Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்களமா.. பிரச்சாரக் களமா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களாக இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி தொடர்பில்..

கருத்தாடலுக்கு அப்பால் அதனை நியாயப்படுத்தவும்.. எதிர்க்கவும் என்று இரண்டு பிரச்சார முனைப்புக்கள் யாழ் எங்கனும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊர்ப்புதினத்தில் இருந்து.. நாற் சந்தி.. திண்ணை என்று எங்கும் இது நிகழ்கிறது.

கதையில் இளையராஜா.. கவிதையில் இளையராஜா.. புலம்பெயர் வாழ்வில் இளையராஜா.. சமூத்தில் இளையராஜா.. பொழுதுபோக்கில் இளையராஜா..

நேற்று வரை யாழில் தேடுவாரற்றுக் கிடந்த இளையராஜா.. ஏன் இப்படி.. திடீர் திடீர் என்று முளைச்சு நிற்கிறார்..??!

இளையராஜா ஒரு தமிழ் பேசும்.. இசைக்கலைஞன். இசையில் தனித்திறமை கொண்டவர். அதனை யாழில் யாருமே எதிர்க்கவில்லை. ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்துக் கூற.. எல்லோருக்கும் ஒரு தலைப்புப் போதும். அப்படி இருக்க.. இது மட்டும் ஏன் திட்டமிட்டு பிரச்சார அடிப்படையில் களம் முழுவதும் செய்யப்பட வேண்டி அமைகிறது..???!

இளையராஜாவை பாதுகாக்கவா.. அல்லது... இளையராஜா பக்தியா அல்லது இளையராஜா விளம்பரமா.. அல்லது.. புரியல்ல..!

எனது கவலை என்னவென்றால்.. இப்படியே யாழில் நவம்பர் 3 வரை இளையராஜாவைப் பற்றியே பேசுவது என்றால் களத்துக்கு வாறதை நவம்பர் 3 வரை நிறுத்தி வைக்கிறது நல்லம் என்று நினைக்கக் கூடிய யாழ் வாசகர்களை யாழ் உருவாக்கப் போகுதோ என்பது தான்..???!

இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஒரு விளக்கத்தை அளித்தால் சிறப்பாக இருக்கும். யாழிற்கும் நலம்.

இது யாழின் நிலை கருதிய கருத்து என்பதால்.. உறவோசையில் சேர்க்கிறேன்..!

நன்றி.

வணக்கம்.

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்..நான் நிறுத்திறேன் :D

Edited by இணையவன்
ஒருமையில் விளித்தது மாற்றப்பட்டுள்ளது.

நான் அவனல்ல.

என் சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை வைத்தேன். அவ்வளவு தான் யுவர் ஆனர் !

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கே சோர்வா?

முடியல :lol: :lol: :lol:

இது பற்றி சீரியசாக பேசுவது என்றால்...

கருத்து வைப்பதற்கும் பரப்புரை செய்வதற்கு ஒரு மிக மெல்லிய இடைவெளிதான் இருக்கிறது. எது கருத்து, எது பரப்புரை என்று நீண்ட கருத்தாடலை செய்யலாம். ஆனால் ஒரு முடிவுக்கு வருவது மிகக் கடினமாகவே இருக்கும்.

யாழ் களம் தமிழீழத்திற்காக, தமிழ் தேசியத்திற்காக, தமிழின விடுதலைக்காக பரப்பரை செய்யக் கூடிய ஒரு களமாகவே இயங்கி வருகின்றது. இது ஒன்றும் ரகசியம் அல்ல.

இளையராஜா நிகழ்வையும் தேசியத்தின் பெயரில் சிலர் எதிர்க்க, தேசியம் பற்றிய பரந்த பர்வை உள்ளவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டி வருகின்றது. அந்த வகையில் தமிழ்தேசியம் பற்றியும், அது மொழி, பண்பாடு, இசை, கலை, நிலம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதே என்பதையும், இதில் ஏதாவது ஒரு பகுதிக்கு பங்களிப்பு செய்தவர்களும் தேசியத்தின் பங்காளிகளே என்றும் கருத்து வைக்க வேண்டி வருகின்றது.

