Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவன் தான் மனிதன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=78dGSRfGjjc

 

இவன் தான் மனிதன். பலரும்சிந்திக்க வேண்டியது. :icon_idea:

கௌதம் போல இந்த உலகில் நாம் வாழ பழகினால்... வாழ்வு இனிமையானதே!

 

விவசாயம்  செய்து மாதம் 75000 எடுப்பது என்பதும் இனிமையான ஆரோக்கியமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், குமாரசாமியண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு அண்ணா. மனிதனுக்கு திருப்தி வந்தால் உலகம் எங்கேயோ போய்விடுமே

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், குமாரசாமி. 

 

நல்லதொரு பதிவு இவ்வருடத்தின் தொடக்கத்தில், இதை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் வாழ்க்கை சந்தோஷமே 

 

கல்யாணம் கட்டும்வரை எந்த பிரச்சனையுமில்லை, அதன்பின்தான் பல 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி இவன் தான் மனிதன் என்று மற்றவர்களை பாராட்டுவதை விட்டுவிட்டு நீங்களும் இதை பார்த்து ஒரு முன்னுதாரனமாக உங்கள் வெளி நாட்டு வாழ்க்கையை உதறி எறிந்து ஊருக்கு போய் நீங்களும் இப்பிடியானவற்றை சாதிக்கலாம் ஆனால் எங்களால தான் செய்யமுடியாதே அதனால இப்பிடியே அடுத்தவன பாத்து பாராட்டிட்டு இருப்பம் :D

வாழ்க்கையினை முழுவதுமாகத் திட்டமிட்டுவிடலாம் என்றொரு மாயை சந்தைப்பொருளாதாரத்தில் உருவாக்கப்படுவதும், அதன் வாயிலாக மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுவதும் மறுப்பதற்கில்லை. துணிவாகச் செயற்பட்ட இந்த இளைஞன் பாராட்டுதலிற்குரியவன் எனும் போதும் இதில் பல முனைகள் இவர் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றன.
 
உதாரணமாக, இந்த இளைஞன் மனைவி பற்றியும் மகன் பற்றியும் பேசுகிறார். குடும்பம் என்று ஏற்றுக்கொண்ட கணத்திலேயே அவர் விரும்பியோ விரும்பாமலோ சமூகமாகிவிடுகிறார். அப்படி ஆகிய பின்னர் தன்னைத் தனியலகாக நினைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து ஓட வெளிக்கிடுகையில் அவரது ஓட்டம் அவரது தவறான புரிதலைக் காட்டவே செய்யும். சைக்கிளை நினைத்துக் கொண்டு பேருந்தினை ஒரு பொறியியலாளர் வடிவமைப்பின் பேருந்து தடம்புரள அதிக நேரம் செல்லாது. உதாரணத்திற்கு, இந்த இளைஞன் தனது மகனை அரச பாடசாலையில் சேர்த்து எண்ணும் எழுத்தும் படிப்பிச்சபின் விசாசயம் படிப்பிக்கப்போறாரா? இல்லை தனியார் பாடசாலையின் கிழைகள் இவரது மகனையும் கவ்விச் செல்லுமா? இது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் ஒரு புறம்.
 
