Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாபகங்கள் தாலாட்டும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் கள உறவுகளே

நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்....

அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க

அந்த உணவகங்கள்

அங்கே உங்களுக்கு பிடிச்சது

மற்றும் அங்கு நடை பெற்ற நகைச்சுவையான சமபவங்கள எல்லாம் எல்லாரும் எங்க கூட பகிர்ந்துக்க போரிங்கலாம்....

இது ஏற்கனவே பலவருடங்களுக்கு முன்பு யாழில் நடை பெற்றது எண்டாலும் கூட மீண்டும் ஒரு முறை நினைவுகளை மீட்டுவோம்

எனக்கு இன்று வரை மறக்க முடியாமல் இருப்பது நான் சிறுவனாக இருந்தாலும் கூட விடுதலை புலிகளின் கட்டு பாட்டில் யாழ்பாணம் இருந்த பொது என்ன தான் பொருளாதார தடைகள் இடம்பெயர்வுகள் எண்டு இருந்தாலும் என்ன ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை உலகில் எங்கு சென்றாலும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அது 1991 இல் இருந்து 1995 காலப்பகுதிகள்

எத்தின மணிக்கு வேண்டும் என்றாலும் வெளியில் போகலாம் வரலாம் குற்றங்கள் என்பது மிக குறைவு....

அந்த காலப்பகுதியில் நாங்கள் அளவெட்டியில் இருந்து இடம் பெயர்ந்து இருந்தது நாச்சிமார் கோயிலடியில்

அங்கு இருக்கும் போது அடிக்கடி போய் மசாலா தோசையும் கொத்து ரொட்டியும் வாங்குவது பல்கலைகழகத்துக்கு முன்னாள் இருந்த அபிராமியில் சூப்பரா இருக்கும் அப்புறம் ஐஸ் கிரீம் குடிக்கனும்னா போறது கல்யாணிக்கு அங்க ஸ்பெஷல் சூப்பரா இருக்கும் ரோல்ல்சும் நல்ல taste எவ்ளவு அழகான பெயர்களுடன் கடைகள் சுவை அருவி குளிர் அருவி இப்பிடி பலப்பல

அதுவும் சர்பத்துக்கு பெயர் போன லிங்கம் கூல் பாரை மறக்க முடியுமா?

யாபகங்கள் தொடரும் .....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகங்கள் தாலாட்டும்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனது ஞாபகங்கள் வித்தியாசமானவை![/size]

[size=4]வேலணை, ஊர்காவற்துறைப் பாதையில், நண்பனொருவனின் மொரிஸ் மைனர் காரில் , பழகிய காலம்.[/size]

[size=4]அந்த நாட்களில் கள்ளுத் தவறணைகளில், கள்ளு அன்றே விலைப்படா விட்டால், வெளியே ஊத்தி விட வேண்டும் என்பது விதி![/size]

[size=4]இந்தக் கள்ளை, தவறணைக்கு வெளியே இருந்த பள்ளத்தில் ஊத்தி விடுவார்கள்![/size]

[size=4]அப்போது அந்த வெளியில், வழக்கமாக மேய்கின்ற மாடுகள், அங்கு வந்து குடித்து விட்டுத் தலையைத் தொங்கப் போட்டபடி நிற்பது,[/size]

[size=4]இன்றும் எனது மனத்தில், நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றது![/size]

[size=4]கள்ளில்லாத நாட்களில், அவை படும் பாடு இருக்கிறதே![/size]

[size=4]அந்த இடத்தையே இரவு பகலாகச் சுற்றியபடி இருக்கும்! :o[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா வித்தியாசமான அணுபவங்கள் ஏனைய கள உறவுகளும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வாங்க :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய வயதில் நாவல் காடு என்னும் இடத்திர்ற்கு போய் நாவல் பழம் பிடிங்கி தின்ற அனுபவம் மறக்க முடியாது. நல்ல சுவையான பழந்தை பெருவதர்க்கை இரண்டு மூன்று மரம் ஏறவேண்டி வரும். முருங்கை மரத்தை போல் நாவலால் விழுந்தாலும் நோ மாறது என்று சொல்லுகிறவை ஏன் என்று தெரியவில்லை. அதே நேரம் நாவல் இங்கே உள்ள செர்ரி பழ குடும்பத்தை சேர்ந்தது என்பது எனது அசையாத நம்பிக்கை- அநியாயமாய் காசு குடுக்க வேண்டி வருகுதே என்பதால்- எனது மகளுக்கு விருப்பமான பழம்- செர்ரி

