Jump to content

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்


Recommended Posts

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலே சொன்னேன்தானே மலை எனக்கு தேடிய படங்கள் அகப்படவில்லை. தேடும் பொது வந்த படங்களப் போட்டுவிடுகிறேன். நீங்கள் கூறியதுபோல் பெண் அரைக்கும் படம் எகிப்ப்த்தினதாக இருக்கலாம். நான் தேடிய பகுதியில் வந்த சுமேரியப் பெண் அரைப்பது போல் உள்ள படங்கள் யாழில் போட விடுது இல்லை.சில படங்கள் அவர்களே கொப்பி பண்ணத் தடை போட்டுள்ளனர். இது கருங்கல்லால் ஆனதுபோல் இருக்கிறது.சுமேரியர் இதுபோன்ற மாட்டின் உருவத்தை வெள்ளீயம் செப்பு போன்றவற்றால் செய்து வைத்திருக்கின்றனர். படங்கள் தேடுவதிலேயே என் நாட்கள் விரயமாகின்றன. உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தொடருங்கள் அக்கா உங்கள் பணியை .......நேற்று இந்த நாட்டு பத்திரிகையில் இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் நிலத்துக்கடியில் ஒரு இந்து ஆலயத்தை கண்டுபிடித்துள்ளார்கள் என்றும்,அது கி .பி .13 தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டுகளில் இருந்ததாகவும் கூறப்பட்டது ..

உண்மையில் எம் வரலாற்றில் எத்தனையோ,எத்தனையோ ஆழங்கள்,உண்மைகள் உண்டு ..உங்களைப்போன்றவர்களின் பயனுள்ள இந்த திரிகளின் மூலம் நாம் பலவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் ............ஒப்பிட்டுப்பார்க்கக்கூடியதாயும் உள்ளது ...நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூறான் நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்க்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்க்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. ஆனபடியால் மேசொப்போத்தேமியாவிலிருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது.

Link to comment
Share on other sites

மெசு

தேவையேற்படாத நிலையில் சுமேரியர் தவிர்த்த படங்களைப் போடுவது, உங்கள் ஆக்கத்தின் தரத்தைக் குறைக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

யாராவது உறவுகள் படங்கள் இணைப்பதற்கு உதவி செய்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு எழுத நேரம் கிடைக்காததாலேயே பார்ப்பவரைச் உற்ச்சாகப் படுத்தும் என நினைத்துப் படத்தைப் போட்டேன். நீங்கள் சொல்வது சரிதான். இனிமேல் கவனமாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

முதற்சங்கத் தமிழ் தலை சுத்திது சுமே இதுதான் நிகண்டு அல்லது கிரந்தமோ :o ??

அந்த 3000 ஆண்டுகளில் மற்றைய இனங்கள் கடவுளை வழிபடவில்லையா?

இதென்ன கேள்வி ????? நான் அறிஞ்சவரையிலை மனுசனுக்கு பகுத்தறிவு வந்த காலத்தில இருந்து இயற்கையை தெய்வமாய் கும்பிட்டிருக்கிறான் . பேந்து உருவங்களை கும்பிட்டிருக்கிறான் ( மாயன்களும் உள்ளடக்கம் ) . எல்லாஞ்சரி தேற்றத்தை வடிவாய் நிறவ வேணும் . சொதப்பக் கூடது சொல்லிப்போட்டன் :lol: .

Link to comment
Share on other sites

[size=3]

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிர

ுக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே.முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி

மன்னார்குடி ரகு

[/size][size=3]

__._,_.___[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நிரூபா நீங்கள்.

உங்களைப் போல் எத்தனை பேர் இல்லாததை நம்பிக்கொண்டிருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, உங்கள் ஆய்வை, மிகவும் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன்!

'ராமாயணம்' போன்ற இதிகாசங்கள், வாய் வழியாகவும், செவி வழியாகவும் வந்தவை!

