Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/Gj3Fs8IQscE

எங்களுக்கும்

ஆயிரம் ஆசைகள் உண்டு..

அதில்

கட்டுநாயக்கா போய்

கடல் கடந்து

அந்நியப்பட்டு

அந்நிய தேசத்தில்

கடவுச்சீட்டொன்றில்

வதிவிடம் வாங்கி

களித்துப் பின்

கலியாணம் கட்டி

இசைஞானியின்

காதல் இசையில்

கருத்தால் மயங்கி

கலவி செய்து

கலந்திப்பதும் ஒன்று...!

ஆனாலும்

கால்கள் நகர மறுத்தன.

காலம்

தடுத்து நிறுத்தின.

அன்னை தேசம்

அடிமை விலங்கு தாங்கி

அழுது புலம்பும் நிலை

அனுதினமும் அமைதி குலைத்தது...!

கழுத்தில்

நஞ்சு கட்டி

களமதில்

கருவி ஏவி

சாவு பல கண்டோம்

ஏன்.....

கார்த்திகை 27 இல்

எமக்கு

ஓர் நாள்

கழிப்பு கழிப்பீர் என்றோ..???!

கல்லறைகள்

வரிசையாய்

அடிக்கி நிற்கும்

கோலம்..

எம் கால்களின்

அணிவகுப்பினைச் சொல்லும்..

அது கூட - இன்று

எதிரி காலடியில்..!

தேசப் புதல்வர்தம்

வித்துடல்களின்

குருதியாற்றின்

ஈரப் பெருக்கம்

கார்த்திகைப் பூவின்

செந்நிறமாகி..!

இந்த வேளையும்

இசைக்க ஒரு

கானம் இருக்குது..

மோகமோ

முகாரியோ அல்ல

தேச பக்தியே அது..!

அண்ணல் காந்தியின்

வீரத்துக்கு

தேச பக்தி கொண்டெழும் உறவுகள்

என் தேச பக்திக்கு

பதில் சொல்ல..

மணிக்கணக்கு தேடுகிறார்

Money தான் முதன்மை என்கிறார்..

பிழைக்கத் தெரியாதவன்

நான் என்கிறார்..!!!

இல்லை இல்லை..

நாங்களோ

இசை ஞானமில்லா

சூனியங்கள் என்கிறார்

ஆணவத்தின்

வடிவம் என்கிறார்.

இன்னும் என்னென்னவோ

எல்லாம் சொல்கிறார்.

ஆம்...

உங்கள் வார்த்தைகள்

உண்மை தான்..

எம்மோடு இருப்பதோ

எம் தேகம் கூட இல்லை

தேச தாகம் மட்டுமே...!!!

தேசம் ஒன்று இன்றேல்

இந்த ஞானத்தின் சரிவு

காலத்தால்

உடலழிவில் நிகழும்..!

நில அழிவோ

பறிப்போ

இன அழிவில்

முடியும்..!

இசைக்க ஆளுமற்ற

கேட்க யாருமற்ற

வெற்றிடம்

ஓர் நாள் மிஞ்சும்..!

சிந்தியுங்கள்..

ஞானிகளே

அவர்தம் சீடர்களே..!

கேளுங்கள்

தோழர்களே...

கார்த்திகை

எமக்கு

உயிர்..!

அதன் நனிகுளிர்

காற்றில் கலந்திருப்பது

வெறும் நீர்த்துளி அல்ல

எம்

உயிர்த்துளி..!

காற்றாய் வீசுவது

உப்புத் துகள்கள் அல்ல

எம் கல்லறை

மூச்சுக்கள்..!

காலம்

ஓர் நாள்

உண்மை

உணர்த்தும்..

இசைஞானம் அன்று

சேதி கேட்டு

உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல

சரிதம்..!

(Poem was edited myself on 1st Nov.2012 in order to respect both our fallen warriors and views of decently behaving Yarl kaza uravukaL.)

Edited by nedukkalapoovan

  • Replies 109
  • Views 7.2k
  • Created
  • Last Reply

இசைக்க ஆளுமற்ற

கேட்க யாருமற்ற

வெற்றிடம்

ஓர் நாள் மிஞ்சும்..!

கேளுங்கள்

தோழர்களே...

