Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடல்கள் கலக்கும் கலவி மூன்றெழுத்து

அதனை தூண்டும் காமம் மூன்றெழுத்து

இவற்றை உருவாக்கும் காதல் மூன்றெழுத்து

உயிரைக் காவும் விந்து மூன்றெழுத்து

அதை தாங்கும் பெண்மை மூன்றெழுத்து

இன்னும் எழுதலாம் ஆனால் ரதியிடம் அடிவாங்கத் தயார் இல்லை.... :icon_mrgreen:

இதுவும் நல்லாத் தான் இருக்குது :) ...இன்னும் தெரிந்தால் எழுதுங்கோ.

........................................................................................

தினமும் அதிகாலையில் செடிகள் மீது பட‌ர்ந்திருக்கும் பனித்துளிகளைப் பஞ்சினால் ஒற்றியெடுத்து முகத்தில் தட‌வி வந்தால் முகம் பளபளப்பாய் விளங்கும்.

முகத்தில் வெள்ளைத் தேமல் இருந்தால் துளசியையும்,கொஞ்ச‌ உப்பையும் சேர்த்து அரைத்த சாற்றை தட‌வினால் தேமல் மறைந்து விடும்.

கீரை விதையை நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும், கருமை நிறம் அதிகரிக்கும்,முடி உதிராது.

நந்தியாவட்டை மலர்களைப் இர‌வில் கண்களில் வைத்துக் கட்டிக் கொண்டு தூங்கவும்.காலையில் பாருங்கள் கண்களில் குளிர்ச்சியே குளிர்ச்சி.

கர‌ட் உட‌ல் இளைக்கவும்,கண்ணொளியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மல்லிகை பார்வையை சீராக்கும்.

நந்தியாவட்டை சகல கண் நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்புக்களை சாப்பிட்டு வந்தால் கண்ணில் நீர் வடிவதை தடுக்கலாம்.

காதுக்குள் கொப்பளம்,கட்டி இருந்தால் உள்ளி சாற்றின் சில துளிகளை விட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.[தொட‌ரும்]

  • Replies 584
  • Views 41.8k
  • Created
  • Last Reply

நிறையப் பெண்கள் மலர் படிக்கின்றீர்கள் போலிருக்கின்றது. இப்படியான விடயங்கள் பலவற்றிற்கு எதுவித மருத்துவ ஆதாரமும் இல்லை, ஆனால் நம்புவதற்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிர‌தோச‌ தினத்தன்று பிற்பகல் 4 1/2 6.00 மணிக்குள் சிவ தரிசனம் செய்வது நல்லது. 144 பிர‌தோச‌ங்கள் இடை விடாது சிவ தரிச‌னம் செய்து வருபவருக்கு மறு பிறவி கிடையாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உளி பொளிந்து

சிதைப்பதால் தான்

சிற்பம் சிறக்கிறது.

இலையுதிர் பூத்த

மரங்களில் தான்

வசந்தம் பிறக்கின்றது.

இழந்து பெறும்

வாழ்க்கையிலும் ஏதோ

சுகமொன்று இருக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

நீ உன் நண்பர்களைப் பற்றிச் சொல்

நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

என்னைப் பலவாறாகப் புகழ்ந்து,

என்னிடம் இருந்து ஆதாயம் பெற முயலும்

ஆயிரம் உறவினர்கள் எனக்கு

வேண்டவே,வேண்டாம். தேவை ஒரு நண்பன்.

ஒரே ஒரு நண்பன்.

ஒரு நல்ல நண்பனுக்காக உயிரைக்கூட‌

தியாகம் பண்ணலாம்.

ஆனால் தேவை ஒரு நல்ல நண்பன்,

எங்கே இருக்கிறான் அவன்?

வாழ்க்கையில் நான் யாவற்றையும் இழக்க சம்மதிப்பேன்.

ஆனால் ஒரு நல்ல நண்பனை மட்டும் எந்நிலையிலும் நான்

இழக்க சம்மதிக்கவே மாட்டேன்.

நல்லதொரு நண்பனை,பிரிய நேரிடும் போது

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை பிரிவது போல

பழகிப் பழகி மணந்த மனைவியைப் பிரிவது போல

விரும்பி விரும்பிச் செய்த வேலையை பிரிவது போல

ஒர் உணர்வு உங்களுக்குள் முகிழ்க்காவிட்டால்

உங்களுக்கு நட்பு பற்றி ஒன்றுமே தெரியாது என்று பொருள்.

"கொஞ்ச‌ம் பொறுங்கள்,என் நண்பர் வருவார்.வந்து விட‌ட்டும்."

