Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்யாண(ம்) வை! போவமே?

Featured Replies

கல்யாண(ம்) வை! போவமே?

-இ.ஜெயராஜ்-

உலகை மகிழ்விக்கும் சொற்களுள்

கல்யாணம் என்பதும் ஒன்று.

உறவு நிறைவு குதூகலம் கொண்டாட்டம்

இப்படி சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும்

உள்ளடக்கிய பெருமை கல்யாணம் என்னும் சொல்லுக்கு உண்டு.

ஓர் ஆணையும் பெண்ணையும் முழுமையுறச் செய்யும்

இனிய வைபவம் அது!

ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை

ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது!

ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை

ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது!

சந்ததி விருத்திக்காய் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும்

இயற்கை அமைத்த ஏக்க எழுச்சியை

சாந்தி செய்யும் சடங்கு அது!

அறவாழ்வுக்காய் அமைக்கும் அடிப்படை அது!

ஆணுக்கும் பெண்ணுக்குமாய் அமைக்கப்படும் அசையாத உறவுப்பாலம் அது!

அன்பு விருத்தியின் அத்திவாரம் அது!

உலக இயக்கத்தின் ஊற்று அது!

இவ்வைபவத்திற்காய் கனவோடு காத்திருக்கும்

இளையோர் தொகை எண்ணிலடங்காதது.

அதனால் தான் “கல்யாண வைபோகமே“ என

அதனைக் கொண்டாடிற்று நம் தமிழுலகு.



ஆனால்

நான் இக்கட்டுரையில் எழுதப் போவது

அதன் பெருமை பற்றியல்ல

இன்றைய நிலையில்

அவ் அரிய நிகழ்வுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றி

விரும்பினால் நீ கல்யாணத்தை வை!

மானம் இருக்கும் நாங்கள் மறந்தும் அதற்குப் போவமே?

என கேட்க வேண்டிவந்திருக்கும் நிலை பற்றியே இக் கட்டுரை.



வேதாளம் முருக்கமரத்தால பழையபடி இறங்கிட்டுது.

கொழுவல் போடாம அவரால இருக்கமுடியாது.

என்னென்னத்திலயோ கை வைச்சு

இப்ப மங்கள காரியத்திலயும் கை வைக்க வந்திட்டார்.

இதுக்குத்தான் காலாகாலத்தில கல்யாணஞ் செய்யவேணும் என்கிறது.

நாங்களே அவரை முடிக்கவேண்டாம் என்றனாங்கள்?

இப்ப வயிறு எரிஞ்சு என்ன செய்ய?

நீங்கள் திட்டுவது என் காதுக்கு கேட்கிறது.

நான் சொல்லப் போவது பற்றித் தெரியாமலேயே

இப்படித் திட்டுவது என்ன ஞாயமாம்?

கல்யாணம் கட்டாத வயிற்றெரிச்சலில் எழுதும் கட்டுரை அல்ல இது.

உண்மையைச் சொல்லப் போனால்

கட்டாத என்னைப் பார்த்து கட்டியவர் பலர்

வயிறெரிகிறார்கள் என்பது தான் நிஜம்!

சரி சரி அலட்டாம கெதியில சொல்ல வந்ததைச் சொல்லும்!

அனுமதிக்கு நன்றி!

ஆயிரந்தான் என்னைத் திட்டினாலும்

என் எழுத்தை வாசிக்கும் உங்கள் ரகசிய ஆர்வம் புரிகிறது.

தொடர்கிறேன்.



சுருங்கச் சொன்னால்

புனிதமான இக் கல்யாண வைபவம்

அருவருக்கத்தக்க வகையில்

நம் தமிழ்ச் சமுதாயத்தில்

அசிங்கப்படுவதைப் பற்றித் தான் எழுதப்போகிறேன்.

சுருக்கமே போதும் என்கிறீர்களாக்கும்.

போதும் என்றவர் இதிலேயே நிக்க

மற்றவர்கள் தொடர்ந்து வாருங்கள்!



ஒரு காலத்தில் கல்யாணம் என்பது

புனிதம் போற்றுதல் பொழிவு என

தமிழர்களை மகிழ்வித்த தலையாய வைபவம்.

இன்றோ

மூடத்தனம், பணத்திமிர், விரசம்

ஆடம்பரம் ,அகந்தை, அலட்சியம், அநாகரிகம் ,அடிமைப்புத்தி

என்பவற்றின் வெளிப்பாடாய் அது ஆகி விட்டது.

கல்யாணத்திற்கு இருக்க வேண்டிய புனிதம் எல்லாம் போய்

வீண்விரய விரச வைபவமாக அது ஆக்கப்பட்டிருக்கிறது.

இவ் அசிங்கத்தைத் தடுக்க முடியாதா?

தெரியாத் தனமாய் எனக்குள் புகுந்து விட்ட இனப்பற்று தூண்ட

மாரித் தவக்கையாய் நான் கத்தியும் ஏதும் நடக்காது என்று தெரிந்தும்

என் ரோசக்காரப் பேனா இழுக்க

எழுதத் தொடங்குகிறேன்.



விடயத்துக்குள் நுழைவதன் முன்

இம் மாற்றத்துக்காம் காரணம் என்ன?

இம் மாற்றத்துக்காம் பின்புலம் என்ன?

இப் பிழையில் எவரின் வகிர்பங்கு முக்கியமானது.

ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

(ஆகா! ஆய்வு, வகிர்பங்கு, பின்புலம் ஆகிய சொற்கள் எல்லாம் என்னை அறியாது வந்து விழுந்து விட்டன. இனி இது அறிஞர் மதிக்கும் ஆய்வுக் கட்டுரை தான் போங்கள்!)

சொறியத் தொடங்கிற்றார்.

நீங்கள் முறைப்பது தெரிகிறது.

என்னை முறைத்து என்ன பயன்?

இச் சொற்களை வைத்துத்தானே ஆய்வின் தரத்தை முடிவு செய்கிறீர்கள்.

நான் சொன்னால் மட்டும் குற்றமாக்கும்.

சரி, சரி நீங்கள் எப்படியும் இருந்து விட்டுப் போங்கள்!

நான் விசயத்திற்கு வருகிறேன்.



ஈழத்தமிழர்கள்,

மொழிப்பற்று மிக்கவர்கள்!

அடிமைத்தனத்தை விரும்பாதவர்கள்!

பண்பாட்டைப் பேணுபவர்கள்!

பக்தி மிகுந்தவர்கள்!

சிக்கனமானவர்கள்!

விருந்தோம்பலில் சிறந்தவர்கள்!

போரால் வறுமையுற்று இருப்பவர்கள்!

இப்படியெல்லாம்ää உலகம் நினைக்கிறது.

இப்படி நினைப்பவர்கள்,

கொழும்பில் நடக்கும் ஒரு கல்யாண வீட்டைப் பார்த்தார்களானால்,

அடுத்த நிமிடம் தம் எண்ணம் அத்தனையையும் மாற்றிக் கொள்வார்கள்.



முன்னுரையை இப்படியே நீட்டிக் கொண்டு போகாமல்,

சீக்கிரம் விடயத்துக்குள் வாரும்!

உங்கள் அவசரமும்,

ஒழிந்திருக்கும் ஆர்வமும் புரிகிறது.

சரி இனியும் உங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.

வாருங்கள்.

