Jump to content

பேய் பிசாசு அனுபவம்..

Recommended Posts

Posted

பேய் - பலவீனமானவ​ர்கள் பார்க்கத் தடை

டிஸ்கி: பயந்த மனமுள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டாம். அதன் பின்னர் நான் எதற்கும் பொறுப்பல்ல..

http://youtu.be/VVODoBfSdAQ

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டன் நகரத்தின், நடுவில், ஒரு பழைய காலத்துக் கட்டிடம்!

அதன் அருகே, தண்டவாளங்கள் பல, ஒன்றுக்கொன்று குறுக்கும் நெடுக்குமாகப் போடப் பட்டிருந்தன!

அங்கு, இரவில் காவல் தொலிழில் ஈடுபடும் மாணவருக்கு, வழமையான சம்பளத்திலும் பார்க்கக் கொஞ்சம் அதிகம்!

இரவு மணி ஒன்று!

திடீரெனப் புறாக்களின் இறக்கைகள் பட படவென அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது!

அந்தக் கட்டிடத்தின், விருந்தினர் தங்கும் அறையில் உள்ள கதிரையில், ஒரு பெண்ணின் உருவம் அமர்ந்திருந்தது!

திடீரென்று அறை முழுவதும், வெளியில் படர்ந்திருந்த, பனிப் புகார், படர்ந்தது போல இருந்தது!

ஒரு விதமான 'குளிர்' அந்த அறை முழுவதையும் ஆட்கொண்டது போல, ஒரு உணர்வு!

ஒரு பத்து நிமிடங்கள் வரை, அந்தப் பெண்ணுருவம், அமர்ந்திருந்ததாக நினைவு!

பின்பு, அதைக் காணவில்லை!

இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு! எப்போதுமே, வெள்ளை நிற உடுப்புத் தான் போட்டிருக்கும், அந்தப் பெண்ணின் முகம், ஒரு நாளும் தெளிவாகத் தெரிந்ததில்லை!

அண்மையில் போய்ப் பார்க்கும் துணிச்சலும் ஒரு நாளும் வந்ததில்லை!

நிச்சயமாக 'உச்சா' போனதாய், நினைவில்லை! :D

Posted

[size=5]அட நம்ம சுண்டலெண்டால் போய் தொட்டுப் பார்த்திருப்பாரே!![/size]

சுண்டல் : டேய் மச்சி அங்கை பாரடா வடிவான பெட்டை ஒருத்தி இருக்கிறாள்

சுபேஸ் : மச்சி அது பெட்டை இல்லை பேயடா

சுண்டல்: போடா பேயா அது பெட்டையடா

சுபேஸ்: நீதாண்டா பேய் போய் அந்தப் பேயைப் பார்

:lol:

சுண்டல்: மச்சி, பழம் நழுவிப் பாலில விழுதுடா!

சபேஸ்: பழமில்லடா, அது பே.... பேய்டா!

சுண்டல் எஸ்கேப்! :D

Posted

லண்டனில் பேய்களை பலர் பார்த்ததாக எனக்கு கூறினார்கள் ...........இது ஜோக் அல்ல .உண்மை

அண்மையில் இங்கிருந்து லண்டன் சென்ற ஒரு குடும்பம் எனக்கு கூறிய ஓர் உண்மையான திடுக்கிடும் அனுபவத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன் ...முதலில் அவர்களின் அனுமதியை பெற்ற பின் ................அனுமதி கிடைத்தால் இரவு 12 மணிக்கு பதிகிறேன் நன்றி .... :)

தமிழ்சூரியன், மேலேயுள்ள கதை, பொய்யென்று நான் சொன்னேனா?

இந்தத் திரியில் நான் பதியும் பதிவுகள், உண்மைக் கதைகளே! :o

Posted

தமிழ்சூரியன், மேலேயுள்ள கதை, பொய்யென்று நான் சொன்னேனா?

இந்தத் திரியில் நான் பதியும் பதிவுகள், உண்மைக் கதைகளே! :o

இப்பதான் பயமாய் இருக்கு .... :D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளே சுண்டல நித்தா கொள்ள விடாம பண்ணுறாங்கப்பா.....

Posted

கடவுளே சுண்டல நித்தா கொள்ள விடாம பண்ணுறாங்கப்பா.....

சுண்டல் உங்களுக்கு இரவு வேலை என்று தெரியும் .....வேலை முடிந்து வீட்டிற்கு காரில் செல்லும்போது மிக்க கவனம் ராசா...................யாராவது லிப்ட் டு கேட்டாலும்

காரை நிறுத்தக்கூடாது....................சொல்லிட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:(
Posted

இது உண்மையாக நடந்தது .

