Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

சபேசன் தமீழீழம் என்னும் அரசியற் கோரிக்கைக்காக பல் ஆயிரம் உயிர்கள் தம்மைக் கொடுத்துள்ளனர். இன்னும் பல் ஆயிரம் பேர் தமது வாழ்வை இழந்துள்ளனர்.அத் தகைய ஒரு கனவை எனக்கு வேண்டாம் என்று சொல்ல எனக்கு அந்தத் தகுதியும் இல்லை என்றே கருதுகிறேன். இந்தப் பல் ஆயிரம் ஈகையாளாரின் கனவை அவர்களின் தியாகங்களை அர்த்த முள்ளதாக்கும் என்பதனாலயே நான் தமீழீழத்தை வேண்டுகின்றேன்.அத் தோடு உலக அரசியற் போக்குக்கள், சிங்கள மக்களின் இனவாத நன்ச்சூட்டல் என்பனவற்றை மிக அருகே இருந்து புரிந்து கொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தமீழீழத் தனி அரசே இந்த முரண்பாட்டிற்கான தீர்வாக அமையும் என்றும் உறுதியாக நம்புகிறேன். இன்று இதனை அங்கீகரிக்க மறுக்கும் சர்வதேச சக்திகளும் இந்த நிலைப்பாட்டிற்கே வர வேண்டி இருக்கும் என்றும் நம்புகிறேன்.

இதன் அடிப்படையில் தமீழீழம் என்பதை என்னால் கைவிட முடியாது. போராடும் சக்திகளும் மக்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களாலும் இதனைச் செய்ய முடியாது. உங்கள் வழி முறை என்ன என்பதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply

கடைசியில் வன்னியில் இறுதிப் போர். ஈழத்தின் மற்றயை பகுதிகள் தன்பாட்டில் வழமையாக இயங்குகின்றன. வெளிநாடுகளில் மட்டும் இங்கே உள்ள காவல்துறை தாக்காது என்ற தைரியத்தில் வீதியில் இறங்கினோம். உரத்துக் கத்திப் பார்த்தோம்.

வன்னியில் உள்ள மக்கள் மட்டும் போரடினார்கள். அதிலும் ஒரு பகுதி அந்த இடத்தில் இருந்து இராணுவத்திடம் தப்பி ஓடுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தது.

இதுவா மக்கள் போராட்டம்?

துரதிஸ்டவசமாக யாழ்ப்பாண தமிழர்களின் வர்க்க வேறுபாடு பிரமிட் வடிவில் இல்லாமல் வெங்காய வடிவில் அமைந்து விட்டது.

//சபேசன் உங்களின் போராட்ட வழி முறை என்ன ? செயற்பாடு என்ன? நீங்கள் இப்போது எவருடன் செயற்படுகிறீர்கள் என்பதைத் தெளிவாக எழுதவும்.அதனை வைத்தே நாம் விவாதிக்க முடியும். //

சபேசன் புலிகளை விடுங்கள் , உங்கள் வழியைத் தெளிவு படுத்துங்கள்.

ஒரு போராட்டத்தில் சிறுபான்மையினமான மேல்தட்டு வர்க்கம் பெரும்பாலும் தமது பொருள் நலன்கருதி எதிரியோடு நிற்கும். நடுத்தர வர்க்கம் இரு தரப்போடு இசைந்து கொடுத்து தன்னைக் காத்துக் கொள்ளும். அல்லது ஓடிப் போகும். அடித்தட்டு வர்க்கமே களத்தில் நிற்கும்.

இதனாற்தான் ஈழப் போராட்டத்தில் விகிதாசாரரீதியில் அதிகமான மட்டக்களப்பு, வன்னி மக்கள் தம்மை இணைத்துக் கொண்டார்கள். ஆனால் இந்த வர்க்கம் சார்ந்த பிரச்சனையும் பிரதேசவாதப் பிரச்சனையாக போனது.

தமிழினத்தில் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது. தமக்காகப் போராடிய தமது பிள்ளைகளையே தமது நலன்களின் பொருட்டு இன்றைக்கு விரட்டி அடிக்கிறது. இந்தக் கூட்டத்தால் போராடி தடியடி எல்லாம் வாங்க முடியாது. கூட்டமைப்பு வாக்குப் போடுவது மட்டுமே அதிகூடியதாக இதனால் செய்ய முடியும்.

இதற்கு மேல் நாம் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பன்றது கிருபன்னா நாங்க ஒன்றும் வீரமணி மாதிரி திராவிடர் கழகம் நடத்தில்யே விழிப்புணர்வு ஊட்ட அப்பிடி பண்ண போன ஒருத்தனும் திரும்பி பாக்க மாட்டான் நாங்க பண்ணுறது அரசியல் மக்களுக்கு எதில நம்பிக்கை இருக்கோ அத வைச்சு adikkiram....

டேய் வாங்கடா ஆர்பாட்டம் பண்ணலாம்ன 500 பேரு வாரனுங்க இதுவே சாய்பாபா படத்தில இருந்து திருநீறு வருதின்னா 5000 பேரு வாரனுங்க மக்களை நம்பி தானே அரசியல் பண்ணுறம்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் வாழ்ந்த தமிழ் மக்களின் உணர்வுகள் ஒன்றாகத்தான் இருந்தன. வீதிக்கு வந்து போராட இலங்கையரசு ஒருபோதும் அனுமதித்திருக்காது.

