Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் தமிழ் அடையாளம் பறிபோகிறதா?

Featured Replies

பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து 35 வருடங்கள் ஆகின்றன.

1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி

Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.

லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.

லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.

ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.

ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்

Share this:

தமிழர்கள் இப்பிடியானவர்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

  • தொடங்கியவர்

[size=3]பிரான்சில் இனவாத அடிப்படையில் ஒரு இனம் அல்லது சமூகம் செயற்பட முடியாது என்பது உண்;மை.ஆனால் பிரெஞ்சுக் குடியரசின் சட்டங்களின் கீழ் தன்னுடை அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பேணுவதற்கு தடையில்லை.[/size]

[size=3]பிரச்சனை என்ன வென்றால் சிறீலங்கா அரசு இந்த தமிழர் மையத்தை சிதைக்க முயல்வதும் அதற்பு இந்திய அதிகாரிகள் துணை போவதும் ஒரு அரசில் வேலைத் திட்டத்தின் கீழ் நடக்கிறதா? ஏன்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விடமாக இருக்கிறது?பிரெஞ்சு பொருளதாரத்திற்கு தழிழர்களுடைய பங்களிப்பு என்ன? என்பதில் தான் எங்களுடைய இருப்பு பேரம் பேசும் பலம் என்பன அமையமுடியும்.[/size]

[size=3]தமிழர்களுடைய முலதனத் திரட்சியை ஒருங்கிணைக்க விடாதபடி சிதைப்பதும் திசை திருப்பிவிடுவதும் தான் எதிரிகளின் குறிக்கோளாக இருக்கிறது.[/size]

[size=3]ஆனால் நமது இனம் கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவதிலும் அடுத்தவனை கவிழ்த்து விழுத்துவதிலும் தான் குறியாக இருக்கிறது.[/size]

[size=4]இது பற்றி பாரிசில் உள்ள தமிழர்கள் விவாதித்தி விழிப்படைய வேண்டும். இதை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என திட்டங்களை தீட்ட வேண்டும். [/size]

[size=4]இந்த கேரளா மற்றும் வங்கதேச மக்கள் சட்டரீதியாக உள்ளனரா? இவர்கள் என்ன பொருட்களை யாரை குறிவைத்து விற்கிறார்கள்? [/size]

[size=4]அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.
[/size]

[size=4]ஏன் இந்திய அரசு விரும்பவில்லை? இந்த ஏன் தமிழர்களை தேடி தேடி அழிக்கின்றது? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தமிழரின் போராட்ட பின்னடைவுடன் சம்பந்தப்பட்டதுதான்.

ஆனால் அவ்வளவு சுலபமாக வேற்று இனத்ததவரால் லா சப்பலை கைப்பற்றிவிட முடியும் என கணிக்கமுடியாது. அதன் பெறுமதி மிக மிக அதிகம். சிங்களவர்களும் முயற்சித்த தோற்றுள்ளனர்.

அதனால்தான் அரசுகள் தற்போது முயல்கின்றன.

ஆனால் வியாபாரமாக கருதினால் அதில் நிற்கமாட்டார்கள். அரசியலாக கருதினால் தமிழர்கள் பலத்த இழப்புக்களுடன் போராடவேண்டிவரும். வெல்ல வேண்டுமானால் தமிழ்களிடையே எவரிடம் பொருட்களை வாங்கவேண்டும் என்ற தீர்மானம் வேண்டும்.

நான் மக்கள் கடை தவிர்ந்த எங்கும் இதுவரை பொருட்களை வாங்கியதில்லை. லூன் தவிர்ந்து எங்கும் இதுவரை சீடிக்களை வாங்கியதில்லை. அதுபோல் மற்றவர்களும் தாயக உணர்வுள்ளவர்களிடம் அல்லது தமிழர்களிடம் பொருட்களை வாங்குவதை முடிவாக்குவார்களாயின் எவரும் எம்மை அசைத்திடமுடியாது.

[size=4]ஆம் [/size][size=4]விசுகு[/size][size=4] அண்ணா,[/size]

[size=1][size=4]நாம் எமது கடைகளில் வாங்க வேண்டும். அதேவேளை எமது கடைகளை நடாத்துபவர்களும் தரமான பொருட்களை மலிவான விலையில் கொடுக்கவேண்டும். அதற்கு அவர்களிடம் உயர்ந்த வாங்குதிறன் (purchasing capacity) இருக்கவேண்டும், அதாவது அதிகளவில் வியாபாரம் (revenue) நடக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]மேலும் புதிய தொழில்நுட்பங்களை அணுகுமுறைகளை பாவித்து செலவுகளை குறைக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]கனடாவில் பரந்துபட்டு டொராண்டோ பெரும்பாகத்தில் எம்மவர்கள் வியாபாரம் செய்கின்றனர். அத்துடன் எம்மவர்கள் மத்தியிலேயே இரசீது [/size][size=4]தொழில்நுட்பம் (Touch screen billing system) உள்ளது (எனக்கு தெரிந்தவர்). அடுத்து பல கடைகள் புள்ளிகள் சேகரிக்கும் (point system) திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதுவும் நுகர்வோரை கவருகின்றது. அத்துடன் நகருக்கு வெளிப்புறத்தே மலிவான களஞ்சிய வசதிகளை கொண்டுள்ளனர். .....[/size][/size]

Edited by akootha

[size=4]சந்தைப்படுத்தல்:[/size]

[size=5]http://www.groupon.fr/deals/paris[/size]

[size=4]மேலே கூறப்பட்டுள்ள புதுவித சந்தைப்படுத்தல் இப்பொழுது வட அமெரிக்காவில் பிரபல்யம் பெற்று வருகின்றது.[/size]

