Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிகின்றதா எங்களை ?????????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே தான் எனது கருத்தும். உண்மையான போராளி தமிழீழம் கிடைக்கும் வரை எந்த கொடுமையையும் தாங்கிக்கொள்வான், எந்த வழியிலும் தமிழீழம் கிடைக்க தன்னால் முடிந்தவரை போராடுவானே தவிர தம்மை மற்றவர்கள் வாழவிடவில்லை என்று கூறி புலம்ப மாட்டான்.

இது அவர்கள் அப்படி நினைப்பார்கள் என்று நினைத்து இவர்கள் எழுதுவது.

நீங்கள் யாழுக்கு வந்ததிலிருந்து நான் உங்களை அவதானித்ததிலிருந்து உங்களுக்கு பிடித்த ஒருவர் என்ன எழுதினாலும் அதனை ஆதரித்தே கருத்து எழுதுகிறீர்கள். சுயமாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

புரியவில்லை துளசி அந்தக் கவிதையில் என்ன பிழை என்று தெளிவாகச் சொல்லுங்கள் .போராளிகள் ,விடுதலைப் புலிகள் ,தேசியம் ,இதைப் பற்றி இங்கு கதைப்பவர்களை விட எனக்கு இங்கு 100 வீதம் உரிமை உண்டு கதைப்பதற்கு இங்கு இதுவல்ல பிரச்சனை . சிறையில் உள்ள போராளிகள் பற்றியே என் கவலை அவர்களின் விடுதலை பற்றியே

என்ன எதிர் பார்க்கின்றீர்கள் அவர்கள் உள்ளேயே இருந்து தாங்கள் உண்மையான போராளிகள் தான் என்று உங்களுக்கும் உங்களைப் போன்ன்றவர்களுக்கும் நிருபிக்கவேண்டும் என்றா ..............

  • Replies 98
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

ஆழமான வரிகள்....

உண்மையை எழுதியிருக்கிறீர்கள்...

உங்கள் நேரத்திற்கு நன்றிகள் மணி .

நாட்டுக்காக போராட போனபடியால் அவர்களில் ஒரு மதிப்பு ,அவ்வளவும்தான். அதைவிட்டு அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல ஆசா பாசம் அற்றவர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது .

நாட்டுக்காக போராட போனபடியால் மட்டுமல்ல, நாட்டுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யக்கூடியதாக இருந்தார்கள், இருக்கிறார்கள். அது ஒரு சாதாரண மனிதனால் முடியாது. எனவே தான் அவர்கள் சாதாரண மனிதர்களை விட மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் ஆசாபாசம் அற்றவர்கள் என்று எவரும் கூறவில்லை. ஆனால் ஆசாபாசங்களை கட்டுப்படுத்தி வாழ தெரிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை கனபேர் ஆசா பாசத்தையும் ஆபாசத்தையும் போட்டு குழப்பி எழுதியிருக்கினம் எண்டு மட்டும் விளங்கிது இலட்சியத்திற்காக போராடிய .அந்த சிறை வாசிக்கும் தன்னுடை பிள்ளையின் பிஞ்சு கைகளை ஒரு தடைவையாவது தொட்டு பார்த்துவிட்டு செத்து போகலாமென்ற நப்பாசை வந்ததில் அவன் துரோகியாகி விட்டான் அவ்வளவுதான்

புரியவில்லை துளசி அந்தக் கவிதையில் என்ன பிழை என்று தெளிவாகச் சொல்லுங்கள் .போராளிகள் ,விடுதலைப் புலிகள் ,தேசியம் ,இதைப் பற்றி இங்கு கதைப்பவர்களை விட எனக்கு இங்கு 100 வீதம் உரிமை உண்டு கதைப்பதற்கு இங்கு இதுவல்ல பிரச்சனை . சிறையில் உள்ள போராளிகள் பற்றியே என் கவலை அவர்களின் விடுதலை பற்றியே. என்ன எதிர் பார்க்கின்றீர்கள் அவர்கள் உள்ளேயே இருந்து தாங்கள் உண்மையான போராளிகள் தான் என்று உங்களுக்கும் உங்களைப் போன்ன்றவர்களுக்கும் நிருபிக்கவேண்டும் என்றா ..............

போராளிகளை நாம் வாழவிடவில்லை என்ற இவருடைய கருத்தை ஒரு போராளி கூறுவது போல் கவிதையை அமைத்திருப்பது தான் பிழை.

அவர்கள் என்று எழுதியிருந்தால் இதனை போராளிகளின் நிலை பற்றி கோமகன் அண்ணாவின் ஒரு கருத்தாக நினைக்கலாம். நாங்கள் என்று ஒரு போராளியின் நிலையிலிருந்து எழுதியிருப்பதன் மூலம் ஒரு போராளி சிந்திக்காத விடயத்தை அவன் சிந்திப்பது போல் இவர் எழுதியிருக்கிறார். அது பிழை.

