Jump to content

பயணங்கள் முடிவதில்லை :)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பயணக்கட்டுரைக்கு ...அடுத்த பயணக்கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சகாரா

 

நான் கொஞ்சம் பயந்து விட்டேன் :(

 

இவர் எது எதுக்கு பயப்பிடுகிறார் என்றே தெரியேல்லையே :huh:

இறுதிப்பாகத்தை எழுதி யாழில் போடாமல் வாந்தியத் தேவனிற்கு அனுப்பிய சகாராவை கண்டிக்கிறேன் :lol: :lol:

 

வாந்தியத் தேவனா அதாரு? :lol:

 

சாத்திரியாரின் கதையைக் கேட்டு யாரும் சந்தேகப்படவேண்டாம்  வாந்தியத்தேவன் என்று இந்தக்களத்தில் யாரும் இல்லை :huh:

 

ஒரு வேளை வந்தியத்தேவன் என்றால்... அந்தாள்தான் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் <_<

Link to comment
Share on other sites

இவர் எது எதுக்கு பயப்பிடுகிறார் என்றே தெரியேல்லையே :huh:

 

வாந்தியத் தேவனா அதாரு? :lol:

 

சாத்திரியாரின் கதையைக் கேட்டு யாரும் சந்தேகப்படவேண்டாம்  வாந்தியத்தேவன் என்று இந்தக்களத்தில் யாரும் இல்லை :huh:

 

ஒரு வேளை வந்தியத்தேவன் என்றால்... அந்தாள்தான் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் <_<

 

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

 

உண்மையைச் சொன்னால், சாத்திரியாரின் புலநாயில், இவ்வளவு நாளும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை! அவுசுக்கு வந்தால், நலமடிக்கிற திட்டம் கூட இருந்தது. :D

 

ஆனால், இப்ப, புலநாய் விசயகாரன் போலத்தான் கிடக்குது! :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயணக்கட்டுரை


 

வாழ்த்துகள் சகோதரி சகாறா


 

எல்லோராலும் இப்படி எழுதமுடியாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியை நானும் என்னவோ நினைச்சன். சரிசரி இன்னொரு தேவன் வருவார் பயம் வேண்டாம். :lol: :lol: :lol: :lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயணக் கட்டுரை சகாரா அக்கா.... 2 முறை போய் இருந்தாலும், உங்களைப் போல வெளியே அவ்வளவாக செல்லாததனால் (றிசோட் இலேயே இருந்து விட்டோம்) வாசிக்க சுவாரசியமாக இருந்தது.  தெரிந்த விடயங்களையும் உங்கள் எழுத்தினூடாக பார்க்க நன்றாக இருந்தது.

நானும் 2 போத்தல் மம்மாகுவா வாங்கி வந்து... இன்னுமே தேனும் றம்மும் கலந்து ஊறவிடாமல் 7 வருடமாக பேஸ்மன்ற் இல் இருக்கிறது. :(  இதுக்கு அவர்களே கலந்து ஊறவிட்டு விக்கிற போத்திலை வாங்கியிருக்கலாம்.  முதல் முறை ஆர்வகோளாறில் வாங்கிய அனுபவத்தில் 2ம் முறை சென்ற போது வாங்கவில்லை.  கடைகளுக்கு போகும் போது அவர்கள் சுவை பார்க்க தந்ததை சுவைத்ததோடு சரி...;)

 

அவ்விடத்திற்கு சென்று வந்தும் எழுத்தினூடாக இரசிக்க முடிந்ததென்றால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எதற்கும் உக்கி உளுத்து விட்டதா என்று எடுத்துப் பாருங்கள் சபேசு. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா...என்று ஒரு காலைத்தானே  போட்டேன்... கால் படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டதோ? சரி காலை எடுத்து விடுகிறேன் சகாரா

 

அய்யோ அய்யோ அய்யோ....

