Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்!

Featured Replies

பிரபாகரனைத் தவிர எவரையும் நம்பும்படியாக யாருமேயில்லை.

சத்தியமான வார்த்தைகள்!!

நான் நெருடல் செய்தியப்பற்றி எழுதியவை ஏன் தூக்கப்பட்டன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனைத் தவிர எவரையும் நம்பும்படியாக யாருமேயில்லை.

ஒருசில வருடங்களாக என்மனதில் இருப்பதும் இதுதான்.

முன்பு இலங்கை அரசாங்கத்தினாலும் ஒட்டுக் குழுக்களினாலும் வெளிநாடுகளுக்கு செய்த பிரச்சாரம் என்ன என்றால் புலம்பெயர் நாடுகளில் புலிகள் வன்முறை மூலமும் மிரட்டல் மூலமுமே பணம் வசூலிக்கிறார்கள் என்பது அதை சுவிஸ் நாட்டில் பல இடங்களில் இப்பிடியான முறையீடுகளை ஒட்டுக்குழுவினர் செய்தார்கள். அதை இப்ப உணமையாக்குவது போல இந்த நெருடல் செய்தி உள்ளது. தம்மை நடுநிலை என்று கூறும் நெருடல் எந்த இடத்திலும் நடுநிலைமைய காட்டவில்லை என்பது பிரதானம். இப்பிடியான தேசியவாதிகள் வாழ்க

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெருடல் செய்தியப்பற்றி எழுதியவை ஏன் தூக்கப்பட்டன?

சும்மாதான்.. :D

அதற்கு முதல் கேவலமான பிறவிகளாய் எம் இனத்தில் பிறந்த பூச்சி புழுக்களை ஒடுக்க வேண்டும் ,,,,,,,,,,,,,,,எல்லாம் நிறைவேறும்........

உங்களுக்கு எதனையும் உணர்ச்சியின் அடிப்படையிலன்றி பகுத்தறிவின் அடிப்படையில் உணர முடியாது என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இந்த அரசியல் தான் எங்களை நாதியற்று நடுத்தெருவில் விட்டு இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் இனியும் வன்முறை அரசியல் செய்து கொண்டு விடுதலையைக் காண முடியும் என்று நம்பாதீர்கள். புலிகள் தங்களது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தாம் அழியப் போகின்றோம் என்று அறிந்து விட்டு அவர்கள் அறிவித்தது, அதனை மிச்சம் இருப்பவர்கள் தொடரத்தான்.

இன்று புலிகள் இல்லை என்ற நிலையை பயன்படுத்தி வெளிநாடுகளில் வன்முறை அற்ற அரசியல் செயல்பாடுகளினூடகத்தான் எமக்கான வெளிகளை உருவாக்க முடியும்.

பரிதி போன்றவர்களின், விநாயகம் போன்றவர்களின், நெடியவன் போன்றவர்களின் மிரட்டி அரசியல் செய்யும் வன்முறை அரசியலைச் செய்து கொண்டு வெளிநாடுகளில் எம் விடுதலைக்கான ஆதரவை கட்டி எழுப்ப முடியாது. உலக நாடுகளின் பட்டியலில் இருந்து எம் போராட்டத்தின் மீதான தடையை அகற்ற முடியாது.

வெளிநாடுகளின் பொலிஸாரினதும், உளவு துறையினதும் கழுகுக் கண்கள் மொய்த்துக் கொண்டு இருக்கும் சூழலினைத் தோற்றுவித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக குரல் எழுப்ப முடியாது.

அமைதியான முறையில், வன்முறையற்ற காத்திரமான முறையில் இயங்கினால் தான் எம்மால் சர்வதேச நாடுகளது மக்களின் ஆதரவையும் அரசுகளின் ஆதரவையும் திரட்ட முடியும்.