உண்மை போராளி நாட்டின் விடிவிற்காக உழைக்கும் போது தனது ஆசாபாசங்களை நோக்க மாட்டான். நாட்டுக்காக மற்றவர்களின் ஆதரவை கேட்பானே தவிர தனது தனிப்பட்ட வாழ்வுக்காக மற்றவர்களை குறை சொல்ல மாட்டான். (மற்றவர்களில் தவறு இருந்தாலும்)

மற்றபடி போராளிகள் உள்ளே இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒருவரும் விரும்பவில்லை. அவர்கள் விடுதலையை தான் விரும்புகிறோம்.

பி.கு: நீங்கள் ஒரு முன்னாள் போராளி என்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள். நீங்கள் எப்பொழுது இயக்கத்தை விட்டு விலத்தினீர்கள்? எதற்காக? அல்லது இறுதிவரை இருந்தீர்களா? என்ற விபரங்கள் எனக்கு தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. ஆனால் நீங்கள் உண்மை போராளியாக இருந்தால் இவர் கவிதையை மேலோட்டமாக படிக்காமல் ஆழமாக படியுங்கள். நீங்களும் எமது கருத்தையே கூறுவீர்கள்.

ஆழமாக எல்லாம் இறங்கிப் பார்த்தாச்சு நான் ஏன் இப்ப இங்கு என்று உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டைக்காக்க

எமது உறவை மீட்க

அவரை வாழ வைக்க

நாம் தயார்

தடுப்பவன் எவன்???

அவனை விலத்துங்கள்

தடையை தகருங்கள்

சுதந்திரமாக

எம்மவரை நாம் காண வழி செய்யுங்கள்.........

  • தொடங்கியவர்

மிகவும் கனதியான கவிதை, கோமகன்!

எட்டுக் குதிரைகள் பூட்ட வேண்டிய வண்டியை, இரண்டு குதிரைகள் மட்டும், இழுக்கும் போது சுமை மிகவும் அதிகமாக இருக்கும்!

உங்கள் கவிதை, மிகுதி ஆறு குதிரைகளை நோக்கியே, எழுதப் பட்டுள்ளது என எண்ணுகின்றேன்!

தொடர்ந்து எழுதுங்கள், எல்லாக் குதிரைகளும், ஒன்று சேரும் வரை!

முதலில் உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் புங்கை . வண்டியில் எத்தனை குதிரைகள் பூட்டப்படவேண்டும் என்பதல்ல எனது கேள்வி ? வண்டியில் பூட்டிய ஒரே காரணத்திற்காக அந்தக் குதிரைகள் காயடிக்கப்பட்டவையா?? குதிரைகளை குதிரைகளாகப் பார்க்காது அதிசயங்கள் செய்யும் மாயக்குதிரைகளாகப் பார்ப்பது யாருடைய பார்வைக்கோளாறு !!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

Spoiler
புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.

ஓம் கிருபன் போராளியாக இருப்பவன் ஆசா பாசத்திற்கு அதாவது ஆபாசத்திற்கு கட்டுப்படக் கூடாது நல்லது பிரபாகரனிற்கு (தலைவர் எண்டு எழுதாட்டில் கோவிப்பாங்கள் ) தலைவரிற்கு 3 பிள்ளையள் இருந்தாக கேள்வி அது உண்மையோ?? எனக்கு தெரியாது . ஒரு விடுதலை போராட்டத்தை வழி நடத்தியவருக்கு எதுக்கு அதுக்கெல்லாம் நேரம் சும்மா கதை விட கூடாது உண்மையை சொல்லவேணும்.

நல்ல வேளை உடனடியா எழுத்து பிழையை தீரத்திட்டனாக்கம் சே திரம்பலும் எழுத்து பிழை

Edited by sathiri

என்னைப் பொறுத்தமட்டில் கிருபன் போட்டு வாங்குகின்றார்

மற்றபடி போராளிகள் உள்ளே இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒருவரும் விரும்பவில்லை. அவர்கள் விடுதலையை தான் விரும்புகிறோம்.