[size=4]நான் சிறுவயதில் எனது அப்பம்மாவுடன் தோட்டத்தில் வேலைசெய்யும் அப்பப்பாவுக்கு தேநீர் கொண்டு செல்வது வழமை. இரண்டு மாடுகளை பூட்டி ஏர் கொண்டு உழும் அப்பப்பா எப்பொழுதும் குவளையில் முதலில் கறுப்பிக்கும் சிவப்பிக்கும் கொடுத்தே குடிப்பார். அந்த காளைகளும் அழகாக குடிக்கும். [/size]அம்மம்மாவுடன் அவரின் தோட்டத்திற்கு செல்லும்பொழுது நாங்கள் சூத்திரம் வளைக்க விரும்புவது உண்டு. அப்பொழுது நாங்கள் இறங்கினால் அந்த காளைகள் நின்றுவிடும். அந்த காளைகளின் அறிவை இன்றும் எண்ணி வியப்பதுண்டு.

[size=1]

[size=4]அதேபோல் பாத்திகள் கட்டி தண்ணீர் இறைத்து பின்னர் அவற்றை அறுவடை செய்து சந்தைப்படுப்படுத்தி பணத்தை பெற்று கோயிலுக்கும் கடைக்கும் செல்லும்பொழுது வரும் சுகம் - கோடி பணம் இருந்தாலும் வராது. [/size][/size]

[size=1]

[size=4](இந்த திரிக்கு நன்றிகள் சுண்டல் ) [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா

இன்னும் பல அணுபவங்கள் இருக்கும் நினைவுக்கு வருகின்ற போது சொல்லுங்கள்

:D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனது ஞாபகங்கள் வித்தியாசமானவை![/size]

[size=4]வேலணை, ஊர்காவற்துறைப் பாதையில், நண்பனொருவனின் மொரிஸ் மைனர் காரில் , பழகிய காலம்.[/size]

[size=4]அந்த நாட்களில் கள்ளுத் தவறணைகளில், கள்ளு அன்றே விலைப்படா விட்டால், வெளியே ஊத்தி விட வேண்டும் என்பது விதி![/size]

[size=4]இந்தக் கள்ளை, தவறணைக்கு வெளியே இருந்த பள்ளத்தில் ஊத்தி விடுவார்கள்![/size]

[size=4]அப்போது அந்த வெளியில், வழக்கமாக மேய்கின்ற மாடுகள், அங்கு வந்து குடித்து விட்டுத் தலையைத் தொங்கப் போட்டபடி நிற்பது,[/size]

[size=4]இன்றும் எனது மனத்தில், நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றது![/size]

[size=4]கள்ளில்லாத நாட்களில், அவை படும் பாடு இருக்கிறதே![/size]

[size=4]அந்த இடத்தையே இரவு பகலாகச் சுற்றியபடி இருக்கும்! :o[/size]

:o :o :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் ஐஸ் கிரீம் குடிக்கனும்னா போறது கல்யாணிக்கு அங்க ஸ்பெஷல் சூப்பரா இருக்கும் ரோல்ல்சும் நல்ல taste

..உன்னை ஆர் உங்க போக்ச்சொன்னது? தனியப்போனியா இல்லை ஆரையாவது தள்ளிக் கிள்ளிகொண்டு..? :D

Edited by சுபேஸ்

நல்லதொரு திரியை ஆரம்பித்த சுண்டலுக்கு நன்றி.

அக்காவுடனும் நண்பிகளுடனும் சேர்ந்து இலந்தப்பழம், தேக்கங்காய், மாங்காய், நெல்லிக்காய், அன்னமுன்னாப்பழம், புளியம்பழம் என பறித்து ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்ததை வாழ்வில் மறக்கமுடியாது. அதுவும் சிறுவயதில் சில மரங்களில் ஏறி இருந்து உப்பும் மிளகுடனும் நெல்லிக்காய், மாங்காய் சாப்பிட்டதும், புளியமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் முடிந்தவரை ஊன்றி ஆடி நல்ல உயரத்திற்கு சென்று புளியங்காய் பறித்து சாப்பிட்டதும்...............அந்தநாள் ஞாபகங்கள் நாமிருக்கும் வரை நம்முடன் இருக்கும்.

http://www.youtube.com/watch?v=ePhjYi9Enlc

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் சர்பத்துக்கு பெயர் போன லிங்கம் கூல் பாரை மறக்க முடியுமா?

