Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணித புதிர்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

இருக்கும் போதே அனுபவிக்கனும், அதை உங்கள் நண்பி செய்கிறார், தொடருங்கள்... 


மொத்தம் 17 பேர் பாட்டிக்கு சென்றார்கள் ...........இதில்

6 பேர் ஆண்கள்

 

11 பேர் பெண்கள்

 

 

 

ஆணுடன்  பெண் மட்டுமே ஆடியிருந்தால் மேல்சொன்ன விடை சரியாய் இருக்கும் .

 

ஆணுடன் ஆணும் ஆடுபவர்களை இருந்தால் வேறு விடை வரும் ..நன்றி. :)  :rolleyes:

 

தமிழ்சூரியன் எல்லோரும் மற்றவர்களுடன் ஆடினார்கள் ஒரு முறை மட்டும் ( (ஆண்-பெண்), (ஆண்-ஆண்), (பெண்-பெண்))

  • Replies 195
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

n(n+1)/2 = 66

n=11

 

மொத்தம் 11 பேர் பார்ட்டிக்கு சென்றார்கள். :D

  • தொடங்கியவர்

n(n+1)/2 = 66

n=11

 

மொத்தம் 11 பேர் பார்ட்டிக்கு சென்றார்கள். :D

 

விடை தவறு, சிறு பிழையிருக்கு. இந்த சமன்பாட்டை விளக்கினால் விடை கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மன்னிக்கவும் 12 பேர்

  • தொடங்கியவர்

ஆம் மன்னிக்கவும் 12 பேர்

 

சரியான விடை காவலி, பாராட்டுக்கள்

இருக்கும் போதே அனுபவிக்கனும், அதை உங்கள் நண்பி செய்கிறார், தொடருங்கள்... 

 

தமிழ்சூரியன் எல்லோரும் மற்றவர்களுடன் ஆடினார்கள் ஒரு முறை மட்டும் ( (ஆண்-பெண்), (ஆண்-ஆண்), (பெண்-பெண்))

 

வணக்கத்துக்குரிய வந்தியத்தேவன் :D

நீங்கள் ஜோடி என்று குரிப்பிட்டபடியினால் நான் ஆணும் பெண்ணும் தான் ஜோடி என்று யதார்த்தமாய் யோசித்துவிட்டேன். அதனாலேயே அந்த விடையைத்தந்தேன்  ...........அப்புறம்தான் தெரிந்தது அது பனானா பார் பாட்டிஎன்று .......... :lol:  :lol:

 

ஆகவே இதை வாசித்து விடைஎழுத முதல் நண்பர் காவாலி முந்திவிட்டார் .அவருக்கும் என் பாராட்டுக்கள் ............

:D

இன்னும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் .இரவு 10.30 வரை தாராளமான நேரம் இருக்கு ....[இந்தக்கிழமை மட்டுமே இந்தச்சலுகை]

எனது நண்பி அனுபவிக்கிறார் என்று வேற கூரியிருக்கிரீங்க யாரந்த நண்பி ..எனக்கே தெரியாமலா.?? :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அறையின் ஒரு மூலையில் சில எலிகள் இருந்தன. ஒரு பூனை வந்து அவற்றில் சில எலிகளை சாப்பிட்டு விட்டது. மீதம் இருந்த எலிகள் அடுத்த மூலைக்கு சென்றன. அவற்றின் மேல் பரிதாபப்பட்ட கடவுள் அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி விட்டார். அந்த மூலைக்கு வந்த இன்னொரு பூனை முதல் மூலையில் எவ்வளவு எலிகள் உன்னப்பட்டதோ அந்த அளவு எலிகளை விழுங்கிவிட்டது. இப்போது மீதம் இருந்த எலிகள் மூன்றாவது மூலைக்குத் தாவின. இப்போதும் அவற்றின் எண்ணிக்கையை கடவுள் இருமடங்காக்கி விட்டார்.

மூன்றாவது  மூலையிலும் ஒரு பூனை வந்து முதல் பூனை சாப்பிட்ட அளவு எலிகளை சாப்பிட்டு விட்டது. பாக்கி இருந்த எலிகள் நான்காம் மூலைக்குச் சென்று விட்டன.  இப்போதும் கடவுள் அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி விட்டார். 

இந்த மூலையிலும் ஒரு பூனை வந்து முதல் பூனை சாப்பிட்ட அளவு எலிகளை சாப்பிட்டது. இப்போது பாக்கி எலிகளே இல்லை.

