Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்

Featured Replies

அடுத்தமுறை பிரிடிஷ் மியூசியம் போகும் போது சுமேரியர் பக்கம் போய் பாருங்கள், காமதேனுவின் சிலைகள் சுமேரிய நாகரீகத்துடன் காணப்படுகிறது.

  • Replies 130
  • Views 20.8k
  • Created
  • Last Reply

இவ்வளவு அலம்புறம்.. எமது கோயில்களில் காணப்படும் நவக்கிரக சிலைகள், 9 கிரகங்களை குறிக்கும்.

இதில் பழைமையானது 9000 வருடங்களுக்கும் முற்பட்டது என கார்பன் டேட்டிங்கில் கண்டுபிடித்திருக்கிறார்கள்..

ஆணால் சூரியன் தவிர்ந்த ஏனய கிரகங்களை தொலைநோக்கியூடாக கடந்த நூற்றாண்டுதான் கண்டு பிடித்தார்கள்..

எங்கையோ இடிக்குதே

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள காமதேனு என நீங்கள் கூறும் சிலைகள் எகிப்திய பகுதிகளில் தான் வைத்திருக்கிறார்கள்.

நவக்கிரக சிலைகள் 9000 வருடங்கள் பழைமையானது என எவர் கார்பன் 14 செய்து நிறுவியுள்ளனர் என கூற முடியுமா பனங்காய்.

அது பற்றிய லிங்க் ஏதாவது இருந்தால் தாருங்கள்.

பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள காமதேனு என நீங்கள் கூறும் சிலைகள் எகிப்திய பகுதிகளில் தான் வைத்திருக்கிறார்கள்.

நவக்கிரக சிலைகள் 9000 வருடங்கள் பழைமையானது என எவர் கார்பன் 14 செய்து நிறுவியுள்ளனர் என கூற முடியுமா பனங்காய்.

அது பற்றிய லிங்க் ஏதாவது இருந்தால் தாருங்கள்.

இல்லை.. சுமேரியர் பக்கம்தான் இந்த சுமேரிய காமதேனு இருக்குது..

நவகிரக லின்க் என்னிடம் இல்லை . http://shtf411.com/ இல் தேடிப்பார்க்கவும்..

சுமேரியர் கிட்டத்தட்ட கிறித்துவுக்கு முன் 3000 ஆண்டளவிலேயே மெசொபொத்தேமியாவிலிருந்து சிந்துவெளிக்கு இடம்பெயரத் தொடங்கினர். சுமேரியர் புலம் பெயர்ந்து சென்றதை மேற்குலகம் ஒத்துக்கொள்கிறது. ஆனால் அதன் பின் அவர்கள் எங்கே சென்றனர் எனத் தெரியவில்லை என்றும் சொல்கின்றது. ஏலியன்ஸ் வந்து சுமேரியர்களாக இருந்து இத்தனை கண்டுபிடிப்புக்களைச் செய்தார்களா என வியக்கிறது. ஏலியன்ஸ் வந்து ஒன்றைச் செய்யும் போது வேறு இடம் கிடைக்காது மெசொபொத்தேமியா என்னும் இடத்தைத் தெரிவு செய்தார்களா?? அப்படித் தெரிவு செய்தவர் உடனே திரும்பிப் போகாது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார்களா?? அப்படி வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் 70000,80000 என்று சனத்தொகையைப் பெருக்கினார்களா?? என்னும் வினாக்களுக்கு மேற்குலகிடம் விடை இல்லை.

மாயர்களின் மாச்சுபிச்சுவிலும் , பிரமிட்டுக்களிலும் , தஞ்சை ஆவுடையப்பர் கோவிலில் காணப்பட்ட ஏலியன்களின் சிற்ப ஒற்றுமை ஒரு முக்கோண தொடர்பு வருகின்றதே!!! இதில் ஏதாவது உங்கள் பார்வையில் கருத்துக்கள் உள்ளனவா சுமேரியர் ??

, தஞ்சை ஆவுடையப்பர் கோவிலில் காணப்பட்ட ஏலியன்....

மேலதிக விபரங்கள்? படங்கள் ஏதும் இருக்கா கோமகன் ?

மேலதிக விபரங்கள்? படங்கள் ஏதும் இருக்கா கோமகன் ?

NellaiEruvadi_Article_1150_2_2012228-55.jpg

NellaiEruvadi_Article_1150_3_2012228-55.jpg

NellaiEruvadi_Article_1150_1_2012228-520.jpg

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.

இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்' என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில். அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.

ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?

ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது. அந்தப் படம் இதுதான்........!

"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல" என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…? ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.

சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.

அவை என்ன தெரியுமா……..?

இது கள உறவு அபராஜிதனால் பகிரப்பட்டது . நான் சொல்லிய விடயங்கள் எனக்கு திருப்தி தரவில்லை தவறுக்கு வருந்துகின்றேன் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103898&st=0

அடுத்த லிங் :

http://emperorksb.blogspot.fr/2012/05/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தஞ்சைப் பெரிய கோயில் சிற்பம்கூட யாரோ சுமேரியர் பற்றி நன்கு அறிந்திருந்த சிற்பி செதுக்கியிருக்கலாம். பல நேரங்களில் காரண காரியம் அறியாமலேயே சிலர் சிலதைச் செய்வார்கள். பல காலத்தின் பின் அது வெளியே வரும் [/size]

[size=5]மாயன்ஸ் பற்றி அபராயிதன் நன்றாகத்தான் எழுதியுள்ளார். ஒடோட அதை வாசித்துப் பார்த்தேன்.எனக்கும் குழப்பம் தான்.ஆனால் சுமேரியர் கணனியுடன் இருப்பதுபோல் எவ்வளவு தத்ரூபமாக் கணினியில் வடிவமைக்க முடியும் என்றால் இதுகூட முடியும் தானே. மாய இனம் பற்றிய அகழ்வாய்வுகளில் பெரிதாக ஒன்றும் எடுக்கவில்லை. வானியல் பற்றி மாயன் இனத்தவருக்கு முன்னரே சுமேரியர் அறிந்துள்ளனர். தி sciendist என்று ஒரு புத்தகம் usa இலிருந்து எடுக்க வேண்டி வந்தது.அதில் மருத்துவ உலகிலும். விஞ்ஞான உலகிலும் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என எழுதுவர். தம்மை முன்னிலைப் படுத்தவோ தம் நாட்டை முன்னிலைப் படுத்தவோ வேண்டிய தேவை பலருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது.[/size]