இதில் வருகின்ற 'சரஸ்வதி நதி' அல்லது சரயு நதி, ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது எனவும், அது இன்றைய ஆப்கானிஸ்தான் ஊடாக, ஓடியுள்ளது எனவும், விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படங்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் மகாபாரதத்தில் கூறப்படும், காந்தார தேசம், இன்னும் தனது பெயரை இழக்காமல், கண்டகார் என அடையாளம் காணப் பட்டுள்ளது!

ரிக் வேதகாலம், இந்தக் காலப் பகுதியுடன் பொருந்துகின்றது!

அத்துடன் கடலின் கீழ் அமைந்துள்ள ஒரு 'பெரிய நிலப்பரப்பு' இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதைப் பலர் உறுதிப் படுதியுள்ளதுடன், படங்களும் எடுக்கப் பட்டுள்ளன.

உங்கள் பார்வைக்காக, அவுஸ்திரலியப் பூர்வீக குடிகள், பற்றிய ஒரு ஆய்வை, இணைக்கின்றேன்!

[size=3]

Indigenous Australians are the original inhabitants of the Australian continent and nearby islands.[citation needed] The Aboriginal Indigenous Australians migrated from Africa around 50,000 years ago.[3] The Torres Strait Islanders are indigenous to the Torres StraitIslands, which are at the northern-most tip of Queensland near Papua New Guinea. The term "Aboriginal" has traditionally been applied to indigenous inhabitants of mainland Australia, Tasmania, and some of the other adjacent islands.[/size][size=3]

The earliest definite human remains found to date are that of Mungo Man, which have been dated at about 40,000 years old, but the time of arrival of the ancestors of Indigenous Australians is a matter of debate among researchers, with estimates dating back as far as 125,000 years ago.[4] There is great diversity among different Indigenous communities and societies in Australia, each with its own unique mixture of cultures, customs and languages. In present day Australia these groups are further divided into local communities.[5][/size]

[size=3]

இதில், அவர்களின், மண்டையோடுகள், ஆகக் குறைந்தது, நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு, முற்பட்டவை எனக் கூறப் படுகின்றது! அவர்கள் குகைகளில் வாழ்ந்ததால், இந்த மண்டையோடுகள், காற்று, நீர் போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப் படாதது, எமது அதிஸ்டம் என்று தான் கூற வேண்டும்! இவர்கள் குகையோவியங்களும், இருபதினாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவை.[/size][size=3]

ஏன் சிந்து வெளியில் இருந்து, நாகரீகம் சுமேரியர்களுக்குச் சென்றிருக்கக் கூடாது, என்று நீங்கள் உறுதியாகக் கூறுகின்றீர்கள்?[/size][size=3]

பெண்மையும், தாய்மையும், உலகில் எல்லா நாகரீகங்களிலும் போற்றப்பட்டுப், பூஜிக்கப் பட்டிருக்கின்றன![/size][size=3]

இலங்கையில், கூறப் படுவது போல, விஜயன் வட இந்தியாவில் இருந்து வரும்வரைக்கும், தென்னினிந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள், இடையில் தொடுபாலம் இருந்தும், இலங்கைக்கு வரவில்லை என்று கூறுவது போல உள்ளது.[/size][size=3]

மேலே நிருபா, கூறிய கருத்துக்கு, நீங்கள் 'பாவம்' பார்ப்பதிலும் பார்க்க, அவரது கருத்தையும் உள் வாங்கிச் செல்வதே, ஆரோக்கியமான ஒரு விவாதத்துக்கு வழி சமைக்கும், என்பது எனது கருத்தாகும்![/size][size=3]

மேலுள்ள இணைப்பு, விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப் பட்டது. அதற்குரிய ஆதாரங்களும், அப்பதிவில் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள கருத்துடன், தொடர்புள்ள 'முன்கோ மனிதன்' பற்றிய இணைப்பு பின் வருமாறு:

Lake Mungo remains

[size=3]

From Wikipedia, the free encyclopedia

(Redirected from Mungo Man)

