Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4

Featured Replies

புலிகளின், மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் எவ்வகையிலும் மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய அனுமதிக்க கூடாது.

புலிகளின் பணத்தை சூறை ஆடியவர்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் .அதற்கு மேலால் தமிழீழ போராட்டத்தை வித்து வாங்கி எமது எதிரிக்கு சாதகமாய் செயல்பட்டுகொடிருக்கும் புத்தி ஜீவிகள் என்று தம்மை தாமே நினைக்கும் மாந்தர்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் மக்கள் மனதில்.

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுணா . உங்களில் நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் . ஆம்.............  என்னால் ஆதாரம் தரமுடியும் .  நீங்கள் " கள்ள ஆடும் பங்கு இறைச்சியும் " கவிதைக்கு விருப்ப வாக்கு இட்டு , அதில் கருத்து இலக்கம் 12 ல் பின்வருமாறு கூறுகின்றீர்கள் <  பல புற்றீசல்கள் வெளிவந்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது. பார்க்கலாம் > . அந்த கவிதை யாரை குறிவைத்து என்ன காரணத்துக்காக எழுதப்பட்டிருக்கின்றது என்பது யாழில் பார்க்கும் சிறுபிள்ளைக்கும் தெரிந்தவிடையம் . இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இதற்கு பதில் அளிக்கமுடியாதவர்கள் அல்லது நேர்மையான விமர்சனம் வைக்க முடியாதவர்களின் வசைபாடல்களுக்கு , ஏன் யாருக்கு எதற்கு எழுதப்பட்டிருக்கு என்று தெரிந்துகொன்டே அங்கு ஆதரித்து எழுதிவிட்டு இங்கு அப்படியே வந்து இந்த கட்டுரை ஆசிரியரைத் திருப்திப்படுத்த  அப்படியே பிளேட்டை மாற்றி போட்டிருக்கிறீர்கள். ஏன் இங்கு ஒரு முகம் ?? அங்கு ஒரு முகம்??  எது எப்படியோ பொதுவாக இங்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் வரிசையில்  இன்னும் பலர் இருக்கின்றார்கள் .  இந்தக்கட்டுரை ஆசிரியருக்கு ஒரு முகமும் அதே கருத்துக்களை காவிவரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு இன்னொருமுகமும் உங்களைப் போன்றோர் ஏன் காட்டுகின்றீர்கள்  ??  நான் எப்பொழுதும் ஒரே கருத்திலேயே இருக்கிறேன். இருப்பேன்.

பி கு இது களவிதிகளுக்கு மீறிய கருத்தானால் நீக்கிவிடப் பரிந்துரை செய்கின்றேன்

 

 

 
இங்கு புற்றீசல்கள் என்பது ஒருவர் பல ஐடியில் வந்து பல கருத்துக்களை கட்டுரைகளை தமிழ் மக்கள்  மீது மிகுந்த கரிசனை உள்ளவர்கள் போல் எழுதுகிறார்கள்.பின்னர் அதே ஆட்கள் வேறு ஐடியில் வந்து தமிழ் மக்களை குழப்பும் வகையில் நக்கல்கள், நளினங்கள், தூசண வார்த்தைகளை எழுதுகிறார்கள்.இது சிறு பிள்ளைக்கும் விளங்குமா என்பது சந்தேகமானது. 
 
இக்கட்டுரையில் கூட சாத்திரியாரின் கட்டுரைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து வைக்காமல் பொதுவாகவே மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மக்களிற்கு சேவை செய்ய விடக்கூடாது என கூறி இருந்தேன்.
 