அடுத்து, கோப்பறேஷன் என்பது மனிதர்களாலும் பொருட்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பினும், நிறுவனம் என்பது தான் ஒரு தனி உயிரி என்பதாகவே செயற்படும். அதன் மனிதர்கள் முதற்கொண்டு அனைத்தும் தத்தமது சுயங்களைப் புரிய முடியாதவர்களாக நிறுவனம் என்ற உயரியின் அங்கங்களாக மட்டுமே அதனுள் தொடர முடியும். அத்தோடு மனிதன் உருவாக்கிய இந்த உயிரி, அணுகுண்டு போன்ற பல விடயங்களைப்போல், மனிதனைக் காட்டிலும் பலமடங்கு பலமானது. இந்த உயிரியினை எதிர்ப்பதற்கு அதைவிட்டு வெளியேறுவது தான் சரிபோன்று தெரியினும் அது அத்தனை இலகுவான கேள்வி அல்ல. உயிரி உயிருடன் இருக்கும்வரை, இந்தச் சூழல் அந்த உயிரிக்கு உகந்ததாகவே மருவிவரும். சூழலைத் தனக்கேற்றதாக மாற்றுவதன் மூலம் இச்சூழலிற்குத் தான் தான் தக்கதாக நிறுவனம் ஆக்கிக்கொள்ளும். அந்தச் சூழலிற்குள் நாங்கள் வாழவேண்டும் என்றால், நிறுவனத்திற்காக வாழ்வின் பாகங்களைத் தொலைத்தபடி உயிரைத் தக்கவைப்பதற்கு நிறுவனத்தின் ஆசி அவசியப்பட்டுத் தான் தீரும். விவசாயம் செய்ய விளைகின்ற இளைஞனின் நிலம் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்றாக்குவதற்கு நிறுவனத்திற்கு அதிக நேரம் செல்லாது. குறிப்பாகத் தனது மலிவான வேலையாட்களை விவசாயம் எதிர்க்கிறது என்றோ, உச்சலாபத்திற்குத் தடையாக இருக்கிறது என்றோ நிறுவனம் கருதின், தம்பியின் காணிக்குப் பக்கத்தில் ஒரு கொக்கோகோலா கொம்பனி பைப்பை போட்டு தண்ணியினை 'there will be blood' படத்தில் பெற்றோல் உறுஞ்சியது போல் உறிஞ்சிவிடக்கன நேரம் ஆகாது. அப்படித் தனித்தனிக் காணி என்று நிறுவனம் முயலாவிடினும் கூட, தெற்காசியாவில் விவசாயம் இந்த இளைஞனின் பேரனின் காலத்திற்குள் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும். சாத்தியமற்ற ஒன்றென்று கூட ஆகலாம். சூழலை நிர்ணயிப்பது நிறுவனத்தின் கையில் உள்ள நிலையில், நிலம் இருக்கிறது அது மாறிலி எனவே அனைவரும் உழுதுண்டு வாழ்வோம் என்பது எழுத நல்லாயிருக்கும். நடைமுறை மாறு படும்.
 
இப்ப மாதம் 75 ஆயிரம் வருகிறது என்கிறார் இளைஞர். இரண்டு இலட்சத்தை உதறியவர் தெரிந்தோ தெரியாமலோ 75 இடம் சிறைப்பட்டுத் தான் இருக்கிறார். இவரின் விவசாய வாழ்வில் போதும் என்று இவர் கருதும் தொகையினை நிர்ணயிக்கும் சுதந்திரத்தினை இவரிடம் நிறுவனங்கள் விட்டுவைக்கப்போவதில்லை. அதற்கு இவர் நிறுவனத்தில் வேலை செய்யவேண்டும் என்பதில்லை. பெட்டிக்குள் வாழ்வினைச் சுருக்கிக் கொள்தல் என்பது எமக்குள் ஒரு விடுதலை உணர்வினைக் கட்டவிழ்த்து மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. ஆனால் அந்தப் பெட்டி என்பது கூட உலகில் இலவசம் இல்லை. பெட்டியின் விலை தனிநபர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜப்பானில், கவித்துவமாக இல்லை உண்மையில் பெட்டி போன்ற இடங்களிற்குள் மனிதர்கள் வாழ்கிறார்கள். உலகில் எவரிற்கும் சொந்தமில்லாத பொது இடம் என்று ஒரு இஞ்சி இடம் தன்னும் இல்லை. நாங்கள் குதிரையில் சென்று கொடி குத்தி இந்த இடத்தில் நான் இவ்வாறு வாழுவேன் என்று சொல்லுவதற்கு உலகில் இடமில்லை. பெட்டி அடித்து வாழத்தலைப்படுவது அடுப்பில் இருக்கும் சட்டிக்குள் நீர் இன்னும் சுடத்தொடங்கவில்லை என்று விட்டு நீந்தக் கூடிய மீனைப் போலத் தான் இருக்கும். எனவே விவசாயத்தின் நிலம் முதலான அனைத்தும் எமது பூரணகட்டுப்பாட்டில் இருக்கும் மாறிலிகள் என்ற நினைப்பு இறந்துபோன காலத்திற்குரியது. செல்லுபடி அற்றது.
 