[size=1]

[size=4]அந்த விடுதலையை எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பது பற்றி விவாதித்தால் பலருக்கும் பயனாக இருக்கும். [/size][size=4]அதற்கு யாரும் முயற்சிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]நிமபலரூபன், டில்ருக்சன் கடைசியாக எமக்கு தெரிந்து சிறையில் சிங்கள நாசிகளால் கொல்லப்பட்டவர்கள். இப்பொழுது சதீஸ் ஆபத்தான நிலையில். [/size][/size]

[size=1]

[size=4]மனோ கணேசனின் கருத்துப்படி ஆயிரத்தி இருநூறு அரசியல் கைதிகள் மட்டும் உள்ளார்கள் ( இதை விட ஆயிரக்கணக்கில் முன்னாள் போராளிகள் உள்ளனர்). அநேகமான தமிழர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. வழக்கும் இல்லை. [/size][/size]

[size=1]

[size=4]ஒரு பரந்து பட்ட பார்வையில் எவ்வாறு எல்லோருக்கும் உதவலாம் ? என பார்க்கும் பொழுது அண்மையில் கூட்டமைப்பு இவர்களை விடுவிக்க அகாசியிடம் கேட்டிருந்தது. மனோ கணேசன் தமையிலான குழு ஐ.நா. வரை எடுத்து செல்லுகின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தமட்டில் கிருபன் போட்டு வாங்குகின்றார்

:icon_idea: :icon_idea: நாங்கள் வாங்கிட்டு போடறம் அவ்வளவுதான் :wub:

[size=1][size=4]அந்த விடுதலையை எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பது பற்றி விவாதித்தால் பலருக்கும் பயனாக இருக்கும். [/size][size=4]அதற்கு யாரும் முயற்சிக்கலாம். [/size][/size]

[size=1][size=4]நிமபலரூபன், டில்ருக்சன் கடைசியாக எமக்கு தெரிந்து சிறையில் சிங்கள நாசிகளால் கொல்லப்பட்டவர்கள். இப்பொழுது சதீஸ் ஆபத்தான நிலையில். [/size][/size]

[size=1][size=4]மனோ கணேசனின் கருத்துப்படி ஆயிரத்தி இருநூறு அரசியல் கைதிகள் மட்டும் உள்ளார்கள் ( இதை விட ஆயிரக்கணக்கில் முன்னாள் போராளிகள் உள்ளனர்). அநேகமான தமிழர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. வழக்கும் இல்லை. [/size][/size]

[size=1][size=4]ஒரு பரந்து பட்ட பார்வையில் எவ்வாறு எல்லோருக்கும் உதவலாம் ? என பார்க்கும் பொழுது அண்மையில் கூட்டமைப்பு இவர்களை விடுவிக்க அகாசியிடம் கேட்டிருந்தது. மனோ கணேசன் தமையிலான குழு ஐ.நா. வரை எடுத்து செல்லுகின்றது. [/size][/size]

இது விடயத்தில் ஓரிருவரை என்றால் பணம் கட்டி வெளியில் எடுக்கலாம். ஒட்டுமொத்த சிறை கைதிகளையும் விடுவிக்க நிச்சயம் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் சிங்கள அரசு எவருக்கும் செவி சாய்க்கும் நிலையில் இல்லை என்பதால் இது சர்வதேச தலையீடு இன்றி நிறைவேறாது.

கூட்டமைப்பினரும் நாடுகடந்த அரசாங்கமும் ஒன்றாக சேர்ந்து இது பற்றிய ஓர் விவாதத்தை ஐ.நாவில் ஏற்படுத்த வேண்டும். வரும் நவம்பர் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்ட தொடரில் இது விடயமாக ஒரு பிரேரணை நிறைவேற்றினால் நல்லது. அல்லது அடுத்த வருடம் மீண்டும் எமது விடயத்தை தட்டிப்பார்க்கும் போது என்றாலும் ஓர் பிரேரணை நிறைவேற்றினால் நல்லது. அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் தேவை. இலங்கைக்கு ஆதரவான சீனா ரஷ்யாவின் வீட்டோ உரிமை இல்லாத இந்த காலப்பகுதியை தான் நாம் பயன்படுத்திக்கொண்டால் இலகு...

புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் வெள்ளை மாளிகை நோக்கி ஓர் வேண்டுகோள் வைக்க வேணும். கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கை என்றால் எம்மக்கள் பலர் ஆதரவு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

கைதிகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை channel 4 மூலம் மீண்டும் வெளியிட்டால் ஐ நா கவனத்தில் எடுக்க சந்தர்ப்பமுள்ளது. அதற்கு channel 4 இன் ஆதரவு தேவை.

பி.கு: எனக்கு தெரிந்ததை சொன்னேன். பிழை என்றால் நீங்கள் ஆலோசனையை முன்வையுங்கள். நாங்கள் பங்களிப்பை வழங்குகிறோம்.

