Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டேட்டிங் போறீங்களா? இதை படிச்சுட்டு போங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் காதல் செய்தால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு டேட்டிங் செல்கின்றனர். மேலும் காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மையிலேயே சரி தான். அத்தகைய காதல் எங்கு, எப்போது வரும் என்று சொல்ல முடியாது. மேலும் அந்த காதல் ஜாதி, மதம், மொழி, நிறம் என்று எதுவும் பார்க்காமல் வரும். இத்தகைய காதல் அந்த காலத்தில் வருகிறதென்றால், அது பெரிய விஷயம். ஆனால் இப்போது வருகிறதென்றால், அது சாதாரணமான விஷயமாகிவிட்டது. மேலும் அந்த காதலில் டேட்டிங் என்பதும் சகஜமாகிவிட்டது. இவ்வாறு டேட்டிங் செல்லும் போது, அந்த காதல் நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்க எவ்வாறு நடக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்...

* காதல் செய்யும் இருவரும் ஒரே மொழியாக இருந்தால் மிகவும் ஈஸி. ஆனால் அதுவே வேறு மொழியாக கொஞ்சம் கஷ்டம் தான். ஆகவே அப்போது நம் துணைவருடன் நல்ல தெளிவான, இருவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து, பேச வேண்டும். ஏனெனில் அப்போது தான் இருவரும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் ஆங்கிலம் அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி தான் நன்கு உதவும்.

* இது மிகவும் முக்கியமான ஒரு டிப்ஸ். இப்போது காதலிக்கும் இருவரும் ஒரே ஊரிலோ அல்லது நாட்டிலோ இல்லாமல் இருந்தால், அப்போது அவர்களுடன் இன்டர்நெட் மூலம் ரொமான்ஸ் செய்வீர்கள். அவ்வாறு செய்யும் போது, உங்கள் துணையை மனதளவில் காதலால் நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் உடலளவில் தூரம் இருந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

* நீங்கள் காதலிப்பவர்கள் என்ன கலாசாரத்தை உடையவர்களோ, காதலித்தால் அதனையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டவரை காதலிக்கின்றீர்கள் என்றால் அவர்கள் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஆகவே அப்போது அதனை தவறாக எண்ணாமல், அதனை மதித்து நடக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்போது அவர்களுக்கு உங்கள் வீட்டு கலாசாரத்தையும் கொஞ்சம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் அந்த பழக்கம் தெரிந்து நடப்பார்கள்.

* காதலிப்பவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். என்ன தான் நீங்கள் பெரியவர்களாக இருந்தாலும், காதலிக்கும் இருவரும் அவரவர்களது நாட்டையும், கலாச்சாரத்தையும், ஊரையும் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு நடந்தால், இருவருக்கும் மற்றவர்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும், அவர்களது கலாச்சாரம் மற்றும் ஊரின் மீது ஒரு பக்தியும் இருக்கும். ஏனெனில் நீங்கள் அந்த ஊரின், நாட்டின் மகனாக போகப் போகிறீர்கள் அல்லவா!!!

* இதுவரை நீங்கள் சுவையான நன்கு காரசாரமான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள், இப்போது கொஞ்சம் அனுசரித்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். மேலும் அந்த அனுசரிப்பும் சிறிது நாட்களில் விருப்பமாகவும் மாறும். உதாரணமாக, இப்போது உங்கள் துணைக்கு வட இந்திய உணவுகள் பிடிக்கும் என்றால், அதையும் சாப்பிட்டு பாருங்கள். இதனால் வேறு என்ன பேசுவது என்று யோசித்த இருவருக்கும், ஆலோசிக்க ஒரு நல்ல தலைப்பு கிடைக்கும்.

ஆகவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டால், உங்கள் வாழ்க்கை நன்கு சந்தோஷமாக போவதோடு, வாழ்க்கை ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

http://tamil.boldsky.com/relationship/2012/08/are-you-going-dating-001730.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு...நன்றி அண்ணா பகிர்விற்க்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

காதல் செய்யும் இருவரும் தேன் மொழியாவும் கனி மொழியாவும் இருந்தா ஈசியா?