இக்கட்டுரைக்கு பலர் கருத்து எழுதாதற்கு காரணம் சாத்திரியார் தனக்கு தெரிந்தவற்றை கேட்டவற்றை எழுதியுள்ளார்.இதன் மறுபக்கமென்பது அதாவது மேற்படி குழுக்களில் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே வாசகர்கள் ஒரு நிலையை எடுக்க முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

தேனகம் ,மீனகம் ,அது இது என்று பலதரப்பட்ட இணையங்களும் ,கருத்துக்களும் .கட்டுரைகளும் தாண்டவக்கூத்தடியது ,ஆடுகிறது .அன்றுதொட்டு இன்றுவரை , ஆனால் மக்கள் மட்டும் ஒரே பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் அசைக்க முடியாத பாதையில். """"""""""""""""

ஆகவே எவரும் எதுவும் எழுதலாம் காரணம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் பிறகு ஏன் நாங்கள் பயப்படுவான்...

.தமிழீழ விடுதலை இலட்சியத்தின் இரகசியத்தை விற்காதவர்கள் .""""""""""""""""

இதில் என்ன ரகசியம் இருக்கு....ஆயுதப் போராட்டம் தானே முடிவுக்கு வந்துவிட்டது .... பரிதி கொலை செய்யப்பட்டது ...உண்மை ...அதை சிங்கள புலானாய்வுதான் செய்தார்கள் என்று நாம் நம்புவதை விடுத்து வேறு சிலரும் செய்திருக்கலாம் என சிந்திப்போம்...காரணம் எமது போராட்ட வரலாற்றில் நாம் பல சம்பவங்களை கண்டுவிட்டோம்

 
இங்கு புற்றீசல்கள் என்பது ஒருவர் பல ஐடியில் வந்து பல கருத்துக்களை கட்டுரைகளை தமிழ் மக்கள்  மீது மிகுந்த கரிசனை உள்ளவர்கள் போல் எழுதுகிறார்கள்.பின்னர் அதே ஆட்கள் வேறு ஐடியில் வந்து தமிழ் மக்களை குழப்பும் வகையில் நக்கல்கள், நளினங்கள், தூசண வார்த்தைகளை எழுதுகிறார்கள்.இது சிறு பிள்ளைக்கும் விளங்குமா என்பது சந்தேகமானது. 
 
இக்கட்டுரையில் கூட சாத்திரியாரின் கட்டுரைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து வைக்காமல் பொதுவாகவே மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மக்களிற்கு சேவை செய்ய விடக்கூடாது என கூறி இருந்தேன்.
 
இக்கட்டுரைக்கு பலர் கருத்து எழுதாதற்கு காரணம் சாத்திரியார் தனக்கு தெரிந்தவற்றை கேட்டவற்றை எழுதியுள்ளார்.இதன் மறுபக்கமென்பது அதாவது மேற்படி குழுக்களில் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே வாசகர்கள் ஒரு நிலையை எடுக்க முடியும்.
 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தொடரின் போக்கு பரிதியின் படுகொலை ஒரு உள்வீட்டு சம்பவம் என்பதுபோலப் போகின்றது. பிரான்சில் இப்படுகொலை நடந்ததால் பிரான்ஸ் பொலிஸ் உள்வீட்டு விவகாரங்களைக் கிளறும் கோணத்தில் இவ்விவகாரத்தைக் கையாள்கின்றதா அல்லது முன்னர் நடந்த கொலைகளில் கொலையாளிகளத் தேடாமல் விட்டதுபோன்று சில சம்பிரதாயமான விசாரணைகளுடன் வழக்கை முடிக்கப்போகின்றதா?

 

தற்சமயம் பிரான்சு காவல்த்துறையின் விசாரணை  போக்கு இந்தக் கொலை உள்வீட்டு  விவகாரம் என்கிற கோத்தில் போவதோடு  விசாரணையின் வேகமும் குறைந்துள்ளது. அனேகமாக இது இரண்டு  வன் முறைக் கும்பலிற்குள் நடந்த மோதல் என்கிற  அளவிலேயே முடித்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.   

 

நீதிகேட்டு நடைப்பயணம். அல்லது உவகெங்கும் உள்ள பிரான்சின் தூதரகங்களை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினால் சில நேரங்களில்  விசாரணை துரிதமாக்கப்படலாம். :)

நல்ல பாட்டு ரமணன். இங்கும் சூர்யாவை அவருடைய எசமானன்தான் கொல்லத் துரத்துகிறார். பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது.

