Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

அலுவலகத்துக்கு நேர் எதிரே உள்ள 26 bus stop இல்அவர் bus க்காக காத்திருந்தபோது அவருக்கு பின்னால் வந்து கண்ணாடிக்குப்பின்னாலிருந்து முதலாவது சூடு விழுந்துள்ளது. அதனால் கண்ணாடி சிதறியுள்ளது. ஆனால் அவருக்கு படவில்லை. அடுத்த சூடு உடைந்த கண்ணாக்குள்ளால் விழுந்துள்ளது. அது அவரது வயிற்றில் விழுந்துள்ளது.

[size=4]முன் பக்கம் முழுவதும் வெளி. ஒரு வாகன தரிப்பிடம் கூட இல்லாத இடம். இதை எதிரி கணிப்பிட்டேட பின்னால் வந்துள்ளான். அவருக்கு இருந்த ஒரே தெரிவு. வீதியைக்கடப்பதாகும். வீதியை அவர் கடக்க தொடங்கியதும் bus stop இலிருந்து சற்று பின்னால் நிலையெடுத்து அடுத்த அடுத்த சூடுகள் தோழிலும் முதுகிலும் விழுந்துள்ளன. உயிர் பிரிந்து விட்டது என்று உறுதிப்படுத்திவிட்டே அந்த இடத்திலிருந்து பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். bus stop இல் அவருடன் வேறு இனத்தவர் சிலர் நின்றுள்ளனர். கண்ணாடி உடைந்ததால் தாங்கள் முகத்தை கீழே வைத்து விட்டதாலும் கொலையாளிகள் முகத்தை மூடி துணியால் கட்டியிருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்றும் காவல் துறையினரரிடம் சொல்லியுள்ளனர்.[/size]

4.jpg

10.jpg

9.jpg

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொலை நடந்த இடத்தைச் சுற்றி தடுப்புப் பட்டியைக் கட்டாமல் ஏனோதானோ என்று விட்டிருக்கிறது ஃபிரான்ஸ் காவல்துறை.. இந்த லட்சணத்தில் இருந்தால் கொலை நடக்காமல் வேறு என்ன நடக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

அன்னார‌து குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்ச‌லிகள்...அவர‌து ஆத்மா சாந்தியடையட்டும்

கொலை நடந்த இடத்தைச் சுற்றி தடுப்புப் பட்டியைக் கட்டாமல் ஏனோதானோ என்று விட்டிருக்கிறது ஃபிரான்ஸ் காவல்துறை.. இந்த லட்சணத்தில் இருந்தால் கொலை நடக்காமல் வேறு என்ன நடக்கும்?

தடயங்கள் கிடைத்தாலும் மேலதிகத் தடயங்கள் கிடைக்கலாம் என்பதற்காக நீண்ட நேரம் சம்பவம் நடந்த இடத்தை பூட்டி வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னார‌து குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்ச‌லிகள்...அவர‌து ஆத்மா சாந்தியடையட்டும்.

அதே வேளை உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் பிரான்ஸ் வாழ் உறவுகள் செய்யலாம். இந்த கொலைக்கு நீதி கிட்டும் வரைக்கும் ஓயக்கூடாது.

[size=5]வீரவணக்கம் ![/size]

வீர வணக்கம்!

இதில் சபேசனின் கருத்துக்களை நான் ஆமோதிக்கின்றேன்.இதில் ஒரு சிலரின் கருத்துக்கள் அச்சம் தரக்கூடியனவாகவிருக்கின்றன.ஆகவே வாசிப்பதுடன் நிறுத்தாது அடையாளப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல் துறை புலனாய்வில் பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை

பிரான்ஸ் காவல் துறை புலனாய்வில் பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை

பரிஸில் கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு ஈராக் குடும்பம் படுகொலைசெய்யப்பட்டது ( 2 மகள் உயிர் தப்பினார்கள்) இதுவரை யாரும் பிடிபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் என்னவெனில், இதை நாங்கள் அனுமதித்தோம் என்றால் நாளை அவர்கள் எங்களின் வீட்டுக்கதவுகளையும் தட்டிச் சுடக்கூடும். இது தான் மிகவும் வருத்தமான உண்மை. இதற்கு நாங்கள் உண்மையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பரிசோதனை நடவடிக்கையாகவும் இருக்கலாம். இதில் நாங்கள் முடங்கினோம் என்றால் தொடர்ச்சியாக அவர்கள் செய்ய முயற்சிப்பார்கள்

நிச்சயம் உண்மையான ,தேவையான விடயம் ...............நாம் எச்சரிக்கை அற்றவர்களாய் இருந்தால் .............என்னும் என்னும் பல இழப்புக்களை சந்திக்க வரும் ..........