இதை தேசியம் சார்ந்த கருத்து என்றோ பரப்புரை என்றோ எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வெட்டி ஒட்டுற இணைப்புக்கள் தானே? சொந்தமாக யாரும் எழுதினால் யோசிக்கலாம். இவ்வளவும் வெவ்வேறு தளங்களில் வருகுதே? அதை வாசகர்களுக்கு ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் தருகிறார்கள் எம் கர்மவீரர்கள். கருத்துக்களம் என்பதால் தானே நீங்கள்,நாங்களும் எழுதிதள்ளுறம். யாழ் தவிர்த்து மற்றைய தளங்களிலும் படிப்பார்கள், பிடிக்கவில்லையாயின் வேறு பகுதியைப்பார்க்கப்போகிறார்கள் இதிலை என்ன புதுசா இருக்கு? :rolleyes:

நெடுக்கருக்கே சோர்வா?

முடியல :lol: :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணா .. " என்னாலை முடியலை டா சாமி ஆளைவிடுங்கோ" என்று வடிவேலு ஸ்ரைலில் சொல்லும் வரைக்கும் விடக்கூடாது.. :D :D :lol:

கலைஞர்கள் பற்றி பேசுவதற்கு என்றே ஒதுக்கப்பட்ட "வேரும் விழுதும்" பகுதியில் இளையராஜா பற்றி எதுவும் இல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

[size=3]

1.திரு இளையராஜா அவர்கள் (சினிமா) இசைத் துறையில் திறமை,புலமை,பாண்டித்தியம் பெற்றவர்கள்.அவரை தமிழகத் தமிழர்கள் எவ்வளவு மதிக்கிறார்களோ அதேயளவிற்கு ஈழத்தமிழர்களும் மதிக்கிறார்கள்.[/size]

[size=3]

இளையராஜா சார் அவர்களின் பரம இசைப்பிரியர்களாகவும்,அவரின் இசைப்படைப்புகளின் கொள்வனவில் கணிசமான பங்கினையும் கொண்டிருக்கின்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இளைய ராஜா அவர்கள் ஏனைய கலைத்துறை தமிழ் உணர்வாளர்களைப் போல,2009 ல் ஈழத்தமிழ் மக்கள் பேரவலங்களை அனுபவித்த போதும்,இலங்கை இராணுவம் அவர்களைக் கொன்று குவித்த போதும் ஒரு தமிழனாக,ஒரு தமிழ் கலைஞனாக பெரிதாக எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத நிலையிலும் கூட! இருந்தாலும் அவை எல்லாம் வேறு விடயங்கள்.[/size]

[size=3]

2.இப்போது இங்கே பிரச்சினை இளையராஜா சார் நிகழ்ச்சி நடாத்துவது அல்ல.அவர் நடாத்தும் காலம் தான் பிரச்சினையே.அதையே அவர் வேறு ஒரு மாதத்தில் நடாத்துவாராக இருந்தால் புலம் பெயர் நாடுகளில் அதனை முன்னின்று நடாத்துபவர்களும், வரவேற்பவர்களும் ஈழத்தமிழர்கள் தான் என்பதில் ஜயமில்லை.[/size]

[size=3]

ஆனால் 2009ல் நடந்த பேரவலங்களுக்கு முன்பிருந்தே கார்த்திகை மாதம் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தவர்களுக்கான ஒரு புனித மாதமாகவும், அதன் இறுதி வாரம் முழுவதும் மாவீரர் வாரமாகவும் அவர்களைப் போற்றும் நாட்களாகவும் தேசியத் தலைவர் அவர்களால் நிர்ணயிக்கப்பட்டு இன்று வரை அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [/size]

[size=3]

