Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விகடனின் பதில் (போராளி இன்று பாலியல் தொழிலாளி ஆன கட்டுரைக்குரிய எதிர்வினைகளுக்கான பதில்)

Featured Replies

வணக்கம்!

ஆசிரியர்

ழம் - நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம்.

லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின... நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

p6.jpgதமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட விகடனின் பயணம், இன்றைய ஈழப் போராட்டம் வரை... அடக்கப்பட்ட மக்களின் குரலாகவே என்றென்றும் இருக்கும்.

சிங்களப் பேரினவாதம் தீவிரம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய மூன்று தமிழர்கள் சந்தித்த துயரத்தைப் பதிவுசெய்ததில் இருந்து, இன்று வரை ஈழத் தமிழ் மக்களுடைய துயரங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது விகடன்.

நான்காவது ஈழப் போர் என்றும் இறுதி யுத்தம் என்றும் சொல்லப்பட்ட 2007 - 2009 காலகட்டம் மிகக் கொடூரமானது. 'அங்கு நடக்கும் அவலங்களை உலகெங்கும் உரக்கச் சொல்ல யாராவது இல்லையா?’ என்பதே அப்போது எல்லோரின் ஆதங்கமும்... 'ஈழத்தைப் பார்க்காதே, ஈழம்பற்றிப் பேசாதே, ஈழம்பற்றி எழுதாதே’ என்று அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் காலத்திலேகூட, துயர் மிகுந்த ஈழத் தமிழ் மக்களின் கண்ணீரை உலகத் தமிழர்களின் வாசல்களில் கொண்டுவந்து கொட்டியது விகடன் குழுமம்தான்.

ந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காமல், விகடன் குழுமம் எழுதிய வீரியமான எழுத்துகள், மத்திய - மாநில ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தன. அந்த யுத்தத்தின் ஒவ்வோர் அசைவையும் விகடன் வெளியிட்டது. போர் முற்றுப்பெற்றதாக இலங்கை அரசு அறிவித்த பின்னால், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்துவைக்கப்பட்டதையும், சரண் அடைந்த போராளிகள் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்யப்பட்டதையும், அங்கு இருந்த தமிழ் மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு தவித்ததையும் தொடர்ந்து பதிவுசெய்தது விகடன் மட்டும்தான். இன்றைக்கும் உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே நிறுத்தப்பட வேண்டும் என்ற செய்திகளை வெளியிட்டுவருகிறோம். இவற்றின் தொடர்ச்சி ஆகத்தான் வித்யா ராணியின் பேட்டியும் இடம்பெற்றது.

ஆயிரமாயிரம் துயரங்களில் ஒரு ரத்த சாட்சிதான், வித்யா ராணி. அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்த பிறகுதான், அதை வெளியிடுவதற்கு முடிவுசெய்தோம். பொருளாதாரத் துன்பம் மட்டும் அல்ல; உயிருக்கே அச்சுறுத்தலான சூழ்நிலையில் இருக்கும் அவருடைய அடையாளத்தைச் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில், அவருடைய அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு எடுத்தோம். தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகத்தின் மூலமாக, ஈழத்தின் இப்போதைய தமிழ் சமூகத்தின் நிலைமையை அந்த சகோதரி கண்ணீருடன் விவரித்தார். வளையல் தாங்கிய வளைக்கரங்களில் ஆயுதம் தரித்து, எதிரியை அவனுடைய கோட்டைக்குள் சென்று சந்தித்த துணிச்சல் பெண்ணான நம் சகோதரி, 2009 மே மாதத்தில் இருந்து, என்ன ஆனார் என்பதே அந்தப் பேட்டி.

பேட்டியைப் படித்ததும் இரண்டு விதமான எதிர்வினைகள் விகடனுக்கு வந்தன. ''போர் நடத்திக் கொன்றவர்கள்... இப்போதும் எம் மக்களை அணுஅணுவாகக் கொல்கிறார்களே! அந்த சகோதரிக்கு எல்லா உதவிகளும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்கள் அவருக்கு ரத்த சொந்தங்களாக இருக்கும்போது, ஒரு சகோதரி பாலியல் தொழில் செய்யும் பாவம் நம்மைத்தான் வந்து சேரும்'' என்று மனம் உருகிக் கடிதங்கள் எழுதிய, தொலைபேசிக் கதறிய, உதவிகள் செய்யத் துடித்த தமிழ் மக்கள் ஏராளம். இன்னொரு பக்கம், ''இப்படி ஒரு பேட்டியை விகடன் வெளியிட்டு இருக்க வேண்டுமா? 'ஈழப் போர் முடிந்துவிட்டது. இனிமேல் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது’ என்ற கருத்தாக்கத்தை மகிந்த ராஜபக்ஷே உருவாக்க நினைக்கிறார். அதற்கு அடித்தளம் இடுவதுபோல இந்தப் பேட்டி அமைந்துவிட்டது'' என்று இன்னொரு சாராரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.

p6a.jpgவித்யா ராணி அந்தப் பேட்டியில் கூறி இருப்பவை துக்கப்பட்டு நிற்கும் ஒரு தனி மனுஷியின் அவலக் குரல். தன் இனத்துக்காகத் துப்பாக்கி ஏந்திய நாள் முதல், ஆயுதங்களைக் கைவிட்டு, ஆதரவற்றுக்கிடக்கும் இந்த நாள் வரை நடந்து இருப்பதைத்தான் அவர் பகிர்ந்துகொண்டார். அதைச் சொல்வதற்கான அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.