பாரிசில் முன்னர் சொல்லப்பட்டவர்களான நாதன், கஜன் ஆகியோரும் இலங்கை புலநாய்வுப் படையினரால் கொல்லப்படவில்லை.. இன்று பரிதியும் அவ்வாறு கொல்லப்படவில்லை. முன்னர்வர்கள் எவரால் கொல்லப்பட்டர் என்று உண்மை தெரிந்து இருந்தும் அதை சொல்லாது விட்டவர்கள் அனைவரும் தான் இவரின் கொலைக்கும் காரணம். எம் வீட்டுக் கதைவைத் தட்டி கொல்ல முயல்வர்கள் எம் வீட்டில் தேனீர் அருந்தியும் உணவு உற்கொண்டவர்களும் ஆகும் என்ற உண்மையை தெரிந்தவர்கள் பலர் தமது புலிப்பாசத்தால் இன்னொருவர் மீது குற்றம் சாட்டுவது கொலையாளிகளின் கொலைக் குற்றத்தை விட கேவலமானது. இவர்கள் சொறிலங்காவினை விட பன்மடங்கு எதிரியாக பார்க்கப்படவேண்டியவர்கள்.

பூச்சி கருத்து எழுதுவதற்கு எவ்வளவு தூரம் உங்களுக்கு சுதந்திரம் இருக்கோ ............அந்தக்கருதில் உண்மை இருக்கா என்று ஆராயும் உரிமை அத்தனை பேருக்கும் உண்டு .................முதலில் கஜன் ,நாதன் அவர்களை இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உங்கள் செய்தியை இருந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை முன் வைத்தாலே இந்த காலத்திற்கு பொருத்தமானது ..................குழப்புபவர்கள் குழப்பிக்குண்டிருக்கும் இக்காலத்தில் இப்படியான தகவல்கள் மூலம் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்னும் நிலையிலி இருக்கும் நாங்கள் மீட்சி பெறமுடியாமல் பாதாளத்திற்குள் விழுவது தவிக்க முடியாததாய் போய்விடும் ...

பூச்சி கருத்து எழுதுவதற்கு எவ்வளவு தூரம் உங்களுக்கு சுதந்திரம் இருக்கோ ............அந்தக்கருதில் உண்மை இருக்கா என்று ஆராயும் உரிமை அத்தனை பேருக்கும் உண்டு .................முதலில் கஜன் ,நாதன் அவர்களை இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உங்கள் செய்தியை இருந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை முன் வைத்தாலே இந்த காலத்திற்கு பொருத்தமானது ..................

குழப்புபவர்கள் குழப்பிக்குண்டிருக்கும் இக்காலத்தில் இப்படியான தகவல்கள் மூலம் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்னும் நிலையிலி இருக்கும் நாங்கள் மீட்சி பெறமுடியாமல் பாதாளத்திற்குள் விழுவது தவிக்க முடியாததாய் போய்விடும் ...

[size=4]உண்மை.[/size][size=1]

[size=4]அத்துடன் 'என்னிடம் ஆதாரம் இருக்கின்றது' என்பவர்கள் அதை பிரான்ஸ் நாட்டின் காவல்துறை இடம் ஒப்படைத்தால் புண்ணியமாக இருக்கும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

செயற்பாட்டாளருக்கு கண்ணீரஞ்சலிகளும் வீரவணக்கமும்.

கோத்தா உட்பட்ட சிங்களம் புலம்பெயர் மக்களை அழிக்க உறுதிபூண்டு நிற்கிறது என்பதை இந்தப்படுகொலை காட்டி நிற்கின்றது.

புலம்பெயர் மக்களை நோக்கி சிங்கள அரசு நீட்டிய நேசக்கரத்தின் பிரதிபலிப்பு.

நாம் ஒற்றுமையாக அவதானமாக செயல்பட வேண்டிய காலங்கள் இவை.

குற்றவாளிகளை இனங்கண்டு தண்டிக்க வேண்டிய பொறுப்பு பிரான்ஸ் அரசுக்குண்டு.