இன்றைய கட்டத்தில் நிறுவனத்தை எதிர்க்கவேண்டுமாயின் அது சமவுடமைக் கோசங்களாலும்; சுவரொட்டிகளாலும் குறித்த ஆடைகளை அணிவதாலும் சாத்தியமாகிவிடாது. ஊடகம் முதலான ஏகப்பட்ட முனைகளில் மனிதர்கள் மண்டை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். இது இன்று நேற்று நடந்ததில்லை. வொலற்றயர் சொன்னார் 'இந்த உலகினை எத்தனை மோசமானதாகக் கண்டெடுத்தோமோ அத்தனை மோசமானதாகவே நாம் விட்டுச்செல்வோம்' என்று. வேறு பலர் உலகில் மிகமிகப் பெரும்பான்மை மக்கள் சொல்புத்தி வழி மட்டுமே நடக்கும் மந்தைகளாகத் தான் எப்போதும் இருப்பார்கள் என்பதை காரணகாரியங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பப்போ மனித மனங்களை மாற்றும் வகை எவரேனும் தொழிற்படினும் மாற்றங்களை நிறுவனத்தின் முன் தக்கவைப்பதது அத்தனை இலகுவானதல்ல. நிறுவனத்தை எதிர்ப்;பதற்கு நிறுவனமாவது அத்தியாவசியமாகிவிடும். ஆனால் அவ்வாறு நிறுவனமாகினால், பின்னார் அந்த நிறுவனத்தைத் தக்கவைப்பதற்கு நிறுவனமாகத் தான் செயற்படமுடியும். எனவே இது ஒரு 'கட்ச் 22'.
 
அப்படி என்றால் வேறு வழியே இல்லையா? ஒருவன் தனியலகாக பந்தபாசங்கள் குடும்பம் என்று இல்லாது அந்தக் கணத்திற்காக மட்டும் வாழ்பவனாக, இறப்புப் பற்றியோ பசி முதலான வலிகள் பற்றியோ, குளிர் நோய் கிருமிகள் முதலான உபாதைகள் பற்றியோ அலட்டிக்கொள்ளாதவனாக, தெருவிலோ சிறையிலோ எங்கு நிகழ்வுகள் தன்னை இட்டுச் செல்லுகின்றனவோ அந்த இடங்களில் அந்தக் கணங்களில் வாழத் தயாராகின் மட்டும் அது சாத்தியபப்படும். ஆனால், அவ்வாறு வாழுவது இனிமையானது என்று எப்போதும் அவனிற்குப் படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வேகமாக மருவிக்கொண்டிருக்கும் நிறுவனம் மற்றும் அதன் சூழலில் ஒரு பத்து வருடம் சித்தன் போக்குச் சிவன் போக்கு என்று வாழ்ந்து விட்டுப் பிடிக்காவிடின் திரும்புவோம் என்பது சாத்தியமில்லை. எனவே உயிர்வாழ்வது எமக்கு அவசியம் என்று படுமாயின் நாம் உயிர்வழ்வதற்குத் தக்கதாக எம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் இல்லையேல் குறைந்தபட்ச்ம தக்கனவற்றில் ஒட்டுண்ணிகளாக ஒட்டிக்கொள்ளவேனும் தெரியவேண்டும்.
 
கேட்பதற்கு அநியாயமானதாக அக்கிரமாககப்படுகிறதா? எந்த நிறுவனமும் அற்ற விலங்கு இராச்சியத்தில் காட்டிற்குள் சிங்கம் மானைத் தின்பதும் இன்னும் டிஸ்க்கவரிச் சனல் காட்டும் எத்தனையோ விடயங்களும் இதற்கு வேறானவையா என்ன? மனிதன் தன்னைப் பெரிய பருப்பு என்று தன்னளவில் நினைத்துக் கொள்ளினும் பிரபஞ்சத்தில் ஒரு பருக்கை அளவும் நாம் இல்லையே.
 
இப்படி இந்த முனையில் நிறையப் பேசலாம். 
 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில்... இப்படியான தெளிவு ஏற்படுவது அபூர்வம்.
அத்துடன்... அவர் தனது மாதந்த வருமானமான இரண்டுலட்சம் ரூபாய் வேலையை... விட்டுவிட்டு, விவசாயம் பார்ப்பது ஆச்சரியம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஆங்கிலம் கலந்து தமிழ் கதைப்பவர்கள் மத்தியில்... இவரின் தமிழ் பிடித்துக்கொண்டது. இணைப்புக்கு... நன்றி குமாரசாமி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனுக்கு இந்தளவு கடுப்பு  வந்து நான் பாக்கவில்லை   :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியை  பார்த்துக்கொண்டிருந்தபோது

அவருக்கு கை தட்டல் கிடைத்தபோது......

 

எனக்கு ஒரு பக்கம் சந்தோசம்

இன்னொரு பக்கம்

பாவம்  இவர்

இவரது பரம்பரையால் (எதிர்கால) சபிக்கப்படப்போகின்றார் என்றும் கவலைப்பட்டேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.