நெருக்கடிகள் அற்ற வாழ்வே போராட்ட உணர்வுகள் புலம் பெயர் நாடுகளில் மங்குவதற்குக் காரணம்.

நாரதர்,

இன்று என்னுடைய நோக்கம் ஒன்றுதான். உயிரோடு இருப்பது.

தமிழர்களின் தனித்துவம், தமிழ் மொழி, தமிழ் நிலம் என்பவற்றை உயிரோடு வைத்திருப்பது.

நான் எந்த அரசியல் சார்ந்த குழுவிலும் நேரடியாக இன்றைக்கு செயற்படவில்லை. மூன்று ஆண்டுகளில் தாயகம் திரும்பி கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மூன்று ஆண்டுகள் கணக்குக் கூட என்னுடைய சுயநலன்தான். என்னுடைய மனைவி பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு எடுத்ததுதான். எம்மால் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்பை செய்ய முடியும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

நான் ஒரு அலுவலாகப் போய்விட்டு வருவதற்குள் அவசரப்பட்டு மல்லையன் நிறைய எழுதிவிட்டார்.

பாலஸ்தீனத்தின மக்களை அடக்கி ஒடுக்குபவர்கள் சிங்கள அரசுக்கும் எமது மக்களை எப்படி அடக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். சிங்கள அரசு எம்மீது பயன்படுத்துபவை இஸ்ரேலியர்கள் சொல்லிக் கொடுத்ததையே.

ஆனால் அந்த மக்கள் ரப்பர் குண்டுகள் என்னும் பெயரில் வரும் நியக் குண்டுகளை எதிர்த்து கற்களோடு நின்றார்கள். அவர்களின் விடுதலை இயக்கம் வீதியில் இறங்கு என்று சொன்னவுடன் அவர்கள் இறங்கி நிற்கின்றார்கள்.

ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது. விடுதலைப் புலிகள் போரடினார்கள். நாம் பார்வையாளர்களாக இருந்து கொண்டு வெற்றி பெறும் போது கைதட்டினோம். தோல்வியுற்ற போது திட்டித் தீர்த்தோம். நாட்டை விட்டு ஓடினோம். எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கூட இயக்கத்தை மீறி ஓடினோம்.

ஆனால் அந்த மக்கள் ரப்பர் குண்டுகள் என்னும் பெயரில் வரும் நியக் குண்டுகளை எதிர்த்து கற்களோடு நின்றார்கள். அவர்களின் விடுதலை இயக்கம் வீதியில் இறங்கு என்று சொன்னவுடன் அவர்கள் இறங்கி நிற்கின்றார்கள்.

நாம் எதிர்த்தது எத்தனோ மடங்கு பெரிய கனரக ஆயுதங்களை. இவைகள் நாளும் பொழுதும் நம் வீடுகளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன. நம்மை துளைத்தது போலி ரப்பர் குண்டுகள் அல்ல. ICRC இன் உதவியுடன் பெறப்பட்ட வரைபடங்களை பாவித்து அடிக்கபட்ட செல்கள். இதில் நடந்து கொண்டிருந்தவற்றை புலம் பெயர் தமிழர்கள் ஒரளவு அறிந்திருந்தார்கள். மற்றயவர்கள் பெரும்பாலும் இருட்டில்தான் இருந்தார்கள். போர் முடிவுற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் சென்ற சுஸ்மா யாழ்ப்பாண பிறந்தநாள் பாட்டிகளில் இராணுவம் நிற்பதாக கண்டித்திருந்தார். யாழில் ரகுநாதனின் மொழிபெயர்ப்பு கட்டுரை, போராடிய நம் சகோதரிகளுக்கு நடப்பதை விரிவாக தெரிவித்திருந்தது. அதொங் தனது விவாதத்தில் சொல்லியிருப்பது "நீங்கள் தமிழீழம் பெற்றால் இங்கு வந்து தமிழ் பேசும் சிங்கள, முஸ்லீம்களை" ஆழுங்கள் என்று. இவையெல்லாம் பலஸ்த்தீனில் நடக்ககூடிவை இல்லை. பலஸ்தீனத்திற்கு ஒவ்வொருதடவையும் உள்ளெ செல்லும் இஸ்ரேலிய இராணுவம் கடைசியில் அவர்களின் இடத்தை விட்டு இஸ்ரேலுக்கு திரும்பியே ஆக வேண்டும். சாதரண பாதுகாப்பை பலஸ்தீன் பொலிஸ் உறுதி செய்கிறது. நமக்கு 13ம் திருத்தம் நடை முறையில் இல்லை .இராணுவ ஆட்சி வடக்கில்.பொலிஸ் பாதுகாப்பில்லை. வீட்டில் ஒருவரின் சந்தேகத்திற்கு முழுக் குடும்பத்தையும் இராணுவம் கையாள்கிறது. இது பலஸ்தீனில் நடக்க முடியாது.

இஸ்ரேலிய முறைகள் இலங்கையில் பாவிக்கப்படவில்லை. இலங்கையில் நடந்தைவையெல்லாம் 10,000,000 மடங்கு குறூரமானவை. இவை போர்குற்றமாக ஐ.நாவால் தனது நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கபட்டிருக்கிறது. மேற்குநாடுகள் இதை இலங்கை விசாரிக்க வேண்டும் என்கின்றன. ஆனால் நிரூபணம் கண்ட விவகாரம் மாதிரி இன்னமும் இலங்கையை கண்டிக்கவில்லை. இலங்கையே இஸ்ரேலை கண்டித்து ஐ.நா.வில் பிரேரணைகள் நிறைவேற்றியிருக்கு. நாம் அமெரிக்க பிரேரணை ஒருநாள் அந்த அளவிற்குதன்னும் செல்லும் என்று காத்திருக்கிறோம்.