உறவினர்களை ஆண்ட‌வனாகப் பார்த்து அனுப்பி வைக்கிறான்.

ஆனால் நண்பர்களை நாமே தான் தேடி அடைகிறோம்.

கடவுள்,கருணையுட‌ன் கூடிய காதல்,பிர‌திபலன் எதிர்பாராத அன்பு,நட்பு

இவை யாவும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டியவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முற்களுக்கு நடுவே தான் வாழ்க்கை

இருந்தாலும் ரோஜா சிரிக்கிறது."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என்ட தூரத்துச் சொந்தமான ஒரு மாமா இறந்து விட்டாராம்...அவர் ஊரில் இருக்கும் போது எப்ப பார்த்தாலும் புறுபுறுத்துக் கொண்டும்,தொணதொணத்துக் கொண்டும் இருப்பார் :D ...ஒரு நாள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அவரது தொல்லை பொறுக்க முடியாமல் அவருக்கு தேநீர் போடும் போது சீனிக்கு பதிலாக உப்பை போட்டுக் கொடுத்தது :lol: இப்பவும் நன்றாக ஞாபகம் இருக்குது...அவர் இங்கே வந்தும் சகோதரங்கள் எல்லோருடனும் சண்டை.ஒருத்தருடனும் பேச்சு வார்த்தை இல்லை ஆனால் குடி,சிகரெட் போன்ற எந்த வித கெட்ட பழக்கமில்லை...சாப்பாட்டில் வலு கவனம் அத்தோடு நடந்து தான் வேலைக்குப் போவார் அப்படி இருந்தும் 55 வயசுக்கு முதல் மேலே போய் விட்டார் :(

இப்ப விளங்குதா நான் ஏன் தண்ணி அடிப்பது என்று... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப விளங்குதா நான் ஏன் தண்ணி அடிப்பது என்று... :lol:

இப்ப என்ன நிழலி அண்ணா சொல்லவாறிங்கள் எப்பவும் சாகிறது தானே எல்லாரும் தண்ணி அடியுங்கோ என்றோ??? :rolleyes:

[size=3](அப்பாடா இண்டைக்கு ஒராளை மாட்டி விட்டாச்சு நிம்மதியா தூங்கலாம். ) :icon_mrgreen:[/size][size=3] [/size]

இப்ப என்ன நிழலி அண்ணா சொல்லவாறிங்கள் எப்பவும் சாகிறது தானே எல்லாரும் தண்ணி அடியுங்கோ என்றோ??? :rolleyes:

(அப்பாடா இண்டைக்கு ஒராளை மாட்டி விட்டாச்சு நிம்மதியா தூங்கலாம். ) :icon_mrgreen:

ஹி ஹி....

(அப்பாடி ஒரு மாதிரி பதில் சொல்லிட்டன் :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி ஹி....

(அப்பாடி ஒரு மாதிரி பதில் சொல்லிட்டன் :) )

இப்படி பல்லுக்காட்டுவதையும் தடை செய்தால் என்ன நிழலி அண்ணா???? :unsure:

[size=5]மூன்றெழுத்தில் வாழ்க்கை[/size]

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

அருமை, நல்ல பதிவு தொடருங்கள்...நாங்கள் வாசகனாக தொடர்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனவுறுதியை அதிகரிக்கும் புத்தகங்கள் பலவற்றை ரதி படிப்பது போலத் தெரிகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறையப் பெண்கள் மலர் படிக்கின்றீர்கள் போலிருக்கின்றது. இப்படியான விடயங்கள் பலவற்றிற்கு எதுவித மருத்துவ ஆதாரமும் இல்லை, ஆனால் நம்புவதற்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

நான் மங்கையர் மலர் படிப்பதில்லை <_<
 
மனவுறுதியை அதிகரிக்கும் புத்தகங்கள் பலவற்றை ரதி படிப்பது போலத் தெரிகின்றது!