Mungo_Man.jpg

magnify-clip.pngMungo Man

The Lake Mungo remains are three prominent sets of fossils: Lake Mungo 1 (also called Mungo Lady, LM1, and ANU-618), Lake Mungo 3 (also called Mungo Man, Lake Mungo III, and LM3), and Lake Mungo 2 (LM2). Lake Mungo is in New South Wales,Australia, specifically the World Heritage listed Willandra Lakes Region.[1][2]

LM1 was discovered in 1969 and is one of the world's oldest known cremations.[1][3]LM3, discovered in 1974, was an early human inhabitant of the continent of Australia, who is believed to have lived between 68,000 and 40,000 years ago, during thePleistocene epoch. The remains are the oldest anatomically modern human remains found in Australia to date. His exact age is a matter of ongoing dispute.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] புங்கையூரான் எனது கட்டுரையில் பகுதி நான்கில் சிறு தவறு நேர்ந்துவிட்டது.அதைத் திருத்தியுள்ளேன். நீங்கள் சொல்வதுகூடச் சரியாக இருக்கலாம். நிரூபாவின் கூற்றைத்தான் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதில் வந்த எரிச்சல்தான். மற்றப்படி அவரைப் புண்படுத்தும் நோக்கமல்ல.

மனித இனம் தோன்றி கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. முதல் பனிக்காலம் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்ததாகக் கூறுகின்றனர். கடைசிப் பனிக்காலம் கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரத்தில் முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட காலம் மாந்த இனம் முற்றாக அழிந்துவிடவில்லை. நாடோடிகளாக அலைந்தே திரிந்திருக்கிறது. அவர்கள் குகைகளில் வாழ்ந்திருக்கல்லாம். ஆனால் அவர்கள் ஒரு ஐம்பது அல்லது நூறுபேர் அல்லது அதிலும் குறைந்த மனிதக் குழுக்களாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவர் போன்று கடல் உணவையோ அன்றி வேட்டையில் அகப்படும் விலங்குகளையோ உண்டு அவர்கள் வாழ்ந்திருக்கலாம். முதலில் இடம்பெயர்ந்த அவுஸ்றேலியாவில் வாழும் அபோரோஜிநீஸ் ஐம்பதாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் நாகரிகமடையவில்லை. அதுபோலத்தான் முங்கோ மனிதனில் ஆண்டு சரியாக இருக்கலாம்.

வேத காலம் கிறித்துவுக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் தான் எனக் கொண்டால் உங்கள் கணக்குப் பிளைக்கிறதே. கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளின் முன் இலங்கைத்தீவு இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கிறது. ஒருநாள் வந்த நில நடுக்கத்திலோ அல்லது கடற்க் கோளிலோ அது நடக்கவில்லை.பல கடற்க்கோள்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகவே பிரிந்ததென ஆய்வுகள் கூறுகின்றன. கடைசி ஐம்பதாயிரம் வருடங்களில் எந்த ஒரு கண்டமோ பெரிய நிலப்பரப்போ கடலுள் போனதாக சான்றுகள் இல்லை. அதன்பின் வந்த கடல்க்கோள்களில் மிகச் சிறிய தீவுகளோ அல்லது நிலப்பரப்புகளோ தான் கடலுள் போயுள்ளது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேத காலம் கிறித்துவுக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் தான் எனக் கொண்டால் உங்கள் கணக்குப் பிளைக்கிறதே. கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளின் முன் இலங்கைத்தீவு இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கிறது. ஒருநாள் வந்த நில நடுக்கத்திலோ அல்லது கடற்க் கோளிலோ அது நடக்கவில்லை.பல கடற்க்கோள்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகவே பிரிந்ததென ஆய்வுகள் கூறுகின்றன. கடைசி ஐம்பதாயிரம் வருடங்களில் எந்த ஒரு கண்டமோ பெரிய நிலப்பரப்போ கடலுள் போனதாக சான்றுகள் இல்லை. அதன்பின் வந்த கடல்க்கோள்களில் மிகச் சிறிய தீவுகளோ அல்லது நிலப்பரப்புகளோ தான் கடலுள் போயுள்ளது.