புலிகளின் ஆயுத மெளனிப்புக்கு பின்னாலான அரசியலை வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முன்னெடுக்கும் எவரும் தமிழ் மக்களின் விரோதியாகத்தான் காலம் இனம் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் வெளியான செய்தியில் சில மர்மங்கள் நிறைந்தும், மற்றும் உண்மைத் தன்மைகள் இல்லாமல் இருப்பதாக சந்தேகித்து பிரான்ஸில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் இது குறித்து கேட்டேன்.

அது யார் பெயர் வெளியே சொல்ல விரும்பாத முக்கியஸ்தர்? இப்படி இருட்டுக்குள் இருப்பவர்கள்தான் தமிழர்களின் அமைப்புக்களை ஜனநாயக வழியில் முன்னெடுத்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள காத்திரமான செயற்பாடுகளைச் செய்யப்போகின்றார்களாக்கும்.

திகில்களும் மர்மங்களும் நிறைந்த சுவாரஸ்சியமான கதைகள் எப்போதுமே கவர்ச்சியைத் தரும் என்று நமது தமிழ்ச் செய்திகளை உற்பத்தி செய்யும் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்குத் தெரியும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஒரு மாவீரன்.. இப்படி அநியாயப் பூனைகளின் அதிகார ஆசைக்கு.. மாவீரர் காலத்திலேயே இழிவுபடுத்தப்படுகிறான். அதற்கு தலைப்பு புலனாய்வு. பூனைகள் எல்லாம் புலி என்ற நினைப்பில் உலா வரும் காலம்..! நல்லா ஆடுங்க இது உங்க நேரம்..! :icon_idea:

நிர்வாகம் சிரிப்புப் பகுதியில் சுமே அக்கா எழுதிய ஒரு "புலனாய்" அறிக்கையை உடன தூக்கினது. இதை எல்லாம் அது எந்தப் புலனாயை வைச்சு ஆராய்ஞ்சு உண்மை என்று கண்டு அனுமதிச்சிருக்குது..???????????! ம்ம்ம்... நிர்வாகமும்.. புலனாய்(வு)ப் பக்கம் போல...!

இதுதான் இப்ப எங்க நிலை...............

Edited by nedukkalapoovan

உங்களுக்கு எதனையும் உணர்ச்சியின் அடிப்படையிலன்றி பகுத்தறிவின் அடிப்படையில் உணர முடியாது என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சுயநலத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவோர் இந்த பாடம் எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

இந்த அரசியல் தான் எங்களை நாதியற்று நடுத்தெருவில் விட்டு இருக்கின்றது.

ஐ.நா வரையில் தன்னைத்தான் விசாரிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அரச ஆதரவாளர்கள் பலர் நாதியற்றுப்போய் தவிக்கிறார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இனியும் வன்முறை அரசியல் செய்து கொண்டு விடுதலையைக் காண முடியும் என்று நம்பாதீர்கள். புலிகள் தங்களது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தாம் அழியப் போகின்றோம் என்று அறிந்து விட்டு அவர்கள் அறிவித்தது, அதனை மிச்சம் இருப்பவர்கள் தொடரத்தான்.

இன்று புலிகள் இல்லை என்ற நிலையை பயன்படுத்தி வெளிநாடுகளில் வன்முறை அற்ற அரசியல் செயல்பாடுகளினூடகத்தான் எமக்கான வெளிகளை உருவாக்க முடியும்.

பரிதி போன்றவர்களின், விநாயகம் போன்றவர்களின், நெடியவன் போன்றவர்களின் மிரட்டி அரசியல் செய்யும் வன்முறை அரசியலைச் செய்து கொண்டு வெளிநாடுகளில் எம் விடுதலைக்கான ஆதரவை கட்டி எழுப்ப முடியாது. உலக நாடுகளின் பட்டியலில் இருந்து எம் போராட்டத்தின் மீதான தடையை அகற்ற முடியாது.