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சயந்தனது "ஆறாவடு" நூல் வந்திருந்த நேர‌ம் என்னிடம் ஒருவர் சொன்னார் சயந்தன் இயக்கத்தில் இருந்திருக்கிறார் போல தெரியுது என்று[இத்தனைக்கு அவர் ஆறாவடுவை வாசிக்கவில்லை]... எனக்கு நிச்சயமாய் தெரியும் சயந்தன் இயக்கத்தில் இருக்கவே இல்லை என்று சொன்னேன்... இயக்கத்தில் இருந்திருக்காத சயந்தனால் எப்படி இயக்கத்தை பற்றி எழுத முடியும் என்று அவர் கேட்டார்... நான் சொன்னேன் இயக்கத்தில் இருக்கின்ற ஆட்கள் மட்டும் தான் இயக்கத்தை பற்றி எழுத வேண்டுமா இயக்கத்தை பற்றி தெரிந்தவர்களும்,புலி ஆதர‌வாளர்களும் கூட‌ எழுதலாம் என சொன்னேன்...அதற்கு அவர் ஒரு உதார‌ணத்தை ஆதார‌ம் காட்டி சொன்னார் முள்ளி வாய்க்கால் அவலத்தை அங்கு இருந்து கஸ்ட‌ப்பட்ட,அனுபவித்த மக்களை விட‌ வேறோருவரால் சொல்லவோ,எழுத்தில் வடிக்கவோ முடியாது அப்படித் இங்கிருந்து கொண்டு நாங்கள் எழுதினாலும் அந்த மக்கள்  பட்ட கஸ்ட‌த்தினை அப்படியே 100% எழுத முடியாது என சொன்னார்.
 
அவர் சொல்வது ஒரு விதத்தில் உண்மை என்டாலும் இன்னொரு விதத்தில் பார்க்கும் போது உண்மையை,தெரிந்ததை யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே என்பது தான் எனது கருத்தாக இருக்குது...ஒன்றைப் பற்றி தெரிந்தவன் தான் அதை எழுதலாம் என்டால் காதலித்தவன் தான் காதலைப் பற்றி எழுதலாம்,செத்தவன் தான் சாவைப் பற்றி எழுதலாம் என்பது போல இருக்குதல்லவா.
 
அவருடைய கருத்தையும்,யாழில் எழுதுபவர்களையும் எடுத்துப் பார்த்தால்[எல்லோரையும் அல்ல] அவர் சொல்வது உண்மை போல தான் இருக்குது...ஊரில் இருக்கும் வரைக்கும் போராட்ட‌த்திற்கு என ஒரு சிறு பங்களிப்பு செய்திருக்க மாட்டார்கள் இங்கு வந்த உட‌ன் எல்லோரையும் பார்த்து உட‌னே புலிகளை ஆதரிக்கத் தொட‌ங்கி இருப்பார்கள்.அவர்கள் செய்த அதிக பட்ச‌ உதவி என்டால் காசு அனுப்பி இருப்பார்கள்.5ம் கட்ட ஈழப் போர் வர‌ப் போகுது ஊருக்கு வாங்கோ சண்டை பிடிக்க என்று சொன்னால் தாங்களோ,தங்கட‌ சகோதர‌ங்களையோ,பிள்ளைகளையோ அனுப்ப மாட்டார்கள் அப்படி அனுப்புவதாக இருந்தால் 2009ம் ஆண்டே அனுப்பி இருப்பார்கள்...இப்படியானவர்களை பொதுவாக பார்க்கும் போது அவர் சொன்ன ஒருவன் தான் என்ன செய்கிறான் என்பதையும்,தன்ட‌ அனுபவத்தை மட்டும் தான் எழுத முடியும் என்ட‌ கருத்து தான் அதிகமாய் மனதில் நிற்குது.
 
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு சண்டை பிடிக்காமல் எழுதுங்கள்...நன்றி
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

அது சரி இவளவு பெண்களும் சேர்ந்து கதைக்கும் போது நகை நட்டு மற்றும் உடுப்பு பற்றி கதை வர வில்லையா.நீங்கள் எங்கட பெண்களைத்தான் சொன்னீர்களா  :rolleyes:

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

இராகம்: இந்துஸ்தான் காப்பி தாளம்: ஆதி

    கண் விழித்து எழுந்து வா மானிடனே
    கருணை நாதன் இயேசுவிடம்
 
    சரணங்கள்
 
1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து
    நீச உலகத்தின் நேயம் மறந்து
    துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
    தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து - கண் விழித்து
 
2. மனது போல் நடக்கத் துணியாதே
    மாய உலகின் வாழ்வை விரும்பாதே
    உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
    உல்லாச நடக்கை பொல்லாததே - கண் விழித்து
 
3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
    இளைய மகனைப் போல் வரவேண்டும்
    பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
    பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் - கண் விழித்து
 
4. பேரன்புறும் பரம தந்தையவர்
    பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
    தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
    சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! - கண் விழித்து
 
5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
    ஆடையாக நீதியுடை தரிப்பார்;
    பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்

    பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் - கண் விழித்து

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது.

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து எழுந்து இவ்வெளி உலகிலிருந்து திரும்பிச் செல்.

உனக்குள்ளேயே இன்னும் ஆழ்ந்து முழுகு.