கொழும்புக் கல்யாண வீடொன்றின் மீது கவனம் செலுத்துவோம்.



ஆணுக்குப் பதினாறு வயது.

பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது.

கோவலன், கண்ணகி கல்யாண வயது இதுவாய்த்தான் இருந்ததாம்.

பின்நாளில்,

பெண்ணுக்குப் பதினெட்டு வயது

ஆணுக்கு இருபத்தொரு வயது என

கல்யாண வயது மாறிற்று.

அதற்குப் பிறகு

பெண்ணுக்கு இருபத்தொரு வயது

ஆணுக்கு இருபத்தைந்து வயது என

மீண்டும் கல்யாண வயதில் மாற்றம்.



என் அக்காவிற்கு இருபத்தொரு வயது வந்ததும்

அம்மா பட்டபாட்டை நினைத்துப் பார்க்கிறேன்.

பிள்ளைக்கு வயசாயிற்றுது

இன்னும் கல்யாணம் ஒன்றும் பொருந்தி வரேல்ல என்று சொல்லி

அம்மா அழுதழுது ஐயனாருக்கு ஆயிரம் நேர்த்தி வைத்தது

நேற்றுப் போல் இருக்கிறது.

என்ன குலமணி?

குமரை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிற?

ஊர் பெருசுகள் விசாரணை என்ற பெயரில் அம்மாவை வெருட்டியதையும்

அக்காவிக்கு இருபத்துமூன்று வயதாகி விட

அம்மா உறவில் நடந்த நல்லது கெட்டதுகளுக்கு போறதைக் கூட நிறுத்தியதையும்

இருபத்தினாலில் அக்கா கல்யாணம் ஒப்பேற

இப்பவாவது வந்து பொருந்திச்சுதே என்று

ஊரார் ஆறுதல் படுவது போல

அக்காவுக்குப் பிந்திக் கல்யாணம் நடப்பதைக் குத்திக் காட்டியதையும்

மறக்க முடியவில்லை.



இன்றைக்கு

பெரும்பாலும் முப்பதுகளில் தான் எல்லாருக்கும் கல்யாணம்

கல்யாணப் பேச்சே இருபத்தெட்டின் பின் தான் ஆரம்பிக்கிறது.

பெண்களுக்குக் கூட

கேட்டால் தாயார் “ஸ்ரடியை” முடிச்சுட்டுத்தான் கட்டப் போறாவாம்.

பெருமையாய்ச் சொல்கிறா.

“ஸ்ரடியை” முடிச்சு அவவை முப்பதில கட்டுறதும் ஒன்றுதான்

தடியை முறிச்சு அதுக்குத்தாலி கட்டுறதும் ஒன்றுதான்.

இது ஏன் தான் விளங்கேல்லையோ தெரியேல?

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



ஆண்களைக் கேட்டால் முப்பத்தொரு வயதிலும்

இன்னும் கொஞ்சம் “ஸ்ரெடியாக” வேண்டும் என்கிறார்கள்.

அப்படி யாரும் சொல்கையில்

எனக்கு ஒரு சம்பவம் தான் ஞாபகத்திற்கு வரும்.

அதை அடுத்த பந்தியில் சொல்கிறேன்.

“ஏ ஜோக்” பிடியாதவர்கள் அப்பந்தியை விட்டு மேலே வாசிக்கலாம்!



எங்கள் நண்பர் குழுவில்

எல்லாரும் கல்யாணம் முடித்துவிட

ரவி என்ற ஓர் நண்பன் மட்டும்

முப்பத்தொரு வயதாகியும் முடியாமல் இருந்தான்.

ஒரு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது

நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தோம்.

ரவியைப் பார்த்து

மச்சான் எப்ப கல்யாணம் செய்வதாய் உத்தேசம்?

முகுந்தன் கேட்டான்.

கொஞ்சம் “ஸ்ரெடியானவுடன்” பாப்பம்- ரவி சொல்ல

முஸ்பாத்திக்காரனான வசந்தன்

மச்சான் பாருங்கடா

முப்பது வயதாகியும் இவருக்கு “ஸ்ரெடியாகேலயாம்”?

ரெட்டை அர்த்த்தில் பேச நண்பர் குலாம் கொல்லென்று சிரித்தது.



என்ன?

முகத்தில் சிரிப்பைப் பார்த்தால்

அந்தப்பந்தியைத்தான் முக்கியமாய் வாசித்ததாய்த் தெரிகிறதே?

என்னது? சத்தியமாய் நீங்கள் வாசிக்கவில்லையா?

சரி சரி நீங்கள் உத்தமர் தான் வாசித்திருக்கமாட்டீர்கள்.

நாங்கள் விடயத்தைத் தொடருவோம்.



படிப்பு“ஸ்ரெடியாதல்” என்பவை தவிர

கல்யாணம் முப்பது வயதைத் தாண்ட

முக்கியமான மற்றொரு காரணமும் இருக்கிறது.

அக்காரணத்தின் கர்த்தராய் இருப்பவர் சாத்திரியார்.



கல்யாணம் பொருத்துவதாய்ச் சொல்லி

கல்யாணங்களைக் குழப்ப என்றே பிறந்த ஜீவன் அவர்.

பஞ்சாங்கத்தில் பத்துப் பொருத்தம் மட்டுமே இருக்க

இவர் பத்தாயிரம் பொருத்தம் பார்ப்பார்.

பெண்ணுக்கு வயது இருபத்தேழு ஆகவேணும்

அதுக்;குப் பிறகு பார்த்தால்த்தான் நல்லது.

அதுவரை ராகு பார்வை நல்லா இல்ல.

அதுக்கு முன்னால மறந்தும் மாப்பிள்ளை பார்த்திடாதைங்கோ!

அடித்துச் சொல்லுவார் அவர்.

தன் வீட்டில் இருபத்தொன்பதைத் தாண்டி குமராயிருக்கும்

தண்ட மகளை நினைத்துக் கொண்டு அவர் சொல்வது தெரியாம

அப்ப இருபத்தேழுக்குப் பிறகு பாப்பம்! எனச் சொல்லி

சும்மா இருக்கும் அசட்டுப் பெற்றோரே நம் மத்தியில் இன்று அதிகம்.



இருபத்தேழில் தேடத்தொடங்கி தேடலில் வயது முப்பதாக

மகளின் உடலில் முதுமையின் அடையாளங்கள் தோன்றத் தொடங்கும்

உடனே பதறியடித்து

கிடைத்த மாப்பிள்ளை யாரானாலும் கட்டி வைத்தால் போதும் என நினைக்கும்

கேனத்தனமான பெற்றோர் தொகை

நம் இனத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



அப்ப சாத்திரம் பொய்யே?-நீங்கள் கேட்பது புரிகிறது.

சாத்திரம் பொய்யாக வாய்ப்பில்லை.

சாத்திரியார் பொய்யாக நிறைய வாய்ப்பிருக்கிறது.

சாத்திரியார் உண்மையானவர் என்றால்

இருபத்தேழில் கல்யாணம் நடக்கும் என்பதை உறுதி செய்து

பத்து லட்சம் “டிப்போசிற்றோடு கரண்டி” தரவேணும்.