நமக்கும் பலஸ்தீனுக்குமிடையில் மடுவுக்கும் மலைக்குமிடையிலான வித்தியாசம்.

[size=5]நமக்கும் பலஸ்தீனுக்குமிடையில் மடுவுக்கும் மலைக்குமிடையிலான வித்தியாசம்.[/size]

[size=4]வடக்கு கிழக்கு தாயக பிரதேசம் அங்கு தான் உள்ளது, அது எங்கேயும் போய்விடவில்லை.[/size]

[size=4]அது போல தனி நாட்டு கோரிக்கையை கை விட்டாலும், சுய நிர்ணய உரிமை யாராலும் கைவிட முடியாது. [/size]

பாலஸ்தீன மக்கள் எவ்வகையான குண்டுகளை எதிர்கொண்டார்கள் என்பதை அவர்கள் நல்ல வேளையாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு காவல்துறை அதிகாரம் கிடைப்பதற்கு முன்னம் இருந்தே அவர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களை உதாரணம் எடுத்தது மக்களின் போராட்டம் பற்றி விளங்கப்படுத்தவே. உலகின் அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டி "இதனால்தான் அந்த மக்கள் போல் எங்களால் வீதிகளில் இறங்க முடியவில்லை" என்று சொல்வது எனக்கு சரியாகப் படவில்லை.

இதை நாங்கள் எங்களை நம்பிப் போனவாகளுக்கு முன்னமேயே சொல்லியிருக்கலாம். அவர்களும் உயிரோடு இருந்திருப்பார்கள்.

இன்றைக்கு விடுவிக்கப்பட்ட போராளிகள் படுகின்ற அவலங்களே எமது போராட்டத்தின் நிலைக்கான ஆதாரம்.

இரண்டாம் உலகயுத்தம் முடிந்து மனிதகுல வீரோத நடவடிக்கைகளில் நாசிப் படையினர் கைதிகளாகி பின்பு விடுவிக்கப்பட்டு வீடு திரும்புகிறார்கள். அவர்களை அவர்களின் குடும்பங்களும் சுற்றுமும் ஏற்றுக்கொள்கிறது. முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது.

நாங்கள் எமக்காக போராடிய எமது போராளிகளை பிச்சை எடுக்கவும் பாலியல் தொழில் செய்யவும் விட்டுவிட்டு எமது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இனி இந்த இடத்திலும் ஜேர்மனியில் நிலை வேறு, ஈழத்தில் நிலை வேறு என்று வேறுபாடுகளை மட்டும் சொல்லிக் கொண்டு நிற்காதீர்கள். சாட்டுக்கள் சொல்வது இலகுவானது.

வீடு திரும்புகின்ற போராளியை சாட்டுச் சொல்லித்தான் அவரை வீதிக்கு எமது சமூகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த சமூகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் எம்மால் விடுதலைப் பாதையில் பயணிக்க முடியும் என்பதையே நான் ஆராய்கிறேன்.

இந்த தூரப் பயணத்தில் மாகாணசபை, சமஸ்டி என்று நிறைய இடங்களில் நின்று நீண்ட காலம் இளைப்பாற வேண்டி வரும் என்பதை உணர்ந்தே நடக்கிறேன்.

இந்த தூரப் பயணத்தில் மாகாணசபை, சமஸ்டி என்று நிறைய இடங்களில் நின்று நீண்ட காலம் இளைப்பாற வேண்டி வரும் என்பதை உணர்ந்தே நடக்கிறேன்.

என்னுடய நிலை இப்போதைக்கு கூட்டமைப்பு தான் விருபியபடி பேச்சுவார்த்தையில் ஈடுபடட்டும். இதை அவர்கள் வெளிநாட்டவர்களுக்கு வெளிப்படையாக வைத்திருக்கட்டும். இந்தியா கொண்டுவந்த 13ம் திருத்தம் எப்படி கறையான் அரித்த கரும்பானது என்றதை வெளிநாட்டவர்களுக்கு உணர்த்தட்டும். அதை அமூல்படுத்தவேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லாதது மட்டும் அல்ல அதை வடக்கு கிழக்கை பிரித்தோ அல்லது திவி நிகும்பா மாதிரி அதிகாரங்களை திருடும் சட்டங்களைக் கொண்டு வந்தோ சிதைக்க வேண்டிய அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அதில் ஆளுநரை வரையின்றி. நியமிக்கலாம். காலவரையின்றி தேர்தலை தடுக்கலாம். மாகாணத்தை பழிவாங்க அவசரகால சட்டத்தை மாகாணம் மீது பாவிக்கலாம். இவற்றை சம்பந்தர் வெளிநாடுகளுக்கு விளங்கப் படுத்தவேண்டும். இதன் பிரகாரம் 13+ கிடைத்தால் சற்றுக்காலம் பழிவாங்கல் இல்லாமல் மாகாணத்தை ஆளமுடியும். சுயநிர்ணய உரிமை இல்லாத தீர்வெல்லாம் வெறும் காற்றடித்த பலூன்கள் மட்டுமே.