 

உண்மையைச் சொன்னால், சாத்திரியாரின் புலநாயில், இவ்வளவு நாளும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை! அவுசுக்கு வந்தால், நலமடிக்கிற திட்டம் கூட இருந்தது. :D

 

ஆனால், இப்ப, புலநாய் விசயகாரன் போலத்தான் கிடக்குது! :o  

 

சொல்லிக் கொண்டிருக்காதேங்கோ ..... போட்ட திட்டத்தை புலநாய் எங்கு நிற்குதெண்டு போய் நிறைவேற்றுங்கள் அவுசு வருமட்டும்  காத்திருக்கவேண்டாம்....எவ்வளவு பணம் வேணுமென்றாலும் நான் தாறன் :lol::D

Link to comment
Share on other sites

உங்களுடன் சேர்ந்து நாங்களும் அனுபவித்தோம்.. அந்த  மூலிகை போத்தல் தான் மிஸ்ஸிங்.. கைவசம் எக்ஸ்ரா இருந்தால் ...ஒன்று பிளீஸ்.. :D :D

Link to comment
Share on other sites

இறுதிப்பாகத்தை எழுதி யாழில் போடாமல் வாந்தியத் தேவனிற்கு அனுப்பிய சகாராவை கண்டிக்கிறேன் :lol: :lol:

 

 

சாத்திரி யாழில் பல திரிகளை பார்ப்பதில்லை போல :lol: :lol:

 

சகாறா, நல்ல பதிவு. அங்கு போக வேண்டுமென்றா ஆவலை தூண்டிவிட்டுள்ளீர்கள், பார்ப்பம். 

 

நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • 11 months later...

மன்னிக்கவும்.. ஓரிரு பகுதிகளுக்கு பிறகு இந்தத் தொடர் எனது கண்ணில் தென்படவில்லை.. வாசித்துவிட்டு கருத்து எழுதுகிறேன். நன்றி!!  :)

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/01/2013 at 0:04 AM, வந்தியதேவன் said:

பயணங்கள் முடிவதில்லை – 12

 

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்ததை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசியூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்தது.

 

சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்தது எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

 

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்தும் வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்??????

 

 

070819_honeywine.jpg

 

 

உங்கள் பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது வந்தியத் தேவன்.

On 24/01/2013 at 7:29 PM, வல்வை சகாறா said:

பயணங்கள் முடிவதில்லை – 12

 

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்த்தை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசி யூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்த்து. சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்த்து எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்து; வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்?????? எண்ணம் தந்த போதைதான் என்னை இப்படி திணற வைக்கிறதா? சட்டென்று எழுந்து கொண்டேன்…. உண்மைதான்… இருந்தாலும் மதுவின் சாரம் சிறிது தெரியத்தான் செய்த்து… இது சரிவராது போய் நல்ல தோய்ச்சல் அடித்தால்தான் பெட்டர் என்று தோன்றியது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதற்கென்று பிரத்தியேகமாக கலைவடிவங்கள் இருக்கும் அதற்கு இவ்விடமும் விதிவிலக்கல்ல. இங்கும் ஒவ்வொரு நாளும் முன்னிரவுப்பொழுதில் அதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கங்களில் கலை நிகழ்வுகள் இடம்பெறும் இன்று மலையில் அவ்விடம் செல்வது என்று முடிவெடுத்துக் கொண்டோம். அதற்காக சில மணி நேரங்கள் இருந்தன. சரி அதற்கு முன்னர் நாம் தங்கியிருக்கும் விடுதியின் சுற்றுப்புறச்சூழலை பார்த்துவரலாம் என்று புறப்பட்டோம். வாவ் எத்தனை மயில்கள் என்ன அழகு….. கலோ ஒருத்தரும் எடக்கு முடக்காக யோசிக்கவேண்டாம்.