[size=5]பரண விதான என்னும் சிங்களத் தொல்லியலாளர் கல்வெட்டுகளின் இடையில் ஒரு புதுவித எழுத்தைப் புகுத்தி இது இடைக் குறுனிக் காலக் கல்வெட்டு என ஏமாற்றியபடி இருந்தார் 5 ஆண்டுகளின் பின்தான் அவரின் குட்டு வெளிப்பட்டது.இலங்கையில் வாழ்த்த இவருக்கு பல ஆண்டுகளின் முன் இப்படி பல ஆய்வாளர்களை ஏமாற்ற முடியுமென்றால் [/size][size=5]இக்காலத்தில் கணணியிலும் நிஜத்திலும் எவ்வளவு செய்யலாம்.யோசியுங்கள்.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

[size=1]

[size=3]நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் சுமேரியர்.[/size][/size]

[size=1]

[size=3]நேரம் கிடைப்பின் ம.சோ விக்டர் எழுதிய குமரிக்கண்டம் என்ற நூலை வாசியுங்கள். அது உங்களின் ஆய்வுக்கு இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆதித்த இளம்பிறையன்.வேறு ஏதும் link கிடைத்தாலும் போடுங்கள்.

சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ – அரப்பா இருக்கிறதா?

“திராவிடம்” என்பது திரிந்த தமிழ்ச் சொல் என்கிறார் புலவர் முருகேசன். அத்திரிபு தமிழர்களிடையே ஏற்பட்டதா, அயல் இனத்தவரான ஆரியரிடையே ஏற்பட்டதா? அவர்களிடம் அது எப்போது ஏற்பட்டது? இவ் வினாக்களுக்கு விடையளிக்கும் போதுதான் “திராவிடர்” என்பது அயல் இனத்தார் தமிழரை அழைத்த கொச்சை வடிவம் என்று புரியும்.

இந்தியா என்று இப்பொழுது அழைக்கப்படும் இத்துணைக்கண்டமெங்கும் தமிழர்களே வாழ்ந்த காலத்தில் அயல் இனத்தவரான ஆரியர் இங்கு வந்தபோது, தமிழ், தமிழர் என்பதை ஒலிக்கத் தெரியாமல் திரமிள, திராவிட என்று ஒலித்தனர். அவ்வாறே திராவிடர் என்று பிராக்ருத, சமற்கிருத மொழிகளில் எழுதியும் வைத்தார்கள். அக்கொச்சைச் சொல்லை அப்போதும் சரி, அதன்பின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்பும் சரி தமிழர்கள் ஏற்கவில்லை. “திராவிடர்” என்று தங்களை அழைத்துக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதியதால்தான், சங்க இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்தி இலக்கியங்களிலோ “திராவிடர்” என்ற சொல்லைத் தமிழர்கள் பயன் படுத்தவில்லை என்று நான் பேசி வருகிறேன்; எழுதி வருகிறேன்.

எனது அக்கருத்தை மறுக்கவந்த புலவர் முருகேசன், ஆழ்வார்கள் காலப் பெரிய திருமொழியில் திராவிடர் என்று கூறியுள்ளதாகப் புனைந்துரைக்கிறார். பெரிய திருமொழியின் சிறப்புப் பாயிரப் பாட்டையும் எடுத்துப் போட்டுள்ளார். அவர் சான்று காட்டியுள்ள பாடலே எனது கருத்துக்கு வலுவான சான்றாகும். பெரிய திருமொழியை எழுதியவர் திருமங்கை ஆழ்வார். அவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு.

அப்பாடலில் “நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுறை” என்று உள்ளது. இதில் “தமிழ நன்னூல்கள்” பற்றிக் கூறப் பட்டுள்ளது. புலவர் முருகேசன் புனைந்துரைப் பது போல் “திராவிட நன்னூல்கள்” என்று கூறப்பட வில்லை. பெரிய திருமொழிக்கு அதில் உள்ள மேற்படிப் பாடலுக்குப் பிற்காலத்தில் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் உரை எழுதிய பிள்ளை லோகாச்சாரி ஜீயர் என்பவர் தமிழ நன்னூல்கள் என்பதற்குத் “திராவிட சாத்திரம்” என்று விளக்கம் தந்துள்ளார் என்கிறார்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய எழுதிய பக்திப் பாடல்கள் காலத்தைப் பக்தி இலக்கியக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்தார்கள். கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி சேக்கிழாரின் பெரியபுராணம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை உள்ள காலப் பகுதியைப் பக்தி இலக்கியக் காலம் என்பர். நான் இந்தப் பக்தி இலக்கியக் காலநூல்கள் ஏதாவதொன்ஷீல் “திராவிடம்” என்ற சொல் பயன் படுத்தப்பட்டதா என்று வினவி, இல்லை என்று விடையிறுத்திருந்தேன்.

புலவர் முருகேசன் பக்தி இலக்கியக் காலநூல் ஒன்றுக்கு பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகள் கழிந்தபின் எழுதிய விளக்கவுரையில் “திராவிட” என்ற சொல் இருக்கிறது என்கிறார். இது என்ன வாதம்! விதண்டாவாதம்! வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்த கால அளவை வைத்தே நான் சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் என்று வரிசைப் படுத்தி அவற்றுள் எதிலும் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை, காரணம் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதைக் கேவலமாகக் கருதிய காலங்கள் அவை என்றேன்.

பெரிய திருமொழி நூலில் இருக்கிறது “திராவிடம்” என்று புலவர் முருகேசன் காட்டியிருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது எழுதப்பட்டு, 700 ஆண்டுகள் கழித்து, பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகளுக்குப் பின், பெரிய திருமொழிக்கு உரை எழுதிய பிராமணரான பிள்ளை லோக்காச்சாரி ஜீயர் தம் சொந்த சொல்லாகப் பயன்படுத்திய “திராவிட” என்ற வைக்கோல் துரும்பை எடுத்துக்கொண்டு வாள் வீசுகிறார் புலவர் முருகேசன். அசலான தமிழ் இனத்தை தமிழ் மொழியைப் புறந்தள்ளி விட்டுப் போலியான திராவிடத்தை எடுத்துக் கொள்வதுதான் திராவிட இயக்க மரபு.

கருணாநிதியிலிருந்து புலவர் முருகேசன் வரை உள்ள திராவிடச் சிந்தனையாளர்களுக்குக் கிடைத்த திராவிடச் சான்று அனைத்தும் ஆரியம் தந்த சான்றுகள் தாம்!

சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் ஆகிய மூன்று காலப் பகுதிகளிலும் தமிழர் என்ற இனப் பெயரும், ஆரியர் என்ற இனப் பெயரும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் ஓரிடத்தில் கூட திராவிட என்ற இனப் பெயரோ அல்லது மொழிப் பெயரோ பதிவாகவில்லை. காரணம் தமிழர் என்பதும் ஆரியர் என்பதும் அசலான இனப்பெயர்கள். திராவிடம் என்பது மாயை.