நன்றிகள், மொசோ!

தொடர்ந்து எழுதுங்கள்! நீங்கள் மேலதிக தகவல்களை இணைக்கும் போது, எமக்கு இடையேயுள்ள இடைவெளிகள், குறைந்து போகும் என நம்புகின்றேன்!

வேதகாலம், உண்மையில் கிறிஸ்துவுக்கு முன்பு, ஆயிரம் வருடங்கள் என்பது ஒரு அனுமானம் மட்டுமே!

பின்வருவதையும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்!

Vedic Timeline – Older Than We Thought

http://www.omved.com/vedicpedia/vedic-timeline-%E2%80%93-older-than-we-thought

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தரைப்பகுதி, ஏழாயிரம் ஆண்டுக்கு முன்பு மறைந்து போனது, என்று எடுத்துக் கொண்டாலும், விஜயனின் படகு, வட இந்தியாவில் இருந்து வரும் வரைக்கும், தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்கள், படகு பற்றிய அறிவு இல்லாமல் இருந்திருப்பார்கள் என்பதை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள், ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஆபிரிக்காவில் இருந்து, அவுஸ்திரேலியா வரை போயிருக்க முடியுமெனில், இடையில் உள்ள இலங்கையையும், இந்தியாவையும் கட்டாயம் கடந்து போயிருக்கத் தானே வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இருங்கள் புங்கையூரான். கட்டுரை முடிந்ததும் பகுதி பகுதியாக அலசலாம் நன்றி.

Link to comment
Share on other sites

சுமே இந்த ஆய்வு இப்படிச் சொல்கிறது . சிலவேளைகளில் உங்கள் தேடலுக்கு அனுசரணையாக இருக்கலாம் என நினைக்கின்றேன் .

[size=5]ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம் [/size]

சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்" என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?

நிச்சயமாக, 16 ம் நூற்றாண்டில், காலனிய கால வரலாற்றுடன் தான் ஆரம்பமாகியது. அதற்கு முன்னர், எந்தவொரு இனத்தையும் வெள்ளை என்றோ அல்லது கருப்பு என்றோ பார்க்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று கருதுவதும் தவறானது. வெள்ளையின மேலாதிக்க கொள்கைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அது போன்ற கருத்தியல்கள் பரப்பப் படுகின்றன. தமிழகத் திராவிட இயக்கத்தினரும், தமிழ் தேசியவாதிகளும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளமை ஆச்சரியத்திற்குரியது. மானிடவியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வெள்ளையின அறிஞர்களாலேயே தொகுக்கப் பட்டு வந்தன. ஒரு வெள்ளையன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று, நாங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம்.

இந்திய உப கண்டத்திற்கு மட்டுமே சிறப்பம்சமான சாதியமைப்பு, இந்து மதம் போன்றன, வெள்ளையினத்தவர் வாழும் பிற நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால், வர்ணாச்சிரம சாதியமைப்பும், இந்து மதமும் வெள்ளையின ஆரியர்களினால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று வாதிடுவது தவறானது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள், தாம் தங்கி வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சமுதாய அமைப்பை கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான தெய்வங்களை வழிபட்டனர். இதற்கு முந்திய அத்தியாயங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட தமிழரின் (திராவிடரின்) கலாச்சார விழுமியங்களை பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில், ஆப்பிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதி மீது கவனத்தை செலுத்துவோம்.