தளபதி பருதி அண்ணாவிற்கு வீரஅஞ்ச‌லிகள் [size=4]அன்னார‌து குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்ச‌லிகள்...அவர‌து ஆத்மா சாந்தியடையட்டு[/size][size=4]ம்.[/size]

கொல்லப்பட்ட இவருக்கு யார் முதலில் கேணல் பதவி கொடுத்தது? புலிகளின் தலைமையால் கொடுக்கப்படும் இராணுவ பதவிகளை இன்று கொடுப்பவர்கள் யார்? தலைமை இல்லை என்பதுக்காக தலைமைப் பொறுப்பை எவரும் எடுக்கலாமா? அத்துடன், புலிகளின் இராணுவப் பதவி ஒன்றினை இவ்ருக்கு கொடுக்கும் போது இவருடன் சேர்ந்து இயங்கிய ஏனையவர்களுக்கும், தேசியச் செயற்பாட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் நாளைக்கு பிரான்ஸ் அரசால் பெரும் அளாவில் பிரச்சனை வரும் அல்லவா?

பூச்சி கருத்து எழுதுவதற்கு எவ்வளவு தூரம் உங்களுக்கு சுதந்திரம் இருக்கோ ............அந்தக்கருதில் உண்மை இருக்கா என்று ஆராயும் உரிமை அத்தனை பேருக்கும் உண்டு .................முதலில் கஜன் ,நாதன் அவர்களை இவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உங்கள் செய்தியை இருந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை முன் வைத்தாலே இந்த காலத்திற்கு பொருத்தமானது ..................குழப்புபவர்கள் குழப்பிக்குண்டிருக்கும் இக்காலத்தில் இப்படியான தகவல்கள் மூலம் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்னும் நிலையிலி இருக்கும் நாங்கள் மீட்சி பெறமுடியாமல் பாதாளத்திற்குள் விழுவது தவிக்க முடியாததாய் போய்விடும் ...

இப்படியான உண்மைகளை எழுதும் போது மட்டும் ஆதாரம் கேட்பீர்கள்.நாதன், கஜனின் படுகொலைகள் சிறிலங்கா அரசால் நடத்தப்படவில்லை என்பதை தேசியத்தில் பற்றுக் கொண்டு உண்மையாக உழைப்பவர்களுக்கு நன்கு தெரியும். இவ்ற்றின் சூத்திரதாரிகளை புலிகள் இனம் கண்டு தண்டனை கொடுத்தாகவும் தகவல் ஒன்று வெளி வந்தது. இது தெரிந்து இருந்தும் வேண்டும் என்றே இன்னொரு தரப்பை சுட்டிக் காட்டுவது எமக்கு மத்தியில் புல்லுருவிகளை வளர்க்க மட்டுமே உதவும்.

குசு விட்டவனில் இருந்து கொலை செய்தவன் வரைக்கும் முதலில் செய்வது தான் மாட்டுப்படாமல் இருக்க மற்றவனைக் காட்டுவதுதான்.

[size=4]உண்மை.[/size]

[size=1][size=4]அத்துடன் 'என்னிடம் ஆதாரம் இருக்கின்றது' என்பவர்கள் அதை பிரான்ஸ் நாட்டின் காவல்துறை இடம் ஒப்படைத்தால் புண்ணியமாக இருக்கும். [/size][/size]

செத்தவனும் தமிழன், சாக வைத்தவனும் தமிழன், ஆதாரம் வைத்திருப்பவனும் தமிழன், அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்லுபவனும் தமிழன்.

செத்தவனும் தமிழன், சாக வைத்தவனும் தமிழன், ஆதாரம் வைத்திருப்பவனும் தமிழன், அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்லுபவனும் தமிழன்.

[size=4]சரியாக கூறுகிறீர்கள். உங்களுக்கு பல உண்மைகள் தெரிந்தும் வெளியே சொல்ல தயங்குகிறீர்கள் போலுள்ளது. நீங்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தால் உண்மைகளை அருகில் உள்ள காவல்துறையிடம் கூறி இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன். [/size]

இப்படியான உண்மைகளை எழுதும் போது மட்டும் ஆதாரம் கேட்பீர்கள்.நாதன், கஜனின் படுகொலைகள் சிறிலங்கா அரசால் நடத்தப்படவில்லை என்பதை தேசியத்தில் பற்றுக் கொண்டு உண்மையாக உழைப்பவர்களுக்கு நன்கு தெரியும். இவ்ற்றின் சூத்திரதாரிகளை புலிகள் இனம் கண்டு தண்டனை கொடுத்தாகவும் தகவல் ஒன்று வெளி வந்தது. இது தெரிந்து இருந்தும் வேண்டும் என்றே இன்னொரு தரப்பை சுட்டிக் காட்டுவது எமக்கு மத்தியில் புல்லுருவிகளை வளர்க்க மட்டுமே உதவும்.