கார்த்திகை

எமக்கு

உயிர்..!

அதன் நனிகுளிர் காற்றில்

கலந்திருப்பது

வெறும் நீர்த்துளி அல்ல

எம்

உயிர்த்துளி..!

காற்றாய் வீசுவது

உப்புத் துகள்கள் அல்ல

எம் கல்லறை

மூச்சுக்கள்..!

கண்கள் பனிக்கின்றன...

தோழர்களே...

கார்த்திகை

எமக்கு

உயிர்..!

அந்த நனிகுளிர்

காற்றில் கலந்திருப்பது

வெறும் நீர்த்துளி அல்ல

எம்

உயிர்த்துளி..!

காற்றாய் வீசுவது

உப்புத் துகள்கள் அல்ல

எம் கல்லறை

மூச்சுக்கள்..!

காலம்

ஓர் நாள்

உண்மை

உணர்த்தும்..

இசைஞானம் அன்று

சேதி கேட்டு

உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல

சரிதம்..!

உண்மையில் இதை வாசிக்கும்போது தாயகத்தில் மாவீரர் தினத்தின்போது ................அன்று ......அந்த வரிசையில் நின்ற உணர்வு என் மனதை இன்று ஆக்கிரமிக்கிறது .உற்சாகம் பிறக்கிறது ..........................நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ற பதிவு ....../. பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும்

ஆயிரம் ஆசைகள் உண்டு..

அதில்

கட்டுநாயக்கா போய்

கடல் கடந்து

களவோ கள்ளமோ

கவுண்டோ நிமிர்ந்தோ

கடவுச்சீட்டொன்றில்

கனடிய வதிவிடம் வாங்கி

களித்துப் பின்

கலியாணம் கட்டி

இசைஞானியின்

காதல் இசையில்

கலவி செய்து

கலந்திப்பதும் ஒன்று...!

ஆனாலும்

கால்கள் நகர மறுத்தன.

காலம்

தடுத்து நிறுத்தின.

அன்னை தேசம்

அடிமை விலங்கு தாங்கி

அழுது புலம்பும் நிலை

அனுதினமும் அமைதி குலைத்தது...!

கழுத்தில்

நஞ்சு கட்டி

களமதில்

கருவி ஏவி

சாவு பல கண்டோம்

ஏன்.....

கார்த்திகை 27 இல்

எமக்கு

ஓர் நாள்

கழிப்பு கழிப்பீர் என்றோ..???!

கல்லறைகள்

வரிசையாய்

அடிக்கி நிற்கும்

கோலம்..

எம் கால்களின்

அணிவகுப்பினைச் சொல்லும்..

அது கூட - இன்று

எதிரி காலடியில்..!

தேசப் புதல்வர்தம்

வித்துடல்களின்

குருதியாற்றின்

ஈரப் பெருக்கம்

கார்த்திகைப் பூவின்

செந்நிறமாகி..!

இந்த வேளையும்

இசைக்க ஒரு

கானம் இருக்குது..

மோகமோ

முகாரியோ அல்ல

தேச பக்தியே அது..!

அண்ணல் காந்தியின்

வீரத்துக்கு

தேச பக்தி கொண்டெழும் உறவுகள்

என் தேச பக்திக்கு

பதில் சொல்ல..

மணிக்கணக்கு தேடுகிறார்

Money தான் முதன்மை என்கிறார்..

பிழைக்கத் தெரியாதவன்

நான் என்கிறார்..!!!

இல்லை இல்லை..

நாங்களோ

இசை ஞானமில்லா

சூனியங்கள் என்கிறார்

ஆணவத்தின்

வடிவம் என்கிறார்.

இன்னும் என்னென்னவோ

எல்லாம் சொல்கிறார்.

ஆம்...

உங்கள் வார்த்தைகள்

உண்மை தான்..

எம்மோடு இருப்பதோ

எம் தேகம் கூட இல்லை

தேச தாகம் மட்டுமே...!!!

தேசம் ஒன்று இன்றேல்

இந்த ஞானத்தின் சரிவு

காலத்தால்

உடலழிவில் நிகழும்..!

நில அழிவோ

பறிப்போ

இன அழிவில்

முடியும்..!