இவ்வளவற்றையும் எழுதி பருதியும், விநாயகமும், நெடியவனும் வன்முறையாளர்களாகவும் இவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் முயற்சியில்தான் பருதியை விநாயகம் கொலை செய்தார் என்பதுதான் தங்கள் காட்ட முயலும் எழுத்தின் உட்கருத்து. (கட்டுரை சொல்வது பருதியை பாம்பு குழு கொலை செய்ததென்பது. மேலும் இந்த கொலையை K.P யின் உறவினர்கள் வழிநடத்தியிருக்கலாம் என்பதும். பாம்புக்குழுவின் நோக்கத்தை பிரான்சு புலனாயுவுகள் முழுமையாக வெளிவிடவில்லை.) உங்கள் உட்கருத்து மூலம் கட்டுரையை ஆதாரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை மறைத்து வைத்துகொண்டு காழ்ப்புணர்வை மட்டும் கக்குகிறிர்கள். இங்கே, உங்களின் முடிவு உங்களுக்கே குழப்பமாக இருக்கிறது. கட்டுரை, பாம்புக்குழுவை "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்று பருதி சொன்னதாக சொல்கிறது. அதன் பின் நாங்கள் பருதிடம் கற்றுக்கொள்ளும் பாடம் பிழை என்று என்ன காரணத்திற்காக தொடர்ந்து வாதாடுகிறீர்கள்.

வெளிநாடுகளின் பொலிஸாரினதும், உளவு துறையினதும் கழுகுக் கண்கள் மொய்த்துக் கொண்டு இருக்கும் சூழலினைத் தோற்றுவித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக குரல் எழுப்ப முடியாது.

தயவு செய்து வெளிநாட்டு புலனாய்வு பற்றிய அறிவு இருந்தால் இதை எழுதவும். எல்லா மேற்கு நாட்டிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டின் மீதும் அவர்களின் புலனாய்வு தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இலங்கையை போன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை அடக்க புலனாய்வு பயன்படுத்தப்படுவதில்லை. ஒரளவு புலனாய்வு துறையினதும், பொலிஸ் போன்ற பாதுகாப்பு துறையினதும் கவனங்களை எடுக்கத்தக்கதாகத்தான் எமது போராட்டங்கள் வடிவமைக்கப்படுவது. இதனால் இவற்றை விசாரிக்க வரும் புலனாய்வு, அரசின் செயலை,நடப்பவற்றை நேரடியாக பதிந்துகொள்வதால், விளங்கிக்கொள்ளும். உ+ம் பருதி கொலை செய்யப்படும் முன்னர் இலங்கையில் இருந்து அரச ரவுடிகள் பிரான்சில் இறக்கப்பட்டார்கள் என்பதை புலனாய்வினர் தெரிந்து வைத்திருப்பதாக பிரான்சு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதனால் தான் நாம் பருதி போன்றவர்களின் ஜனநாய போராடங்களுக்கும் ஆதரவு கொடுப்பது. இது போராட்டங்களை புலனாய்வு நன்றாக கண்காணித்து அரசின் திசை திருப்பல்களுக்கு மேற்கு நாடுகள் ஏமாந்து போய்விடாமல் இருக்க உதவும்.

அமைதியான முறையில், வன்முறையற்ற காத்திரமான முறையில் இயங்கினால் தான் எம்மால் சர்வதேச நாடுகளது மக்களின் ஆதரவையும் அரசுகளின் ஆதரவையும் திரட்ட முடியும்.

அரசு வன்முறையை போராடத்தில் திணித்து அவற்றைக் குழப்ப முயல்கிறது. மேலே சொன்னவற்றை பருதி சமாதானபடுத்த முயன்று தோற்றவராக குறிப்பிடப்படும், K.P. யின் உறவினருக்கு நேரடியாக தெரியப்படுத முடியுமா? பெரும்பாலானோர் இமானுவல் அடிகளார், உருத்திரா, ஜெயலிங்கம் போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்து போராடும் போது புலம் பெயர் மக்களை குட்டி, இரும்பொறையாக சித்தரிக்க முயல்வது ஏனோ?