அப்படியானால், முதல் மூலையில் ஆரம்பத்தில் இருந்த எலிகளின் எண்ணிக்கை எத்தனை? ஒவ்வொரு மூலையிலும் பூனைகள் சாப்பிட்ட எலிகள் எத்தனை?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நுணா இன்றுதான் கவனித்தேன், விடை 15 எலி - 8 சாப்பிட்டது, இதை இலகுவாக இம் முறையில் செய்யலாம்

 

A- எலி, B-சாப்பிட்டது

 

(((A-B) x 2-B) x 2-B) x 2 - B = 0

 

8A = 15B

  • தொடங்கியவர்

இதில் கேட்கப்பட்டிருக்கனும் மிகக் குறைந்த எண்ணிக்கையென

 

(15,8)

(30,16)

(60,32).......................

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

5325 :rolleyes::)

 

 

54325

 

1=/= 5... 1st term = 5, 2nd term of pattern = 25 likewise.. 5th term = 54325

 

தவறான விடை :D

 

 

1 = 5

2 = 25

3 = 325

4 = 4325

5 = ?

 

5 = 1  என்பதே சரியான விடையாகும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நுணா இன்றுதான் கவனித்தேன், விடை 15 எலி - 8 சாப்பிட்டது, இதை இலகுவாக இம் முறையில் செய்யலாம்

 

A- எலி, B-சாப்பிட்டது

 

(((A-B) x 2-B) x 2-B) x 2 - B = 0

 

8A = 15B

 

சரியான விடை . வந்திக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மூன்று இலக்க எண். 
முன்னூறை  விட சிறியது
ஒற்றைப்படையில் இருக்கிறது. 
ஐந்தால் வகுபடும். 
முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது. 
ஒரே ஒரு இலக்க எண் மட்டுமே இரட்டைப்படையில் இருக்கும்.
மூன்று இலக்கங்களையும் கூட்டினால் எட்டு வரும்.
 
அந்த எண் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை . வந்திக்கு வாழ்த்துக்கள். :) 

  • 1 month later...
  • தொடங்கியவர்

100 மீற்றர் நீளம் கொண்ட அணி ஒன்று சீரான வேகத்தில் அணிவகுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, கடைசியில் உள்ள வீரன் முதலில் உள்ள வீரனுக்கு கடிதம் கொடுப்பதற்காக முன்னாள் ஓடுகின்றார், அணி வகுப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் போது.

 

கடைசி வீரன் கடித்தத்தை முதல் வீரனிடம் கொடுத்துவிட்டு நிற்க்காமல் மீண்டும் பழைய இடத்திற்கு ஓடுகின்றார்.

 

அவர் பழைய இடத்திற்கு மீண்டு வர, அணி வகுப்பு 100 மீற்றர் முன்னேறியிருந்தது.

 

கேள்வி கடைசி வீரன் ஒரே வேகத்தில் ஓடியிருந்தால் மொத்தமாக எவ்வளவு தூரம்  ஓடியிருப்பார்? 

 

விடையை விளக்கத்துடன் தரவும்

 

marching+band.gif

 

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

200 மீட்டர்
முன்னால் ஓடும் பொது 150 மீற்றரும் திரும்ப வரும் போது 50 மீற்றரும்.

 

  • தொடங்கியவர்

நன்றி வசி உங்கள் முற்ச்சிக்கு விடை தவறு.

 

இதற்கு வேகம் = தூரம் / நேரம் என்பதை பயன்படுத்தி முயற்ச்சிக்கலாம்

 

 

 

கடைசி ஆள் குழுவின் வேகத்தைவிட குறித்த மடங்கு வேகத்தில் ஓட வேண்டும்.

 

குழு 62 மீ போய் உள்ளபோது அவர் 100 ஓடினால் முதலாமவரை பிடிப்பார்.

 

வேக வீத 100/62.

 

பின் திரும்பும் போது மிச்சம் 34மீ குழு அசையும் போது அவர் 38 * 100/62 ஓடியிருப்பார்.

 

 = 61 மீ.

