Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணங்கள் முடிவதில்லை :)

Featured Replies

//அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்//

அருமையான சுவாரசியமான பதிவு ..............நன்றிகள் அக்கா

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

  • Replies 187
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்.

பொன்னிறத் திரவத்துக்கும் உங்களுக்கும் ஆகாதா அம்மணி :):rolleyes:

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

எனக்கு மது, வைன் இவைகளைப் பற்றித் தெரியாது. நாம் குடிப்பதில்லை. தமிழ் உங்கள் மனைவி விரும்பாவிட்டால் அப்படியே விடுங்கள்.

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நன்றாகப் போகின்றது, வல்வை!

335929.jpg

இந்தப் படம், நீங்கள் எடுத்ததா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், இது சாதாரணமாக, 'Point & Shoot' முறையில் எடுத்த படம் மாதிரி தெரியவில்லை!

நீங்கள் எடுத்திருந்தால், சகல கலா .............!!!

எனக்கு மது, வைன் இவைகளைப் பற்றித் தெரியாது. நாம் குடிப்பதில்லை. தமிழ் உங்கள் மனைவி விரும்பாவிட்டால் அப்படியே விடுங்கள்.

நன்றி அலை முயற்சிக்கிறேன்

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

உங்களுக்கு வீட்டில் இருந்தால் மட்டுந்தானா...!!! :D அலை

Edited by எல்லாள மகாராஜா

"சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை "

ஒரு வார்த்தை விட்டுப்போய் விட்டதென்று நினைக்கின்றேன்...

40 வயதிற்கு மேற்பட்ட 40 வரையான பயணிகளுடன் 45 நிமிடப் பயணம் :D :D

'அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன்."

அப்போ தூக்கமில்லா ராத்திரி நம்பர் வண் :lol:

Edited by எல்லாள மகாராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு சகாரா தொடருங்கள்!! சகாரா தம்பதியினருக்கு trip போனால் தான் [size=4]Romantic Mood[/size] வரும் போலை :lol:

இல்லையே மற்றைய நேரத்திலும் வரும். தனிமை, நெருக்கம், சலனமற்ற பொழுதில்..ச்சீ... போங்க அலை வெட்கமாக இருக்கிறது :wub:

வண்ணக் கலலை

சேர்ந்த வானும்,

பௌர்ணமி நிலவும்

மனதை கொள்ளை

அடிக்கிறது...

பிடிச்சிருக்கா உங்களைப்போல ஆட்களை வசைக்கத்தானே அந்தப்படத்தை இணைத்தேன். :rolleyes:

எனக்கு அடிக்கடி யாழுக்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை.

கிட்டடியில் தான் நினைத்தேன் சகாரா அக்காவின் பதிவுகள் ஒன்றையும் கிட்டடியில் காணவில்லையே என்று. இதோ - போட்டுவிட்டீர்கள்.

சரி - சிவாஜி, கே.ஆர். விஜயா ஸ்டைலில் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாட்டுப் பாடுங்கள். :lol:

ஈசு இது சதிதானே இப்படியெல்லாம் வெளிப்படையாக என்னுடைய வயதைச் சொல்லி ரசிகர்களை விரட்டி விட்டீர்களே. நான் கட்டிக்காக்கும் மிகப் பெரிய ரகசியமே இதுதானே.... நீங்கள் இங்கு இப்படி பதிவிட்டிருக்கிறீர்கள் எனக்கு முகநூலில் இந்தப்பாட்டையே அனுப்பிட்டாங்க.... :(

கொஞ்சம் தான் வாசித்தேன். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் வாசிப்பேன். :)

நீங்கள் நிலுவையில் நில்லுங்கள் இதற்கு திருட்டிப்பரிகாரம் செய்யத்தேவையில்லை :lol:

//அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன்//

அருமையான சுவாரசியமான பதிவு ..............நன்றிகள் அக்கா

உண்மையில் விடுமுறைக்கு சென்றால் மது ரசத்தை குடிப்பதில் என்றுமே இல்லாத ஓர் ஆனந்தம் .............இது என் துணைவிக்கும் ஏன்தானோ புரியவில்லை என்ற சிறு ஆதங்கமும் ,சிறு கோபமும் எனக்கும் வருவதுண்டு............