லிங்கம் கூல்பாரில் பெட்டையளுக்கு ஜஸ்கிறீம் வாங்கிக்குடுத்தே எத்தனை பெடியங்களின்ர காசு அந்தக்கடை ஜஸ்கிறீமைப்போல கரைஞ்சிருக்கும்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழு 2003-2006 ஆம் ஆண்டு காலங்கள்...யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருந்த நேரம்....அப்பொழுது யாழ்ப்பாணத்தில் ரூமில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன்.....

மாலை நேரங்களில் யாழ்ப்பாணத்தின் மெளனங்களில் உறைந்து மனம் ஏதோ ஒரு சொல்லமுடியா ஆன்மாவின் இசையில் லயித்துக்கொண்டிருக்கும்...எங்காவது பறந்துபோகவேணும் போல் மனதில் ஒரு ஏதோ ஒரு காந்தவிசை உந்தித்தள்ள சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பன் சாயியையும் அழைத்துக்கொண்டு கிட்டுப்பூங்காவிற்குபோவதுண்டு....போகும் வழியில் நல்லூர் கோயிலின் முன்றலில் சைக்கில்போன்ற நான்கு சில்லுப்பூட்டிய வாகனத்தில் ஒருவர் சுண்டல் வித்துக்கொண்டிருப்பார்...நல்ல உறைப்பாக தேங்காய் துண்டுகள் போடப்பட்டிருக்கும் சுண்டலையும் வாங்கிக்கொண்டு கிட்டுப்பூங்காவிற்க்குபோய் அங்கிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தவாறு அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை உலகவிடயங்களை பேசியவாறு றோட்டால் போகும் பெண்களைபார்த்து கடலை போட்டவாறு(கடலை போட வசதியாக வீதிக்குப் பக்கத்தில் இருக்கும் (சின்னக் கோவிலுக்கு அருகில்) ஊஞ்சலிலேயே நாம் அமர்வது வழக்கம்) மெதுமெதுவாக இருண்டுகொண்டிருக்கும் அந்த மாலையை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்தான...

Edited by சுபேஸ்

அன்று இருக்கும் மூட்டும் துட்டும் தான் நாங்கள் எங்கே போவது என்பதை தீர்மானிக்கும் .

முதலில் ஒன்று கூடும் இடம் யாழ் பஸ் ஸ்ராண்ட் இற்கு முன்னாலுள்ள டில்கா.

பின் டியுசனோ ,படமோ ,லைபிரறியோ போய் விட்டு ஐஸ் கிரீம் என்றால் சுபாஸ் ,கோப்பியும் ரோல்ஸ்சும் என்றால் ரிக்கோ,சர்பத் என்றால் லிங்கம் கூல் பார் ,ரீ வடை என்றால் மலாயன் கபே ,புட்டும் இறைச்சியும் என்றால் மொக்கன் .

பின்னர் அது பழகிய பின் சில வேளைகளில் யாழ்ரா,கொழும்பு ரேஸ்ரோராண்ட்.அதுவும் நுவரெலியா ஸ்ரவுட் அடிக்க அந்த மாதிரி இருக்கும்

தொன்னூற்று ஐந்தின் நடுப்பகுதில் ஒரு நாள், கே.கே.எஸ் வீதியில் சுன்னாகம் சந்தியில் இருந்து மல்லாகம் பக்கமாக ஒரு நானூறு மீற்றரில் முன்னேறி வந்து நிலைகொண்டிருந்த படையினரை மறிப்பதற்காக, அய்யனார் கோவிலுக்கு பின் புறமாக நிலை கொண்டிருந்த அணியில் இருந்து, புத்தூர் கந்தரோடை வீதியில் சுன்னாகம் சந்திக்கு கிழக்கு புறமாக சிவன்கோயிலுக்கு அருகில், புகையிரத பாதையை ஒட்டி இருந்த ஒரு வீட்டின் மலசல கூடத்தின் மேற்பகுதியில் இருந்த, அரை நெல்லி மரத்துக்கு கீழே ஒரு ஐம்பது கலிபர் துவக்கிற்கு காவலுக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்தேன்.

மன்னார் ஜான் அண்ணை தான் எங்கடபக்கம் வழங்கலுக்கு பொறுப்பு, தனியார் கல்லூரிகளில் இருந்து அனுப்பபட்ட மாணவர்கள் பதுங்கு குழிகள் அமைத்து கொண்டிருந்தார்கள். மணி மூன்றை தாண்டி இருந்தது அந்த வெய்யில் கடுமையான வேலை கடும் பசி.