எல்லா இரவும் விடியும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு கொடிய இரவைக் கடக்கும் கண்ணீரை, அந்தக் காயங்களின் கதறல்களை மறுதலிப்பது... அநியாயம் நண்பர்களே. கடந்த காலத் தோல்விகளில் இருந்து பாடம் படிக்காமல், எதிர்கால வெற்றி என்றைக்கும் சாத்தியமாகாது என்பதே நிதர்சனம்.

குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார்.

இந்த யதார்த்தங்களையும் உணரத் தவறினால், இலங்கையில் மிச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களை இன்னும் இன்னும் பேராபத்துகள் சூழும் என்பதுதான் அந்த சகோதரியின் அச்சத்தின் வெளிப்பாடு.

எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துகளையும் மக்கள் மன்றத்தில், இதய சுத்தியோடு என்றென்றும் விகடன் பகிரும். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயங்களைப் பேச விகடன் எப்போதும் களம் தரும் என்பதற்கான சாட்சி, இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே!

அன்புடன்

- ஆசிரியர்

நன்றி: ஆனந்த விகடன்

நேற்று தாங்கள் செய்தவற்றைப் பட்டியலிட்டு இன்று செய்த துரோகத்தை நியாயப்படுத்துகிறது விகடன். கருணாநிதி செய்யும் அதே கேவலமான அரசியலை இன்று விகடனும் செய்யத் தலைப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதற்கு பலர் முன்வந்ததாக விகடன் கூறுகின்றது. ஆளை இன்னார் என்று விகடன் இனங்காட்டத்தேவையில்லை. ஆனால், கிடைக்கும் உதவியைப்பெற்று பாதிக்கப்பட்டவர் நிரந்தரமாக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஏதாவது வழியை விகடன் ஏற்படுத்திக்கொடுக்கலாமே?

ஒருவரது தனிப்பட்ட இடர்களை இவ்வளவு தூரம் விபரித்துவிட்டு "அவர் தொடர்ந்தும் பாலியல் தொழிலாளியாக வாழ்வதற்கு தீர்மானித்துள்ளார்" நாம் இனி எமது வேலையைப்பார்ப்போம் எனும் தொனியில் எழுதி பிரச்சனையை அரைகுரையாக விட்டுச்செல்வது சரியாகப்படவில்லை.

உதவ முன்வருபவர்களின் உதவியைப்பெற்று குறிப்பிட்ட பெண் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு விகடன் குழு உதவுமா?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

விகடனில் சொல்லப்பட்ட கதை பொய்யாக இருக்கவேண்டுமென்றில்லை. ஏனென்றால் பல முன்னால்ப் பெண்போராளிகள் இராணுவத்தாலும் துணை இராணவக் குழுக்கலாலும் தொடர்ச்சியான பாலையல் வன்புணர்வுகளுக்கும், சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்பது நிதர்சனம். விசாரணைகள், பொலீஸ் நிலைய கைய்யொப்பங்கள் என்கிற போர்வையில் இந்த முன்னால் பெண்போராளிகள் தினம் தினம் சிங்கள மிருகங்களினதும், துணை இராணுவக் குழுக்களினது பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியே வருகின்றனர். ஆனால் விகடன் எழுதுவதுபோல எந்தப் போராளியும் வாழ வேறு வழிகள் இருந்தும் பாலியல் தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று துளியளவும் எண்ண முடியவில்லை.

இங்கே விகடன் சொல்ல நினைப்பது, ஒட்டுமொத்தப் பெண்போராளிகளும் இதையே செய்கிறார்கள் அல்லது செய்யப்போகிறார்கள் என்பதையே. இது மிகவும் திட்டமிட்ட முறையில் ஒரு சமூகத்தையும் அதன் போராட்டத்திற்கான எழுச்சியையும் மழுங்கடிக்கும் நடவடிக்கையே.

அப்படி உண்மையான கரிசணை இருந்தால், அந்தப் பெண்போராளிக்கு தனது பத்திரிக்கை மூல பண உதவி செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாது, அந்தப் பெண்ணின் அவல வாழக்கையை தனது பத்திரிக்கையில் விற்றுப் பணம் சம்பாதிப்பதோடு அதன் கடமை முடிந்துவிட்டதாக விகடன் நினைக்கிறது. அதுமட்டுமல்லாமல், இனி அவர் பாலியல் தொழிலையே தொடரப்போகிறார் என்று கூறி தனது கடமையை முடிக்கிறது. இது, தமிழகத்தில் இப்படியானவர்களுக்கு உதவ விரும்புபவர்களைக் கூட, "நீங்கள் சும்மா இருங்கள், அவர்களே அதை விரும்பித்தான் செய்கிறார்கள்" என்னும் பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இறுதியாக விகடனும் தனது வர்க்கப் பத்திரிக்கைகள் வரிசையில் போய் நின்று தமிழினத்தை எள்ளி நகையாடுகிறது.

Edited by ragunathan

"குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார்.".

யுத்த காலத்திலாகட்டும் அதற்கு பின்னாகட்டும் எம்மவர் பலர் நிலை இதுதான் .இப்போ அங்கு உயிருடன் அல்லல்படுவர்களை விட மாவீரர்களில் தான் இவர்கள் கவனம் முழுக்க ,இது எமது இனத்திற்கு கிடைத்த சாபம் .இதற்குள் நாட்களா ? மாதங்களா ? என்ற சண்டை வேறு .நாட்களோ மாதங்களோ தமது அன்றாட சுகபோகங்களை ஒரு செக்கன் கூட இழக்க இவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை .

பத்திரிகை என்பது செய்திகளை காவி வருவதுதான் அதற்கு பரிகாரம் தேடுவது அல்ல .சற்றே மிகை படுத்தி சொற்பிரயோகங்கள் இருந்தாலும் யுத்தத்தின் பின் பல ஊடகங்களினால் சொல்லப்பட்ட விடயம் தான் இது .