  • கருத்துக்கள உறவுகள்

டேட்டிங்... போ(ய்)வருப‌வரை காதல் என்று சொல்வதில்லை.

அதற்க்குப் பெயர் கடுப்பு, காமம் என்று சொல்லலாம்.

அந்த ந(ண்)பர்களை... கலியாணம் கட்ட, கனவிலும் யோசிக்கக் கூடாது. :wub:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

டேட்டிங்... போ(ய்)வருப‌வரை காதல் என்று சொல்வதில்லை.

அதற்க்குப் பெயர் கடுப்பு, காமம் என்று சொல்லலாம்.

அந்த ந(ண்)பர்களை... கலியாணம் கட்ட, கனவிலும் யோசிக்கக் கூடாது. :wub:

பாவங்கள்

எல்லாத்தையும் போட்டுக்குழப்பி

கடைசியில் ஒன்றுமில்லாமல் நிற்கப்போகுதுகள் என்று நினைக்க கவலையாக்கிடக்கு சிறி.... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள்

எல்லாத்தையும் போட்டுக்குழப்பி

கடைசியில் ஒன்றுமில்லாமல் நிற்கப்போகுதுகள் என்று நினைக்க கவலையாக்கிடக்கு சிறி.... :( :( :(

நாங்கள் தான்... எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதனைச் செய்யாது, தவறினால்... பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதை... பல பெற்றோர் உணர்வதில்லை.

நீங்கள், முன்பு ஒரு பதிவில்.. குறிப்பிட்டது போல்... ஒவ்வொரு தமிழ் வீட்டிலும்... லெதர் பெல்ற் இருக்க வேணும்.

"அடியாத மாடு, படியாது."

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி

டேட்டிங்... அதுக்கு வேறை அட்வைஸ்.

காதலின் அருமை தெரியாதவர்கள் தான் டேட்டிங் பெட்டிங் எல்லாம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் தான்... எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதனைச் செய்யாது, தவறினால்... பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதை... பல பெற்றோர் உணர்வதில்லை.

நீங்கள், முன்பு ஒரு பதிவில்.. குறிப்பிட்டது போல்... ஒவ்வொரு தமிழ் வீட்டிலும்... லெதர் பெல்ற் இருக்க வேணும்.

"அடியாத மாடு, படியாது."

வணக்கம் சிறித்தம்பி :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறித்தம்பி :)

வணக்கம் குமாரசாமி அண்ணா.

ரண்டு, மூண்டு நாளாய் உங்களை, இஞ்சாலைப் பக்கம் காணேல்லை.

ஏதாவது.. விசேசமோ....., ச்சும்மா... கேட்டன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குமாரசாமி அண்ணா.

ரண்டு, மூண்டு நாளாய் உங்களை, இஞ்சாலைப் பக்கம் காணேல்லை.

ஏதாவது.. விசேசமோ....., ச்சும்மா... கேட்டன். :D

சீச்சீ...பெரிசாய் விசேசமொண்டுமில்லை........சும்மா மனம்குளிர மனுசியின்ரை தங்கச்சிவீட்டை போட்டு வந்தம் :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ...பெரிசாய் விசேசமொண்டுமில்லை........சும்மா மனம்குளிர மனுசியின்ரை தங்கச்சிவீட்டை போட்டு வந்தம் :wub::D

ஆர்... பரிமளம் வீட்டையா..... :o .

ஐயோ.... நெருப்பு பத்தப் போகுதண்ணை. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்... பரிமளம் வீட்டையா..... :o .

ஐயோ.... நெருப்பு பத்தப் போகுதண்ணை. :icon_idea:

இவள் பாவி புடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி நடுவீட்டுக்கை நிண்டால் என்னெண்டு பத்துறது? :(:huh:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான்... எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதனைச் செய்யாது, தவறினால்... பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதை... பல பெற்றோர் உணர்வதில்லை.