மணி நாலை நெருங்கும் போது தான் உணவு வந்தது. ஓடி போய் பார்த்தால், வெறும் அவிச்ச முட்டைகள் மட்டும் தான். சோத்து பாசல் மாறி எங்கேயோ போய்விட்டது.

எல்லா முட்டையையும் போட்டு குழைச்சு , ஆளுக்கு ஒரு உருண்டை முட்டை வெள்ளைகரு மஞ்சள் கரு..

இதே போல ஈவினை பகுதியில் சூரியகதிர் எதிர்ப்பு சமரில் ,ராசபாதையை ஒட்டி இருந்த ஒரு வீட்டில் சனம் விட்டுவிட்டு போயிருந்த முட்டையை உடைச்சு, தேசிக்காய் புளி விட்டு குடிச்சதையும் மறக்க முடியாது.

இன்னும் அந்த பசுமையான நினைவுகள். திரும்ப ஒரு முறை அந்த இடம் எல்லாம் போய் பார்க்க வேண்டும்.

Edited by அபிராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே உங்கள் அணுபவங்கள் சுவாரசியமாகவும் பிரமிப்பு ஊட்டுவனவாகவும் இருக்கின்றன இன்னும் பல சுவையான தாய் மண்ணைப்பற்றிய உங்கள் ஊரை பற்றிய போராட்ட காலங்களை பற்றிய உங்கள் கல்லூரி அனுபவங்களை மற்றும் திரத்தி திரத்தி சைக்கிள் லில் சைட் அடிச்ச நிகழ்வுகளை அப்போ நாய் திறத்திய நிகழ்வுகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனது ஞாபகங்கள் வித்தியாசமானவை![/size]

[size=4]வேலணை, ஊர்காவற்துறைப் பாதையில், நண்பனொருவனின் மொரிஸ் மைனர் காரில் , பழகிய காலம்.[/size]

[size=4]அந்த நாட்களில் கள்ளுத் தவறணைகளில், கள்ளு அன்றே விலைப்படா விட்டால், வெளியே ஊத்தி விட வேண்டும் என்பது விதி![/size]

[size=4]இந்தக் கள்ளை, தவறணைக்கு வெளியே இருந்த பள்ளத்தில் ஊத்தி விடுவார்கள்![/size]

[size=4]அப்போது அந்த வெளியில், வழக்கமாக மேய்கின்ற மாடுகள், அங்கு வந்து குடித்து விட்டுத் தலையைத் தொங்கப் போட்டபடி நிற்பது,[/size]

[size=4]இன்றும் எனது மனத்தில், நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றது![/size]

[size=4]கள்ளில்லாத நாட்களில், அவை படும் பாடு இருக்கிறதே![/size]

[size=4]அந்த இடத்தையே இரவு பகலாகச் சுற்றியபடி இருக்கும்! :o[/size]

வடக்கு ரோட்டில் 8ம் கட்டையடியில் ஒரு கள்ளுத்தவறனை இருக்கு எங்கட மாடுகள் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டில கள்ளு அடிச்சுப்போட்டுத்தான் பின்னேரங்களில் ஆடியபடி வீடுவரும் . அடுத்தநாள் காலையில் பாலைக்குடிச்சா கள்ளு மணம் கப்புன்னு அடிக்கும் . :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாடே அப்பிடினா அப்போ ஆக்கள்? :D

ஒரே ஆட்டம் தான் போங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

மாடே அப்பிடினா அப்போ ஆக்கள்? :D

ஒரே ஆட்டம் தான் போங்க :D

அப்ப நான் சின்னப்பையன் பால்குடி வயசு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2)