ஸ்காபோரோவில் புது வீடு கட்டும் நிறுவனம் மண்ணை கிண்டும் போது மனித எலும்புகள்,வேறு சில lஉலோக கழிவுகளும் இருந்தை கண்டுபடித்தது.அந்த திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிற்பாட்டிவிட்டார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல கழிவுகள் காடாக இருந்தஅந்த பிரதேசத்தில் தான் தாட்டார்கள் என்று சொல்லி பின்னர் எல்லாம் சுத்தம் செய்து வீடுகளும் கட்டிவிட்டார்கள் .

போன வருடம் ஜெர்மனில் இருந்து வந்து நின்ற எனது தம்பியின் நண்பரின் மகனோருவர் தம்பியுடன் போய் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு வீடு திரும்புகையில் அந்த இடத்தை கார் கடக்க அந்த பெடியன் சொன்னாராம் "மாமா இந்த இடத்தில பேய் (ghost) இருக்குதேன்று".ஒரு வீதமும் கடவுள் ,பேயை நம்பாத எனது தம்பி என்ன சொல்லுகின்றீர் என கேட்க ஏனோ தனக்கு அந்த இடத்தை தாண்ட அந்த உணர்வு வந்ததாக சொன்னாராம் .

தம்பி வீடு வந்து பெடியனின் பெற்றோருக்கு ஜெர்மனிக்கு போனை அடிக்க அவர்கள் ஜெர்மனியிலும் சில வேளைகளில் சுடலைகளை கடக்கும் போது பேய் நிற்பதாக சொல்கின்றதாகவும் தாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார்களாம் .

ஒன்றுமாக விளங்கவில்லை .

நன்றி தங்கள் பதிவிற்கு ..............உண்மையில் எனக்கும் பலர் பல அனுபவங்களை கூறினார்கள் .................ஆனால் நான் இன்னும் நேரடியாய் அனுபவப்படவில்லை ............

ஆனால் எதோ ஒன்று இருபது உண்மை என்று என் மனம் சொன்னாலும் ..............தடயங்களுடன் தேடுகிறேன் ..................மேலும் உங்கள் அனுபவங்களை பதியுங்கள்

Posted

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

Posted

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

எனக்கு தேவர்கள் அடிக்கடி தென்படுவதுண்டு. என்ன கணங்கள் என் சாதகத்தில் இருக்குமோ?314.gif.

ஒருவேளை அவற்றைத்தான் ...

பேய்க்கணங்கள்!

அதுவேதான்..

:lol: :lol: :lol:

Posted

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

சாத்திரத்தை நடைமுறைச் சாத்தியமாக நம்புவதில்லை.

இருந்தாலும் இவன் தேவகணம் என்று முன்னோர்கள் சொன்னதால், நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.

ஐ வான்ட் டு சீ மர்லின் மன்றோ, அண்ட் ஆல்சோ வான்ட் டு சீ சில்க் சிமிதா. :D

சும்மா போங்கப்பா குறுக்கால போற நாய் கூடத் தெரியுதில்லை. :lol:

Posted

எனது நண்பி சொல்லுவா தனக்கு இறந்த ஆட்கள் அடிக்கடி கனவில் வருவதாக. அப்படி என்றால் அது என்ன??

Posted

எனது நண்பி சொல்லுவா தனக்கு இறந்த ஆட்கள் அடிக்கடி கனவில் வருவதாக. அப்படி என்றால் அது என்ன??

அவரின் சாதகத்தின் படி நிறைய கடன் வாங்குபவர்(வாங்கியவர்) என்பது கருத்து :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரின் சாதகத்தின் படி நிறைய கடன் வாங்குபவர்(வாங்கியவர்) என்பது கருத்து :D

மல்லை எனக்கும்தான் கனபேர் கனவில வருகிறார்கள் அத்தனைபேரிடமும் கடன் வாங்கியிருக்கிறேனா? :icon_mrgreen:

நம்பினவனுக்கே நடராசா. நான் என்ன பண்ண?