தெலுங்கினத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு. அப் போது சமற்கிருதமும் தெலுங்கும் தமிழகத்தில் கோலோச்சின. தமிழ் புறந்தள்ளப் பட்டது. அக்காலத்தில்தான் மணிப்பிரவாள நடையை உரையாசிரியர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் வைணவ ஆச்சாரியார்கள் (பிராமணர்கள்) மணிப்பிரவாள நடையை அதிகம் பயன்படுத்தினர். சமற்கிருதமும் தமிழும் சரிக்குச் சரியாகக் கலந்து எழுதுவதற்குப் பெயர் மணிப்பிரவாளம்! மணிப்பிரவாளத்தில் தமிழைத் தமிழ் என்று சொல்ல மாட்டார்கள், திராவிடம் என்றே சொல்வார்கள். ஆரியப் பிராமணரான பிள்ளை லோகாச்சாரி ஜீயர் பயன்படுத்திய மணிப்பிரவாள “திராவிடம்” தான் புலவர் முருகேசன் அவர்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய சான்று!

18ஆம் நூற்றாண்டில் தான் முதல்முதலாகத் தமிழ்ச் செய்யுளில் தாயுமானவர் “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார். பிராமணர்களின் மணிப்பிரவாளம் மலிந்திருந்த காலம் அது. தாயுமானவரும் தமது நேர் கூற்றாகத் “திராவிடம்” என்ற சொல்லைப்பயன் படுத்தவில்லை. விதண்டாவாதம் செய்பவர்களைச் சாடிய தாயுமானவர், ‘இது என்றால் அது என்பர், அது என்றால் இது என்பர்’ என்று கூறி நையாண்டி செய்தார். “முதலில் வடமொழியில் வந்ததென்பார்; வட மொழியில் வல்லவர் ஒருவர் வந்து விட்டால் திராவிட மொழியில் வந்ததென்பார்” என்று கூறினார் தாயுமானவர். இதனால் படித்தவர்களை விடப்படிக்காதவர்களே மேல் என்றார்.

“சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ, அரப்பா என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கின்றனவா? இல்லை. அவை இடம் பெற வில்லை என்பதற்காக அவை இல்லை என்று ஆகிவிடுமா” என்று கேட்கிறார் முருகேசன்.

1920களில் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்டவை, புதையுண்டு கிடந்த மொகஞ் சொதாரோ, அரப்பா நகரங்கள். இந்நகர நாகரிகம் 3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும். சிந்து வெளி நாகரிகம் மொகஞ் சொதாரோ, அரப்பா போன்றவற்றை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தின் பல பகுதிகள் குசராத்திலும் இருந்தன. அங்குள்ள துவாரகையை தலை நகராகக் கொண்டு தமிழக வேளிர் ஆண்டனர் என்ற குறிப்பைக் கபிலர் கூறியுள்ளார். புறநானூறு 201 ஆம் பாடலில் இக் குறிப்புள்ளது.

பாரி மகளிரை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு இருங்கோவேளை வேண்டிய பொழுது, கபிலர் இருங்கோவேளின் முன்னோர் துவாரகையை ஆண்ட வேளிர் ஆவர். அவ்வேளிர் மரபில் நீ 49ஆவது தலைமுறை என்றார்.

“நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்

செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை

உவரா ஈகைத் துவரை யாண்டு

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே”

என்று கபிலர் கூறினார். இவ்வரிகளுக்கு உ.வே. சாமிநாதய்யர் பிழையான விளக்கம் எழுதியுள்ளார் என்று ஐராவதம் மகாதேவன் கூறி மேலே சொன்ன புதிய விளக்கம் தந்துள்ளார். (சிந்து வெளிப்பண்பாடும் சங்க இலக்கியமும் முனைவர் ஐராவதம் மகாதேவன் செம்மொழித் தமிழாய்வு நிறுவன வெளியீடு, சனவரி 2010)

துவரை என்பதை துவார சமுத்திரம் என்று உ.வே.சா. கூறியிருப்பது சரியன்று என்று மகாதேவன் சுட்டுகிறார். உ.வே.சா. பிழையாகக் கருதிய துவார சமுத்திரம் என்ற கருத்தைப் பின்னர் வந்த அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை போன்றோரும் அவ்வாறே எடுத்துக் கொண்டனர்.

பாரி மகளிரை ஏற்க மறுத்த இருங்கோவேள் மீது கபிலர் சினந்து பாடிய பாடல், புறம் 203ஆம் செய்யுளில் உள்ளது. அப்பாடலில் வரும் “அரையம்” என்ற சொல் அரப்பாவைக் குறிப்பிடுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன். தமக்கு முன் பி.எல்.சாமி அரையம் என்பதை அரப்பா என்று செந்தமிழ்ச்செல்வி சனவரி 1994 இதழில் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார் மகாதேவன்.

“இருபாற் பெயரிய வருகெழு மூதூர்க்

கோடி பல வடுக்கிய பொருமணுக்குதவிய

நீடுநிலை அரையத்துக் கேடுங் கேளினி”

என்ற வரிகளில் அழிந்து போன இருபெரும் சிந்து வெளி நகரங்களைக் குறிக்கின்றார் என்கிறார் மகாதேவன். தம் கூற்றுக்கு மேலும் சான்றுகளாக அகம் 15, 208, 372, 375 ஆகிய பாடல் களையும் மற்ற சங்கப் பாடல்களையும் அவர் கூறுகிறார். எனவே, எடுத்தேன் கவிழ்த் தேன் பாணியில் சங்க இலக்கியங்களில் சிந்துவெளி நாகரிக நகரங்கள் குறிப்பிடப் பட வில்லை என்று கூற வேண்டியதில்லை. புதிது புதிதாய் வருகின்ற ஆய்வுகளையும் புலவர் முருகேசன் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தெலுங்கு நாயக்கமன்னர்கள் காலத்திலேயே திளைத் திருக்கக் கூடாது; கால்டு வெல் காலத்திலேயேகளித் திருக்கக்கூடாது.

அடுத்து,தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதை இழி வாகக் கருதினால், ‘சிந்து வெளி நாகரிகம் எங்கள் நாகரிகம்’ என்று உரிமை கொண்டாடக் கூடாது என்கிறார். ஏன் உரிமை கொண்டாடக்கூடாது? தஞ்சாவூரை ஒலிக்கத் தெரியாமல் (உச்சரிக்கத் தெரியாமல்) டேஞ்சூர் என்றனர் வெள்ளையர். தஞ்சாவூரை டேஞ்சூர் என்றுதான் இன்றும் சொல்லவேண்டும், தஞ்சாவூர் என்று சொன்னால், தமிழர்கள் தஞ்சாவூருக்கு உரிமை கொண் டாடக்கூடாது என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது புலவர் முருகேசன் கூற்று!