இஞ்சை கனபேர் ஆசா பாசத்தையும் ஆபாசத்தையும் போட்டு குழப்பி எழுதியிருக்கினம் எண்டு மட்டும் விளங்கிது இலட்சியத்திற்காக போராடிய .அந்த சிறை வாசிக்கும் தன்னுடை பிள்ளையின் பிஞ்சு கைகளை ஒரு தடைவையாவது தொட்டு பார்த்துவிட்டு செத்து போகலாமென்ற நப்பாசை வந்ததில் அவன் துரோகியாகி விட்டான் அவ்வளவுதான்

சாத்து அண்ணை.... ஆசாபாசத்தையும் ஆபாசத்தையும் போட்டு குழப்புமளவுக்கு நாங்கள் கொஞ்சமும் தமிழ் தெரியாதவர்களல்ல. சிறைவாசி தன்னுடைய பிள்ளையின் பிஞ்சு கைகளை தொட்டுப்பார்க்க நினைப்பதை, ஒரு போராளி தனது ஆசாபாசத்துக்காக புலம்பெயர் தமிழர்களை குறைசொல்வது போல் அமைந்திருக்கும் கவிதையுடன் ஒப்பிடுமளவுக்கு நீங்கள் தான் குழம்பி எழுதியிருக்கிறீர்கள்.

தொட்டதுக்கும் நிழலி அண்ணா மாதிரி "இப்பிடி சொன்னால் துரோகியாக்கிப்போடுவினம்" எண்டு சொல்லாதையுங்கோ... அது கூட நாங்கள் நினைப்பதாக நினைத்து நீங்கள் சொல்வது தான்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இருவரின் கவிதைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. கோமகன் அண்ணா எழுதிய இந்த கவிதையை பார்ப்பவர்கள் போராளிகள் பற்றி தவறான அபிப்பிராயத்தை பெற்று இப்பொழுது செய்யும் உதவியையும் நிறுத்திவிட கூடும். நெடுக்ஸ் அண்ணாவின் கவிதையை பார்ப்பவர்கள் போராளிகள் பற்றிய உண்மையான தெளிவை பெற்று அவர்கள் மேல் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடும்.

தமிழீழ ஆதரவாளர்களையும் எது சரி என்று தெரியாமல் தவிப்போர்களையும் கூறினேன். மற்றபடி தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் உங்களைப்போன்ற பாராமுகமாக இருப்பவர்களுக்கும் எதைப்படித்தாலும் மண்டைக்குள் ஏறாது.

அருமையான யதார்த்தமான விளக்கம்.

ஜயையோ உதவி செய்கிற ஆட்களை ஒரு கவிதை மூலம் மாற்ற முடியுமா எனக்குத் தெரியாதே :unsure: ...கோமகன் நேற்றுத் தான் கவிதை எழுதினார் ஆனால் நெடுக்ஸ் இந்த கவிதை எழுதி கண காலம்[2009] ஆச்சுதே யாராவது நெடுக்கரின் கவிதையைப் பார்த்து உதவி செய்த ஆட்கள் இருக்கினமோ...போராளிகளோடு பழகி,போராளியாய் இருந்து நாட்டுக்காக உயிரை விடத் துணிந்த நீங்கள் எது சொன்னாலும்,செய்தாலும் சரிதான் சரியா?...இணையத்தில் இருந்து போராடிப் போட்டு அதை நாட்டுப் பற்று என்றும் மற்றவனை துரோகி என நேரடியாய் சொல்லாமல் தமிழிழ எதிர்ப்பாளன் என சொல்லிப் போட்டு நீங்கள் இணையத்தில் கவிதை எழுதி உதவி கேளுங்கோ.

என்னைப் பொறுத்தமட்டில் கிருபன் போட்டு வாங்குகின்றார்

எனக்கும் அப்படித் தான் பட்டது ஆனால் ஆனானப்பட்ட அகூதாவே பச்சை குத்தியிருக்கிறார் என்டதும் :( ஆனாலும் கிருபன் மாதிரி எழுத ஒரு தனித் திறமை வேண்டும்

  • தொடங்கியவர்

ஓம் கிருபன் போராளியாக இருப்பவன் ஆசா பாசத்திற்கு அதாவது ஆபாசத்திற்கு கட்டுப்படக் கூடாது நல்லது பிரபாகரனிற்கு (தலைவர் எண்டு எழுதாட்டில் கோவிப்பாங்கள் ) தலைவரிற்கு 3 பிள்ளையள் இருந்தாக கேள்வி அது உண்மையோ?? எனக்கு தெரியாது . ஒரு விடுதலை போராட்டத்தை வழி நடத்தியவருக்கு எதுக்கு அதுக்கெல்லாம் நேரம் சும்மா கதை விட கூடாது உண்மையை சொல்லவேணும்.