இசைக்க ஆளுமற்ற

கேட்க யாருமற்ற

வெற்றிடம்

ஓர் நாள் மிஞ்சும்..!

சிந்தியுங்கள்..

ஞானிகளே

அவர்தம் சீடர்களே..!

கேளுங்கள்

தோழர்களே...

கார்த்திகை

எமக்கு

உயிர்..!

அந்த நனிகுளிர்

காற்றில் கலந்திருப்பது

வெறும் நீர்த்துளி அல்ல

எம்

உயிர்த்துளி..!

காற்றாய் வீசுவது

உப்புத் துகள்கள் அல்ல

எம் கல்லறை

மூச்சுக்கள்..!

காலம்

ஓர் நாள்

உண்மை

உணர்த்தும்..

இசைஞானம் அன்று

சேதி கேட்டு

உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல

சரிதம்..!

மன்னிக்கவும் நெடுக்ஸ்....

இந்தக் கவிதையில், மாவீரர்களை உயர்த்துவது என நினைத்துக்கொண்டு இளையராசா மீதான உங்கள் (அல்லது ஒரு சிலரின்) தனிப்பட்ட கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். அதாவது கவிதையின் தீம் (Theme) மாவீரர் புகழ் அல்ல இளையராசா எதிர்ப்பு. இது மாவீரர்களை வைத்து உங்கள் கருத்தியலைத் திணிக்கும் பிழைப்புவாதம்.

மன்னிக்கவும் நெடுக்ஸ்....

இந்தக் கவிதையில், மாவீரர்களை உயர்த்துவது என நினைத்துக்கொண்டு இளையராசா மீதான உங்கள் (அல்லது ஒரு சிலரின்) தனிப்பட்ட கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். அதாவது கவிதையின் தீம் (Theme) மாவீரர் புகழ் அல்ல இளையராசா எதிர்ப்பு. இது மாவீரர்களை வைத்து உங்கள் கருத்தியலைத் திணிக்கும் பிழைப்புவாதம்.

உண்மைதான் காவாலி. மாவிரர் நாளை பயன்படுத்தி கனடாவில் சிலர் தமது சொந்த லாபங்களுக்காக அரசியல் செய்வதுபோலவே நெடுக்ஸ் இளையராஜா இசை நிகழ்ச்சி செய்வதற்கு தனது எதிர்ப்பை கவிதையாக பதிவு செய்ய மாவீரரை பயன்படுத்தி இருக்கிறார் இங்கு.

Edited by நிழலி
குடும்ப உறவுகளை மோசமாக இழுத்து கதைத்தமையால் தணிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது

குடும்ப உறவுகளை மோசமாக இழுத்து கதைத்தமையால் தணிக்கைக்குட்படுத்தப்பட்ட பகுதி: நிழலி

[size=4]ஒருவர் தனது வாதத்திற்கு பலம் சேர்க்க ஒரு கருத்தை இல்லை கவிதையை முன்வைக்கமுடியும். அதன் பொருளை நீங்கள் விவாதிக்கலாம்.[/size]

[size=4]ஆனால் இவ்வாறு எழுதுவது உங்கள் மீது தான் சேறு பூசுகின்றது.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நெடுக்ஸ்....

இந்தக் கவிதையில், மாவீரர்களை உயர்த்துவது என நினைத்துக்கொண்டு இளையராசா மீதான உங்கள் (அல்லது ஒரு சிலரின்) தனிப்பட்ட கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். அதாவது கவிதையின் தீம் (Theme) மாவீரர் புகழ் அல்ல இளையராசா எதிர்ப்பு. இது மாவீரர்களை வைத்து உங்கள் கருத்தியலைத் திணிக்கும் பிழைப்புவாதம்.

நான் சொல்லவந்த கருப்பொருள்.. கார்த்திகையின் முக்கியத்தை அறியாது செய்வது எல்லாவற்றிற்கும்.. மாவீரர் வேறு.. நாங்க வேறு ... மாவீரர் நாள் வேறு.. கார்த்திகை வேறு என்று வியாக்கியாணம் கொடுக்கிறவையை நோக்கித்தான். இவர்களின் போலி முகத்திரைகள் கிழிக்கப்படனும்..!