 

பொய்மைகளிடம் ,  வாய்மை கைகட்டி மண்டியிட்டு கூனிக்குறுகி நிற்கின்றதே என்று மனமுடைந்திருந்த நிலையில் , இல்லை....  பொய்மை வெல்வது போல் தோற்றமளித்தாலும் இறுதியில் வெல்வது வாய்மையே என்று உங்கள் கருத்தால் தெளிவு படுத்தியுள்ளீர்கள் . நாற்சந்தியில் சொல்ல வேண்டிய விடையத்தை பொதுவெளியில் பொய்மைகளின் நிஜமுகத்தை வாசகர்ளுக்கு காட்டிய உங்கள் நேர்மையை மிகவும் பாராட்டுகின்றேன் . அந்த நேர்மைக்கு ஒரு விருப்பு வாக்கைப் பதிந்துள்ளேன் , லஞ்சமாக இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
கோமகன், நான் 2009 - 2011 களிலேயே இவர்களைப் பற்றி யாழ்களத்தில் நிறைய எழுதியிருக்கிறேன்.  அப்போது என் போன்றவர்களைத் துரோகி என்று அழைத்த தேசியவாதிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டார்கள் அல்லது தங்கள் கஜானாவை நிரப்பும் வேலைகளில் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறார்கள்.  2009இல் விளங்காதது இப்போதாவது பலருக்குத் தெளிவடைந்ததையிட்டு மகிழ்ச்சியே.  ஆனாலும், முதலில் குறிப்பிட்டது போல தெளிவடைவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

 

நுணாவிலான், நீங்கள் கூறுவது உண்மையே.  ஆனாலும், இன்னும் அவர்கள்தானே களத்தில் நிற்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள்தானே வேறு வடிவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இதைக் களைவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கூறமுடியுமா?

 

எமது விடுதலை போராட்டம் பண்ணைகளில் இருந்த காலத்தில் ...........

தம்மிடம் இருந்த அனைத்து பணத்தையும் ஒருவரிடம் கொடுத்து ஒரு அலுவலாக அவரை அனுப்பினார்கள்.
அவர் அப்படியே போய்விட்டார் (அவரது குடுப்ம நிலையும்  மிக மோசமாக இருந்தது)
பின்பு அவரை சுட வேண்டும் என்று எல்லோரும் முடிவெடுத்தார்கள். தலைவர் பிரபாகரன் எல்லோரையும் இப்படியே சுடுவதால் என்ன பயன்? என்றும் பணம் திரும்பியா வரும் என்றும்? கேட்டு தடுக்கிறார்.
பின்னாளில்.............  எழுத்து வீரர்கள் வாய்சொல் வீரர்கள். அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் அதனால் தான் தடுத்தார் என்று வழமையான பழியை போட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
 
இதற்கும் உங்களுக்கும் உங்கள் கருத்திற்கும் எந்த தொடர்பும் இல்லைதான்.
ஆனால் போராட்டத்திற்கான பணம் பொருள் சொந்த தேவைகளுக்காக செல்வது என்பது அந்த காலம் தொட்டே நடந்த ஒன்று. இப்படி நடக்கிறது அப்படி நடக்கிறது ............. என்று தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்தான் எழுதுகிறார்கள்.
"தேசியவாதிகள்" என்று உங்கள் கருத்தில் நீங்கள் எழுதி இருப்பவர்கள் யார்? 
மேசையில் இருந்து எழுதுபவர்களுக்கு எந்த குறையுமில்லை...
கடுங்குளிரிலும் வீடு வீடாக கதவு தட்டுபவனுக்கே கால் வலிக்கும்.
அதை செய்ய ஒரு சிலரே மேசையை விட்டு கதிரையையும் விட்டு எழும்பி வருகிறார்கள். ஒருசிலர் சுயலமாகதான் எழும்புகிறார்கள்  என்பது காலம் தனது பக்கம் முழுதும் எழுதிய ஒன்று. இதில் நீங்கள் புதிதாய் 2000 எழுத என்ன இருந்தது என்பதை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.  
 