நல்ல வேளை உடனடியா எழுத்து பிழையை தீரத்திட்டனாக்கம் சே திரம்பலும் எழுத்து பிழை

இந்தக்கவிதை சொல்கின்ற செய்தியின் சாராம்சமும் இதுதான் .

இது விடயத்தில் ஓரிருவரை என்றால் பணம் கட்டி வெளியில் எடுக்கலாம். ஒட்டுமொத்த சிறை கைதிகளையும் விடுவிக்க நிச்சயம் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் சிங்கள அரசு எவருக்கும் செவி சாய்க்கும் நிலையில் இல்லை என்பதால் இது சர்வதேச தலையீடு இன்றி நிறைவேறாது.

கூட்டமைப்பினரும் நாடுகடந்த அரசாங்கமும் ஒன்றாக சேர்ந்து இது பற்றிய ஓர் விவாதத்தை ஐ.நாவில் ஏற்படுத்த வேண்டும். வரும் நவம்பர் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்ட தொடரில் இது விடயமாக ஒரு பிரேரணை நிறைவேற்றினால் நல்லது. அல்லது அடுத்த வருடம் மீண்டும் எமது விடயத்தை தட்டிப்பார்க்கும் போது என்றாலும் ஓர் பிரேரணை நிறைவேற்றினால் நல்லது. அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் தேவை. இலங்கைக்கு ஆதரவான சீனா ரஷ்யாவின் வீட்டோ உரிமை இல்லாத இந்த காலப்பகுதியை தான் நாம் பயன்படுத்திக்கொண்டால் இலகு...

புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் வெள்ளை மாளிகை நோக்கி ஓர் வேண்டுகோள் வைக்க வேணும். கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கை என்றால் எம்மக்கள் பலர் ஆதரவு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

கைதிகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை channel 4 மூலம் மீண்டும் வெளியிட்டால் ஐ நா கவனத்தில் எடுக்க சந்தர்ப்பமுள்ளது. அதற்கு channel 4 இன் ஆதரவு தேவை.

பி.கு: எனக்கு தெரிந்ததை சொன்னேன். பிழை என்றால் நீங்கள் ஆலோசனையை முன்வையுங்கள். நாங்கள் பங்களிப்பை வழங்குகிறோம்.

[size=1][size=4]எனது கருத்தும் அதுதான். அதாவது சர்வதேச தலையீடு இல்லாமல் இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவுக்க முடியாது. அதை நாம் தனித்தும் செய்ய முடியாது, அதற்கான ஒற்றுமை இன்னும் இல்லை.[/size][/size]

[size=1]

[size=4]எனவே ஒரு நாடு தனது இலாபத்தை முன்னிலைப்படுத்தி காய்களை நகர்த்தும் பொழுது நாம் அதில் இணைந்து சில மக்களுக்கான தீர்வுகளை பெறவேண்டும்.[/size][/size]

[size=1]

[size=4]கடந்த ஐ.நா. மனித உரிமை தொடரில் இந்தியா இலங்கைக்கு எதிரான முடிவை எடுத்து அடுத்த அமர்வில் மேலும் சில கெடுபிடிகளை முன்வைக்கலாம். காரணம் தொடரும் சீன நெருக்கம். எனவே இந்த குளிர் யுத்தத்தில் எமது அரசியல் வெற்றிகளை பெற வேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]இதை விட நீங்கள் சூறியது போன்று சர்வதேசமயப்படுத்தப்படல் வேண்டும். மனித உரிமை அமைப்புக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]இன்னும் வழிகள் நிச்சயம் இருக்கும். [/size][/size]

எனக்கும் அப்படித் தான் பட்டது ஆனால் ஆனானப்பட்ட அகூதாவே பச்சை குத்தியிருக்கிறார் என்டதும் :( ஆனாலும் கிருபன் மாதிரி எழுத ஒரு தனித் திறமை வேண்டும்

கனக்க பேர் கிருபன் spoiler இற்குள் என்ன போட்டிருக்கின்றார் என்று கவனிக்கவில்லை என்று நினைக்கின்றன். :D

நக்கல் நையாண்டியில் கிருபனை யாரும் அடிக்க முடியாது :)

தொட்டதுக்கும் நிழலி அண்ணா மாதிரி "இப்பிடி சொன்னால் துரோகியாக்கிப்போடுவினம்" எண்டு சொல்லாதையுங்கோ... அது கூட நாங்கள் நினைப்பதாக நினைத்து நீங்கள் சொல்வது தான்.

யாரையும் தொட்டதுக்கு நான் ஏன் அப்படிச் சொல்லப் போறன்?