[size=4]பாலஸ்தீன மக்கள் எவ்வகையான குண்டுகளை எதிர்கொண்டார்கள் என்பதை அவர்கள் நல்ல வேளையாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இதை விபரிப்பதுதான் இங்கே தேவைப்படுகிறது.[/size]

[size=4] [/size]

[size=4]அவர்களுக்கு காவல்துறை அதிகாரம் கிடைப்பதற்கு முன்னம் இருந்தே அவர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்[/size][size=4]. 1956 இல் காலிமுகத்தில் நாமும் இருந்துதான் போராடினோம். எகாம்பரம் இறந்தது, வன்னியசிங்கம் இறந்தது எல்லாம் இதனால்த்தான். [/size]

[size=4]பாலஸ்தீனர்களை உதாரணம் எடுத்தது மக்களின் போராட்டம் பற்றி விளங்கப்படுத்தவே. [/size]

அது வரைக்கும் வடிவாக விளங்கிறது. எமக்கு.அது பொருத்தமில்லாத்து எனபதை நான் பலதடவை விளங்கபடுத்திவிட்டேன். இன்னமும் அது விளங்காமல் இருப்பதுதான் ஏமாற்றமாக இருக்கிறது.

[size=4]உலகின் அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டி "இதனால்தான் அந்த மக்கள் போல் எங்களால் வீதிகளில் இறங்க முடியவில்லை" என்று சொல்வது எனக்கு சரியாகப் படவில்லை.[/size]

[size=4][size=4]அதை வைத்துதான் எல்லாப் போராட்டமும் திட்டமிடப்படுகிறது. மக்கள் தெருவில் இறங்கலாமா , முடியாதா என்பதில் தான் ஆயுத போராட்டமா அல்லது மக்கள் போராட்டம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. வழமையில் காலில் குத்திய முள்ளிற்கு ஒப்பரேசன் தியேட்டரில் போய் படுப்பவர்கள் யாருமில்லை. [/size][/size]யாருக்காவது தோல் வெள்ளை அல்லது தலை சுருள் என்ற விவாதத்தைவிட எதாவது நல்லதாக முன் வைக்க முடியுமா என்றுதான் நான் கேட்டிருந்தேன். என் முதல் கேள்வியான எவ்வகையில் பலஸ்தீன,- தமிழ் ஈழப்போராட்டம் ஒற்றுமைப்படுகிறது/வேற்றுமைப்படுகிறது என்பதற்கு பதில் இல்லை என்பதுதான் இப்போதைய விளக்கம் என்றுதான் நான் ஆரம்பத்திலேயே கூறிருந்த மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

[size=4]இதை நாங்கள் எங்களை நம்பிப் போனவாகளுக்கு முன்னமேயே சொல்லியிருக்கலாம். அவர்களும் உயிரோடு இருந்திருப்பார்கள்.[/size]

நான் பேசுவது சயனட் குப்பியுடன் போன தியாகிகளைபற்றி, தயவு செய்து யாரை பற்றி நீங்கள் பேசுகிறிகள் என்பதை சொல்ல முடியுமா?

அகுதா ஏற்கனவே சொல்லிவிட்டார் எம்மை நம்பி இறந்தவர்களை கைவிட்டுவிட்டு சுயநிர்ணய உரிமைதன்னும் இல்லாத மாகாண சபை நமக்கு தேவை இல்லை என்று. அதன் பின் இந்த கருத்து எங்கிருந்து வருகிறது எனபதை விளக்க முடியுமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு குறுகியகாலத் தீர்வாக மாகாணசபையை ஏற்றுக் கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை தந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நான் தயராக இருக்கிறேன்.

மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.

அவசரமான ஒரு சந்திப்பு இருக்கிறது. சில மணித்தியாலங்கள் கழித்து தொடர்கிறேன்.

சில காலங்களுக்கு முன் தமிழர்களுக்கான தீர்வு தீவு ஒன்றை வாங்கி குடியேற்றலாம் என கருத்து வழங்கி இருந்தீர்கள். இப்போ மாகாணசபையே போதும் என்கிறீர்கள். இன்னும் சில காலத்தில் முடிவுகள் மாறும் என எதிர்பார்க்கலாம் தானே.

நுணாவிலான்,

தீவு ஒன்றை வாங்கிக் குடியேறலாம் என்பதை ஒரு தீர்வாக எங்கே நான் வைத்தேன். தீர்வு என்பது வேறு, தீர்வாக்கான போராட்ட வழிமுறை என்பது வேறு.

தமிழர்களின் விடுதலைக்கான தீர்வுக்கான போராட்ட வழிகளாக நான் மூன்று யோசனைகளை கூறியிருந்தேன். அதில் ஒன்றாக "குடியேற்றத் தமிழீழம்" ஒன்றை உருவாக்குவது பற்றியும் பேசியிருந்தேன். இதை தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தின் பின்தளமாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

கவலைப்படும்படியாக சிலருக்கு நான் சொல்கின்ற கருத்துக்கள் புரியவில்லை. அல்லது வேண்டுமென்றே திரிக்கிறார்கள்.

கவலைப்படும்படியாக சிலருக்கு நான் சொல்கின்ற கருத்துக்கள் புரியவில்லை. அல்லது வேண்டுமென்றே திரிக்கிறார்கள்.

