Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும்  ஒன்றுகூடல் லண்டனில் உள்ள  பிரான்சு தூதரகம் முன்பாக   இடம்பெறவுள்ளது.
 
கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
 
மேலதிக தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
Tel : 020 3371 9313
 
21122012%20001.jpg
 
  • Replies 81
  • Views 5.4k
  • Created
  • Last Reply

அது என்ன 44ஆம் நினைவு நாள்? பிரித்தானியாவில் பரிதியின் கொலைக்கு நீதி கேட்கிறார்களா?

தாயகத்தில் கூட்டமைப்பு நடத்துகின்ற உண்ணாவிரதத்திற்கு சமனாக பிரித்தானியாவிலும் நாடு கடந்த அரசு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.

அதற்கு போட்டியாக ஒருங்கிணைப்புக் குழு இந்த 44ஆம் நாள் நினைவு பேரணியை அறிவித்திருக்கிறார்கள். மக்களை ஒன்றாக ஒரு இடத்தில் கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது.

பிரான்ஸில் நாளை 22.12 அன்றே 45ஆம் நாள் நினைவை ஒட்டி பரிதிக்காக பேரணி நடத்துகிறார்கள்.

Edited by சபேசன்

ஒன்றுமே இல்லாது தற்செயலாகவோ தன்னிச்சையாகவோ நடந்தாலோ விடமாட்டார்கள் போல கிடக்குது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்றுமே இல்லாது தற்செயலாகவோ தன்னிச்சையாகவோ நடந்தாலோ விடமாட்டார்கள் போல கிடக்குது :rolleyes:

முகங்களை  தெரிந்து கொள்ளுங்கள்

அதற்கான நேரமிது

நாங்களும் முகங்களை தெரிந்து கொண்டதனால்தான் இதை சொல்கிறோம். பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனை இன்று முக்கிய ஒரு விடயம். அதற்காக தாயகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் போராட்டம் நடத்தச் சொல்லி மாணவர்கள் கேட்கிறார்கள்.

நாடு கடந்த அரசோடு சேர்ந்து நடத்த முடியாது விட்டால் தனியாக என்றாலும் மாணவர்களுக்காக போராடலாம்.

ஆனால் இவர்கள் ஒன்றை குழப்ப வேண்டும் என்றால் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் "மாவீரர் மாதம்" என்பதை கண்டு பிடித்தார்கள். இப்பொழுது "44ஆம் நினைவு நாள்" என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி குழப்புகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தால், இயல்பாகவே எங்களின் எதிர்ப்பும் இன்னும் கடுமையாகும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய நாங்கள் எப்போதாவது 44ஆம் நினைவு நாள் என கடைப்பிடித்திருக்கிறோமா? அறிந்தவர்கள் தெரியத் தாருங்கள்.

நாங்களும் முகங்களை தெரிந்து கொண்டதனால்தான் இதை சொல்கிறோம். பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனை இன்று முக்கிய ஒரு விடயம். அதற்காக தாயகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் போராட்டம் நடத்தச் சொல்லி மாணவர்கள் கேட்கிறார்கள்.

நாடு கடந்த அரசோடு சேர்ந்து நடத்த முடியாது விட்டால் தனியாக என்றாலும் மாணவர்களுக்காக போராடலாம்.

ஆனால் இவர்கள் ஒன்றை குழப்ப வேண்டும் என்றால் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் "மாவீரர் மாதம்" என்பதை கண்டு பிடித்தார்கள். இப்பொழுது "44ஆம் நினைவு நாள்" என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி குழப்புகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தால், இயல்பாகவே எங்களின் எதிர்ப்பும் இன்னும் கடுமையாகும்.

அமைதியான ,அரசியல்போராட்டங்களிலேயே ஏன்தான் ஐயா உங்களுக்கு இந்த குழப்பங்கள் .எங்கும் ,எதிலும் ,எவ்வாறும் போராட்டங்கள் நடக்கட்டும். அதுதானே இன்று எங்களிக்கு தேவை ஐயா .ஏன் குறிப்பிட்டு குழப்பத்தை உருவாக்க முனைகின்றீர்கள் . மக்களாகிய நாம் தெளிவு .எழுதும் நீங்கள் ஏன் இந்த குழப்பம் ??