“தமிழர்”என்பதை ஒலிக்கத் தெரியாமல், திரமிள, திராவிடர் என்றனர் வந்தேறிகளான ஆரியர்கள். அந்தக் கொச்சைத் திரிபைத் தமிழர்கள் இன்றும் கட்டி அழ வேண்டுமா?

அடுத்து, தமிழர் என்ற மரபினத்திலிருந்து தெலுங்கர், கன்னடர் போன்றோர் பிரிந்து போய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. பால் தயிரான பிறகு, தயிர் மீண்டும் பால் ஆகாததுபோல் தமிழரிலிருந்து பிரிந்துசென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர் மீண்டும் தமிழராகமாட்டார், அவர்கள் மொழியும் தமிழாகாது என்றார் தேவநேயப் பாவாணர்.

எந்தக்காலத்திலும் பழந் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத “திராவிடர்” என்ற சொல்லை இந்தக் காலத்தில் தமிழர்கள் என்ன காரணம் பற்றி ஏற்கவேண்டும்? ஆரியர்களும், ஆரியப் பார்ப்பனர்களும் மட்டுமே அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை “திராவிடம்” என்று பேசி தமிழரைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் தாங்கள் தமிழர் என்ற மரபினத்திலிருந்து தோன்றியவர்கள் என்றோ, தங்கள் மொழி, தமிழிலிருந்து பிரிந்தது என்றோ ஏற்றுக் கொள் கிறார்களா? அதுவும் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத்தைப் பேசி தமிழினத்தைச் சீரழிக்கும் கீழறுப்பு வேலைகளை இன்றும் தொடர்வது ஞாயமா? நேர்மையா?

“திராவிடம்” என்ற சொல்லை வடமொழியில் உள்ள மனுதர்ம நூலிலிருந்தும், பிற சமற்கிருத நூல்களிலிருந்தும் எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளுக்கு மூலமொழி (Proto Language) திராவிடம் என்றார். மூல மொழி தமிழ்தானே தவிர, திராவிடம் அல்ல என்பதைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட மொழி நூல் அறிஞர் பலர் நிறுவியுள்ளனர்! ஆனால் தமிழ் நாட்டுத் திராவிட அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், ஆரியர்கள் உருவாக்கிய திராவிடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தமிழின் மேன்மையைக் குலைக்கின்றனர்.

கால்டுவெல் தவறாகப் பெயர் சூட்டிய திராவிடத்தைப் பின்பற்றியே மேலை ஆய்வாளர்கள் தமிழர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று கூறினர். அதற்காக அது திராவிட நாகரிகம் ஆகி விடாது. தமிழர் நாகரிகமே!

காசி பாரத வித்யா பீடம் உ.வே.சாமிநாதய்யருக்கு “திராவிட பாஷாவித்வ” என்று பட்டம் கொடுத்தது. காஞ்சி மடம் அவருக்கு “தட்சிணாய கலாநிதி” என்று பட்டம் கொடுத்தது. இவை இரண்டும் ஆரியப் பார்ப்பன பீடங்கள். அவை “தமிழ்” மொழியை வெறுப்பவை. தமிழ் என்று ஒலிப்பதும் இழிவு என்று கருதுபவை. அப்படிப் பட்டோர் கொடுத்த “திராவிட வித்வ” என்ற பட்டத்தைத் தான் தமது திராவிடச் சித்தாந் தத்துக்குச் சான்றாகக் கருணாநிதி கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட வேண்டியது தானே என்று நாம் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கிறோம். உடனே புலவர் முருகேசன் சீறிப்பாய்கிறார். இதோ பழந்தமிழ் இலக்கியச் சான்று என்று ஆரியப் பார்ப்பனர் பிள்ளை லோகாச் சாரி ஜீயர் 16ஆம் நூற்றாண்டில் எழுதிய விளக்க உரையைத் தூக்கிப் போடுகிறார்.

கருணாநிதியாக இருந்தாலும் முருகேசனாக இருந்தாலும் திராவிடத் திரிபு வாதத்திற்குக் கிடைக்கும் சான்றெல்லாம் ஆரியப் பார்ப்பனச் சான்றுகள் மட்டுமே!

“திராவிடம் என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் நிலத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான்“ என்கிறார் புலவர் முருகேசன். தமிழ், தமிழர், தமிழகம் என்ற அசல் இருக்கும்போது ஆரியர் திரித்துச்சொன்ன திராவிடத்தை ஏன் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்? நீங்களும் ஆரியரைப்போல் ஏதோ ஒரு வகையில் திரிபுவாதிகளா? தஞ்சாவூர், தூத்துக்குடி என்ற அசல் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது டேஞ்சூர், டூட்டுக் கொரின் என்ற அயலாரின் திரிபுகளை ஏன் பயன் படுத்தவேண்டும்?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஜைன சமயத்தைச் சேர்ந்த ஆரியரான வஜ்ரநந்தி தமிழகத்தில் “திராவிட சங்கம்” ஒன்றை உருவாக்கினார். ஜைனம், பெளத்தம் ஆகியவை முற்போக்கு மதங்கள் தாம். ஆனால் அவை ஆரியத்தில் தோன்றியவை. அச்சமயங்களின் குருமார்கள் தமிழ் நாட்டில் பிராக்கிருதம், சமற் கிருதம், பாலி போன்ற அயல் மொழிகளைத்தாம் பரப்பினர். அவர்கள் தமிழை மதிக்க வில்லை, ஏற்கவில்லை. எனவே தான் ஆரியரான வஜ்ரநந்தி தமிழ்நாட்டில் திராவிட சங்கம் தொடங்கினார்.

சமண மதத்திலிருந்து விலகி சிவநெறிக்கு வந்த தமிழரான திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று சிவபெருமானைப் பாடினார். அவர் “திராவிடன் கண்டாய்” என்று பாடவில்லை. “திராவிடன்“ என்பதைத் தமிழர்கள் இழிவாகக் கருதினார்கள். திருநாவுக்கரசர் காலமும் கி.பி. 7ஆம் நூற்றாண்டே!

நாலாயிரத்திவ்வியப் பிரபந்த நூல்களை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் “திராவிட வேதம்” என்று கூறியதை ஒரு சான்றாக முருகேசன் குறிப்பிடுகிறார். ஆரியர் உருவாக்கிய மண் குதிரையை நம்பித்தான் திராவிடப் பயணம் நடை பெறுகிறது என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று.