அதனோடு சாத்திரியார் பொருத்திய கல்யாணம் ஒன்றும் பிழைத்திருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகளுக்குச் சாத்திரியார் ஒத்துக்கொண்டால்

இருபத்தேழு என்ன? முப்பத்தேழு வயது வரையும் கூட நீங்கள் காத்திருக்கலாம்!



மற்றொன்று

என் அக்கா கல்யாணத்தில் இல்லாத முறைகளை எல்லாம்

இப்போது புதிது புதிதாக சாத்திரிமார் அறிமுகம் செய்கிறார்கள்.

மாப்பிளைக்கு பாவம் கூட இருக்க வேணும்.

இது இப்போது புதிதாய் வந்திருக்கும் சாத்திர “மெதேட்”

நல்ல காலம் எங்கள் அக்காமார் கல்யாணக் காலத்தில் இது வரவில்லை.

வந்திருந்தால் கன்னியாஸ்திரி மடத்திற்குத் தான் அனுப்பியிருக்க வேண்டும்.

மாப்பிளைக்கோ பொம்பிளைக்கோ பாவம் கூட என்று ஆராய்வதை விட

மாப்பிளையோ பொம்பிளையோ கூட பாவம் என்று ஆராய்ந்தால் உருப்படலாம்.

கல்யாணத்திற்கு புண்ணியம் தேடுவதற்குப் பதிலாக

பாவம் தேடித்திரியும் பரிதாபப் பெற்றோரை என் சொல்ல?

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



முப்பதின் மேல்

பெண்ணுக்கான குழந்தை பெறும் தகுதி

அரைவாசி ஆவதாய் விஞ்ஞானம் சொல்கிறது.

முப்பது வயது தாண்டிய பெண்ணை

பேரிளம் பெண் என்று தமிழ் சொல்கிறது.

பேரிளம் பெண் என்பதே ஒரு கிண்டல் தான்!

வெறும் பெயரளவில் மட்டும் இளம் பெண் என்பதாய்

சொல்ல நினைத்திருப்பார்களோ?

இதுவெல்லாம் தெரிந்திருந்தும்

பருவத்தில் பயிர் செய் எனப் படித்திருந்தும்

மூடத் தனத்தில் மூழ்கிய பெற்றோரால்

இளமை ஊஞ்சலாட இளையோர் படும்பாட்டை என் சொல்ல?

நாங்கள் கற்போடு இருக்கும் கருவாடுகள்.

மேத்தாவின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



வீதியில் நடக்கையில்

தமை மறந்து கூடி நிற்கும் விலங்குகளைக் காணும் போதும்

மரங்களில் கொஞ்சிக் குலாவும் குருவிகளைக் காணும் போதும்

நல்ல காலம் அவற்றிற்கிடையில் சாத்திரிமார் இல்லை போலும் என

நினைத்துக் கொள்வேன்.

பகுத்தறிவு பாவமா? சாபமா? சொல்லுங்கள்!

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



முப்பதின் மேல்

சாதி, சாதகம், சீதனம் என்ற கடல்கள் எல்லாம் தாண்டி

ஆசைகள் அறுந்து போக ஆயத்தமாகும் போது

கலியாணம் நிச்சயமாகிவிட்டால்

அதன் பிறகு நடக்கும் கூத்துகளுக்கு ஓர் அளவேயில்லை.

கலியாணத்தில் அக்கறை இல்லாதது போல் இருந்த

மாப்பிள்ளையும் பொம்பிளையும்

கலியாணம் நிச்சயமானதும் படும்பாடு இருக்கிறதே

கண்டறியாதவன் பெண்டிலைக் கண்டால்

காடு மேடெல்லாம் கொண்டு திரிவானாம்

என்ற கதை தான்.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



பெண் வீடு

கல்யாணத் திகதி நிச்சயமாகி விட்டதா?

ஐயரை ஒழுங்கு பண்ணுவதோ?

மண்டபத்தை ஒழுங்கு பண்ணுவதோ?

மேளத்தை ஒழுங்கு பண்ணுவதோ?

எல்லாம் பிறகு தான்.

முதலில் நீங்கள் செய்யவேண்டியது

“பியூட்டிசியனையும்”

“வீடியோ கமராவையும் புக்” செய்வது தான்.

பிந்தினீர்களோ அவர்கள் கிடைக்கமாட்டார்கள்.

ஐயர் என்ன ஐயர்? அவையல்ல ஆயிரம் பேரைப் பிடிக்கலாம்.

கிரியைகள் எல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்குத் தான்!

நேரம் மிச்சமாய் இருந்தால்

கிரியைகளைக் கூட்டுங்கோ! என்றால் ஐயர் கூட்டுவார்.

குறையுங்கோ! என்றால் ஐயர் குறைப்பார்.

மந்திரங்களையும் “பிளாசிபில்” ஆக்கி வைத்திருக்கினம்.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



உந்தச் சேட்டையெல்லாம்

“பியூட்டிசியனிட்டையோ?” வீடியோக்காரனிட்டையோ நடவாது!

அவையல் சொன்னாச் சொன்னது தான்.

அவையல் நீட்டு என்றால் நாங்கள் நீட்டவேண்டியது தான்

அவையல் குறை என்றால் நாங்கள் குறைக்க வேண்டியது தான்

நேரத்தைச் சொல்கிறேன்.

கூறை மாத்திறத்திற்காகவும் வீடியோ “செற்”பண்ணிறதுக்காகவுமாக

எத்தனையோ இடத்தில் முகூர்த்தம் தாண்டி தாலி கட்டப்படுகிறது.

ஐயருக்கு பத்தாயிரம் கொடுக்க பேரம் பேசுகிறவர்கள்.

அலங்காரக் காரருக்கு இரண்டு லட்சத்தை

“வெறி சீப்” என்று கொடுக்கும் அழகைப் பார்க்கவேண்டுமே.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



என்னது? “பியூட்டிசியனக்கு;” இரண்டு லட்சமோ?

இரண்டு லட்சத்துக்கு என்ன மயிரைப் பிடுங்கப் போகிறார்கள்?

சரியாய்ச் சொன்னீர்கள்.

மயிர்பிடுங்குவது தான் அவர்களின் முதல் வேலை.

சத்தியமாய் நான் சொல்லுவது உண்மை!



மூகூர்த்தத்தன்று தான் மாப்பிள்ளையிடம் பெண்ணை ஒப்படைப்பீர்கள்.

ஆனால் “பியூட்டிசியனிடமோ”

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பெண்ணை நீங்கள் ஒப்படைக்கவேண்டும்.

மகளைக் கூட்டிக்கொண்டு நல்ல நாள் பார்த்து அங்கு செல்வீர்கள்.

வாசலில் தொங்கும் “சலூன்” என்ற பெயரே உங்களுக்கு நெருடும்.

பொம்பிளையளுக்கு இங்கு என்ன வேலை?

கேட்க நினைத்து அடக்கிக் கொள்வீர்கள்.

அலங்கார நிலையத்திற்குள்ளே சென்றதுமே உங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும்.

“ஏசி” குளிரால் அல்ல

பிதுங்கும் “ஜீன்சோடும்” “ரீ சேட்டோடும்”

ஒரு பத்து இளம் பெண்களாவது உள்ளே வலம் வருவார்கள்

அவர்களைப் பார்த்து!

கறுத்த வெள்ளை முடிகளைத்தானே இதுவரை கண்டிருக்கிறோம்.