பரிதியின் கொலைகாரனை கண்டுபிடி என்று பிரித்தானியாவில் நின்று பேரணி செய்வதில் என்ன அரசியல் இருக்க முடியும்?

- "உட்கொலை" என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பது

- நாடு கடந்த அரசின் உண்ணாநிலைப் போராட்டத்தை குழப்புவது

இதைத் தாண்டி இதில் என்ன இருக்கிறது?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்
சபேசனின்ட கருத்து தான் என்னோடதும் பரிதியின் கொல்லைக்கும் ,பிரித்தானியாவுக்கும் என்ன சம்மந்தம்?...எந்த வகையில் பரிதி கொலைக்கு பிரித்தானியா நீதி வழங்கும் என எதிர் பார்க்கிறார்கள்?...ஊரில் நடக்கிற கொலைகளை பிரித்தானியா கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறதில் ஒரு நியாயம் இருக்குது?...பிரித்தானியா அர‌சே நினைக்கும் உந்த தமிழர்களுக்கு வேற வேலை,வெட்டி இல்லையா என்று...பரிதி பிரான்சில் வசித்ததால் அங்கு நியாயம் கேட்பதில் ஒரு நியாயம் இருக்குது <_<
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தான் சொன்னாலும் மக்கள் சக்த்திய ஒருங்கிணைக்க கூடிய வல்லமை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிடம் மட்டுமே இருக்கின்றது மக்களும் அவர்கள் பின்னால் தான் ஆகவே தங்களுக்கு ஏற்றால் போல் குத்துக்கரணம் அடித்து எழுதும் சபேசன் அண்ணா போன்றவர்களை மக்கள் அடையாளம் கண்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது

இல்லை ரதி! அவர்கள் பிரான்ஸ் தூதரகம் முன்புதான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதனால் எள்ளளவும் பிரயோசனம் இல்லை என்று இவர்களுக்கு தெரியும். இது சில சுயநல அரசியல் நோக்கங்களோடு செய்யப்படுகின்ற ஒரு நாடகம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின்ட கருத்து தான் என்னோடதும் பரிதியின் கொல்லைக்கும் ,பிரித்தானியாவுக்கும் என்ன சம்மந்தம்?...எந்த வகையில் பரிதி கொலைக்கு பிரித்தானியா நீதி வழங்கும் என எதிர் பார்க்கிறார்கள்?...ஊரில் நடக்கிற கொலைகளை பிரித்தானியா கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறதில் ஒரு நியாயம் இருக்குது?...பிரித்தானியா அர‌சே நினைக்கும் உந்த தமிழர்களுக்கு வேற வேலை,வெட்டி இல்லையா என்று...பரிதி பிரான்சில் வசித்ததால் அங்கு நியாயம் கேட்பதில் ஒரு நியாயம் இருக்குது <_<

ஹலோ வாசிச்சிட்டு கருத்தேளுதணும் அது France தூதரகத்தின் முன் நடக்க இருக்கும் போராட்டம்

இந்த "மக்கள்" "மக்கள்" என்று எல்லோரும் சொல்கிறீர்களே! அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் யாராவது சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி! அவர்கள் பிரான்ஸ் தூதரகம் முன்புதான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதனால் எள்ளளவும் பிரயோசனம் இல்லை என்று இவர்களுக்கு தெரியும். இது சில சுயநல அரசியல் நோக்கங்களோடு செய்யப்படுகின்ற ஒரு நாடகம். அவ்வளவுதான்.