“திராவிடம்” என்ற பெயரில் தானே பெரியார் தொடங்கி இன்றுள்ள திராவிடத் தலைவர்கள் வரை தமிழர்களுக்குப் பாடு பட்டார்கள் என்கிறார் புலவர் முருகேசன். ஏன், தமிழர்கள் என்ற இனப்பெயரில் செயல் பட்டிருந்தால் பேரிழப்புகள் ஏற்பட்டிருக்குமோ? அத்தலைவர்கள் தங்களுக்கு மட்டும் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்கள். திராவிடர் தலைவர், திராவிட இனத்தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியதுதானே!

தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும், திராவிடன் என்று சொன்னால் தமிழனையும், தெலுங்கர், கன்னடர், மலையாளி, துளுவர் ஆகியோரையும் குறிக்கும் என்கிறார் முருகேசன். எதற்காக தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழருடன் இணைத்து ஒன்றாகப் பேச வேண்டும். தமிழர்களின் காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றைப் பறித்தது போதாதா? கர்நாடகத்திலும்,கேரளத்திலும் காலம்காலமாக வாழும் தமிழர்களைத் தாக்கி அகதிகளாக விரட்டியது போதாதா? தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தியது போதாதா? தமிழர் தாயக ஊர்களையும், நகரங்களையும் ஆயிரக்கணக்கில் மேற் படி மூன்று இனத்தாரும் அபகரித்துக் கொண்டது போதாதா?

அந்த மூன்று மாநிலத்தவர்களும் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு தங்களைத் திராவிடர் என்று கூறுகிறார்களா? இல்லை. பின்னர் தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத் தலைவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், திராவிடர் என்று தான் இனப்பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று வரிந்து கட்டுவதும் ஏன்? இதிலுள்ள சூழ்ச்சி என்ன? தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் தமிழர்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? இனியும் ஏமாற்றத் துடிப்பதேன் திராவிடக் கட்சிகள்?

தமிழ்த் தேசியம் என்ற மிகச்சரியான தேசிய இன, அரசியல் விடுதலை முழக்கம் தமிழர்களிடையே எழுச்சிப் பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாமல்தான் திராவிடத் திரிபுவாதிகள் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள். இனியும் தமிழர்கள் திராவிடத்தைச் சுமக்க மாட்டார்கள்; தன்னழிவுப் பாதையில் போக மாட் டார்கள்.

கடைசியாக ஒன்று, பிற்காலத்தில் “திராவிடர்’ என்ற சொல் தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்தது என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் விளக்குவதை முனைவர் த. செயராமன் சுட்டியுள்ளார்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19866:2012-05-24-04-36-14&catid=1477:162012&Itemid=720

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நீங்கள் போட்ட இணைப்பு மழை அடித்து ஓய்ந்தது போல் என்ன எழுத வந்தேன் என்பதே எனக்கு மறந்து விட்டது. நன்றி பயனுள்ள இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான தலைப்பைக் கொண்டு சென்ற விதம் மிகவும் நன்றாக இருந்தது!

ஆய்வு, சூடு பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் அவசரப்பட்டு முடித்த மாதிரிக் கிடக்கு!

மேல் வரும் இணைப்பைப் பார்க்கவும்,

http://ngm.nationalg...ature2/map.html

இது,எவ்வாறு மனிதகுலம், ஆபிரிக்காவில் இருந்து நகர்ந்திருக்கலாம் என எதிர்வு கூறுகின்றது.

இந்த ஆய்வு, உயிர் மூர்த்தங்களை (DNA) அவதானித்து எழுதப் பட்டது.

இதன் கால அளவு, ஆகக் குறைந்தது ஐநூறு நூற்றாண்டுகளைப் பற்றிக் கதைக்கின்றது!

இந்த மனித அசைவுகளின் காலங்கள், அவுஸ்திரேலியப் பூர்வீகக் குடிகளுக்குப் பொருந்துகின்றன!

மற்றும் சிந்து வெளி, ஹரப்பன் கால வெளியுடனும் ஓரளவு பொருந்துகின்றது.

மனிதர்களால், உருவாக்கப் பட்ட தடயங்களை ஆராய்வதிலும் பார்க்க, இயற்கையின் படைப்புக்களில், மனிதன் விட்ட தடயங்களை ஆராய்வதே, நீண்டகால நகர்வுகளைத் தெளிவு படுத்தும்.

உதாரணமாக Fossils போன்ற தடையங்கள், குகைகளுக்குள் வரையப்பட்ட ஓவியங்கள்,கடலடித் தளங்களில் எஞ்சிய தடயங்கள் ஆகியவை, மிகப் பழைய கால நாகரீகத்தை, வெளிக்காட்டும் என எண்ணுகின்றேன்!

மனிதனால், சடப் பொருட்களைக் கொண்டு கட்டப் படுபவை, கால வெள்ளத்தில் கரைந்து போய் விடக்கூடியவை!

உங்கள் ஆய்வு, சுமேரியர்கள் நாகரீகமடைந்தவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது!

ஆயினும், இந்தியாவில் இருந்து, அவர்கள் ஏன், மொசொப்போதேமியாவுக்குப் போயிருக்கக் கூடாது?

தங்கள் தொடருக்கு நன்றிகள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத் தவிர யாரும் கருத்துக்கூற வரவில்லை புங்கையூறான். எழுத ஆரம்பிக்கும் போது நான் எழுத நினைத்ததற்கும் முடிக்க நினைக்கும் போது வந்துள்ள முடிவிற்கும் இடையில் பாரிய இடைவெளியை நானே உணர்கின்றேன் தான். ஆனாலும் வரலாற்று ஆர்வமற்ற எம்மவர்க்கு எழுதுவது விழலுக்கு இறைத்ததுபோல் உணர்வைத் தந்ததனால் அந்த மூச்சோடு தொடர என்னால் முடியாதது என்குறைதான் என்ன செய்வது.நன்றி புங்கை.