அங்கோ

வானவில் வண்ணங்கள் தலையில் ஜொலிக்கää அந்தப் பெண்கள் வலம் வருவார்கள்.

உங்களுக்கு சற்று அச்சம் கலந்த வியப்பு வரும்.

ஓகோ இது தான் இப்பத்த “பஷன்” ஆக்கும்

அடிமைப் பட்டு பழகிய நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வீர்கள்.

சாயப்பானையில் தலையைக் கொடுத்த

நரிக் கதையை படித்து என்ன பிரயோசனம்?

உதட்டில் சாயமா? சாயத்தில் உதடா?

அவர்கள் முகம் காணää அடுத்த சந்தேகம் வரும்.

விடை காணும்முன் உங்கள் மகளின் கையில்

அவர்கள் ஓர் “அல்பத்தை” திணிப்பார்கள்.



விதம் விதமான அலங்காரங்களுடன்

அழகிய பெண்களின் படங்கள் அதனுள் இருக்கும்.

ஐஸ்வர்யாராயும் அதனுள் சில வேளை அமர்ந்திருப்பா.

பிறகென்ன?

உங்கள் மகள் தனது முப்பதைத் தாண்டிய முத்திய முகத்தை

“ஜீன்சில்” நடித்த இருபது வயது ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிட்டு

அடுத்த உலக அழகுராணி நான் தான் என

கற்பனை பண்ணிக் கொள்வாள்.

அந்தப் பலவீனத்தில் “பியூட்டிசியன்” தரப்போகும்

இரண்டு இலட்சம் பில் இருபது ரூபாயாய் அவளுக்குத் தெரியும்!

அவளுக்கு காசாவது (கு)பீசாவது

அமெரிக்க அண்ணன் இருக்கும் வரை.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



உங்கள் மகளின் சரணாகதியை அறிந்து

அவர்கள் கிரியைகளை ஆரம்பிப்பார்கள்.

குளிர் நிறைந்த அறைக்குள் அழைத்துச்சென்று

பல்லு டாக்டரிடம் இருக்கும் படுக்கை கதிரை போல் ஒன்றில் உட்கார வைத்து

பளீர் பளீரென லைட்டுகளைப் போடுவார்கள்.

படுத்திருக்கும் உங்கள் மகளுக்கு நித்திரை கொள்ளாமலே கனவு வரும்.

சிம்ரன்ää ஸ்ரேயாää நயன்தாராää ரென்தாரா என

பல நடிகைகளும் முன்னிருக்கும் கண்ணாடியில் வந்து போக

அவள் கிரங்கிப் போவாள்!



அவர்களின் முதற் கிரியை ஆரம்பமாகும்.

உங்கள் மகளின் முகத்தில் இருந்த

இமை மயிர் புருவமயிர் எல்லாம் வலிக்க வலிக்க பறிக்கப்படும்.

அழகு ராணி ஆவதென்றால் சும்மாவா?

என்று நினைத்தபடி வலியைப் பொறுத்துக்கொள்வாள் மகள்

மொட்டையும் அடித்தால் சமணத் துறவிதான்!

இயற்கையாய் இருந்த முடியைப் பறித்துவிட்டுää

செயற்கையாய் அவளுக்கு “ஐபிறோ” கீறப்படும்.

கல்யாணம் முடிந்து ஒரு கிழமை கழித்து

எல்லா மயிரும் தடித்தடியாய் திருப்பி முளைக்கும்.

ஆபத்தைத் தவிர்க்க அத்தானிடம் சொல்லி

அவளும் “சேவிங் செற்” வேண்ட வேண்டியது தான்.

ஏன் பொம்பிளையள் “சேவ்” எடுக்கக் கூடாதே?

உங்கள் மகளின் கேள்வி காதில் விழுகிறது.

வாழ்க பெண்ணியம்.

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!



பிறகு அடுத்த கிரியை தொடங்கும்.

முகம் முழுவதும் வெள்ளையாய் ஏதோ பூசுவார்கள்

கண் மூடிக் கிடக்கும் மகள்

அழகு வந்து விட்டதாக்கும் என கண்ணைத் திறப்பாள்

உங்களுக்கு பழைய படங்களில் பார்த்த

வேதாளங்கள் ஞாபகத்தில் வரும்.

உங்கள் மகளைப் பார்த்து நீங்களே கூக்குரலிடவும் கூடும்.

“சோடனை மேல் சோடனை போதுமடா சாமி”

உங்கள் காதுகளில் தங்கப்பதக்க சிவாஜியின் பாடல் மாறிக்கேட்கும்.

இருளிலிருந்து தானே ஒளி வருகிறது.

அது போல இந்த அசிங்கத்திலிருந்து தான் அழகு வருமாக்கும்.

தத்துவமாய் உங்களைத் தேற்றிக் கொள்ளுவீர்கள்.

அந்த அளவில் முதல் நாள் கிரியைகள் முடிவுறும்.



இதைத் தான் மயிரைப் பிடுங்கும் சங்கதி என்றேன்.

இந்த “பியூட்டிசியனுகள்” தங்கள் அழகு நிலையத்திற்கு

“சலூன்” என்றே பெயர் வைக்கிறார்கள்.

இத்தனைக்கும் இதனை நடத்துபவர்கள்

பெரும்பாலும் மேற்சாதிப் பெண்கள்

ஒரு காலத்தில் “சலூன்” அம்பட்டன் என்றெல்லாம் சாதி பேசியவர்கள் இவர்கள்.

அன்றைக்கு மயிர் வெட்டியவனுக்குப் பெயர் அம்பட்டன்.

இன்றைக்கு மயிர் வெட்டுபவருக்குப் பெயர் “பியூட்டிசியன்”.

தொழில் ஒன்று தான் தோரணை தான் வேற

இரண்டு ரூபாய் வாங்கிய படியால் அம்பட்டன் குறைஞ்ச சாதி

இரண்டு லட்சம் வாங்கிற படியால் “பீயூட்டிசியன்” நல்ல சாதி

காசே தான் கடவுளடா?

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

மிகுதி விரைவில்….

http://www.jaffnatamil.info/archives/898

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பொடியன் எதோ எழுதியிருக்கிறான் வாசித்துப் பாப்பம் எண்டா எங்களை என்ன வேற வேலை வெட்டி இல்லாத ஆக்கள் எண்டு நினைச்சாச்சோ vannnnnnnndu.

இதென்ன கொடுமை ஆண்டவா! யாராவது வாசித்தவை சுருக்கத்தைச் சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனக்குத்தான் எண்டு பாத்தா உங்களுக்கும் விளங்கவில்லையோ அலை. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனக்குத்தான் எண்டு பாத்தா உங்களுக்கும் விளங்கவில்லையோ அலை. :D

அதாவது எங்கடை இனத்தைப்போல கேணை இனம் வேறை எங்கையும் இல்லையாம்.ஒரு வகையில் பாத்தால் உண்மைதான்.

நான் எனக்குத்தான் எண்டு பாத்தா உங்களுக்கும் விளங்கவில்லையோ அலை. :D

அலை வாசிக்கவே இல்லை சுமோ உவ்வளத்தையுமே வாசிக்கப் பொறுமையில்லை!!

அதாவது எங்கடை இனத்தைப்போல கேணை இனம் வேறை எங்கையும் இல்லையாம்.ஒரு வகையில் பாத்தால் உண்மைதான்.

