Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுபெர்ப் சுபெர்ப் :D

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4] நன்றாக உள்ளது [/size]

  • தொடங்கியவர்

ஒரு சுற்றுலாவுக்கு கூட்டிப்போன மாதிரியான அனுபவம் தந்த பயணக்கதை அருமை. .

ஃபிறீயா இடம் பாக்க நிக்கிறியள்........... :lol: :lol: :D :D மிக்க நன்றி நிலாமதி அக்கா .

[size=5]வடிவான இடங்கள்! ஒருக்கா [/size][size=5]ஐரோப்பா முழுக்கச் சுற்றிப் பார்க்க வேண்டும்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வடிவான இடங்கள்! ஒருக்கா [/size][size=5]ஐரோப்பா முழுக்கச் சுற்றிப் பார்க்க வேண்டும்[/size]

வரும்போது சொல்லிட்டு வாங்கோ என்ரை ரொயொட்டா 4 x4 உங்களுக்கு முன்னாலை பிறேக் அடிக்கும் :lol:

வரும்போது சொல்லிட்டு வாங்கோ என்ரை ரொயொட்டா 4 x4 உங்களுக்கு முன்னாலை பிறேக் அடிக்கும் :lol:

அப்ப வாகனம் வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை. சாத்துக்குச் சாத்திவிட்டு ................

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வாகனம் வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை. சாத்துக்குச் சாத்திவிட்டு ................

:lol: :lol:

கனபேருக்கு சாத்துக்கு சாத்த ஆசை ஆனா என்ன செய்ய அது நிராசை அது உங்களுக்குமா? சாத்து வாங்குவதற்காக ஏங்கி நிற்கும் சாத்திரி :)

கனபேருக்கு சாத்துக்கு சாத்த ஆசை ஆனா என்ன செய்ய அது நிராசை அது உங்களுக்குமா? சாத்து வாங்குவதற்காக ஏங்கி நிற்கும் சாத்திரி :)

:D

  • தொடங்கியவர்

முன் பக்கம் பின் பக்கம் எல்லாம் அக்கு வேறு ஆனி வேறாக காட்டிய கோவுக்கு கோடி நன்றிகள். :)

பகிடி ஒண்டும் விடேலைத்தானே சஜீவன் :lol: ? மேல்பக்கம் கீழ்பக்கம் எல்லாம் சுழட்டி காட்டினால்தான் எனக்கும் பத்தியப்படுகிது :D . பிள்ளையளும் குஷியாகிறாங்கள் :lol: (படங்களைச் சொன்னான்) நன்றி உங்கடை கருத்துக்கும் நேரத்துக்கும் :) .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயணக் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது கோமகன் . இன்றுதான் வாசித்தேன். சாத்தற்றை பாடிகாட் நாய்க்குட்டியாக இருக்குமெண்டு நினைச்சுக்கொண்டு மேலே வாசித்தால் அது பூனயாகிப்போச்சு. கைதேர்ந்த எழுத்து. யாழில் எழுத்து எல்லோரினது ஆக்கங்களையும் வாசிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படத்தான் முடிகிறது.

  • தொடங்கியவர்

இன்னும் இன்னும் ஆவலைத்தூண்டுது கோமகன் அண்ணா.

தொடர்ந்து படிக்க காத்த்இருக்கிறோம்.

காத்திருப்பு நீடிக்காது :lol: :lol: . வருகைக்கு நன்றிகள் ஜீவா .