[size=3]ஒரு விடயத்தைப் பற்றி எழுதம்போது அதைப்பற்றியதான அறிவு மென்மேலும் பெருகுகிறதல்லவா... அப்புறம் என்ன.. போற்றுதலுக்ககாக ஒரு விடயத்தை செய்தால் ஈடுபாடு குறைந்துவிடும். மனம் தளராமல் உங்கள் தேடலை தொடருங்கள்... ([/size][size=3]தவறாக எண்ண வேண்டாம் )[/size]

[size=3]சமீபத்தில் முக நூலில் சுமேரியரின் கடவுள் பற்றி ...[/size]

[size=3]பைபிளில்(ஹிப்றேவ் பதிப்பில் ) இடம்பெற்ற (TAMMUZ )"தமிழ்" என்ற கடவுளின் உருவத்தை இங்கே நாம் பார்கலாம்.[/size]

[size=3]படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும். இந்த உருவத்தை உற்று பார்த்தால் அது நாம் வணங்கும் தமிழ் கடவுளான "முருகனை" போலவே இருக்கிறது. நாம் அவரை தமிழ் கடவுள் என்றே அழைப்போம் . அதே போல் பைபிள் வாசகத்தில் அவர் காட் தமிழ்(God Tammuz) என்று குறிப்பிட படுகிறார். அவர்கள் இந்த கடவுள் வாழ்க்கைக்கான செழிப்பை தரும் கடவுளாக கருதுகிறார்கள்.[/size]

[size=3]Tammuz(தமிழ்) (Syriac: ܬܡܘܙ; Hebrew: תַּמּוּז, Transliterated Hebrew: Tammuz, Tiberian Hebrew: Tammûz; Arabic: تمّوز Tammūz; Turkish: Temmuz; Akkadian: Duʾzu, Dūzu; Sumerian: Dumuzid (DUMU.ZI(D), "faithful or true son") was the name of a Sumerian god of food and vegetation.

Tammuz "தமிழ்" is the month of July in Iraqi Arabic and Levantine Arabic (see Arabic names of calendar months).

bible verses:

"Then he brought me to the door of the gate of the Lord's house which was toward the north; and, behold, there sat women weeping for Tammuz. Then said he unto to me, 'Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these." —Ezekiel 8:14-15

Ezekiel's testimony is the only direct mention of Tammuz in the Hebrew Bible.[/size]

[size=3]http://www.facebook....pe=1&permPage=1[/size]

Edited by ஆதித்ய இளம்பிறையன்

உங்களைத் தவிர யாரும் கருத்துக்கூற வரவில்லை புங்கையூறான். எழுத ஆரம்பிக்கும் போது நான் எழுத நினைத்ததற்கும் முடிக்க நினைக்கும் போது வந்துள்ள முடிவிற்கும் இடையில் பாரிய இடைவெளியை நானே உணர்கின்றேன் தான். ஆனாலும் வரலாற்று ஆர்வமற்ற எம்மவர்க்கு எழுதுவது விழலுக்கு இறைத்ததுபோல் உணர்வைத் தந்ததனால் அந்த மூச்சோடு தொடர என்னால் முடியாதது என்குறைதான் என்ன செய்வது.நன்றி புங்கை.

இந்த மனப்பான்மையை முதலில் நீங்கள் நூறுவிகிதம் துடைத்து எறியவேண்டும் . ஒரு படைப்புக்கு உள்ள அங்கீகாரம் வருகின்ற கருத்துக்களால் இல்லை . மாறாக , உங்கள் பதிவு எத்தனை பேரை சென்றடைந்திருக்கின்றது என்பதிலேயே உள்ளது . எனது வாழ்வியல் கருவூலத்திற்கு நான் கருத்துக்களை எதிர்பார்பதில்லை . வாழ்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை எனது பார்வையாகப் போடுகின்றேன் . அந்த பதிவு வெற்றி பெற்றதுதானே சுமே ??

இனி உங்கள் வரலாற்று தொடரைப் பற்றி எனது கருத்து .........

உங்கள் தொடர் பெரிய எதிர்பார்ப்பை படங்களுடன் கொடுத்தது . ஆனால் இறுதிப்பகுதியை முடிக்கும் பொழுது , ஆதாரபூர்வமாக நிறுவி முடிக்காது வெறும் ஊகங்களாக முடித்திருக்கின்றீர்கள் . இத்தகைய முடிவானது வரலாறுகளில் பத்துடன் பதினொன்றாக வைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பது எனது கருத்தாகும் . ஆனாலும் இப்படியான ஒரு வரலாற்றுப் பதிவை தொடங்க வேண்டும் என்ற உங்கள் தேடலை என்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை . மேலும் பல வரலாற்றுத் தொடர்களைத் தொடர எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நான் அடுத்த பகுதியில் தானே முடிக்கவுள்ளேன் கோமகன். இன்னும் தொடர் முடியவில்லை. இனிமேற்றான் ஆதாரங்களை முன்வைக்க இருக்கிறேன். ஆதித்தியன் கூறியதுபோல போற்றுதலுக்காகச் செய்யவில்லைத்தான். சரி என்னால் முடிந்தவரை இறுதிப் பாகத்தை [/size][size=5]ஏலுமானவரை கனதியுடன் தர முயல்கிறேன். என் குறை என்னவெனில் என்னிடம் விளங்கியோ அன்றி விளங்காமலோ வினாக்களைத் தொடுத்தால் அல்லவா பதில் கூற அல்லது நானே சரியான விடையை அறிய உதவும். அதை விடுத்து நான் என்பாட்டில் எழுத வாசிப்பவர் தன்பாட்டில் வாசிக்க......சரி தொடரலாம்.[/size]

[size=5]நன்றி இளம்பிறையன் நன்றி கோமகன்[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Sanskrit and Indo -European languages.

9673_4460310959217_2060751491_n.jpg

source-The London Daily Mirror.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் இது மூன்று மாதங்களின் முன் ஓடித்திரிந்தது.நன்றி

வடநாட்டுப் பாலி, பிராகிருத மொழிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வடதமிழ்

என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. வடமொழியின் தாக்கத்தால் வடநாட்டுத்

தமிழ் பாலி பிராகிருத மொழிகளாகத் திரிந்துவிட்டன. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் முதலெழுத்துக்கள் 30 என வரையறுக்கப்பட்டன. அதில் எக்காலத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. தமிழைப் போன்ற 30 அடிப்படை எழுத்துக்களைக் கொண்டிருந்த பிராகிருத, பழைய பாலி, திபத்து மொழிகளில் பிறமொழித் தாக்குதல் ஏற்பட்ட பின்பு சமற்கிருதத்துக்குரிய சிறப்பு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் பாலி மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 41ஆக உயர்ந்தது. பின்னர் பாணினியின் இலக்கண நூலுக்கு மூலமாக விளங்கிய சிவசூத்திரத்தில் சமற்கிருத எழுத்துக்கள் 42 என விரிவுபடுத்தப்பட்டன. இவற்றோடும் வேறு 9 எழுத்துக்களைப் பாணினி வகுத்துக் கொடுத்தார். காலந்தோறும் எழுத்துக்களின் எண்ணிக்கை மாறிவந்த வடமொழியின் எழுத்துத் தோற்றம் காலத்தால் பிந்தையது என நன்கு தெரிகிறது. அடிப்படை எழுத்து 30 என்பதில் எத்தகைய மாற்றமும் கொள்ளாத தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் காலத்தால் மிகவும் முந்தையது என்பதும் ஒப்பிட்டுப் பார்க்காமல் முரட்டு வலக்காரத்தோடு (பிடிவாத்தோடு) ஆய்வு செய்பவர்களுக்கு எல்லாம் வடக்கிலிருந்து வந்தன என்னும் பொய்த் தோற்றம்தான் தெரியும்.