 

அவர் ஓடிய மொத்த தூரம் = 100 + 61 = 161மீ

 

 

Edited by ஈசன்

  • தொடங்கியவர்

ஈசன் நன்றி உங்கள் முயற்ச்சிக்கு, இந்த விடையும் பிழை

 

 

கடைசி வீரன் முதல் வீரனை அடைய அணி முன்னேறிய தூரம் = X

 

அணி மீண்டும் முன்னேறிய தூரம் = 100-X

 

கடைசி வீரன் முதல் வீரனை அடைய ஓடிய தூரம் = 100+X

 

கடைசி வீரன் மீண்டும் பழைய நிலைக்கு ஓடிய தூரமும் = 100-(100- X)=X

 

கடைசி வீரன் ஓடிய வேகம் = V1

 

அணிவகுப்பு வீரர்களின் சீராண வேகம் = V2

 

கடைசி வீரன் முதல் வீரனை அடைய எடுத்த நேரமும் அணி முன்னேறிய நேரமும் = T1

 

கடைசி வீரன் திரும்பி பழைய நிலைக்கு அடைய எடுத்த நேரமும் அணி மீண்டும் முன்னேறிய நேரம் = T2

 

கடைசி வீரன் முதல் வீரனை அடைய எடுத்த மொத்த தூரம் = 100+X

 

 

எனவே V1 = (100+X) / T1

 

அணி முன்னேறிய தூரம் கடைசி வீரன் முதல் வீரனையடையும் போது = X

 

எனவே V2 = X/T1

 

V2/V1 = X/(100+X)

 

கடைசி வீரன் மீண்டும் ஓடிய தூரம் = (100-(100-X)) = X

 

V1 = X/T2

 

அணி முன்னேறிய தூரம்= (100-X)

 

V2 =(100-X)/T2

 

V2/V1 = (100-X)/X

 

ஆகவே (100-X)/X = X/(100+X)

 

X=70.71mtr

 

ஓடிய மொத்த தூரம் = 241.42mtr

 

 

 

ஆ.. அணியின் நீளம் 100மீ என்பதை மறந்து விட்டேன்.
 
நேற்றிரவு கணிதம் மூலம் முயற்சிப்போம் என்றபோது 3 தெரியாக்கணியம் வந்து கடுப்பேத்தியது.
  • தொடங்கியவர்

எனக்கும் இப்படி பல நாட்கள் இருந்திக்கு ஈசன்

 

 

ஒரு பாடசாலை உயர் வகுப்பில் 3 கூட்டமைப்புகள் இருக்கின்றது.

 

இவற்றில் இருவர் மட்டுமே, மூன்று கூட்டமைப்பிலும் அங்கத்தவராக சேரலாம் / இருக்கலாம்.

 

ஆனால் ஒவ்வொரு இரண்டு சோடி அமைப்புகளிலும் 3 பேர் பொது அங்கத்தவராக உள்ளனர்.

 

எனின், ஆகக் குறைந்தது எத்தனை அங்கத்தவர்கள் ஒரு அமைப்பில் இருக்க வேண்டும்?

 

விடையை விளக்கத்துடன் தரவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி பல நாட்கள் இருந்திக்கு ஈசன்

 

 

ஒரு பாடசாலை உயர் வகுப்பில் 3 கூட்டமைப்புகள் இருக்கின்றது.

 

இவற்றில் இருவர் மட்டுமே, மூன்று கூட்டமைப்பிலும் அங்கத்தவராக சேரலாம் / இருக்கலாம்.

 

ஆனால் ஒவ்வொரு இரண்டு சோடி அமைப்புகளிலும் 3 பேர் பொது அங்கத்தவராக உள்ளனர்.

 

எனின், ஆகக் குறைந்தது எத்தனை அங்கத்தவர்கள் ஒரு அமைப்பில் இருக்க வேண்டும்?

 

விடையை விளக்கத்துடன் தரவும்

 

venn.jpg

 

 

விடை = 2

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் உங்கள் முயற்ச்சிக்கு, மற்றவர்களின் பதில்களையும் பார்த்துவிட்டு பதிலிடுகின்றேன்

 

sum_zps7e05e1e0.png

 

= 4

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி பல நாட்கள் இருந்திக்கு ஈசன்

 

 

ஒரு பாடசாலை உயர் வகுப்பில் 3 கூட்டமைப்புகள் இருக்கின்றது.

 

இவற்றில் இருவர் மட்டுமே, மூன்று கூட்டமைப்பிலும் அங்கத்தவராக சேரலாம் / இருக்கலாம்.

 

ஆனால் ஒவ்வொரு இரண்டு சோடி அமைப்புகளிலும் 3 பேர் பொது அங்கத்தவராக உள்ளனர்விளங்கவில்லை

 

எனின், ஆகக் குறைந்தது எத்தனை அங்கத்தவர்கள் ஒரு அமைப்பில் இருக்க வேண்டும்?

 

விடையை விளக்கத்துடன் தரவும்

 

Edited by vaasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.