தமிழ் சூரியன் பல வீடுகளில் ஆண்களுக்கு ஆனந்தம் பெண்களுக்குச் சித்ரவதை. முடிந்தவரைக்கும் மதுவை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து வாசியுங்கள். வாசித்து கெட்டுப்போகாதீர்கள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னிறத் திரவத்துக்கும் உங்களுக்கும் ஆகாதா அம்மணி :):rolleyes:

பிடிக்காது கறுப்பி ஆனால் சகிக்கப்பழகிவிட்டேன். என்ன யாழில் பம்பலாகக் கதைப்பதற்கு மதுவகைகளைப்பற்றி பேசுவேன்.

தொடர் நன்றாகப் போகின்றது, வல்வை!

335929.jpg

இந்தப் படம், நீங்கள் எடுத்ததா?

இதை ஏன் கேட்கிறேன் என்றால், இது சாதாரணமாக, 'Point & Shoot' முறையில் எடுத்த படம் மாதிரி தெரியவில்லை!

நீங்கள் எடுத்திருந்தால், சகல கலா .............!!!

நாமா அட போங்க ரோமியோ அந்த இடத்தில் நான் அனுபவித்த அந்தக்காட்சியை வாசிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வருவதற்காக தேடலில் ஈடுபட்டபோது மாட்டியது. பிடிச்சிருந்தது அப்படியே இங்கே இணைத்துவிட்டேன். ரோமியோ நான் சகல கலா வல்லிதான் என்ன எல்லாம் தெரியும் ஆனா தெரியாது :lol:

"சுமார் 40ற்கு மேற்பட்ட பயணிகளுடன் கிட்டத்தட்ட 45 நிமிடப்பயணிப்புக்கு பின்னர் நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை "

ஒரு வார்த்தை விட்டுப்போய் விட்டதென்று நினைக்கின்றேன்...

40 வயதிற்கு மேற்பட்ட 40 வரையான பயணிகளுடன் 45 நிமிடப் பயணம் :D :D

'அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன்."

அப்போ தூக்கமில்லா ராத்திரி நம்பர் வண் :lol:

எல்லாளன் நான் நினைக்கிறேன் நீங்கள் சென்ற சுற்றுலாவில் இந்த வயதிற்கு மேற்பட்ட சனந்தான் வந்திருகுப்போல

நன்றாகத் தூங்கிய இரவு நம்பர் 1 ஏனென்றால் நான் நின்ற இடத்திலிருந்து யாழைப்பார்த்து பிரசர் கூடேல்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 5[/size]

அடுத்த நாட்காலை விரைவாகவே புலர்ந்தது. இதமான மென்குளிர், கதகதப்பான அணைப்பு சாளரத்திற்கு வெளியே பறவைகளின் ஒலி, எங்கேயோ தூரத்தில் அலையின் இரைச்சல் மனித இரைச்சலற்ற அந்த அதிகாலையில் ரசித்தபடி கண்களை மூடி அனுபவிப்பதில் இருக்கும் திருப்தி.