நீங்கள், முன்பு ஒரு பதிவில்.. குறிப்பிட்டது போல்... ஒவ்வொரு தமிழ் வீட்டிலும்... லெதர் பெல்ற் இருக்க வேணும்.

"அடியாத மாடு, படியாது."

உண்மைதான் சிறி

எனது மக்களே தற்போது சிறு பிள்ளைகள் விடும் தப்புக்களைப்பார்த்து சொல்வார்கள் எங்கள் அப்பா பெல்ற்றால் அடித்துத்தான் வளர்த்தார். அது தான் சரி என்பர்.

இப்பவும் நான் சொல்வது

உடுப்பு கீழால் விழுந்துவிடும் என்பதற்காக நான் பெல்ற் கட்டுவதில்லை. மக்களுடன் போகும்போது தேவைப்படலாம் என்பதற்காகவே கட்டுகின்றேன் என.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி பிள்ளையளுக்கு அடிக்க போய் தான் ஒட்டு மொத்த பிள்ளையளையும் அரசாங்கம் அள்ளிட்டு போய்ட்டுது....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி பிள்ளையளுக்கு அடிக்க போய் தான் ஒட்டு மொத்த பிள்ளையளையும் அரசாங்கம் அள்ளிட்டு போய்ட்டுது....

அடித்து வளர்ப்பது என்பது பழக்க வழக்கங்களுக்கும்

களவு பொய்யற்ற குற்றச்செயல்களில் ஈடுபடாத நாட்டிற்கு ஒரு நற் பிரசையாக வளர்ப்பதாகும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருந்தே ஆரம்பிக்கணும். பெற்றோர் தத்தமது பிள்ளைகளை வழிநடாத்தத்தவறின் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க அரசால் முடியாது.

பிரான்சில் சிறைச்சாலைகளில் சமூக திருத்த இடங்களில் இடமில்லாத நிலை வந்துள்ளது. காரணம் பெற்றோரே. இனி குற்றம் செய்வோரை என்ன செய்வதென்று அரசு திண்டாடுகின்றது. வெளியிலும் விடமுடியாது. தம்மாலும் பொறுப்பெடுக்கமுடியாது.

என் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருக்கின்றேன். தன் காலில் நிற்கக்கூடிய முக்கியமாக அரசுக்கு எந்த நெருக்குதல்களையும் கொடுக்காத பிள்ளையை உருவாக்கியுள்ளேன். இதை தண்டனைகள் மூலமே செய்தேன் என்பதை எந்த கோட்டிலும் சொல்ல நான் தயாராகவே இருக்கின்றேன். அரசு பொறுப்பெடுக்கும் பிள்ளைகளை அவர்களும் பல கட்டுப்பாட்டுக்களுடன்தான் பராமரிக்கிறார்கள். மீறுவோருக்கு தண்டனைகளும் உண்டு என்பதனையும் நாம்புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு பாடசாலையிலேயோ சிறைக்கூடத்திலேயோ இருக்கும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டே எவரும் இயங்கமுடியும். அது போலத்தான் வீட்டிலும். இதை எனது மக்களுக்கு சொல்லியே வளர்க்கின்றேன்.

அதற்காக ஒவ்வொரு நாளும் பெல்ற்றால் அடித்துக்கொண்டிருப்பதில்லை. கால் பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம் என்ற நிலையுமில்லை. பல வருடங்களுக்கு ஒரு முறை தான் இது நடக்கும். ஆனால் சில விடயங்களுக்கு அப்பா அனுமதிக்கார். தண்டனை தருவார் என்பது மனதில் இருக்கணும். இருக்கு.

***இன்னொன்றையும் எழுதணும் சுண்டல்.

என்னை கொடுமையாளனாக நினைத்துவிடாதீர்கள்.

பிள்ளையை திருத்த அவனை அடித்த அன்று முழுவதும் நான் தூங்குவதில்லை.