எதுக்கும் குறிப்பை இன்னொருகால் திருப்பி அனுப்பிவிடுங்கோ. இன்னொருதடவை திருப்பி பார்த்துவிட்டால் போச்சு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் விடிய வெள்ளன எழும்பி டியூசனுக்குப் போறதெண்டு சொன்னாந்தானே. அம்மாவும்

படிப்பிக்கப் போறதால நாலு மணிக்கே எழும்ம்பிச் சமைப்பா. எங்கட அம்மம்மாவும் எழும்பி முகம் கழுவித் தேத்தண்ணி குடிச்சுப்போட்டு ஏதாவது செய்துகொண்டிடுப்பா.ஒருநாள் விடிய நாலரைக்கு நானேளும்பி முதல் வேலையா காலைக்கடன் கழிக்க குசினியை கடந்து வெளியில போறான்.அம்மம்மா வீட்டுப் பின்பக்கப் படலையில் இடுப்பில் ஒருகையும் படலையில் ஒரு கையுமாக நிக்கிறா. விடியவெள்ளன உதில ஏன் நிக்கிறியள் எண்டு கேட்டபிறகுதான் அம்மம்மா தன்ர கட்டிலுக்குப் பக்கத்தில இருந்து பாக்கு இடிச்சுக்கொண்டு இருந்த ஞாபகம் வந்தஉடன நிமிர்ந்து பாக்க ஒருத்தரையும் காணேல்ல.விழுந்தடிச்சு ஐயோ எண்டு கத்திக்கொண்டு ஓடிப்போய் அம்மம்மாக்கு முன்னால தான் நிண்டன். நடந்ததைச் சொல்ல அம்மம்மா பட அறைக்க கொண்டுபோய் திருநீறு பூசிப்போட்டுச் சொன்னா நீ தேவ கணம் உனக்கு இப்பிடியானது தெரியும் எண்டு.முந்தி நான் நம்பேல்ல. யாழுக்கு வந்தபிறகு நம்பிறன்.

சிறீயின் படங்களும் கதையும் அருமை. ஒண்டு விளங்கேல்ல கலியாணம் கட்டினபிறகு பேயை நப்பின் எண்டு நிழலி எழுதியிருக்கிறார் பேயள் பேயளைப் பாத்துப் பயப்பிடுமே. சுண்டல் கவனம் மோகினிப்பேய் முதல் உங்களைத்தான் பிடிக்கும். :D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்காபிரிக்க நாடொன்றில், ஒரு குக்கிராமம்,

பிரதான நகரத்தில், இருந்து ஒதுக்குப் புறமாக இருந்தது,

அங்கு ஒரு பெரிய முதலாளியின், விருந்தினர்கள் தங்கும், வெளி வீடொன்றில், வாடகைக்கு வசித்துக் கொண்டிருந்த காலம்,

முதலாளி, வருடத்தில் நத்தார் காலத்தில் மட்டும் குடும்பத்துடன் வந்து தங்குவதுண்டு.

அந்த வீட்டின் பக்கத்தில், நீள் சதுர வடிவில், ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதன் வெளிக்கட்டில் இருந்து தான், வார விடுமுறை நாட்களில், நானும் நண்பர்களும் இருந்து கதைப்பது, சாப்பிடுவது எல்லாமே!

ஒரு நாள், இரவு நாய்கள் கடுமையாகக் குரைத்தன! யாரோ நடந்து திரியும் சத்தமும் கேட்டது!

அடிக்கடி மின்சாரமும் போய் விடுவதால், இறுக்கி மூடிக் கொண்டு, படுத்து விடுவேன்!

ஒரு முறை, விடுமுறையில், முதலாளி, வந்த போது, இது பற்றிக் குறிப்பிட்டேன்!

அவர் சிரித்து விட்டுக் கூறினார்!

அது எனது அம்மா தான்! நீ வீணாகக் கவலைப் பட்டுக் கொள்ளாதே! அவ உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவா!

அப்படியா, உங்கள் அம்மாவை, நான் ஒருநாளும் கனடதில்லை. எனக்கு, ஒரு முறை, அறிமுகப் படுத்தி விடுங்கள் என்று கேட்டேன்!

அவர், சிரித்து விட்டு ஒரு இடத்தைக் காட்டினார்!

அவர் சுட்டுவிரல், காட்டிய இடம், அந்த நீள் சதுரப் பூந்தோட்டம்!

(இந்தச் சம்பவம் கற்பனையல்ல)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனங்காயின் படமும் சகாரா அக்காவின் படமும் இன்று காலைவரை வேறு படங்கள் இருந்த மாதிரி நினைவாய் இருக்குது. இப்ப பாத்தால் வேற படங்கள் தெரியுது. இவை முகப்புப் படங்களை மாற்றி விட்டார்களா அல்லது எனக்குத்தான் அப்பிடித் தெரியுதோ விளங்கேல்லை.

ஒரு செட் பாக்கிடிக்கிற அம்மம்மா. மற்றய செட் படலையடியில் நிற்கிற அம்மம்மா. :D

வீபூதி அருகில் இருக்கா? :lol:

Posted

ஒரு செட் பாக்கிடிக்கிற அம்மம்மா. மற்றய செட் படலையடியில் நிற்கிற அம்மம்மா. :D

வீபூதி அருகில் இருக்கா? :lol:

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.