அசோகர் காலப் பிராமி எழுத்துதான் இந்தியாவில் பழையது என்றால் அந்த எழுத்து எப்படித் தோன்றியது அதில் உள்ள பழைய இலக்கியங்கள் எங்கே என்பதற்கு ஐராவதம் மகாதேவனாரிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை. சரியா அணுகுமுறை எகுபதிய ஓவிய எழுத்துக்கள் சுமேரிய ஆப்பு எழுத்துக்கள், சீன ஓவிய எழுத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வெற்றி கண்டவர்கள் பின்பற்றிய அணுகுமுறைகள் எவற்றையும் அசுகோ பர்போலாவும், ஐராவத மகாதேவனாரும் பின்பற்றவில்லை. அதனால்தான் சிந்துவெளி முத்திரைகளில் ஒன்றைக்கூட இவர்களால் செப்பமாகப் படிக்க முடியவில்லை. மேற்கண்ட எழுத்துக்களை ஆய்ந்தோர் ஒரே எழுத்தொலிப்புக்குச் சமகாலத்தில் இடவேறுபாடுகளாக வழங்கிய வரிவடிவ வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டினர். எகுபதிய மொழியில் க(k) என்பதற்கு 16 வகை வரிவடிவ வேறுபாட்டு எழுத்துக்கள் உள்ளன. எகுபதிய மொழியிலுள்ள 24 அடிப்படை ஒலிப்பெழுத்துக்கு 130 வரிவடிவங்கள் உள்ளன.

எந்தெந்த எழுத்துக்கு இடவேறு பாடாக எத்தனை வரிவடிங்கள் உள்ளன என அவர்கள் மேற்கண்ட மொழிகளில் பட்டியலிட்டனர். 38 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்துவெளி எழுத்தில் ஆய்வு செய்யும் ஐராவதம் மகாதேவனார். அசுகோ பர்போலா போன்றோர் இம்முயற்சியில் ஈடுபடவே இல்லை. வேறு யாரேனும் சிந்துவெளி எழுத்தில் இத்தகைய வேறுபாடுகளை (Homophonic) வகைப்படுத்திக் காட்டினாலும் அதை எடுத்துக் காட்ட வில்லை. மேற்கண்டவாறு சுமேரிய எகுபதிய மொழிகளை ஆய்வு செய்தோர் குறிப்பிட்ட எழுத்தின் வடிவம் காலந்தோறும் எப்படி மாறி வந்திருக்கிறது என்று காலமுறை வரிவடிவத் திரிபுகளைப் (Chronilogical and regional Classification of the Script forms) பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர். இப்பணியையும் சிந்துவெளி எழுத்தாய்வில் எவரும் மேற்கொள்ளவில்லை.

உலகம் ஒரு போக்கில் போனால் ஐராவதம் மகாதேவனார் போன்றோர் வேறொரு போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிறந்த ஆய்வாளர் என்றால் எந்தச் சிக்கலையம் விடுவித்துப் படிக்க முடியாத முத்திரை எழுத்துக்களையும் படித்துக்காட்டவேண்டும். அதை விடுத்து இதுவும் சரியில்லை அதுவும் சரியில்லை என்று கூறிவிட்டு அதற்கான அரைகுறைக் காரணங்களைக் காட்டுவதன் வாயிலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருத முடியாது. ஒரு குற்றத்திற்கான வழக்கில் யார் குற்றவாளி என்னும் உண்மையைக் கண்டறியாமல் முறைமன்ற நடுவர் இரு சாராரிடத்திலும் குற்றம் உள்ளது என வழக்கைத் தள்ளுபடி செய்தால் அதைத் தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியாது.

நடுநிலை சிந்துவெளி எழுத்தைப் படித்துக் காட்டும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியர்களின் அணுகுமுறைகளை அலசி இவை ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் ஐராவதம் மகாதேவனார் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படித்துக் காட்டிய அணுகு முறைகளைப் பற்றிக் குறை கூறாதது ஏன்? சமற்கிருதம் பற்றிய அறிவு மேனாட்டாருக்கு மிகுதி, அசுகோ பர்போலா தமிழ் படிக்காதவர். எதையும் வடடொழி வழிவந்த தொன்மக் (புராண) கதைகளோடு இணைத்துக் காண்பார். சிந்துவெளி முத்திரைகளை வெளியிட்டவர்கள் வணிகர்கள். வணிகர்களுக்கும் தொன்மக் (புராண) கதைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது அசுகோ பார்போலாவுக்குத் தெரிவில்லை.

ஒரு மீன் சின்னத்தின் அருகில் ஆறு கோடுகள் இருந்தால் அறுமீன் – கார்த்திகை மீன் – முருகனைக் குறிப்பது என எகுபதிய பட எழுத்தைப் படிக்கின்ற பாங்கில் தன் ஆய்வை விரித்துரைக்கிறார். கடவுளுக்கு வணிக முத்திரை எதற்கு என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை. மீன் வடிவத்தில் தலைமேல் ஒரு கூரை போன்ற தலைகீழ் வடிவத்தைக் கண்டு மைமீன் என்று அசுகோ பர்போலா படித்துக் காட்டுகிறார். கூரை வேய்தலை வேய்தல்

என்பார்கள். அது மேய்தல் என்றும் திரியும். மேய்தல் வெறும் மேய் என நிற்கும். அது மை எனத் திரிந்து கருநிறத்தைக் குறிக்கும். மை மீன் என்று கரிய மீனாகிய சனிக்கோளைக் குறிக்கும் என்கிறார். வேய்(தல்) – மேய் – ஆதி மேய் – மை ஆகுமா? கூரை வேய்தலுக்கும்

கருநிறத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

தமிழ் தெரிந்தவராகவும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் உள்ள ஐராவதம் மகாதேவனார் அசுகோ பர்போலாவின் ஆராய்ச்சிக் குறைபாடுகளை முழுமையாகக் காட்டவில்லை. ஐராவதம் மகாதேவனாரின் ஆய்வுகள் சிந்துவெளித் தமிழரின் உண்மை வரலாற்றைத் தெளிவாக உறுதிப் படுத்துவனவாக இல்லை என்பதே பலர் சிந்தனையிலும் நிழலாடும் கருத்தாக உள்ளது. சிந்துவெளி முத்திரையில் உள்ளவை மொழி எழுத்துக்கள் அல்ல வெறும் குறியீடுகள் என்று வெளிவந்த வெளிநாட்டுக் கட்டுரைகளை அசுகோ பர்போலாவும் ஐராவதம் மகாதேவனும் ஆணித்தரமாக மறுத்த கட்டுரைகள் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றன. ஆயினும் தமிழ் எழுத்து அசோகர் பிராமியிலிருந்து வந்தது, தமிழர்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவர்கள் சிந்துவெளி எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட்டது போன்ற ஐராவதம் மகாதேவனாரின் கருத்துக்கள் அவருக்கும் தமிழுலகிற்கும் பெருமை சேர்ப்பனஅல்ல.