அந்த வகையில்.. இது.. மாவீரர் வீரம் பாடும் கவிதையல்ல. மாவீரர்களோடு நெருங்கி உறவாடியவன்.. கார்த்திகை எங்கனும் களத்தில் உழைத்தவன் என்ற வகையில் மாவீரர்கள் சார்ப்பாக மக்களை நோக்கிய எனது ஆதங்கமே இது.

இதனை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்வது நன்று.

நாங்கள் இளையராஜாவை வைச்சோ.. மாவீரரை வைச்சோ பிழைப்பு நடத்த வேண்டிய தேவைக்கு அப்பாற்பட்டவர்கள். இதனையும் புரிஞ்சு கொள்ளனும்.. உங்களைப் போன்ற பிழைப்புவாதம் பேசுவோர். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய தேசப் பற்றும்.. மாவீரத் தியாகிகள்.. மாண்ட மக்கள்.. மற்றும் போர் தின்னும்.. போரின் பின் சூழ்நிலைகள் தின்னும் மக்களின் மேலான அக்கறையும் எங்களளவில் நிஜமானவையே..! :)

[size=4]ஒருவர் தனது வாதத்திற்கு பலம் சேர்க்க ஒரு கருத்தை இல்லை கவிதையை முன்வைக்கமுடியும். அதன் பொருளை நீங்கள் விவாதிக்கலாம்.[/size]

[size=4]ஆனால் இவ்வாறு எழுதுவது உங்கள் மீது தான் சேறு பூசுகின்றது.[/size]

அகூதா. மனித வர்க்கத்தோடு தான் மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியும். விட்டுத் தள்ளுங்க..

பிழைப்பு வாதிகள் தமது விவாதம் வெல்ல எதையும் இழுப்பார்கள்.அவர்களுக்கு மாவீரர் என்ற கவலை ஏது???

வணக்கம்,

இந்த திரியில் ஒரு நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் குடும்ப உறவுகளை இழுத்து வண்டுமுருகன் விவாதித்த போக்கு கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய போக்குகளை இன்னும் சிலரும் கைக்கொள்வதை அண்மையில் வேறு சில இடங்களிலும் அவதானித்துள்ளோம். இப்படியான கருத்தாடல்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

கருத்தை கருத்தால் வெல்ல முடியாதவர்களால் யாழுக்கும் சமூகத்துக்கும் எவ்விதப் பயனுமில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

நன்றி

இளையறாஜாவின் இசை நிகழ்ச்சியில் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மாவீரரை இழுக்கலையா?அதுபோலதான் யாழிலும் தமது கருத்துக்களை வெல்ல மாவீரர்கள் பலருக்கு உதவுகிரார்கள்.பாவம் அவர்கள் இறந்தும் நிம்மதியாக தூங்கமுடியலை. :(

மன்னிக்கவேண்டும் சில வார்த்தைகளை உணர்ச்சி வசப்பட்டதால் எழுதிவிட்டேன்.மாவீரர்களை யார் சீண்டினாலும் கெட்டகோபம் வருதே.என்ன செய்யா..? :(

Edited by வண்டுமுருகன்

கண்கள் பனிக்கின்றன...

உண்மைதான் காவாலி. மாவிரர் நாளை பயன்படுத்தி கனடாவில் சிலர் தமது சொந்த லாபங்களுக்காக அரசியல் செய்வதுபோலவே நெடுக்ஸ் இளையராஜா இசை நிகழ்ச்சி செய்வதற்கு தனது எதிர்ப்பை கவிதையாக பதிவு செய்ய மாவீரரை பயன்படுத்தி இருக்கிறார் இங்கு.

வண்டு முருகன் மேலுள்ள இரண்டும் நீங்கள் தான் பின்னூட்டமிட்டு உள்ளீர்கள் .......