யுத்த காலத்திலாகட்டும் அதற்கு பின்னாகட்டும் எம்மவர் பலர் நிலை இதுதான் .இப்போ அங்கு உயிருடன் அல்லல்படுவர்களை விட மாவீரர்களில் தான் இவர்கள் கவனம் முழுக்க

மாவீரர்களை நினைவுகூர்வதைக்கொண்டுபோய் எதனுடன் ஒப்பிடுகிறீர்கள்? மக்களிற்காக மண்ணிற்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசிப்பவர்களுக்குத்தான் மக்கள்மீது உண்மையான அக்கறையிருக்கும்.

உடம்பெல்லாம் விசத்துடன் அலையும் தங்களைப் போன்ற வேடதாரிகள் மக்கள்மேல் அக்கறையுள்ளதுமாதிரி நடித்து இன அடையாளங்களை சிதைப்பதற்குரிய சந்தர்பங்களுக்காக அலைவதை முழுநேர வேலையாகக் கொண்டவர்கள்.

விகடனின் எழுத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆபத்தானவையோ, அதைவிட பன்மடங்கு ஆபத்தானவர்கள்தான் தங்களைப் போன்றவர்கள்.

தமிழ்லீடர் ஆசிரியர் பீடக் குறிப்பு:

மீண்டும் மீண்டும் உண்மைக்குப் புறம்பான நியாயப்படுத்தலை முன்வைக்கத் துடிக்கும் விகடன் ஆசிரியருக்கு,

உடனடியாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கருத்துச் சொல்வதாகத் தெரிவித்திருக்கும் நீங்கள், ஏராளம் உறவுகள் உதவி செய்யத் துடிப்பதாகக் குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை மீட்டு ஒரு சுயமான தொழிலைச் செய்வதற்கான ஒரே ஏற்பாட்டினை ஏன் செய்திருக்க முடியாது? அல்லது உதவி செய்வதற்கு முன்வந்த உங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு தமிழக உறவினைக் கூட உங்கள் பார்வைக்கு நல்லவராகத் தெரியவில்லையா? பாதுகாப்பைச் சொல்லிக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை அதே நிலையில் விடுவதற்கு நீங்கள் முற்படுவதன் நோக்கம் என்ன?

இவ்வாறான மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு தமிழ்ப் பெண். உங்கள் தாயாக இருந்தால், உங்கள் மனைவியாக உங்கள் சகோதரியாக இருந்தால் நீங்கள் இவ்வாறான தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதிப்பீர்களா? சர்வதேசத்தின், தொண்டு நிறுவனங்களின் துணையுடன் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்கு உங்கள் குழுமத்திற்கோ வசதியில்லயா? அல்லது இருந்தும் சுவாரசியமாக எழுதுவதற்கு விடயம் கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா?

அவ்வாறு ஒரு நபர் இருந்தால் தானே உதவி செய்ய முடியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அப்பாவி வாசகர்கள் இது தொடர்பில் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவற்றினைக் குறிப்பிடுகின்றோம்.

அதனைவிடவும், தாயகத்தில் இன்னமும் உணவுக்கே வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடிந்தது? (ஈபிடிபியின் நம்பிக்கைக்கு உரியவரான உங்கள் கதாசிரியர் தற்போதும் பெங்களுரில் தான் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும்) பசிக்காக விபச்சாரம் குறித்த செய்யும் அவரிடம் தொலைபேசி வசதி இருக்குமா?

உங்கள் எழுத்தாளர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது பகிரங்கமான விடயம். அவர் ஒரு உணர்வுள்ள தமிழனாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு உதவி பெற்றுக்கொடுத்து அவரை மீட்டெடுக்க முயன்றாரா? அவர் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி ஒன்றையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

“பலபேர் பலதும் கதைப்பாங்கள் எண்டு எனக்கு முதலே தெரியும் தம்பி... அதுதான் என்னத்துக்குப் பேட்டி எல்லாம் எண்டனான். இப்ப இதப் படிச்சுப்பிட்டு கத்துறவையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவைக்கு நான் பிச்சை எடுத்தா, பிரச்சினை இல்ல. ஆனா, நான் விபச்சாரம் செய்தா அது பிழையாமாம். இத யாரிட்ட சொல்லி நான் அழ? விடு தம்பி... நான் விபச்சாரியாவே இருந்திட்டுப் போறேன்!”

(குறித்த வசனத்திலேயே ஈழத்து பேச்சு மொழியும் தமிழகப் பேச்சு மொழியும் கலக்கப்பட்டிருக்கின்றது - இதற்குள் ஆசிரியரின் கற்பனை சிறகு விரித்திருப்பது புலனாகிறது)

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று விபச்சாரத்தை ஒரு இலகுவான விடயமாக ஒரு ஈழத்துப் பெண்ணும் எடுத்துக்கொள்ளமாட்டாள்.

உங்கள் கவனத்திற்கு,

உங்கள் சஞ்சிகைக்கான பேட்டியினைத் தயாரித்திருந்தவர், தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் தமிழகத்திலும் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளை கொச்சைப்படுத்தும் நோக்குடனேயே குறித்த பதிவினை மேற்கொண்டிருக்கின்றார். என்பதற்கான ஆதாரங்களை எமது ஆசிரியர் பீடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

செவ்வியின் தொடக்கத்திலேயே,

”உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்”

யாருடைய முகத்தில் அறைய பேட்டிக்குச் சம்மதித்தார் என்பதை எழுத்தாளர் விளக்க முடியுமா? பொதுவான செவ்வியாக இருந்தால் இந்த விடயத்தினை குறிப்பிட்டு உங்கள் செவ்வி தொடங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

ஒரு கற்பனையை எழுதிவிட்டு அதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைக் கொண்டு நியாயங்கற்பிக்க முயலவேண்டாம்..