1988ஆம் ஆண்டு புலிகள் இலங்கை அரசுடன் செய்த அரசியல் நகர்வையும்.
சிங்களவனுடன் கூடி காடைகள் தமிழனை அழித்ததையும் ஒன்று என்று இப்போது எழுதுகிறார்கள். அவர்கள் அறிவுக்கு உட்பட்டுதான் அவர்கள் எழுதமுடியும். பாவம் இப்படி நாலு அறிவுடன் சில மனிதரை கடவுள் படைதானே  என்று கவலை கொள்ளவே முடியும். புலிகள் தமது மண்ணிலே...... தாமாக எழுந்து நின்று கொண்டுதான்  எந்த நகர்வையும் செய்தார்கள். எமக்கு அடைக்கலம்  தாருங்கள் உங்களுக்கு பெண் பிடித்து தருகிறோம் என்று  இலங்கையிடம் போகவில்லை. (புலிகள் ஜே. வி. பி. இற்கு அடைக்கலம் கொடுத்து பயிட்சியும் கொடுத்தால்........... சிங்கள அரசின் நிலைமை தலை கீழாக போய்விடும் என்பதால். புலிகள் கேட்கும் ஆயுதங்கள் தமக்காக திரும்பும்  என்று தெரிந்தும் ஆயுதங்களை புலிகளுக்கு கொடுத்தார்கள். பொறி வைத்து  விட்டு தமக்கு தேவையானதை  புலிகள் எதிரியிடம் இருந்தே பெற்றார்கள் இதைதான் தமிழில் "இராஜ தந்திரம்" என்று சொல்வது.
 
கதிரையில் இருந்து என்ன எழுதினீர்கள் என்பதோ..
எப்போது எழுதினீர்கள் என்பதோ..........
முக்கியமில்லை.
கதிரையில் இருந்து எழுந்து என்ன செய்தீர்கள் என்பதே முக்கியமானது. நாட்டுக்கும் தேவையானது.
 
கதிரையில் இருந்து யார் எழுந்து நின்றாலும் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம். கதவுகளை தட்டும்போதெல்லாம் எதோ முடிந்ததை செய்கிறோம். சிலர் கொண்டு ஓடுகிறார்கள்.............. சிலர் தமது வாழ்வையும் பணயம் வைத்து  கொண்டு சென்று சேர்கிறார்கள் .
இழப்பு என்று பார்த்தால்...............????
இரு  வழிகளிலும் நாம் தான் இழக்கிறோம். 
கதிரையில் இருந்து எழுதி இழப்பதற்கும் ஏதும் இருக்கலாம்................... 
அந்த பக்கம் எமக்கு தெரியாது. எழுதினால் தெரிந்து கொள்ளலாம். 
எம்மையும் திருத்தி கொள்ளலாம்.
எழுதுபவர்கள் எல்லோரும் கதிரையை விட்டு எழும்பாதவர்கள் என்று நீங்கள் எந்த எடுகோளை வைத்து சொல்கிறீர்கள்?தமிழச்சியை கதிரையை விட்டு எழும்பாதவர் செயல்பாட்டில் தன்னை இணைக்காதவர் தள்ளி நின்ரு வேடிக்கை பார்ப்பவர் என்று சொல்லவருகிறீர்களா?
 
சேர்ப்பவர்களில் ஒரு சிலர்தான் கொண்டோடுகிரார்கள் என்பதை எழுதிய நீங்களே அதே கைகளால் எழுதுபவர்கள் எல்லோரும் கதிரையை விட்டு எழும்பாதவர்கள் என்று பொதுவில் சொல்லி செல்வது முரண் மருதங்கேணி.
  • கருத்துக்கள உறவுகள்
எழுதுபவர்கள் எல்லோரும் கதிரையை விட்டு எழும்பாதவர்கள் என்று நீங்கள் எந்த எடுகோளை வைத்து சொல்கிறீர்கள்?தமிழச்சியை கதிரையை விட்டு எழும்பாதவர் செயல்பாட்டில் தன்னை இணைக்காதவர் தள்ளி நின்ரு வேடிக்கை பார்ப்பவர் என்று சொல்லவருகிறீர்களா?
 