[size=5]ஆதாரம்??????[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அலை வாசிக்கவே இல்லை சுமோ உவ்வளத்தையுமே வாசிக்கப் பொறுமையில்லை!!

[size=5]ஆதாரம்??????[/size]

நீங்களே ஆதாரம் கேட்டால் நான் எங்கே போவேன் :)

சரி.......... சரி ..........வண்டுவுக்கு கைதடுக்கிப் போட்டுது :lol: :lol: . நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொன்னால் தானே அரும் சரியா இணைப்பார் :D . கொஞ்ச நேரத்தாலை எப்பிடி இணைக்கிறது எண்டுசொல்லித் தாறன் வண்டு . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரோ உலக அனுபவமே இல்லாத ஒரு....எழுதினது போல இருக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் பாவம் தம்பி சுண்டுவை எல்லாரும் மன்னிச்சு விட்டிடுவம். எங்களுக்கு விளங்காட்டி பரவாயில்லை இவ்வளவையும் சுண்டு sorry வண்டு பொறுமையா எழுதினதுக்கு பாராட்டத்தான் வேணும்.தொடருங்கள் உங்கள் திருப்பணியை வண்டுத் தம்பி. :D

உலகை மகிழ்விக்கும் சொற்களுள் கல்யாணம் என்பதும் ஒன்று. உறவு நிறைவு குதூகலம் கொண்டாட்டம் இப்படி சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெருமை கல்யாணம் என்னும் சொல்லுக்கு உண்டு. ஓர் ஆணையும் பெண்ணையும் முழுமையுறச் செய்யும் இனிய வைபவம் அது! ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது! ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது! சந்ததி விருத்திக்காய் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இயற்கை அமைத்த ஏக்க எழுச்சியை சாந்தி செய்யும் சடங்கு அது! அறவாழ்வுக்காய் அமைக்கும் அடிப்படை அது! ஆணுக்கும் பெண்ணுக்குமாய் அமைக்கப்படும் அசையாத உறவுப்பாலம் அது! அன்பு விருத்தியின் அத்திவாரம் அது! உலக இயக்கத்தின் ஊற்று அது! இவ்வைபவத்திற்காய் கனவோடு காத்திருக்கும் இளையோர் தொகை எண்ணிலடங்காதது. அதனால் தான் “கல்யாண வைபோகமே“ என அதனைக் கொண்டாடிற்று நம் தமிழுலகு.

ஆனால் நான் இக்கட்டுரையில் எழுதப் போவது அதன் பெருமை பற்றியல்ல இன்றைய நிலையில் அவ் அரிய நிகழ்வுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றி விரும்பினால் நீ கல்யாணத்தை வை! மானம் இருக்கும் நாங்கள் மறந்தும் அதற்குப் போவமே? என கேட்க வேண்டிவந்திருக்கும் நிலை பற்றியே இக் கட்டுரை.

வேதாளம் முருக்கமரத்தால பழையபடி இறங்கிட்டுது. கொழுவல் போடாம அவரால இருக்கமுடியாது. என்னென்னத்திலயோ கை வைச்சு இப்ப மங்கள காரியத்திலயும் கை வைக்க வந்திட்டார். இதுக்குத்தான் காலாகாலத்தில கல்யாணஞ் செய்யவேணும் என்கிறது. நாங்களே அவரை முடிக்கவேண்டாம் என்றனாங்கள்? இப்ப வயிறு எரிஞ்சு என்ன செய்ய? நீங்கள் திட்டுவது என் காதுக்கு கேட்கிறது. நான் சொல்லப் போவது பற்றித் தெரியாமலேயே இப்படித் திட்டுவது என்ன ஞாயமாம்? கல்யாணம் கட்டாத வயிற்றெரிச்சலில் எழுதும் கட்டுரை அல்ல இது. உண்மையைச் சொல்லப் போனால் கட்டாத என்னைப் பார்த்து கட்டியவர் பலர் வயிறெரிகிறார்கள் என்பது தான் நிஜம்! சரி சரி அலட்டாம கெதியில சொல்ல வந்ததைச் சொல்லும்! அனுமதிக்கு நன்றி! ஆயிரந்தான் என்னைத் திட்டினாலும் என் எழுத்தை வாசிக்கும் உங்கள் ரகசிய ஆர்வம் புரிகிறது. தொடர்கிறேன். சுருங்கச் சொன்னால் புனிதமான இக் கல்யாண வைபவம் அருவருக்கத்தக்க வகையில் நம் தமிழ்ச் சமுதாயத்தில் அசிங்கப்படுவதைப் பற்றித் தான் எழுதப்போகிறேன். சுருக்கமே போதும் என்கிறீர்களாக்கும். போதும் என்றவர் இதிலேயே நிக்க மற்றவர்கள் தொடர்ந்து வாருங்கள்!

ஒரு காலத்தில் கல்யாணம் என்பது புனிதம் போற்றுதல் பொழிவு என தமிழர்களை மகிழ்வித்த தலையாய வைபவம். இன்றோ மூடத்தனம், பணத்திமிர், விரசம் ஆடம்பரம் ,அகந்தை, அலட்சியம், அநாகரிகம் ,அடிமைப்புத்தி என்பவற்றின் வெளிப்பாடாய் அது ஆகி விட்டது. கல்யாணத்திற்கு இருக்க வேண்டிய புனிதம் எல்லாம் போய் வீண்விரய விரச வைபவமாக அது ஆக்கப்பட்டிருக்கிறது. இவ் அசிங்கத்தைத் தடுக்க முடியாதா? தெரியாத் தனமாய் எனக்குள் புகுந்து விட்ட இனப்பற்று தூண்ட மாரித் தவக்கையாய் நான் கத்தியும் ஏதும் நடக்காது என்று தெரிந்தும் என் ரோசக்காரப் பேனா இழுக்க எழுதத் தொடங்குகிறேன். விடயத்துக்குள் நுழைவதன் முன் இம் மாற்றத்துக்காம் காரணம் என்ன? இம் மாற்றத்துக்காம் பின்புலம் என்ன? இப் பிழையில் எவரின் வகிர்பங்கு முக்கியமானது. ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. (ஆகா! ஆய்வு, வகிர்பங்கு, பின்புலம் ஆகிய சொற்கள் எல்லாம் என்னை அறியாது வந்து விழுந்து விட்டன. இனி இது அறிஞர் மதிக்கும் ஆய்வுக் கட்டுரை தான் போங்கள்!) சொறியத் தொடங்கிற்றார். நீங்கள் முறைப்பது தெரிகிறது. என்னை முறைத்து என்ன பயன்? இச் சொற்களை வைத்துத்தானே ஆய்வின் தரத்தை முடிவு செய்கிறீர்கள். நான் சொன்னால் மட்டும் குற்றமாக்கும். சரி, சரி நீங்கள் எப்படியும் இருந்து விட்டுப் போங்கள்! நான் விசயத்திற்கு வருகிறேன்.