தமிழீழத்தில் கார்த்திகை மாதம் எல்லோர் முகங்களிலும், மனங்களிலும் ஒரு கடும் துயர் நிறைந்திருக்கும்.அதிலும் கடைசி வாரம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சோக நிகழ்வுகளை அது கொண்டிருக்கும். தமிழினம் இழந்தது பொருட்களை, உடைமைகளை மட்டுமல்ல இளம் இன்னுயிர்களை.பல்லாயிரக்கணக்கில் வாழும் உயிர்களை ,வாழ வேண்டிய இளைஞர்களையும் இளம் பெண்களையும் அது பலி கொடுத்து நிற்கிறது.[/size]

[size=3]

அந்த வகையில் புனிதமான நினைவுகளையும் அதன் மூலம் தமிழீழ விடுதலை ஒன்று அவசியம் என்கிற கருத்து ஆழமாக பதியப் பட வேண்டிய தருணங்களையும் கொண்டிருக்கும் கார்த்திகை மாதத்தில், அதனை மழுங்கடிக்கும் விதத்தில் இத்தனை பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்துவது,[/size][size=3]

தமிழர்களின் தூய விடுதைலையினையும்,தமிழீழக் கொள்கையினையும் எதிர்க்கும் சிங்கள அரசின் ஆதரவாளர்களைத் (கைகூலிகளைத் )தவிர மீதி தமிழக மக்களுக்கும்,ஈழத்தமிழ் மக்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தினை தருவதாகவே அமையும்.[/size][size=3]

ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியினை ஒருங்கு படுத்துவதன் சிரமத்தினை இளையராஜா சார் பக்கம் நின்று புரிந்து கொள்கிற அதே நேரம், இவ்வளவு விடயங்களும் தெரிந்தும் இதனை கனடாவில் செய்வதற்கு முன்னிற்கும் தமிழர்களின் நிலை கவனத்திற் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.[/size]

[size=3]

இறுதியாக நாம் சொல்ல விரும்புவது எல்லாம் இது தான்.[/size]

[size=3]

-இளையராஜா சார் மாவீரர்களின் மகத்துவத்தினை கவனத்திற் கொண்டு,அந்த மாதத்தின் காத்திரத்தினை புரிந்து கொண்டு பெரும் தன்மையோடு அவர் நடாத்தப் போகும் திகதிகளில் மாற்றத்தினை கொண்டு வரலாம்.[/size]

[size=3]

-அல்லது மிகவும் பகிரங்கமாக தன்னுடைய மனவருத்தத்தினை அல்லது கருத்தினை பொதுமக்களுக்கு அறியத் தரலாம். [/size]

[size=3]

முக்கியமான,பேச வேண்டிய நேரங்களில் மௌனம் எதனையும் வெளிப்படுத்தாது.[/size]

[size=3]

ஈழத்தமிழினம் 1952 க்கு பின்னர் இருந்து தொடர்ச்சியாக சிங்கள பேரினவாதத்தினால் வன்முறைகளை அனுபவித்துக் கொண்டே வருகிறது. அதிலும் 1958,1977,1981,1983, ஆண்டுகளில் நடந்தவை கொடுமையானவை .பின்னர் 2009 மே யில் ஈழத் தமிழர்கள் மீது ஒரு கொடும் மனிதப் பேரவலமே நடந்தது .உலகில் எந்த ஒரு சிறு பான்மை இனத்திற்கும் இனிமேல் இதுபோன்றதொரு வன்கொடுமை நடக்கவே கூடாது.[/size][size=3]

-சாட்சிகள் அற்ற கொடுமைகள் .[/size][size=3]

-புலம்பெயர் மக்களும்,ஈழ மக்களும் தமிழக மக்கள் எங்களை காப்பா ற்றுவார்கள் என்று முழுமையாக நம்பினார்கள்.எங்கள் துரதிஸ்டம் அப்போ இருந்த தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் விருப்பத்தினை பிரதிபலிக்கவில்லை. [/size][size=3]

ஆனாலும் மக்கள் மக்களைப் புரிந்து கொண்டார்கள் .விடுதலை அவர்களுடன் வெகு தூரத்தில்லை [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