ஆபிரிக்க கண்டத்திற்கும், இந்திய உப கண்டத்திற்கும் நடுவில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? அரேபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் உங்கள் மனக்கண்ணில் தோன்றும். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது உண்மையானால், மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் சில கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அது குறித்து ஆராய்வதே, இனி இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருக்கும். அரேபியருக்கும், தமிழருக்கும் இன அடிப்படையில் ஒற்றுமைகள் உள்ளன. அரேபிய தீபகற்பத்தின் நாகரீகம் காலத்தால் பிந்தியது என்பதால், அதற்கு முந்திய மத்திய கிழக்கு நாகரீகத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரீகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்த சுமேரிய சாம்ராஜ்யம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அனேகமாக, காலத்தால் பிந்திய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில், கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதே நேரம், காலத்தால் முந்திய சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் (ஆப்பிரிக்க-திராவிடர்கள்) பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றது. இதற்கு ஆதாரமாக, அந்த மக்கள் பேசும் ஒரே மாதிரியான மொழிகளைக் குறிப்பிடலாம். ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். அதே மாதிரி, சோமாலி, அம்ஹாரி, திக்ரிஞா (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளும் செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். (Semitic Languages, http://en.wikipedia.org/wiki/Semitic_languages)

நாங்கள் இப்பொழுது, உலகில் நாகரிக சமூகங்கள் தோன்றிய காலகட்டம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டம், மூவாயிரம் அல்லது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தியது. (விவிலிய நூல் அதனை மனித இனம் தோன்றிய காலகட்டம் என்று கூறுகின்றது.) குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, மனித இனம், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது. மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். அந்த பரிணாம மாற்றம் நடைபெற்ற காலப்பகுதியில், மிருகங்களைப் போன்று வேட்டையாடியும், கனிகளைப் பறித்துண்டும் வாழ்ந்த மனித இனம், பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னரே நாகரிக சமுதாயங்களை உருவாக்கி இருப்பார்கள். ஆகவே, பிற்காலத்தில் "நாகரீகமடைந்த சமுதாயங்கள்" பெரும் படை திரட்டிப் போரிட்டு, ஒன்றை மற்றது அழித்த காலத்தில் மனித நேயம் காணாமல் போய் விட்டது. அதற்கு முன்னர், "காட்டுமிராண்டிகளாக" வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடிக் கொன்றார்கள். கறுப்பினத்தவராயினும், வெள்ளயினத்தவராயினும் ஒருவரை மற்றவர் அழிக்கும் யுத்தங்கள், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. "இனப்பற்று, இன ஒற்றுமை, இன ஐக்கியம்..." இன்னோரன்ன வார்த்தைகள், உலகில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கும் அது போன்ற கருத்தியல்கள் ஆக்கிரமிப்புப் போர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப் படுகின்றன.

சுமேரியர் நாகரீகம் பற்றிய தகவல்களும், சுமேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தே கிடைக்கின்றன. அதாவது, சுமேரியர் போன்ற இன மக்கள் இன்றைய ஈராக்கில் மட்டுமல்லாது, வட ஆப்பிரிக்கா, அரேபியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக, அரேபிய தீபகற்பம் "மூதாதையரின் பூமி" என்பதான தகவல்கள், சுமேரியரின் புராணக் கதைகளிலேயே எழுதப் பட்டுள்ளன. அதற்குமப்பால், இன்றைய சோமாலியாவின் வட முனைப் பகுதியிலும் சுமேரியரின் மூதாதையர் வாழ்ந்திருக்கலாம். சுமேரியரின் நாகரீகம் தோன்றிய எரிடு நகர மக்கள், வேறொரு நாட்டில் இருந்து கப்பலில் வந்ததாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று நிலவியது. எரிடு என்றால் கடற்கரை என்று அர்த்தம். அனேகமாக, அங்கிருந்து சோமாலியா வரை கப்பற் போக்குவரத்து இடம்பெற்றிருக்கலாம். சுமேரிய கோயில்களில், தெய்வச் சிலைகளுக்கு சாம்பிராணி புகை காட்டி வழிபடப் பட்டது. இந்த சாம்பிராணி மரம், வட சோமாலியா, யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. (உலகில் வேறெங்கும் சாம்பிராணி மரம் முளைப்பதில்லை.)இன்றைக்கும் இந்திய உபகண்டத்தை சேர்ந்த இந்துக்கள், சாம்பிராணி தூபம் காட்டி வழிபடுவது வழக்கம். ஆகவே, இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சோமாலியா, யேமனில் விளைந்த சாம்பிராணி இந்தியா வரை ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தது. பிற்காலத்தில் தோன்றிய யூத மதம், சாம்பிராணி காட்டி வழிபடுவதை தடை செய்தது.