[size=4]இவ்வாறு புதுவித சந்தைப்படுத்தல் முறைகளை நாமும் கையாளவேண்டும்.[/size]

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

  • கருத்துக்கள உறவுகள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

அதும் அண்ணாத்த இருக்கிற இடத்தில :wub:

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

[size=4]உலகம் வெப்பம் அடைந்துவரும் நிலையில், கனடாவில் குளிர் குறைந்துகொண்டே செல்லுகின்றது :D [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

தம்பி சுண்டல்;

இன்னும் பிரென்ஷ் படிக்கேல்ல போல கிடக்குது..எழுதினதையே திருப்பி பாருங்கோ "la" என்றால் என்ன....சொல்லுங்கோ பார்ப்பம்...

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

[size=4]ஆம் அர்யுன் அண்ணா, உண்மை.[/size]

[size=4]நீங்கள் கூறிய இடங்கள் டொராண்டோ பெரும்பாகத்தில் வளர்ச்சி கண்டு வரும் நகரங்கள். இங்கே இடமும் வேலைவாய்ப்புக்களும் அத்துடன் எமது தமிழ் வீட்டு முகவர்கள் காரணமாயும் எம்மவர்கள் முன்னேற முடிகின்றது. [/size]

[size=4]கனடா (டொராண்டோ) பிரான்சுடன் (பரிசுடன்) ஒப்பிடும்பொழுது புதிய நாடு (நகரம்). [/size]

[size=4]இங்குள்ள பல தெரிவுகள் அங்குள்ளவர்களுக்கு இல்லை. [/size]

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

இல்ல அண்ண கூடுதலாக அவங்கலோடேயே இருந்த்துட்டதால பயம் இல்ல ஆனா ஜனநாயகவாதிகளைக் கண்டால்த்தான் பயமா இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

நீங்களும் ஆயுதம் தூக்கினிங்க தானே அப்போ நீங்க பயங்கர வியாதி I mean வாதி இல்லியோ?

இடையில விட்டிட்டு ஓடின நீங்கள் எல்லாம் சுத்த ஆன்மிக வாதிங்க கடைசி வரைக்கும் நின்டு தன்னோட குடும்பத்தையும் தன்னையும் இழந்தவங்க எல்லாம் பயங்கர வாதிங்க.....

நீங்க ஏன்னா தான் காட்டு கத்து கத்தினாலும் இன்றைய தலைமுறையிடம் புலிகள் பற்றிய உயர்வான மதிப்பு தான் இருக்கு இருக்கும்

அத ஒவொரு நாட்டில் இருக்கும் TYO உங்களுக்கு சொல்லும்

நான் தெரியாம தான் கேக்கிறன் நீங்கள்

சார்ந்த அமைப்புக்கும் இல்லை தமிழ் ஈழ விடுதலைக்காக போராட புறப்பட்டு தடம்புரண்ட

அமைப்புகளுக்கும் அடுத்த தலை முறைய கொண்ட அமைப்புகள் இருக்கா?

ஆனால் புலிகளுக்கும் புலிகள் சார்ந்த அமைப்புகளுக்கும் அடுத்த தலைமுறை. கொண்ட அமைப்புகள் இருக்கு இன்னும் ஒரு 40 வருஷத்துக்கு எங்களுக்கு போராட்டத்த கொண்டு நடத்த முடியும் நடத்துவம் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை

உங்களை போல வயசு போண கேஸ் எல்லாம் weekend பார்ட்டி க்கு போய் நல்லா தண்ணி அடிச்சு போட்டு புலிகள பயங்கரவாதிகள் அது இதுன்னு கேவலமா கதைச்சு போட்டு நிக்க பொண்டாட்டி மார் கார்ல கொண்டு வந்து வீட்ட விடுவினம் படுத்து கொண்டு புலம்ப வேண்டியது தான் கனவில அடியாட புடியாட எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் தமிழ்கடைக்குப் போனால் நிற்கிறதிற்கு இட‌மில்லை பத்தாததற்கு பொருட்களும் அறா விலை சனம் என்ன செய்யும் எங்கே மலிவாகக் கிடைக்குதோ அங்கே போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி லா சப்பெல்லுக்கு போனா தமிழ் பொண்ணுகளோட குஜு பொண்ணுங்களையும் பஞ்சாபி பொண்ணுகளையும் பாக்கலாம் :D

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

எனக்குத்தெரிய இவையள் சின்னமடுவில் ஒரு பெரிய தாக்குதல் நடாத்தி தோழர்களை மீட்டவர்கள் . அதுக்கு நீங்களே தலைமை தாங்கினது :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ புலத்தில எப்பிடி சிங்களவனுக்கு சலாம் போடுவது எப்பிடி யாழ் பாணத்துக்கு போய் கள்ளு குடிப்பது இது தான் சுதந்திரம் என்டு வழி காட்டப்போறிங்களா?

கொலைகள் இல்லாமல் சுதந்திரம் கிடைக்காது

காடிக்கொடுதவங்களையும் கூட்டிக்கொடுதவங்களையும் போடாமல் மடில வைச்சு கொஞ்சவா முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அடையாளம் பறிபோகாது பாதுகாக்க எங்கள் ஏரியா பொறுப்பாளர் விசுகு ஏதாவது செய்வார் :D

அவருடன் சேர்த்து மற்ற கள சகோதரர்களும் அதற்காக உழைக்க வேண்டும் அதற்க்கு எப்போது எமது ஆதரவு உண்டு ..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.