ஈழத்தமிழர்கள், மொழிப்பற்று மிக்கவர்கள்! அடிமைத்தனத்தை விரும்பாதவர்கள்! பண்பாட்டைப் பேணுபவர்கள்! பக்தி மிகுந்தவர்கள்! சிக்கனமானவர்கள்! விருந்தோம்பலில் சிறந்தவர்கள்! போரால் வறுமையுற்று இருப்பவர்கள்! இப்படியெல்லாம்ää உலகம் நினைக்கிறது. இப்படி நினைப்பவர்கள், கொழும்பில் நடக்கும் ஒரு கல்யாண வீட்டைப் பார்த்தார்களானால், அடுத்த நிமிடம் தம் எண்ணம் அத்தனையையும் மாற்றிக் கொள்வார்கள். முன்னுரையை இப்படியே நீட்டிக் கொண்டு போகாமல், சீக்கிரம் விடயத்துக்குள் வாரும்! உங்கள் அவசரமும், ஒழிந்திருக்கும் ஆர்வமும் புரிகிறது. சரி இனியும் உங்களைத் தாமதப்படுத்தக் கூடாது. வாருங்கள். கொழும்புக் கல்யாண வீடொன்றின் மீது கவனம் செலுத்துவோம். ஆணுக்குப் பதினாறு வயது. பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது. கோவலன், கண்ணகி கல்யாண வயது இதுவாய்த்தான் இருந்ததாம். பின்நாளில், பெண்ணுக்குப் பதினெட்டு வயது ஆணுக்கு இருபத்தொரு வயது என கல்யாண வயது மாறிற்று. அதற்குப் பிறகு பெண்ணுக்கு இருபத்தொரு வயது ஆணுக்கு இருபத்தைந்து வயது என மீண்டும் கல்யாண வயதில் மாற்றம்.

என் அக்காவிற்கு இருபத்தொரு வயது வந்ததும் அம்மா பட்டபாட்டை நினைத்துப் பார்க்கிறேன். பிள்ளைக்கு வயசாயிற்றுது இன்னும் கல்யாணம் ஒன்றும் பொருந்தி வரேல்ல என்று சொல்லி அம்மா அழுதழுது ஐயனாருக்கு ஆயிரம் நேர்த்தி வைத்தது நேற்றுப் போல் இருக்கிறது. என்ன குலமணி? குமரை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிற? ஊர் பெருசுகள் விசாரணை என்ற பெயரில் அம்மாவை வெருட்டியதையும் அக்காவிக்கு இருபத்துமூன்று வயதாகி விட அம்மா உறவில் நடந்த நல்லது கெட்டதுகளுக்கு போறதைக் கூட நிறுத்தியதையும் இருபத்தினாலில் அக்கா கல்யாணம் ஒப்பேற இப்பவாவது வந்து பொருந்திச்சுதே என்று ஊரார் ஆறுதல் படுவது போல அக்காவுக்குப் பிந்திக் கல்யாணம் நடப்பதைக் குத்திக் காட்டியதையும் மறக்க முடியவில்லை. இன்றைக்கு பெரும்பாலும் முப்பதுகளில் தான் எல்லாருக்கும் கல்யாணம் கல்யாணப் பேச்சே இருபத்தெட்டின் பின் தான் ஆரம்பிக்கிறது. பெண்களுக்குக் கூட கேட்டால் தாயார் “ஸ்ரடியை” முடிச்சுட்டுத்தான் கட்டப் போறாவாம். பெருமையாய்ச் சொல்கிறா. “ஸ்ரடியை” முடிச்சு அவவை முப்பதில கட்டுறதும் ஒன்றுதான் தடியை முறிச்சு அதுக்குத்தாலி கட்டுறதும் ஒன்றுதான். இது ஏன் தான் விளங்கேல்லையோ தெரியேல?

நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

ஆண்களைக் கேட்டால் முப்பத்தொரு வயதிலும் இன்னும் கொஞ்சம் “ஸ்ரெடியாக” வேண்டும் என்கிறார்கள். அப்படி யாரும் சொல்கையில் எனக்கு ஒரு சம்பவம் தான் ஞாபகத்திற்கு வரும். அதை அடுத்த பந்தியில் சொல்கிறேன். “ஏ ஜோக்” பிடியாதவர்கள் அப்பந்தியை விட்டு மேலே வாசிக்கலாம்! எங்கள் நண்பர் குழுவில் எல்லாரும் கல்யாணம் முடித்துவிட ரவி என்ற ஓர் நண்பன் மட்டும் முப்பத்தொரு வயதாகியும் முடியாமல் இருந்தான். ஒரு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தோம். ரவியைப் பார்த்து மச்சான் எப்ப கல்யாணம் செய்வதாய் உத்தேசம்? முகுந்தன் கேட்டான். கொஞ்சம் “ஸ்ரெடியானவுடன்” பாப்பம்- ரவி சொல்ல முஸ்பாத்திக்காரனான வசந்தன் மச்சான் பாருங்கடா முப்பது வயதாகியும் இவருக்கு “ஸ்ரெடியாகேலயாம்”? ரெட்டை அர்த்த்தில் பேச நண்பர் குலாம் கொல்லென்று சிரித்தது. என்ன? முகத்தில் சிரிப்பைப் பார்த்தால் அந்தப்பந்தியைத்தான் முக்கியமாய் வாசித்ததாய்த் தெரிகிறதே? என்னது? சத்தியமாய் நீங்கள் வாசிக்கவில்லையா? சரி சரி நீங்கள் உத்தமர் தான் வாசித்திருக்கமாட்டீர்கள். நாங்கள் விடயத்தைத் தொடருவோம். படிப்பு“ஸ்ரெடியாதல்” என்பவை தவிர கல்யாணம் முப்பது வயதைத் தாண்ட முக்கியமான மற்றொரு காரணமும் இருக்கிறது. அக்காரணத்தின் கர்த்தராய் இருப்பவர் சாத்திரியார். கல்யாணம் பொருத்துவதாய்ச் சொல்லி கல்யாணங்களைக் குழப்ப என்றே பிறந்த ஜீவன் அவர். பஞ்சாங்கத்தில் பத்துப் பொருத்தம் மட்டுமே இருக்க இவர் பத்தாயிரம் பொருத்தம் பார்ப்பார். பெண்ணுக்கு வயது இருபத்தேழு ஆகவேணும் அதுக்குப் பிறகு பார்த்தால்த்தான் நல்லது. அதுவரை ராகு பார்வை நல்லா இல்ல. அதுக்கு முன்னால மறந்தும் மாப்பிள்ளை பார்த்திடாதைங்கோ! அடித்துச் சொல்லுவார் அவர். தன் வீட்டில் இருபத்தொன்பதைத் தாண்டி குமராயிருக்கும் தண்ட மகளை நினைத்துக் கொண்டு அவர் சொல்வது தெரியாம அப்ப இருபத்தேழுக்குப் பிறகு பாப்பம்! எனச் சொல்லி சும்மா இருக்கும் அசட்டுப் பெற்றோரே நம் மத்தியில் இன்று அதிகம். இருபத்தேழில் தேடத்தொடங்கி தேடலில் வயது முப்பதாக மகளின் உடலில் முதுமையின் அடையாளங்கள் தோன்றத் தொடங்கும் உடனே பதறியடித்து கிடைத்த மாப்பிள்ளை யாரானாலும் கட்டி வைத்தால் போதும் என நினைக்கும் கேனத்தனமான பெற்றோர் தொகை நம் இனத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது. நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