புலிகளின் ஆயுத மெளனிப்புக்கு பின்னாலான அரசியலை வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முன்னெடுக்கும் எவரும் தமிழ் மக்களின் விரோதியாகத்தான் காலம் இனம் காட்டும்.

புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் வரும் போராட்டங்களை, வன்முறையார்களை ஏவி தொடர்ந்து அரசு குழப்பி வருகிறது. கட்டுரையில் சொல்லப்படும் K.P போன்ற பணய கைதிகளை வைத்துக்கொண்டு மாவீரர தினத்தை உடைத்து இரண்டாக்கிவிட்டு போராடும் தமிழர் மீது பழி போடுகிறது அரசு. இந்த கெடு செயல்களின் பின் போராடங்களை வன்முறை நடவடிக்கையாக சித்தரிக்க முயல்வோரை அரசின் ஆதவாளர்களாவும், தமிழன விரோதிகளாகவும் தான் காலம் இனம் காட்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளரின் கதையை நம்பினால் இப்போது புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சண்டியர்களின் ஆதிக்கம் கைமீறிப் போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். இப்படியான குழுக்கள் வளர்ந்துவரும் சிறுவர்களை விரைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு நிலக்கீழ் கலாச்சாரத்தைத் தமிழர்களுக்கிடையில் உருவாக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

இந்தக் கட்டுரையில் பரிதி அவர்கள் குண்டர்களுடன் தொடர்பில் இருந்தார்; குண்டருக்குரிய வேலைகளைச் செய்தார் என்று உள்ளது. உண்மையா?

ஒருவர் இறந்து விட்டால் அவரை பற்றி தாம் விரும்பிய படியெல்லாம் கட்டுரை எழுத வெளிக்கிடுவார்கள். அதிலும் உண்மையை சொல்வது போல் சொல்லி இடையில் பொய்யையும் கலந்து விடுவார்கள். அதனால் வாசகர்கள் அந்த பொய்யையும் உண்மை என்று நம்பிவிடும் சாத்தியம் உள்ளது.

உண்மை தன்மை இல்லாத எந்த செய்தியையும் நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். :rolleyes:

சொல்கின்றவன் சொன்னால் கேட்பவனுக்கு மதியென்ன???

இந்த ஆராய்ச்சியாளர்களது கண்களில் அவர் உயிருடன் இருக்கும்பேது ஏன் தெரியவில்லை

புலத்தில் அதிலும் பிரான்சில் வர்த்தகர்களிடம் வெருட்டிப்பணம் பறித்தவிடயம்....???

ஒரே ஒரு தப்பு

தமிழனுக்காக போராட புறப்பட்டது

புலத்தில் வந்தும்

பிரெஞ்சுக்குடியுரிமை இருந்தும்

அம்மக்களுக்காக அயராது உழைத்தது. :( :( :( :( :( :(

உண்மை...

நெருடல் இணையம் ஒரு விநாயகம் குழுவின் ஆதரவுப் பிரச்சார தளம். இதன் செய்திகளை இங்கு இணைப்பது எவ்வளவு நம்பிக்கைய பெறுவது என்பது கேள்விக் குறியே- அந்த இணையத்தில் முழுவது விநாயகம் கோஷ்டியால் செய்யப்படும் மாவீரர் தின விளம்பரங்களே உள்ளது. ஏனைய எனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகம் இப்பிடி பொறுப்பில்லாம இயங்கும் நெருடல் இணையத்தையும் அதிர்வு,எதிரி போன்று கருப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்

பாவம் ஒரு மாவீரன்.. இப்படி அநியாயப் பூனைகளின் அதிகார ஆசைக்கு.. மாவீரர் காலத்திலேயே இழிவுபடுத்தப்படுகிறான். அதற்கு தலைப்பு புலனாய்வு. பூனைகள் எல்லாம் புலி என்ற நினைப்பில் உலா வரும் காலம்..! நல்லா ஆடுங்க இது உங்க நேரம்..! :icon_idea:

நிர்வாகம் சிரிப்புப் பகுதியில் சுமே அக்கா எழுதிய ஒரு "புலனாய்" அறிக்கையை உடன தூக்கினது. இதை எல்லாம் அது எந்தப் புலனாயை வைச்சு ஆராய்ஞ்சு உண்மை என்று கண்டு அனுமதிச்சிருக்குது..???????????! ம்ம்ம்... நிர்வாகமும்.. புலனாய்(வு)ப் பக்கம் போல...!