ஏன் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்? என்று பிற மதத்தினர் நையாண்டி செய்யும் பொழுது, இந்து மத நம்பிக்கையாளர்கள் பதில் கூறத் தெரியாமல் முழிப்பார்கள். "இவை ஒரே கடவுளின் அவதாரங்கள்" என்று,ஆன்மீக பண்டிதர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத உண்மை, இந்த தெய்வங்கள் முன்பு வெவ்வேறு இனக்குழுக்களால் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடப் பட்டு வந்தன. நகர்மயமாகிய சிறு தேசங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனியான தெய்வங்களை கொண்டிருந்தன. சுமேரியாவிலும் முன்பு அப்படித் தான் இருந்துள்ளது. எரிடு, ஊர், உருக், நிப்பூர், லகாஷ், கிஷ் போன்ற பல சிறிய தேசங்களை, பிற்காலத்தில் தோன்றிய சுமேரிய சாம்ராஜ்யம் ஒன்று சேர்த்து, ஒரே நாடாக்கியது. அதனால், அந்தந்த பிராந்திய தெய்வங்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். இவை எல்லாம், ஒரே கடவுளின் பல பெயர்கள் என்று கூறப்பட்டன. சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான ஆக்கிரமிப்புப் போர்கள், தெய்வங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கின. பிற்காலத்தில் பலம் பொருந்திய வல்லரசுகாக தோன்றிய, அக்காடிய (வட ஈராக்),பாபிலோனிய (தென் ஈராக்), அசிரிய (இன்றைய சிரியா) சாம்ராஜ்யங்கள், சுமேரியரின் தெய்வங்களை உள்வாங்கிக் கொண்டன. அவற்றிற்கு தமது மொழியில் வேறு பெயர்களை சூட்டின.

ஒரே கடவுளை வேறு பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு, சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள் மட்டும் காரணமல்ல. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வேறொரு இடத்தில் சென்று குடியேறினால், அங்கே புதிய மொழிகள் உருவாகின்றன. தாயகத்துடனான தொடர்பு அறுதல், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களினால், மனிதர்களின் மொழி, பண்பாடு என்பன மாறுபடலாம். ஆனால், அவர்களின் மத நம்பிக்கைகள் பெருமளவு மாறுபடுவதில்லை. காலனிய காலத்தில், தென்னாபிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் கூலிகளாக சென்ற இந்தியர்களை அதற்கு உதாரணமாக காட்டலாம்.

பாபிலோனியர்கள் இஷ்தார் என்று அழைத்த பெண் தெய்வத்தின் சுமேரியப் பெயர் "இனானா". (http://en.wikipedia.org/wiki/Inanna)சுமேரியரின் பல பெண் தெய்வங்கள், இனானாவின் அவதாராமாக கருதப்பட்டன. அதாவது, இந்து மதத்தில் ஆதிபராசக்தி போன்று, ஒரு தாய் தெய்வம். அதன் பூர்வீகப் பெயர் "நின் அனா", அதன் அர்த்தம் தமிழில் "அகிலாண்டேஸ்வரி!" நம்மூர் பராசக்தி போன்று, உயிர்களின் பிறப்புக்கும், பயிர்களின் செழிப்புக்கும், இல்லறத்திற்கும் நன்மை வேண்டி வழிபடப் பட வேண்டிய தெய்வம் இனானா. சுமேரியர்கள் அந்த தெய்வத்தை, "அம்மா இனானா" என்று அழைத்தார்கள். சுமேரிய மொழியில் அம்மா என்றாலும், தமிழ் மொழியில் அம்மா தான்! ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், இனானா என்ற பூமி மாதாவை, "மரியாள்" என்று பெயர் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் தாயாக்கி வழிபட வைத்தது.