சுயநலம் சுயநலம் சுயநலம் செய்பவர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆச்சே அதனால் சுயநலம் நீங்கள் எழுதுவது மட்டும் பொது நலம் உங்களுடைய இந்த குத்க்க்கறன அரசியல் வேண்டுமாக இருந்தால் இந்தியாவில் எடுபடலாம் எமது மக்களிடம் முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
ஏன்,எதற்கு ஆர்ப்பாட்டம் செய்கிறது என்று ஒரு விவஸ்தை இல்லை.
 
சுண்ட‌ல் நானும் வாசித்துத் தான் கருத்தெழுதினேன்...அந்த வீதியில் சனமே இருக்காது அதை விட‌ 3 மணியோட‌ அலுவலகத்தை பூட்ட ஆயத்தப்படுத்துவினம்...அதுக்குள்ள 31/2- 5 ஆர்ப்பாட்டமாம் :D
 
  • கருத்துக்கள உறவுகள்
சபேசனின்ட கருத்து தான் என்னோடதும் பரிதியின் கொல்லைக்கும் ,பிரித்தானியாவுக்கும் என்ன சம்மந்தம்?...எந்த வகையில் பரிதி கொலைக்கு பிரித்தானியா நீதி வழங்கும் என எதிர் பார்க்கிறார்கள்?...ஊரில் நடக்கிற கொலைகளை பிரித்தானியா கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறதில் ஒரு நியாயம் இருக்குது?...பிரித்தானியா அர‌சே நினைக்கும் உந்த தமிழர்களுக்கு வேற வேலை,வெட்டி இல்லையா என்று...பரிதி பிரான்சில் வசித்ததால் அங்கு நியாயம் கேட்பதில் ஒரு நியாயம் இருக்குது <_<
 
அகூதா அண்ணா சொன்னது போல.. தயவுசெய்து நீங்கள் கருத்தை ஒரு முறை வடிவா வாசிச்சிட்டு.. கருத்தொழுதுங்கோ. நீங்கள் மற்றவர்களை சகட்டு மேனிக்கு சப்போட் பண்ணப் போய் அவர்கள் அசடு வழியும் நிலையே இங்கு காணப்படுகிறது. :D:lol:

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி விசாரணையை துரிதப்படுத்தக் கோரி பிரான்ஸ் தூதரகம் முன் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறல்ல. பிரான்ஸில் முன்னரும் நடத்தப்பட்ட கொலைகளுக்கு இன்று வரை சரியான தீர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பில் பிரான்ஸ் அரசுக்கும் காவல்துறைக்கும் மக்கள் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பது உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்கவும் ஊகங்களில் அமையும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவும் உதவும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இன்றைக்கு பலர் உள்ளே நடக்கின்ற பங்குபிரிப்புகள், படுகொலைகள் பற்றி எல்லாம் வெளிப்படையாக பேச வெளிக்கிட்டு விட்டார்கள். ஆகவே தமிழ்நாட்டு அரசியல் போன்று கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் எங்களிடமும் இந்த தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் சரி வராது.

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் பரிதி அண்ணாட கொலை என்ற உடன சிலர் விழுந்தடிச்சு விசாரணைக்கு கண்டனமும் குழப்பமும் கூக்குரலும் போடினம். அவரும் ஒரு தமிழன் மனிதன் தானே. அவரின் படுகொலையின் சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்தினால் சகட்டு மேனிக்கு கட்டுரை எழுதி பிழைப்பு நடத்துவதும் குழப்பம் பண்ணுவதும் கஸ்டம் என்றா நினைக்கிறார்கள் சிலர். யாரோ.. ஒரு மனிதனின் இழப்புக்கு நீதி கேட்டு விசாரணையை துரிதப்படுத்தக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையும் நீதியும் சரியான வழியில் வந்தாலே நம்பகத்தன்மைகள் அங்கு இருக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு தற்காலிக மன அமைதியாவது கிட்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
அகூதா அண்ணா சொன்னது போல.. தயவுசெய்து நீங்கள் கருத்தை ஒரு முறை வடிவா வாசிச்சிட்டு.. கருத்தொழுதுங்கோ. நீங்கள் மற்றவர்களை சகட்டு மேனிக்கு சப்போட் பண்ணப் போய் அவர்கள் அசடு வழியும் நிலையே இங்கு காணப்படுகிறது. :D:lol:

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி விசாரணையை துரிதப்படுத்தக் கோரி பிரான்ஸ் தூதரகம் முன் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறல்ல. பிரான்ஸில் முன்னரும் நடத்தப்பட்ட கொலைகளுக்கு இன்று வரை சரியான தீர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பில் பிரான்ஸ் அரசுக்கும் காவல்துறைக்கும் மக்கள் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பது உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்கவும் ஊகங்களில் அமையும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவும் உதவும்..! :icon_idea:

ஓ அப்படியா உங்கட‌ கருத்திற்கு மிக்க நன்றி...இப்பவும் என்னுடைய கருத்து நான் முதல் எழுதின கருத்து தான் ^_^
 
  • கருத்துக்கள உறவுகள்
ஓ அப்படியா உங்கட‌ கருத்திற்கு மிக்க நன்றி...இப்பவும் என்னுடைய கருத்து நான் முதல் எழுதின கருத்து தான் ^_^
 
அது உங்களுக்கு கருத்து. நமக்கு காமடியா இருக்குது. பாவம் சபேசன் அண்ணா. உங்கள் கருத்துக்கு அவர் பொழிப்புரை எழுத வேண்டிய சூழல். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் இன்டைக்குத் தானே ஆர்ப்பாட்டம் ஆதர‌வு கொடுத்துக் கதைக்கிறீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு போகவில்லை 
 
சுண்டல்! வழமையாக ஒரு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேசுவது போன்றே பேசுகிறீர்கள். ஒரு மனிதனின் கருத்தை மறுப்பதற்கான வலு இல்லாதவர்கள் பயன்படுத்தும் மிக எளிமையான வழி இது. இதை விடுத்து ஒருங்கிணைப்புக் குழு இன்றைய நாளை தேர்வு செய்ததற்கான காரணத்தையும், இந்தப் போராட்டத்தின் அவசியத்தையும் வைத்து விவாதித்தால் அது ஆரோக்கியமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு என்பதே பரிதி அண்ணா கொலையில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட நீதியை நிலைநாட்ட வேண்டிய அவசியம் கருதித்தான். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் சூழ்நிலை எமக்கு அமையவில்லை. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னால் உள்ள மக்களின் நியாயத்தைப் புரிந்து கொள்கிறோம். :icon_idea::)

உங்கள மாதிரி வாயாலும்,கணணியாலும் கதைக்கிற ஆட்கள் எத்தனை பேரைப் பார்த்திருக்கோம் :D
 
என்னைப் பொறுத்த வரை இந்த ஆர்ப்பாட்டம் இங்கு தேவையில்லை என்பது தான் எனது கருத்து
 
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்.. உண்ணாவிரதம் காலை 8 மணியில் இருந்து நடக்கிறது. இது பின்னேரம் கொஞ்ச நேரம் தான். அதனால்.. இது அதனைக் குழப்பும் என்ற உங்கள் வாதம் ஏற்புடைய ஒன்றல்ல. பெறப்படும் அனுமதிகளுக்கு ஏற்பவே தான் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த முடியும். நாளையும் நாளை மறுதினமும்.. விடுமுறை பின்னர் நத்தார் புதுவருட விடுமுறைகள் என்பதால்.. இந்தத் தேதியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும்.

சும்மா சும்மா குழப்பம் விளைவிக்கும் நோக்கில் முழங்காலுக்கும் மொட்டம் தலைக்கும் முடிச்சுப் போடக் கூடாது. அதைச் சிங்களவன் மட்டும் செய்யல்ல.. நீங்களும் செய்ய விளைகிறீர்கள்... என்ற எண்ணப்பாடே இங்கு எழுகிறது.

எதிர்வரும் டிசம்பர் 21ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை   No. 10 Downing Street, Westminster, London  இடத்தில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. - ஈழநாதம்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.