சுபெர்ப் சுபெர்ப் :D

அப்பிடியெண்டால் :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் சுவிஸ் படியில இருக்கிறதெண்டு நாலு பேற்ற படம் போட்டிருக்கிறியள்தானே. கண்ணாடியோட இருக்கிற இரண்டுபேரும் தமிழ் சினிமாவில வார வில்லன்கள் மாதிரி இருக்கினம். நீங்களும் அதில இருக்கிறியளோ. மற்றவையும் ஆரெண்டு எங்களுக்கும் சொல்லுங்கோவன். :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்

கோமகன் சுவிஸ் படியில இருக்கிறதெண்டு நாலு பேற்ற படம் போட்டிருக்கிறியள்தானே. கண்ணாடியோட இருக்கிற இரண்டுபேரும் தமிழ் சினிமாவில வார வில்லன்கள் மாதிரி இருக்கினம். நீங்களும் அதில இருக்கிறியளோ. மற்றவையும் ஆரெண்டு எங்களுக்கும் சொல்லுங்கோவன். :D

ஐய்யோ........ அபச்சாரம் .. அபச்சாரம்.. அவாள் ஒரு பேப்பர் காறாள் :o :o . வில்லன்கள் எண்டு சொல்லாதேள் :unsure::D அடிப்பள் :lol: . வலமிருந்து இடமாக சாத்திரி , சபேசன் , ரவி அருணாச்சலம் சயந்தன் :D :D :icon_idea: .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சாத்திரி வேற ஆற்றயோ படத்தையோ முகப்புப் படமாப் போட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சாத்திரி வேற ஆற்றயோ படத்தையோ முகப்புப் படமாப் போட்டிருக்கிறார்.

என்னுடைய படம்தான்.

ஐய்யோ........ அபச்சாரம் .. அபச்சாரம்.. அவாள் ஒரு பேப்பர் காறாள் :o :o . வில்லன்கள் எண்டு சொல்லாதேள் :unsure::D அடிப்பள் :lol: . வலமிருந்து இடமாக சாத்திரி , சபேசன் , ரவி அருணாச்சலம் சயந்தன் :D :D :icon_idea: .

ஒரு பேப்பரில் தான் "வில்லத்தனம்" காட்டுகின்றார்கள் என்றால் நேரிலும் அப்படித்தானா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இவயின்ர வில்லத்தனமெல்லாம் ஒருபேப்பரில மட்டும்தான்.

  • தொடங்கியவர்

இவயின்ர வில்லத்தனமெல்லாம் ஒருபேப்பரில மட்டும்தான்.

அவை வில்லங்க( ங் ) ளோ எண்டு தெரிஞ்சு நீங்கள் என்ன செய்யப் போறியள் சுமே ?? அதோடை அவையின்ரை அனுமதி இல்லாமல் தான் நான் அவையை உங்களுக்கு அடையாளம் காட்டின்னான் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் பகிடிக்குத்தான் எழுத்தினனான் கோமகன். குறை விளங்காதைங்கோ. :D

  • தொடங்கியவர்

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களினால் தென்கிழக்கு சீமை இந்தக்கிழமை வருவதற்கு தாமதமாகின்றது . வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் . சீமை வழமைபோல் வருகின்ற கிழமையளவில் வெளிவரும் .