நம்மவர்கள் தொகை தொகையா இறக்கும் போது, சித்திரவதை படும் போது உணர்வின்றி,அதை வைத்து பெயருக்கும் பொருளுக்கும் சொற் சிலம்பம் ஆடும் போது சிலர் தம்மீது பரிதாபம் காட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எதையும் விளக்க மறுக்கிறார்கள். அல்லது யாழில் அங்கத்தவர் இல்லாத வேறுயாரோவுக்காக அவர்களின் கருத்தை யாழுக்கு கொண்டு வந்து விளக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

1.நாம் 65 ஆண்டுகளில் இரண்டு மாகாணங்களில்(சிலரின் வாதப்படி படி 15 பிரதிநிதிகளை பெற்று ஒன்று முஸ்லீம்களினால்) இருந்து துரத்தப்பட்ட பின் இன்னும் 100 ஆண்டுகளில் எப்படி தமிழீழம் வரும்?

2.நமக்கும் பலஸ்தீனியருக்குமிடையில் போராட்டத்தில் என்ன ஒற்றுமை/வேற்றுமை. நாம் எப்படி ஆகாயத்தில் இருந்து கிளஸ்டர் குண்டு போடும் இராணுவத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பலஸ்தீனியர் மாதிரி கல்லேறிய முடியும்?. யாழ் மட்டக்களப்பு மக்கள் மீது உணர்வில்லாத நையாண்டி தேவைதான.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஆயுதம் தூக்குவது அல்ல மக்கள் போராட்டம் என்பது. சிலர் ஆயதம் ஏந்த மற்றவர்கள் அவர்களுக்கு பக்க பலமாக நின்றாலே போதும், அதை மக்கள் போராட்டம் என்று சொல்லலாம்.

ஆனால் வன்னியில் பெரும் மனித அவலம் நடந்து கொண்டிருக்க, அதிலேயிருந்த சில பத்து மைல்கள் தள்ளி நல்லூரில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் முள்ளிவாய்க்காலின் போதும் கூட யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ மக்கள் வீதிக்கு வரவில்லை.

இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால் பெரியவரில் இருந்து சிறியவர் வரை கற்களைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கி விடுவார்கள். அதை உலகமும் மக்கள் போராட்டம் என்றுதான் சொல்கின்றது.

தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமக்கு வலிக்காத முறையிலேயே போராடுவதற்கு தயாரானவர்கள்.

நிச்சயமாக இவர்களக்கு தமிழீழம் பற்றிய ஆசை இருக்கிறது. இந்த ஆசை ஒரு நூறு ஆண்டுகள் கழித்து தமிழீழத்தை உருவாக்கித் தரக்கூடும்.

நான் நூறு ஆண்டுகள் கழித்து வரக் கூடிய தமிழீழம் பற்றியே சிந்திக்கிறேன். அது அமைவதற்கான நிலத்தையும் மக்கள் கூட்டத்தையும் தக்க வைப்பது எப்படி என்றே சிந்திக்கிறேன்.

ஈழத்தின் இராணுவ ஆக்கிரமிப்பின் ஜனனாயகத்தின் தன்மை பலஸ்தீனத்துடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லையா இப்படியான முரண்பாட்டை வாய் மொழிவதற்கு?

பலஸ்தீனர்களின் தலையில் இராணுவம் கல்லை எறிந்தாலே பல நூறு நாடுகளின் அரிச பத்திரிகைகளுக்கு அது முதன்மைச் செய்தி. ஆனால் இங்கோ பிறப்புறுப்பில் குண்டை வைத்த அட்டூழியத்தைக் கூட எட்டிப்பார்த்த ஏடுகள் தமிழ்நாட்டிலேயே இல்லை!

மட்டக்களப்பில் குடும்பத்துடன் வெட்டிக் குவித்த அந்த ஜனனாயகம் மக்களைக் காக்குமா? மன்னாரின் நிகழ்ந்த அவலம் என்ன? தீவில் நிகழ்ந்த அவலம் என்ன?

கருணாநிதி பாணியில் அவரைக் காக்க மக்களையும் புலிகளையுமா இப்போது பதம் பார்பது?

கோவில்களின் நிகழ்வுகள் வேண்டாதவைதான் இப்போது. ஆனால் யாழில் ஒவ்வொரு கட்டுமானமும் எட்டப்பர்களின் முகாமைத்துவம் தானே முன்னெடுக்கின்றது. உண்மை உலகறியாததால் கூட்டம் சேர்கின்றது!

நாரதர்,

இன்று என்னுடைய நோக்கம் ஒன்றுதான். உயிரோடு இருப்பது.

தமிழர்களின் தனித்துவம், தமிழ் மொழி, தமிழ் நிலம் என்பவற்றை உயிரோடு வைத்திருப்பது.

நான் எந்த அரசியல் சார்ந்த குழுவிலும் நேரடியாக இன்றைக்கு செயற்படவில்லை. மூன்று ஆண்டுகளில் தாயகம் திரும்பி கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மூன்று ஆண்டுகள் கணக்குக் கூட என்னுடைய சுயநலன்தான். என்னுடைய மனைவி பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு எடுத்ததுதான். எம்மால் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்பை செய்ய முடியும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இந்த மூன்று ஆண்டுகளில் எதுவும் நடக்கலாம் ...............தமிழர்களுக்கு தமிழீழமும் கிடைக்கலாம் ,கூட்டமைப்பு ஒன்று இல்லாமலும் போகலாம் .............அல்லது அமெரிக்க ,இந்தியப்படைகள் தமிழீழத்திற்குள் பிரவேசிக்கலாம் ,அல்லது அல்லது சீனாவின் முளுக்கட்டுப்பாட்டுக்குள்ளும் இலங்கை விழுந்து விடலாம் .......அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தாயகப்பகுதியில் பிசன்னமாகலாம் ...................இன்னும் என்ன என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை யாராலும் கூறமுடியாது .............ஏனனில் வரலாற்றை திரும்பி பார்த்தோம் ஆனால் பல உண்மைகள் எங்களுக்கு புரியும்...................ஒரு உதாரணம் ...