ரசித்துக் கொண்டு கண்மூடி சாய்ந்திருந்த என்னை துணைவர் உலுப்பி எழுப்பினார் நேரமாகிவிட்டது விடுதியின் முன் முகப்பில் பயணிகளுக்கான தகவல் பொதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று துரிதப்படுத்தினார். நான் சோம்பல் முறித்து எழுமுன் பிள்ளைகள் எழுந்து முகங்கழுவ முற்பட்டு நான் முதல், நீ முதல் என்று பிரச்சனைப்பட ஆரம்பித்துவிட்டனர். ஆகா வீட்டில் பாடசாலைக்கு அனுப்ப நான் எத்தனைதரம் இவர்களைக் கூவி அழைப்பேன் அருகில் சென்று தலையை வருடி எழுப்புவேன் அவர்களும் என்னுடைய தடவலுக்காகச் சுருண்டு சுருண்டு படுப்பார்கள் இங்கு எல்லாம் எதிராக நடக்கிறதே என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இருவரின் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன். உற்சாகமும் குதூகலமும் அவர்களை ஆட்கொண்டிருந்தன. சாதாரண நாட்களில் அதிகாலையில் நான் எழுந்து அவர்களுக்கு உணவு தயாரித்து விட்டு அவர்களை நித்திரையால் எழுப்பி பாடசாலைக்குத் தயார்படுத்தி காலை உணவை அவர்கள் கைகளில் திணித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவேன். எனது அருகாமை குறைந்த நாட்களில் அவர்களின் காலை உணவு நான் மாலையில் வேலையால் வரும்போது உணவுமேசையில் அப்படியே தேடுவாரற்றுக்கிடக்கும். அப்பா நான் வேலைக்குப்போன பிற்பாடு கவனித்து பாடசாலை பேரூந்தில் ஏற்றிவிட்டு தானும் வேலைக்குச் சென்று விடுவார். இதுதான் எங்களின் நாளாந்த வாழ்வு. இந்த வாழ்விலிருந்து இந்தப்பயணநாட்கள் வேறுபட்டிருந்தன. அதுவே பிள்ளைகளுக்கான பெரும் உற்சாகத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.

காலை உணவை அருந்திவிட்டு முகப்பு விடுதிக்குச் செல்லலாம் என்ற முடிவுடன் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம். அங்கு பாண், முட்டை,வேக்கொன், சீரியல், பழங்கள், கேக் வகை என்று பல்வேறு உணவுகள் இருந்தன. பிடித்தமான உணவாக உண்டுவிட்டு, விடுதியின் முகப்புக்கு விரைந்தோம். நாங்கள் இருந்த இடத்திற்கும் முகப்புக்குமான தூரத்தைக்கடக்க எங்களுக்கு ஒரு சிறிய தொடர் இருக்கைகளைக் கொண்ட ஊர்தி உதவியது.

137645.jpg?lang=fr

எங்களுக்கு முன்பாகவே வேறு பலரும் அங்கு வந்து காத்திருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் வெவ்வேறு விமான சேவைகளின் மூலம் வந்திருந்த பலர் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர். இன்னொரு பக்கத்தால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தார்கள். ஒவ்வொரு விமானசேவைக்கும் ஒவ்வொரு நபர் விமானத்தின் பெயர் பதிந்த அட்டையுடன் வந்து அந்தந்த விமானத்தில் வந்தவர்களை தம்முடன் வரும்படி அழைத்தார்கள். நாங்கள் பயணித்த சன்விங் விமானத்தின் பெயருடனும் ஒருவர் வந்து அழைத்தார். நாங்கள் எல்லோரும் அவர்பின்னே சென்றோம்.