உங்கள் சஞ்சிகையின் வியாபாரம் என்னும் சிறக்க வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

நன்றி

http://www.tamilleader.com/mukiaya/7373-2012-11-08-07-57-41.html

Edited by ஊர்பூராயம்

விகடன் இடத்தில் நான் இருந்திருந்தால்"வித்யாராணிக்கு விகடன் உதவி வழங்கி அவர் இப்பொழுது ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களால் மேலதிக விபரங்களை வழங்க முடியாது" என்று எழுதி பிரச்சனையை இலகுவாக முடித்திருப்பேன்.

இல்லாத வித்யாராணியை பேட்டி எடுக்க முடிகின்ற பொழுது, அவருக்கு ஒரு பெட்டிக் கடையை வைத்துக் கொடுக்க முடியாதா?

முட்டாள் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நடைபெறும் விவாதத்துக்கு வெளியே ஈழத்தில் நமது மக்கள் போராளிகள் குறிப்பாக நமது பெண்கள் பெண்போராளிகள் எதிர் நோக்கும் வறுமையும் சவால்களும் முடிவில்லாத துன்பியல் நாடகமாகவே தொடர்கிறது.

இலங்கையின்கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து செல்லும் பணவீக்கமும் விலைவாசியும் நிலமையை மேலும் மெலும் மோசமாக்கியுள்ளது. சில பெண்போராளிகள் பிச்சை எடுப்பதில் இருந்து விரும்பியோ விரும்பாமலோ இரானுவதினரை திருமணம் செய்வதுவரை நிகழ்ந்திருக்கி|றது.தமிழ் பகுதிகளில் என்றுமில்லாத அளவுக்கு தற்கொலை பிச்சை எடுத்தல் விபச்சாரம் போதைப் பழக்கம் என்பன அதிகரித்துள்ளது. இந்த அட்டவனைக்குள் எத்தனை பேர் போராளிகள் என்கிற விவாதம் இங்கு முக்கியமில்லை. நிலமை இப்படி இருக்கிறது. புலம் பெயார் தமிழர்கள் உண்மையாக அணிதிரண்டால் இந்த நிலமையை எப்பவோ கட்டுப்படுத்தி அகற்றி இருக்க முடியும்.ஆனால் நம்மத்தியில் அத்தகைய எழுச்சி இடம்பெரவில்லை.

வித்தியாரானி சம்பவம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால்ன் ஆனந்தவிகடன் இல்லாத ஒரு விவகாரம் தொடர்பாக எழுதியுள்ளது என்று சொல்வது சாத்தியமில்லை. கடந்த காலங்கலில் ஆனந்த விகடன் நமக்கு சாதகமான பத்திரிகையாக இருந்தது. எதிர்காலத்திலும் ஆனந்த விகடனின் ஆதரவு தொடர்ந்தும் எமக்கு அவசியம்.

நமக்குச் சாதகமான அமைப்புகலை பதிரிகைகளை எதிரியாக்குவதை புலம்பெயர்ந்த சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது எதிரிகள் விரும்பும் சூழலை மட்டுமே உருவாக்கும். ஒரு சில புலம் பெயர்ந்த தமிழர்கள் எஞ்சியிருக்கும் நன்பர்களையும் எதிரியாக்குவது ஈழத்தில் வாடும் மக்களின் துன்பத்தைதான் அதிகரிக்கும். ஆனந்த விகடன்மீது தாக்குதல் தொடுப்பது போன்ற வெறும் வாய்ச் சவடாலுக்குப் பதிலாக ஈழத்தில் துன்பப்படும் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்தோம் என்று புலம் பெயர்ந்த மக்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது.

தீவிரவாதம் பேசும்பலர் பலர் துன்பப் படும் மக்களைக் கண்டுகொள்வதில்லை. இத்தனைக்கும் சிலர் போருக்குகாக சேர்த்த பணத்தை கையகப் படுதி வைதிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. புலம் பெயர்ந்த பொது மக்கள் அவர்களை நிர்பந்தித்து போருக்காக சேர்த்த பணம் மற்றும் சொத்துக்களை வறுமைகோட்டின்கீழ் அல்லலுறும் ஈழத்து போராளிகளுக்கு கிடைக்கச் செய்வதற்காக போராடவேண்டும்.

ஆனந்த விகடன்மீது கோபப் படுவதற்க்குப் பதிலாக நாமெல்லாம் ஈழத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக தலைக்கு ஒரு டாலர் உதவ முன்வந்தாலே பெரிய காரியமாக இருக்கும்.

யாழ்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தினி போன்றவர்கள் நேசக்கரங்கள் நீட்டியுள்ளனர். இத்தகைய அமைப்புகளின் பெயர் முகவரியை செய்திகளை வெளியிடவும் விவாதிக்கவும் யாழ் தனிபகுதி ஒன்றை ஆரம்பிக்க வேணும் என கேட்டுக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரையும் இத்தகைய தொண்டு நிறுவனங்களுடன் இணைபதற்க்கு யாழ்க்கள தோழ தோழியர்கள் உதவ வேண்டும்.

ஆனந்த விகடனின் மட்டுமன்றி இந்தியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா உட்பட உலகடங்கிலும் வெளிவரும் ஈழத்தமிழருக்கு ஆதரவான பதிரிகைகலை யாழ் கலம் அணுகவேண்டும். இத்தகைய முயற்சிகளில் அவர்களது ஆதரவு நிச்சயம் எமக்குக் கிடைக்கும்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விகடனின் கட்டுரை புலிகளை கறைப்படுத்துகின்றதா என்றால் அது கூட இல்லை! சிங்களத்தின் அட்டூழியத்தை வெட்ட வெளிச்சம் ஆக்குகின்றது! மனிதாபிமானத்தின் பரிதாபத்திற்கு குரல் கொடுக்கின்றது!