நன்றி திரிக்கு

முதலிலேயே ஏன் இத்தனை திரிகள் இந்த மாதத்தில் என்று கேட்டிருந்தேன்

ஆனால்

இப்ப கொஞ்சம் விளங்குது

இங்கு நடப்பதெல்லாம்

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விளையாட்டு

இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே அரசியல் சார்ந்து

பத்திரிகை சார்ந்து

உணர்வுகள் சார்ந்து

இலாப நட்டம் சார்ந்து

வியாபாரம் சார்ந்து

ஏன் முகங்கள் அல்லது பிரபலம் சார்ந்து..................சில பிணக்குகள் இருக்கின்றன.

அதை தீர்த்துக்கொள்ள அவர்களை நேரடியாக அணுகும் திறனோ சந்திக்கும் அருகதையோ அற்று

எமக்கும் அதை வெளிப்படையாக சொல்லும் பக்குவமும் அற்று எல்லோரையும் முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

எ◌திரிக்கு எதிரி நண்பன்

இன்று இளையராசா

நாளை ........???

இதை வறுக்க எமது தலை................. :( :( :(

[size=4]யாழ் ஒரு கருத்துக்களம். எனவே இப்படி எல்லாம் நடக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே.[/size]

[size=4]இப்படி பல திரிகளை ஒரே விவாதப்பொருளுக்கு இணைப்பது வாசகர்களுக்கு நன்மை / தெளிவு அளிக்கும் என்பதே என் நிலைப்பாடு. [/size]

[size=4]ஆனால் இப்படியான திரிகள் ஏனோ பற்றி எரிவதில்லை :icon_idea: [/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]யாழ் ஒரு கருத்துக்களம். எனவே இப்படி எல்லாம் நடக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே.[/size]

[size=4]இப்படி பல திரிகளை ஒரே விவாதப்பொருளுக்கு இணைப்பது வாசகர்களுக்கு நன்மை / தெளிவு அளிக்கும் என்பதே என் நிலைப்பாடு. [/size]

பொதுவாக கருத்துச் சிதறல்களைத் தடுக்கவும்.. வாசிப்பை ஒருங்கு குவிக்கவும்.... ஒரு reference க்கும் என்று ஒரே விடயம் சார்ந்த தலைப்புக்களை ஒருங்கிணைப்பதே.. போறம் களில் நடக்கும் நடைமுறை.

உங்கள் கருத்து அதில் இருந்தும் மாறி... இப்படி பல தலைப்புக்களில் ஒன்றையே விவாதிப்பது நல்லது தெளிவு தரும் என்று எழுதி இருக்கிறீர்கள்.

இப்படி அரைத்த மாவை திரும்பத் திரும்ப ஆளாளுக்கு அரைப்பதால்..எவ்வகையான நன்மைகள்.. எவ்வகையான தெளிவுகளை அவை ஏற்படுத்தும்.. என்பதையும் பட்டியலிட்டால் இப்படியான தலைப்பிடுபவர்களை நோக்கி வாசகர் தமது கவனத்தை செலுத்த உதவலாம்.. இல்லையா..??!

ஒரு வேண்டுகோள் தான் அகூதா அண்ணா. முடிந்தால் ஒரு சங்கதிக்கு சந்திக்கு சந்தி நின்று கூப்பாடு போடுவதால்.. என்ன நன்மை.. தெளிவு என்பதை பட்டியலிட்டால் அப்படிச் செய்பவர்களுக்கும் ஒரு உற்சாகமாக இருக்கும். வாசகர்களும் சலிச்சுக்கமாட்டாங்க..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆனால் இப்படியான திரிகள் ஏனோ பற்றி எரிவதில்லை :icon_idea: [/size]

[size=5]http://www.yarl.com/...howtopic=109278[/size]

ஏன்னா அதில இறந்தது யாரும் இங்குள்ளவர்களின் உறவுகள் அல்லவே..!