Facebook_Avatar2_reasonably_small.jpg

ஒரு மண்டபத்தில் எங்களுக்கு இருக்கைகள் தரப்பட்டு புன்ரக்கானாவில் நாம் தரித்து நிற்கும் இடத்திலிருந்து சென்று பார்க்க்க்கூடிய தளங்களையும், கிடைத்தற்கரிய அனுபவங்களையும் பெறக்கூடிய நிகழ்வுகளையும் எது எது எங்கிருக்கிறது என்று விளங்கப்படுத்தினார். ஒரு வர்ணக்கையேட்டில் அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தன. அத்தோடு சலுகைச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன. அநேகமாக பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சலுகைச் சீட்டுக்களை வழங்கிப் பெரியவர்களுக்கு செலவு வைக்கும் வியாபாரம் கச்சிதமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. கையேட்டில் உள்ளவற்றைப்பார்க்கும்போது விழிகள் வியப்பில் ஆழ்ந்தன. இனி இந்தக்கையேட்டில் உள்ள இடங்களுக்குச் செல்லவேண்டுமாயின் சன்விங் என்று குறிப்பிட்ட ஒரு மேசைக்கு சென்று பதியச் சொல்லிவிட்டு எங்களுக்குத் தகவல் தந்தவர் விடைபெற்றுக் கொண்டார். இனி எங்கள் முறை நாம் எங்கு எங்கு செல்வதென்று பதிவு செய்யவேண்டும் பதிவு செய்தால்’ மாத்திரமே அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும். இப்படி ஒவ்வொரு விமான சேவையும் த்த்தமக்கென்று ஒரு பதிவிடத்தை அந்த மண்டபத்தில் உருவாக்கி இருந்தனர். துணைவருக்குத் திண்டாட்டம் எங்களுக்கோ கொண்டாட்டம். ஏனென்றால் சாகசப்பயணங்கள் விளையாட்டுக்கள் என்றால் அவருக்கு பயமோ பயம் எனக்கோ அப்படியான விடயங்கள் என்றால் ஆவலோ ஆவல். இந்தவிடயத்தில் எனக்கும் துணைவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற தேர்வுகள். தொடர்ந்து உங்கள் பார்வைக்காக அந்தக்கையேட்டில் உள்ளவற்றை இங்கு இணைக்கின்றேன் முடிந்தால் நான் எவற்றை தெரிவு செய்திருப்பேன் எனது துணைவர் எவற்றை தெரிவு செய்திருப்பார்? பிள்ளைகள் எவற்றை என்று உங்கள் அனுமானத்தை தாருங்கள். முக்கிய குறிப்பு இந்தப்பயணம் எனது குடும்பப் பயணமாக இருந்தாலும் இந்த இடத்திற்கு எதிர்காலத்தில் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்.

39.jpg

swim-with-nurse-sharks.jpg

79742.jpg

1306912829.jpg

BUGGY%20LAND%203.jpg

62076698.jpg

இன்னும் வளரும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பயணங்கள் முடிவதில்லை - 4[/size]

துணைவர் அருகில் வந்து அமர்ந்து அணைத்துக் கொண்டபோது விழித்துக் கொண்டேன். அவர் கையில் மின்னிய பொன்னிறத் திரவத்தைப்பார்த்த்தும் சிறிது கோபம் எட்டிப் பார்க்க அவரை முறைத்தேன். அட அவர் கண்களில் போதையா அல்லது கரங்களில் போதையா குழம்பிப்போனேன். :icon_mrgreen:

[size=5]வளரும்[/size] :D

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 5[/size]

அடுத்த நாட்காலை விரைவாகவே புலர்ந்தது.

இன்னும் வளரும். :rolleyes:

நடுவிலை தணிக்கை பண்ணிட்டீங்கள் போலை.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் தேடல் புல்லரிக்கவைக்கிறது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்லாருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது..:)

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் நன்றாக இருக்கிறது, வல்வை!

இந்தப் படத்தில் இவர்கள், என்ன செய்கிறார்கள்?

தியானம்???

62076698.jpg

நீங்கள் நிலுவையில் நில்லுங்கள் இதற்கு திருட்டிப்பரிகாரம் செய்யத்தேவையில்லை :lol:

இன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டு தான் படுக்கிற என்று முடிவெடுத்திருக்கிறன். :D:icon_idea:

உங்கள் பயணம் நன்றாக செல்கிறது. தொடருங்கள். :) நாமும் உங்களுடன் சேர்ந்து (கொஞ்சம் தள்ளி :icon_mrgreen:) பயணிக்கவிருக்கிறோம்.