இந்தக் கட்டுரையை விமர்சிப்பவர்கள் முன்னாள் போராளிகள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்பது பிரச்சினையா? இல்லை புலியின் பேருக்கு களங்கம் என்பது பிரச்சினையா?

கலைஞர் விசுவாசத்தை ஒத்த புலிவிசுவாசத்தின் விளைவா இந்த விமர்சனமுரண்பாடு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லீடர் ஆசிரியர் பீடக் குறிப்பு:

மீண்டும் மீண்டும் உண்மைக்குப் புறம்பான நியாயப்படுத்தலை முன்வைக்கத் துடிக்கும் விகடன் ஆசிரியருக்கு,

உடனடியாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கருத்துச் சொல்வதாகத் தெரிவித்திருக்கும் நீங்கள், ஏராளம் உறவுகள் உதவி செய்யத் துடிப்பதாகக் குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை மீட்டு ஒரு சுயமான தொழிலைச் செய்வதற்கான ஒரே ஏற்பாட்டினை ஏன் செய்திருக்க முடியாது? அல்லது உதவி செய்வதற்கு முன்வந்த உங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு தமிழக உறவினைக் கூட உங்கள் பார்வைக்கு நல்லவராகத் தெரியவில்லையா? பாதுகாப்பைச் சொல்லிக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை அதே நிலையில் விடுவதற்கு நீங்கள் முற்படுவதன் நோக்கம் என்ன?

இவ்வாறான மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு தமிழ்ப் பெண். உங்கள் தாயாக இருந்தால், உங்கள் மனைவியாக உங்கள் சகோதரியாக இருந்தால் நீங்கள் இவ்வாறான தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதிப்பீர்களா? சர்வதேசத்தின், தொண்டு நிறுவனங்களின் துணையுடன் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்கு உங்கள் குழுமத்திற்கோ வசதியில்லயா? அல்லது இருந்தும் சுவாரசியமாக எழுதுவதற்கு விடயம் கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா?

அவ்வாறு ஒரு நபர் இருந்தால் தானே உதவி செய்ய முடியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அப்பாவி வாசகர்கள் இது தொடர்பில் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவற்றினைக் குறிப்பிடுகின்றோம்.

அதனைவிடவும், தாயகத்தில் இன்னமும் உணவுக்கே வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடிந்தது? (ஈபிடிபியின் நம்பிக்கைக்கு உரியவரான உங்கள் கதாசிரியர் தற்போதும் பெங்களுரில் தான் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும்) பசிக்காக விபச்சாரம் குறித்த செய்யும் அவரிடம் தொலைபேசி வசதி இருக்குமா?

உங்கள் எழுத்தாளர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது பகிரங்கமான விடயம். அவர் ஒரு உணர்வுள்ள தமிழனாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு உதவி பெற்றுக்கொடுத்து அவரை மீட்டெடுக்க முயன்றாரா? அவர் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி ஒன்றையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

“பலபேர் பலதும் கதைப்பாங்கள் எண்டு எனக்கு முதலே தெரியும் தம்பி... அதுதான் என்னத்துக்குப் பேட்டி எல்லாம் எண்டனான். இப்ப இதப் படிச்சுப்பிட்டு கத்துறவையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவைக்கு நான் பிச்சை எடுத்தா, பிரச்சினை இல்ல. ஆனா, நான் விபச்சாரம் செய்தா அது பிழையாமாம். இத யாரிட்ட சொல்லி நான் அழ? விடு தம்பி... நான் விபச்சாரியாவே இருந்திட்டுப் போறேன்!”

(குறித்த வசனத்திலேயே ஈழத்து பேச்சு மொழியும் தமிழகப் பேச்சு மொழியும் கலக்கப்பட்டிருக்கின்றது - இதற்குள் ஆசிரியரின் கற்பனை சிறகு விரித்திருப்பது புலனாகிறது)

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று விபச்சாரத்தை ஒரு இலகுவான விடயமாக ஒரு ஈழத்துப் பெண்ணும் எடுத்துக்கொள்ளமாட்டாள்.

உங்கள் கவனத்திற்கு,

உங்கள் சஞ்சிகைக்கான பேட்டியினைத் தயாரித்திருந்தவர், தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் தமிழகத்திலும் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளை கொச்சைப்படுத்தும் நோக்குடனேயே குறித்த பதிவினை மேற்கொண்டிருக்கின்றார். என்பதற்கான ஆதாரங்களை எமது ஆசிரியர் பீடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

செவ்வியின் தொடக்கத்திலேயே,

”உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்”

யாருடைய முகத்தில் அறைய பேட்டிக்குச் சம்மதித்தார் என்பதை எழுத்தாளர் விளக்க முடியுமா? பொதுவான செவ்வியாக இருந்தால் இந்த விடயத்தினை குறிப்பிட்டு உங்கள் செவ்வி தொடங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

ஒரு கற்பனையை எழுதிவிட்டு அதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைக் கொண்டு நியாயங்கற்பிக்க முயலவேண்டாம்..

உங்கள் சஞ்சிகையின் வியாபாரம் என்னும் சிறக்க வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

நன்றி

http://www.tamillead...8-07-57-41.html

ஒரு காலத்தில் தமிழ் கூட்டணியின் மேடைப் பேச்சில் "சிங்களவன் தோலில் செருப்புத்தைப்போம்" என்று கக்குவார்கள். அடுத்தனாள் அதை சொன்னவரே உல்லாசவிருந்தில் சிங்களவரை அணைத்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்! இதே போக்கில் சில பத்திரிகைகள் தமது தமது தமிழ் பற்றை உயத்திக் காட்டுவதற்காக எத்தனையே நியாயங்களை சொந்த நலனுக்காக உதைக்க வேண்டி இருக்கின்றது.