1990 காலப்பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் முக்கிய பொழுது போக்குகள் எண்டா அது கோயில் திருவிழாக்கள் தான் ஒண்டு நல்லா சைட் அடிக்கலாம் ரெண்டு வித்தியாசம் வித்தியாசமா கலர் கலர் ஆ நிறைய தின்பண்டங்கள் ஒவொரு கடைகள் போட்டு விற்பார்கள் சோ கலருண்கல (பொண்ணுங்களா) பாத்துகிட்டே கலர் கலரா வாங்கி சாப்பிடலாம் நாங்க நாச்சிமார் கோயிலடியில் சீனியர் லேனில் இருந்த பொழுது சுத்தி வர கோயில்கள் தான். கலட்டி பிள்ளையார் கலட்டி அம்மன் அப்புறம் நாச்சிமார் கோயில் சோ திருவிழாக்கள் மாறி மாறி வரும் கொஞ்சம் பெருசா நடக்க கூடிய திருவிழா எண்டா அது நாச்சிமார் கோயிலடி திருவிழா தான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்து மாறி மாறி வார இந்த மூன்று திருவிளக்கும் அம்மாட்ட காச வாங்கிட்டு நண்பர்களுடன் போவதுண்டு கொண்டு போற காசு எல்லாத்தையும் சிலவளிசிட்டு தான் வாறது சில கோயில்களில் இரவு நேர கலை நிகழ்சிகள் விடிய விடிய நடக்கும் சின்ன மணி வில்லிசை ஸ்ரீ தேவி வில்லிசை அப்புறம் ராஜன் கோஷ்டி சாந்தன் கோஷ்டி என்று இசை நிகழ்சிகள் அப்புறம் ஜெயராஜ் ஓட ஆன்மிக பேசுக்கள் ஒரு பக்கம் ஷெல் அடிச்சிட்டு இருந்தாலும் மறுபக்கம் இதெல்லாம் நடந்திட்டு தான் இருக்கும் ஒரே கும்மாளமும் கூத்துமா இருக்கும் இராணுவம் இல்லை போலீஸ் இல்லை எந்த விதமான தடைகளோ பயன்களோ இல்லை

அதுவும் திருவிழா எண்டு சொன்னா நல்லூர் திருவிழா சொல்லி வேலை இல்லாம இருக்கும் யாழ்பாணத்தில் அத்தனை ஐஸ் கிரீம் கடைகளும் அத்தனை அழகான பொண்ணுங்களும் அங்க தான் அதுவும் கோயிலை சுத்தி நிகழ்சிகள் தமிழீழம் அமைந்தால் எப்பிடியான கட்டமைப்பை கொண்டு இருக்கும் என்ற இயக்கத்தின் கண்காட்சிகள் தமிழ் ஈழ காவல்துறையின் நேர்த்தியான பாதுகாப்பு ஒழுங்குகள் எண்டு அமர்க்களமாய் இருக்கும்

கொண்டு போற காசை எல்லாம் ஒவொரு ஐஸ் கிரீம் கடைக்கும் போய் செலவளிசிட்டு தான் வாறது

உங்கள் ஊர் கோயில் திருவிலகளையும் அங்கு நீங்கள் பண்ணின அட்டகாசத்தையும் எழுதுங்களன்

  • கருத்துக்கள உறவுகள்

2)

1990 காலப்பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் முக்கிய பொழுது போக்குகள் எண்டா அது கோயில் திருவிழாக்கள் தான் ஒண்டு நல்லா சைட் அடிக்கலாம் ரெண்டு வித்தியாசம் வித்தியாசமா கலர் கலர் ஆ நிறைய தின்பண்டங்கள் ஒவொரு கடைகள் போட்டு விற்பார்கள் சோ கலருண்கல (பொண்ணுங்களா) பாத்துகிட்டே கலர் கலரா வாங்கி சாப்பிடலாம் நாங்க நாச்சிமார் கோயிலடியில் சீனியர் லேனில் இருந்த பொழுது சுத்தி வர கோயில்கள் தான். கலட்டி பிள்ளையார் கலட்டி அம்மன் அப்புறம் நாச்சிமார் கோயில் சோ திருவிழாக்கள் மாறி மாறி வரும் கொஞ்சம் பெருசா நடக்க கூடிய திருவிழா எண்டா அது நாச்சிமார் கோயிலடி திருவிழா தான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்து மாறி மாறி வார இந்த மூன்று திருவிளக்கும் அம்மாட்ட காச வாங்கிட்டு நண்பர்களுடன் போவதுண்டு கொண்டு போற காசு எல்லாத்தையும் சிலவளிசிட்டு தான் வாறது சில கோயில்களில் இரவு நேர கலை நிகழ்சிகள் விடிய விடிய நடக்கும் சின்ன மணி வில்லிசை ஸ்ரீ தேவி வில்லிசை அப்புறம் ராஜன் கோஷ்டி சாந்தன் கோஷ்டி என்று இசை நிகழ்சிகள் அப்புறம் ஜெயராஜ் ஓட ஆன்மிக பேசுக்கள் ஒரு பக்கம் ஷெல் அடிச்சிட்டு இருந்தாலும் மறுபக்கம் இதெல்லாம் நடந்திட்டு தான் இருக்கும் ஒரே கும்மாளமும் கூத்துமா இருக்கும் இராணுவம் இல்லை போலீஸ் இல்லை எந்த விதமான தடைகளோ பயன்களோ இல்லை