அடித்து வளர்ப்பது என்பது பழக்க வழக்கங்களுக்கும்

களவு பொய்யற்ற குற்றச்செயல்களில் ஈடுபடாத நாட்டிற்கு ஒரு நற் பிரசையாக வளர்ப்பதாகும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருந்தே ஆரம்பிக்கணும். பெற்றோர் தத்தமது பிள்ளைகளை வழிநடாத்தத்தவறின்

பொய் களவு என்பனவற்றை அடித்து திருத்த முற்பட்டால் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும். அடிப்பதற்கு, கண்டிப்பதற்கு ஒருவர் இல்லாத சூழ்நிலை ஏற்படும் போது அப் பிள்ளைகள் குற்றங்களை புரிய முற்படுவர் (இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் சமூகச் சீரழிவுகளும் இதைப் போன்றதே)

உங்கள் பிள்ளைகளை உதாரணமாக எடுப்பதே தவறான ஒரு விடயம் (இதனை அடிக்கடி நீங்கள் செய்வதை கண்டுள்ளேன்). அவர்கள் இன்னமும் உங்களின் கண்காணிப்பில் தான் உள்ளார்கள். நாளை சமூகத்தினை நேரிடையாக அவர்களே அணுகும் போதோ அல்லது இன்னும் 25 வருடங்களின் பின்போதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வை பார்த்து முடிவு எடுக்க முடியும்.

எனக்குத் தெரிந்து பாடசாலைக் காலங்களிலும், பெற்றோர்கள் வளர்க்கும் காலங்களிலும் மிக நல்ல பிள்ளைகள் எனப் பெயர் எடுத்தவர்கள் பலர் பல தவறுகளை செய்ததைக் கண்டுள்ளேன். இப்படி எழுதுவதன் அர்த்தம் பெல்டால் அடித்து பிள்ளைகளை வளர்ப்பதால் இப்படித் தான் ஆகும் என்று அல்ல. ஆனால் அடிவாங்கி திருந்தும் பிள்ளைகள் பின்னாளில் தவறிழைப்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை புரிந்து கொள்கின்றேன் நிழலி.

நான் எனது பிள்ளைகளை நினைத்து எழுதுவதற்கு காரணம் இதுவரை எனக்கு கிடைத்த எனது பிள்ளைகள் பற்றிய நற்சான்றிதழ்கள் ஊடாகத்தான். அந்தவகையில் என் பிள்ளைகளைச்சந்தித்த போது தாங்களும் ஒரு நல்ல வளர்ப்பு மதிப்பெண்ணை எனக்குத்தந்தீர்கள்.

மற்றும்படி

குற்றச்செயல்கள் என்று நான் சொன்னது பொதுவானது. அந்த வகையில் பிள்ளை வளர்ப்பு தொடர்பாக நான் ஒரு கடினமான காலகட்டத்தை புலம் பெயர் தேசத்தில் தாண்டிவிட்டதை உணர்வதால்தான் இதை இங்கு எழுதுகின்றேன். நன்றி கருத்துக்கும். நேரத்திற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா

அன்பால் திருத்த முடியாத பிள்ளைகளை

அடித்துத் திருத்துவது என்பது இயலாத காரியம்.

அவர்கள் திருந்துவது போல நடிக்கலாம்

நாளடைவில் மீண்டும் பயம் அற்றுத் தவறுகளைச்

செய்ய முற்படலாம்.

கண்டிப்பு என்பது அடித்தல் எனப் பொருள்படக் கூடாது.

அன்பாலும் கண்டிக்கலாம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தைகளை வளர்ப்பதும் ஆளாக்குவதும்

நாங்கள் ஊரில் பட்டம் விடுவது போல இருக்க வேண்டும்.

காற்றடிக்கும் போதெல்லாம் பட்டம் இழுப்பது சகஜம் தானே

அதேபோல எங்கள் கையில் இருக்கும் அந்த மெல்லிய நூலை அறாமல்

பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

விட்டுப்பிடித்தல் எப்போதும் சிறந்த முறை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தோடு ஒத்துப்போனாலும்

அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தே வளர்க்கணும்.

ஐந்தில் வளையாதது இன்றைய சூழ் நிலையில் பத்திலேயே வளையாது. ஐம்பதில் எப்படி வளையும்???

புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தைகளை வளர்ப்பதும் ஆளாக்குவதும்

நாங்கள் ஊரில் பட்டம் விடுவது போல இருக்க வேண்டும்.

காற்றடிக்கும் போதெல்லாம் பட்டம் இழுப்பது சகஜம் தானே

அதேபோல எங்கள் கையில் இருக்கும் அந்த மெல்லிய நூலை அறாமல்

பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

விட்டுப்பிடித்தல் எப்போதும் சிறந்த முறை என நினைக்கின்றேன்.

அந்த நூலின் தடிப்பைப்பொறுத்தது அது.

அந்த தடிப்பு என்பது இறுதியாக அடித்து வளர்த்தல் என்பதற்குள்தான் வரும்.

இல்லாது விட்டால் நூலில்லாத பட்டமாக பிள்ளையின் வாழ்க்கை போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை

ஒரு பிறந்தநாள் விழாவுக்குப்போயிருந்தேன்.

ஒரு பிள்ளை தாயைப்போட்டு அடி அடி என்று அடித்து அவரது உடுப்பு அலங்காரம் எல்லாவற்றையும் சிதைக்கிறது. அந்த தாய் அவரை கெஞ்சி கெஞ்சி தனது அழுகையையும் அடக்கியபடியுள்ளார். என்ன செய்தும் அந்தப்பிள்ளையை அடக்கமுடியவில்லை. பின்னர் கேட்டதற்கு அந்த தாய் அழுதபபடி சொல்கிறார். திருப்பி தனது பிள்ளைக்கு அடிக்கக்கூடாது என்று தகப்பனின் ஓடராம். எனது மூத்தவன் பக்கத்தில் நின்று சொன்னான். எனது அப்பாவிடம் ஒரு கிழமை கொண்டு வந்து விடுங்கள் என.

இங்கு நூல் எங்கு வருகிறது வாத்தியார்....???

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் ஒருவிதமான

புரிந்துணர்வு தான் அந்த நூல்.

நீங்கள் கூறிய தந்தையார் அவருடைய பெற்றோரால்

அடித்து வளர்க்கப்பட்டவராக இருக்கலாம் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் ஒருவிதமான

புரிந்துணர்வு தான் அந்த நூல்.

நீங்கள் கூறிய தந்தையார் அவருடைய பெற்றோரால்

அடித்து வளர்க்கப்பட்டவராக இருக்கலாம் விசுகு அண்ணா

இல்லை

மிகவும் செல்லமாக

அவரது தாயாராலோ

தகப்பனாராலோ

ஒரு அடிதானும் வாங்காமல் வளர்ந்தவர்.

வாங்கோ போங்கோ இருங்கோ என்று தான் இவரை பெற்றோரே அழைப்பர். அப்படி வளர்ந்தவர்.