சேர்ப்பவர்களில் ஒரு சிலர்தான் கொண்டோடுகிரார்கள் என்பதை எழுதிய நீங்களே அதே கைகளால் எழுதுபவர்கள் எல்லோரும் கதிரையை விட்டு எழும்பாதவர்கள் என்று பொதுவில் சொல்லி செல்வது முரண் மருதங்கேணி.

 

 

உண்மைதான்..............
 
விடுதலை நோக்கிய நகர்வுகளில் ............. எழுத்தும் முக்கியமான ஒன்று.
எழுத வேண்டிய தேவை நிறையவே உண்டு.
 
நான் முன்பே எழுதினேன்..............
 
தேசியவாதிகள்.............
 
என்பதை நோக்கியதே எனது கருத்து. கொண்டு ஒடுபது என்பது  இவர் எழுத தொடங்கு முன்பே இருந்து இருக்கிறது.....
தேசியவாதிகள் இப்போது எங்கே? என்றால் இதன் பொருள் என்ன? இவர்கள் யார் என்பது பற்றிய விளக்கங்கள் தேவை?
 
செயற்பாடுதான் தேவையானது.
தலைவர், மற்றும் அமைப்பின் பின்னால் ஒருங்கிணைந்து இயங்கிய ஒரு சமூகம், தலைமையின் தொடர்பு இல்லாது போன பிற்பாடு, அந்தக் காலப்பகுதியின் பின்னால் ஏற்பட்ட அழிவுகளாலும் மற்றவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற சூழலே இருக்கின்றது. எந்த அமைப்பாயினும், மற்றய புதிதாகத் தொடங்கி வருகின்ற அமைப்பினைச் சிங்கள அரசு இயக்குமா என்ற அச்சம் இருக்கத் தான் செய்யும். இதற்கு அனைத்துலக செயலகம் மட்டுமல்லாமல் அனைத்து அமைப்புக்களுக்கும் பொருந்தவே செய்யும். சாத்திரி போன்ற விளம்பரப் பிரியர்கள் அந்தச் சந்தேகங்களை மேலும், மேலும் ஊதிப் பெரிதாக்கி, குழப்பத்தை உண்டு பண்ணுகின்றார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. சாத்திரி மீதான என் எண்ணமும் அந்தச் சந்தேகத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் அதை உருவாக்கியதும் அவரது செயல்களே! மற்றும்படி இந்தக் கட்டுரையாளரும் சரி, கட்டுரையும் சரி நம்பக்கூடிய தன்மையா என்று கேட்டால் அது பூச்சியமே. எனது புரிவின்படி 4 பேரின் பெயரைத் தெரிந்தால் அதை வைத்து எப்படி வார்த்தைகளால் விளையாட முடியும் என்பது தெரியாத ஒன்றல்ல. நண்பர்கள் மூலம் தகவல் அறிந்ததாகச் சொல்பவர் அதை ஆதரப்படுத்தவில்லை. குறித்த சிலரின் படங்களை இணைக்க முடிந்த அவருக்கு, நண்பர்களிடம் இருந்து ஆதாரங்களைப் பதிவு செய்யவா முடியாது போகும்? உலகத்தில் எந்த ஊகமும் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்யும்போது, கட்டாயம் அச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், செயற்படுத்தியவர்கள் போன்றவர்களின் குறைந்தபட்ச ஆதாரங்களையாவது பதிவு செய்யுது கொள்ளும். ஆனால் கட்டுரையாளர் தான் நேரே அருகில் நின்று பதிவு செய்து போடுவது போலக் கட்டுரை. என்னத்தைச் சொல்ல...

உண்மை தூயவன்  இவர் எந்த கூட்டங்களிலும்  பங்குபற்றவில்லை. யாரோ சில ஒட்டுண்ணிகள் மூலம் சில தகவல் அறிந்து கற்பனைக் குதிரைய அவிட்டு விடுறார் சாத்திரி. 