ஒரே குழப்பமாய் இருக்கு .....[ ஐடியை மாறிக்கீறி அடிச்சிட்டீங்க போல ] :D :D

இனிமேல் இந்த தவறு இடம்பெராது.குறிப்பிட்ட உரவுகளைடம் மனந்திரந்து பகிரங்கமாக் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

என்னால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உழைச்சுலுக்கு மிகவும் வருந்துகிறேன்.மன்னிக்கவும்..verry sorry. :( :( :(

ஆனாலும் நெடுக்ஸ் தனது விவாதத்தை நியாயப்படுத்த மாவீரரை எடுத்து எழுதியதன் மூலம் அவர்தான் தன் விவாதம் வெல்ல எதையும் எடுப்பார் என்பதை நிரூபித்து தன்மீது சேறி பூசி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்குக் கவிதை எழுதுங்கள் அதற்குள் வேறு காழ்ப்புணர்ச்சியைத் திணிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நெடுக்கு கவிதை மாவீரருக்காகப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு மேலாக இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது. இசைஞானியை விடுங்கள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

போனவரை எதுக்கு இப்ப கூப்பிடுறீங்கள்? :D

போனவரை எதுக்கு இப்ப கூப்பிடுறீங்கள்? :D

மாவீரர்களை இழுத்து எழுதிவிட்டு அவர் போவார்.அவர் போயிட்டாருன்னு நாமா பொத்திக்கிட்டு இருக்கணுமா? எதிர்த்து கேட்ககூடாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

போனவரையா.......? ஓ... அவர் மாவீரர் மாதம் கடைப்பிடிக்கிறார் அல்லவா நாம் இப்போது இசையைப்பற்றி கேள்வி எழுப்பி அவர் கவனத்தைக் கலைக்கவேண்டாம் ஒரு மாதம் கழித்து அவருடன் இசையைப்பற்றிய கேள்விகளைக் கேட்போம் இப்போது அவருடைய திரியில் இருந்து விடை பெறுவோம். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி இசைக்கலைஞன் :)

ஊரில் ஆர் மேலும் வசை பொழிய வேண்டும் என்றால் தூசனம் பாவிப்பார்கள் அல்லது கடும் சொற்கள் பாவிப்பார்கள். நெடுக்குக்கு வசை மொழியாக கவிதை தான் இருக்கு போல. யாரையாவது திட்ட வேண்டும் என்றால் கவிதை தான் எழுதுவார். இப்ப இன்னும் ஒரு படி மேல போய் மாவீரர்களை இழுத்து எழுதுகின்றார்.

கார்த்திகை மாதத்துக்கு முதல் நாள் மிக நன்றாக மாவீரருக்கு மரியாதை செய்கின்றீர்கள் நெடுக்கு.

இதுக்கு மாவீரர் மேல் பாசம் வைத்துள்ளதாகக் கூறும் தமிழ்சூரியனும், விசுகுவும் லைக் வேறு பண்ணி இருக்கின்றார்கள் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்குக் கவிதை எழுதுங்கள் அதற்குள் வேறு காழ்ப்புணர்ச்சியைத் திணிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நெடுக்கு கவிதை மாவீரருக்காகப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு மேலாக இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது. இசைஞானியை விடுங்கள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

எனக்குப் புரியல்ல உங்கட நிலைப்பாடுகள். என்னிடத்தில் நீங்கள் எந்த வகையிலும் இளையராஜாவையோ யாரையுமோ திணிக்க முடியாது.

நான் இளையராஜாவின் இசைக்கு அடிமையோ.. அல்லது அவரின் இசையாலோ வளர்ந்தவன் அல்ல. நான் வளர்கின்ற காலத்தில்.. தாயகத்தில் கண்ணன்.. சிட்டு...போன்றவர்களும்.. தமிழகத்தில்.. தேவா.. ரகுமான் தான் முன்னணியில் இருந்தனர். இளையராஜா பற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை. அவரின் இசையும் அவசியம் இல்லை. அப்படி இருக்க.. நான் ஏன் அவரைப் பற்றிக் கவலைப்படனும்..! என்னைப் பொறுத்த வரை நான் எல்லோரின் இசையையும் ரசிப்பேன். அது ஆங்கில அல்பங்களில் இருந்தாலும் சரி.. சினிமாவில் இடம்பெற்றாலும் சரி.. தாயகப் பாடல்களில் வந்தாலும் சரி..!

என்னைப் பொறுத்த வரை இளையராஜாவே அவசியமில்லை என்கின்ற போது.. அவரின் மீது காழ்புணச்சி என்பது எப்படி வரும்.. சும்மா சும்மா எல்லாம் காழ்ப்புணர்ச்சி வருமோ..??!