[size=5]பிள்ளைகளை அடித்து வளர்ப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அடிக்க, அடிக்க அதுகளுக்கு சூடு,சுறணை இல்லாமல் போய்விடும். பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர் புழுகுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். "காக்கைக்கும் தன்.." பெற்றோர்க்குப் பயந்தும், பெற்றோருடன் போகும் பொழுதும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் போலத் தான் இருப்பார்கள். அவர்களை ஒத்த வயதாட்களைக் கேட்டால் தான் எல்லாமே வெளியில வரும்!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்துட்டு இதற்குள் வர விருப்பம் இன்றி இருந்தது....தற்சமயம் எட்டிப் பார்த்தால் பிள்ளைகளைப் பற்றியும் எழுதுகிறார்களே....எனக்கும் பிள்ளைகளை அடிக்கும் அப்பாவையோ இல்லை அம்மாவையோ கண்டால் பிடிப்பது குறைவு..கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு குடும்பம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள் பிள்ளைகள் இருவரும் எப்போ வீட்டை வந்தாலும் என்னோடை ஓடி வந்து இருந்துடுவார்கள்.அப்போ ஒரு பிள்ளையின் கையில் நீலம்பாரித்த காயங்கள் இருந்தது இது என்ன என்று கேட்டேன்.அதற்காக நினைதக்காதீர்கள் நான் விடுப்பு எடுப்பவள் என்று..அப்படி அல்ல..குழந்தைப்பிள்ளையின் கையில் காயம் என்றால் யாரும் என்ன நடந்தது என்று கேட்கத் தான் பார்பார்கள். அம்மாவை நித்திரையால் எழுப்பி swimming class க்கு கூட்டிப் போய் விட்டேன்.அங்கு வைச்சு உடுப்புபோடும் போது நுள்ளிப் போட்டா என்றார் அந்தப் பெண் பிள்ளை..ஒரு நுள்ளல் காயம் என்றால் பேசாமல் இருக்கலாம் அந்தப் பிள்ளையின் கையின் அரவாசிப் பகுதிக்கு காயம்...எனக்கு அழுகையே வந்துட்டு..இத்தனைக்கும் அந்த இரண்டு பிள்ளைகளையும் கூடுதலனான நேரம் கவனிப்பது அவர்களது தந்தையாரே...இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா..கேள்வி கேட்க முடியாது அந்த பெண்ணிடம்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு பல வாறு தண்டனை கொடுத்து வளர்த்தால் தான் அந்தப் பிள்ளை நன்கு வளரும் என்று நினைக்காதீர்கள்...எல்லாரது பிள்ளைகளுக்கும் பெற்றோர் எதற்காக தங்களை அடித்து,இடித்து வளர்க்கிறார்கள் என்று நல்ல முறையில் புரிந்து கொள்ள மாட்டார்கள்..அவர்களுக்கு அப்படியான புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் வெளி நாடுகளைப் பொறுத்த மட்டில் மிக,மிக குறைவு..பிள்ளைகள் வளர்ந்து வரும் சூழல் அப்படியானது..நீ,நான் என்ற பதத்தில் இருந்து போடா,வாடா என்ற பதம் வரை நாகரீகமான பேச்சுக்களகாக மாறும் பட்சத்தில் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்..உண்மையாக பொது இடங்களில் பிடிவாதம் பிடித்து பெற்றோருக்கு கை நீட்டும் பிள்ளை அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசும் பிள்ளைகள் என்றால் அவர்களை சற்று வெருட்டி வைக்கத் தான் வேணும்..ஆனால் நெடுகலும் போட்டுக் குத்திக் கொண்டு இருந்தால் வளர,வளர அந்தப் பிள்ளைகள் ஒருவருக்கும் அடங்காதவர்களாகத் தான் வளர்ந்து கொண்டு வருவார்கள்.போட்டு குத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு பிடித்தமான விடையங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு,நாட்களுக்கு தடைப் பண்ணி வைச்சு கொள்ளுங்கள்.அது அவர்கள் பிரியாமாக விளையாடும் விளையாட்டாக (கேம்ஸ்ஸாக) கூட இருக்கலாம்....குளப்படி செய்யிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் அவர்களோட கதைப்பதை குறைத்து பாருங்கள் ஏன் எதற்கு என்று காணரம் கேட்கும் போது விடையத்தைக் கூறும் பட்சத்தில் தாங்களாகவே மாறிக் கொள்வார்கள்...பிள்ளைகளின் மனதை,உடலைத் தாக்காத வண்ணம் தண்டனை கொடுங்கள்.நீங்கள் கொடுக்கும் தண்டனைகளால் எத்தனை வீட்டுப் பிள்ளைகள் திருந்தி நடக்கிறார்கள் அதை சொல்ல முடியுமா..கண்டிப்பாக நல்லவர்களாக மாறுவதை விட வளர,வளர தவறான பாதையில் தான் செல்கிறார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடியும் உதையும் வெட்டும் குத்தும் ஒரு பிரச்சனைக்குத் தீர்வாகும் என்று நமது இளைஞர்கள் நம்புகிற மனநிலை எங்கிருந்து உருவாகிறது என அறிந்துகொண்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.