அக்காவும் அடிக்கடி போதையில் மிதக்கிறா.... :icon_mrgreen: சா.... வைன் குடிக்கிறா என்று சொன்னான்... :icon_idea:

62076698.jpg

எனக்கு இந்த கடைசி படம் தான் பிடிச்சிருக்கு... உங்கள் கணவரின் முதல் சாய்ஸ்ஸும் இது தானே :D :D

பயணத்தொடர் பேமஸ் மணியன் ரேஞ்சுக்கு எகிறுறீங்க.. உங்களுக்கு பிறைட் பியூச்சர் இருக்கிறதா "பட்சி' சொல்லுரான் :lol:

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படம்,நான்காம் படத்தில் இருக்கிறதில நீங்கள் ஏறீனீங்களே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்லாருக்கு :lol:

நன்றி

நன்றாக இருக்கிறது.. :)

நன்றி யாயி

பயணம் நன்றாக இருக்கிறது, வல்வை!

இந்தப் படத்தில் இவர்கள், என்ன செய்கிறார்கள்?

தியானம்???

62076698.jpg

தியானமாகவா உங்களுக்குத் தெரிகிறது ரோமியோ :lol:

உங்கள் பயணம் நன்றாக செல்கிறது. தொடருங்கள். :) நாமும் உங்களுடன் சேர்ந்து (கொஞ்சம் தள்ளி :icon_mrgreen:) பயணிக்கவிருக்கிறோம்.

அக்காவும் அடிக்கடி போதையில் மிதக்கிறா.... :icon_mrgreen: சா.... வைன் குடிக்கிறா என்று சொன்னான்... :icon_idea:

நன்றி துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் படம்,நான்காம் படத்தில் இருக்கிறதில நீங்கள் ஏறீனீங்களே :lol:

ரதி உங்கள் கணிப்பு சரியானது தொடரும் பதிவில் விடயங்களைப் பகிர்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக செல்கிறது. தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக செல்கிறது. தொடருங்கள்

நன்றி உடையார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 6[/size]

எங்களுடைய ஆவல் எல்லை கடந்து பிள்ளைகளும் நானும் போட்டி போட்டுதெரிவு செய்தோம். அப்பா ஒன்றை மட்டுமே இப்போதைக்கு தெரிவு செய்யுங்கள் மற்றவற்றை பின்னர் பதியலாம் என்றார்.

என்னுடைய தெரிவு நீண்ட கயிற்றில் கிளிப் பண்ணி அந்தரத்தில் சறுக்குவது.. பிள்ளைகளின் தெரிவு டொல்பின் மீன்களுடன் நீச்சல் அடிப்பது. துணைவரின் தெரிவு காடுகள், கற்கள், மணல்வெளிகள், சேற்று மடைகள் போன்ற இடங்களில் இலாகவகமாச் செலுத்தக்கூடிய இருவர் அமரும் வாகனப்பயணம். அதில் ஒருவர் ஓட்டுனராகவும் மற்றவர் சகபயணியாகவும் செல்லக்கூடிய ஒரு சாகசம் நிறைந்த வாகன ஓட்டம். முக்கோணமாய் தெரிவுகள் விட்டுக் கொடுப்பது யார்? இந்த புழுதி குடிக்கும் பயணத்தில் மகனுக்கும் அப்பாவோடு பயணிக்கும் ஆவல். என்னுடைய தெரிவுக்கு மகள் தலையசைத்தாள் இருந்தாலும் டொல்பின் நீச்சலில் அவளுக்கு அதிக ஆவல்.. “அப்பா நீங்கள் இந்த கிளிப் கோல்டர் சலஞ்சுக்கு வரமாட்டீங்களா” என்று கேட்க “அடீ அதில தொங்கினால் எனக்கு மூச்சு நின்றிடும் பரவாயில்லையா?” என்று சறுக்கிக் கொண்டார். ஒரு வழியாக பிள்ளைகளின் தெரிவும் அப்பாவின் தெரிவும் பதிவு செய்யப்பட்டன. சரி அவர்கள் வழியில் போவோம் என்று நானும் சம்மதித்தேன்.