இந்தியன் இராணுவம் ipkf ஆக வரும்போது அவர்கள் எம்மை தாக்குவார்கள் என்று நினைத்தோமா ????? அல்லது அவர்களால் அழிக்கப்பட்டதாக அல்லது துரத்தப்பட்டதாக கூர்ர்ப்பட்ட த.வி .பு கள் மீண்டும் பலம் கொண்டு திரும்புவார்கள் என்று நினைத்தோமா..

ஆகவே இலங்கை அரசியல் இதுதான் என்று யாராலும் கூறமுடியாதபடி சிக்குப்பட்டு இலங்கை அரசியல்வாதிகளே தத்தளிக்கும் இந்த வேளையில் ......................தற்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று யதார்த்தபூர்வமாக எம் முன்னைய அனுபவங்களை வைத்து செயற்பட நினைப்பதே இன்றைய அத்தியாவசிய தேவையாகும் ............. :)

நாரதர்,

இன்று என்னுடைய நோக்கம் ஒன்றுதான். உயிரோடு இருப்பது.

தமிழர்களின் தனித்துவம், தமிழ் மொழி, தமிழ் நிலம் என்பவற்றை உயிரோடு வைத்திருப்பது.

நான் எந்த அரசியல் சார்ந்த குழுவிலும் நேரடியாக இன்றைக்கு செயற்படவில்லை. மூன்று ஆண்டுகளில் தாயகம் திரும்பி கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மூன்று ஆண்டுகள் கணக்குக் கூட என்னுடைய சுயநலன்தான். என்னுடைய மனைவி பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு எடுத்ததுதான். எம்மால் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்பை செய்ய முடியும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

நீங்கள் உங்கள் சுய நலனைப் பார்ப்பது போல் தான் மற்றவர்களும் பார்ப்பார்கள்.இன்று மூன்று வருடம் என்று சொல்கிறீர்கள், பின்னர் அது இன்னும் மூன்று வருடம் ஆகலாம். நேரடியாகப் பாதிக்கப்படும் போதே ஒருவருக்குப் போராட வேண்டும் என்னும் உத்வேகம் வரும்.சிலருக்கு அறச்சீர்றத்தால் வரலாம்.அப்படிப் போவோர் வெகு சிலரே.

நீங்கள் வரும் வரை மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்படப் போவதில்லை.பிரச்சினை இருப்பவர்கள் போராடுவார்கள்.இங்கிருந்து கொண்டு நீ இப்படிப் போராடு இதற்காகப் போராடு எனக் கூற எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது.அதனால் தான் சொல்கிறேன் தமீழீழத்தை சபேசன் என்னும் தனி நபர் கைவிடுவதாலோ இல்லை தூக்கிப் பிடிப்பதாலோ ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை.

புலத்தில் இன்றிருக்கும் நாம் எம்மால் எமது மக்களுக்கு இப்போது என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும்.உலகம் பல்வேறு நலங்களின் மத்தியிலையே இயங்குகிறது. நாடுகள் அணிகள் இடையேயான ஊடாட்டம், நாடுகளுக்குள் உள்ள பல்வேறு சக்திகளின் நலங்கள் என நாம் இங்கிருந்தே இயங்குவதற்கான களங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் பயன் படுத்த வேண்டும். அது தனி நபர்களால் முடியாது , அமைப்புக்கள் நிறுவங்களாலையே முடியும்.அவ்வாறான ஒரு அமைப்பே நா க த அரசு.அதன் குறை நிறைகளுக்கு அப்பால் அது ஒரு இயங்கு தளம்.அவ்வாறு பல இயங்கு தளங்கள் இருக்கின்றன.இல்லாத இடத்து நாம் அவற்றை உருவாக்க வேண்டும்.

நான் மூன்று வருடத்திற்க்குப் பின்னர் ஈழம் சென்று மக்கள் போரை நாடாத்துவேன் என்பதுவும், இணையத்தில் இருந்து புரட்சி செய்யும் பலரது விமர்சனங்களும் எந்தப் பயனையும் எவருக்கும் தரப் போவதில்லை என்பதே யதார்த்தம்.புலிகள் அழிந்த மூன்று வருடங்களால் எந்த மாற்று சிந்தனையாளர்களாலும் ஒரு மாற்று வழியியையும் இதனாலேயே உருவாக்க முடியாது போனது.

சிந்தனை அற்ற செயற்பாடும், செயற்பாடு அற்ற சிந்தனையும் எந்தப் பயனையும் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு குறுகியகாலத் தீர்வாக மாகாணசபையை ஏற்றுக் கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை தந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நான் தயராக இருக்கிறேன்.

மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.

அவசரமான ஒரு சந்திப்பு இருக்கிறது. சில மணித்தியாலங்கள் கழித்து தொடர்கிறேன்.