குசு விட்டவனில் இருந்து கொலை செய்தவன் வரைக்கும் முதலில் செய்வது தான் மாட்டுப்படாமல் இருக்க மற்றவனைக் காட்டுவதுதான்.

செத்தவனும் தமிழன், சாக வைத்தவனும் தமிழன், ஆதாரம் வைத்திருப்பவனும் தமிழன், அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்லுபவனும் தமிழன்.

உங்கள் சிந்தனையில் ,உங்கள் பார்வையில் உண்மை என்று தெரிவது எனக்கு தெரியவில்லையே ................இத்தனை வருடங்களிற்கு பிறகு நீங்கள் இந்த தகவலை திடீரென ,இந்த நேரத்தில்,இந்த இடத்தில் கூறும்போது .. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ,புதிதாகவும் இருக்கின்ற படியினாலேயே இத்தனை கேள்விகளும் .......அதுக்கு ,குசு .கக்கூஸ் என்று சளுப்ப வேண்டாம் .............பதிலை மட்டும் கேட்டேன்

வீரமரணம் அடைந்த நடராஜா மதிந்திரன் என்னும் பரிதி, இந்தியாவில் இரண்டாம் பயிற்சி முகாமில் கெரில்லா பயிற்சி பெற்ற ஒருவர். 1983 இல் இவர் பெற்ற பயிற்சியின் வெளிப்பாடாக எண்பதுகளின் நடுப்பகுதியில்

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவர்

ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு எதிராக நடை பெற்ற அனைத்து தாக்குதல்களிலும் பங்கு பற்றினார்.இவருடன் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பாக பிரிகேடியர் பானு, லெப் கேர்ணல் குமரப்பா, கப்டன் வாசு, லாலாரஞ்சன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.2003 முதல் பிரான்சில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பரிதியை,பிரான்ஸ் அரசு,2007 முதல் 2010

வரை புலிகளுக்கு நிதி திரட்டினார் என்னும் குற்றச் சாட்டின்பேரில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்து 2010 இல் விடுதலை செய்திருந்தது.

பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்.

எமக்காக உழைத்த ஒரு மாவீரன் வீழ்ந்த போதும், அவரது இரத்தம் காயும் முன்னரே, புலிகள் மீது அவதூறும் குற்றச்சாட்டுக்களும் தெளிக்கப்படுகின்றது! என்ன செய்வது - தமிழனின் பிறவிக் குணம்.

[size=4]சரியாக கூறுகிறீர்கள். உங்களுக்கு பல உண்மைகள் தெரிந்தும் வெளியே சொல்ல தயங்குகிறீர்கள் போலுள்ளது. நீங்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தால் உண்மைகளை அருகில் உள்ள காவல்துறையிடம் கூறி இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன். [/size]

ஆட்களைப் பிடித்து உள்ளே போடுவதால் குற்றங்கள் நிற்கப்போவதில்லை. குற்றத்திற்கான காரணங்களை சரிசெய்வதே இவ்வாறான குற்றங்கள் நிகழாமல் இருக்க ஒரே வழி. அந்தவகையில் அடுத்தவனுக்கு துரோகிப்பட்டம் கட்டுவது. குழப்புவது. மாவீரர் தினம் நிகழ்வுகளுக்கு போட்டி போடுவது. தேசியத்தை குத்தகைக்கு எடுப்பது , சொந்தமாக விலைக்கு வாங்குவது, சீன் போடுவது. பல்வேறு அமைப்புகளில் இருந்துகொண்டு குழப்புவதற்கான முடிவுகளை எடுத்து விட்டு அமைப்புகளை நல்ல பிள்ளையாக்கி அநாமதேய பெயர்களில் குழப்புவது. இப்படியானவைக்கள் தான் கொலைக்கான வேர்கள். பிரச்சனை எங்கே உற்பத்தி செய்யப்படுகின்றதோ அங்கே சரிசெய்வது ஒன்றே வழி. அல்லது இருக்கவே இருக்கின்றது இந்திய இலங்கைபப்புலநாய்வுத்துறைகள் அவர்கள் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு தொடர்ந்து நல்லபிள்ளைகளாக குழப்பிக்கொண்டும் இருக்கலாம்.

பிரித்தானியாவில் பருதிக்கு வீர வணக்க நிகழ்வு.

308845_10152259292450637_1994643329_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.