அங்கு உடனடியாக சாந்தியையும் அமைதியையும்

பெறுவாய். உனக்குள்ளேயன்றி

வேறு எங்கும் சாந்தி ஏற்படாது என்பதை அறி.

ஆகவே அந்தச் சாந்தியை உன்னுள்ளே பெறுவதற்கு

முயற்சி செய்.நாமே சாந்தியைப் பெற்றாலன்றி

வேறு எவ்விடத்திலும் நமக்கு சாந்தி ஏற்படாது.

உனக்குள்ளே சாந்தியைப் பெறும் முயற்சியில்

வெற்றி கண்டு விட்டால் நீ முக்தனாகி விடுவாய்.

உன் அமைதியை வெளிக் கஸ்டம் ஏதும் அழிக்க முடியாது.

பயப்படாதே உன்னுள்ளே நம்பிக்கை கொள்.

எப்போதும் மேல் நோக்கிச் செல்.

உண்மைக்காகவே போராடி தீர புருசனாக மரணமடை

இது உன் ஆத்மாவுக்கு சாந்தியளிக்கும்.

நல்ல பதிவு ரதி, நன்றி பகிர்வுக்கு

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

எனக்கு Tom & Jerry கார்டூன்  :lol:  :D

இப்படியான புத்தகங்கள் தான் எனக்கு இப்ப தேவையாயிருக்கு...அதை விட‌ எனக்கு மனம் விர‌க்கியடைந்திருக்கிற நேர‌ம் ஆர்கே,பிகேபி,சுஜாதா போன்றவர்களது மர்ம நாவல்களை படித்தால் மனசை இலேசாக்கி என்னை மறந்து சந்தோச‌மாக வைத்திருக்க உதவுகிறது. 

நல்ல நகைச்சுவைப் படங்களைப் பாருங்கள். சீரியஸாக இல்லாத பொழுது போக்குப் புத்தகங்களை வாசியுங்கள். மனம் சோர்வாக இருந்தால் yotube இல் இசை நிகழ்ச்சிகள், 'கொமடி சீன்' பார்ப்பேன். சில சீரியசான புத்தகங்களை வாசித்தால், மன நல்லாயிருந்தாலும் நிறைய யோசிக்க வைக்கும். சுஜாதாவின் கதைகள் வாசிக்க சந்தோசமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அனைவர‌து வருகைக்கும்,உற்சாக மூட்டும் ஆக்க பூர்வமான கருத்திற்கும் முதற்கள் எனது நன்றிகள்.
 
காலணிக்குள் முகங்கள்
நசுக்கும் சிதைகள்
அதனால் என்ன
ஜரோப்பிய காலன்றோ
மோதிர‌க் கையன்றோ
தோத்திர‌ங்கள் சொல்வோம்.
தாங்க்ஸ் மேசி டங்கி[thanks merci danke]
கனவுகள் காயமாக
மனிதரைப் போல
இலைகளை உதிர்த்து
உள்ளுக்குள் உயிர்த்து
மர‌ங்கள் வெறிக்கும்
இருப்பிட‌ம் தொலைந்த
எனக்காக இர‌ங்கும் 
மலர்கள் தூவிய
பீட‌ங்கள் ஒவ்வொன்றிலும்.
கூர்வாள் உயர்த்திய
வீர‌ரைத் தாங்கும்
பாயும் புர‌விகள்
தேச‌ங்கள் வென்றவர்
சிலையிலும் முறைப்புட‌ன்
தீப்பற்றும் குர‌ல்களால்
செவிகளில் அறைவர்
"வெளியேறு..."
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்.
தாயகம் துறந்தவனே
உனக்கேது இருப்பிட‌ம்."
[கி.பி அர‌விந்தன்]
 
"எத்தனைபேர் இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்".
 
தமிழுக்கு இலக்கணம் உண்டு.
தமிழனுக்கு?
 
ஈழத்தில்
யுத்த பிட்சுக்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய சூழலைத் தோற்றுவித்தால் யோசனைகளுக்கு நேரம் இருக்காது. அத்தோடு சவாலான விடயங்களில் கவனம் எடுக்கலாம்!

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு "Angry Birds" game விளையாடுவது. இன்னும் அலுக்கவில்லை!

எனக்கும் பிடித்த விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

486942_503788319661947_597228870_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Angry Bird எல்லோரையும் கவரக்கூடியது என அறிந்ததால் அதை விளையாடாமல் தவிர்க்கிறேன்.  :unsure:  பிறகு முகநூலில் விவசாயம் செய்த நிலைமைக்குப் போய்விட்டால்?? :rolleyes: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.