அது மட்டுமல்ல, "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்ற பிரபலமான கிறிஸ்தவ மும்மூர்த்திகளின் தத்துவமும் சுமேரியர்களிடம் இருந்து கடன்வாங்கியது தான். பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமானது. இந்து மத தத்துவத்தில் கூறப்படுவதைப் போல, இந்த மூன்று கடவுளரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றனர். மீண்டும் இன்னொரு தமிழ்ச் சொல், சுமேரியாவில் முக்கிய இடம் பிடித்திருந்தது. "அணுவில் இருந்து அனைத்தும் தோன்றியது" அந்த அணு யார்? சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அணு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள். அதாவது, இந்து மதத்தில் பிரம்மாவின் தொழிலைச் செய்பவர். அடுத்ததாக, எயா அல்லது என்கி என்ற காக்கும் கடவுள். இந்து மதத்தில் விஷ்ணு போன்றவர். விஷ்ணுவின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. அதே போன்று, எயா ஆதி காலத்தில் கடலில் மீனாக அவதரித்ததாக சுமேரியரின் புராணக் கதை ஒன்றுண்டு. மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில். இவர் சிவனோடு, அல்லது உருத்திரனோடு ஒப்பிடத் தக்கவர்.

இந்து மதத்தில், பிற ஆண் தெய்வங்கள் எல்லாம், ஒன்றில் விஷ்ணுவின், அல்லது சிவனின் அவதாரங்களாக கருதப்படுகின்றன. சுமேரிய மதத்திலும், எயா, என்லில் ஆகிய கடவுளரின் மனித வடிவிலான அவதாரங்கள் பற்றிய பல்வேறு கதைகள் உலாவின. தமூஸ் என்ற தெய்வத்தின் கதை, சுமேரியர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. வேறெந்த தெய்வத்திற்கும் அந்தளவு மகிமை கிட்டவில்லை. சுமேரிய மொழியில் தமுசி, பாபிலோனிய மொழியில் தமுஸ், கிரேக்க மொழியில் அடோனிஸ். தமிழ் மொழியில் சிவன்? எந்த நாட்டில் எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும், அந்தப் புராணக் கதை மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் ஈரான் வரையில் வாழ்ந்த மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வத்தின் கதை, அத்தனை இலகுவாக மறக்கப் பட்டிருக்காது. அது இன்றைக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் நிலைத்து நிற்கலாம். அதிசயப் படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதைக்கும், தமுஸ் தெய்வத்தின் புராணக் கதைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இயேசு பிறந்த பாலஸ்தீனம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. பாபிலோனியாவில் நடந்ததை எல்லாம் விவிலிய நூலில் விலாவாரியாக எழுதத் தெரிந்த ஆண்டவருக்கு, மிகவும் பிரபலமான தமுஸ் தெய்வத்தின் கதை தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

http://kalaiy.blogspot.nl/2012/10/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் இது ஏற்க்கனவே சாத்திரி அனுப்பிய ஒரு தளத்தில் இருந்தது. நானும் வாசித்தேன். இதை எழுதியவர் என்னிலும் விட சுமேரியர் பற்றிய அதிக அறிவுடன் இருக்கிறார். ஆனால் பல குழப்பமும் சில விடயங்களில் தெளிவின்மையும் அவருக்கு இருக்கின்றன. மிக விரைவில் கட்டுரையை முடித்துவிடுவேன்.அதன் பின் விரிவாகக் கலந்துரையாடல் செய்வோம். இப்ப என்றால் எனக்கே குழம்பிவிடும்.வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

இன்னும் இல்லையா? :D

Link to comment
Share on other sites

ஏங்க சுமேரியர் அக்கா ஒரு பதிவு ஒன்னு பாத்தேங்க . அதை ஜாயின் பண்றேங்க . இது உங்க ஆய்வுக்கு ஹெல்ப் பண்ணுமா அக்கா :) :) ??