இதுதான் இப்ப எங்க நிலை...............

இச் செய்திகள் மூலம் உண்மையில் யாரைக் காப்பற்றப் பார்க்கிறார்கள் இந்த புலநாய்கள். இந்த கட்டுறைய எழுதியவர் இதற்கு முன்னம் ஒருகட்டுரையும் எழுதி கேள்விப் படவில்லை. நல்லா எழுதுறாங்க தங்கள் தரப்பைக் காப்பற்ற ஒரு மாவீரனையும் ஒட்டு மொத்த புலிகளையும் வன்முறை மூலம் நிதி சேகரித்தார்கள் என்று கொச்சைப் படுத்துவது நல்லதல்ல. இந்த கட்டுரையை இணைத்த உறவையே நாளை கொச்சி படுத்தலாம். அகதிகளுக்கு என்று கட்டாயப் படுத்தி வன்முறைக் குழுக்கள் மூலம் நிதி சேகரிக்கிறா என்று இத அர்யுன் போன்றவர்கள் திருந்தாத ஜென்மம் என்று வரவேற்கலாம் கவனம். தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

கட்டுரையாளரின் கதையை நம்பினால் இப்போது புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சண்டியர்களின் ஆதிக்கம் கைமீறிப் போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். இப்படியான குழுக்கள் வளர்ந்துவரும் சிறுவர்களை விரைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு நிலக்கீழ் கலாச்சாரத்தைத் தமிழர்களுக்கிடையில் உருவாக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

பலர் பிரான்சை பற்றி சொல்லிவிட்டார்கள். அது ஒரு பானை சோற்றுக்கு பதமாக எடுத்தக்க ஒரு சோறாகாது.

மேற்குநாடுகளின் புலனாய்வுகள் விட்டு பிடிப்பார்கள். ஆனால் பிரான்சுப் புலனாய்வு விட்டு பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவர் மாவீரனே இல்லையா?

ஒரு ரவுடிக்கா கேணல் பட்டம் கொடுத்தார்கள்? (நான் கூறவில்லை. மேற்படி கட்டுரையில் அவ்வாறுதான் வருகின்றது)

உண்மையான ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் 2009 மே 19-க்குப் பின்னர் மௌனித்து விட்டார்கள் என்பதே சரி.

இப்போது செய்தி வெளியிடுகின்றவர்கள் எல்லாம் கனவு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு செய்தி வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

சனங்களுக்கும் வேறு பொழுது போவது இல்லை. அதனால், சினிமா கிசுகிசுக்களை படிப்பது போலத்தான் தற்போது வெளிவரும் செய்திகளையும் படிக்கின்றனர்.

உண்மையைச் சொல்லப் போனால் சனங்கள் எதனையும் சீரியசாகவே எடுத்துக் கொள்வது இல்லை.

என்ன இருந்தாலும் அவர் செய்தார், இவர் செய்தார் என்று பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளிக்கொணர்ந்த நிலையில் நெருடலில் வந்த புலனாய்வுத்துறை கட்டுரை கணகணப்பாகத்தான் போய்க் கொண்டு இருக்கின்றது.

அவர் செய்தார், இவர் செய்தார் என்று சந்தேகித்தவர்களே! பரிதி உட்குத்து வெட்டுப்பாடுகளினாலும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மேற்படி கட்டுரையில் குறிப்பிட்டுக் கூறியதன்

அடிப்படையில் சந்தேகித்துத்தான் பாருங்களேன்.