இன்னும் பரசூட் பறப்பும், பெரிய சுறாக்கள் , திருக்கைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுடன் கடல்தளத்தில் சேர்ந்து நீச்சலடிப்பது போன்ற த்ரிலிங்கான அனுபவங்கள் கிடப்பில் போடப்பட்டன. அடுத்தடுத்த நாட்களும் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று பதிவு செய்பவர்கள் தெரிவித்தனர். சரி அடுத்த கட்டம் என்ன? கடல் எங்கே இருக்கிறது என்பதை அறியவேண்டும். முகப்புக்கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளங்களை தாண்டிப்போக விளையாட்டுத்திடலும், அனைத்துவகை குளிர்பானங்களும் மதுவகைகளும் நிறைந்த கொட்டகையும எதிரே விரிந்த கடலும் தெரிந்தது. விளையாட்டுத்திடலில் ஆண்கள் பெண்களென கலந்த வகையில் குழுமங்கட்டி கவர்ச்சியும் கலகலப்பானதுமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

medium_Barcelo_Dominican_Beach_8697a3ddb555c1a0fafd41b3f213241e.jpg

நான் அவற்றை வேடிக்கை பார்க்க பிள்ளைகளுக்கு கோக் வாங்கித் தருவதாக கொட்டகைக்குப் போன மச்சான் இரண்டு மெழுகு கப்களில் கோக்கை நிறைத்து வந்து பிள்ளைகளின் கைகளில் தந்து விட்டு எனக்கு என்ன வேண்டும் என்று கேட்க எனக்கு இப்போது தாகமாக இல்லை வேண்டாம் கடற்கரைப்பக்கமாக செல்கிறேன் அங்கு வாருங்கள் என்று நடக்க முற்பட்டேன். நில் நானும் வாறேன் என்று அவசரமாக கொட்டகை நோக்கிச் சென்றவர் இரு கைகளிலும் பியரை ஏந்தி வந்து ஒன்றை என்னிடம் தந்தார். எனக்கு வந்த கோபத்தில் அசையாமல் அவ்விடத்திலேயே நின்று பியரை விறைத்துப்பார்த்தேன்… நிலமை விளங்கியவர் அது உனக்கு இல்லை அப்படியே கொண்டு வா கடற்கரையில் நடந்துகொண்டே குடிக்க, இதில நடக்கும்போதே ஒன்று முடிந்துவிடும் மறுபடியும் இங்கு வந்து மற்றது எடுக்காமல் தொடரலாம் அது வரைக்கும் நீ உன்னுடையது போன்று கொண்டுவா என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் பிள்ளைகளுடன் கடற்கரையை நோக்கி நடக்க வெளிக்கிட்டார். கையில் மதுவுடன் கடற்கரையை நோக்கி நடந்த எனக்கு என்னவோபோல் இருந்தது. இயல்பாக மற்றவர்கள் என்னைப்பார்த்துப் புன்னகைப்பதுகூட ஏதோ நக்கலாகவும் மற்றவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதாகவும் மனதில் பிரமை ஆட்டிப்படைத்தது. பலருக்கு மத்தியில் கையில் மதுவுடன் நடப்பது மனதைப் பலவீனமாக்க கையிலுள்ள பியர் மணலில் சிந்தியது. சில அடிகள் முன்னே சென்றவர் ஏதோ மன உந்துதால் என்னைத் திரும்பிப் பார்த்தார். புரிந்திருப்பார் போலும் கண்களால் கெஞ்சினார்.