  • தொடங்கியவர்

சயந்தனைப்பற்றி எனக்கொரு கற்பனையுரு ஒன்று இருந்தது . அவரது எழுத்துக்களை வைத்து கற்பனை வைத்திருந்தேன் . எனது வயதையொத்த நெடுநெடுவென்ற உயரத்தையும் முகத்தில் தாடியும் கண்ணாடியுமே கொண்டதே அந்த உருவம் . நான் நேரில் பார்த்தபொழுது வயதில் சிறியவராகவும் , ஏகத்துக்கு வெக்கப்படுபவராகவும் இருந்தார் . என்னைக் கண்டவுடன் தனது கடிதத்திற்கு நான் பதில் போடாததிற்கு என்னைக்கடிந்து கொண்டார் . நான் நிலமைகளைச் சொன்னேன் . நாங்கள் அவரது குடும்பத்தை அவர் நிற்கப்போகும் நூவோத்தெல் ( Hotel Novotel ) ஹொட்டேலுக்குக் கூட்டிச்சென்றோம் . நான் அவரின்மேல் வைத்த மரியாதை நிமித்தம் நான் வேலை செய்யும் அக்கோர் ( Accor ) குழுமத்தின் இரண்டாம்படி நிலையிலுள்ள ஹொட்டலேயே அவருக்கு முற்பதிவு செய்திருந்தேன் . நாங்கள் அங்கு சென்றபொழுது அங்கிருந்த வரவேற்பாழினி என்னுடன் நட்புணர்வுடன் கதைத்ததைப் பார்த்த சாத்தர் தனது தொலைபேசி இலக்கத்தை அந்த வரவேற்பாழினிக்கு கொடுத்து விட்டு வந்தார் . நானும் சாத்தரும் அவர்கள் உடை மாற்றி வரும்வரை ஹொட்டேல் வரவேற்பு கூடத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம் . சிறிது நேரங்கழித்து சயந்தன் குடும்பம் கீழே இறங்கி வந்தார்கள் . நாங்கள் எல்லோரும் சாத்தரின் வீட்டிற்குப் போனோம் . சாத்தரின் வீடு புச்சியின் வருகையால் கலகலப்பானது . நாங்கள் மூவரும் கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டோம் . சாத்தர் ஒரு பையினுள் சீரகத்தண்ணிப் போத்தல் , கலவைக்கு பச்சைத் தண்ணிப் போத்தல் , நொறுக்க பருத்தித்துறைவடை என்று எல்லாவற்றையும் கர்மசிரத்தையாகச் சேகரித்தார் .

மேகத்துக்கும் மேகத்துக்கும் நடந்த கடும் மோதலில் மேகம் இடியென அபயக்குரல் எழுப்பி அந்த மாலைப்பொழுது இருள்மண்டி ரணகளமாகியிருந்தது . சாத்தர் நான் சயந்தன் றோட்டில் இறங்கி நடந்து கடற்கரையை அண்மித்து விட்டிருந்தோம் . தூரத்தே பயணிகள் கப்பலொன்று வண்ண விளக்குகளுடன் சென்றுகொண்டிருந்தது . காற்று சூறாவளியைப்போல் அடித்ததால் கடல் அலைகள் உரப்பாகவே கரையைத் துவட்டி எடுத்துக் கொண்டிருந்தன . எமது மனமோ கடல் அலைக்கு எதிரானதாகவே இருந்தது .

turtle01_t607.JPG

தூரத்தே பூரணை நிலவு கடலுக்கால் எழுந்து வந்து கடலையும் எங்களையும் ஒருவித மயக்க நிலைக்கு கொண்டு வந்தது கொண்டிருந்தது . நாங்கள் கடற்கரையை அண்மித்தபொழுது மக்கள் இரவையும் கடலையும் அவரவர் போக்கில் ரசித்துக் கொண்டிருந்தார்கள் . சயந்தன் ஆசைக்கு கடல் அலை காலில் பட அதை ரசித்துக் கொண்டிருந்தார் . நான் போன உடனேயே சரளைக் கற்களில் மல்லாந்து படுத்துக்கொண்டே வானத்தையும் முழு நிலவையும் ரசித்துக் கொண்டிருந்தேன் . சாத்தரோ காரியத்தில் கண்ணாக சீரகத்தண்ணி குடுவையைத் திறந்து பிளாஸ்ரிக் கப்பில் வார்த்து சயந்தனுக்கும் தனக்குமாக எடுத்துக்கொண்டார் . பருத்தித்துறை வடையைக் கொறித்துக்கொண்டே பேச்சு இலக்கியப்பக்கம் திரும்பியது . இரண்டாம் மூன்றாம் உலகத்தை சயந்தனும் சாத்தரும் சீரகத்தண்ணி உதவியுடன் சிக்கெடுத்துக் கொண்டிருந்த பொழுது , இலக்கியத்தில் எனது நிலை உணர்ந்து அவர்களைப் பேச விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன் . அவர்கள் போரியல் இலக்கியத்தில் கருப்பு வெள்ளை சாம்பல் என்றெல்லாம் தாவிக்கொண்டிருந்தார்கள் . சயந்தன் எனது நெருடிய நெருஞ்சியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார் . எனக்கு அவர்களது கடற்கரை சந்திப்பும் இலக்கியப் பாய்சலும் பல சிந்தனைகளைத் தூண்டியிருந்தன . சயந்தன் பேசப்பழக வெக்கறைப்பட்டவராகத் தெரிந்தாலும் ,விவாதங்கள் என்று வரும்பொழுது ஒரு வேறுபட்ட ஆழுமையையே அவரிடம் நான் கண்டேன் . சாத்தரைப்பற்றி நான் வேறு ஒரு இடத்தில் சொல்கின்றேன்.