இந்த ஆசிரியர் ஈழத்தில் புலிப்பெண்கள் விபச்சாரம் செய்யவில்லை என்கின்றாரா?

இல்லை தமிழ் பெண்கள் விபசாரம் செய்யவில்லை ஏன்கின்றாரா?

பெண்களின் விபச்சாரம் ஈழத்தில் நடப்பது உண்மை என்றால் இந்த ஆசிரியர்பீடத்தின் பொய்மை தோல் உரிக்கப்பட போதுமான அடிப்படை அல்லவா? அபோது அது பசிக்காக வில்லை ருசிக்காக என்று பாட்டை மாற்றுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் உக்கிரமாக நடந்த வேளையிலும் ஆனந்தவிகடன் தொடராக எழுதினதும் தமது பத்திரிக்கை அதிகமாக விற்பனையாக வேண்டும் என்பதற்காகவே ............ எப்போதும் ஈழத்தில் நடந்த போராட்டத்தை வைத்து ஈழத்தில் உள்ளவர்கள் பயன் அடைந்தார்களோ இல்லையோ ஆனந்தவிகடன் நிறைய பயன் அடைந்திருக்கின்றது, இப்போதும் அந்த நோக்கத்துடனேயே இவ்வாறன கட்டுரைகளை செய்திகளை பிரசுரித்து வருகின்றது இதன் மூலம் ஏற்படும் சாதகபாதகங்கள் பற்றி ஆனந்தவிகடன் நிர்வாகத்தினருக்கு கவலை இல்லை தங்களுக்கு பணம் கிடைத்தால் போதும் இதுதான் இந்த ஈனர்களிம் முழுநோக்கம்.

ஒரு பத்திரிகைக்கு வருமானம் அதன் பிரதான நோக்கங்களில் ஒன்று; ஆனால் அதுதான் முதன்மையான நோக்கம் என்றால் எந்தவகையான அடிப்படையான எழுத்து வியாபாரத்தில் முதன்மையாக சவாரி செய்கின்றதோ அதே வகையான அடிப்படையே தமிழ்நாட்டு அனைத்து பத்திரிகைகளுக்கும் இயல்பாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்லாமல் தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகள் ஏன் எமது அவலத்தை இரசிப்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்கி இருக்கின்றது!

விகடனின் முன்னாள் பின்னாள் என்ற வகையே வேண்டாம் இந்தக் கட்டுரையில் மனிதாபிமானத்தின் உச்சந்தலை உடைக்கப்படும் உண்மை உல்கறிசய் செய்யப்படும் ஒரு தேவையை புலிப்பாசத்திற்கு தும்மல் தரும் ஒரு சிறு கறுப்பு தடைபோடுகின்றது, தன் பொறுப்பை உணராமல் விடுகின்றது என்றால் இத்தகைய புலிப்பாசம் ஈழத்திற்கு செய்யும் கேட்டைவிடவா புலிஎதிர்ப்பாளர் கேடாக முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

p6a.jpg

இந்த வரிகளில் வரும்

இப்ப இதப்படிச்சுப்பிட்டு ........... என ஈழத்தமிழர் பேசும் தமிழல்ல.

மீண்டும் மீண்டும் ஏதோ உதைக்குது............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வரிகளில் வரும்

இப்ப இதப்படிச்சுப்பிட்டு ........... என ஈழத்தமிழர் பேசும் தமிழல்ல.

மீண்டும் மீண்டும் ஏதோ உதைக்குது............

பெண்டாட்டி பிடிக்கவில்லை என்றால் சொல்ல மயிர்கூட காரணமாகும்!

விகடனின் ”நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!” என்ற தலைப்பில் கற்பனைகளை இட்டுக்கட்டி வடிவமைக்கப்பட்ட பேட்டி ஈபிடிபியைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டிருந்ததை தமிழ்லீடர் உட்பட பல தமிழ் தேசிய ஊடகங்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தன. ஆயினும் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் தமது செயலை நியாயப்படுத்தி பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

ஆனந்த விகடனின் ஆசிரியர் பதிலும் தமிழ்லீடரின் குறிப்பும் வருமாறு:

விகடனின் ஆசிரியர் கட்டுரை

ஈழம் – நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம்.

லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின… நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட விகடனின் பயணம், இன்றைய ஈழப் போராட்டம் வரை… அடக்கப்பட்ட மக்களின் குரலாகவே என்றென்றும் இருக்கும்.

சிங்களப் பேரினவாதம் தீவிரம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய மூன்று தமிழர்கள் சந்தித்த துயரத்தைப் பதிவுசெய்ததில் இருந்து, இன்று வரை ஈழத் தமிழ் மக்களுடைய துயரங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது விகடன்.

நான்காவது ஈழப் போர் என்றும் இறுதி யுத்தம் என்றும் சொல்லப்பட்ட 2007 – 2009 காலகட்டம் மிகக் கொடூரமானது. ‘அங்கு நடக்கும் அவலங்களை உலகெங்கும் உரக்கச் சொல்ல யாராவது இல்லையா?’ என்பதே அப்போது எல்லோரின் ஆதங்கமும்… ‘ஈழத்தைப் பார்க்காதே, ஈழம்பற்றிப் பேசாதே, ஈழம்பற்றி எழுதாதே’ என்று அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் காலத்திலேகூட, துயர் மிகுந்த ஈழத் தமிழ் மக்களின் கண்ணீரை உலகத் தமிழர்களின் வாசல்களில் கொண்டுவந்து கொட்டியது விகடன் குழுமம்தான்.

எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காமல், விகடன் குழுமம் எழுதிய வீரியமான எழுத்துகள், மத்திய – மாநில ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தன. அந்த யுத்தத்தின் ஒவ்வோர் அசைவையும் விகடன் வெளியிட்டது. போர் முற்றுப்பெற்றதாக இலங்கை அரசு அறிவித்த பின்னால், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்துவைக்கப்பட்டதையும், சரண் அடைந்த போராளிகள் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்யப்பட்டதையும், அங்கு இருந்த தமிழ் மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு தவித்ததையும் தொடர்ந்து பதிவுசெய்தது விகடன் மட்டும்தான். இன்றைக்கும் உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே நிறுத்தப்பட வேண்டும் என்ற செய்திகளை வெளியிட்டுவருகிறோம். இவற்றின் தொடர்ச்சி ஆகத்தான் வித்யா ராணியின் பேட்டியும் இடம்பெற்றது.

ஆயிரமாயிரம் துயரங்களில் ஒரு ரத்த சாட்சிதான், வித்யா ராணி. அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்த பிறகுதான், அதை வெளியிடுவதற்கு முடிவுசெய்தோம். பொருளாதாரத் துன்பம் மட்டும் அல்ல; உயிருக்கே அச்சுறுத்தலான சூழ்நிலையில் இருக்கும் அவருடைய அடையாளத்தைச் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில், அவருடைய அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு எடுத்தோம். தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகத்தின் மூலமாக, ஈழத்தின் இப்போதைய தமிழ் சமூகத்தின் நிலைமையை அந்த சகோதரி கண்ணீருடன் விவரித்தார். வளையல் தாங்கிய வளைக்கரங்களில் ஆயுதம் தரித்து, எதிரியை அவனுடைய கோட்டைக்குள் சென்று சந்தித்த துணிச்சல் பெண்ணான நம் சகோதரி, 2009 மே மாதத்தில் இருந்து, என்ன ஆனார் என்பதே அந்தப் பேட்டி.

பேட்டியைப் படித்ததும் இரண்டு விதமான எதிர்வினைகள் விகடனுக்கு வந்தன. ”போர் நடத்திக் கொன்றவர்கள்… இப்போதும் எம் மக்களை அணுஅணுவாகக் கொல்கிறார்களே! அந்த சகோதரிக்கு எல்லா உதவிகளும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்கள் அவருக்கு ரத்த சொந்தங்களாக இருக்கும்போது, ஒரு சகோதரி பாலியல் தொழில் செய்யும் பாவம் நம்மைத்தான் வந்து சேரும்” என்று மனம் உருகிக் கடிதங்கள் எழுதிய, தொலைபேசிக் கதறிய, உதவிகள் செய்யத் துடித்த தமிழ் மக்கள் ஏராளம். இன்னொரு பக்கம், ”இப்படி ஒரு பேட்டியை விகடன் வெளியிட்டு இருக்க வேண்டுமா? ‘ஈழப் போர் முடிந்துவிட்டது. இனிமேல் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது’ என்ற கருத்தாக்கத்தை மகிந்த ராஜபக்ஷே உருவாக்க நினைக்கிறார். அதற்கு அடித்தளம் இடுவதுபோல இந்தப் பேட்டி அமைந்துவிட்டது” என்று இன்னொரு சாராரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.

வித்யா ராணி அந்தப் பேட்டியில் கூறி இருப்பவை துக்கப்பட்டு நிற்கும் ஒரு தனி மனுஷியின் அவலக் குரல். தன் இனத்துக்காகத் துப்பாக்கி ஏந்திய நாள் முதல், ஆயுதங்களைக் கைவிட்டு, ஆதரவற்றுக்கிடக்கும் இந்த நாள் வரை நடந்து இருப்பதைத்தான் அவர் பகிர்ந்துகொண்டார். அதைச் சொல்வதற்கான அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.

எல்லா இரவும் விடியும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு கொடிய இரவைக் கடக்கும் கண்ணீரை, அந்தக் காயங்களின் கதறல்களை மறுதலிப்பது… அநியாயம் நண்பர்களே. கடந்த காலத் தோல்விகளில் இருந்து பாடம் படிக்காமல், எதிர்கால வெற்றி என்றைக்கும் சாத்தியமாகாது என்பதே நிதர்சனம்.

குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார். இந்த யதார்த்தங்களையும் உணரத் தவறினால், இலங்கையில் மிச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களை இன்னும் இன்னும் பேராபத்துகள் சூழும் என்பதுதான் அந்த சகோதரியின் அச்சத்தின் வெளிப்பாடு.

எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துகளையும் மக்கள் மன்றத்தில், இதய சுத்தியோடு என்றென்றும் விகடன் பகிரும். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயங்களைப் பேச விகடன் எப்போதும் களம் தரும் என்பதற்கான சாட்சி, இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே!

அன்புடன்

-ஆசிரியர்

ஆனந்த விகடன்

தமிழ்லீடர் ஆசிரியர் பீடக் குறிப்பு:

மீண்டும் மீண்டும் உண்மைக்குப் புறம்பான நியாயப்படுத்தலை முன்வைக்கத் துடிக்கும் விகடன் ஆசிரியருக்கு,

எந்தச் சந்தர்ப்பத்திலும் கடந்தகாலத்தில் நீங்கள் ஆற்றிய பணி தொடர்பில் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் நீண்டகால ஊடக அனுபவம் வாய்ந்தவர் என்ற வகையில் நீங்கள் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு நபரின் பொய்யான விடயத்தினை நியாயப்படுத்துவதற்கு எடுத்திருக்கின்ற நேர்மைக்கு மாறான செயற்பாட்டினை ஏற்கமுடியாது.