தமிழுக்கு ஆக்கம் விளைப்பன அல்ல. எனினும் சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஐராவதம் மகாதேவனாரின் உழைப்பு தந்துள்ள பயனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டாக வடபிராமி தென்பிராமி கல்வெட்டுக்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றை அலசி ஆராய்வதற்கு

ஐராவதனார் பெரிதும் பாடாற்றி ஆய்வுப் புலங்களைப் பீடு பெறச் செய்திருக்கிறார். காடு மலை ஏறிக் கால்கடுக்க நடந்து ஊன்றிப் பார்த்தும், ஒற்றியெடுத்தும் எழுத்துப் பதிவுகளைச் சரிபார்த்த பேருழைப்புக்குத் தமிழுலகம் அவருக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. அவரை எவ்வளவு போற்றினாலும் தகும். விரிவான தரவல்களை முறையாக ஆராய்ந்தாலும் முன்னைத் தமிழின் தொன்மை அளவீட்டைச் சரியாகச் செய்யவில்லை என்பதே தமிழுலகின் மனக்குறை. கல்வெட்டு ஆய்வில் பலருக்கு ஊக்கம் பெருகப் பெரிதும் உழைத்திருக்கிறார் என்றாலும் தமிழின் உண்மை வரலாற்றுக்கு ஆக்கம் சேர்க்கவில்லை என்னும் மனக்குறை நீடிக்கத்தான் செய்கிறது.

மேற்கோள் குறிப்பு

1. I. Mahadevan, 2002, Presidential Address, IHC, Bhopal

2. Asko Purpola, Corpus of Indus Seals and Inscriptions

3. R. Madhivanan, 1995, Indus Script among Dravidian Speakers

4. மயிலை சீனிவேங்கடசாமி, 1981, சங்கக் காலப் பிராமி கல்வெட்டுகள்

5. R.Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers

6. Indrapala, Is is an Indus Script. The Hindu.

7. R. Madhivanan 1995, Indus Script Among Dravidian Speakers

8. R. Madhivanan, 1995 Indus Script Among Dravidian Speakers

9. Rajan, 2004, Hero Stone, Puliman Kombai

10. நாராயணராவ் 1938, Brahmi Inscriptions of South India, The Men

Indian Antiquary Vol.I, PP. 362 – 376

11. இரா. மதிவாணன், 2007, தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள் (பக். 40-

48)

12. இரா. மதிவாணன், 2007, சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி.

13. ஐ. மகாதேவன், ஆவணம் கட்டுரை

14. ஐ.மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகள் மொழியின் எழுத்தே.

https://groups.google.com/forum/?fromgroups#!msg/mintamil/C63u_fKI7m8/z79yHXc02RwJ

இது பற்றி உங்கள் கருத்தென்ன சுமே ?????

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இதில் நான் உங்களுக்குக் கருத்துக் கூறாது இதன் கருத்தை சுமேரியர் தமிழரா பகுதியிலேயே எழுதுகிறேன். நன்றி

சுமே நன்றாக எழுதிக்கொண்டு போகின்றீர்கள். தொடருங்கள்.....

ஐராவதம் மாதவன் சிந்து எழுத்துக்கள் சமஸ்கிருதம், தமிழ், இரண்டுமல்ல என்ற மூன்று கருத்தையும் வைத்தவர். மாதவன் ஒரு உண்மையை தனது ஆய்வுகளில் கவனிக்க மறக்கிறார். தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளில் காணப்படுகிறது. அதேபோல சமஸ்கிருதத்திலும் இருக்கு. இதை மேலோட்டமாக விளங்க வைப்பதென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சொற்கள் சென்றன என்றுதான் விளங்க வைக்க வேண்டும். இதை ஏற்றுக்கொண்டு ஆராய்ந்தாரானால் யாரையும் விட அவரால் இந்த சிக்கலை தீர்க்க கூடிய வலிமை இருக்கிறது. திறமையான ஆராச்சியாளராக இருந்தாலும், சமஸ்கிருதம் என்றது தமிழின் இலக்கணத்தில் ஏற்றப்பட்ட ஆரிய சொல் பாசை என்பதை ஏற்றுக்கொள்வதில் கஸ்ட்டப்படுகிறார்.

கால ஓட்டத்தில் ஆராய்ச்சி அவரின் பாதையை விட்டுவிட்டு போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கருத்துக் கூறியமைக்கு மல்லை வந்தியத்தேவன்.

 

மகாதேவன் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள எவருமே தமிழனின் தொன்மையை நிரூபிக்க அரசு விடப்போவதில்லை மல்லை. எனது வரலாறு ஆசான் கனேசன் அண்ணா வேற்று நாட்டவர் ஒருவருடன் சேர்ந்து இந்தியத் தொல்லியற்  துறைக்கு சவால் விடுவதற்கான முன்னெடுப்பு ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்தியாவுக்கு வெளியே ஏதும் செய்தாலன்றி வேறு பயன் ஒன்றும் இல்லை. சிந்துவெளி நாகரிக காலம் கிறித்துவுக்கு முன் 2300 என தொல்லியற்  ஆய்வு செய்து எழுதியவர்கள் கூறுகின்ற போதிலும் மற்றவர்கள் ஆளாளுக்கு 4000, 5000, 6000 என காலத்தையே தவறாக எழுதுகின்றனர். ஏன் கனக்க எத்தனை பேர் இந்தத் திரியை வாசித்திருப்பார்கள் நீங்கள் உட்பட.எத்தனை பேர் இதிலுள்ள உண்மைத் தன்மையை விளங்கக் கூடியவர்கள் அல்லது நம்பக் கூடியவர்கள் உள்ளீர்கள் ???? இதுதான் தமிழனின் நிலை. வேறென்ன சொல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.