Edited by nirmalan

அது யார் பெயர் வெளியே சொல்ல விரும்பாத முக்கியஸ்தர்? இப்படி இருட்டுக்குள் இருப்பவர்கள்தான் தமிழர்களின் அமைப்புக்களை ஜனநாயக வழியில் முன்னெடுத்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள காத்திரமான செயற்பாடுகளைச் செய்யப்போகின்றார்களாக்கும்.

திகில்களும் மர்மங்களும் நிறைந்த சுவாரஸ்சியமான கதைகள் எப்போதுமே கவர்ச்சியைத் தரும் என்று நமது தமிழ்ச் செய்திகளை உற்பத்தி செய்யும் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்குத் தெரியும்தானே.

[size=4]பல இணைப்புக்கள் அந்த அமைப்பின் பெயர் மற்றும் முகவரியுடன் ஏற்கனவே இந்த களத்தில் இணைக்கப்பட்டவை. இதை எழுதிய சுதந்திர ஊடகவியலாளர் ஏனோ **[/size][size=4]பெயரை [/size][size=4]குறிப்பிடவில்லை. ஆனால் தனது பெயரை (உண்மையான பெயராக இருக்கலாம்) மின்வலை முகவரியை (அது வேலை செய்கிறது) இணைத்து தனது மேல் நம்பிக்கை வையுங்கள் என உலகத்தை கேட்டுள்ளார். [/size]

[size=4]** [/size][size=4]எழுத்துப்பிழை திருத்தப்பட்டது [/size]

Edited by akootha

பரிதியைச் சுட்ட சத்தம் அடங்க முதல் இது 'கேபி' யின் வேலை என்று சொன்ன ஊடகங்கள் மீது கேள்வி இல்லை

பின்னர் விநாயகம் கைது என்று சோடித்து எழுதிய அதிர்வு கண்ணன் மீது ஒரு கேள்வியும் இல்லை,

தமக்குள் அடிபட்டு விட்டு, அதனை முற்று முழுதாக சிங்களம் மட்டுமே செய்தது என்று மக்களை முட்டாளாக்க முற்பட்ட செய்தித் தளங்கள் பற்றியும் ஒரு எழுத்தும் இல்லை.

ஆனால் உள் முரண்பாடுகளால் தமக்குள் பலியிடப்பட்டவர் பரிதி என்று எழுதினால் மட்டும் கூகிளில் தேடிப் பார்த்து களைத்துப் போகின்றீர்கள்.

அவர் அடிக்கடி google இல் தேடுவார். ஏனென்றால் உண்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். :rolleyes: உங்கள் கண்ணில் எதுவும் படவில்லை என்பதற்காக ஒருவர் மேல் அப்பட்டமாக குற்றச்சாட்டு வைக்க கூடாது. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111407&#entry825225

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111407&st=20#entry825374

இன்னுமொரு நபர் பற்றி (அது அதிர்வு கண்ணனை பற்றியோ அல்லது வேறு யாரோ பற்றியோ :unsure:) கூட தேடி பார்த்ததாக கூறியிருந்த மாதிரி இருக்கு. எங்கு என்பதை மறந்து விட்டேன். இல்லாவிட்டால் அந்த link ஐயும் தந்து உதவி செய்திருப்பேன். :icon_idea:

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

நல்ல கதை நீளமில்லை. ஆனால் சின்னராசு சூப்பரா நடிச்சான்

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

பாத்திரம் என்று கூறியதன் மூலம் இதுவும் ஒரு கட்டுக்கதை என்பதை ஏற்றுள்ளீர்கள். :D

ஆனாலும் நம்ம சின்னராசு என்று எழுதி விட்டீர்கள். கவனம்..... சில நாட்களில் உங்கள் பெயரையும் போட்டு கதை எழுத தொடங்கி விடுவார்கள். மக்கள் கோயில் கோயிலா போய் பாலபிசேகம் செய்தார்கள். அதனால் இறைவன் பருதி அண்ணாவை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் சொல்லி விடுவார்கள். :lol::icon_idea:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