[size=4]இதை வாசிக்கும் போது.............[/size]

[size=1]

[size=4]நீ யார்? [/size][/size][size=1]

[size=4]என்ற கேள்விதான் வருகிறது.[/size][/size]

[size=1]

[size=4](உங்களிடைய சுயவிருப்புகள் அல்லது உங்களுக்கு சரியென வடுபவையே சரியானவை என்ற மனபிராந்தியில் இருந்து கொண்டுதான் மக்கள் போராட்டம் பற்றி உங்களால் எழுதமுடிகிறது. இதில் போராட்டம் மக்கள் மாயம் மாயம் இப்படிதான் இனி எழுதமுடியும்) ஆக்கப்படவில்லை என்ற ஒரு குற்ற சாட்டை வேறு தூக்கி போடுறீங்கள்)[/size][/size]

[size=1]

[size=4]நான் நன்றாக தெளிந்துவிட்டேன் [/size][/size][size=1]

[size=4]நான் நன்றாக சிந்திக்கிறேன்[/size][/size][size=1]

[size=4]நான் அறிவாளி[/size][/size][size=1]

[size=4]இந்த எண்ணங்கள் உங்களை நாம் கவலை கொள்ளும் இடங்களுக்கு கூட்டி சென்றுவிடும். அப்படியான இடங்களுக்கு சென்றுவிடாதீர்கள்.[/size][/size][size=1]

[size=4]யோ. நீ. கர்ணன் மற்ற பாரிசில் இருந்து புலிவாந்தி எடுத்து வயிறு கழுவுற கூட்டம் எல்லாம் வேறு ஏதாவது புத்தகம் வாசித்து தாம் எதோ திறந்த மனத்தோட இருக்கிற மாதிரி அப்ப அப்ப புலுடா விடுவார்கள். அதை மாதிரி நீங்களும் இல்லை என்று மறுக்காதீர்கள் நீங்கள் எழுதுவதை திரும்ப வாசித்து. நீங்கள் எந்த இடத்தில் இருந்துகொண்டு எழுதுகிறீர்கள் என்று திரும்பி பாருங்கள்.[/size][/size]

சுவிஸ் புலிகளுக்கு, தமிழீழத்திற்கு ஆதரவான நாடு. அது இப்படி அழுத்தங்களை பிரயோகிக்கிறதா?

முதலில்

நாடு கடந்த அரசு மேல் நீங்கள் எத்தனைபேர் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?

நான் நாடுகடந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்கள் பாதை மாறாத வரை நான் ஆதரவளிப்பேன்.

எம்மை பொறுத்தவரை அவர்களை விட்டால் வேறு வழியில்லை. ஆனால் சர்வதேசத்தை பொறுத்தவரை அவர்கள் பலம் குறைந்த நிலையில் உள்ளார்கள். எனவே நாடுகடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாமும் சேர்ந்து ஆதரவளித்து அவர்கள் பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும். முயற்சிப்போம்.

அவர்கள் தமிழீழத்தை விட்டுக்கொடுக்கின்றோம்தமிழருக்கு ஒரு தீர்வை முன் வையுங்கள் என்ற நிலை எடுத்தால் அவர்கள் மீதான தங்கள் நம்பிக்கை எவ்வாறு அமையும்?

நான் ஆதரவளிக்க மாட்டேன்.

[size=4]எனது ஆதரவு அப்படி ஒரு நகர்விற்கு இருக்கும்.

காரணம் அதன் மூலம் சிங்கள உண்மைமுகம் மீண்டும் வெளியில் தெரியப்படுத்தப்படும்.[/size]

சிங்களத்தின் உண்மை முகத்தை சர்வதேசம் இப்பொழுது அறியாமல் இல்லை.

மீண்டும் ஒரு தடவை வெளிப்படுத்தப்பட்டால் மட்டும் சிங்களத்துக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்றில்லை. அதற்குள் காலம் கடந்து விடும். channel 4 வெளியிட்ட காணொளிகள் மறக்கப்பட்டு விடும். எமது பிரச்சினைகளையும் சர்வதேசம் கணக்கில் கொள்ளாது. எனவே தற்பொழுது ஐ.நா வரை இலங்கை விடயம் சென்ற இந்த வேளையில் இப்படியொரு நகர்வு அனைத்தையும் பாதிக்கும் என்பது என் கருத்து.

சபேசன் அண்ணாவையும் மல்லை அண்ணாவையும் மீண்டும் ஒரே திரியில் காண்கிறேன். :D

நாரதர் அண்ணாவுக்கு பச்சை போட பின்னர் வருவேன். :)

மூன்று ஆண்டுகள் பற்றி தமிழ்சூரியனும் நாரதரும் சொன்ன கருத்துக்கள் சரியானவை. இதை நானும் உணர்ந்தே இருக்கின்றேன்.

கூட்டமைப்பு என்பது இன்றைய நிலையை வைத்து ஒரு உதாரணத்திற்கு சொன்னது. தமிழர்களின் உரிமைக்காக அரசியல் மற்றும் ராஜதந்திர வழியில் இருக்கின்ற வளங்களின் அடிப்படையில் போராடுவது என்று இதற்கு பொருள் கொள்க.

மூன்று ஆண்டுகளின் பின்பு இதற்கு பொருத்தமான முறையில் யார் செயற்படுகிறார்களோ அவர்களோடு இணைந்து கொள்வது என்றும் தாயகத்திலேயே என்னுடைய வாழ்க்கயை தொடர்வது என்றும் தீர்மானித்திருக்கிறேன்.

அதுவரை இங்கேயிருந்து என்னால் இயன்ற பணிகளை தொடர்ந்து செய்வேன். ஆனால் எனக்கு சாத்தியம் என்று நம்புவதையே செய்வேன்.