peacock-family.jpg

பசுமை நிறைந்த இயற்றை வனப்புப் பொருந்திய அவ்விடத்தில் மயில்கள் மனிதர்களைச் சிறிதளவும் சட்டை செய்யாமல் உலவின. வழமையாக மனிதர்களைக்கண்டால் பறவைகள் பறந்துவிடும் அல்லது விலகிவிடும் இவையோ முற்றிலும் மாறாக நம்மூர் காக்கைகள் நம்மோடு அங்கலாய்ப்பதுபோல் நாம் வாழும் தேசத்தில் புறாக்கள்  நம்மோடு மொய்ப்பதுபோல் இந்த இடத்தில் வனப்பு மிக்க மயில்களும் அவற்றின் குஞ்சுகளும் சூழ்ந்து திரிந்தன. தாயகத்தில் ஒரு காலத்தில் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம் அது…., அக்காலத்தில் திருக்கேதீச்சரத்திற்கு என்னை என்னுடைய பேரன் அழைத்துச் சென்றிருந்தார். அது ஒரு சிவராத்திரி தினத்தை ஒட்டிய நாட்கள் அங்குள்ள மடத்தில் பதிவு செய்து தங்கியிருந்தவேளையில் அதிகாலையில் அகவல் ஒலியிலிருந்து இரவு உறக்கப்போகும்வரை மயில்களும் மந்திகளும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் பிரதேசமாக இருந்தது அத்தலம். அங்கு தங்கியிருந்து மயில்களை அருகே அவதானித்த விடயத்தை மீண்டும் பாடசாலை வந்தபோது தோழிகளிடம் கதைகதையாக சொல்லி புளகாங்கிதம் அடைந்த நாட்கள்…. எல்லாம் ஞாபகத்தில் வந்து உலாவியது. அண்மையில் அதே திருத்தலத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றபோது வெறுமை மட்டுமே மீந்து போயிருந்தது. மயில்கள் உறைந்த பெருமரங்கள் எதுவும் அங்கில்லை. வெறும் கானலாக, பாலாவி தேங்கிய குட்டையாக… பசுமையற்ற நிலையில் வெம்மை தின்ன அந்த நிலம் வரண்டிருந்தது. ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் இராணுவக்காவரண்கள் மட்டும் அந்த தருகள் அற்ற வெறுமைப்படுத்தப்பட்ட மண்ணில் முளைவிட்டிருந்தன. மன்னார் வவுனியா பாதையில் இராணுவ அரண்களைப்பார்த்த அளவுக்கு மக்களைக்காணவில்லை. இவற்றைத் தரிசித்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன இப்போது எப்படியிருக்கிறதோ????

 

எப்படித்தான் எங்கு நின்றாலும் காட்சிகளும் சிந்தனையும் அசுரவேகத்தில் அங்குதான் போய் நிற்கின்றன. மயில்களையும் அவற்றின் திமிர்த்த நடையையும், அகவலையும் மீண்டும் ஒரு முறை நெருக்கமாக நின்று இரசிக்க முடிந்தது. இங்கு இன்னுமொரு காட்சி என்னை வியப்பிற்குள்ளாக்கியது

img5930b.jpg

அசப்பில் பனையைப்போல் ஆனால் உயர்ந்து ஓங்கி வளர்வதோ அல்லது நுங்கு பனங்காய் என்பதோ இன்றி இருந்தது. உயரத்தால் உருவத்தால் எல்லாம் மிகச்சிறிய வடிவில் அழகாக இருந்தது. நம்ம சொந்தப்பிள்ளை கற்பகத்தருவின் உறவினரைப்பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றியது. இப்படியே அங்கிருந்த மரங்கள் செடிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம் என்பனவற்றைச் சுற்றிவிட்டு ஒரு முறை நீச்சல் தடாகத்தில் அமிழ்ந்து எழுந்து வர கலை நிகழ்வுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. 3 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதில் நம்மாளுக்கு உடன்பாடு இல்லை கலைகளில் ஈடுபாடில்லாத ஒருத்தியை மணந்திருந்தால் அவருக்கேற்றால்போல் இருந்திருக்கும் தப்புப்பண்ணிட்டாரே… நாங்கள் இருந்த அரங்கிற்கு அருகாமையில்தான் புன்ரக்கானாவின் மிகப்பெரிய கசினோ அமைந்திருந்தது. அதனைத் தரிசிக்கும் ஆவல் அங்கு வந்த நாளிலிருந்து அவருடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது என்று நான் இப்போது சொல்லத்தேவையில்லை முன்னர் நான் எழுதியவற்றிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

grand_palladium_palace_resort_and_spa_al

நாளையுடன் பயணம் முடிகிறது அதற்குள் அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக உந்த என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு 20 டொலர்களை கையில் எடுத்துக் கொண்டு பர்சை என்னிடம் தந்துவிட்டு கசினோ செல்வதற்கு புறப்பட அந்நேரம் கலைநிகழ்வுகளும் ஆரம்பமாகியது. புறப்பட்டவர் என்ன நினைத்தாரோ அப்படியே அரங்கின் ஓரமாக நின்று நிகழ்வுகளை இரசிக்க.. அவர் எங்கு நிற்கிறார் என்பதை கவனித்துக்கொண்டே அரங்கில் சல்சா நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் துரித அசைவில் ஆழ்ந்து போனேன்.