இங்குள்ளவர்கள் தாங்கள் செய்வதை நியாயம் என்று கற்பிக்க.. படுற பாடாத்தான் எனக்கு இந்தத் தலைப்பிடல்கள் தெரியுதே தவிர.. நியாயத்தை கருத்தைச் சொல்ல அவர்கள் இளையராஜா பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. இவ்வளவு காலமும் தமிழினத் தேசிய அடையாளமாக முன் நிறுத்தப்படாத இளையராஜா இன்று அப்படிக் கூட வந்து போறார். அவர் கூட இதனை விரும்புவாரோ தெரியாது. அவர் தன்னை இந்தியன் என்று தான் போற இடம் எல்லாம் சொல்லிக் கொள்கிறார்.பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

அந்த நிலை மூதூர் படுகொலை உறவுகள் தொடர்பில் இவர்களுக்கு இல்லை..! பிறகேன் கவலைப்படப் போகினம்...!! :icon_idea:

Edited by nedukkalapoovan

பொதுவாக கருத்துச் சிதறல்களைத் தடுக்கவும்.. வாசிப்பை ஒருங்கு குவிக்கவும்.... ஒரு reference க்கும் என்று ஒரே விடயம் சார்ந்த தலைப்புக்களை ஒருங்கிணைப்பதே.. போறம் களில் நடக்கும் நடைமுறை.

உங்கள் கருத்து அதில் இருந்தும் மாறி... இப்படி பல தலைப்புக்களில் ஒன்றையே விவாதிப்பது நல்லது தெளிவு தரும் என்று எழுதி இருக்கிறீர்கள்.

இப்படி அரைத்த மாவை திரும்பத் திரும்ப ஆளாளுக்கு அரைப்பதால்..எவ்வகையான நன்மைகள்.. எவ்வகையான தெளிவுகளை அவை ஏற்படுத்தும்.. என்பதையும் பட்டியலிட்டால் இப்படியான தலைப்பிடுபவர்களை நோக்கி வாசகர் தமது கவனத்தை செலுத்த உதவலாம்.. இல்லையா..??!

ஒரு வேண்டுகோள் தான் அகூதா அண்ணா. முடிந்தால் ஒரு சங்கதிக்கு சந்திக்கு சந்தி நின்று கூப்பாடு போடுவதால்.. என்ன நன்மை.. தெளிவு என்பதை பட்டியலிட்டால் அப்படிச் செய்பவர்களுக்கும் ஒரு உற்சாகமாக இருக்கும். வாசகர்களும் சலிச்சுக்கமாட்டாங்க..! :):icon_idea:

[size=4]ஆக்கபூர்வமான விவாதங்கள், கருத்துக்கள் பலரில் முடிவுகளில் மாற்றங்களை/தெளிவை கொண்டுவரும். அதையே நான் கூறியிருந்தேன்.[/size]

[size=4]எனவே பல திரிகள் மூலம் உறவுகள் தெளிவடைய முடியுமென்றால், அது நன்மையே.[/size]

ஏன்னா அதில இறந்தது யாரும் இங்குள்ளவர்களின் உறவுகள் அல்லவே..!

இங்குள்ளவர்கள் தாங்கள் செய்வதை நியாயம் என்று கற்பிக்க.. படுற பாடாத்தான் எனக்கு இந்தத் தலைப்பிடல்கள் தெரியுதே தவிர.. நியாயத்தை கருத்தைச் சொல்ல அவர்கள் இளையராஜா பற்றி பேசுவதாகத் தெரியவில்லை. இவ்வளவு காலமும் தமிழினத் தேசிய அடையாளமாக முன் நிறுத்தப்படாத இளையராஜா இன்று அப்படிக் கூட வந்து போறார். அவர் கூட இதனை விரும்புவாரோ தெரியாது. அவர் தன்னை இந்தியன் என்று தான் போற இடம் எல்லாம் சொல்லிக் கொள்கிறார்.பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