நான் ஒரு தனிநபர் என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். என்னுடைய முடிவு இனத்தின் முடிவாக முடியாது. அதே வேளை எனக்கு இருக்கும் பொறுப்பையும் நான் தட்டிக் கழிக்க முடியாது. என்னால் முடிந்தளவு எனக்கு சரி என்று படுவதை சொல்வேன், செய்வேன்.

நாளை மிகுதியை தொடர்கிறேன்.

மூன்று ஆண்டுகள் பற்றி தமிழ்சூரியனும் நாரதரும் சொன்ன கருத்துக்கள் சரியானவை. இதை நானும் உணர்ந்தே இருக்கின்றேன்.

[size=4]அரசியலில் நூறுவருடம் கதைப்போர் மூன்று வருடத்தில் கூட்டமைப்பு எங்கே போகும் என்பதை அறியார். ஆனால் மூன்று வருடத்தின் பின் போராட்டத்தின் தேவை எப்படி இருக்கும் என்பதை அறிவார். அதில் தனது பங்கு எது என்பதும் தெரியும். மூன்று வருடத்தின் பின் இந்தியா ஆயுத போராட்டம் என்று திரும்பத்தொடங்கினால் அவர்களுடனும் சேரவும் தயார்? [/size]

[size=4]"கூட்டமைப்பு என்பது இன்றைய நிலையை வைத்து ஒரு உதாரணத்திற்கு சொன்னது. தமிழர்களின் உரிமைக்காக அரசியல் மற்றும் ராஜதந்திர வழியில் இருக்கின்ற வளங்களின் அடிப்படையில் போராடுவது என்று இதற்கு பொருள் கொள்க.[/size]

இது இன்னொரு பலஸ்தீன உதாரணம்

மூன்று ஆண்டுகளின் பின்பு இதற்கு பொருத்தமான முறையில் யார் செயற்படுகிறார்களோ அவர்களோடு இணைந்து கொள்வது என்றும் தாயகத்திலேயே என்னுடைய வாழ்க்கயை தொடர்வது என்றும் தீர்மானித்திருக்கிறேன்."

[size=4]தீர்க்க தரிசனம் இல்லாத சிந்தனை. பாதை எங்கே போகிறது என்பதை அறிய விரும்பதா மனத்துடன் பயணம். சந்தர்ப்பவாதமாக ஆற்றோட்டத்துடன் மட்டும் நீந்த தாயார். எதிர் நீச்சல் போட த்தயாரில்லை.[/size]

[size=4]திட்டவட்டமில்லாத கொள்கைகள். மாரியில் வடக்கிலிருந்தும் கோடையில் தெற்கிலிருந்தும் வீசும் காற்று. தனக்கென திசையில்லாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.[/size]

[size=4]திடமில்லாத நெஞ்சு தோல்வியை கண்டு தள்ளாடிப் போகிறது.[/size]

[size=4]ஒரு கருத்தை வைத்து முடிவு காணும் வரை விவாதிக்க தயாரில்லை.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இதை வாசிக்கும் போது.............[/size]

[size=1][size=4]நீ யார்? [/size][/size]

[size=1][size=4]என்ற கேள்விதான் வருகிறது.[/size][/size]

[size=1][size=4](உங்களிடைய சுயவிருப்புகள் அல்லது உங்களுக்கு சரியென வடுபவையே சரியானவை என்ற மனபிராந்தியில் இருந்து கொண்டுதான் மக்கள் போராட்டம் பற்றி உங்களால் எழுதமுடிகிறது. இதில் போராட்டம் மக்கள் மாயம் மாயம் இப்படிதான் இனி எழுதமுடியும்) ஆக்கப்படவில்லை என்ற ஒரு குற்ற சாட்டை வேறு தூக்கி போடுறீங்கள்)[/size][/size]

[size=1][size=4]நான் நன்றாக தெளிந்துவிட்டேன் [/size][/size]

[size=1][size=4]நான் நன்றாக சிந்திக்கிறேன்[/size][/size]

[size=1][size=4]நான் அறிவாளி[/size][/size]

[size=1][size=4]இந்த எண்ணங்கள் உங்களை நாம் கவலை கொள்ளும் இடங்களுக்கு கூட்டி சென்றுவிடும். அப்படியான இடங்களுக்கு சென்றுவிடாதீர்கள்.[/size][/size]

[size=1][size=4]யோ. நீ. கர்ணன் மற்ற பாரிசில் இருந்து புலிவாந்தி எடுத்து வயிறு கழுவுற கூட்டம் எல்லாம் வேறு ஏதாவது புத்தகம் வாசித்து தாம் எதோ திறந்த மனத்தோட இருக்கிற மாதிரி அப்ப அப்ப புலுடா விடுவார்கள். அதை மாதிரி நீங்களும் இல்லை என்று மறுக்காதீர்கள் நீங்கள் எழுதுவதை திரும்ப வாசித்து. நீங்கள் எந்த இடத்தில் இருந்துகொண்டு எழுதுகிறீர்கள் என்று திரும்பி பாருங்கள்.[/size][/size]

மிக அழகாக இக்கருத்தியலின் மூலச் சூத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்!

பாராட்டுக்கள்!

சிலருக்கு கருத்து எழுதத் தெரியாவிட்டாலும் சீண்டத் தெரியும்.......

30 வருடமாக மேய்பட்டவர்கள் தானே.

ஊரை பாக்காது சம்பேசன் தான் கோவணத்துடன் தான் ஓடுவேன் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

Edited by I.V.Sasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.