:D

நல்ல கதை நீளமில்லை. ஆனால் சின்னராசு சூப்பரா நடிச்சான்

அவருக்கு பெரிய விருது காத்து இருக்கு..எந்தப் பெரிய நடிப்பு நடிச்சு இருக்கிறார்

பாத்திரம் என்று கூறியதன் மூலம் இதுவும் ஒரு கட்டுக்கதை என்பதை ஏற்றுள்ளீர்கள். :D

ஆனாலும் நம்ம சின்னராசு என்று எழுதி விட்டீர்கள். கவனம்..... சில நாட்களில் உங்கள் பெயரையும் போட்டு கதை எழுத தொடங்கி விடுவார்கள். மக்கள் கோயில் கோயிலா போய் பாலபிசேகம் செய்தார்கள். அதனால் இறைவன் பருதி அண்ணாவை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் சொல்லி விடுவார்கள். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல இணைப்புக்கள் அந்த அமைப்பின் பெயர் மற்றும் முகவரியுடன் ஏற்கனவே இந்த களத்தில் இணைக்கப்பட்டவை. இதை எழுதிய சுதந்திர ஊடகவியலாளர் ஏனோ **[/size][size=4]பெயரை [/size][size=4]குறிப்பிடவில்லை. ஆனால் தனது பெயரை (உண்மையான பெயராக இருக்கலாம்) மின்வலை முகவரியை (அது வேலை செய்கிறது) இணைத்து தனது மேல் நம்பிக்கை வையுங்கள் என உலகத்தை கேட்டுள்ளார். [/size]

[size=4]** [/size][size=4]எழுத்துப்பிழை திருத்தப்பட்டது [/size]

எவரும் வெளியாகத் தெரியும் எந்த அமைப்பின் பெயரையும் தமது ஆக்கங்களில் பாவிக்கமுடியும். எனவே பெயரைக் குறிப்பிட விருப்பம் தெரிவிக்காதவரின் கருத்து என்று எழுதப்படுவதற்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை. அதனை ஆதாரமாக வைத்து தனது கதைகளை நம்பும்படி கேட்பது நியாயமுமில்லை.

பெயரை வெளியே சொல்லவிரும்பாத ஒருவரின் கருத்து இப்படி இருந்தால், அந்த அமைப்பில் முக்கிய பதவியில் இருப்பவரும் இந்த சுதந்திர ஊடகவியலாளரின் கதைகளில் உண்மை இருக்கின்றது என்பதற்கு உடந்தையாகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பிரான்சை பற்றி சொல்லிவிட்டார்கள். அது ஒரு பானை சோற்றுக்கு பதமாக எடுத்தக்க ஒரு சோறாகாது.

மேற்குநாடுகளின் புலனாய்வுகள் விட்டு பிடிப்பார்கள். ஆனால் பிரான்சுப் புலனாய்வு விட்டு பார்க்கிறார்கள்.

தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும்தான் கோஸ்டி மோதல்களும், சண்டைகளும், கொலைகளும் நடக்கின்றன. சுயமாகத் தொழில் செய்து முன்னேறும் சமூகத்தில் தாதாக்களும் அடியாட்களும் வைத்து அதே சமூகத்தில் உள்ளவர்களின் உழைப்பில் வாழ்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். அரசியல் செய்பவர்களுக்கும் அதிகாரங்கள் தேவை என்பதால் கும்பல்களின் அனுசரணையும் தேவை. இதையெல்லாம் வெளிப்படையாகச் செய்யமுடியாது, செய்யவும் மாட்டார்கள் என்பது பார்க்கும் தமிழ்ப்படங்களில் இருந்தே புரிந்துகொள்ளலாம்!

தமிழ் படங்களில் அரசியல் தர செய்திகளா?. யார்? இவற்றை எடுக்கிறார்கள்?. புலம் பெயர் கோஸ்டிக்கும் பங்கா? நான் படம் பார்ப்பது குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.