீவிர வலதுசாரிகளிற்கு எதிரானவர் அல்ல மறின் லூப்பனிற்கு எதிரானவர் என்றே கருதவேண்டியிருக்கின்றது. அல்லது பிரான்சில் உள்ள பெருமளவு முஸ்லிம்களின் ஆதரவை தங்கள் பக்கம் இழுத்து வியாபார யுக்தியை குறிவைத்து இப்றாகிமால் வடிவமைக்கப்பட்ட ஒரு நடனமாக மட்டுமே பார்க்க முடியும் இங்கு தீவிர வலதுசாரிகளிற்கு எதிரான உணர்வு என்பது அடிபட்டு போகின்றது.

வணக்கம்..... ஒரு பேப்பர் சாத்திரி. :rolleyes:

வணக்கம் ..மாத்தி படிக்கவும். சாத்திரி ...... ஒரு பேப்பர்.. இது ஒரு பேப்பரில் வெளியானது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

------

வணக்கம் ..மாத்தி படிக்கவும். சாத்திரி ...... ஒரு பேப்பர்.. இது ஒரு பேப்பரில் வெளியானது. :icon_idea:

ooohh......

முட்டையிலை மயிர் புடுங்க எங்கடை ஆக்களை மிஞ்ச ஏலாது :D:lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ooohh......

முட்டையிலை மயிர் புடுங்க எங்கடை ஆக்களை மிஞ்ச ஏலாது :D:lol: .

ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள் :)

மடேனா நவீன நாசிக்ளிற்கு எதிரானவர் என்றால் அவர் நிகழ்ச்சிகள் நடக்குடம் அனைத்த நாடுகளிலும் நவீன நாசிகளிற்கு எதிராக உணர்வுகளை வெளியிட்டிருந்தால் அல்லது பிரான்சில் கூட நடந்த நிகழ்வுகளில் அனைத்து தீலிர வலதுசாரி அமைப்புக்களின் தலைவர்களையும் கிண்டலடித்து அதே வேளை மறின் லுப்பனையும் கிண்டலடித்திருந்தால் பிரச்சனை பெரிதாகியிருக்காது.ஆனால் மறின் லூப்பனை மட்டுமே தனியாக குறிவைத்து கிண்லடித்ததை வைத்து பார்த்தால் மடோனா பொதுவான தீவிர வலதுசாரிகளிற்கு எதிரானவர் அல்ல மறின் லூப்பனிற்கு எதிரானவர் என்றே கருதவேண்டியிருக்கின்றது. அல்லது பிரான்சில் உள்ள பெருமளவு முஸ்லிம்களின் ஆதரவை தங்கள் பக்கம் இழுத்து வியாபார யுக்தியை குறிவைத்து இப்றாகிமால் வடிவமைக்கப்பட்ட ஒரு நடனமாக மட்டுமே பார்க்க முடியும் இங்கு தீவிர வலதுசாரிகளிற்கு எதிரான உணர்வு என்பது அடிபட்டு போகின்றது.

விளக்கத்துக்கு நன்றி சாத்திரி,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின் தேசியக்கொடி வெள்ளைக்கொடி என்று இங்கை உள்ள ஜேர்மன் காரன் கிண்டல் பண்ணுறான்.. :lol: உலகப்போரில் பிரான்சைக் காப்பாற்ற கனேடியப் படைகள் சண்டைக்குப் போனவை.. :rolleyes: மடோனாவின் தாயார் கனேடியப் பிரஜை என்பதால் பிரான்ஸ் அரசியல்வாதியை கிண்டல் பண்ணலாம்.. தப்பில்லை. :icon_idea:

சிங்களவன் எங்களையும் வெள்ளைக்கொடியெண்டுதான் கிண்டல் பண்ணுறான் என்ன செய்யவாம்..அது தப்பா தப்பில்லையா?? :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எங்களையும் வெள்ளைக்கொடியெண்டுதான் கிண்டல் பண்ணுறான் என்ன செய்யவாம்..அது தப்பா தப்பில்லையா?? :)

எழுதேக்குள்ளையே யோசிச்சனான்.. :rolleyes: கொஞ்சம் மாத்தி பொலிஷாவும் எழுதினான்.. :wub: ஆனாலும் பொயின்ருக்கு வந்திட்டியள்.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.