 

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை

Edited by நியானி

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

309135_267600996691758_1536784661_n.jpg

அன்பு  ஏன் ஆனந்தசங்கரியின் போட்டுவ்வை சேர்ப்பதில்லை? சித்தார்த்தன்?

புது சூப்பர் ஸ்டார் கள் வரும் பொழுது பழையவை பின்னால் போடுவினம் 

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

309135_267600996691758_1536784661_n.jpg

 

இந்தப்படம் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையை பிரதிபலிக்கின்றது. கரையில் இரண்டும் புலி. நடுவில் சிங்கள சனாதிபதியும் செயலாளர் நாயகமும்.

இந்தப்படம் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையை பிரதிபலிக்கின்றது. கரையில் இரண்டும் புலி. நடுவில் சிங்கள சனாதிபதியும் செயலாளர் நாயகமும்.

 

இந்தப்படம் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் உள்ள வருங்கால போர்குற்றவாளிகளை  பிரதிபலிக்கின்றது.

கரையில் உள்ள இருவரையும் மகிந்த முதலில் போட்டுக்குடுப்பார்...

ஒதுக்கப்படும் "செயலாளர் நாயகம்" மகிந்தாவை மாட்டிக்கொடுப்பார்...

இந்த படத்துக்கும்  சபேசன் எழுதிய  சிங்கம் புலி காதல்  கதைக்கும்   100% பொருத்தம்.

vikramandvetal.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அன்பு  ஏன் ஆனந்தசங்கரியின் போட்டுவ்வை சேர்ப்பதில்லை? சித்தார்த்தன்?

 

சங்கரிக்கும்  சித்தார்த்தனுக்கும்  வயசு போயிட்டுதாம்.  :icon_mrgreen:

கம்பீரமாக இருந்த தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் கந்தலாக கிழிக்கப்பட்டாலும் அது இத்து இறந்து போகவில்லை என்பதை உலகத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும் . இழந்தவற்றை மீட்பதற்கு இரத்தம் சிந்தாத யுத்தங்களை யனநாயக வழியில் சர்வதேச அரங்கில் நடத்த வேண்டிய தேவை புலம் பெயர் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் உள்ளது ..

அந்தவகையில் இதற்கு தலைமை தாங்கும் தலைமைகளை மாறி மாறி விமர்சனம் செய்யும் தமிழ் ஊடகங்களின் தொல்லையே மக்களை குழப்பும் முதன்மை காரணியாக உள்ளது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது .சிங்களம் செய்ய நினைக்கும் வேலைகளை சில தமிழ் ஊடகங்களே தமது சுய லாபத்திற்காக நீயா நானா என்று போட்டி போட்டு எழுதித் தள்ளுகின்றன .தலைமையின் நேரடி தொடர்பு மக்களுக்கு இல்லாத நிலையில் புலம் பெயர் நாடுகளில் சிறு குழப்பம் இருந்தாலும் அதை ஊதிப் பெருப்பிக்கும் வேலைகளை செய்வது இன்றைய தமிழ் ஊடகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது .

அன்பார்ந்த உலகத் தமிழினமே ஊடகங்கள் எப்போதும் தமது வியாபார நோக்கத்தை கருத்தில் கொண்டவை இபோது ஈழத்தில் போர் இல்லை எழுதுவதற்கு ஒன்றும் இல்லை கண்டவற்றை எல்லாம் எழுதுவார்கள் இதில் நூறு வீதம் உண்மை கிடையாது .. எனவே உங்கள் சுய புத்தியில் செயற்படுங்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நூறு வீதம் உண்மையானது காலத்தின் தேவை கருதி போகின்ற பாதைகள் மாறலாம் ஆனால் அதன் இலக்கு என்றுமே மாறாது. எம் தேசிய தலைவர் அன்றே சொன்னார் உறுதியான ஒரு புலி வீரன் உலகில் இருக்கும் வரை எமது லட்சிய பயணம் தொடரும் .....தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ....
.....பா .சங்கிலியன் .

நன்றி முக நூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.