அப்ப சாத்திரம் பொய்யே?-நீங்கள் கேட்பது புரிகிறது. சாத்திரம் பொய்யாக வாய்ப்பில்லை. சாத்திரியார் பொய்யாக நிறைய வாய்ப்பிருக்கிறது. சாத்திரியார் உண்மையானவர் என்றால் இருபத்தேழில் கல்யாணம் நடக்கும் என்பதை உறுதி செய்து பத்து லட்சம் “டிப்போசிற்றோடு கரண்டி” தரவேணும். அதனோடு சாத்திரியார் பொருத்திய கல்யாணம் ஒன்றும் பிழைத்திருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளுக்குச் சாத்திரியார் ஒத்துக்கொண்டால் இருபத்தேழு என்ன? முப்பத்தேழு வயது வரையும் கூட நீங்கள் காத்திருக்கலாம்! மற்றொன்று என் அக்கா கல்யாணத்தில் இல்லாத முறைகளை எல்லாம் இப்போது புதிது புதிதாக சாத்திரிமார் அறிமுகம் செய்கிறார்கள். மாப்பிளைக்கு பாவம் கூட இருக்க வேணும். இது இப்போது புதிதாய் வந்திருக்கும் சாத்திர “மெதேட்” நல்ல காலம் எங்கள் அக்காமார் கல்யாணக் காலத்தில் இது வரவில்லை. வந்திருந்தால் கன்னியாஸ்திரி மடத்திற்குத் தான் அனுப்பியிருக்க வேண்டும். மாப்பிளைக்கோ பொம்பிளைக்கோ பாவம் கூட என்று ஆராய்வதை விட மாப்பிளையோ பொம்பிளையோ கூட பாவம் என்று ஆராய்ந்தால் உருப்படலாம். கல்யாணத்திற்கு புண்ணியம் தேடுவதற்குப் பதிலாக பாவம் தேடித்திரியும் பரிதாபப் பெற்றோரை என் சொல்ல? நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

முப்பதின் மேல் பெண்ணுக்கான குழந்தை பெறும் தகுதி அரைவாசி ஆவதாய் விஞ்ஞானம் சொல்கிறது. முப்பது வயது தாண்டிய பெண்ணை பேரிளம் பெண் என்று தமிழ் சொல்கிறது. பேரிளம் பெண் என்பதே ஒரு கிண்டல் தான்! வெறும் பெயரளவில் மட்டும் இளம் பெண் என்பதாய் சொல்ல நினைத்திருப்பார்களோ? இதுவெல்லாம் தெரிந்திருந்தும் பருவத்தில் பயிர் செய் எனப் படித்திருந்தும் மூடத் தனத்தில் மூழ்கிய பெற்றோரால் இளமை ஊஞ்சலாட இளையோர் படும்பாட்டை என் சொல்ல? நாங்கள் கற்போடு இருக்கும் கருவாடுகள். மேத்தாவின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

வீதியில் நடக்கையில் தமை மறந்து கூடி நிற்கும் விலங்குகளைக் காணும் போதும் மரங்களில் கொஞ்சிக் குலாவும் குருவிகளைக் காணும் போதும் நல்ல காலம் அவற்றிற்கிடையில் சாத்திரிமார் இல்லை போலும் என நினைத்துக் கொள்வேன். பகுத்தறிவு பாவமா? சாபமா? சொல்லுங்கள்! நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

முப்பதின் மேல் சாதி, சாதகம், சீதனம் என்ற கடல்கள் எல்லாம் தாண்டி ஆசைகள் அறுந்து போக ஆயத்தமாகும் போது கலியாணம் நிச்சயமாகிவிட்டால் அதன் பிறகு நடக்கும் கூத்துகளுக்கு ஓர் அளவேயில்லை. கலியாணத்தில் அக்கறை இல்லாதது போல் இருந்த மாப்பிள்ளையும் பொம்பிளையும் கலியாணம் நிச்சயமானதும் படும்பாடு இருக்கிறதே கண்டறியாதவன் பெண்டிலைக் கண்டால் காடு மேடெல்லாம் கொண்டு திரிவானாம் என்ற கதை தான். நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

பெண் வீடு கல்யாணத் திகதி நிச்சயமாகி விட்டதா? ஐயரை ஒழுங்கு பண்ணுவதோ? மண்டபத்தை ஒழுங்கு பண்ணுவதோ? மேளத்தை ஒழுங்கு பண்ணுவதோ? எல்லாம் பிறகு தான். முதலில் நீங்கள் செய்யவேண்டியது “பியூட்டிசியனையும்” “வீடியோ கமராவையும் புக்” செய்வது தான். பிந்தினீர்களோ அவர்கள் கிடைக்கமாட்டார்கள். ஐயர் என்ன ஐயர்? அவையல்ல ஆயிரம் பேரைப் பிடிக்கலாம். கிரியைகள் எல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்குத் தான்! நேரம் மிச்சமாய் இருந்தால் கிரியைகளைக் கூட்டுங்கோ! என்றால் ஐயர் கூட்டுவார். குறையுங்கோ! என்றால் ஐயர் குறைப்பார். மந்திரங்களையும் “பிளாசிபில்” ஆக்கி வைத்திருக்கினம். நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

உந்தச் சேட்டையெல்லாம் “பியூட்டிசியனிட்டையோ?” வீடியோக்காரனிட்டையோ நடவாது! அவையல் சொன்னாச் சொன்னது தான். அவையல் நீட்டு என்றால் நாங்கள் நீட்டவேண்டியது தான் அவையல் குறை என்றால் நாங்கள் குறைக்க வேண்டியது தான் நேரத்தைச் சொல்கிறேன். கூறை மாத்திறத்திற்காகவும் வீடியோ “செற்”பண்ணிறதுக்காகவுமாக எத்தனையோ இடத்தில் முகூர்த்தம் தாண்டி தாலி கட்டப்படுகிறது. ஐயருக்கு பத்தாயிரம் கொடுக்க பேரம் பேசுகிறவர்கள். அலங்காரக் காரருக்கு இரண்டு லட்சத்தை “வெறி சீப்” என்று கொடுக்கும் அழகைப் பார்க்கவேண்டுமே . நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