என்னுடைய ஆதங்கம்.. கார்த்திகையை.. மாவீரர்களின் நினைவேந்தல் மாதமல்ல.. கார்த்திகை 27 மட்டுமே அதற்குரிய நாள் என்று உங்களைப் போன்றவர்கள் போட்டுள்ள குறுகிய வட்டத்தின் மீது தான்.

அது சுத்தப் பொய். கார்த்திகை முழுவதும்.. வீதி வளைவுகளும்.. சிரமதானங்களும்.. மாவீரர் குடும்ப சந்திப்புக்களும்.. நிகழ்வதோடு.. சந்திகள் தோறும் விசேட பந்தல்களும் அமைக்கப்படும்.

எங்கள் பள்ளிக்கூடத்திலும் கூட அப்படி அமைப்போம். மாவீரர் வாரத்துக்கு முன்னரே அவை அமைக்கப்பட்டு விடும்.

அப்படி.. தாயகத்தில்.. மாவீரர் நினைவேந்தலுக்குரிய.. அவற்றிற்கான ஏற்பாடுகளுக்குரிய மாதமாக இருக்கக் கூடிய.. கார்த்திகையை.. சில ஆயிரம் பேரின் களியாட்டத்திற்கும்.. வியாபாரத்திற்கும்.. எதிரிகளின் ஊடுருவலுக்கும்.. விட்டுக் கொடுக்கக் கூடிய மக்கள் எப்படி ஒரு விடுதலையை தமதாக்க முடியும் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் இந்த ஆக்கம்.

அதை நீங்கள் காழ்ப்புணர்ச்சி என்று வரையறுக்க விரும்பினால் அல்லது இன்னும் சிலர் சொல்வது போல பிழைப்புவாதம் என்று சொல்ல விரும்பினால் சொல்லிவிட்டுப் போங்கள். எனக்கு அதைப்பற்றி அக்கறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை..!

தலைவரும் போராளிகளும் இருக்கும் போது ஒரு கோலம்.. இல்லை என்றதும் இன்னொரு கோலம் போட தாயகம்.. கடந்த 35 வருடமா தெருக்கூத்துப் போடல்ல. பெரும் உயிர் தியாகங்கள்.. சொத்தழிவுகள்.. இடம்பெயர்வுகள் கொண்ட விடுதலைப் போராட்டமே நடத்தினது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள் கனடாவுக்கு வராமல்.. தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு.. உங்கள் குடும்ப உறவுகளை தொலைத்துவிட்டு இருப்பின்.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்று.. சினிமா இசை மழையில் நனைவீர்களா..??? அல்லது ஏக்கங்கள் மிகுதியாக.. உறவுகளைத் தேடுவீர்களா..??! நீங்களும் தாயகத்தில் பிறந்த ஆக்கள் தானே. சிந்தித்துப் பாருங்கோ... அங்க இருக்கிறதா.. அப்ப புரியும்.. எது காழ்ப்புணர்ச்சி எது அநாவசிய ஆடம்பரம் என்பது..! எதற்கு என்ன நோக்கத்தில் நீங்கள் இவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று..????! அப்பவும் உங்கட மனச்சாட்சி உங்களை உறுத்தல்லைன்னா.. நீங்கள் போடுவது வெளி வேசம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நெடுக்ஸ்....

இந்தக் கவிதையில், மாவீரர்களை உயர்த்துவது என நினைத்துக்கொண்டு இளையராசா மீதான உங்கள் (அல்லது ஒரு சிலரின்) தனிப்பட்ட கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். அதாவது கவிதையின் தீம் (Theme) மாவீரர் புகழ் அல்ல இளையராசா எதிர்ப்பு. இது மாவீரர்களை வைத்து உங்கள் கருத்தியலைத் திணிக்கும் பிழைப்புவாதம்.

காவாலி, நீங்கள் நெடுக்ஸ்சை... தவறாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதியுள்ளீர்கள் என்பது, எனது அபிப்பிராயம்.

உதாரணத்துக்கு... நெடுக்ஸ்சின்... பெயரையும், இசைக்கலைஞனின் (முன்னாள் பெயர் டங்குவார்) பெயரையும் பார்த்தோமானால்...

