Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொஞ்சம் சிரிக்கலாம்

Featured Replies

  • தொடங்கியவர்

வாகன ஓட்டிகள் ...

 

 

http://www.youtube.com/watch?v=I9AWgEYh_gk

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

12656_535539223142922_1589407080_n.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 டொராண்டோ சுற்றுலா  :D  

 

  • தொடங்கியவர்

என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா...?

 பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு. :(

 

அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு...?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க  :(

 

மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு...?
நம்ம வீட்ல தாங்க...

 

நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே ¬...!!?


நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு..


 

நம்ம மாடா...?
ஆமாங்க...

 

அய்யய்யோ....!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை ¬யில் விழுந்துரிச்சு. :(
 
 

வீடு எப்படிடா எரிஞ்சது....?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க..¬..

 

குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா...!
அதுக்காக... செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா...?

 

யார்ரா செத்தது...?
உங்க அம்மா...

 

எப்படிடா செத்தாங்க...?
தூக்கு போட்டுக்கிட்டு.  :(
 
 

அவமானத்தில்தான்  :(

 
 

என்னடா அவமானம்...?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா.

 

 ஓடிப்போனது யாருடா...?
உங்க பொண்டாட்டிதான். :D

 

-------------------------------------

 

நெட்ல சுட்டதை சுட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் சொல்லுறது ஆழமாய் நோன்டக்கூடாது என்டு :lol:

உதுக்குத்தான் சொல்லுறது ஆழமாய் நோன்டக்கூடாது என்டு :lol:

 

 உதுக்குத்தான் சொல்லுறது போகும்போது மனைவியையும் கூட்டிக்கிட்டு போகனுமென்று :lol:

  • தொடங்கியவர்

307620_119243651576854_1316112283_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எங்கடை ஊரில் தோசையை இருபக்கமும் திருப்பிப் போடுவதால் ஒரே மாதிரி இருக்கும்.. :rolleyes:

 

Spoiler
ஜால்ரா.. :D
  • கருத்துக்கள உறவுகள்

307620_119243651576854_1316112283_n.jpg

 

அகூதாவிற்கு காலமாற்றம் நல்ல வேலை செய்கின்றது :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
 
 
548824_563712730309005_86828832_n.jpg
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஸ்கைப் இல் பேசிக்கொள்ளும் நாய்கள்..!

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=uIdwXbTDN7w



நாய்கள் இரண்டு ஸ்கைப்பினுடாக ஊளையிட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளியொன்று தற்போது இணையத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அமெரிக்காவின் வொஷிங்டனைச் சேர்ந்த நாயொன்றும், ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்துவரும் நாயொன்றுமே இவ்வாறு ஸ்கைப்பில் சந்திக்கொண்டுள்ளன.


இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நண்பர்கள் தமது நாய்களை ஸ்கைப் வீடியோவில் சந்திப்பதற்கு வாய்ப்பளித்தனர். அதன் பின்னர் நாய்கள் இரண்டும் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் ஆச்சரியமூட்டுவதாக அமைந்ததாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறித்த நாய்கள் இரண்டும் பொக்ஸ் டெரியர் இனத்தைச் சேர்ந்தவை.

 

http://www.virakesari.lk/article/interesting.php?vid=73

  • கருத்துக்கள உறவுகள்

வாகன ஓட்டிகள் ...

 

 

http://www.youtube.com/watch?v=I9AWgEYh_gk

இதை... ரசித்தேன் அகூதா.....

  • தொடங்கியவர்

சிங்கிளா, டபுளா…?

 

 

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

 

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!


கடவுள்: அது கஷ்டமாச்சே…கடல்ல எப்பிடிப்பா ரோடு போட முடியும் வேறு ஏதாவது கேள்.

 

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதிர்த்து பேசக்கூடாது ...!!! அப்படி செய்யுங்க...சாமி...!!


கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

 

 

திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்

kannadasan.jpg

 

 

அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

 

 

http://eniyavaikooral.blogspot.com/2012/10/blog-post.html
 

  • தொடங்கியவர்

தவறுதலாக தன் மேனேஜர்கு போன் செய்த ஊழியர்)

 

ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....


மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

 

ஊழியர் :தெரியாது ஏன்???


மேனேஜர் :நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

 

ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?


மேனேஜர் : தெரியாது...!!!!-!

 

ஊழியர் : நல்லவேளை தெரியல....... ;-)

 

37091_543718385646416_1653530752_n.png

  • கருத்துக்கள உறவுகள்
தவறுதலாக தன் மேனேஜர்கு போன் செய்த ஊழியர்)

 

ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....

 

மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

 

ஊழியர் :தெரியாது ஏன்???

 

மேனேஜர் :நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

 

ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?

 

மேனேஜர் : தெரியாது...!!!!-!

 

ஊழியர் : நல்லவேளை தெரியல....... ;-)

 

37091_543718385646416_1653530752_n.png

 

நண்பன் பட உல்டா :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வயதுக்க வந்த தமிழ் ஆண் ..சாமத்தியவீடு

 

 


Edited by akootha

வயதுக்க வந்த தமிழ் ஆண் ..சாமத்தியவீடு

 

 

அப்பாடா ஆண்களுக்கும் இப்படி விழா எடுக்கலாமா?தற்போதுதான் எமது சமுதாயம் விழித்து கொண்டதா?இனிமேல் ஆண்களுக்கும் சீர்வரிசை பண்ண வேண்டி வருமோ?இதை தரவேற்றம் செய்த குஞ்சுமணிக்கு வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்

அப்பாடா ஆண்களுக்கும் இப்படி விழா எடுக்கலாமா?தற்போதுதான் எமது சமுதாயம் விழித்து கொண்டதா?இனிமேல் ஆண்களுக்கும் சீர்வரிசை பண்ண வேண்டி வருமோ?இதை தரவேற்றம் செய்த குஞ்சுமணிக்கு வாழ்த்துக்கள் 

 

 பெண் சம உரிமைகளை கேட்டு போராடி பெறும்பொழுது ஆண்களும் கேட்கிறார்கள்  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,

 

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'

 

''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'

 

''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'

 

''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'

 

''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'


''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''

 

528552_559878624030392_375885450_n.jpg

அர்ஜூன் அண்ணா தூள் 

  • தொடங்கியவர்

மகனுக்கு "கங்ணம் ஸ்டைல்/காணா" படிப்பிக்க 'டியூசன்'

 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.