Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களுக்கு தனித்துவ அந்தஸ்த்து! சிங்கள அரசுக்கு சாட்டையடி!!

Featured Replies

பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக ஆழும் கட்சியில் இருக்கும் லியாம் பொஃக்ஸ் அவர்களை பல தமிழர்கள் அறிந்திருப்பார்கள். அவர் கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, தனது நண்பருடன் இணைந்து பல முறை இலங்கை சென்று வந்தார். இதன் காரணமாக அமைச்சராக இருந்த லியாம் பொஃக்ஸுக்கு மேல் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் அமைச்சுப் பதவியை இழந்தார். ஆனால் தற்போது தமிழர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கையால், அவர் மனம் மாறி இலங்கை அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, பிரித்தானிய தமிழர்களோடு இணைந்துள்ளார். இதுவே இன்றைய பரபரப்புச் செய்தியாகவும் உள்ளது. அதாவது இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் நபர்களை துரோகிப் பட்டம் கட்டி, ஒதுக்காமல் அவர்களை எம்பால் இழுக்க முடியுமா எனச் சிலர் சிந்தித்துள்ளனர். அதனூடாக நிலையைப் புரியவைத்து, லியாம் பொஃக்ஸ் எம்.பியை தற்போது தமிழர்கள் தம்பால் இழுத்துள்ளார்கள்.

இது தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் பெரு வெற்றியாகும். சிங்கள அரசுக்கு கிடைத்திருக்கும் சாட்டையடி என்று தான் சொல்லவேண்டும். சிங்கள அரசு விடுதலைப் புலிகளை சூழ்ச்சியால் வென்றிருக்கலாம். ஆனால் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தை வெல்ல முடியாது என்பதனை, தமிழர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், Party Chairman Rt Hon Grant Shapps, Cabinet Minister, Rt.Hon. Theresa Villiers, MP,s Mep ,s , Steve Bell Lee Scott, MP ஆகியோர், இக் குழுவின் உபசெயலாளர் டாக்டர். அருச்சுணா சிவானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

btc-3.jpgbtc-1.jpgb-1.jpg

http://thaaitamil.com/?p=34923

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி

உழைத்த

உழைக்கும் கரங்களுக்கு நன்றிகள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தமிழர் பேரவை இங்கு பலவகையான வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர்.அதில் ஒன்றுதான் இதுவே தவிர இதுதான் முதல் அல்ல.கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் போர் லேபர் என்று ஒன்று தொடங்கி அதில் லேபர் பார்ட்டி எம்பீஸ் பலர் அங்கத்தவர்களாக உள்ளனர்.அழும்கட்சியான கொன்சவேற்றிவ் கட்சி அனுமதி வழங்கவில்லை.ஆதரவு தருகின்றார்கள்.லியாம் பொஃக்ஸ் குள்ள நரி.என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் விசுகு.

இதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி.

அதே நேரம் இன்னொன்றும், நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில வேளைகளில், பெண் மனதின் ஆழத்தையும் கண்டு பிடித்து விடலாம்!

ஆனால், பிரித்தானிய வெள்ளையின் ஆழத்தைக் கண்டு பிடிக்க, அவனைப் படைத்த அந்தக் கடவுளாலும் முடியாது, என்பதே எனது அனுபவம்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் நபர்களை துரோகிப் பட்டம் கட்டி, ஒதுக்காமல் அவர்களை எம்பால் இழுக்க முடியுமா எனச் சிலர் சிந்தித்துள்ளனர். அதனூடாக நிலையைப் புரியவைத்து, லியாம் பொஃக்ஸ் எம்.பியை தற்போது தமிழர்கள் தம்பால் இழுத்துள்ளார்கள்.

இதே மாதிரி இந்தியர்கள், தமிழகத்தவர்கள், தமிழர்களை மாற்ற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

லியாம் பொஃக்ஸ் தமிழர்களுடன் இணைந்த பலாபலன்களை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதே மாதிரி இந்தியர்கள், தமிழகத்தவர்கள், தமிழர்களை மாற்ற முடியுமா?

முதலில் லியாம் பொஃக்ஸ் இந்திய தமிழக தலைவர்கள் போல் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இது மாபெரும் வெற்றியாக தெரிந்தாலும் - இதுவும் பாரிய பின்னடைவாக மாறாது இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பான நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. லியம் பாக்ஸ் காசுக்காக வேலை செய்பவர். அவரை மாற்றிவிட்டதாக மார்தட்டுவதை ரசிக்க முடியவில்லை.

பிரித்தானிய தமிழ் மக்கள் மீண்டும் ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறையே இழைத்துள்ளனர் என பின்னர் வராலாறு அமையாமல் பொறுப்புடன் நடக்க வேண்டியது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்குபவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு தமிழர் என்ற முறையில் ஒரு கட்சிக்குள் இணைந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு.

ஆனால் தமிழர் பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு கட்சிக்குள் மட்டும் மாட்டுப்படுவது, உள்ளூர் கட்சி அரசியலுக்குள் தமிழர் பிரச்சினையை மாட்டிவிடுவது சுத்த அரைவேக்காட்டுத் தனம். ராஜதந்திரம் தெரியாதவர்கள் தான் இவ்வாறன பிற்போக்கான, சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவர்.

செல்வாக்குள்ள சகல கட்சியினருடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதே முறையான ராஜதந்திரமாக கருத முடியும்.

ஆரவுமதன் சொல்லி இருப்பது சரியே நாங்கள் எல்லோரையும் எம் பக்கம் அவர் அவர் விரும்பியதைக் கொடுத்து இழுக்க வேண்டும்.எவரையும் நம்ப முடியாது. பிரித்தானிய தமிழர் பேரைவையின் அடுத்த கட்ட செயற்பாடு நவம்பர் மாதாம் நடைபெற இருக்கிறது.இதற்கும் நிதி உதவி வேண்டும்.முடிந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நிதி வழங்கவும். இந்த செயற்பாட்டு காத்திரமான விழைவை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

http://tamilsforum.co.uk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.