இருவருமே... தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதில்... எள்ளளவு சந்தேக‌மேயில்லை.

நெடுக்ஸ் கார்த்திகை மாத‌த்தில்... இந்த‌ இசை நிக‌ழ்ச்சி வேண்டாமென்றார். அத்துட‌ன்... அவ‌ரும் இளைய‌ராஜாவின் ர‌சிக‌னே. மாவீரர் மாத‌த்தில்... எந்த‌வித‌மான‌.. இனிய‌ பொளுது க‌ருத்துக்க‌ளை இடுவ‌தில்லை என்றும்... ஒரு திரி ஆர‌ம்பித்த‌தை நீங்க‌ள் க‌வ‌னிக்க‌வில்லைப் போலும்.

இளையராஜாவின் மறு உருவம் யாழ்கள் இசை... நுழைவுச்சீட்டை வாங்கி, விட்டு... யோசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் இளைய‌ராஜாவுக்காக‌வே... யாழ்க‌ள‌த்தில் ஒரு திரி ஆர‌ம்பித்து.... ப‌ல‌கால‌மாக‌.. இசைஞானியின் பாட‌ல்க‌ளை ர‌சித்து, இணைத்து... ம‌கிழ்ச்சி கொள்ப‌வ‌ர்.

இப்ப‌டியிருக்க‌... அதில், வியாபார‌மோ... இளைய‌ராஜா எதிர்ப்பு என்ற‌ வாத‌மோ... ஏற்புடைய‌த‌ல்ல‌.

ஈழ‌த்த‌மிழ‌னுக்கு முத‌லில் மாவீர‌ர் தான்... அத‌ன் பின்பே.. மிச்ச‌ம் எல்லாம் :) .

ஈழ‌த்த‌மிழ‌னுக்கு முத‌லில் மாவீர‌ர் தான்... அத‌ன் பின்பே.. மிச்ச‌ம் எல்லாம் :) .

[size=4]எமக்கு ஒன்று ஒரு கொள்கை இல்லை இலட்சியம் இல்லாவிட்டால் நாம் பலவீனமானவர்களாக எதிரிகளால் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவோம்.[/size]

உணர்வுரீதியான... ஆழ் மன ரீதியான தேசம், தெசியம், மாவீரம், மாவீரர்கள் குறித்த நேசம் இல்லாதவர்களை நாம் வற்புறுத்துவதாலோ அல்ல திரும்ப திரும்ப தெளிவு படுத்துவதாலோ சிறிது கூடப் பலன் இல்லை.

நான் வாழ, என் குடும்பம் வாழ , என் சகோதரியின் மானங் காக்க தங்களை மரணத்தின் வாசலில் நிறுத்தி, கட்டாயத்தின் பேரால் அல்லது, கடமையின் பேரால் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களே மாவீரகள் எனும் உணர்வு இல்லாவதர்கள் பிறர் கூறுவதைக் கேட்கவா போகிறார்கள்?

உணர்வு உள்ளவர்கள் இல்லாதாரை சாடுவது, அல்லது, அவர்களை வெறுப்பது, அல்லது அவரவர் செயல்களை நகைப்பது தவறு. போராட்டம் என்பது ஒட்டு மொத்த தமிழனுக்காக. எனது சகோதரங்கள் போராடி மாவீரர் ஆனது ஒட்டு மொத்த தமிழினத்துக்காக... உணர்வு உள்ளவர்களுக்கு

மாத்திரமோ அல்லது ஒரு பிரிவுக்கோ அல்ல.

Edited by இசை ஆர்வலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27 மாவீரர் நினைவுக் குழந்தை என்றால்.. கார்த்திகை மாதம் அதனைப் பெற்றெடுக்கும் தாய் ஆகும்..! தாயைப் புறக்கணித்து.. சீரழித்து.. குழந்தை மட்டும் தான்.. வேண்டும் என்பது சரியா..???! சிந்தியுங்கள் மக்களே..!

(இது திணிப்பல்ல... சிந்தனைக்கு..!)

நன்றி FB

[size=1]நியானி: இணைத்த படம் நீக்கம்[/size]

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.