அழகான கடற்கரைப்பிரதேசம். அலைகள் எழுவதும் ஓய்வதுமாக மனதிற்குள் பதின்மச்சிறுமி உயிர்த்துக் கொண்டாள். பிறகென்ன அலைகளுடன் விளையாட்டு…. காலடியில் மண்ணை கரைத்து அலை என்னைச் சாய்க்க முயல்வதும், மறுபடியும் மறுபடியும் நான் நிலை எடுப்பதுமாக எனக்கு சின்ன வயதிலிருந்தே பரிச்சயமான தோழியுடன் குதூகலித்து கும்மாளமிட்டேன்.

punta-cana-ocean-john-rizzuto.jpg

நேரம் போனது தெரியவில்லை. அலையோடு விளையாடியதில் பிள்ளைகளும் நானும் தெப்பமாக நனைவதும் பின்னர் வெயிலின் வெம்மையில் காய்வதுமாக நேரம் நண்பகலைத் தாண்டிக் கொண்டது. பிள்ளைகள் பசிக்கிறது என்றபோதுதான் நேரம் ஞாபகத்திற்கு வர அடடா அறையை மாற்ற 3 மணிக்கு நிற்கவேண்டுமே… உடலில் ஒட்டிய கடலின் உப்பு நீரும் கடற்கரை மணலும் பிசுபிசுவென்று இருந்தாலும் மகிழ்ச்சி பிசுபிசுப்பில்லாமல் மிளிர்ந்து கொண்டிருக்க அவசர அவசரமாக விடுதியில் முகப்பு வாசலூடாக எங்கள் இருப்பிடத்திற்குச் செல்வதற்கான சிறு ஊர்தி நோக்கி வரும்போது சன்விங் உதவியாளர் எம்மை அழைத்துக் கொண்டு பின்னால் ஓடிவருவது தெரிந்தது. இவர் எதற்காக எம்மை அழைக்கிறார் என்று யோசித்துக் கொண்டு நிற்பதற்கிடையில் நாம் செல்லவேண்டிய ஊர்தியும் எம்மைப்போல் அடுத்தடுத்த விடுதிகளுக்குச் செல்லக் காத்திருந்தவர்களை ஏற்றிக் கொண்டு செல்ல ஆயத்தமானது. அவசரமாக ஓடி வந்த பயண உதவுனர் துணைவரின் கைகளில் ஒரு சீவப்பட்ட சின்னத்தடிகள் அடங்கிய போத்தலைத் திணித்துவிட்டு இது எங்கள் சேவையில் பயணத்தை மேற்கொண்ட உங்களுக்கான டொமினிக்கன் ரிப்பப்ளிக்கின் அதி விசேடமான சின்னப்பரிசு என்று கூறி என்யாய் மான் எனச்சிரித்துக் கொண்டே கையசைக்க எங்களுடைய ஊர்தி புறப்பட்டது. சின்னச்சின்னத் தடிகளை காயவைத்து அந்தப் போத்தலினுள் புகுத்தி அடைத்து வைத்திருந்தார்கள். கையில் பியருடன் இருந்த துணைவர் அதை என்னிடம் வைத்திருக்கும்படி தந்தார். எங்களோடு பயணித்தவர்கள் குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தார்கள். நானும் காய்ந்த மரமஞ்சள் போன்ற தடிகள் கொண்ட கிட்டத்தட்ட குடிநீர் அவித்துக் குடிக்கும் பக்கற்றுகளில் வருவதுபோன்று அந்தப் போத்தலுக்குள் இருந்த ஏதோ ஒரு மரத்தின் வேர்களை வேடிக்கை பார்த்துக் கொணடிருந்தேன். இதை என்ன செய்வது அவித்துக் குடிப்பதா? இந்த சீவப்பட்ட வேர்கள் ஒரு கிப்ட்டா? இலங்கைக்குப் போனா கறுவாப்பட்டையையும் தேயிலையையும் சாம்பிளுக்குக் கொடுப்பார்களே அதுபோல இதுவும் ஒன்றா?

mamajuna750.gif

வளரும்..... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] படங்களும் பகிர்வுமாய் ...........அசத்தல் தான் ........[/size]

[size=4].உங்கள் பதிவுகள் எங்களையும் மகிழ வைத்துள்ளது .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.