அந்த நிலை மூதூர் படுகொலை உறவுகள் தொடர்பில் இவர்களுக்கு இல்லை..! பிறகேன் கவலைப்படப் போகினம்...!! :icon_idea:

[size=4]முன்னர் வேறு ஒரு திரியில் நான் கூறியிருந்தேன் தமிழர்கள் அல்லாதவர்களே இதில் அதிகளவில் கையொப்பம் இடுகின்றார்கள் என. இதை நான் அந்த தளத்தில் குந்தியிருந்து அவதானித்ததே, அதில் தவறும் இருக்கலாம்.[/size]

[size=5]http://www.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux[/size]

[size=4]பலரும் பலவேறு திரிகளில் கேட்டதுண்டு : இற்கு பிறகு என்னத்தை நாம் கிழித்தோம் என்று.[/size]

[size=4] [/size]

[size=4]பதில் இந்த ACF இன் வேண்டுகோளிலும் அவர்கள் கேட்ட இலக்கை நாம் அடையாமல் 'இதில் என்ன பிரயோசனம்' என கேட்டு தட்டிக்கழிப்பதிலும்நாம் இருப்பது மனத்திற்கு வருத்தமே. இருந்தாலும் பேர் கையொப்பம் இட்டுள்ளமை நம்பிக்கை தருகின்றது.[/size][size=4]இருந்தாலும் ஐ.நா. எமது உறவுகள் பேரின் படுகொலையை ஆறு ஆண்டுகள் கழிந்தும் மறக்காமல் துடிப்புடன் வைத்திருக்கும் ACF ற்கும் கையோப்பாம் இடும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.[/size]

அகூதா,

நீங்கள் குறிப்பிட்ட திரி பற்றி எரிவதற்கு காரணம் இல்லை. வேண்டும் என்றால் அதில் நான் வந்து "இது தேவையில்லாத வேலை, யாரும் கையெழுத்து வைக்காதீர்கள்" என்று எழுதுகிறேன். அதன் பிறகு பாருங்கள். பற்றி எரியும்

இரண்டு எதிரெதிரான கருத்துக்கள் மோதுகின்ற போதுதான் ஒரு விவாதம் பற்றி எரியும்.

அகூதா,

நீங்கள் குறிப்பிட்ட திரி பற்றி எரிவதற்கு காரணம் இல்லை. வேண்டும் என்றால் அதில் நான் வந்து "இது தேவையில்லாத வேலை, யாரும் கையெழுத்து வைக்காதீர்கள்" என்று எழுதுகிறேன். அதன் பிறகு பாருங்கள். பற்றி எரியும்

இரண்டு எதிரெதிரான கருத்துக்கள் மோதுகின்ற போதுதான் ஒரு விவாதம் பற்றி எரியும்.

[size=4]சபேசன்,[/size]

[size=4]நாம் எதையும், இளையராஜா விடயம் உட்பட, விவாப்பதில் தவறில்லை. அதேவேளை நாம் எம்மாலானா உதவிகள் / பிரச்சாரங்களையும் சளைக்காமல் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து. [/size]

[size=4]ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக நாம் இருக்கவேண்டும். இருந்தால் சரி.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சபேசன்,[/size]

[size=4]நாம் எதையும், இளையராஜா விடயம் உட்பட, விவாப்பதில் தவறில்லை. [/size]

[size=4]அதேவேளை நாம் எம்மாலானா உதவிகள் / பிரச்சாரங்களையும் சளைக்காமல் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து. [/size]

[size=4]ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக நாம் இருக்கவேண்டும். இருந்தால் சரி.[/size]

அவர் இப்படி எழுதுவார்

அவனை செய்யச்சொல்லுங்கள்

நானும் செய்கின்றேன் என........ :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்..நான் நிறுத்திறேன் :D

[size=4]உடன்பாட்டு பேச்சு அழைப்பு விடுத்து[/size]

[size=1][size=4]யாவற்றையும் நான் நிறுத்தி! இன்று நாட்கள் மூன்று.[/size][/size]