theater-occidental-grand-punta-cana-v341

நிகழ்வு முடிந்து வெளியே வர கையில் வைத்திருந்த 20 டொலர்களை தந்து தான் போகவில்லை என்றார். எனக்குத் தெரியும் அவ்விடத்தில் எங்களைத் தவிர்த்து தனியே செல்ல அவரால் முடியவில்லை. பாசக்காரன். அனுமதி கிடைத்தாலும் மனச்சாட்சி உறுத்திவிட்டது.

 

இரவு 10ஐத் தாண்டிக் கொண்டிருந்தது அங்கிருந்த முகப்பு மண்டபத்தின் சோபா ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நாளை ஒருநாள்தான் என்ன செய்யலாம் என்று கலந்து பேசி எங்கும் செல்வதில்லை கடற்கரை நீச்சல்தடாகம் அறை பயண ஆயத்தம் என்று மட்டுப்படுத்திக் கொண்டோம். நாளையுடன் இந்த சுற்றுலா முடிவடைந்துவிடும் என்ற உணர்வுடன் இருக்கும் பொழுதை முற்றுமுழுதாக விளையாடிக் கழித்துக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி அவர்களை கவனித்துக் கொண்டிருந்த எங்களை அண்மித்த பணிப்பெண் கையில் மது இருந்தது. அதனை நம்மாள் ஏற்கனவே கேட்டிப்பார்போல்….. என்னுடன் இயல்பாக சிநேகமாகக் கதைத்தபடி ஏதாவது அருந்தப்போகிறாயா என்று கேட்டாள் பிள்ளைகளுக்குப் பிரியமான கொட் சொக்கிலேட்டையும் எனக்கு அன்னாசி பழரசத்தையும் தரும்படி கேட்டபோது… இந்த இடத்தின் சிறப்புப் பானத்தை அருந்தியிருக்கிறாயா என்று கேட்டாள் இல்லை என்று நான் கூற தான் அதனைச் சுவையாக உனக்கு எடுத்துவருகிறேன் என்று போனவள் அடுத்த 5 ஆவது நிமிடத்தில் பிள்ளைகளுக்கு கொட் சொக்லேட்டையும் எனக்கு கொக்ரெயில் என்னும் பானத்தையும் கொண்டு வந்து தந்துவிட்டுப்போனாள். பார்க்க விதவிதமான வர்ணங்களுடன் இருந்த அந்தப்பானத்தைக் கொக்ரெய்ல் என்று கூறுவார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

