Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி தெரிவித்தல் நாள் - தேங்ஸ் கிவ்விங் டே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும்.

தோற்றம்
சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.

தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.

நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு முன்னால் வரிசையில் நிற்பார்கள். இந்த தினம் நவம்பர் மாதம் கடைசியில் வருமாதலால் ஓரளவிற்குக் குளிர் இருக்கும்.நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று உறவினர்களோடும் நண்பர்களோடும் பெரிய விருந்து உண்டு பிறகு அந்தக் குளிரில் வரிசையில் நின்று பரிசுப் பொருட்களை வாங்குவார்கள்.

 

http://bhrindavanam.blogspot.ca/2009/11/blog-post_11.html

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பகிர்வுக்கு நன்றி.........[/size]

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1378824_10153348828920035_2047414516_n.j

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி......... 

பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
கனடிய உறவுகளுக்கு இனிய பரிசு கொடுக்கும்( happy thanksgiving day] நாளாக அமையட்டும்.யாயினி, பகிர்வுக்கு நன்றி.
 
Spoiler

Edited by nunavilan

இந்த நாளுக்குப் பரிசுகள் கொடுப்பதில்லை நுணாவிலான்.  இந்த நாளின் போது, குடும்பங்கள் அனைவரும் இணைந்து Turkey வெதுப்பகத்தில் (Bake) வேகவைத்து, சோளம் மற்றும் காய்கறிகள் வேகவைத்து இரவு உணவாக உண்பார்கள்.  இது ஒரு குடும்ப ஒன்றுகூடலாக இருக்கும்.  இவ்வாறான நாட்களில்தான், இளையோர்கள் தங்கள் துணைகளையும் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.   :wub:  :wub:  :wub:  இதனைக் கலாச்சார வேறுபாடின்றி அனைவரும் பின்பற்றுகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு கொடுக்கும் நாள் என்ற தமிழாக்கம் தவறானது. நன்றி தெரிவிக்கும் நாள் என்பதே சரியான பதம். நன்றிகள் தமிழச்சி. தவறுக்கு வருந்துகிறேன்.பழங்குடியினருக்கு நன்றி தெரிவிக்கும் நாள் என்பதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

Happy Thanks Giving Day, CANADA!

 

அதென்ன பூசணிக்காய், கனகாலம் இருந்திட்டுது போல!

 

காம்பு நுனி நல்லாக் காஞ்சு, மெலிஞ்சு போய்க் கிடக்குது! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 அனைத்துக் கனேடியக் குடும்பங்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் 

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் நாம் தை பொங்கல் கொண்டாடுவதுபோல உழவர் திரு நாள்

இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் கடவுள் பூச்சாண்டி காட்டாத, மதசார்பற்ற ஒரு கொண்டாட்டம். காரணிகன் சொல்வது போன்று எம் பொங்கல் தினத்தினை ஒத்த  விவசாயிகள் தம் நன்றியை இயற்கைக்கும் தமக்கு உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தினம்.  அதனால் தான் summer முடிவடைந்து Fall ஆரம்பிக்கும் போது கொண்டாடப்படுகின்றது.

 

தகவலுக்கு நன்றி யாயினி

 

  • கருத்துக்கள உறவுகள்

தைப் பொங்கல் பற்றிய பிழையான புரிதல் நிழலி. உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், அது ஆரியரிடம் இருந்து தான் எமக்கு வந்திருக்க வேண்டும். எல்லா விளக்கமும் சொல்கின்ற மேதைகள் அது ஏன் மகரராசிக்குள் சூரியன் புகும் நாளாகப் பார்த்துத் தான் வருகின்றது என்பதற்கான மத சம்பிர்தாயம் பற்றிச் சொல்வதில்லை.

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.