[size=1][size=4]மூன்றாவது நாளாகவும் பிறர் திருக்கும் தலைப்புக்களிலும் சொந்தமாக தளிப்பு திறந்தும் தொடர்கிறார்கள்.[/size][/size]

[size=1][size=4]உண்மை இருப்பின் [/size][/size]

[size=1][size=4]நான் பேனாவை வைக்கும் முன்பு எழுதியிருக்கலாம்.[/size][/size]

[size=1][size=4]நான் வைத்துவிட்டேன் வைத்தால் மீண்டும் எடுக்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிந்து கொண்ட கோழைத்தனம் செய்கிறார்கள்.[/size][/size]

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்டது திருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலை என்னவென்றால்.. இப்படியே யாழில் நவம்பர் 3 வரை இளையராஜாவைப் பற்றியே பேசுவது என்றால் களத்துக்கு வாறதை நவம்பர் 3 வரை நிறுத்தி வைக்கிறது நல்லம் என்று நினைக்கக் கூடிய யாழ் வாசகர்களை யாழ் உருவாக்கப் போகுதோ என்பது தான்..???!

இதுதான் எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக இளைய ராஜாவை பற்றிய கருத்துகளே யாழில் போடக்கூடதேண்டு நிர்வாகம் சொல்ல முடியுமா என்ன? :D

தேவா சுப்பர் இசையமைப்பாளர் ..................அவரை பற்றி ஒரு திரி திறக்க ஆவலாய் உள்ளேன் ........... :D :D :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவா சுப்பர் இசையமைப்பாளர் ..................அவரை பற்றி ஒரு திரி திறக்க ஆவலாய் உள்ளேன் ........... :D :D :icon_idea:

எனக்கும் ராஜாவை விட ரகுமான்.. ஹரிஸ் ஜெயராஜ்.. இசைகளே அதிகம் பிடிக்கும். அதிகம் ரசிப்பவையும் அவைதான். ராஜா சிலோ ரக்..! அது இன்றைய நடுத்தர அல்லது வயதான ஆக்களுக்குத்தான் சரி..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவோலைகள் விழ குருத்தோலைகள் சிரிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்து, கேட்டு அறிந்தவரையில், நாங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், உண்மை இது தான்!

'திராவிட இனம்' எனப் பொதுவாக அழைக்கப் படுவது, இந்தியாவின் பூர்வீக குடிகள்! இவர்கள் தங்களுக்கெனத் தனியான கலாசாரத்தையும், தனித்துவமான உடல் அமைப்புக்களையும், தனித்துவமான நிறத்தையும் கொண்டிருந்தார்கள். இது ஏறத்தாள கிறிஸ்துவுக்கு முன்பு, ஐயாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது. இதன் பின், பட்டு வழி (Silk Route) என அழைக்கப் படும், பாதையூடாக ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள், இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒரு பகுதி, பாரசீகம் என அழைக்கப் பட்ட ஈரானுக்குன், அசிரியா என அழைக்கப் பட்ட பகுதிக்கும் போக, மற்றைய பகுதி, ஹரப்பா வரை வந்தது. ஏற்கனவே வளர்ந்திருந்த, திராவிட நாகரீகத்தில் இருந்து, தங்களுக்குத் தேவையானவைகளை, எடுத்துத், அத்தனையும், தங்கள் தத்துவங்களாகவும், கலாசாரங்களாகவும், மாற்றிக்கொண்டது.திராவிடர்களின் நிறம் பொதுவாகக் கருப்பு நிறமாகும். இது, இயற்கையால், இந்தக் காலநிலைக்கு ஏற்றவாறு அழிக்கப் பட்டது. இதனை, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியாவில் வாழும் பூர்வீகக் குடிகளிலும் அவதானிக்கலாம்! ஹரப்பா பகுதியில் வாழ்ந்த திராவிடர்கள், போரில் நம்பிக்கையின்றி, சமாதான நிலையில் வாழ்ந்ததால், இவர்களுக்குப் போராட வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே, ஐரோப்பியர்கள், வந்த போது, அவர்களை இவர்கள், நண்பர்களாக ஏற்றுக்கொண்ட போதும், ஐரோப்பியர்களுக்கே உரிய மூர்க்கமான போர்க்க குணத்தினால், திராவிடர்களை, அழித்துப் புறந்தள்ளும் முடிவையே அவர்கள் எடுத்தார்கள். இதற்கு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப் பட்டு இருக்கும், தலையில்லாத சடலங்கள், இன்றும் நிரை, நிரையாக இந்தப் பகுதிகளில் அடுக்கப் பட்டு இருக்கின்றது. இத்தாலியில், பொம்பியில் ஏற்பட்ட இயற்கை அனத்ததின் போது, சடலங்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. ஆனால், ஹரப்பா பகுதிகளில் காணப்படும் எச்சங்கள் அவ்வாறு இல்லை. வேறு ஒரு திரியில், இது சம்பந்தமான பதிவு, வரும்போது ஆதாரங்களை இணைக்க முடியும்.