என்னது? “பியூட்டிசியனக்கு;” இரண்டு லட்சமோ? இரண்டு லட்சத்துக்கு என்ன மயிரைப் பிடுங்கப் போகிறார்கள்? சரியாய்ச் சொன்னீர்கள். மயிர்பிடுங்குவது தான் அவர்களின் முதல் வேலை. சத்தியமாய் நான் சொல்லுவது உண்மை! மூகூர்த்தத்தன்று தான் மாப்பிள்ளையிடம் பெண்ணை ஒப்படைப்பீர்கள். ஆனால் “பியூட்டிசியனிடமோ” அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பெண்ணை நீங்கள் ஒப்படைக்கவேண்டும். மகளைக் கூட்டிக்கொண்டு நல்ல நாள் பார்த்து அங்கு செல்வீர்கள். வாசலில் தொங்கும் “சலூன்” என்ற பெயரே உங்களுக்கு நெருடும். பொம்பிளையளுக்கு இங்கு என்ன வேலை? கேட்க நினைத்து அடக்கிக் கொள்வீர்கள். அலங்கார நிலையத்திற்குள்ளே சென்றதுமே உங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். “ஏசி” குளிரால் அல்ல பிதுங்கும் “ஜீன்சோடும்” “ரீ சேட்டோடும்” ஒரு பத்து இளம் பெண்களாவது உள்ளே வலம் வருவார்கள் அவர்களைப் பார்த்து! கறுத்த வெள்ளை முடிகளைத்தானே இதுவரை கண்டிருக்கிறோம். அங்கோ வானவில் வண்ணங்கள் தலையில் ஜொலிக்க அந்தப் பெண்கள் வலம் வருவார்கள். உங்களுக்கு சற்று அச்சம் கலந்த வியப்பு வரும். ஓகோ இது தான் இப்பத்த “பஷன்” ஆக்கும் அடிமைப் பட்டு பழகிய நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வீர்கள். சாயப்பானையில் தலையைக் கொடுத்த நரிக் கதையை படித்து என்ன பிரயோசனம்? உதட்டில் சாயமா? சாயத்தில் உதடா? அவர்கள் முகம் காண அடுத்த சந்தேகம் வரும். விடை காணும்முன் உங்கள் மகளின் கையில் அவர்கள் ஓர் “அல்பத்தை” திணிப்பார்கள். விதம் விதமான அலங்காரங்களுடன் அழகிய பெண்களின் படங்கள் அதனுள் இருக்கும். ஐஸ்வர்யாராயும் அதனுள் சில வேளை அமர்ந்திருப்பா. பிறகென்ன? உங்கள் மகள் தனது முப்பதைத் தாண்டிய முத்திய முகத்தை “ஜீன்சில்” நடித்த இருபது வயது ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிட்டு அடுத்த உலக அழகுராணி நான் தான் என கற்பனை பண்ணிக் கொள்வாள். அந்தப் பலவீனத்தில் “பியூட்டிசியன்” தரப்போகும் இரண்டு இலட்சம் பில் இருபது ரூபாயாய் அவளுக்குத் தெரியும்! அவளுக்கு காசாவது (கு)பீசாவது அமெரிக்க அண்ணன் இருக்கும் வரை. நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

உங்கள் மகளின் சரணாகதியை அறிந்து அவர்கள் கிரியைகளை ஆரம்பிப்பார்கள். குளிர் நிறைந்த அறைக்குள் அழைத்துச்சென்று பல்லு டாக்டரிடம் இருக்கும் படுக்கை கதிரை போல் ஒன்றில் உட்கார வைத்து பளீர் பளீரென லைட்டுகளைப் போடுவார்கள். படுத்திருக்கும் உங்கள் மகளுக்கு நித்திரை கொள்ளாமலே கனவு வரும். சிம்ரன் ஸ்ரேயா நயன்தாரா என பல நடிகைகளும் முன்னிருக்கும் கண்ணாடியில் வந்து போக அவள் கிரங்கிப் போவாள்! அவர்களின் முதற் கிரியை ஆரம்பமாகும். உங்கள் மகளின் முகத்தில் இருந்த இமை மயிர் புருவமயிர் எல்லாம் வலிக்க வலிக்க பறிக்கப்படும். அழகு ராணி ஆவதென்றால் சும்மாவா? என்று நினைத்தபடி வலியைப் பொறுத்துக்கொள்வாள் மகள் மொட்டையும் அடித்தால் சமணத் துறவிதான்! இயற்கையாய் இருந்த முடியைப் பறித்துவிட்டு செயற்கையாய் அவளுக்கு “ஐபிறோ” கீறப்படும். கல்யாணம் முடிந்து ஒரு கிழமை கழித்து எல்லா மயிரும் தடித்தடியாய் திருப்பி முளைக்கும். ஆபத்தைத் தவிர்க்க அத்தானிடம் சொல்லி அவளும் “சேவிங் செற்” வேண்ட வேண்டியது தான். ஏன் பொம்பிளையள் “சேவ்” எடுக்கக் கூடாதே? உங்கள் மகளின் கேள்வி காதில் விழுகிறது. வாழ்க பெண்ணியம். நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

பிறகு அடுத்த கிரியை தொடங்கும். முகம் முழுவதும் வெள்ளையாய் ஏதோ பூசுவார்கள் கண் மூடிக் கிடக்கும் மகள் அழகு வந்து விட்டதாக்கும் என கண்ணைத் திறப்பாள் உங்களுக்கு பழைய படங்களில் பார்த்த வேதாளங்கள் ஞாபகத்தில் வரும். உங்கள் மகளைப் பார்த்து நீங்களே கூக்குரலிடவும் கூடும். “சோடனை மேல் சோடனை போதுமடா சாமி” உங்கள் காதுகளில் தங்கப்பதக்க சிவாஜியின் பாடல் மாறிக்கேட்கும். இருளிலிருந்து தானே ஒளி வருகிறது. அது போல இந்த அசிங்கத்திலிருந்து தான் அழகு வருமாக்கும். தத்துவமாய் உங்களைத் தேற்றிக் கொள்ளுவீர்கள். அந்த அளவில் முதல் நாள் கிரியைகள் முடிவுறும். இதைத் தான் மயிரைப் பிடுங்கும் சங்கதி என்றேன். இந்த “பியூட்டிசியனுகள்” தங்கள் அழகு நிலையத்திற்கு “சலூன்” என்றே பெயர் வைக்கிறார்கள். இத்தனைக்கும் இதனை நடத்துபவர்கள் பெரும்பாலும் மேற்சாதிப் பெண்கள் ஒரு காலத்தில் “சலூன்” அம்பட்டன் என்றெல்லாம் சாதி பேசியவர்கள் இவர்கள். அன்றைக்கு மயிர் வெட்டியவனுக்குப் பெயர் அம்பட்டன். இன்றைக்கு மயிர் வெட்டுபவருக்குப் பெயர் “பியூட்டிசியன்”. தொழில் ஒன்று தான் தோரணை தான் வேற . இரண்டு ரூபாய் வாங்கிய படியால் அம்பட்டன் குறைஞ்ச சாதி . இரண்டு லட்சம் வாங்கிற படியால் “பீயூட்டிசியன்” நல்ல சாதி காசே தான் கடவுளடா? நல்ல இனம்! நல்ல குணம்! நல்ல மணம்!

மிகுதி விரைவில்….

வண்டு மனதில் எடுக்காவிட்டால் இப்படி பந்தி பிரித்து இணைத்தால் எல்லோருக்கும் வாசிக்க இலகுவாக இருக்கும் என எண்ணுகின்றேன் :) :) :) .

  • தொடங்கியவர்

என் மானத்தைக்காப்பாத்திய கோமகனுக்கு நன்றி. :D

என் மானத்தைக்காப்பாத்திய கோமகனுக்கு நன்றி. :D

கருத்துக்களத்துக்கு வருபவர்கள் ஒன்றும் கம்பசூத்திரம் படித்து வந்தவர்கள் இல்லை . எல்லாம் எழுத எழுத சரிவரும் வண்டு :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் பாவம் தம்பி சுண்டுவை எல்லாரும் மன்னிச்சு விட்டிடுவம். எங்களுக்கு விளங்காட்டி பரவாயில்லை இவ்வளவையும் சுண்டு sorry வண்டு பொறுமையா எழுதினதுக்கு பாராட்டத்தான் வேணும்.தொடருங்கள் உங்கள் திருப்பணியை வண்டுத் தம்பி. :D

ஐயோ இது என்ன அநியாயமா இருக்கு நான் வண்டு இல்லைப்பா கடவுளே :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.