20110807223036__gg_9314.jpg

சிறிது நேரத்திலேயே வெக்கைக்கும் மேகத்திற்கும் நடந்த காதலால் மழை என்ற பிள்ளை இடிமின்னலுடன் எட்டிப்பார்த்து மழை வேகமாகப் பூமியைத் தாக்கியது . வந்த இடியில் கடற்கரைக்கான மின்சாரம் இல்லாது போனது . மக்கள் எல்லாரும் கலைந்து துடைத்து விட்டால் போல எங்கள் மூவருடன் கடற்கரை இருந்தது . நாங்கள் மழையை ஆனந்தமாகக் கையை அகல விரித்து அனுபவித்தோம் . தொடர்ந்து பெய்த மழையால் மூவரும் நன்றாகவே நனைந்து விட்டோம் . மழையில் நனைவதை தடுக்க கடற்கரையில் இருந்த செக்போஸ்ற்ரின் அடியில் போய் நின்று கொண்டோம் . காற்று நன்றாகவே சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது . கடல் எங்கும் இருள் மண்டிப் இருந்தது . காற்றின் வேகத்தில் அலைகள் பொங்கிப் பாய்ந்தன . சிறிதுநேரத்தால் காற்றின் வேகத்தால் கடல் உள்வாங்கியது . எனக்கு சுனாமி வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது . முதன்முறையாக கடல் உள்வாங்கியதால் சீரத்தண்ணி தந்த சீரான மிதப்பில் சாத்தர் கரைக்கு கிட்டப் போய் நின்று பார்த்தார் . நான் இருவரையும் இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன் . நாங்கள் வீட்டிற்கு வரும்பொழுது நின்ற கறண்ட் திரும்பவும் வந்தது . எங்களுக்கு மூன்று அடுப்படியும் தும்புக்கட்டையால் அடிக்காத குறையாக நின்றார்கள் . சாத்தர் மெதுவாக உறுதியாக கடல் உள்வாங்கிய கதையை விபரித்தார் . நாங்கள் சாப்பிட்டு விட்டு மறுநாள் கான்ஸ் நகருக்கு செல்லும் திட்டத்துடன் நாங்கள் தங்கியிருந்த கொட்டலுக்குச் சென்றோம்.

Cannes_France.jpg

உலகத்திரைப் பிரபலங்களின் கனவு நகரம் கான்ஸ் (Cannes ) .வருடம்தோறும் நடைபெறும் சர்வதேசதிரைப்படவிழவில் அதி உயர் விருதான தங்க பனை விருதை ( Palme d’or ) எடுக்கமாட்டோமா என்று ஏங்கியபடி வருவோர் இங்கு ஏராளம் . ஆனாலும் , கான்ஸ் நகரம் நீஸ் நகரைப்போன்றே சரித்திரப்புகழ் வாய்ந்த துறைமுகப் பட்டணமாகும் . கி மு 2ம் நூற்றாண்டளவில் லிகுறியன் ஒக்ஸ்சிவி ( Ligurain Oxybii ) என்பவரால் அஜிற்னா (Aegitna ) என்ற பெயரில் மீன்பிடி கிராமமாக இந்த நகரை நிர்மாணித்தார் . பின்பு 10ம் நூற்றாண்டளவில் கனுவா ( Canua ) என்ற பெயரில் இந்த நகர் அழைக்கப்பட்டு , இப்பொழுது கான்ஸ் ( Cannes ) என்று அழைக்கப்படுகின்றது . 18 ம் நூற்றாண்டளவில் ஸ்பெயின் பிருத்தானியா இந்த நகரைக் கைப்பற்றப் போட்டி போட்டாலும் இறுதியில் பிரான்ஸ்சே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது .

சாத்தர் விடியப்பறம் 7 மணிக்கே கொட்டலடிக்கு வந்திட்டார் . இந்தமுறை ஒரு கெத்தா தன்ரை பொடிக்கார்ட்டையும் கூட்டிக்கொண்டு வந்தார் . அவர் நான் இருக்கிற முன் சீற்றில இருந்து கொண்டு வெளியில விடுப்பு பாத்தார் . நான் கடுப்படிச்சு இதாலை பின்பகம் ஏறவேண்டியதாய் போச்சுது . நாங்கள் ஒரு அரை மணித்தியாலத்தில கான்ஸ் நகருக்குள்ளை போட்டம் . சாத்தர் சினிமா கீரோ கணக்காய் கையில பொடிக்கார்ட்டோட இறங்க சனம் வித்தியாசமாய் பாத்தீச்சுதுகள் . நாங்கள் புறமனாட் டு லா குவாஸ்ஸற் Promenade de la Croisette ஆல நடந்தம் . ஒவ்வருமுறையும் ரீவியால திரைப்படவிழவையும் வாற நடிக நடிகையளுக்கு சனங்கள் அழுது குளறி லூசு வேலைள் செய்யிறதை பாத்த எனக்கு , இப்ப நேரை போய் நிக்க ஒரு திறில்லிங்காய் தான் இருந்தீச்சுது . நாங்கள் நடந்து கொண்டு போக திரைப்படவிழ நடக்கிற தியேட்டர் இருந்தீச்சுது . சனமெல்லாம் அதில நிண்டு விழுந்தடிச்சு படம் எடுத்தீச்சினம் . நாங்கள் மூண்டுபேரும் படம் எடுத்தம் . அப்பிடியே தியேட்டருக்கு பின்னாலை கடற்கரை இருந்திது . நான் ஓடிப்போய் ஏதாவது மச்சகன்னிகை மாட்டுபடுதா எண்டு பாத்தன் . சாத்தர் முன்னால இருக்கிற கார்ல்ற்றன் கொட்டலைக் ( Intercontinental Carlton Hotel ) காட்டி இங்கைதான் எல்லா நடிகர் நடிகையள் எல்லாம் வந்து நிக்கிறவை எண்டு சொன்னார் . நாங்கள் மத்தியானம் வரை அங்கை நிண்டு சுத்திப்போட்டு , எங்களை தான் ஒரு சூப்பர் கோட்டை ஒண்டு காட்டிறன் எண்டு சாத்தர் கூட்டிக்கொண்டு போனார் .

கான்ஸ் கசினோ

nicevisit2012241.jpg

சர்வதேச திரைப்படவிழா நடைபெறும் தியேட்டர்

nicevisit2012247.jpg

மாட்டின மச்சகன்னிகைகள்

nicevisit2012250.jpg

கான்ஸ் நகரின் அழகிய தோற்றம்

800px-Cannes-panorama-2009.jpg

புறமனாட் டு லா குவாஸ்ஸற்

640px-Cannes_promenade.jpg

கால்ற்றன் கொட்டேல்

640px-Cannes_-_hotel_CARLTON.jpg

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை உங்கள் எழுத்தில் துள்ளல் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோ

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அருமையாகப் போகின்றது, கோமகன்!

அழகைப் படைத்த ஆண்டவனில் எந்தக் குற்றமும் இல்லை!

அதைப் பகிர்ந்து கொள்ளும், மனித இனம் தான், அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் செய்து கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கோ அண்ணா அப்பிடியே நேர கொண்டு போறீங்கள் வாசிக்கிறவைய........வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.