அதுவும் திருவிழா எண்டு சொன்னா நல்லூர் திருவிழா சொல்லி வேலை இல்லாம இருக்கும் யாழ்பாணத்தில் அத்தனை ஐஸ் கிரீம் கடைகளும் அத்தனை அழகான பொண்ணுங்களும் அங்க தான் அதுவும் கோயிலை சுத்தி நிகழ்சிகள் தமிழீழம் அமைந்தால் எப்பிடியான கட்டமைப்பை கொண்டு இருக்கும் என்ற இயக்கத்தின் கண்காட்சிகள் தமிழ் ஈழ காவல்துறையின் நேர்த்தியான பாதுகாப்பு ஒழுங்குகள் எண்டு அமர்க்களமாய் இருக்

கொண்டு போற காசை எல்லாம் ஒவொரு ஐஸ் கிரீம் கடைக்கும் போய் செலவளிசிட்டு தான் வாறது

உங்கள் ஊர் கோயில் திருவிலகளையும் அங்கு நீங்கள் பண்ணின அட்டகாசத்தையும் எழுதுங்களன்

ஆமா எத்தன வயசுல

Edited by நந்தன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 to 12 :D

  • கருத்துக்கள உறவுகள்

10 to 12 :D

அடப்பாவி பிஞ்சில பழுத்ததுகள் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி அண்ணாக்கள் செய்யிற கூத்துகள தான் பாக்கிறது பக்கத்து வீடு அக்கா மாருக்கு body guarda எங்கள தானே அனுப்புறது :D

சோ அண்ணா மார் எங்கள கவனிச்சிட்டு தான் அங்கால போகலாம் ஒரு ஐஸ் கிரீம் இல்லை ஒரு பழம் ஏதாச்சும் இலஞ்சமா கொடுக்கணும் :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இருக்கும் மூட்டும் துட்டும் தான் நாங்கள் எங்கே போவது என்பதை தீர்மானிக்கும் .

முதலில் ஒன்று கூடும் இடம் யாழ் பஸ் ஸ்ராண்ட் இற்கு முன்னாலுள்ள டில்கா.

பின் டியுசனோ ,படமோ ,லைபிரறியோ போய் விட்டு ஐஸ் கிரீம் என்றால் சுபாஸ் ,கோப்பியும் ரோல்ஸ்சும் என்றால் ரிக்கோ,சர்பத் என்றால் லிங்கம் கூல் பார் ,ரீ வடை என்றால் மலாயன் கபே ,புட்டும் இறைச்சியும் என்றால் மொக்கன் .

பின்னர் அது பழகிய பின் சில வேளைகளில் யாழ்ரா,கொழும்பு ரேஸ்ரோராண்ட்.அதுவும் நுவரெலியா ஸ்ரவுட் அடிக்க அந்த மாதிரி இருக்கும்

அர்ஜுன், நீங்கள் சுண்டுக்குளிப் பக்கம்,' புளு ரிப்பன் ' என்று ஒரு ஹோட்டல் மாதிரி ஒண்டு இருந்தது!

அங்க, நீங்க அடிச்சிருக்கோணும் , அந்த நுவரெலியா ஸ்ரவுட்டை!

ம்! .....அரைவாசி வாழ்க்கையை, நீங்க தொலைச்சிட்ட மாதிரி, நினைச்சுக் கொள்ளுங்கோவன்! :D

புங்கை ,

நான் அங்கும் இரண்டு மூன்று தடவைகள் போயிருக்கின்றேன்.அதன் உரிமையாளர் எம்முடன் படித்த சுரேனின் தந்தையார் . நோர்தேன் ஸ்போட்ஸ் கிளப் முதன் முதன் வைத்த பதினைந்து ஓவர்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் நான் விளையாடிய கல்வியங்காடு இறுதிப்போட்டியில் அரியாலையிடம் தோற்றது .மாட்ச் முடிய இரு டீமிற்கும் பாட்டி அங்கேதான் நடந்தது .

மிக பிரபல விளையாட்டு வீரர்கள் பலர் அரியாலைக்கு விளையாடினார்கள் .அரை இறுதி யாழ் கோட்டைக்கும் ரீகல் தியேட்டருக்கும் இடையில் இருக்கும் வெளியில் நடந்தது .

அது ஒரு நிலாக்காலம் .கனாக்காலம் etc.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.