இது முடிந்த பின்னர், தனது இருப்பைத் தக்க வைக்கத், திராவிடர்களைத் தெற்கு நோக்கிக் கலைக்கப் பட வேண்டியிருந்தது. இதன் தொடர் தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கூட இதன் தொடர்ச்சியே. இது பல வடிவங்களில் தொடர்கின்றது. திராவிட இனம், அழியும் வரையில் இது தொடரத் தான் போகின்றது. இதன் வடிவங்களில் ஒன்றே,மற்றவரைச் சீண்டுவதன் மூலம், அல்லது கோபமூட்டுவதன் மூலம், தங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவது. அது தான் யாழிலும் நடக்கிறது.

முருகன் என்னும் தெய்வம் பிரபலமானதால், முருகனுக்கு எதிராகப் போராடி, முருகன் கோவில்களை உடைப்பதைப் பார்க்கிலும், முருகனைத் தனது சம்பந்தியாக்குவதன் மூலம், முருகக் கடவுளின், தனித்துவத்தை அழிக்க முடியும்.இதைத் தான் ஆரியம் செய்தது. இந்திரன் மாமாவானதன் மூலம், முருகன், திராவிடர்களை அழிக்கும் (சூர பத்மன்) தெய்வமாகின்றார். அதைத் திராவிடர்களே விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். இதே முறையில் தான், சோழ சாம்ராச்ச்சியமும் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது. இதே முறையில் தான், ஈழப் போராட்டமும், முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது. அதாவது, ஒரு போராட்டத்தை, மூர்க்கமாக எதிர்க்காமல், அதனுள் ஊடுருவி, நம்பிக்கையை வளர்த்துப் பின்னர், அதை அழித்துவிடுவது.

கவுடில்யா (சாணக்கியன் எனது தமிழில்) வின் கருத்தும், மச்சியாவள்ளியின் கருத்தும் இதைத் தான், ஏன் ஒரு விதத்தில் பகவத் கீதையும் கூட இதைத் தான் சொல்லுகின்றன!

ஒரு முடிவை எவ்வாறு அடைவதென்பது முக்கியமல்ல. அந்த முடிவை அடைவது தான் முக்கியம்!

இந்த முறையைத்தான் ஈராக்கில் 'ஜோர்ஜ் புஷ்' செய்தார்.

இதைத் தான் இலங்கை, இந்திய அரசுகளும் செய்கின்றன.

காலப் போக்கில், மாவீரர் தினங்கள், முள்ளிவாய்க்கால் எல்லாம் மறக்கப் பட்டுப் போய் விடும்!

தமிழ் இனமும், தனது தனித்துவத்தை, இழந்து, வட இந்தியாவில், நடந்தது போல, மற்றைய இனமான பெரு வெள்ளத்தில் கலந்து விடும்.

இது தான் அவர்களது எதிர்பார்ப்பு! நாங்களும் எங்களையும் அறியாமலே, அவர்களுக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறோம்! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.