கனக்க பேர் கிருபன் spoiler இற்குள் என்ன போட்டிருக்கின்றார் என்று கவனிக்கவில்லை என்று நினைக்கின்றன். :D

நக்கல் நையாண்டியில் கிருபனை யாரும் அடிக்க முடியாது :)

[size=4][size=4]புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.[/size]
[/size]

[size=4]அவர் அதை ஒளித்தாலும் [ SHOW] சொன்னது உண்மை. அது தான் பச்சை :D[/size]

[size=4]

[/size]

[size=4]கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

[/size]
  • தொடங்கியவர்

கனக்க பேர் கிருபன் spoiler இற்குள் என்ன போட்டிருக்கின்றார் என்று கவனிக்கவில்லை என்று நினைக்கின்றன். :D

நக்கல் நையாண்டியில் கிருபனை யாரும் அடிக்க முடியாது :)

யாரையும் தொட்டதுக்கு நான் ஏன் அப்படிச் சொல்லப் போறன்?

கிருபனை நினைச்சன் மற்றவையையும் நினைச்சன் சிரிப்பு தாங்கேலாமல் போச்சுது :lol: :lol: :D :D என்ன கிருபனுக்கு ரெண்டு பச்சை லாபம் நிழல் :D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் சொன்னதையே புரிஞ்ச்சு கொள்ளாத நீங்கள் எல்லாம் போராட்டத்தை முன் நகர்த்தப்போறியல் ம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பின் நோக்கம்.. போராளிகளின்.. மற்றும் பிற தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் விடுதலை மீதான யதார்த்தமான அக்கறையை வெளிக்காட்டுவதாகத் தெரியவில்லை.

மாறாக... 2009 மே க்குப் பின் யாழிலும் ஒரு திடீர் முன்னாள் போராளிப் பாச குழுமம் தோன்றி உள்ளது. நம்ம சங்கரி போல.. பீலா விடுற கூட்டம். இதே சங்கரி.. மே க்கு முன்னர் சொன்னது.. புலிகளை அழிக்கும் யுத்தத்தை அரசு தொடர வேண்டும் என்று. இப்போ கதிரைக்கு ஆசைப்பட்டு செல்வது.. மனோ கணேசனின் முயற்சியில் தானும் பக்கத்தில நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க.

அதே வர்க்கம்.. இங்கு புலம்பெயர் தேசங்களில்..கடந்த காலங்களில்.. புலிப் போர்வை போர்த்தி.. கொண்டு திரிஞ்சவை. இல்ல அடக்கி வாசிச்சவை. இப்ப அதற்கு தேவை இல்லை என்றவுடன்.. புற்றீசல் கணக்கா வெளிக்கிட்டினம். இயக்கத்தை விட்டு பாதில ஓடினதுகள்.. காட்டிக்கொடுத்திட்டு ஓடினதுகள்.. ஆயுதத்தை கொடுத்திட்டு சரணடைஞ்சு வவுனியாவுக்குள்ளால.. வெளிநாட்டுக்கு ஓடினதுகள்.. இதுகளும் முன்னாள் போராளிகள் என்று தான் சொல்லிக்கிட்டு திரியுதுங்க..!

போராளி என்ற பதத்திற்கு புலிக்கு பின்னாடி வால் பிடிச்சது.. ஆயுதம் தூக்கினது எல்லாம் அமைய முடியாது. எவன் ஒருவன் அந்த அமைப்பின் இலட்சியத்தோடு அது வெல்லப்படும் வரை.. இறுதி வரை நின்றானோ.. நிற்கிறானோ.. அவன் தான் போராளி..!

மற்றதுகள்.. எல்லாம் சும்மா...! அதுகளின்ர கதையைவிட்டிட்டு.. சிறைகளில் உள்ள.. அப்பாவி இளைஞர் யுவதிகள்.. மற்றும் போராளிகள் எல்லோரினதும் விடுதலையை சாத்தியமாக்கனுன்னா.. அதற்கு ஒரே வழி.. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு.

முன்னாள் படுகொலையாளர்கள்.... சித்தார்த்தன்.. வரதராஜப்பெருமாள்.. டக்கிளஸ்.. கருணா.. பிள்ளையானுக்கு.. சுரேஸ் பிரேமசந்திரன்..என்று எண்ணுக்கணக்கற்ற முன்னாள் இன்னாள் ஒற்றர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமுன்னா.. ஏன்.. முற்றுப்பெற்றுவிட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னால் இருந்தவைக்கு.. பொதுமன்னிப்பு அளிக்க முடியாது..???! அளிக்க முடியும். இதைத்தான் மனோ கணேசனும் கேட்கிறார்.. நாங்களும் கேட்கிறம். உலகம் தான் இதற்கான பதிலைச் சொல்லனும்..! :icon_idea:

ஜயையோ உதவி செய்கிற ஆட்களை ஒரு கவிதை மூலம் மாற்ற முடியுமா எனக்குத் தெரியாதே :unsure: ...கோமகன் நேற்றுத் தான் கவிதை எழுதினார் ஆனால் நெடுக்ஸ் இந்த கவிதை எழுதி கண காலம்[2009] ஆச்சுதே யாராவது நெடுக்கரின் கவிதையைப் பார்த்து உதவி செய்த ஆட்கள் இருக்கினமோ...போராளிகளோடு பழகி,போராளியாய் இருந்து நாட்டுக்காக உயிரை விடத் துணிந்த நீங்கள் எது சொன்னாலும்,செய்தாலும் சரிதான் சரியா?...இணையத்தில் இருந்து போராடிப் போட்டு அதை நாட்டுப் பற்று என்றும் மற்றவனை துரோகி என நேரடியாய் சொல்லாமல் தமிழிழ எதிர்ப்பாளன் என சொல்லிப் போட்டு நீங்கள் இணையத்தில் கவிதை எழுதி உதவி கேளுங்கோ.

போராளிகள், மாவீரர்களை பற்றிய பதிவுகள், கவிதைகள் என்பன அவர்களை மறக்க நினைக்கும் இருமனம் கொண்ட மக்களையும் மறக்க முயலாமல் வைத்திருக்கும். நெடுக்ஸ் அண்ணாவின் கவிதையை பார்த்த பின்னர் உதவி செய்யாத யாரும் ஒருவர் என்றாலும் மனம்மாறி உதவி செய்திருக்க மாட்டார்கள் என்று உங்களால் அடித்து கூற முடியுமா?

உங்களை தமிழீழ எதிர்ப்பாளர் என்று கூறவில்லை, பாராமுகமாய் இருக்கிறீர்கள் என்று தான் கூறினேன். மீண்டும் படியுங்கள். தமிழீழத்திற்கான பங்களிப்புகளில் உங்களை அழைத்தாலும் நீங்கள் வருவதில்லை. அதனை கூறினேன்.

இதுவரைக்கும் யாழில் நான் எழுதிய கருத்துகளில் கருணாவை தவிர வேறு எவரையும் என் வாயால் துரோகி என்று நான் சொல்லவில்லை. நீங்களாக ஏன் துரோகியாவதற்கு அவசரப்படுகிறீர்கள்? :)

கனக்க பேர் கிருபன் spoiler இற்குள் என்ன போட்டிருக்கின்றார் என்று கவனிக்கவில்லை என்று நினைக்கின்றன். :D

நக்கல் நையாண்டியில் கிருபனை யாரும் அடிக்க முடியாது :)

நான் quote பண்ணி கருத்து எழுதியிருக்கிறேன். எனவே spoiler இல் என்ன இருக்கிறதென்று யாரும் பார்க்கவில்லை என்று கூறாதீர்கள்.

அவர் நக்கல் நையாண்டி செய்தாலும் அவர் கருத்து உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு பொருந்தும். (உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு போராளிகள் பற்றிய புரிந்துணர்வு உள்ளது). அதனால் தான் நான் ஆதரவு வழங்கினேன். :)

யாரையும் தொட்டதுக்கு நான் ஏன் அப்படிச் சொல்லப் போறன்?

:lol: :lol:

பேய் நிழல் அண்ணாவுக்கு இந்த திரியிலும் ஜோக்கா? :D

கிருபன் சொன்னதையே புரிஞ்ச்சு கொள்ளாத நீங்கள் எல்லாம் போராட்டத்தை முன் நகர்த்தப்போறியல் ம்

நிழலி அண்ணாவுக்கு எழுதிய கருத்தே உங்களுக்கும்.

அதோட போராட்டத்தை முன்னகர்த்த தமிழீழ விடயங்களுக்கு ஆதரவளித்தால், பங்களிப்பு வழங்கினால் போதும். அதற்கு அனைத்து விடயங்களும் தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை. அங்கு இப்படி கருத்தை கூறி சரியா பிழையா என்று கேட்டு தமாஷ் பண்ண மாட்டார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள், மாவீரர்களை பற்றிய பதிவுகள், கவிதைகள் என்பன அவர்களை மறக்க நினைக்கும் இருமனம் கொண்ட மக்களையும் மறக்க முயலாமல் வைத்திருக்கும். நெடுக்ஸ் அண்ணாவின் கவிதையை பார்த்த பின்னர் உதவி செய்யாத யாரும் ஒருவர் என்றாலும் மனம்மாறி உதவி செய்திருக்க மாட்டார்கள் என்று உங்களால் அடித்து கூற முடியுமா?