உங்கள் பதிலின் அடிப்படையில், உடனடியாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கருத்துச் சொல்வதாகத் தெரிவித்திருக்கும் நீங்கள், ஏராளம் உறவுகள் உதவி செய்யத் துடிப்பதாகக் குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை மீட்டு ஒரு சுயமான தொழிலைச் செய்வதற்கான ஒரே ஏற்பாட்டினை ஏன் செய்திருக்க முடியாது? அல்லது உதவி செய்வதற்கு முன்வந்த உங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு தமிழக உறவினைக் கூட உங்கள் பார்வைக்கு நல்லவராகத் தெரியவில்லையா? பாதுகாப்பைச் சொல்லிக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை அதே நிலையில் விடுவதற்கு நீங்கள் முற்படுவதன் நோக்கம் என்ன?

இவ்வாறான மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு தமிழ்ப் பெண். உங்கள் தாயாக இருந்தால், உங்கள் மனைவியாக உங்கள் சகோதரியாக இருந்தால் நீங்கள் இவ்வாறான தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதிப்பீர்களா? சர்வதேசத்தின், தொண்டு நிறுவனங்களின் துணையுடன் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்கு உங்கள் குழுமத்திற்கோ வசதியில்லயா? அல்லது இருந்தும் சுவாரசியமாக எழுதுவதற்கு விடயம் கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா?

அவ்வாறு ஒரு நபர் இருந்தால் தானே உதவி செய்ய முடியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அப்பாவி வாசகர்கள் இது தொடர்பில் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவற்றினைக் குறிப்பிடுகின்றோம்.

அதனைவிடவும், தாயகத்தில் இன்னமும் உணவுக்கே வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடிந்தது? (ஈபிடிபியின் நம்பிக்கைக்கு உரியவரான உங்கள் கதாசிரியர் தற்போதும் பெங்களுரில் தான் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும்) பசிக்காக விபச்சாரம் குறித்த செய்யும் அவரிடம் தொலைபேசி வசதி இருக்குமா?

உங்கள் எழுத்தாளர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது பகிரங்கமான விடயம். அவர் ஒரு உணர்வுள்ள தமிழனாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு உதவி பெற்றுக்கொடுத்து அவரை மீட்டெடுக்க முயன்றாரா? அவர் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்வ

தற்கு எடுத்துக்கொண்ட முயற்சி ஒன்றையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

“பலபேர் பலதும் கதைப்பாங்கள் எண்டு எனக்கு முதலே தெரியும் தம்பி… அதுதான் என்னத்துக்குப் பேட்டி எல்லாம் எண்டனான். இப்ப இதப் படிச்சுப்பிட்டு கத்துறவையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவைக்கு நான் பிச்சை எடுத்தா, பிரச்சினை இல்ல. ஆனா, நான் விபச்சாரம் செய்தா அது பிழையாமாம். இத யாரிட்ட சொல்லி நான் அழ? விடு தம்பி… நான் விபச்சாரியாவே இருந்திட்டுப் போறேன்!”

(குறித்த வசனத்திலேயே ஈழத்து பேச்சு மொழியும் தமிழகப் பேச்சு மொழியும் கலக்கப்பட்டிருக்கின்றது – இதற்குள் ஆசிரியரின் கற்பனை சிறகு விரித்திருப்பது புலனாகிறது)

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று விபச்சாரத்தை ஒரு இலகுவான விடயமாக ஒரு ஈழத்துப் பெண்ணும் எடுத்துக்கொள்ளமாட்டாள்.

உங்கள் கவனத்திற்கு,

உங்கள் சஞ்சிகைக்கான பேட்டியினைத் தயாரித்திருந்தவர், தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் தமிழகத்திலும் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளை கொச்சைப்படுத்தும் நோக்குடனேயே குறித்த பதிவினை மேற்கொண்டிருக்கின்றார். என்பதற்கான ஆதாரங்களை எமது ஆசிரியர் பீடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

செவ்வியின் தொடக்கத்திலேயே,

”உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்”

யாருடைய முகத்தில் அறைய பேட்டிக்குச் சம்மதித்தார் என்பதை எழுத்தாளர் விளக்க முடியுமா? பொதுவான செவ்வியாக இருந்தால் இந்த விடயத்தினை குறிப்பிட்டு உங்கள் செவ்வி தொடங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

ஒரு கற்பனையை எழுதிவிட்டு அதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைக் கொண்டு நியாயங்கற்பிக்க முயலவேண்டாம்..

உங்கள் சஞ்சிகையின் வியாபாரம் என்னும் சிறக்க வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

நன்றி

தமிழ்லீடர்

http://thaaitamil.com/?p=37852

பத்திரிகை என்பது செய்திகளை காவி வருவதுதான் அதற்கு பரிகாரம் தேடுவது அல்ல .சற்றே மிகை படுத்தி சொற்பிரயோகங்கள் இருந்தாலும் யுத்தத்தின் பின் பல ஊடகங்களினால் சொல்லப்பட்ட விடயம் தான் இது .

செய்திகளை காவி வருவதற்கு மட்டுமே ஊடகம் தேவை, பரிகாரம் தேடுவதற்கு இல்லை என்பது மிகவும் தவறான பார்வை. இப்படியான அணுகுமுறைகள் ஊடக தர்மத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கும்.

இங்கு அந்தரங்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விபரங்களை வெளியிடமுடியாது எனும் சிக்கல் இருப்பின் விகடன் குழுமம் தாம் முன்னின்று வாசகர்கள், நலன்புரி அமைப்புக்கள் மூலம் அந்தப்பெண்ணிற்கு கிடைக்கும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.