signature-cocktails-drinks.jpg

அங்கு உலவிக் கொண்டிருந்த பலரின் கைகளில் இவற்றை ஏற்கனவே கண்டிருந்தாலும் அதனை அறியும் ஆர்வம் ஏற்படவில்லை. இப்போது அதைக் கைகளில் வைத்து வர்ணத்தைப் பார்த்தபடி வரி வரியாக இருந்த ஒவ்வொரு வர்ணத்தில் மேலும் உறிஞ்சும் குழாயை வைத்து சுவை பார்த்தேன். என்ன ஒவ்வொரு பழரசங்களையும் படிப்படியாக திரவவரிகளில் அழகாக இருந்தது…. ஐயய்யோ பழரசங்களின் நடுவே மது… அவ்வளவுதான் அதை அப்படியே கீழே வைத்துவிட்டேன். நல்லகாலம் எல்லாக்கலவையையும் கலந்து குடித்திருந்தால் என்ன நிலமை? அங்கு வேலை செய்யும் பணிப்பெண்கள் சரியான குசும்பிகள் போல,…. வெற்றுக் குவளையை எடுக்க வந்தவள் அதற்குள் இருக்கும் பானத்தைப் பார்த்துவிட்டு உன் மனைவிக்கு இதைப்பருகத் தெரியாதா என்று கேட்டுவைத்துவிட்டு சென்று விட்டாள். பிறகென்ன பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதான் மறுபடியும் நொய் நொய் என்று கிளம்ப இருங்கோ வாறேன் என்று போய்  ஒரு கிளாசில் ரெட் வைனை வாங்கிக் கொண்டு வந்து நம்மாளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். நாளைக்கு மைக்கிரென் தலைக்குத்து வந்தால் என்ன நடக்கும் தெரியுந்தானே என்று விட்டு அன்றைய முற்பகலை நினைவில் கூர்ந்து சிறிது சிறிதாக உறிஞ்ச ஆரம்பித்தேன். அறைக்குச் செல்லலாம் என்று பிள்ளைகளை அழைத்தால் அவர்கள் அம்மா இன்று மட்டுந்தானே கொஞ்ச நேரம் விளையாடப்போகிறோம் என்று கொஞ்சல் கெஞ்சல் விட்டு எட்டவாக ஓடினார்கள். அப்பாவுக்கும் அறைக்கு வந்து அடைபட விருப்பமில்லை. சிறிது நேரம் சென்றது ரெட் வைனை அருந்தினால் சும்மா கம்மென்று இருக்கவேண்டியதுதானே. பாழாப்போன மமக்குவா போத்தலும் வேர்களும் அப்போதா ஞாபகம் வரவேண்டும். அது என்ன வேர்? அது அருந்தினால் என்ன செய்யும் என்று அடுக்கடுக்காக கேள்விகளை நம்மாளிடம் கேட்டுத் தொலைக்க எனக்கும் அது பற்றி வடிவாத் தெரியாது இங்கு யாரிடமாவது விசாரித்துப்பார்ப்போம் என்று விட்டு அங்குள்ள பணியாளரிடம் விசாரித்து வந்தார். கிட்டத்தட்ட உற்சாகபானம் என்பது போல சொன்னார். அட பரவாயில்லையே உற்சாகபானம் என்றால் அருந்திப் பார்க்கவேண்டும். அருந்துவதென்றால் அதில் அந்த காய்ந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றவேண்டுமா என்று கேட்க நம்மாள் சிரித்துக் கொண்டே அதற்கு ரம்மும் தேனும் வேண்டும். என்று விட்டு சரி நாங்கள் விடுதிக்குச் செல்வோம் என்று பிள்ளைகளை அழைத்துவந்தார். வரும் வழியில் எனக்கு ஒரே குடைச்சலாக இருந்தது… நம்ம அறையில் ஒரு ரம் போத்தலை வைத்திருக்கிறார்கள் அதை இந்தப் போத்தலுக்குள் விட்டு வைத்தால் சரிதானே… என்று நிறைய அலட்டி இருப்பேன் போலும். வந்த சிறிது நேரத்தில் பிள்ளைகள் உறங்கிவிட்டார்கள். நானும் இவரும் வெளியே வரண்டாவில் உள்ள பிரம்பு நாற்காலியில் இருந்து அந்த கடற்கரைக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தோம் இருந்தாலும் நாளையுடன் இந்தப்பயணம் நிறைவு பெற்றுவிடும் என்ற எண்ணம் குழந்தைத்தனமாக எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது. அதற்குள் இந்த பானம் பற்றி அறிந்து விடவேண்டும்… எல்லாம் ரெட் வைன் செய்த வேலை…. அறைக்குள்ளே போய் ரம் போத்தலையும் மமக்குவா மூலிகைகள் அடங்கிய போத்தலையும் எடுத்து வந்து திருகித் திறக்க முற்பட்டேன். நம்மாளுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரித்தார்… இவர் ஏன் சிரிக்கிறார் என்பது விளங்காமல் முழிக்கும்போது அந்தப்பானம் எதற்காகப் பயன்படுத்துவது என்று சொன்னார் பாருங்கப்பா….. :blink: ஆடிப்போய்விட்டேன். :o  விடயம் தெரியாமல் ஆர்வப்பட்டு, கூனிக்குறுகி போன நிமிடத்தில்……. கைகளில் இருந்த அந்த மூலிகைப்போத்தல் என்னைப்பார்த்து :unsure: ஏளனித்திருக்கும். அசடு வழிய அவற்றைக் கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு திரும்பி வந்தபோது அட நம்மாளைப் பார்க்கவே கண்களை நிமிர்த்த முடியவில்லை. ரொம்ப இரசித்திருப்பார்போல் மெல்ல அருகில் அந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டார். சரி சீன் முடிஞ்சுது. :icon_mrgreen::icon_mrgreen:

 

மறுநாள் சிறப்பாக ஏதுமின்றி இருந்தாலும் முந்தைய இரவுச் சம்பவங்கள் என்னை நாணப்படுத்தின. பயண ஆயத்தங்கள் செய்யும்போது கையில் அகப்பட்ட காய்ந்த வேர்கள் அடங்கிய மூலிகைப் போத்தலை மெல்ல எடுத்து அந்த அறையின் அலமாரி மூலையில் வைத்தபோது அதையும் பெட்டியில் வை என்றார். விடயம் அறியாதபோது இலகுவாகத் தொட்டு திருப்பித் திருப்பி பார்த்த போத்தலை இப்போது தொடவே கூசியது. எடுத்து வை என்றபோது நான் அவதானிக்காததுபோல் அவ்விடத்தை விட்டு அகன்று கொண்டேன் மீண்டும் வந்து பார்த்தபோது அந்தக்குடுவை உடைகள் உள்ள பெட்டியின் நடுப்பகுதியில் பத்திரமாக அமர்ந்திருந்தது. கிண்டலாக, கிளுகிளுப்பாக நீண்ட காலத்திற்குப் பின்னர் நம்மாளுடன் இருந்த பொழுதுகளாக இந்தப்பயணம் அமைந்தது. மீண்டும் கனடா வந்து வேலைக்குப் போகும்போது மனதில் உற்சாகம் மிகுதியும் மகிழ்ச்சியும் போட்டிபோட்டன. அந்தப்பயணத்தின் ஞாபகமாக அந்த மூலிகைக்குடுவை பத்திரமாக பெட்டிக்குள் கிடக்கிறது அதனைப்பற்றி சில சமயங்களில் நாங்கள் பேசிக் கொள்வோம். என்னை ரசிக்கவேண்டும் என்றால் நம்மாளுக்கு இந்தக்கிண்டல் இப்போதெல்லாம் கைகொடுக்கிறது.

 

முற்றும்

 

கட்டுரை அல்லது அனுபவப்பகிர்வை முற்றும் போட்டுவிட்டேன் ஆனால் தோகை இழந்த மயிலைப் பார்த்திருக்கிறீர்களா? நான் தோகை இழந்த ஆண் மயிலைப்பார்த்தேன் உபயோகப்படும் என்று படம் பிடித்து வைத்தேன்……

img6093b.jpg

எதற்கு என்று கேட்கிறீர்களா???? என்ன சுற்றுலா என்றால் செலவுகள் அதிகம் கிரெடிட் கார்ட்டுகள் துடைத்தெடுக்கப்படும்தானே, இந்த ஆண்மயில் தோகை இழந்ததைப் பார்க்கும்போது கிரெடிட் கார்ட்டில் கடனை அதிகரித்த நம்மாள் ஞாபகந்தான் அடிக்கடி வருகிறது.

 

மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது இந்தப்பயணம். வெளிப்படையாக எழுதாதவை பல முடிந்தவரை எழுதி முடித்துள்ளேன். அது ஒரு புது அனுபவந்தானே…. அடுத்ததடவை இப்படி ஏதாவது தொடர்கள் எழுத முற்பட்டால் நிச்சயமாக முடிவுவரை எழுதிவிட்டுத்தான் இங்கு இணைக்கவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது இந்தப்பதிவு

இவ்வளவு நாளும் பொறுமையாக வாசித்த அதேநேரம் மனதிற்குள் இப்படியா எழுதுவது என்று திட்டித்தீர்த்த அனைவருக்கும் நன்றி. இப்போதைக்கு என்னுடைய எழுத்து அலட்டலில் இருந்து தப்பித்துள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறேன் :icon_idea:

உங்கள் கட்டுரையும் மிக நன்று சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீளவும் வந்து வாசித்து  பாராட்டிமைக்கு நன்றி சுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.