உங்களை தமிழீழ எதிர்ப்பாளர் என்று கூறவில்லை, பாராமுகமாய் இருக்கிறீர்கள் என்று தான் கூறினேன். மீண்டும் படியுங்கள். தமிழீழத்திற்கான பங்களிப்புகளில் உங்களை அழைத்தாலும் நீங்கள் வருவதில்லை. அதனை கூறினேன்.

இதுவரைக்கும் யாழில் நான் எழுதிய கருத்துகளில் கருணாவை தவிர வேறு எவரையும் என் வாயால் துரோகி என்று நான் சொல்லவில்லை. நீங்களாக ஏன் துரோகியாவதற்கு அவசரப்படுகிறீர்கள்? :)

நான் quote பண்ணி கருத்து எழுதியிருக்கிறேன். எனவே spoiler இல் என்ன இருக்கிறதென்று யாரும் பார்க்கவில்லை என்று கூறாதீர்கள்.

அவர் நக்கல் நையாண்டி செய்தாலும் அவர் கருத்து உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு பொருந்தும். (உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு போராளிகள் பற்றிய புரிந்துணர்வு உள்ளது). அதனால் தான் நான் ஆதரவு வழங்கினேன். :)

:lol: :lol:

பேய் நிழல் அண்ணாவுக்கு இந்த திரியிலும் ஜோக்கா? :D

நிழலி அண்ணாவுக்கு எழுதிய கருத்தே உங்களுக்கும்.

அதோட போராட்டத்தை முன்னகர்த்த தமிழீழ விடயங்களுக்கு ஆதரவளித்தால், பங்களிப்பு வழங்கினால் போதும். அதற்கு அனைத்து விடயங்களும் தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை. அங்கு இப்படி கருத்தை கூறி சரியா பிழையா என்று கேட்டு தமாஷ் பண்ண மாட்டார்கள். :D

அனைத்தையும் பகுத்தறிய வேண்டும் எங்களுக்கு அப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தையும் பகுத்தறிய வேண்டும் எங்களுக்கு அப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்கள்

உதுக்குத்தான் உங்களுக்கு 1990ல் யோகியண்ணை சொன்னவர் தம்பி நந்து உனக்கு அரசியல் வராது போய் பலாலியபிடியடா எண்டு கேட்டியளா....கேட்டியளா..... :lol:

ஒரு 60 அடி ஆழம் காணுமா

மட்டுவில் அரசியல் பாசறையின் 600அரசியல் மாணவர்களில ஒரு சூரியன் அப்பவே மின்னினது. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள், மாவீரர்களை பற்றிய பதிவுகள், கவிதைகள் என்பன அவர்களை மறக்க நினைக்கும் இருமனம் கொண்ட மக்களையும் மறக்க முயலாமல் வைத்திருக்கும். நெடுக்ஸ் அண்ணாவின் கவிதையை பார்த்த பின்னர் உதவி செய்யாத யாரும் ஒருவர் என்றாலும் மனம்மாறி உதவி செய்திருக்க மாட்டார்கள் என்று உங்களால் அடித்து கூற முடியுமா?

உங்களோடு விதண்டவாதம் செய்ய எனக்கு நேரமில்லை

உங்களை தமிழீழ எதிர்ப்பாளர் என்று கூறவில்லை, பாராமுகமாய் இருக்கிறீர்கள் என்று தான் கூறினேன். மீண்டும் படியுங்கள். தமிழீழத்திற்கான பங்களிப்புகளில் உங்களை அழைத்தாலும் நீங்கள் வருவதில்லை. அதனை கூறினேன்.

தமிழிழ பங்களிப்புகளில் நான் என்ன செய்கிறேன்,என்ன செய்து கொண்டு இருக்கிறேன்,யாரோடு சேர்ந்து வேலை செய்கிறேன் என்பது உங்களுக்கு தேவையில்லாதது...உங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை...யாழில் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் அவர்கள் தான் நீங்கள்ள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள்

இதுவரைக்கும் யாழில் நான் எழுதிய கருத்துகளில் கருணாவை தவிர வேறு எவரையும் என் வாயால் துரோகி என்று நான் சொல்லவில்லை. நீங்களாக ஏன் துரோகியாவதற்கு அவசரப்படுகிறீர்கள்? :)

நான் quote பண்ணி கருத்து எழுதியிருக்கிறேன். எனவே spoiler இல் என்ன இருக்கிறதென்று யாரும் பார்க்கவில்லை என்று கூறாதீர்கள்.

அவர் நக்கல் நையாண்டி செய்தாலும் அவர் கருத்து உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு பொருந்தும். (உண்மை தமிழ்தேசியவாதிகளுக்கு போராளிகள் பற்றிய புரிந்துணர்வு உள்ளது). அதனால் தான் நான் ஆதரவு வழங்கினேன். :)

விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.