[size=5]ஓமனில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழ் வணிகனின் பெயர் பொறித்த பானை ஓடு[/size]

nakkeeran.jpg

அரபு நாடான ஓமனில் நக்கீரன் என்ற பெருவணிகனின் பெயர் பொறிக்கப் பட்ட முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பானை ஓடொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஓமனிலுள்ள Khor Rori எனும் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பண்டைய பானை ஓட்டில் தான் இந்த வணிகனின் பெயர் பதியப்பட்டுள்ளது.

பண்டைய தமிழான பிராஹ்மி மற்றும் தமிழ் வரி வடிவத்தில் 'ண-ந்-தை கீ-ர-ன்' என இவ் வணிகனின் பெயர் பதியப் பட்டுள்ளது. சுமார் 1900 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பானை ஓடு பண்டைய வர்த்தக நகரமான 'சும்ஹுரம்' இல் கண்டுபிடிக்கப் பட்டதாக் கூறப்படுகின்றது. இப் பானை ஓட்டின் மூலம் புராதன இந்திய நகரங்களுக்கான கடல் வழி வணிகம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து முக்கியமான விவரங்கள் தெரிய வரலாம் என்பதால் இது மிக முக்கியமான தொல் பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.

இந்தப் பானை ஓடு செப்டம்பரில் 'அலெக்ஸியா பவன்' எனப்படும் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்பொருளியலாளரால் இந்தியாவின் 'கோச்சி' நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு பட்டறையில் (workshop) காட்சிப் படுத்தப்பட்டது. இப்பட்டறையில் தலைப்பு 'கேரளாவின் பட்டனத்தை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் கடல் வர்த்தகம் தொல்பொருளியல் மற்றும் தொழிநுட்பம்' என்பதாகும்.

இந்தப் பட்டறையில் தொல்பொருளியலாளர்கள் உட்பட இந்தியாவின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பற்றினர்.

http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/9348-2012-10-29-20-43-26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு சேர்ந்து மற்றவர்களும் ஆராய்கிறீர்கள் என எண்ணும்போது மகிழ்வாக இருக்கிறது சொப்னா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி எழுத்துக்கள் பற்றிய தொடர்பைத் தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

தற்போது ஒரு ஆங்கில நிகழ்ச்சியில்பார்த்தேன் . தென்னமெரிக்காவில் Puma Punku எனும் இடத்தில் பழைய அதி தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளன. அங்கே சுமேரியாவில் காணப்பட்ட எழுத்துருக்களை கண்டெடுத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ப்ளூ bird நன்றி உங்கள் ஆர்வத்துக்கு. எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இதற்கும் பிறகு வருவேன் பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2015 ல வாக்கு போட்ட தமிழருக்கு ஒழுங்காகக் தீர்வை கொடுத்து இருந்தால் இந்த முறை பதவிக்கு வந்திருக்கலாம் ....நரி வேலை பார்த்தால் இப்படி தான் பின் வந்தவர்களை பார்த்து  சும்மா பொய் சொல்லிக்கொண்டு இருக்கணும் ......
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.   https://www.virakesari.lk/article/198148
    • தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்! SelvamNov 08, 2024 09:27AM அ. குமரேசன் சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன.  படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது. சொல்லப்படுவது என்ன  என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே  எனது அணுகுமுறை. அமர அரசியல் தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது. உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள். தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும். படத்தின்  வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள். நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான். அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை.  வீரமும் தியாகமும் மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன். “அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது. “ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி  இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும். திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது. அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார். ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும்  தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.  புதிய தணிக்கை இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி  என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள். தேசப்பற்று ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை.  ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது. அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன. அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ  எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி  நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன. அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்? எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள்  என்று அரசாங்கம்  சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.) ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத்  தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் ஓவியத்தில் இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள்  ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை. அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா? தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில், தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான். ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும். இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும்.     https://minnambalam.com/featured-article/amaran-movie-politics-patriotism-speacial-article-on-kumaresan/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.